Sunday, October 24, 2010

பாம்புப் பிடரனும் எம்.பி.எஸ் அவர்களின் இசையும்---3

பாம்புப் பிடாரனும் இசையும்.


மானாமதுரை(M) பாலசுப்பிராமணியம்(B) சீனிவாசன்(S) என்பது அவருடைய முழுப்பெயர்.வசதியான குடும்பம்.சென்னை பி.எஸ் உயர் நிலைப் பள்ளியில் படிப்பு. பின்னர் மதறாஸ் மாகாணக் கல்லுரியில் உயர்கல்வி.படிக்கும் காலத்திலேயே கம்யூனிசத்தில் ஈடுபாடு. மதறாஸ் மாணவர் அமைப்பை கட்டி வளர்ப்பதில் முன்னணியில் நின்றார்.அவருடைய செயல் திறனையும் செய்நேர்த்தியையும் பார்த்த கட்சி அவரை டெல்லிக்கு .அனுப்பியது அங்கு பணியாற்றி கொண்டிருந்தார். பின்னர் மதறாஸ் மாகாணத்தில் மாணவர் அமைப்பை பலப்படுத்த மதுரைக்கு வந்தார்.மதுரை கட்சிவாழ்க்கை பற்றி அவர் கூருவதை கேளுங்கள்.

" மண்டையன் ஆசாரி சந்தில்தான் கட்சி அலுவலகமிருந்தது.குருசாமிநாயனாவும் மற்றொரு தோழரும் அங்கேயே தங்கி இருந்தார்கள். அவர்களோடு நானும் செர்ந்து கொண்டேன். முழுநெர உழியருக்கு மாதம் புத்து ரூ அலவன்சு. கட்சி கஷ்டத்தில் இருந்த நேரம். அலவன்சு கூட மாதாமாதம் கொடுக்க முடியாது. அங்கு நாந்தன் இளவ ரசன் எனக்கு பதினந்து.ரூ அலவன்சு.நான் மத்திய கமிட்டியால் அனுப்பப்பட்டவன். ஒவ்வொரு மாதமும் டெல்லியிலிருந்து டாண் என்று பத்தாம் தேதி மணியார்டர் வந்துவிடும்.வந்தால் எங்களுக்கு ஒரே ஜாலிதான்" என்று விவரித்தார் எம்.பி.எஸ்.

"மண்டயன் ஆசாரி சந்திலிருந்து டவுண் ஹால்ரொடு போனால் சுல்தானியா ஹோட்டல் வரும் .ஒரு பிளெட் பிரியாணி எட்டணா.அரை பிளெட் நாலணா. நாங்கள் கட்சிக்காரர்கள் என்பது கடை முதலாளிக்குத் தெரியும். எங்களுக்கு மட்டும் கால் பிளெட் இரண்டணாவுக்கு கொடுப்பார். குஷ்காவுக்குக் கீழே இரண்டு துண்டு கறி கூடுதலாக வைத்திருப்பார் இரவு குதிரை வண்டி லாயத்திற்கு போவோம்.ஆச்சி ஒருவர் காலணாவுக்கு இரண்டு இட்லி தருவார். தலைக்கு ஆறு இட்லி தின்போம். என் அலவன்சு கரைந்து விட்டால் சிக்கல்தான்":என்று தொடர்ந்தார்.

" மண்டையன் ஆசாரி சந்து முக்கில் கிருஷ்ணாகாபி இருந்தது.காபி கொட்டையை வருத்து அரைப்பார்கள்.வசனை மூக்கைத்துளைக்கும்.குருசாமி நாயனா ஒரு ஈய டம்ளரில் வெந்நீரைக்கொடுப்பார். வாசல்ல பொய் "வாசனையை பிடி.வெந்நீரைக் குடி அதுதான் இன்னய காப்பி" எம்.பி.எஸ் நிறுத்தினார். "எவ்வளவு இனிமையான காலம்" அவர் குரல் தழுதழுத்தது.கண்கள் கலங்கின.அவருடைய தொடையை இருகைகளாலும் பற்றி அழுத்தினேன்."நான் அழவில்லை காஸ்யபன் அது ஒரு சுகானுபவம்"என்றார் அந்த கம்யூனிஸ்ட்..

"முத்தையா! என்னை ஏன் முன்னாலயே அழைக்கவில்லை. இப்படி ஒரு அமைப்பு இரு ப்பது தெரியாம போச்சே." என்று கே.எம்.இடம் அங்கலாய்த்தார்" முப்பது பையங்களை.என்னிடம் அனுப்பு.மிகச்சிறந்த சேர்ந்திசைக்குழுவை உருவாக்குகிறென்" என்றார்

டெல்லியில் இருக்கும் போது ஜபிதா என்ற காஷ்மீரத்து முஸ்லீம் பெண்ணை காதலித்து மணந்தார். சுதந்திரப் போராட்டவீரரும்,காங்கிரஸ் தலைவருமான டாக்டர்.சைபுதீன் கிச்சுலுவின் மகள்தான் ஜபிதா.

ஏப்ரல் மாதம் குழு பயிரற்சிக்கு வரச் சொல்லியிருந்தார் எப்ரல் முதல் வாரம் நிகழ்ச்சிக்காக லட்சத்தீவு சென்றார். மாரடைப்பு ஏரற்பட்டு மரணமடந்தார்.(1988).அவர் மனைவி ஜபிதா 2002ல் இறந்தார் மகன் கபீர் 2009ம் ஆண்டு மறைந்தார்

பின் குறிப்பு:இது என்னுடைய ஐம்பதாவது இடுகை என்னுடைய முதல் இடுகைக்கு முதல் பின்னூட்டமிட்ட இ.எம்.ஜொசஃப் அவர்களுக்கு என் நன்றி. மற்றும் ராம்ஜி யாஹூ, ஹரிஹரன் ஆகியொருக்கும் நன்றி.பதிவர்களுக்கு இது சோதனையா? வேதனையா?சாதனையா? என்பதற்கு தொழர்கள் காமராஜ், மாதவராஜ் ,எஸ்.வி.வேணுகோபால் ஆகிய மூவர்தன் பொறுப்பு---அன்புடன் காஸ்யபன்.

Saturday, October 23, 2010

பாம்புப்பிடாரனும் எம்.பி.எஸ் அவர்களின் இசையும்---2

பாம்புப்பிடாரனும் இசையும்


"என்னுடைய பயணப்பெட்டியில் மார்க்ஸ், ஏஞ்சல்ஸ் எழுதிய கலையும் இலக்கியமும் என்ற தொகுப்பு நூலும்.பாரதியின் முழுமையான கவிதைத்தொகுப்பும் இருக்கும்.அறையில் தங்கி இருக்கும் போது படிப்பேன்.பாரதியின் வசன கவிதைகள் எனக்கு நிரம்பப் பிடிக்கும்.அவற்றில் ஒரு அமானுஷ்யம் புலப்படும்.அது பாரதியின் பழக்க வழக்க ங்களில் ஏற்பட்ட குறைபாடாகக் கூட இருக்கலாம்.இருந்தாலும் இசை பற்றி ஒரு புதிய பரிமாணத்தை அவரால் கொடுக்க முடிந்தது"என்று எம்.பி.எஸ் விளக்கினார்

என் நினைவில் குன்றக்குடி வைத்தியனாதனின் நினைவு தெரித்தது.குடகில் ஊறி கொப்பளித்து ,ஆடுதாண்டும் காவிரியாகி,அருவியாகப் பொழிந்து,அகண்டகாவிரியாகி,தஞ்சைப் புழுதியை நனைத்துவிட்டு,கீழைக் கடலில் சங்கமிக்கும் காவிரியை தன் வில்லேழுப்பும் ஓசைமூலம் காட்சி ரூபமாக்கியவர் அவர். எனக்கு முன்னோடி எம்.பி.எஸ் அவர்களின் "பாம்புப்பிடாரன்" தான் என்றார்

"ரயிலின் சப்தம் கூட ஒரு லயத்தொடுதான் உள்ளது.நிலயத்தில் "உப்புமா,வடை,காப்பி" என்று விற்பவர் ஒரே சுருதியில் சொல்கிறார். உச்சி வெயிலில் தொம்பைப் பெண்" முறம் வங்கலியோ முறம்" என்று தெருவில் கூவும்போது அதில் ஒரு லயம் கிடைக்கவில்லயா?" என்று எம்.பி எஸ் தொடர்ந்தார்.

பாம்புப்பிடாரன் இசைக்கோர்வையில் மகுடியும் கவிதையும் மட்டுமல்லாமல்,இவைகளும் இனைந்திரு க்கும்.இந்த சமயத்தில் இசை ஆரய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சி . மாணவி சொன்னது நினைவுதட்டுகிறது.

"ராக்கம்மா கையைத்தட்டு---" என்ற பாடலை பற்றி கூறுவார்.."மேற்கத்திய இசையில் ஆரம்பித்து,நாட்டுப்புர இசைக்குவந்து செவ்விசையில் முடியும்.அதுமட்டுமல்ல.தேனில் ஊறிய பலாப்பழம் தொண்டையில் நழுவுமே அதுபோல அந்த மாற்றம் நிகழும். இசைக்கல்லூரிகளில் இவற்றை விளக்கிச் சொல்ல மாட்டேன் என்கிறார்களே' என்று ஆதங்கப்பட்டார்.

இசைக்கல்லூரிகள் கூட தொழில்முறை கல்வியாக, தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றில் வேலை வாங்கித்தரும் கல்வியாக மாறிவிட்டதே!

இந்துமாக் கடல் எங்களுடையது.அங்கோர் வாட் கொவில் எங்களுடையது.என்ற பாடலை எம்.பி.எஸ் சொல்லிக்கொடுத்தார்.எங்களுடையது என்று உச்சரிக்கும் பொது நெஞ்சு புடைக்க வேண்டும் என்று பாடகர்களிடம் வற்புறுத்துவார்.இந்துமாக்கடல் என்ரு உச்சரிகும் போது குரல் மேலும் கீழுமாக உயர்ந்தும் தாழ்ந்தும்வர கடலலை பொன்ற பிம்பம் மனதில் தோன்றும்.

விடுதலை போரில் வீழ்ந்த மலரே.என்ற பாடலில் தோழா என்ற வார்த்தயை உச்சரிக்கும் பொது கண்ணீர் வந்துவிடும்.

"ஐயா! செம்மலர் பத்திரிக்கைக்காக ஒரு நேர்காணல் தரவேண்டும்" என்று கெட்டேன். மறு நாள் அறைக்கு வரச்சொன்னார்.போனேன்(தொடரும)

Friday, October 22, 2010

பாம்புப் பிடாரனும் எம்.பி எஸ் அவர்களின் இசையும்----1

"பாம்புப்பிடாரனும் இசையும்'


முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் த.மு.எ.ச சார்பில் மாநில அளவில் ஒரு இசைப்பயிற்சி பட்டறை நடத்த கே.எம் அவர்கள் ஏற்பாடு செய்ய விரும்பினார்கள். மதுரையில் அப்போது விளாச்செரியில் இசைக்கல்லூரி முதல்வராக

திருப்பாம்பரம் சண்முகசுந்தரம் அவர்கள் பணியாற்றிவந்தார்கள். மிகுந்த இசைப்புலமைமிக்க நாதஸ்வர கலைஞர்.பலநாடுகளுக்கு சென்று வந்தவர்.அவர் வகுப்புகள் எடுத்து பயிற்சி தர ஏற்றுகொண்டார்கள். அடுத்து மார்க்ஸ்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்(மறைந்த) எம்.ஆர்.வெங்கடராமனின் சகோதரர் மகன் எம்.பி.சீனிவாசன் பயிற்சி அளிக்க இசைந்தார்கள் பட்டறை கோவையில் நடந்தது.

தொடக்க நிகழ்ச்சிகள் முடிந்ததும் எம்.பி.எஸ் இசையின் தோற்றம் வளர்ச்சி பற்றி மார்க்சீய நோக்கில் விளக்கினார். மதியம் சேர்ந்திசை பயிற்சிக்கான பாடலை எழுதி போட்டார். மதிய உணவுக்காக கலைந்தோம்.பயிற்சி பெற வந்தவர்களுக்கு அந்தப்பாடலின் கருத்து பிடிக்க வில்லை.இந்திராஅம்மையாரின் புகழ் பாடுவதாக இருந்தது

கே.எம் அவர்களும்,எம்.பி.எஸ் அவர்களும் உணவிற்காக நகரத்திற்கு செல்ல காரில் ஏறினர்.அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்த. நான் "ஐயா!முதல் பாடலாக "பாம்புப்பிடாரனை வைக்கலாமே"என்று எம்.பி.ஏஸ் அவர்களிடம் கூறினேன்..அவர் என்னைப் பார்த்தார். கார் நகர்ந்துவிட்டது..

தேவையில்லாமல் பிரச்சினையை கிளப்பிவிட்டோமோ என்று பயம் வந்துவிட்டது.நிகழ்ச்சி மூன்றூ நாளும் விலங்கமிலாமல் நடக்க வேண்டுமே! அவர்கோபித்துக்கொண்டால்...." நடுங்கிக் கொண்டே இருந்தேன்.

பாரதியின் வசனகவிதையில் ஒன்று "பாம்புப்பிடாரன்".இசைபற்றி ஆன்மீகமும், அறிவியலும் கலந்த கவிதை.பாம்புப்பிடாரனின் மகுடியிலிருந்து இசைவருகிறதா? அல்லது அவன் உதாட்டிலிருந்துவருகிறதா?.சம்பந்தமே இல்லாத இரண்டை இணைப்பது எது? இசையா? இசை என்றால் காற்றா?மதிய வெய்யிலில் 'ஜரிகை வாங்கலியோ ஜரிகை" என்கூவுகிறானே அவன் குரலுக்கும் குழலுக்கும் ஒரே சுருதியை லயத்தைக் கொடுத்தது யார்? என் சக்தி தானே?

என்று .வரும். வானொலியில் உள்ளம் உருகும் வகையில் எம்.பி.எஸ் இசை அமத்திருப்பார்.கேட்கக் கேடக பிரமிப்பாக

இருக்கும்.

மண்டப வாயிலில் கார் வந்தது.கே.ஏம் இறங்கினார்கள். அடுத்து எம்.பி.ஏஸ் பரபரப்பாக இற்ங்கினார்கள். வேகமாக உள்ளேவரும்போதே "யார் காஸ்யபன்? யார் காஸ்யபன்?" என்று கேட்டுக்கொண்டே வந்தார்" நான் தான்.ஐயா" என்று பலியாடு போல் அவர் முன் நின்றேன்

'பாம்புப்பிடாரனைக் கேட்டிருக்கிறீர்களா?".

"பல முறை"

"எங்கே"

"வானொலியில்"

"எப்படி இருக்கிறது"

"அற்புதம்"

"என் படைப்பில் எனக்கு மிகவும் பிடித்தமானது"

என் கைகளைப் பற்றிகொண்டார்.தன்னுடைய உதவியாளரை அழைத்து முதல் பாடலாக "ஆன்கொர் வாட்" என்று மாற்றி விட்டேன்.அதை எழுதிப்போடுங்கள் என்று கூறினார் "பாரதி சொன்னதைவிட கூடுதலாகச் சேர்த்திருக்கிறீர்கள்..இது எப்படி உங்கள் கவனத்திற்கு வந்தது? என்று கேட்டேன்."காஸ்யபன்! ஒருமுறை கட்சி வேலையாக கான்பூர் சன்றிருந்தேன்" என்று சொல்ல ஆரம்பித்தார்.(தொடரும்)

Tuesday, October 19, 2010

மனித உரிமை (அமெரிக்க மாதிரி)---2

மனித உரிமை (அமெரிக்க மாதிரி)


ஆப்பிரிக்கக் காடுகளிலிருந்து காக்கா,குருவிகளை வேடர்கள் வலைவீசுப்பிடிபார்களே அப்படி ஸ்பானிய வியாபாரிகளால் கருப்பு இனத்தைச்ச்செர்ந்த மக்கள் பிடிக்கப்பட்டு அடிமைகாளாக அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட வம்சத்தை சார்ந்தவர் பால் ராப்சன்.(1898-1976)

தன்வாழ்நாள் பூராவும் அந்தமக்களின் விடுதலைகாக பாடுபட்டவர்.மிகச்சிறந்த படிப்பாளி,விளையாட்டுவீரர், வழைக்குரைஞர்,தொழிற்சங்கவாதி,நடிகர், உலகப்புகழ் பெற்ற பாடகர்..கருப்பின  மக்களின் விடுதலை என்பது அமெரிக்காவில் சோசலிசம் வந்தால் தான் கிடக்கும் என்று மனதார நம்பியவர்.

இவர் வாழ்ந்த காலத்தில் தான் வலதுசாரி அரசியல்வாதிகளான மக்கார்த்தி,எட்கார் ஹூவர்,டல்லாஸ் ஆகியோர் அமெரிக்க அரசியலில் செல்வாக்கோடு இருந்தனர்.உலகம் பூராவும் சென்று இசைநிகழ்ச்சி நடத்திவந்தார். இங்கிலாந்து சென்று தொழிலாலர்களுக்காக நிகழ்ச்சிகள் நடத்துவார்.சுரங்கத்தோழர்களோடு அவர்கள் வாழும்பகுதியல் வழ்வார். அவர்களோடு சுரங்கத்திற்குள் இறங்கி அவர்கள் கொடுக்கும் ரொட்டியை உண்பார்.ஐரோப்பாமுழுவதுமுள்ள அடக்கப்பட்ட மனிதர்களுக்காக குரல் கொடுத்தார்.ஆப்பிரிக்கமானவர்களுக்கான அமைப்பைத்தோற்றுவித்தார்.1934 ம் ஆண்டுவாக்கில் சொவியத் யூனியன் சென்றார்.

அங்குள்ள பல்வேறு இனமக்கள் ஒன்று பட்டு வாழ்வதிப் பார்த்து வெள்ளையரும் கருப்பர்களும் தன்நாட்டில் அமைதியாக வாழ முடியும் என்று நம்பினார்.

ஸ்டாலின் அமைதிப்பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

அமெரிக்க அரசு அவருடைய பாஸ்போர்ட்டைப் பறித்தது. அவர் மேடைகளில் பாடக்கூடது என்று தடைசெய்தது..அவர் பாடும் நிகழ்ச்சிகளில் கலாட்டா செய்தது.20000 தொழிலாலார்கள் முன்னால் பாடவரும்பொது நிறவெறியர்கள் அவரைத்தாக்க முற்பட்டனர்.நிகழ்ச்சியை நடத்துபவர்கள் தயங்கி ரத்து செய்தனர். தொழிலாளர்கள் அதே இடத்தில் நான்கு நாட்களுக்குப் பிறகு நடத்த முடிவு செய்தனர்.

20000 தொழிலாலர்கள் கைகோர்த்து உலகப  புகழ் பெற்ற அந்த்ப்பாடலைப்பாடினர்.

We shal not move ( நாங்கள் நகர மாட்டோம்) என்று பாடினர்.

பால் ராப்சனை நாடாளூ மன்ற கமிட்டி விசாரித்தது. ."இவ்வளவு பெசும் நீ ரஷ்யாவுக்குப் போய்விட வேண்டியதுதானே? என்று கமிட்டி தலைவர் கேட்டார்." அமெரிக்க தோட்டங்களிலும்,வயல்வெளிகளிலும் அடிஉரமாக இருப்பது ஒருகோடி கருப்பர்களின் ரத்தமும் சதையும்.அவர்களின் வாரீசுகள் நாங்கள் நாங்கள் ஏண்பொகவெண்டும் என்ரூ  கெட்டார். வயதான காலத்தில் ஓய்வுக்காகவும் மருத்துவத்திற்காகவும் மாஸ்கோ சென்றார். அங்கு சி.ஐ.ஏ உளவாளிகள் அவருக்கு விஷம் கொடுத்தனர். நல்லவேளை பிழைத்துவிட்டார்.

மார்டின் லூதர் கிங் கருப்பின மக்களின் உரிமைகளுக்கக உயிரைவிட்டார். அவரை மேலை நாடுகள் போற்றிப்புகழ் கின்றன.மிகச்சிறந்த மனித நேய மாண்பு அது.

பால் ராப்சன் தன் வாழ்வை அந்த அடிமை மக்களுக்காக அர்ப்பணித்தார். அதோடு சோசலிசம் வேண்டும் என்றும் கூறினார்.

Friday, October 15, 2010

மனித உரிமை (அமேரிக்க மாதிரி)

அமேரிக்காவின் மனித உரிமை மாண்புக்கு இரண்டே இரண்டு சான்றுகளைச் சொல்லலாம் என்று கருதுகிறென்.ஒருவர் அந்த மாபெரும் நடிகர் சார்லி சாப்ளின். மற்றொருவர் பாடகர்,நடிகர்,எழுத்தாளர், நாடகவியலார்,வழக்குரைஞர், தொழிற்சங்கவாதி,கருப்பின மக்களின் தலைவர், சொவியத் நாடு சென்று வந்தவர். பால் ராப்சன்.


இந்த நாய்களுக்கு கம்யூனிசம் என்றால் பிடிக்காது.மெக்கார்த்தி,எட்கார் ஹூவர், டல்லஸ் ஆகியோர் ஜமக்காளத்தில் வடிகட்டிய கம்யூனிச எதிர்ப்பாளர்கள்.இவர்களுக்கு வசதியாக 1908ம் ஆண்டே சட்டம் இயற்றிவிட்டார்கள். அமேரிக்க எதிர்ப்பு நடவடிக்கை கண்காணிப்பு சட்டம் என்று பெயர் சோவியத் புரட்சிக்குப் பிறகு கம்யூனிஸ்டுகளை அழித்தோழிப்பது இந்த சட்டத்தின் முக்கிய பணியாகியது.

அமேரிக்க அறிவுஜீவிகள்,எழுத்தளர்கள்,கலைஞர்கள்,ஆகியோர் சோசலிசம்,சோவியத் என்று பெசத்தலைப்பட்டனர்.இவர்கள் ஒரு குழுவாக செயல்படுவதாக அரசு புரளியைக் கிளப்பிவிட்டது.நாட்டிற்கு இவர்களால் மிகப்பெரிய ஆபத்து வரும் என்று பிரச்சாரம் செய்தனர்..இதற்காக ஒரு இயக்கத்தையே உருவாக்கினர்.. அந்த இயக்கத்தின் பெயர்தான்"சிவப்பு பயம்"(red scare)'

தன்னுடைய கவனத்தை நாடகத்துறையிலும் சினிமாத்துறையிலும் .செலுத்த ஆரம்பித்து.குட்டி நடிகர்கள்,எழுத்தளர்களை வசக்கினர் பெரிய நடிகர்களில் தாங்கள் சந்தேகிகப்படுபவர்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்க வற்புறுத்தினர். பல பெரிய நடிகர்கள். ஒதுங்கினர். பத்து பேர் "உன் சோலியப் பாருடா" என்று. ஊன்றி நின்றனர். அவர்களில் முதலாமவர்தான் சார்லி சாப்ளின். இவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அல்ல.அமெரிக்க மக்களுக்கு சோசலிசம் வந்தால் நலது என்று நினைக்கும் ஆதரவாளர்கள் மட்டுமே.

உலகத்திரப்பட வரலாற்றில் மிகசிறந்த பத்து படங்களை தேர்ந்தெடுத்தால் அதில் சாப்ளினின் Great Dictator ஒன்றாகும்..இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரை எதிர்த்து எடுக்கப்பட்டபடம். அப்போது . போரில் அமேரிக்கா சேரவில்லை. ஹிட்லரை எதிர்த்து வம்பை விலைக்கு வாங்குவானேன் என்று படத்தயாரிப்பை தடுத்து விட்டது.(பின்னாளில் ஹிட்லரே பார்த்து பாரட்டிய படமாகும்) சாப்ளின் மற்ற தயாரிப்பிலும் ஈடுபட முடியாமல் செய்தது.படபிடிப்புத்தளங்களை கொடுப்பவர்களை,துணை நடிகர்களை,படம் பிடிப்பவர்களை மிரட்டியது.சாப்ளின் அமேரிக்காவை விட்டு வேளியேரினார்.இங்கிலாந்தில் குடியேறிணார்.

இப்படி சக நடிகர்களை காட்டிக்கொடுதவரகளில் ஒருவர்தான் எலியா காஜன் என்ற இயக்குனர்.அவருக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்க ஆஸ்கார் கமிட்டியை அமேரிக்க அரசு நிர்ப்பந்தித்தது.ஆஸ்கார் கமிட்டி அடிபணிந்தது ஆனாலும் எலியா காஜனின் எதிர்பாளர்கள் பணியவில்லை. விருது வழங்கும் விழாவின் போது கலந்து கொண்டார்கள்.

விருது வழங்குக் போது எல்லாரும் எழுந்து நின்று கைதட்டும் பொது கைதட்டாமல் அமர்ந்து அவரை அவமதிதார்கள். (தொடரும்)

Tuesday, October 12, 2010

கற்பனை என்பது இல்லை. There is no Fiction---3

சென்ற இடுகையில் கற்பனை என்பது கிடையாது என்பதாக முடித்திருந்தேன்.ஆனாலும் பதிப்புரிமை என்று இருக்கிறது. காப்புரிமை என்றும் இருக்கிறது.கற்பனையே இல்லை என்றால் அதற்கான உரிமை என்பது முரணாகத் தெரியும்.


உதாரணமாக நானும் நண்பரும் ஒரு உணவு விடுதிக்குச் செல்கிறோம். வெளியே வருகிறோம்விடுதியின் வாயிலில் உள்ள கடையில் வெற்றிலை வாங்கி மெல்லுகிறோம். உணவு விடுதிக்காரர் முட்டுச்சந்தில் எச்சில் இலைகளைப்போட்டிருக்கிறார். பசியோடு இருக்கும் சிறுவர்கள் தொட்டியை நோண்டி,மிச்சம் மீதியை எடுதுத் திங்கிறார்கள். " நாம் சுவையான உணவை உண்டோம். அந்தச் சிறுவர்களைப் பாருங்கள்.பசியார உணவில்லை எச்சிலைத் திங்கவேண்டிய நிலை" என்ரு ஆதங்கத்தோடு என்னிடம் நண்பர் கூறுகிறர் நெடுமரமாய் நிற்கும் நான்"ஃபில்டர் வில்ஸ் வாங்குங்கள்." என்கிறேன் நண்பரின்முகம் வாடிபோய் விடுகிறது..வீடு வந்து சேர்கிறோம்.

நண்பர் இரவு முழுவதும் தூங்கவில்லை. நடந்ததை நயம்பட எழுதி பத்திரிக்கைகு அனுப்புகிறார். சிறுகதையாக வெளிவருகிறது.கதைச்சம்பவத்தை நானும் பார்த்தேன்.நன்பரும் பார்த்தார்..நான் நெட்டைமரமாய் நின்று ஃபில்டர் வில்ஸ் ஊதினேன்.நண்பர் மன உளைச்சலோடு தூங்காமல் அதனைப் படைபாக்கி சகமனிதர்களுடன் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். தனி மனித அனுபவத்தை உலக அனுபவமாக மாற்றுவது தானே இலக்கியம்.எனக்கும் அவருக்கும் வித்தியாசம் வேண்டாமா? அதனால் தான் அது கதையாகி அதன் உரிமை அவருக்கு என்றானது..

("புதிய புத்தகம் பெசுகிறது" என்ற இதழ் "பதிப்பு--காப்பு உரிமை" என்று சிறப்பிதழ் வெளியிட்டுள்ளது) பதிவுலக நண்பர்கள் பல சந்தேகங்களை,கேள்விகளை எழுப்பி உள்ளனர்.விமானத்தை பார்த்ததில்லை. படைக்கவில்லையா? பணம் காய்க்கும் மரத்தைப் பார்த்ததில்லை. கற்பனையில் தோன்றவில்லையா? நடிகையை அரை குறை ஆடையில் பார்த்தா இருக்கிறொம்.கற்பனை செய்யவில்லையா? என்று கேட்கிறார்கள்.பார்த்தல்,கேட்டல், முகர்தல், தொடல்,சுவைத்தல் ஆகிய ஐம்புலன்களின் மூலமாக மட்டுமே வெளி உலகம் மனிதனுக்கு புலப்படும். அது விஞ்ஞானம்.மற்றவை அஞ்ஞானம்.-----------(முடிந்தது.)

Monday, October 11, 2010

கற்பனை என்பது கிடையாது.(There is no fiction)---2

கற்பனை என்று உண்டா என்ற கேள்வி சென்ற இடுகையில் எழுப்பப்பட்டு இருந்தது.பிற உயிர்கள் அத்துணையும் இயற்கையோடு இயற்கையாக வாழ்கிறது.மனிதன் மட்டுமே இயற்கையோடும் ,இயற்கையிலிருந்து தனித்தும் வாழ்கிறன்.அவனுக்கு வெளியே இருக்கும் உலகம்,அவனுக்கு எப்படி புலப்படுகிறது?


ஒரு ரோஜா செடியில் பூத்திருக்கிறது.செடியில் ரோஜா இருப்பதாக அவன்நினைப்பதால் அது இருக்கிறதா? அது இருப்பதால் தான் அவன் நினைக்கிறானா?

அது இருக்கிறது.அதனல் பார்க்கிறான். நுகர்கிறான்.இதழ்களை தொடுகிறான்.காற்றில் அது அசையும் ஒசையைக் கேட்கிறன்..அதன் இதழை வாயில் போட்டு அதன் இனிப்பான துவர்ப்பை ருசிக்கிறான். மொத்தத்தில் ஐம்புலங்களின் மூலம் ரோஜாவின் இருத்தலின் சாரத்தைப் புலப்படுத்திக் கோள்கிறான்.மனிதனுக்கும் அவனுக்கு வெளியே இருக்கும் உலகிற்குமான புரிதல் அவன் புலன்கள் மூலமாக உருவாகிறது புலன்களின் கூர்மைக்குத்தகுந்தபடி அவனுடய புலனறிவு கூடுகிறது,அல்லது குறைகிறது

நாய்களுக்கு கண்கள் உண்டு. ஆனால் அவைகளுக்கு இந்த உலகம் கருப்பு வெள்ளையாகவே தெரிகிறது வண்ணங்கள் புலப்படுவதுஇல்லை...(clour blindness).குறைபட்ட புலன்கள் மூலம் குறைபட்ட புலனுணர்வைத்தான் பெறமுடியும்.

உதாரணமாக கண்ணில்லாதவனுக்கு தஞ்சை பெரியகோவில் ஒரு கலைவடிவமல்ல.Rambrant அவர்களின் வண்ண ஒவியம் ஒருகலைப்படைப்பு இல்லை. காதில்லாதவனுக்கு எம்.எஸ். அவர்களின் இசை ஒருகலை வடிவமில்லை.

இதனையே மார்க்ஸ் அவர்கள் இன்னும் கூர்மையாகச் சொல்வார்.எல்லாருக்கும் காதிருக்கிறது.எத்துணை பேர் இசையை ரசிக்கிறோம்.காதிருந்தால் மட்டும் போதாது.இசைக்காது (musikal ear) வேண்டும் என்பார்.

"இயற்கையின் தர்க்கவியல்" (Dialatics of Nature) பற்றி நண்பர்களோடு விவாதிக்கும்போது பரிசொதனை ஒன்று செய்வோம்.ஒரு சில மணித்துளிகளில் நாமும் செய்துபார்த்துவிடலாம். ஒரு ஐந்து விநாடி கண்களை மூடிக்கோள்வோம்.எதை வேண்டுமானாலும் கற்பனை செய்து கொள்வோம்.நாம் கற்பனை செய்ததை நண்பர்களோடுபகிர்ந்து கொள்ள வேண்டும். தயாரா? ஒரே ஒரு நிபந்தனை.இதுவரை நீங்கள்பார்த்திராத,கேட்டிராத,முகர்ந்திராத,தொட்டிராத,ருசித்திராத ஒன்றைகற்பனை செய்திட வேண்டும்.தயாரா?

பதிவுலக நண்பர்களே உங்களால் முடியாது.புலனறிவு மூலம் பெற்றதை மட்டுமே கற்பனை செய்யமுடியும் அதனால்தன் இல்லாத கடவுளுக்குக் கூட இருக்கும் மனிதனின் கண், மூக்கு,காது,கை,கால்,சிங்கமுகம், யானைமுகம்

என்று வைக்கிறோம்.

இல்லாததைக் கற்பனை செய்யமுடியாது.இருப்பதைக் கற்பனை செய்ய"

" நீ என்ன அண்ணாவி?"

அப்படியானால் கற்பனை என்பது கிடையாது தானே!THERE IS NO FICTION.----(தொடரும்)

Sunday, October 10, 2010

கற்பணை என்று கிடையாது.(There is no Fiction)

கற்பனை என்று உண்டா?




" வண்ணக்கதிரில்" காஸ்யபன் எழுதிய" எங்கேஅவர்கள்?"என்ற சிறுகதையை பதிவிட்டிருந்தேன்.பின்னூட்ட்ங்கள் மூலமும்,தொலைபெசிமுலமும் பல நண்பர்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.இது உண்மையா? புனைவா? என்று பலர் கேட்டிருந்தனர்.இது உண்மையாக இருக்க வேண்டுமே என்ற ஆதங்கம் பலரிடம் வெளிப்பட்டது.RVS என்ற பதிவர் இது புனைவா? எப்பெடியானாலும் சவாரசியமாக இருந்த்தது என்கிறார்.இதன் கட்டமைப்பினைப் வைத்து இதனை சிறுகதை என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறர் தொழர் S.V.V. இந்தக் கேள்விகளுக்கு பதில் இரண்டுவகைகளில் சொல்லலாம்.ஒன்று இந்தியத் தத்துவ மரபு.மற்றொன்று மார்க்சீய வழி.

மாயாவாதம்.

பதிவர்கள் இதனைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.நீங்கள் படித்துக் கொண்டிருப்பதாக நினைக்கிறீர்கள்.ஆகவே படிக்கிறிர்கள்.நீங்கள் உங்கள் நண்பரோடு பெசிக்கொண்டிருப்பதாக நினைக்கிறீரகள் ஆகவே பெசிக்கொண்டிருக்கிறீர்கள் உண்மையில் அப்படி எதுவும் நிகழவில்லை.எல்லாமே உங்கள் மனமாயைதான்.என்கிறது ஒருமரபு..சர்ப்ப கந்த யோகம் என்று இதனை விளக்குவார்கள். இருட்டில் பாதையில் செல்கிறோம். குறுக்கே பாம்பு இருக்கிறது.விலகி ஓரமாகச் செல்ல முற்படுகிறோம்..அருகாமை அடந்ததும், அது பாம்பல்ல கயிறு என்று தெரிகிறது. பாம்பு நம் நினைவில் இருந்தது.உண்மயில் பாம்பு இல்லை.இங்கு பாம்பு என்பது வேறும் மாயை.அதேபோல் கயிறு என்று நினைத்து பாம்பு தீண்டுவதும் வாய்ப்புக்குறியதே..இங்கு கயிறு மாயை.உலகமே மாயை.எல்லாமே நம் மனம் காட்டுவதுதான். உண்மையில் அவையில்லை. என்பது தத்துவம்.

மார்க்சீயவாதியான காலம் சென்ற தலைவர் பி.ராமமூர்த்தி அவர்கள் அற்புதமான உதாரணத்தோடு மறுப்பார் இந்த பூமி,மரம்,குளம்,நீ,நான் எல்லமே உண்மை என்று அடித்துச் சொல்லுவார்.கயிறை பாம்பு என்று நினைப்பவன் பாம்பைப் பார்த்திருக்க வேண்டும்..பாம்பையே பார்க்காதவன் பாம்பைப் பற்றிய பிம்பமே தெரியாதவன் மனதில் எப்படி பம்பின் நினைவு வரும்.கயிறு பற்றிய பிரக்ஞையே இல்லாதவன் மனதில் கயிறு என்ற உருவம் எப்படித்தோன்றியது. ஆக அவன் பாம்பைப் பார்த்திருக்கிறான். கயிறையும் பார்த்திருக்கிறான். பாம்பம், கயிறும் இருந்தது உண்மை. மாயை அல்ல.என்று தன்னுடைய வகுப்புகளில் விளக்குவார்.

மார்க்ஸ் அவர்கள் (Ther is no fiction) கற்பனை என்று ஒன்று கிடையாது என்று கூறுவார்.(தொடரும்)

Thursday, October 07, 2010

சிறு கதை

சிறு கதை






எங்கே அவர்கள்?



(காஸ்யபன்)



கேதன் தேசாயிடமிருந்து எண்ணூறு கோடி ரூபாய் ரொக்கம்-கிலோ கணக்கில் தங்கம் -பேப்பரை மூடி வைத்தேன். இவன்லாம் மனுசன்தானா? ச்சீ - இந்தியா என்ன ஆகப் போகிறது?

டைம் ஆப் இந்தியா வை எடுத்தேன். மாதுரி குப்தா கைது என்று தலைப்பு. யார் மீது கோபம்? எதற் காக? குளத்தின் மீது கோபம் என்றால்... என்ன திமிர்? இவர்களை என்ன செய்யலாம்?

நேற்று இரவு சினிமா பார்த்தேன். அயர்ச்சியாக இருக்கிறது. நிஜாம் ஆட்சியில் ஜமீன்தார்கள் ஜனங்களை கொடுமைப்படுத்தியது பற்றித்தான் படம். இந்து ஜமீன் தார், முஸ்லீம் ஜமீன்தார் என்று பேதமில்லாமல் கொடு மைகளைச் செய்துள்ளது சித்தரிக்கப்பட்டிருந்தது. மிகச் சிறந்த நடிகர்கள், அம்ரிஷ்பூரி, கிரிஷ்கார்நாட், குல்பூஷன் கர்பந்தா, நசுருதீன் ஷா, சப்னா ஆமி- இரவு படத்தின் பாதிப்பால் தூக்கம் வர வெகுநேரமாகி விட்டது. படத்தின் பெயர் அங்குர்.

பேப்பரை படிக்க முடியவில்லை. கண் இமை கனத் தது, படத்தின் இயக்குனர் -ஷ்யாம் பெனகல்.

------------------------------

எழுபது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு நினைவு இருக்கும். சுதந்திரம் கிடைத்தவுடன் வெளியான பத்து ரூபாய் தாளில் பி. ராமாராவ் என்று கையெழுத்திட்டிருக் கும். அவர்தான் ரிசர்வ் வங்கியின் கவர்னர்.ஐ.சி.எ.ஸ்அதிகாரி.

அவருடைய சகோதரர் நரசிங்கராவ் சர்வதேச நீதிமன்றத் தில் நீதிபதியாகப் பணியாற்றுபவர். ஐ.சி.எ.ஸ் அதிகாரி.

மூன்றாவது சகோதரர் நரகரிராவ், பிரிட்டிஷ் இந்தியா வின் தணிக்கை அதிகாரி. அவரும் ஐ.சி.எ.ஸ் தான்.

மூவருமே பெனகல் குடும்பம்.

------------------------

ஸ்டுடிபேக்கர் காரில் மூன்று பேரும் பாராளுமன்ற மைய மண்ட பத்துக்குச் சென்று கொண்டிருக் கிறார்கள். ஆகட் 14 இரவு பத்து மணி. பன்னிரெண்டு மணிக்கு பிரிட்டனின் கொடி இறங்கி இந்தி யாவின் மூவர்ணக் கொடி ஏறப் போகிறது. பண்டித ஜவஹர்லால் நேரு பிரதமராகிறார். இந்திய மக் கள் ஒவ்வொருவரும் தாங்களே பிரதமராகப் போவதாக நினைத்து விடிய விடியக் காத்திருக்கிறார்கள்.

-----------------------

மூன்று சகோதரர்களும் மூத்த அதிகாரிகள். பதவியேற்பு நிகழ்ச் சிக்கு அவர்கள் அழைக்கப்பட்டி ருந்தனர். பன்னிரெண்டு மணி, பண் டித நேரு எழுந்தார். உலகம் முழு வதும் தூங்கிக் கொண்டிருக்கும் போது இந்தியா விழித்தெழுகிறது என்ற அவருடைய புகழ் பெற்ற உரையைத் துவக்கினார்.

---------------------

"டிரைவர் வண்டியை நிறுத்து" என்றார் ராமாராவ். போட் கிளப் அருகில் ஸ்டுடிபேக்கர் வண்டி நின்றது. "மணி மூன்றாகப் போகி றது அண்ணா" என்றார் நரசிங்கம் ஹரி எதுவும் பேசவில்லை.

விலை உயர்ந்த மதுவை ஊற் றிய கிண்ணத்தோடு வெளியே இரு வரும் வந்தார்கள்.

குளிர்ந்த காற்று இதமாக வீசி யது.

"நேரு பிரதமர் என்றதும் வெளி நாட்டில் என்ன பேசிக் கொள் கிறார்கள்," என்று கேட்டார் ராமாராவ்.

"சோவியத் பிளாக்குக்கு ரொம்ப சந்தோஷம் அண்ணா", என்றார் நரசிங்கம்.

"பிரிட்டன், பிரான்சு, அமெ ரிக்கா ஆகியவை கொஞ்சம் தயங்கியே நேருவை ஆதரிக்கின்றன" என்று அவர் தொடர்ந்தார்.

"ஏன் தயக்கம்?"

"மெள்ள மெள்ள நேரு இந்தியாவை ஒரு சோசலிச நாடாக்கி விடுவாரோ என்று பயப்படுகிறார்கள்".

"நேரு அப்படிச் செய்ய மாட்டார்."

"பின்?"

"நடுநிலை வகிப்பார்" என்று கூறிய ராமா ராவ், "ஹரி! என்னப்பா வாயைத் திறக்கவே மாட்டேங்கற," என்றார்.

"ஹரி டல் லாத்தான் இருந்தான். விழா வில் ரொம்ப சீரியசாத்தான் இருந்தான்" என்றார் நரசிங்கம்.

ஹரிக்கு விழா நிகழ்ச்சிகளில் ஏதோ குறை. இருந்தது போல் பட்டது. என்ன குறை? எங்கே குறை? ஹரியின் மனது அல்லாடியது.

-----------------------

ஹரியின் வீட்டருகே கார் வந்ததும் ஹரி இறங்கிக் கொண்டார்". பை ஹரி!" ராமாராவ் விடை பெற்றார்.

"ஒரு நிமிடம் அண்ணா!"

"என்னப்பா?"

"பி.வி. கேஸ்கர் தெரியும்லயா?"

"ஆமா"

"பதவி ஏற்பு நிகழ்ச்சிய ஆவணப்படமா எடுத்திருப்பாங்க இல்லை?"

"ம்ம்"

"அந்த லூப் மட்டும் ஒரு காப்பி வாங்கி தருவியா?"

"எதுக்கு?"

"மனசுல ஏதோ நெருடல். அத பாத்தா தெளிஞ்சுடும்," என்றார் ஹரி.

"உன் தணிக்கைப் புத்தி உன்னை விட்டுப் போகாதே! "இடை மறித்தார் நரசிங்கம்

"நான் ஐ.சி .எஸ்தான். இந்தியனும் கூட", என்று ஹரி பதிலளித்தார்

-------------------------------.

ஆகஸ்ட் 18ம் தேதி நரஹரிராவ் அவர் வீட்டில் அந்த ஆவணப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். தினம் இது தான் வேலை. எதுவும் புலப்படவில்லை. ஒரு மாதம் ஆகி விட்டது. செப்டம்பர் 2ம் தேதி படத்தை திருப்பி அனுப்பிவிட்டார். இருந்தாலும் மனது கேட்கவில்லை.

பழைய பத்திரிகைகளை புரட்டிக் கொண் டிருந்தார். ஆகட் 15ம் தேதி பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக சுதந்திர தின செய்திகள்தான். காந்தி ஏன் கலந்துகொள்ளவில்லை என்று கேள்வியெழுப்பிய பல பத்திரிகைகளில் கட்டுரைகள் வந்திருந்தன.

டாம்மொரேஸ், 14-ம் தேதி காலை 8 மணியிலிருந்து ஒவ்வொரு மணி நேரமும் பண்டித நேரு என்ன செய்து கொண்டிருந்தார் என்று பட்டியலிட்டிருந்தார்.

காலை 8 மணி சர்தார் பட்டேலுடன் காலை உணவு,

காலை 9 மணி இடைக்கால அமைச்ச ரவைக் கூட்டம்,

காலை 10 மணி இடைக்கால அமைச் சரவை ராஜினாமா செய்யும் கடிதம் தயாரிக் கப்பட்டது.

11 மணி ராஜினாமா கடிதத்தை கொடுக்க நேருஜி புறப்பட்டார்.

1 மணி மதிய உணவு,

2மணி காங்கிர தலைவர்களோடு ஆலோசனை,

5 மணி படேலுடன் தீவிர ஆலோசனை,

-------------------------------------

செப்டம்பர் 6-ம் தேதி காலை பம்பாயி லிருந்து ராமாராவ் எட்டு மணிக்கு பேசினார்.

"ஹரி! பேப்ரை பாத்தியா?"

"இந்துஸ்தான் டைம்தானே?"

"ஆமா எப்படி வெளில வந்தது"

"அவர்களுக்கு உள்ள ஆளிருக்கலாம்"

சுதந்திர பாரதத்தின் முதல் பிரதமர் பண்டித நேருஜிக்கு தணிக்கை அதிகாரி நரஹரிராவ் எழுதிய கடிதம் வெளியாகி இருந்தது.

மதிப்பிற்குரிய பிரதமருக்கு!

தணிக்கை அதிகாரி நரஹரிராவ் அறிவுறுத் தும் கடிதம்.

ஐயா! தாங்கள் ஆகஸ்டு 14-ம் தேதி மதியம் இடைக்கால பிரதமர் பதவியை விட்டு விலகி கடிதம் கொடுத்துள்ளீர்கள்.

அன்று இரவு 12 மணிக்கு மேல் பாரதத்தின் புதிய பிரதமராகப் பதவி ஏற்றுள்ளீர்கள்.

செப்டம்பர் மாதம் முதல் தேதி ஆகஸ்டு மாத ஊதியத்தை முழுமையாகப் பெற்றுள்ளீர் கள்.

ஆகஸ்டு 14-ம் தேதி மதியத்திலிருந்து அரை நாள் நீங்கள் இந்திய அரசின் எந்தப் பதவியி லும் பணியாற்றவில்லை.

நீங்கள் உடனடியாக கூடுதலாகப் பெற்ற அரை நாள் ஊதியத்தை கருவூலத்தில் திரும்பக் கட்டும்படி அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

(ஒப்பம்)

பி. நரஹரிராவ்

தணிக்கை அதிகாரி -------------------------

மறுநாள் டெல்லியில் கூக்குரல் எழுந்தது. "பிரிட்டிஷ் அடி வருடி துரோகி நரகரி ஒழிக" என்று ஜால் ராக்கள் குதித்தன.

சில தலைவர்கள் அதிகாரியை எதிர்த்தும் கண்டித்தும் அறிக்கை வெளியிட்டனர்.

பத்திரிகையாளர்கள் பிரதமரைச் சூழ்ந்து கொண்டு கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டனர்.

மாலை 5 மணிக்கு பிரதமர் பத்திரிகை யாளர்களைச் சந்திப்பார் என்று அரசு அறிவிப்பு தெரிவித்தது. மாலை பத்திரிகை யாளர்களை சந்தித்தார். பத்திரிகையாளருக்கு ஒரு குறிப்பு தரப்பட்டிருந்தது.

தணிக்கை அதிகாரியின் கடிதம் பிரத மரின், கவனத்துக்கு வரும் முன்பே பத்திரிகை களில் வந்தது தவறு. இது பற்றி விசாரிக்கப் படும் பிரதமர் என்ற பதவியையோ, அவரின் அரசியல் செல்வாக்கைப் பற்றியொ,கணக்கில் கொள்ளாமல், அரசின் விதி மீறல்களைச் சுட்டிக் காட்டிய தணிக்கை அதிகாரியை பாராட்டுகிறோம். நவபாரதத்திற்கு இத்தகைய அதிகாரிகள் தான் வேண்டும். புதியதாக தணிக்கை மற்றும் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பி. நரஹரிராவ் அவர்களையே நியமிக்க அரசு உத்தேசித்துள்ளது. (பி.கு- கூடு தலாகப் பெற்ற அரைநாள் ஊதியம் கருவூலத் தில் கட்டப்பட்டு விட்டது.)

-------------------------------

"சோபாவில் ஒக்காந்து தூங்குறீங்களா! கழுத்து வலிக்கப் போகுது". என் மனைவியின் குரல் கேட்டு அதிர்ந்து எழுந்தேன்.

"என்ன இது, பேந்தப் பேந்த முழிக்கிறீங் களே! ஏதாவது கெட்ட சொப்பனம் கண்டீ களா? "என்றாள்.

"நான் கண்டது சொப்பனமா? அதுவும் கெட்ட சொப்பனமா?" எனக்குத் தெரியவில்லை

Tuesday, October 05, 2010

வட்டிக்காரன் வலை (சௌகார்--கி--பாஷ்)

சுமார் முப்பது வருடங்களாவது ஆகியிருக்கும். அப்போது CINE INDIA என்றொரு பத்திரிகை வந்து கோண்டிருந்தது. திரைப் படம் பற்றி அறிவார்ந்த கட்டுரைகளைத்தாங்கி ஆங்கிலத்தில் வெளிவந்து கொண்டிருந்தது. சித்தார்த்த கார்க் என்பவர் அதனுடைய ஆசிரியராகப் பணியாற்றினார்.பூனே திரைப்படக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்.அந்தப்பத்திரிகையின் தீவிரமான வாசகன் என்ற முறையில் அவர்களோடு தொடர்பு உண்டு


"வர்த்தக ரீதியாகவே படைப்பு.கள் வந்து கொண்டிருக்கின்றனவே,ஆரம்பத்திலிருந்தே இந்தத்துறை இப்படித்தானா?" என்றொரு சந்தேகம் எனக்கு இருந்தது.அந்தப்பத்திரிகையின் மூலம் சர்வதேசரீதியாகவே திரைப்படத்துறை மிகவும் ஆரோக்கியமான ஆரம்பத்தையே கொண்டிருந்தது என்பதைத் தெரிந்துகொண்டேன்.ஒரு திரப் படத்தீன் கதையை எழுதி விளக்கியிருந்தார்கள்

"வட்டிகாரன் வலை"( சௌகார்-கி-பாஷ்)

மும்பைனகரத்து பஞ்சாலையின் வாயில்.தொழிலாளர்கள் உள்ளே சென்று கொண்டிருக்கிறார்கள்.காவாலாளி ஓருவர் ஒவ்வொருவராக பரிசொதித்து அனுப்பிக் கொண்டிருக்கிறார். வயதான தொழிலாளி ஒருவரைத்தடுத்துநிறுத்துகிறார்.." நிர்வாகம் உங்களுக்கு வயதாகிவிட்டதால் உங்களுக்கு ஓய்வு அறிவித்துவிட்டது" என்று தடுக்கிறார்".நான் வேலை செய்யும் இயந்திரத்திற்கு ஓய்வு இல்லை. எனக்குமட்டும் ஓய்வா" என்று சண்டை வருகிறதுகாவலாளி தள்ளிவிட தொழிலாளி படிகல்லில் மொதி கீழே விழுகிறார். சாகும் தருவாயில் அவருடைய மகன் அவர் தலையை மடியில் கிடத்திக் கொள்கிறான்.

காட்சி மாறுகிறது.பூனே நகரத்தின் அருகிலுள்ள வயல்வெளி. அந்தத் தொழிலாலி  வயக்காட்டில் கிணற்றிலிருந்து நீர் இரைத்துக்கொண்டிருக்கிறான்.அவன் மனைவி இடுப்பில் குழந்தையோடு கஞ்சி கொண்டுவருகிறாள்.வயலின்பசுமை அவர்களை மகிழ்விக்கிறது. சில மாதங்கள் கழித்து அறுவடை நடந்து கொண்டிருக்கிறது. அப்போது வட்டிக்காரன் வந்து மகசூலை மட்டுமிலாமல் நிலத்தையும் பிடுங்கிக் கொள்கிறான்.விவசாயி மனைவியொடும் குழந்தையோடும் மும்பையை நோக்கி நடக்கிறான்.

காட்சி மாறுகிறது.கிழவனாகிவிட்ட ,விவசாயி, கூலித்தொழிலாளியாகி மண்டையில் அடிபட்டு மகனின் மடியில் கிடக்கிறான். வாலிபனான மகனிடம்" என்ன ஆனாலும் வட்டிக்காரனிடம் மட்டும் கடன் வாங்காதே" என்று சத்தியம் வாங்கிக்கொண்டு உயிரை விடுகிறான்..

இந்தப்படம் ஊமைப்பட காலத்தில்(MOVIE) வந்தது தொழிலாளியாக பாபு ராவ் பேயிண்டர் என்பவர் நடித்தார்.மகனாக இளம் சாந்தாராம் நடித்தார்

இந்த .படத்தை உடனேயே பார்க்க வேண்டும் என்று நீங்க்கள் துடிக்கலாம்.பூனேயில் இருக்கும் திரைப்பட காப்பகதில் ஐம்பதுஅடி, நூறு அடி என்று அறுந்த நிலையில் சில துண்டுகள் மட்டுமே உள்ளன என்று தெரிந்து கொண்டேன்