Tuesday, September 18, 2018





திரைப்படம் 

ஒரு கலைவடிவமா..?---5





எனக்கு இப்போது 83 வயது ஆகிறது> நான் சிறுவனாக இருந்த பொது தி.லி டவுன் ராயல் டால்க்கீசில் பள்ளியிலிருந்து அழைத்து சென்று ஒரு படம் காட்டினார்கள் .சிறப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு பார்த்தோம். ஊ ஞ்சல்  ஆடுபவரின் கால்கள் நம் முகத்தில் இடிக்கும் வரை வரும். ஓ என்று கத்திக்கொண்டு கண்ணாடியை எடுப்போம். அதாவது அப்பொழுதே மூன்றாவது பரிமாணம் பரிசோதனை முயற்சியாக வந்துவிட்டது.

கதைப்படங்கள் பின்னர் வந்தன . இப்போது வட ஐரோப்பாவில் சில  அலைவரிசையில் 3d ஒளிபரப்பாகிறது. முப்பரிமாணம் வந்து விட்டது .

அதற்கு அடுத்தபடியாக ஒரு இளைஞனும் அவன் காதலியும் ரோஜா தோட்டத்தில் சநதிக்கிறார்கள்  என்றால்  பார்வையாளர்கள் நாசியில் ரோஜாவின் நறுமணம்வீசும். அளவுக்கு முன்னேறியிருக்கிறது.இது பரிட்சார்த்தமான நிலையில் உள்ளது.

"தாகம் "என்னும் நாவலை திரைப்படமாக எடுக்கும் முயற்சி நடந்தது> அதனை தயாரிப்பில் நானும் செயல்பட்டேன். "தீக்கதிர் "பத்திரிகையின் ஆசிரியராக இருந்த தோழர் முத்தையா அவர்களை ."நிபெரிய நடிகனாகவுன்னைஅனுப்பலை ஐயா ! அங்க ஒரு "யூநிட்" ஆரம்பிக்க முடியுமா  னு பாரும் " என்று சொல்லி அனுப்பினார் .

அந்தப்படத்தில் நான் நடித்தேன்> திரைப்படம் பற்றி  பல விஷயங்களை நேரடியாக கற்றேன். 

ஒரு இணை இயக்குனர்,லட்சுமிநாராயணன்> ஒரு இணை காமிராக்  கலைஞர் கோபால் ஓப்பனை கலைஞர்  கோபி என்று சிலரை அணுகி ஒரு யூனிட் ஆரம்பிக்க முயன்றேன்.    

திரை உலகிற்குள் சென்று சிராய்ப்பு இலாமல் வெளிவந்தவர்களில் நானும் ஒருவன். மிகவும்முக்கியமான பணி  என்றால் தொகுப்பாளர் பணியைத்தான் சொல்லவேண்டும் .என் அனுபவம் ஒன்றை  இங்கு பகிர்ந்துகொள்கிறேன் .

அவர் ஒரு தொகுப்பாளர். ஒரு பாடல்காட்ச்சிய தொகுத்துக் கொண்டிருந்தார். மிகவும்பிரபலமான நடிகர் வரும் காட்ச்சி. பாடலின் வரிகளும் LIPMOVEMENT  ம்  சரியில்லை. எடிட்டர் ஒருநாள் புறாவும் கஷ்டப்பட்டு சரியாகவில்லை . எரிசசலில்  தன்  பக்கத்தில் இருந்த உதவியாளரை ஒரு காப்பி  வாங்கிவர செய்துவிட்டு தனியாக போய் அமர்ந்து விட்டார் . உதவியாளர்  18 வ ய து. ஆர்வக்கோளாறில் இவரிடம் வந்துள்ளார். காபியை குடித்த எடிட்டர் சோபாவில் அயர்ந்து விட்டார் . உதவியாளர் மூவியாலோ வில்  அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார் . எடிட்டிங் ஆபிசில் ng SHOT என்று ஒரு டப்பா  வைத்திருப்பார்கள் .நோ குட் ஷாட் என்பார்கள் .  அதில் எப்போதோ வேண்டாம் என்று போட்ட ஒரு strip  இருந்தது.அது TRAOLY  யில் .  எடுக்கும் பொது தவறாக எடுக்கப்பட்ட ஒன்று> ஓரூரின்கண்ணமும்.கழுத்து நரம்பும் மட்டும் தெரியும் துண்டு படம் .பையன் அந்த துண்டை எடுத்து ஒட்டி பார்த்தான். உதட்டசைவும் குரலும் ஒன்று சேர்ந்தன .பையன் கத்த எடிட்டர் எழ பிரசினை முடிந்தது..அந்தப்படம் வெளியானதும் பத்திரிகைகள் அந்த  நடி \கரின் கன்னமும்,கழுத்த்து நரம்புகளும் நடித்த கதையை  விலாவாரியாக எழுதி  சிலாகித்தன .

திரைப்படம் என்பது ஒரு கலைவடிவமா? ஆம் ! 

அது ஒரு தொழில் நுணுக்கப்   புரட்சியா  ? ஆம் ! 

திரைப்படக்க்கல்லூரியில் படித்த ஒரு மாணவனை கேளுங்கள்.!

திரைப்படம் என்றால் என்ன ?


what is cinema  ?

it is sound and light !! 

என்பது தான் அவன் பதிலாக இருக்கும் !!!

(நிறைவுற்றது)
  

Wednesday, September 12, 2018







திரைப்படம் 

ஒரு கலைவடிவமா ...?---4




சலனப்படம் வந்ததும் தன்னுடைய தகவல் தொடர்பு சாதனம் ஒரு முழுமையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக மனிதன் நினைத்தான் .அது தகவல் தொடர்பு சாதனமாக இருந்தாலும் அதில் கதைப்படங்களை சலனப்படமாகவே எடுக்கவும் செய்தான்." சௌகார் -கி -பாஷ் " என்ற படம் அதில் முக்கியமானது .

மத்திய  மும்பையில் ஒரு நூற்பாலை. தொழிலாளர்கள் அதற்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள்> அவர்களில் வயது முதிர்ந்த ஒருவரும் செல்கிறார். வாசலில் நிற்கும் காவலாளி அவரைத்தடுக்கிறான். உனக்கு வயதாகிவிட்டது. உன்னை ஓய்வுகொடுத்து அனுப்பி விட்டார்கள்  என்று காவலாளி தடுக்கிறான்.தொழிலாளி நான் போவேன் என்று சீ றுகிறான்தள்ளுமுள்ள நடந்து அவனை காவலாளி தள்ளி விடுகிறான். அந்த முதியவன் கல்லில் அடிபட்டு விழுகிறான்> தொழிலாளியின் மகன் ஓடிவந்து அவனை தான் மடியில்கிடத்திக்கொள்கிறான்.காட்ச்சி மாறுகிறது.

புனே அருகில் உள்ள கிராமம்> விவசாயி தன் வயலுக்கு நீர் பாய்சசி கொண்டிருக்கிறான். அவன் மனைவி அவனுக்கு கஞ்சி காய்ச்சி கொண்டு வருகிறாள்.அவனுடைய மகன் மம்பிட்டியால் வாய்க்காலில் ஓடும்நீரை ஒழுங்கு படுத்து கிறான் .விளை ந்த பயிரை அறுத்து விவசாயி முட்டை காட்டுகிறான். அப்போது சௌகார் வந்து முட்டைகளை தன அடியாட்களை முலம் பறித்துக்கொள்கிறான். நிலத்தையும் ஆர்ஜிதம் செய்து விவசாயியை வெளியேற்றுகிறான் காட்ச்சி மாறுகிறது.

மடியில் கிடத்தப்பட்ட தொழிலாளி தன மகன் முகத்தையே பார்க்கிறான். மகனே கந்துவட்டி காரணிடம் கடன் மட்டும் வாங்காதே என்று கூறி மரி க்கிறான்.

பாபுராவ் பெயிண்டர் விவசாயியாக நடிக்கிறார் .அவர் மகனாக சாந்தாராம் நடித்தார். சித்தார்த் காக் என்ற ஆராய்ச்சியாளர் cinema என்ற பத்திரிகையில் எழுதியுள்ளார்.

நல்லகாலம் " மேற்கு தொடர்ச்சி மலை" படத்தை விமரிசித்தவர்கள் அப்போது இல்லை .இருந்திருந்தால் நமக்கு சாந்தாராம் என்ற இயக்குனர் கிடைத்திருக்க மாட்டார்.துவைத்து புதைத்திருப்பார்கள்.

சலனப்படம் பேச ஆரம்பித்தபோது அதனை எதிர்த்தவர்கள் உண்டு. நகைசுசுவை மற்றும் சோக நடிப்பில் உச்சத்தை தோட்ட சார்லிசாப்ளின் பேசும்படத்தை எதிர்த்தவர்களில் முதன்மையானவர். பேச ஆரம்பித்தால் நடிப்பின் தரம் குறைந்து விடும் என்று  அவர் நமபினார்.

பின்னாளில் மாறினார் இந்த நூறு  ஆண்டுகளில்மிகசிறந்த பத்து படமென்று எடுத்தால் அவரின் Great Dictator அதில் ஒன்றாகும் .

சலனப்படம் பேசும்படமாக மாறினாலும் மனிதனின் தேடல்நிற்கவில்லை. 

திரையில் நீளமும் அகலமும்தான் புலப்படுகிறது.மூன்றாவது பரி  மாண மான ஆழம் இல்லையே.? 

தேட  ஆரம்பித்தான்...

(தொடரும் )

Monday, September 10, 2018







திரைப்படம் 

ஒரு கலைவடிவமா...?---3



தான் பார்த்த பொருள்களின் அசைவுகளை சித்தரிக்க மனிதன் காத்திருக்க வேண்டியதிருந்தது.

பிரான்சு நாட்டில் குதிரை பண்ணை களப்போது நிறைய இருந்தது.அவற்றை வளர்த்து பயிற்சி கொடுத்து குதிரைப்பந்தயத்தில் ஓட விடுவார்கள் . அப்படி உள்ள ஒரு  பண்ணையில் மிருக வைத்தியர் ஒருவர் ஆராய்சசி யாளராக இருந்தார்.குதிரை நடப்பதையும் அது ஓடுவதையும் அப்போது அதன் சதைகள் எவ்வாறு அசைகிறது என்பது பற்றி ஆராய்ந்து வந்தார்

ஒருகட்டத்தில் ஒரு அய்ம்பது  கேமிராக்களை வைத்து அதன் ஒவ்வொரு அடியின் போதும் ஏற்படும் தசை மாறுதல்களை கண்காணித்தார். அந்த still போட்டோவை எடுத்து ஒவ்வொன்றாக கவனித்தார் அதனை எளிமையாக்க அந்த பொட்டோக்களை  ஒட்டி வைத்தார். பார்த்துக்  கொ ண்டிருக்கும் பொது அந்த போட்டோக்கள் வேகமாக திரும்பத்திரும்ப பார்த்தார்> அப்போது அவருக்கு குதிரைகளின் அசைவு தாவி தாவி ஓடுவது போல்தெரிந்தது.வித்தியாசமான இந்த நிகழ்வு பற்றி  ஆராய்ந்த பொது ஒரு விஞ்ஞான  உண்மை தெரிய வந்தது. 

ஒரு பொருளை நாம் பார்த்து விட்டு கண்ணை முட்டிக்கொண்ட பிறகும் அந்த பொருளின் பிம்பம் நமது பார்வையில் ஓரி வினாடியில் 48 ஒரு பா கம் தொடர்கிறது என்ற உண்மைதான் அது.

persistance of vision என்ற கொட்டப்பட்டு உதயமாகியது.  அதாவது "பார்வையின் தொடர்சசி " என்ற உண்மை கிடைத்ததும் .இதன் மூலம் அசைவுகளையும் நிரந்தரமாக புகைப்படமாக  முடியுமென்று கண்டனர்

languuage of  cinematogrphy  பிறந்தது.குமரிக்கடற்கரையில்நின்றால்காற்றில் அசையும் உடை  மட்டுமல்ல சீ ரிப்பா யும் அலைகளையும் அப்படியே சித்தரிக்க முடியும் என்று மனிதன் கண்டுகொண்டான்.

அவனுடைய தகவல் தொடர்பு சாதனம் ஒரு பாய்சசலை கொண்டதாக மாறியது .

அப்போதும் அவனுக்கு குறை இருந்தது. காற்றின் சலசலப்பு, அலையின் ஓசை பதிவு செய்யப்படவில்லையே என்பது தான் அது> ஆம் movie  வந்து விட்டது ஆனால் talkie  வரவில்லை 

அவன் தேடல்தொடர்ந்தது.!!!


(தொடரும்)

Saturday, September 08, 2018






திரைப்படம் என்பது 

ஒரு கலைவடிவமா ...? -----2




ஓவியம் ஒரு மொழியாக கையாளப்பட்டு வந்த பொது மனிதன் தன்னுடைய தகவல் தொடர்பு சாதனத்திற்கு  கிடைத்த மற்றுமொரு வசதியாக பயன்படுத்தினான் ஓவியர்களும் ஓவியகலை யும் பெரும் வளர்சசி பெற்றது. டாவின்சியும்.ராம்பிரண்டும் ,போற்றி புகழப்பட்டார்கள் 

.டசசு நாட்டை சேர்ந்த ராம்பிராண்ட் மிகசசிறந்த ஓவியர். தன நாட்டின் மலைகளையும்,மரம்செடிகொடிகளையும் ,நீரோடைகளையும் அற்புதமாக வரைவார்> டச்சு  மன்னர் "ராமபிரானின் ஓவியங்களைப்பார்த்த பிறகுதான் என் நாடு இவ்வளவு அழகானதா என்று நான் பிரமித்திருக்கிறேன் "என்று குறிப்பிட்டுள்ளார்..

ஆணாலும்மனிதனுக்கு திருப்தி வரவில்லை. ஓவியனின் திறமை அல்லது திறமையின்மை ,அவனுடைய உணர்வுகளை அவன் பார்க்கும் கோணம் ஆகியவை உள்ளதை உள்ளபடியே சித்தரிக்கிறதா  என்ற சந்தேகம் இருந்தே வந்தது. தான் பார்த்ததை in its concrete form வெளிப்படுத்தமுடியவில்லையே என்ற குறை அவனுக்கு இருந்து கொண்டே வந்தது. அவன் காத்திருந்தான்.

1760ம் ஆண்டு வாக்கில் ஒரு விஞ்ஞன கண்டுபிடிப்பு அவனுக்கு உதவி செய்தது. வெளிச்சம் அல்லது ஒளி சில ரசாயனங்களின் மேல்பட்டால் அது கறுப்பாகிறது என்பதை கண்டு கொண்டான் .ஏற்கனவே கடலோடியான அவனுக்கு ஆடிகளை (lens ) பற்றி தெரிந்திருந்து. ஆடி களின் முன் இருக்கும் பொருள்களின் மீது விழும் ஒளி ஆடிகள்  வழியாக சென்றால் ரசாயனம் தடவிய பொருளில்  கருப்பு ப வெள்ளையாக மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்து கொண்டான. அந்த கருப்பு வெள்ளை மாற்றங்கள் அந்த ஆடி யின் முன்னால் உள்ள பிம்ப த்தின் மறுவடிவமாக அதேபோன்று அச்சு  அசலாக வருவதையும் கண்டான்.இது தனக்கு தகவல் தொடர்புக்கான மற்றுமொரு வழி என்று நினைத்தான் .language of Photography பிறந்தது.

நான் சோவியத் யூனியன் சென்றதில்லை.ஆனாலும் அந்த படத்தை பார்த்தால் இது கிரெம்ளின்  மாளிகை ,இது லெனின் சதுக்கம், என்று எளிதாக கூறமுடியும்.காரணம் புகைப்படம் உள்ளதை உள்ளபடியே காட்டுகிற ஒரு ஊடகமாகமாறிவிட்டிருந்தது.நான் குமாரி கடற்கரையில் என்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டால் அது கடற்கரையை,பின் தெரியும் சமுத்திரத்தை காந்திமண்டபத்தை அப்படியே காட்டும் இது அவனுடைய தகவல் தொடர்புக்கு மிகவும் அனுசரணையாக இருந்தது> ஒருகட்டுரையை எழுதி,அதில் ஒரு புகைப்படத்தையும் போட்டால் பார்வையாளனின்  புரிதல் மேன்மையடைகிறது இதனால் தான்.

ஆணாலும்மனிதனுக்கு திருப்தியேற்படவில்லை.புகைப்படம் சமுத்திரத்தை,மனிதர்களை அப்படியே காட்டுகிறது என்பது உண்மைதான் .ஆனாலும் கடலின் அலைகள்   அசை கின்றன. படத்தில் நிற்கும் மனிதனின் உடைகள் காற்றில்  அசைகிறது .இந்த அசைவுகளை சொல்ல முடியவில்லையே புகைப்படம் என்பது ஒரு still .அசைவுகளை வெளிப்படுத்துவதில்லை. 

மனிதன் தேட  ஆரம்பித்தான்.

( தொடரும்)


Friday, September 07, 2018






திரைப்படம் என்பது 

ஒரு கலைவடிவமா..... ?

புனே திரைப்பட கல்லூரியில் பல ஆண்டுகளுக்கு முன் பட்ட மளி ப்பு விழா நடந்தது  உலகப் . புகழ் பெற்ற மிரினாள்  சென்  கலந்துகொண்டு தலைமை உரை ஆற்றினார் .

" கட்டிடக்கலை, போர்க்கலை நாட்டியம் ,நடனம்,நாடகம்,நடிப்பு, இசை ஓவியம் சிற்பம், என்று அத்துணை கலைகளையும் விழுங்கி செரிமம் செய்து, தன்னையே ஒரு தொழில்நுணுக்க புரட்ச்சி மூலம் ஒருகலை வடிவமாகவும் ஆக்கிக்கொண்டதுதான் திரைப்படம்."என்றார் .

 திரைப்படம் 70  சதம் விஞ்ஞானம் .30 சதம் கலை. 30  சத்தத்திற்குள் . முற்போக்கு,பிற்போக்கு, கலை ,இலக்கியம், என்று பார்க்க முடியும்.

மின்சாரம் இல்லை என்றால் திரைப்படம் இல்லையென்பது தான் நிலை.தமிழகம் மின்சாரமயமாக்கப்பட்டது  திரை த்தொழிலுக்கு சாதகமாக அமைந்தது என்பது மிகை அல்ல. இதே சமயத்தில் தான் ஹரியானா மின்சாரமயமாகியது என்பதை நினைவில் கொள்வது நல்லது.மனிதகுலதகவல்  தொடர்பு வளர்சசி என்பதின் ஒரு அம்சம் தான் திரைப்படம்.

மாமேதை லெனின் மக்களுக்கு போதனை செய்ய திரைப்படத்தை பயன் ப டுத்தினார். அதனால் திரைபடத்தை கல்வித்துறையின் ஒரு பகுதியாக வைத்தார் .நம் நாட்டில் அதனை பொழுது போக்காக கருதுகிறோம். அடிப்படையில் மனிதன் தன சகமனிதனோடு தொடர்பு கொள்ள ஒரு சாதனத்தை தேடினான்.தன்  கருத்தை  தன்  சக  மனிதனுக்கு உள்ளதை உள்ளபடியே மடை மாற்றுவதற்கு அவனுக்கு அன்று கிடைத்த கருவி தான் "பேச்சு  மொழி "(verbal language ). பேசு வதின் மூலமா மட்டுமே தகவல்களை பரிமாறிக்கொள்ளமுடியாது என்று அதன் போதாமையை  உணர்ந்தான். மொழிக்கு மாற்றாக அல்லாமல் அதற்கு அனுசரணையாக ஒரு கருவி அவனுக்கு தேவைப்பட்டது. 

உதாரணமாக என்நண்பர் என் வீட்டுக்கு வர விரும்புகிர்றார் . நான் தெருவின் பெயரை சொல்லி அந்த தெருவில் மரம் இருக்கும்,அதன்  அருகிலிருக்கும் விடு என்கிறேன்.

அங்கு இரண்டு வீட்டின் முன்னாலும் மரம் இருக்கிறது.நண்பர் திகைக்கிறார். ஒருமரம்  தென்னை.மற்றோ ன்று வெப்ப மரம் . நான் ஒரு காகிதத்தில் தென்னை மரத்தை படமாக காட்டி ருந்தால்நண்பர் சிரமம் குறைந்திருக்கும் . அதாவது பேசசு மொழிக்கு அனுசரணையாக ஓவியம் கிடைத்தது .இதனை language of drawing என்று வகைப்படுத்தினார்> மனிதனின் தகவல் தொடர்பு சாதனத்தில் ஒரு சிறு வளர்சசி உருவாகியது.

 (தொடரும் )