Thursday, October 30, 2014

விருந்தாளி வீட்டைக்  

கொளுத்தினால் .......!!!


மராட்டிய மாநிலதேர்தல்முடிந்தது ! நாளை பா.ஜ.க."மைனாரிட்டி " அரசு பதவி ஏற்கிறது !

எங்கள் ஊர்க்காரர் (நாகபுரி ) தேவேந்திர ப்ஃட்னாவிஸ் பதவி ஏற்கிறார் ! பத்திரிகைகள் (பா.ஜ.க ) ஒரு பிராமணர் முதல்வராகிறார் என்று வர்ணிக்கின்றனர் ! இதற்கு முன்னால்  மனோகர் ஜோஷி முதலவராயிருந்த பிராமணர் ! பா.ஜ.க ஆதரவோடு வந்த சிவசேனைக்காரார் !

வெள்ளிக்கிழமை பதவி ஏற்பு விழா ! "வாங்காடே " கிரிக்கேட்  மைதானத்தில்  ஏற்பாடு பிரும்மாண்டமாய் நடக்கிறது ! 

அண்ணன் "மோடி "  வருகிறார் !  மைதானம் சர்வதேச தரத்தில் உள்ளது ! மராட்டிய மாநிலத்தின் அற்புதமான கிரிகெட் வீரர்களில்" வினு மன்கட் " ,"போலி உம்ரிகர் "  ஆகியோர் பெயரில் இர்ண்டு வாசல்களுள்ளன !        

விழாவுக்கு அத்வானி ,எம்.எம்.ஜோஷி., ஆகியோர் வருவதைப்பற்றி செய்தி இல்லை ! 

"என்கொவுண்டர்" புகழ் அமித் ஷா வருகிறார் ! இவர்கள் வரும் வாயில்களில் "உம்ரிகர்,மன்காட்" பெயர் இருந்தால்      பொருத்தமாக இருக்காது ! அதனால் அதனை சியாமபிரசாத் முகர்ஜி என்றும் .தீனதயாள் உபாத்யாயா என்றும் மாற்றப்போகிறார்கள்!

இது பற்றிமனகாட் அவர்களின் மகன் ராகுல் மன்காட் " என்ன செய்யமுடியும். விருந்துக்கு வந்தவர் வீட்டை எடுத்துக்கொண்டால் !" என்று கூறினார் ! 

எனக்கு மகிழ்ச்சி தான் !

மராட்டிய மாவீரன் "நாதுராம் கோட்சே " என்றும் "வீர் சாவர்கர் " என்றும் மாற்றாமல் விட்டார்களே என்பதால் !


Sunday, October 26, 2014

நியா ? நானா? வும்  .

Dramatic finish ம் .....!!! 


ஞாயிற்றுக் கிழமை (26-10-14) அன்றூ "நீயா ?நானா ? " ஆரம்பமாகும் பொது கொஞ்சம் சிரத்தையில்லாமல்தான் பார்த்தேன் !

கோபி-அந்தோனி combination  அப்படித்தான் ஆரம்பிப்பார்கள் ! கொஞ்சம் கொஞ்சமாக சூடேற்றி இறுதியில் முத்தாய்ப்ப்பக சில விஷயங்களை சொருகுவார்கள் !

நேற்றும் அது தான் நடந்தது ! ஒருபுறம் நவீன காலத்து யுவதிகள் ! எதிர் புறம் அவர்களை நேசிக்கும் ,பெருமிதம் கொள்ளும்,அதேசமயம் உலகம் தெரியாத பிள்ளையோ என்று பயம்கொள்ளும் தந்தைகள் ! 

துணிச்சலும் ,பாய்ச்சலும்மட்டும்கொண்ட பதின் வயது பெண்கள் ! அவர்களின் துணிச்சலை, பாய்ச்சலை, சேட்டைகளை மனதிற்குள் ரசிக்கும் தந்தைகள் - அடிவயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு கவலையோடு இருக்கும் தகப்பன்கள் !

தந்தை கவலையோடு தெரிவிக்கும்கருத்துக்கள ​ புரிந்து கொண்டு ​ தங்களுக்குள் கண் சிமிட்டிக்கொண்டு  -"அப்பா! நான் சின்னபிள்ளை இல்லைப்பா " என்று கூறும் அந்த சின்னஞ்சிறு "பூ "க்குவியல்கள்   -மிகவும்ரம்மியமான கண்கொள்ளாக் காட்சிகள் !

தங்கள் மகள் காதல்கத்திரிக்காய் என்று எமாறாமலிருக்க வேண்டுமே என்று தவிக்கும் தந்தைகளிடம் "எங்களுக்கு எங்கள் limit தெரியுமப்பா "என்று ஓங்கியடிக்கும் செல்லமகள்கள் ! எங்களிடமpropose செய்பவன் தகுதி அறிந்து அவன அவன் மூஞ்சிக்கு நேரreject  செய்யும் தைரியம் எங்களுக்கு உண்டுப்பா " எனும்போது நான் என்னை அறியாமல் கைதட்டினேன் !

பல சின்னஞ்சிறு சிட்டுகள் -பெரும்பான்மையானவர்கள் காதல் திருமணத்தை ஆதரித்தனர் !

"எந்த சாதியாக இருந்தாலும் காதலிப்பிர்களா ?"

"நிச்சயமாக "

"உங்களைக் காதலிப்பவர் ...தாழ்ததப்பட்டவராக, தலித்தாக இருந்தாலும்   ஏற்றுக்கொள்பவர்கள் எத்தனைபேர் ?கையைத்தூக்குங்கள் ?

கண்கள் பனிக்க அத்துணை பெரும் கையைத்துக்கியத்தை நெஞ்சம் விம்ம கண்டேன்!

கோபி தந்தைகள் பக்கம் திரும்பினார் !

"உங்களில் எத்துணை பேர் உங்கள்மகள் ஒரு தலித்தைகாதலிப்பதை  ஏற்றுக்கொள்வீர்கள்  ? "

ஒன்று இரண்டு பேரைத்தவிர மாற்றவர்கள் அத்துணை பெரும் கையைத்தூக்கினார்கள் !

மனம் நிறைந்த நிகழ்ச்சி !!!


Thursday, October 23, 2014

பாம்பும் -நல்ல பாம்பும் .....!!!


காட்டிலாகாவில் பணியாற்றும் நணபர் அவர் ! அடிக்கடி சந்திப்போம் ! வனகுடிமக்களின் பாடுகள் பற்றி , பீடி இலையை சேகரிப்பது பற்றி, அதனை வாங்கும் கான்டிராக்டர் கள் பற்றி, நகசலைட்டுகள் செயல்பாடுகள் பற்றி எல்லாம் கேட்டு தெரிந்து கொள்வேன்! 

வனவிலங்குகள்,பறைவைகள் பற்றி புதிய புதிய செய்திகள் அவரிடம் கிடைக்கும் ! வந்தால் அரைநாளாவது பேசிக்கொண்டிருப்போம் ! 

வனவிலங்குகளைப் பற்றி பேசும் போது பாம்புகளைப் பற்றி பேச்சு வந்தது நான் எனக்குத்தேரிந்ததை சொல்வேன்  !

"உயிரினங்களில் இன விருத்தியில் ஈடுபடும்போது முகத்திற்கு முகம்பார்த்து செயல்படுபவை இரண்டே இரண்டு உயிரினம் தான் ! ஒன்று பாம்புகள் ! இரண்டாவது மனிதன் ! " என்றேன் !

"அதனால் தான் குழந்தைப் பேறு வேண்டி நாகர் சிலை அடித்து பூசை செய்வதும், வழிபடுவதும் நடக்கிறது !" 

"பாம்புகள் பல இருக்கின்றன ! எல்லப்பம்புகளும் விஷமுள்ளவை அல்ல !நாலைந்து வகை பாம்புகள்தான்விஷ முள்ளவை ! "என்றார் நண்பர் !

அவர் தொடர்ந்தார் ! "விஷமுள்ள பாம்புகள் தங்களுக்கென ஒரு குறிப்பிட்ட பரப்பை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன ! அதற்குள் யாரும் வந்தால்மட்டுமே தனக்கு ஆபத்து என்று நினைக்கின்றன ! சுருட்டை,கட்டுவிரியன் ஆகியவை விஷ்முள்ளவை ! அவை  தங்கள் ஆளுமைக்குள் சிறு பரப்பையே வைத்துக் கொள்ளும் ! வெளியே சென்று இறை தேடிய பிறகு தங்கள்  பரப்பில் வந்திருக்கும் ! வெளியிலிருந்து யார் வந்தாலும் கொத்திவிடும் ! "என்று விளக்கினார் !

"கருநாகம் அப்படி அல்ல " என்று தொடர்ந்தார் ! ' அவை தங்கள் வசம் மிக அதிகமான இடத்தை வைத்துக்கொள்ளும்  ! அதற்குள் யார் வந்தாலும் விரட்டிவிட பார்க்கும் ! அதிர்வின் மூலம் வெளியார் வருவது புலப்பட்டால் "உஸ்-உஸ் " என்று சீரும் !  மேய்ந்து கொண்டிருக்கும் கால்நடைகள் தீடீரென்று பாய்ந்து ஒடுவதப்பர்த்திருக்கலாம் ! சீரும் சத்தம்கேட்டு அவை ஓடுகின்றன ! இதற்குப்பிறகும் நெருங்கினால் நாகம் தலையை பூமியிலிருந்து தூக்கி தன இருப்பை உணர்த்தும் ! தன உடலை balance செய்து கொள்ள தன முகத்தை  குடை போன்று விரித்து  காற்றில்தொங்க வைத்துக் கொள்ளும்  ! நாம் பாம்பு படம் எடுக்கிறது என்பது இதைத்தான் ! அப்படியும் எதிரி நகரவில்லை என்றால் நாகம் தன விஷமில்லாத பல்லால்கடிக்கும் ! அதையும் தாண்டி எதிரி நெருங்கினால் வேறு வழியில்லாமல் விஷப்பல்லை பயன்படுத்தும்" என்றார் !

தன்னை தாக்க வரும் எதிரியைக்கூட " எச்சரிக்கை செய்துவிட்டு" தாக்குவதால் தான் அதனை 

"நல்ல பாம்பு " 

என்று  சொல்கிறோம் என்றார்  !  

Monday, October 20, 2014

பெரியார் பூமியும் ,

பாரதீய ஜனதா கட்சியும் .....!!!தமிழகத்தில் மதவாத சக்திகளின் தலைமையை கொண்டுள்ள பாரதிய ஜனதாகட்சி  நுழைய சகல வேலைகளையும் செய்து வருகிறது !  

ஆனால்  ஆகப்பெரிய மனிதர் ரஜனி முன்னாள் முதலவருக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தி தான்  ஊடகங்களின் கவலையாக இருக்கிறது !

டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமை அரசிட மிருந்து அம்பானிகள் கைகளுக்கு மாற்றியாகி விட்டது ! அது பற்றி கவலைப்பட ஆளில்லை !

அறிவார்ந்த தமிழ் தொலைக்காட்சிகள் தமிசகத்தில் பாஜக வின்  எதிர்காலம் பற்றி விவாதங்களை நடத்துகிறது !

வேறு அரசியல் இயக்கம் எதுவும் மக்கள்மனதில் புலப்படக்கூடாது என்ற நோக்கம் அதில்   அடங்கியுள்ளது !

இதில் பங்கு பேரும் அரசியல் நோக்கர்கள் பெரும்பாலானவர்கள் தமிசகத்தில் பா.ஜ.க  வலுவாக கால்பதிக்க முடியாது என்றே கருத்துக் கூறுகிறார்கள் !பாஜக தலைவர்களும் பங்கு பெரும் நிகழ்சிகளிவை !  

"இந்த மண் பெரியாரின் மண் ! சுய மரியாதையை  ,சமுக சீர்திருத்தத்தை ,"சனாதன வாழ்க்கை முறையையைஎதிர்க்கும் மனம்"  கொண்ட மண் !  " என்று மார்தட்டி பேசும்போது நமக்கு புல்லரிக்கிறது ! 

பத்தாம்பசலித்தனமான "இந்துத்வா" இங்கு கடைவிரிக்கமுடியாது என்று கூறும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது !

அதேசமயம் இந்த விவாதங்களில் பங்கு பெறும் பா.ஜ.க பிரமுகர்களின் இதழோரத்தில் தெரியும் இகழ்ச்சிப் புன்னகை பயம் கொள்ள வைக்கிறது ! 

அவர்களுடைய mind voice கேட்கவே செய்கிறது !

"விடுங்கப்பா ! பெரியார் -பெரியார் நு ! பெரியார் தான் அண்ணாமலைல படிக்க வச்சார் ! அந்த முரசொலி மாறன் எங்க வாஜ்பாய் கீழ அமைச்சரா இருந்தார் ! அ .தி.மு.க தம்பித்துரை வாஜ்பாய் கீழ சட்ட அமைச்சரு ! அப்பத்தான் சொத்து குவிப்பு வழக்க கர்நாடகாவுக்கு மாத்தினம்! பெரியார் படத்தையும் பொட்டு தான் கட்சி நடத்தறாரு  ராமதாஸ் ! இப்ப எங்க கூட இருக்காரு ! வைகோ ! பாவம் நல்ல மனுஷன் ! ஏதாவது சொன்ன அழுதுடுவாறு  !  அவர் என்ன பெரியாரை மறந்தவரா ? விடுங்கப்பா ! "

பெரியார் என்ற  "பூச்சாண்டியை " காட்டி பா.ஜ.க. வைத்தடுத்துவிட முடியாது !

அது வெறும் பொம்மை என்று அவருடைய சீடர்களே நிரூபித்து விட்டர்கள் !!!

 
Sunday, October 19, 2014

சுப்பா ராவ் -வேணுகோபால் ஆகியோர் 

தகவலுக்காக ..........!!!


 நாவல்கள் திரைப்படமாவது பற்றி சுப்பாராவின் கட்டுரையை படித்தேன் !(தீக்கதிர் -இலக்கிய சோலை) ! The irresistable  s .v . தன்  பங்கிற்கு ஒரு மின் அஞ்சலை அனுப்பியிருந்தார் !  அதன் தாக்கத்தினால் இந்த தகவல்களை கொடுத்திருக்கிறேன் !

இற்று விழும் இந்து மத கோட்பாடுகள் பற்றி 20ம்னூற்றாண்டின் முற்பகுதியிலேயே அற்புதமான நாவலை எழுதியவர்  விபூதி பூஷன் பந்தோபாத்யாயா ! 

சத்யஜித் ரெயின் புகழ்பெற்ற triology  என்று வர்ணிக்கப்படும் பதேர் பாஞ்சாலி ,அபராஜிதா,அபூர்  சன்சார் , அந்த நாவலின் திரை வடிவம் !

முன்ஷி பிரேம்சந்தின் சிறுகதை "கப்ஃன் " ! மிருணாள்சென் இதனை தெலுங்கு மொழியில் "ஒக்க ஊரு கதா " என்று கொடுத்தார் ! சாதுமெஹர் ,வாச்தேவராவ் நடித்த அற்புதமான படம் அது !

பீஷ்ம சஹானி ஆங்கில பேராசிரியர் ! பால்ராஜ் சஹானியின் இளைய சகோதரர் ! பிரிவினையின் போது ஆர.எஸ் .எஸ் ,கம்யுனிஸ்ட் கட்சி ஆகியவை செய்லாற்றியதை சித்தரிக்கும்  "தமஸ்" என்ற நாவலை எழுதினார் ! 

கோவிந்த் நிகிலானி அதனை டெலிபிலிமாக தயாரிக்க ஆறுமணி நேரப்படம்  ஆறுவாரம் தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது ! ஓம் பூரி,சாக்சேனா, பாதக்,சிக்ரி  என்று இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்கள் நடித்தது !

U . R .அன்ந்தமூர்த்தியின் சிறு கதை "கடஸ்ரார்த்தா " ! திரைப்படமாக கன்னடத்தில்வந்தது ! "நானாபடேகரின்"நடிப்புஇன்றும் கண் முன்னால நிற்கிறது !

கன்னடத்தில் வந்த "சம்ஸ்காரா" வை மறக்க முடியுமா ! கன்னட திரை உலகை அகில உலகத்திற்கும் அறிமுகப்படுத்தியபடம்  அது !

முன்ஷி பிரேம் சந்தின் "சேவாசதனம் " 39 களில் தமிழில் வந்தபடம் ! S .D. சுப்புலட்சுமி நடித்தார் ! பாப நாசம் சிவம் ஆகியோரும் உண்டு ! கே.சுப்பிரமானீயம் இயக்கினார் !

கல்கி எழுதிய "தியாக பூமி "  எம்.எஸ் சுப்புலட்சுமி அறிமுகமான படம் ! பாபநாசம் சிவன் ஆகியோர் நடித்த படம் ! கே.சுப்பிரஂமணியம் தான் இயக்கினார் !

ஸ்டூடியோசிஸ்டம் முடிந்து ஸ்டார் சிஸ்டம் ஆரம்பமான பிறகு தமிழ் திரை உலகம் சீரழிய ஆரம்பித்தது !

உமாசந்திரனின் நாவலை ரஜனிக்காக சிதைத்தனர் ! பாலு மகேந்திரா இருந்ததால் முழுவதுமாக சிதைய வில்லை ! 

"சித்தி "சிறுகதையை எழுதிய புதுமை பித்தன் அவர்  மறைந்த பிறகு தான் வந்தது ! நல்லதாகப் போயிற்று !

தமிழ் திரை உலகம் பற்றி நிறைய நல்லதும் பொல்லாததுமாக எழுத இருக்கிறது ! பார்க்கலாம் .......!!!


   படம் அது !

Friday, October 17, 2014

அஸ்வகோஷும் -பிரபாவும் .....!!!அவர் ஒரு இடது சாரி சிந்தனையாளர் ! கோவையில் பிராலமான வழக்குரைஞர் ! அடிக்கடி தொலைபேசியில் பேசுவோம் !

பேச்சு ராகுல சாங்கிருத்யாயன் பற்றி வந்தது ! "ஆம்மாம் தோழர் ! அவரைப் படிசுட்டுதான் கிறுக்கு பிடிச்சு அலைஞ்சு கடசில மார்க்சிசத்துல வந்து சேர்ந்தேன் " என்றார் !

உண்மைதான் ! மூத்த தோழர்கள் அந்தக்காலத்தில் இரண்டு நூலைக் கொடுத்து படிக்கச்சொல்வார்கள் ! ஒன்று கார்க்கியின் "தாய் " நாவல் ! மற்றொன்று ராகுல்ஜியின்" வால்காவிலிருந்து கங்கை வரை " ! மனிதனை புரட்டிப்போடும் நூல்கள் !

ஒன்று உணர்வு பூர்வமாகவும் ,மற்றொன்று அறிவு பூர்வமாகவும் மனதை அலைக்கழிப்பவை ! மேலும் மேலும் அறீந்துகொள்ள தூண்டுபவை !

மூன்று  முறை ராகுல்ஜியை படித்துள்ளேன்! நவீன தத்துவ விசாரணை மேலும் முன் சென்றுள்ளது ! உண்மைதான் !

சமீபத்தில் மொழிபெயர்ப்பு பணி காரணமாக"வால்காவிலிருந்து கங்கை வரை" நூலை   மீண்டும் படிக்கும்வாய்ப்பு கிடைத்தது !

பொதுவாக "காதல்" கத்தரிக்காய் என்ற நம்பிக்கை கிடையாது ! இந்த பணப்பட்டுவாடா சமூகத்தில் இருக்க வாய்ப்பில்லை என்று நினைப்பவன் நான் !

ரோமியோவும்ஜூலியட்டும்,அந்தோனியும்கிளியோபாத்திராவும்,அம்பிகாபதி  அமராவதியும் ,லைலாவும்,மஜ்னுவும் ஒரு romaantic charector என்றெ கருதுகிறேன் ! அவ்ர்களை எழுத்தில்கொண்டுவந்த எழுத்தாளனின் வெற்றி என்பதைத்தவிர வேறில்லை  என்று கருதுபவன் நான்  ! 

இந்த நூல் இருபது பகுதிகளைக் கொண்டது!பதினொன்றாவது பகுதி "பிரபா" !ராகுல்ஜியின் இலக்கிய நயம்,தத்துவ நேர்த்தி ஆகியவற்றை ,அதன் மேன்மையை சொல்வதாக எனக்குப் படுகிறது !

ஆன்மீக தாகம் கொண்டவருக்கு குழப்பமான மன நிலை ஏற்படுவது உண்டுதான் ! அப்போது அவருக்கு கைகொடுப்பது "மதம் "!

நம்பாதையில் குறுக்கிடும் ஆற்றை கடந்து செல்ல "ஓடம் " வேண்டும் !மறு கரையை அடைந்ததும் ஓடத்திலிருந்து கரை ஏறி நம்பாதையை தொடருகிறோம் !

ஓட்டத்தை தூக்கி தலையில் வைத்துக்கொண்டு குதித்துக் கொண்டாடுவதில்லை ! கொண்டாடினால் நம் பயணம் தொடராது !

மதமும்   அப்படித்தான் ! 

அஸ்வகொஷும் ,அவன் காதலி பிரபாவும் இதனை விவாதிப்பார்கள் !அஸ்கொஷின் தத்துவ,கலை இலக்கிய ஞானத்தில் உருகிப் போனவள்  பிரபா ! உயிராய் காதலித்த அவனை தனதாக்கிக்கொள்ளும் வாய்ப்பு இருந்தும் அவன் இந்த சமூகத்திற்கு தேவை என்பதை உணருகிறாள் ! சரயு நதியில் இறங்கி தன காதலிலிருந்து அவனை விடுவிக்கிறாள் !

ராகுல்ஜியின் உன்னதம் இந்தப்பகுதியில் ஜோலிக்கத்தான் செய்கிறது !!!
Thursday, October 16, 2014

(மீள் பதிவு )
HOME

ABOUT

POSTS RSS

CONTACT

LOG IN

Monday, December 24, 2012


ஒரு  ஊறுகாய் தாத்தா .....!!!"தீக்கதிர் " பத்திரிகைக்கு மதுரையில் கட்டிடம் கட்ட முடிவாகியது  . "ஜனசக்தி"  பத்திரிகைக்காக வாங்கிய இடம் கைவந்துவிட்டது. மதுரை பை-பாஸ் சாலைக்கும்,கொன்னவாயன் சாலைக்கும் இடையே அரைகுறையாக கட்டப்பட்டிருந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு வேலை  ஆரம்பமாகியது. இந்த கட்டிட வேலையை கண்காணிக்க "ஆர்.ஆர் " என்று அன்போடு அழைக்கப்பட்டமுது பெரும் தோழர் ராமராஜ்  பொறுபளிக்கப்பட்டார்


விவசாயிகளின் தலைவர் ராமராஜ் .கட்சி பிரிநதபோது பலதலைவர்கள்  ,மற்றும் தொண்டர்கள் சிறையிலிருந்தனர்.. மேலும் பலர் தலைமறைவாக செயல்பட்டனர். தன்னந்தனியாக கிராமம் கிராமமாகச் சென்று விவசாயிகளை ஒன்று திரட்டி மார்க்சிஸ்டு கட்சிக்கு கொண்டுவந்த மகத்தான பணியைச் செய்தவர் ராமராஜ்.. அங்கேயே தங்கி சமைத்து சாப்பிட்டு வந்தார்.


மதுரை  1ம் நம்பர் சந்தில் அப்போது தீக்கதிர் பத்திரிக்கை செயல்பட்டு வந்தது. ஆர்.ஆர் அங்க் அடிக்கடி வருவார் என் வீடும் கொன்னவாயன் சாலைக்கு அருகிலிருந்தது வெறும் சோறும் தயிரும் சாப்பிடும் அவருக்கு வெஞசனமாக பள்ளியில் படிக்கும் என்  மகன் அல்லது மகள்மூலமாக  ஊறு காய் கொடுத்து அனுப்புவேன்.அவர்களைப் பொருத்தவரை அந்த மாபெரும் தலைவர் "ஊறுகாய் தத்தா".


இந்த  சமயத்தில் தான் அவசர் நிலை வந்தது. தலைமறைவு தலைவர்களுக்கும், வெளியில் செயல் படும் தலைவர்களுக்கும் தொடர்பாக ஆர்.ஆர் செயல் பட்டு வந்தார்.


நான் வசித்த பகுதியில் "சூரிய போஸ் " என்று ஒரு தோழர் இருந்தார் . அவருடைய தந்தை நேதாஜியின் ராணுவத்தில் பணியாற்றியவர். இது தவிர என்னோடு பணியாற்றிய தோழர் இப்ராகிம் அவர்களுக்கு "போஸ் " நெருக்கமானவர் .அவர் அடிக்கடி விளாங்குடி பெரிய கருப்பன் கொடுத்தார் 

என்று கூறி   ஒரு கவரை கொடுப்பார். போஸ் கொடுப்பதை .ஆர் ஆர்  இடம் கொடுக்கவேண்டியது என் பொறுப்பு..ஒரு சிறிய எவர்சில்வர் டப்பாவில் அந்த பிளாஸ்டிக் கவரை வைத்து அதன் மீது வாழையிலையினை வைத்து அதில் ஊறுகாயை போட்டு என் குழ்ந்தைகள் மூலம் கொடுத்தனுப்பி விடுவேன்.


என் மகன் MA  மற்றும் IRPM  முடித்து BL படித்து மத்திய உள் துறை அமைச்சகத்தில் பணியாற்றுகிறான்.


என் மகள் MA , Mphil , ML முடித்து வக்கில் தொழில் செய்கிறாள்.  
வேடிக்கை என்ன வென்றால்  அவர்கள் இருவருக்குமே நான் அவர்களை இப்படி use ( misuse ) பண்ணினேன் என்பது தெரியாது.
இந்த இடுகையை பார்த்து

தெரிந்து கொண்டால் தான் உண்டு.Monday, October 13, 2014

(மீள் பதிவு )

 

HOME

ABOUT

POSTS RSS

CONTACT

LOG IN

Monday, October 21, 2013


அலாவுதீன் பாய் அவர்களும் ,

காந்தியைக்  கொன்றவரகாளூம் ...!!!

அலாவுதீன் பாய் அவர்களை 1969ம் ஆண்டு முதன்முதலாக சந்தித்தேன் ! தீக்கதிர் ஆபிசில் page  maker ஆக பணியாற்றிக்கொண்டிருந்தார் !


மொட்டை என்றோ வழுக்கை என்றோ சொல்லமுடியாத தலை முடி ! நீண்ட கைவைத்த வெள்ளை சட்டை,வேட்டி தோளில் துண்டு என்று பார்ப்பதற்கு கம்பிரமான உயரத்தில் இருப்பார் ! பேசுவது குறைவு! ஆனால் " நறுக்" என்று இருக்கும் ! என்னை "சாமா,சாமா " என்று  கூ ப்பிடுவார் ! மதிய சாப்பட்டிற்கு பின் அவரோடு பேசுவேன் ! பழைய விஷயங்களை சொல்வார் ! 


அலாவுதீன் பாய் சொந்தமாக அச்சகம் வைத்திருந்தார் ! தமிழ் நாட்டில் அப்போது "உருது " மொழியில் அச்சுக் கோக்க தெரிந்த வேகு சிலரில் அவரும் ஒருவர் ! பின்னாளில் அச்சகமுதலாளிஅச்சக தொழிலாளியாக மாறினார் !


மதுரை நகராட்சி கவுன்சிலராக இருந்தார் ! 4வது வார்டு என்று நினைவு ! பட்டரக்கார தெரு,முனிச்சாலை பகுதியில்பிரபலமானவர் !


அவரோடு கவுன்சிலராக இருந்தவர்கள் பூச்சி அண்ணன்,வேம்புலு ,தயிர்கடை சுப்பிரமணியம் ஆகியொர் உண்டு!


மதுரை வைத்திய நாத அய்யர் ,,ஹிரா பாய், என்று பலர் பற்றி  பேசிக்கொண்டிருப்பார்  !


48ல் காந்தி சுடப்பட்டு இறந்தது பற்றி சொன்னார் !


"சாமா !கா ந்தியைக்    கொன்ற பொது  ஂமுஸ்லீம்க   தான்  கொன்றிருப்பார்கள் என்ற வதந்தியை கிளப்பி விட்டர்கள் ! முனிச்சாலை, பட்டரைக்காரதெரு,

தாசில்தார் பள்ளிவாசல்,இஸ்மாயி புறம் நு பதட்டமாயிருன்தது !கம்யூனிஸ் கட்சிதான் அவங்களுக்கு பாது கொடுக்க தீர்மானித்தது !ஏன்னா  அப்போ அவங்கத்தான் மதுரைல சக்தியோட இருந்தாங்க ! ஒருமணி நேரத்தில 20000 பேர திரட்டிருவாங்க ! வெறும் தண்டோரா போட்டே ஆளா சேத்துருவாங்க !

தைக்கால்   தெரு,மணி நகரம்,பூந்தோட்டம் ,செல்லுருன்னு ஆளுககுவிஞசுருவாங்க ! பூச்சி அண்ணன்னை தான் இதுக்கு அனுப்புவாங்க ! அவரு குதிரவண்டி தொழிலாளர் சங்க தலைவரு !வண்டியோட ஆளுகளை கொண்டுவந்து நீருத்திட்டரூ.குதிரை வாண்டிக்குள்ள சாமான்களை வச்சுப்புட்டாரூ !" 

"வாங்க பாய் டீ  சாப்பிடுவோம் "

"சரி சாமா "

பாய் தொடர்ந்தார் ! "அப்பந்தான் அய்யர் அனுப்பின ஆள் வந்தாரு ! காஜிமார் தெருவுக்கு ஆளனனுப்பச் சொன்னாருன்னு சொன்னான் !"

"யாரு சொன்னா?"

"அய்யரு!"

"யாரு பாய் அய்யரூ  "

"வைத்தியநாத அய்யரு ! பூச்சி அண்ணனுக்கு சொல்லிவிட்டறு "

அண்ணனும் எற்பாடு பண்ணிப்புட்டறு "

அப்புறம் ?"

"அப்புறம் என்ன அப்புறம் ! ஒரு பய வல்லை !"

"அதெப்படி வைத்திய நாதய்யருக்கு பூச்சி அண்ணன் பழக்கம் "

"அதுபெரியகதை ! "வைக்கல் "படப்புகதை ! "

"சொல்லும் பாய் "

"வாங்க சாமா ?"

பாய் எழுந்து நடக்க ஆரம்பித்தார் !


அலாவுதீன் பாய்,பூச்சி அண்ணன்,வேம்புலு  --


தோழர்களே! நீங்கள் எங்களுக்கு இன்று எவ்வளவு தேவைப்படுகிறீர்கள் தெரியுமா ? !!!!!


Friday, October 10, 2014

சிக்மண்ட் ப்ராய்ட்  அவர்களும் ,

அவரும் ........!!!சிக்மண்ட் ப்ராய்ட் மிகச்சிறந்த நரம்பியல் நிபுணர் ! 1856 மாண்டு ஆஸ்திரிய நாட்டில்பிறந்த அவர் 1938ம் ஆண்டு லண்டனில் இறந்தார் !

உளவியல் துறையிலும்,மனநல மருத்ததுவத்திலும்  அவருடைய  "வரையறை "கள்  மிக முக்கியமான வைகளாகும் ! அவை இலக்கியம், விஞ்ஞானம், தத்துவம் ஆகிய துறைகளிலும் தன செல்வாக்கை செலுத்தின !

கொஞ்சம் கூடுதலாகவே அவை போற்றப்பட்டன் !

உயிரினத்தின் சகல நடவடிக்கைகளுக்கும் அடிப்படை பாலுணர்வு தான் என்று அவர் கூறினார் !

"freudism "  என்ற தத்துவ போக்காகவே அது உருப்பெற்றது !

வளர்ந்து வரும் மார்சியத்தின் செல்வாக்கை நீர்த்துப் போகச்செய்ய "பிராய்டிசத்தை " தூக்கிப்பிடித்தவர்களும் உண்டு !

உலகம் புறாவும் அக்டோபர் 10 ம் தேதியை "உலக மனநல  "தினமாக கொண்டாடுகிறார்கள் ! மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் அந்த தினத்தை இந்திய "மனநல "தினமாக கொண்டாட வேண்டும் என்கிறார் ! இந்தியாவில் வரும் பத்து ஆண்டுகளில் 24 கோடிப்பேர் எதாவது ஒருவகையில் மனநல  பாதிப்பு உள்ளவர்களாக மாறும் வாய்ப்பு உள்ளது என்கிறார் ! அதனால் ஏழை எளிய மககளுக்கு மனநல மருத்துவம் போய்ச் சேரவேண்டும் என்றும் அறிவித்துள்ளார் !

நம்மில் பலர் மறதி என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் ! இதனை மனனலமருத்துவர்கள் memory  lapse என்கிறார்கள் ! 

சிலர் பேசும் போது தவறான பெயர்களை தகவல்களை கூறுவார்கள் ! இதனை slip of the tong  என்பார்கள் !

சிலர் ஒரே விஷயத்தை அடிக்கடி பலமூறை  தவறாகச் சொல்பவர் கள் உண்டு !

உதாரணத்திற்கு பிரதமர்  மோடி அவர்களை எடுத்துக் கொள்ளலாம் ! மடிசன் சதுக்க தோட்டத்தில் பிரமுகர்கள் முன்னால்பேசும் பொது 

மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி என்பதற்கு பதிலாக" மோகன்லால் "
என்று குறிப்பிட்டார் ! சென்ற  ஆண்டு ஒருகூட்டத்திலபெசும் போதும் "மோகன்லால் "என்றே கூறி யுள்ளார் ! 

பல தோலைக்காய்சிகளிலும்,முக நூலிலும் இதனை பலமுறை ஒளிபரப்பினர் ! மனசுக்கு கஷ்டமாக இருந்தது !

இது மறதியா மனநோயா ! ? 

"நமக்கு பிடிக்காத ஒருவரைப் பற்றி  கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய பொது இப்படிப்பட்ட மனநிலை ஏற்படும் "  என்று சிக்மண்ட் பிராய்ட் குறிப்பிடுகிறார் ! 

திருச்சியில் பிரதமர் பேசும் பொது வெதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரகம் பற்றி தவறாக குறிப்பிட்டார் !

அசாம் சென்றிருந்தபோது கிருஷ்ண பரமாத்வாவின் மனைவி "ருக்மணி" பிறந்த ஊர் என்றூ கூற பத்திரிகைகள் அது "விதர்பா" என்று கிண்டலடித்தன !  

ஐக்கிய நாடுகள் சபையில் "காஷ்மீர் " என்று குறிப்பிட வேண்டிய தருணங்களில் "பாகிஸ்தான் ,பாகிஸ்தான் " என்று  குறிப்பிட வெளி உறவுத்துறை அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம் சமாளிக்க வேண்டியதயிற்று !

இதனை Freudian slip of the tong என்று மனநல மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள் !

எது எப்படியிருந்தாலும் இந்திய மக்களுக்குமனநலம் பற்றிய  மருத்துவம் என்பதை சுகாதாரத்துறை புரிந்து கொண்டு செயல்படுவது மன நிறைவைத்தருகிறது ! Wednesday, October 08, 2014

"ஓய்வூதியம் என்றால் என்ன ? .....""உழைக்கும் பொது சம்பளம் வாங்குவது நியாயம் ! ஒய்வு பெற்ற பிறகு உழைக்காமல் சம்பளம் பெறலாமா ? என்று "சிவகங்கை சின்னப்பையன்"என்று கருணாநிதியால்  அழைக்கப்பட்ட ப.சிதம்பரம் கூறுவார் !

அதனை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதில்  முனைப்பாக இருப்பவர் அவர் மட்டுமல்ல ! 

பா.ஜ.க வின் யஷ்வந்த் சின்ஹா வும் அதே கருத்து உள்ளவர் தான் ! அவ்ர்களின் நண்பரான   ஜஸ்வந்த் சிங் அவர்களும் ஓய்வூதியத்தை காலி பண்ண வேண்டும் என்ற எண்ண முடை யவர் தான் ! 

பா.ஜ.க ஆட்சியின் போது தான் அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன !

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பதால் அரசின்வரவு செலவு கணக்கு அதிகமாகிறது என்று மூன்று  பெரும் புலம்புகிரார்கள் !    

அப்பவிமக்களில் பலரும் இவ்ர்கள்  கூறுவதில்  நியாயம் இருப்பதாக நினைக்கிறார்கள் !

உண்மையில்  "ஓய்வூதியம்" என்றால் என்ன ?

அரசு ஊழியர் ஊதியம் பெறுகிறார் !அவர் குடும்பத்தில் அவர் அவர்மனைவி ஆகியோர் அதன வைத்து வாழ்கின்றனர் ! அவ்ர்களுக்கு குழ்ந்தை இருந்தால் அதனையும் காப்பறுகிறார் ! அவருடைய பத்து வயது மகனை  பள்ளிக்கு அனுப்புகிறார் ! வயதான் தாய் தந்தையரை கவனித்துக் கொள்கிறார் ! 

அரசு ஊழியரத்தவிர வெறு எவரும் உழைக்கவில்லை ! அவர்களால் உழைக்க இயலாது ! அவர்களைக் காப்பாற்றுவது  அந்த ஊழியரின் பொறுப்பு ! முதியோர்களையும் ,குழந்தைகளையும், இளைஞர்களின் கல்வியையும் இந்த சமுகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் ! ஆனால் இதனை  அரசு ஊழியர் ஏற்றுக்கொண்டு தன உழைப்பில் நிறைவு செய்கிறார் ! 

அவர் ஒய்வு பெறும் போது இந்த கடமைகளை தொடர அவருக்கு கொடுப்பது தான் ஒய்வு ஊதியம் !

அதற்கு வேட்டு வைக்க இந்தப்பாவிகள் முயற்சிக்கிறார்கள் !


அம்மா , தம்பிதுரை ,

ராம் ஜெத்மலானி ......!!!ஜெயலலிதா அம்மையார் சிறையிலுள்ளார் ! எந்த வகையிலும் அவர் வசதியான் வாழ்க்கையைக் கொண்டவர் ! திரைப்படத்துறையில் கைகொள்ளாமல் சம்பாதித்தவர் ! அப்படிப்பட்டவர்  தன பதவியை பயன் படுத்தி  மேலும் சம்பாதிக்க வேண்டிய நிலை இல்லாதவர் ! 

பின் எப்படி இந்த 58 சொச்சம் கோடி வழக்கு ? 

கவிஞர் செஙகீரன் அவர்கள் எழுதிய கவிதைதான் நினைவு தட்டுகிறது ! 

யாரோ ஒருவீட்டில் ,
எவரோ தீவக்க ,
தங்க மகன் (ள் ) அன்றோ 
தண்ணீர்  சுமக்கின்றார் !!!

இது தான் அவருடைய கவிதை !

சட்ட நியாயம் என்பதும்  இயற்கை நியாயம் என்பதும் வேவேறானவை !

இந்த வழக்கு தமிழ்நாட்டில் நடந்தால் நியாயம்(!) கிடைக்காது என்று தி .மு.க வின் தலைவர் கருதினார் ! அதனால் அவருடைய கையாளான அன்பழகன் அவர்களை வழக்கினை  வேறு மாநிலத்திற்கு அனுப்பி விசாரிக்க வேண்டூம் என்று முறையிட வைத்தார் !  

அப்போது  மத்தியில் வாஜ்பாய் அவர்கள் தலைமையில்  பா.ஜ.க ஆட்சி நடந்து கொண்டிருந்தது ! சட்ட அமைச்சராக எம்.தம்பித்துரை இருந்தார் !

 பா.ஜ.க கூட்டணி அரசு சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தது ! வழக்கு அப்போது நடந்து கொண்டிருந்த நீதிமன்றத்திலிருந்து தமிழகத்திற்கு உள்ளேயே வேறு நீதிமன்றத்திற்கு அனுப்பலாம் என்று மட்டும் தம்பித்துரை பரிந்துரை செய்தார் !  வாஜ்பாய் அதனை ஏற்றுக் கொள்ளூம் நிலை இருந்தது !

அப்போது மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தலையிட்டார் ! 

"இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு அனுப்பவேண்டும் ! லஞசக் குற்றச்சாட்டு வழக்கு ! சிறந்த ,துணிச்சலான நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் ! யாருக்கும் பயப்படாத ஒருவரை அரசு வக்கீலாக நியமித்து சம்மந்தப்பட்டவரை தண்டித்து சிறையில் அடை க்க வேண்டும் "என்று அவர் பரிந்துறைத்தார் ! 

அரசிடம்வாதாடிஅதனை நடைமுறைப்படுத்தினார் அந்த அமைச்சர் !   

அவர் பெயர் ராம் ஜெத்மலானி !!!!!Monday, October 06, 2014

இந்த துணை நிறுவனங்கள் ....!!!

"மோகன் பகவத் அவர்களை இந்து மதத்தின் தலைவர்களில் ஒருவராக நான் பார்க்கவில்லை.

இந்து மதத்தின் தலைவர் ஒருவரோ அல்லது எந்த மதத்தின் தலைவரோ பண்டிகை நாட்களில் தொலைக் காட்சிகளில் தம் மக்களை வாழ்த்தவும், தங்களது மேன்மையை அடுத்தவர்களின் மனம் புன்படாத வண்ணம் உரையாற்றவும் அனுமதிப்பதில் தவறு இருப்பதாகவும் படவில்லை.

மதவெறி அமைப்பொன்றின் தலைவரை அழைப்பதுதான் ஆபத்தானதும் கண்டிக்கத் தக்கதும் ஆகும்! "

இரா எட்வின் அவர்கள் நிலைதகவலாக  கொடுத்துள்ளார் !

முற்றிலும் இதனை ஆதரிக்கிறேன் ! 

இதனை ஒட்டி எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறேன் !

நாடக செயற்பாட்டாளரும் ,மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவாளருமான "சப்ஃ தார் ஹஷ்மி படு கொலை செய்யப்பட்டார் ! அதனைப்பற்றி செய்தி செகரிக சென்றீருந்தேன்  ! டெல்லி நகர செய்லாளர் ராஜேந்திர சிங் அவர்களோடு சென்றிருந்தேன் ! அந்தநிகழ்ச்சியில் அங்கு நிருப ராக வந்திருந் ஜோஷி என்பவர் கொஞ்சம்  கூடுதலாக இடது சாரிகளை விமரிசித்தார் ! 

பா.ஜ.க ஆதரவாளர் ! பேச்சு கடுமையாகவும் மக்கள்  ஒற்றுமையை சீர்குலைப்பதாகவும் இருந்தது ! "இப்படிப்போனால் இந்தியா சிதறுண்டு விடும் " என்று என் ஆதங்கத்தை கூறினேன் ! 

"நல்லதாயிற்று ! ஒரு இந்து ராஜ்ஜியத்திற்கு பதிலாக 56 இந்துநாடு என்றால் எங்களுக்கு விருப்பமே " என்றார் !

இது  அவ்ர்களின் மனநிலையை குறீக்கிறது ! 

இதே போல் மற்றொரு சம்பவம் ! 

நாற்பது வருடங்களுக்கு முன் குமரியில்  நடந்தது ! அங்கு மதகலவரம் ! 

மறைந்த குன்றக்குடி அடிகளார் ஓடோடி சென்று அமைதியை ஏற்ப்படுத்த நடவடிகை எடுத்தார் !

இந்துக்களை தூண்டிவிட்டு கிறிஸ்துவர்களுக்கு எதிராக இந்து முன்னணிதலவர்கள் செயல்பட்டனர் ! அமைதியை நிலைநாட்டிய அடிகளார் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் !

"மதம் வேண்டும் ! பெரூவாரியான மக்கள் நம்பிக்கை உள்ளவர்கள் ! அவ்ர்களுக்கு மத ஏற்பாடு தேவை ! ஆனால் மதத்தின் பெயரை  சொல்லி இந்த துணை நிறுவனங்கள் தேவை இல்லை ! அவ்ர்கள்மத தலவர்களுக்கும்கட்டுப்பட மாட்டார்கள் ! சட்டங்களுக்கும் கட்டுபட மாட்டார்கள் " என்றார் !

இது பற்றி அடிகளார் "தீக்கதிர் " பத்திரிகையில் புனைபெயரில் கட்டுரைகள் எழுதியுள்ளார் !

போப் ஆண்டவர் கிறிஸ்துவர்களுக்கு வாழ்த்துசொல்வது ,டெல்லி இமாம் புகாரி அவர்கள் "ஈத் "  பண்டிகையின் பொது வாழ்த்துவது ,சங்கர மடாதிபதி தீபாவளி வாழ்த்துச் சொல்வது  போன்றதல்ல ,மோகன் பகவத் சொல்வது !

திட்டமிட்டு சாமர்த்தியமாக மிகவும் நுணுக்கமாக செயல் படுகிறார்கள் ! மத சார்பற்ற நண்பர்கள் தங்கள் "தான் "என்ற மமதையை கைவிட்டு ஒன்றுபட வேண்டும் ! 

அதனைக் குலைக்க "கார்பெரேட்டுகள் " முற்சிக்கிறார்கள் !

அதன் வெளிப்பாடு தான் மராட்டிய மாநில தேர்தல் ! 


 Thursday, October 02, 2014

ஐக்கிய நாடுகள் சபையில் 

தலைவர்கள் பேச்சு ..........!!!ஐக்கியநாடுகள் சபையில் இந்திய பிரதமர் பேசுவதற்காக அமேரிக்கா சென்றார் ! அவருடைய பேச்சின் சாரம்சத்தை இந்துத்துவா ஆதரவு பத்திரிகைகள்  வானளாவ புகழ்ந்து எழுதி வருகின்றன !

அவருடைய பேச்சு பற்றி முழுமையாக எழுதுவதற்குமுன்னால்  ஐநா சபையில்பேசிய சிலதலவர்களின் அந்தக்கால பேச்சினை நினவு குறுவது சரியாக இருக்கும் !

50 ம் ஆண்டுகளில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பி இந்தியாவுக்கு சங்கடத்தை உருவாக்கியதில் பிரிட்டனுக்கும்,அமெரிக்காவிற்கும் முக்கிய பங்கு உண்டு ! 

ஒருகட்டத்தில் இஸ்லாமிய நாடுகளைத் தூண்டிவிட்டு அமரிக்கா பாகிஸ்தானின் உதவியோடு ஐநா பாதுகாப்பு சபையில் மிகப்பெரிய நெருக்கடியை இந்தியாவிற்கு உண்டாக்கியது !

நேரு வே சென்று இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது ! பிரதமர் என்ற முறையில் அவர் போகாமல் அவருக்கு நம்பகமான ஒருவரை அனுப்ப முடிவு செய்யப்பட்டது !

வீ கே கிருஷ்ண மேனன் அனுப்பப் பட்டார் ! 

ஐநா வின் வரலாற்றில் பொண்ணெழுத்துக்காளால் பொறிக்கப்படவேண்டிய உரையை மேனன் அவர்கள் நிகழ்த்தினார் ! கிட்டத்தட்ட 9 மணிநேரம் தொடர்ச்சியாக பேசி பாகிஸ்தானின் வாதங்களை தவிடு பொடியாக்கினார் என்பார்கள் !

மற்றொரு சம்பவமும் நினைவு தட்டுகிறது !

பனிப்போர் காலம் ! அமேரிக்கா  "யூ2" என்ற விமானத்தை அனுப்பி சோவியத் நாட்டை வேவு பார்த்தது ! இந்த விமானம் 50000 மீட்டர்   உயரத்தில்  பறந்து படங்களை எடுக்கும் ஆற்றல் உள்ளது ! அன்றய  நிலையில் இந்த விமானத்தை தாக்க முடியாது என்று நம்மபப்பட்டது !

சோவியத்தின் தலைவர் குருஷேவ் எச்சரித்துப் பார்த்தார் ! அமேரிக்கா நாங்கள் விமானம் எதையும் அனுப்பவில்லை என்று சாதித்தது !

பிரச்சினை  ஐநாவிற்கு வந்தது ! குருசேவ் சபைக்கு வந்தார் ! அங்கு அவர் ஆற்றிய உரை இன்றும் பேசப்படுகிறது ! 

"அமெரிக்க இரண்டு விமானனகளை அனுப்பியது ! நாங்கள் எங்கள் ஏவுகணைகள் மூலம் தாக்கினோம் ! ஒன்று தப்பிவிட்டது ! மற்றொன்று தாக்கப்பட்டது ! விமானி பாரச்சுட் மூலம் குதித்தார் ! அவரை உயிரோடு பிடித்து வாக்குமூலம் வாங்கியுள்ளோம் ! இதோ அந்தவிமானியின் படம் ! அவர்பெயர் "பவல் " என்று மேசையில் தூக்கி எறிந்தார் ! நாற்காலியிலிருந்து  எழுந்து "பூட்ஸ்" கால்களால் மேசையை எட்டி உதைத்து " அமெரிக்காவிற்கு "இது ஒரு எச்சரிக்கை " என்று கூறி முடித்தார் ! 

ஐநா சபையில் வாஜ்பாய் இதற்கு முன்பு "இந்தி"யில் பேசியுள்ளார் ! நமது பிரதமர் மோடி அவர்களூம் இந்தியில்பெசினார் !

ஐநா வில் அங்கிகரிக்கப்பட்ட மொழிகள் ஐந்து உள்ளன ! அதில்பெசினால்  உடனுக்குடன் மொழிபெயர்ப்பு கேட்கும் ! நமக்கு எநத மொழி வேண்டுமோ அந்த மொழியில்  (ஐந்துக்குள் ) கேட்கலாம் !

வேறு  மொழியென்றால்  மொழி பெயற்பிற்கான செலவை அந்தந்த நாடுகள்  ஏற்க வேண்டும் !  

தவிர பேச்சை முன் கூட்டியே கொடுத்து  மொழிபெயர்ப்பாளரை தயார் செய்ய வெண்டும் ! 

நமது பிரதமர் குறிப்புகள் இருந்தாலும்  (extempore ) தன்முனை ப்பில் பேசினார் ! பிறநாட்டு சார்பாளர்கள் சரியான மொழிபெயர்ப்பு இல்லாமல் தங்கள் தலயில்மாட்டியிருந்த கருவிகளை எடுத்துவிட்டு "மௌனப்படம் " பார்த்தார்கள் !

அதுவும் ஒருவகையில் நல்லதாகப் போயிற்று ! பல இடங்களில் " காஷ்மீர் " என்பதற்குப் பதிலாக "பாகிஸ்தான்" என்று குறிப்பிட்டாராம் ! அவருடன் சென்றிருந்த வெளிஉறவுத்துறை அதிகாரிகள் அதனத்திருத்தி  பத்திர்கையாளர்களுக்கு கொடுத்துள்ளனர் !

பதிவுலக நண்பர் ஒருவர் " பிரதமர் அவருடைய தாய் மொழியான "குஜராத்தி " மொழியில் பேசியிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார் !

எந்த மொழியானால் என்ன ! வந்திருந்த அயல்நாட்டு சார்பாளர்கள் செவிகொடுத்து கேட்கவேண்டுமே !!! Wednesday, October 01, 2014

இந்தியாவின்(ல் ) சுகாதாரம் .......! ஆப்பிரிகாவிலிருந்து  காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள காந்திஜி இந்தியா வந்தார் ! அவருடைய நோக்கம் ஆப்பிரிகாவில்மக்கள் பிடிட்டிஷாரால் நடத்தப்படுவதை இந்திய தலைவர்களுக்கு எடுத்துச்சொவது தான் !

மாநாட்டுத்திடலில் உள்ள சுகாதாரக் கேடுகளைப் பார்த்து ஒரு வாளியையும்,விளக்குமாறையும் எடுத்துக்கொண்டு கழிப்பிடங்களை சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டார் !

தனிமனிதசுத்தம் என்பத சமூகத்தின்  சுகாதாரத்தைமேமப்டுத்தும் என்பதில் நம்பிக்கை உள்ளவர் அண்ணல் காந்தி அடிகள் ! 

பா.ஜ.க அரசு என்ன காரணத்தினால் காந்தி ஜெயந்தியை சுகாதார தினமாக அறிவித்துள்ளது என்பது தெரியவில்லை ! 

37 லட்சம் அரசு ஊழியர்கள் உறுதி எடுக்கவிருக்கிறார்கள் என்று அரசு விளம்பரங்கள் ஓலமிடுகின்றன !

மதுரையில் தொழில்குழுமம் நடத்தும்  அறக்கட்டளை யின் சார்பாக  கல்லூரி ஒன்று நடக்கிறது ! அதில் படிக்க அருப்புக்கோட்டையிலிருந்து 12ம் வகுப்பு தேறிய பதின்ம வயது மாணவி வந்தார் !

கல்லூரி கட்டிடத்தைப் பார்த்து பிரமித்தவ்ர் கழிவறைக்கு அடிகடி சென்றுவந்தார் ! "ஏன்மா ! உடம்பு சரியில்லையா ? "என்று கேட்டபோது தலையக் குனிந்து கொண்டு "சார் ! நான் கிராமத்திலிருந்து வருகிறேன் ! நாங்கள் இருட்டிய பிறகு வெட்ட வெளியை தான் பயன் படுத்துவோம் !இங்கு பளிங்கு கற்களால் ஆனா கழிப்பறையை  பார்த்துக் கொண்டே இருக்க தோணுதுசார் !" என்றார் ! 

சென்னையில் 6வது வகுப்பிலிருந்து 12 வது வகுப்பு வரை பதின்வயது பெண்குழந்தைகள் லட்ச்க்கணக்கில்படிக்கிறார்கள் ! அந்தப் பள்ளிகளில் கழிப்பறைகள் கிடையாது ! அந்தக்குழந்தைகள் காலையிலிருந்து குடிநீர் அருந்துவது இல்லை ! குடித்தா ல் ஏற்படும் உபாதைகளை தவிர்க்கிறார்கள் !

கிராமப்புறங்களில் கழிப்பிடம் இல்லாத வீடு- மன்னிக்கவும் -இருப்பிடங்களே அதிகம் ! 

அரசு ஊழியர்கள் உறுதிமொழி எடுப்பது என்பது கண்துடைப்பு நாடகமே !

Sanitation and Health care is a bigger task Modi Sir !!!