Thursday, July 30, 2015

"செம்மலர் " சிறுகதைகள்

"சம்ஸ்கிருத" மொழியில்......!!!


"செம்மலர் " பத்திரிகையில்  வந்த தமிழ் சிறுகதைகள சம்ஸ்கிருத மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு  தொகுப்பாக வெளிவந்துள்ளது. எழுத்தாளரும் ,மொழிபெயர்ப்பாளருமான மூத்து மீனாட்சி அவர்கள் இந்த தொகுப்பினை கொண்டுவந்துள்ளார்கள் .இது பற்றிய விபரமாவது  


1925,35,45,55,65,75, என்று 60 ஆன்டுகள் "இந்தி":சிறுகதைகளை ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் தேர்ந்தெடுத்து ஆராய்ந்தார்.  இதன் மூலம் "இந்தி "சிறுகதைகளின் கட்டமைப்பு.வளர்ச்சிப்போக்கு,உள்ளடக்கம் ஆகியவற்றைபகுத்து தெரிந்து கொள்ள முடிந்தது. இதே காலகட்டத்தில் தமிழ் சிறுகதைகளையும் பகுத்தாய்ந்து ஒப்புநோக்கில்முனைவர் பட்டத்துக்கான தயாரிப்பு பணியிலீடுபட்டார். இந்தி பிர்ச்சார சபாவின் "உயர்கலவி ஆராய்ச்சி நிறுவனத்தில் " (Higer education and Reaserch Instiute ) பதிவு செய்ய சென்றார் . அவர்கள் வேண்டாத நிபந்தனைகLai போட்டனர். குறைந்தது 30 வருடமாவது ஆகியிருக்கும். 


பின்னர் "நாகபுரி பல்கலைகழகத்தை நாடினார். அவர்களும் நிபந்தனைகளை போட்டனர்.நொந்து நுலாகிப்போன முத்துமிணட்சி அவர்கள் அற்புதமான பிறமொழிகதைகளை மொழிபெயர்த்து "செம்மலர்" பத்திரிகைக்கு அனுப்பினார்அவர்கள் பிரசுரித்துஆதரித்தார்கள்.


"ஐந்து நிமிடம்" என்று கதை. மரண தண்டனை நிறைவேற்றும்முன்பு கைதி ஒருவனை அவனதுமனைவி,பள்ளிச்சிறுவனான மகன் பார்க்க வருகின்றனார் பார்க்க ஐந்து நிமிடம்  அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதூ.இந்த ஐந்துமிடத்தில் அந்த கைதி,மனைவி மகன் ஆகியோரின்பார்வையில் அந்த ஐந்து நிமிடம் சித்தரிக்கப்பட்டுள்ளது.நெஞ்சை உருக்கும் இந்த கதை  வியொகிஹரி என்பவரால் "1928" ம் ஆண்டு எழுதப்பட்டது.( யாகுப் மெமான் நினைவு வந்தால் வியொகி ஹரியைத்தான் கேட்கவேண்டும்) 


"துக்கம்" என்று ஒருகதை .பால் சோறு வேண்டாம் என்று அழும் குழந்தயின் துக்கமும் . காய்ந்த ரொட்டிக்கக அழும் குழந்தையின் துக்கமும் ஒன்றா? மனதை பிசைந்த்து எடுக்கும் இந்தகதையை 1938 ம் ஆண்டு எழுதியவர் "பகத் சிங்"கோடு  கைதாகி சிறை சென்று மீண்ட "யஷ்பால் " ! இவருடைய "காம்ரேட்" என்ற நாவல் 1946ம் ஆண்டு பிரிட்டிஷாரை எதிர்த்து நடந்த  கப்பற்படை  மாலுமிகளின் எழுச்சியை சித்தரிப்பதாகும்.


எட்டுவயது சிறுமியையும்.ஐந்து வயது சிறுவனையும் வளரும் போதே எப்படி பாரபட்சமாக நடத்து கிறார்களென்பதை கண்ணிர் பெருக சித்தரிக்கும்  இந்த "லட்கி"கதை ராம் தர்ஸ் மிஸ்ரா என்பவ்ரால் 1957ல் எழுதப்பட்டதாகும். இவை செம்மலரில் வந்த கதைகளாகும்.இவை தவிர காஸ்யபனின் கதைகள்,"கல்கி"யில் வந்த முருகானந்தம் அவர்களின் கதை ஆகியவற்றை முத்து மீனட்சி அவர்கள் சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்து "சம்பாஷன சந்தேஷ் ' என்ற பங்களுரிலிருந்து வரும் பத்திர்கைக்கு அனுப்பினார் சம்ஸ்கிருதத்தில் மாதந்தரியாக வரும் அந்த பத்திரிகை பிரசுரித்தது.


ஆந்திராவிலிருந்து வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் தினசரி "பிராஜாசக்தி" . திருப்பதி சம்ஸ்கிருத பல்கலைகழகத்தின் அச்சுபணிகளையும் இதன் அச்சகம்செய்துவருகிறது.இந்த ஏழுகதைகளையும் "பிரஜாசக்தி" பிரசுராலயம்  வெளியிட்டுள்ளது.

இதற்கான முன்னுரையை வெங்கடெஸ்வர வேத வித்யாலயம் ( சம்ஸ்கிருத பல்கலை) பணியாற்றும் பேராசிரியர் எழுதியுள்ளார்1 சம்ஸ்கிருத மொழியில் முனவர் பட்டம் பெற்ற முகம்மதியரான டாகடர்.பாதன் முகம்மது வலி திருப்பதி தேவஸ்தானம்  நடத்தும் பல்கலையில் சம்ஸ்கிருத பேராசிரியராக பணியாற்றுகிறார். சம்ஸ்கிருத மொழையின் உரைநடையில் இந்த தொகுப்பு புதிய வீச்சை கோண்டுவரும் என்றும் இடது சாரி நவீன இலக்கியம் தன் வீச்சை செலுத்துவது நிச்சயம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.


முத்து மீனாட்சி அவர்களுக்கு வாழ்த்துக்கள்....!!!

 







 


Monday, July 27, 2015

ஆவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் 

மறைந்தார்.....!



ஏ.பீ.ஜெ அப்துல்கலாம் மறைந்தார் . 

1998ம் ஆண்டு போக்ரான் பாலைவனத்திலிருந்து "புத்தன் சிரித்தான் " என்ற தகவல் அன்றய பிரதமர் வாஜ்பாய் அவர்களூக்கு வந்து "இந்தியா இரண்டாவதுமுறை "அணுகுண்டு சொதனை நடத்தியது ! ஆனானப்பட்ட அமெரிக்கா கூட அதனை கண்டு கொள்ளாமல் ரகசியமாக நடத்திக்காட்டிய விஞ்ஞானி அவர்.


தமிழகத்தைச்சேர்ந்த அவர் ராமெஸ்வரத்தில் ஒரு சாதரணகுடும்பத்தில் பிறந்தவர். ராமேஸ்வரத்தில் 

மார்க்சிஸ் கட்சியின் தாலூகா செயலாளராக இருந்த "ஆவுல் நாயனாவின்" நெருங்கிய உறவினர் . 


ஒரு முறை (1992) மதுரை வந்திருந்தார். பத்திரிகையாளர்களை சந்தித்தார். தீக்கதிர் பத்திரிகையின் சார்பில் தோழர் "தீக்கதிர் " நாராயணன் அவர்கள் சென்றிருந்தார்கள். மிகவும் வித்தியாசமான கேள்வியை அந்த ஏவுகணை விஞ்ஞானியிடம்கேட்டார்.


"வால்மீகி ராமாயணத்தில் " ராவணன்  சீதயை புஷ்பக விமானத்தில் கொண்டு செல்வதாக உள்ளது .அந்த புராணகாலத்தில் விமானம் இருந்திருக்க முடியுமா? ' என்று கேட்டார்.


"புராணகாலத்து மனிதனுக்கும் பறவையைப் பொல பறக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும் 1 வால்மிகி என்ற கவிஞனுக்கும் இருந்திருகலாம் அல்லவா ! அவன் தன் படைப்பில் மனிதன் பறப்பதாக கற்பனை செய்திருப்பதன் பலன் தான் றைட் சகொதரர்களின் வெற்றிக்கான முதல் படி . விமானம் அன்றே இருந்ததா என்று சிந்திப்பது சரியல்ல. பறக்க வேண்டும் என்ற மனித குலத்தின் சிந்தனை அன்றே தோன்றிவிட்டதின் அறிகுறியே வால்மீகியின் கவிதை வரிகள்." என்றார்.


அவர் விஞ்ஞானி மட்டுமல்ல.  ஆசிரியரும் கூட. ஷில்லாங்கில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போதே மயங்கி உயிரிழந்தவர் .


அந்த மாமனிதருக்கு அஞ்சலி !!!

Saturday, July 25, 2015

எங்கே அவர்கள்........?



அவர் எனக்குமிகவும் நெருங்கிய நண்பர் ! தமிழக    அரசுப்பணியில் இருந்தார் . அவருடைய மகள் மிகவும்புத்திசாலி . +2 தேர்வில் 1140 க்கும் அதிக மாக  மதிப்பெண் பெற்றவர்.


B.Sc (Maths) அந்த குழந்தை விரும்பியது.மதுரையின் முக்கியகல்லூரிகளில் இரண்டு அவருக்கு இடம் கொடுத்தது .


நானும் அவரும் வசித்த குடியிருப்புகளின் அருகில் தான் "பாத்திமா "கல்லூரி இருந்தது.! நல்ல கல்லூரி.மகள்போக்குவரத்துக்கு சிரமப்படாமல் பாதுகாப்பாக இருக்கும் என்பதால் நண்பர் அங்கு சேர்க்க விரும்பினார்.


பாத்திமா கல்லூரி கணிதப் பெராசிரியை எங்கள் குடியிருப்பில் இருந்தார். என் துனைவியாருக்கு அவர் பழக்கம். அவர் மூலம் அந்த கல்லூரியில் சேர்ர்க்க முயற்சி செய்ய வேண்டினார்.


நண்பரின் தந்தை தமிழகம் அறிந்த பிரபலமான அரசியல் தலைவர்! " ஏன்யா 1 உங்க அப்பாவை விடவா நான் பெரியவன் ? அவர்கிட்ட சொல்ல வேண்டியது தானே " என்றென்.


"வே ! இஷ்டம் நா செய்யும். ! வேறு பேச்சு வேண்டாம் ! " என்று கொபமாக கூறிவிட்டார்.என் மனைவி மூலமாகபெராசிரியையை அணுகினேன் !


" ஏம்மா ! அந்த பெண்ணொட தாத்தா எம்.பி யாமே . அவர் ஒருவார்த்தை சொன்னால் --அது கூட வேண்டாம்நீங்கள்யாரவதுநிர்வாகத்திடம்அவங்கதாத்தாஎம்பிசொன்னாலேபொதும்இடம்கிடைக்குமே " என்று பெராசிரியை கூறியதாக என் மனைவி சொன்னார்.

நானே நிர்வாகத்திற்குபோன் பண்ணலாமா என்று நினைத்தேன்.பிறகு பெரிய இடத்து விஷயமென்று  விட்டு விட்டென் ,


இருந்தாலும் மனது கேட்கவில்லை ! நான் பணியாற்றும் "தீக்கதிர்" அலுவலக பொது மெலாளர் அப்துல் வஹாப் அவர்களிடம் சோன்னேன் ! அவர் சுதந்திர போராட்ட வீரர். அரசியல் வாதி.


"சாமா ! நீ அவங்க கிட்ட எதவது உறுதியா சொல்லி இருக்கியா?  " என்று கேட்டார் 


"இல்லை. அத்தா "   


"நாளை எம்பி வருகிறார் ! பாப்பம் "


மறு நாள் அத்தா எதுவும் சொல்லவில்லை! இரண்டு நாள் கழித்து அத்தா" அந்த காலெஜ் சீட்டு..." 

என்று இழுத்தேன் !


"நல்ல வேளை ! தோழர் ! எம்.பி கிட்ட கேட்டென். என்ன சொன்னர் தெரியுமா ? " 


"என்ன சோன்னார் அத்தா ?"


"வே ! கட்சி என்னை எம்.பி ஆக்கினது எம்பேத்திக்கு காலெஜுல சீட்வாங்கவா ! அத்தா வேற வேலை இருந்தா பாரும் " நு நச்சுனு சொல்லிபுட்டாரு" என்றார் 1


அந்த எம்.பி யின் பெயர்


A.நல்ல சிவம் .


 

Friday, July 24, 2015


த.மு.எ.ச வின் இலக்கியமுகாமும்,

அவசரநிலைக் காலமும் ..........!!!



தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒரு இலக்கிய பயிற்சி முகாமை நடத்த முடிவெடுத்தது.

அவசர நிலைகால போலீஸ் கெடுபிடி இருந்ததால் எங்கு எப்படி நடத்துவது என்ற தயக்கமுமிருந்தது ! த.மு.எ.ச வின் துணைதலவரும் "செம்மலர்"   ஆசிரியருமான கு சின்னப்ப பாரதி அவர்கள் நாமக்கல் வக்கீல் சுப்பிர மணியன் அவர்களின் ஒத்துழைப்பொடு நாமக்கல்லில் நடத்த முண்வந்தார்!


1975ம் ஆண்டு நவம்பர் மாதம்17,18 தேதிகளில் நடத்த முடிவாகி காரியங்கள் ஆரம்பமாகியது.


கேரளத்துலிருந்து பி.கொவிந்த்பிள்ளை,திருச்சியிலிருந்து பெராசிரியர் மாறன் ஆகியோரை அழைக்க முடிவாகியது. 


L.I.C நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக ( Maneging Director ) இருந்தவர்

N.G.நாயுடு.தமிழ்,ஆங்கிலம் சம்ஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்ந்த ஞானம் உள்ளவர்.மார்க்சீய அறிஞர் M.R.வெங்கடராமன் அவர்களின் நெருங்கிய நண்பர். ஓய்வு பெற்ற அவ்ர் திருப்பூரில்இருக்கிறார் ! "தமிழ் இலக்கியத்தில் சமஸ்கிருதத்தின் தாக்கம் " என்ற தலைப்பில் அவ்ர் பேச ஏற்பாடானது.!


தமிழகம் முழுவதிலிமிருந்து உறுப்பினர்களை அழைக்க முடிவானது. யார் யார் என்பதை உறுப்பினர்களுக்கு ரகசியமாக தெரிவிக்கப்படும். எந்த உறுப்பினருக்கும் அடுத்தவர் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியதில்லை !அவரவர்  தனித்தனியாக நாமக்கல் வரவேண்டும். கூட்டம் கூட்டமாக இல்லாமல் தனித்தனியாக வரவேண்டும். எல்லவற்றிர்க்கும் மேலாக குடும்பத்தில் எங்கு ஏன் போகிறொம் என்பதையும் தெரிவிக்காமல் வரவேண்டும்!  


முகாம் நடக்க நான்கு நாட்களுக்கு முன்பு N.G.நாயுடு அவர்கள் உடல்நிலை காரணமாக சென்னைமருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. த.மு.எ.சவின் பொதுச்செயலாளர் K.முத்தையா அவர்கள்    நாயுடு அவர்களுக்கு பதிலாக காஸ்யபன் அந்த வகுப்பை நடத்துவார் என்று கூறிவிட்டார்.

(" ராமாயணம் -உண்மையும்புரட்டும் "  என்ற நூலை K.M. அவர்கள் எழுதும் பொது வால்மீகி ராமாயனத்திலிருந்து சில வரிகளை அவருக்கு படித்து காட்டினது தவிர எனக்கும் சம்ஸ்கிருதத்திற்கும் சம்மந்தம் கிடையாது ) 


நோந்து நூலாகிபோய் நாமக்கல் புறப்பட்டேன்.


அப்போதெல்லம் திருவள்ளுவர் பஸ் முன்பதிவினை செய்வதில்லை ! 38 சீட் உண்டு.  48 சிட்வரை எற்றுவார்கள். சென்னை வரை நின்று கொண்டே   சென்று வந்த காலம் ! 


மதுரை பாத்திமா கல்லூரி வாசலில் இரவு பத்துமணீக்குசேலம்செல்லும் வண்டியில் நாமக்கல்லுக்கு பயணமானேன் ! கூட்டம்.! நிற்க வேண்டியிருந்தது.டிரவர் அருகில் இஞ்சின் பானட்டில் அமர்ண்டு பயணமானேன்! இஞ்சின் சூடு பனிகாலமாதலால் இதமாக இருந்தது. வாடிப்பட்டியி நின்றது ! 


மாநிறத்தில்   ஒரு இளஞர் ஏறினார். கையில் மஞ்சப்பை . தலைமுடி போலீஸ் வேட்டு பொல் இருந்தது. என்னையே பார்பது போல் இருந்தது !  அடிவயிரு கலங்கியது ! மெல்ல பின்புறம் சென்று நின்று கொண்டேன் ! அந்த கூட்டத்திலும் போலீஸ் இலைஞர் என்னை எட்டி எட்டிபார்த்துக் கொண்டே வந்தார் ! தீண்டுக்கல் வந்தது !


அப்போதெலாம் இப்போது போன்ற பெரிய பஸ்நிலையம் கிடையாது. நகரத்தின் மிகப்பேரிய மூத்திரக் கிடங்குதான் பஸ் ஸ்டாண்டு.கீழே இறங்கினேன். வேறு பஸ் பிடித்து விடலாமா என்று நினைத்தேன்.பஸ் கிளம்பியதால் ஒடிவந்து ஏறினென்  ! வண்டிக்குள் இருந்த போலீஸ் இளைஞர் என்னைப்பார்த்து அசடு வழிய புன்னகைத்தார்!


மனதிற்குள் நான் எங்கு போகிறேன் என்பது  அவருக்கு எப்படி தெரியும் என்று சமாதானம்செய்து கொண்டேன்.


நாலரை மணிக்கு நாமக்கல் வந்தடைந்தது. "படக்" கென்று இறங்கி இருட்டுக்குள் மறைந்துகொண்டேன்.  பெட்டி கடையில் ஆயிர வைசிய மண்டபம் பற்றி விசாரித்து நடையைக்கட்டினேன்,கொஞ்சதூரம் சென்று திரும்பிப்பர்த்தேன் ! நடுங்கி விட்டேன் ! போலீஸ் இளைஞர் பெட்டிகடையில் விசாரித்து கொண்டிருந்தார் !


மண்டபம் சென்றதும் பொறுப்பளரிடம் மதுரையிலிருந்து என்னை பொலீஸ் தொடருவதை சொல்லிவிடுவது என்று முடிவெடுத்தேன். வந்திருக்கும் அத்துணை பேரையும்கோழியை அமுக்குவது பொல அமுக்கி விடுவார்கள் இந்த பாவிகள் ! சொல்லி விடுவது நல்லது. அவர்கள்

பாடு என்றுகருதினேன் .


மண்டபத்தின் உள்ளே கு.சி.பா வந்தவர்களுக்கான ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் நடந்ததைக் கூறினேன் . "கவலைப்படாதீர்கள்.எதையும் சந்திப்போம்" என்று தைரியம் கூறினார் .

 வெளியே பார்த்தேன்.மண்டப வாசலில் அதே போலீஸ் இளைஞர் ! வக்கீல் சுப்பிர மனீயத்தோடு வந்து கொண்டிருந்தார்.


"இவந்தான்-இவன் தான்" என்று கு.சி.பாவின் காதில் கிசு கிசுத்தேன்!


"சும்மா இருங்க காஸ்யபன்.இவர் நம்ம கவிஞர் வேண்மணி"என்றார் குசிபா

 என்னைப் பார்த்து பயந்து கொண்டிருந்த வெண்மணியிடம்

"இது நம்ம காஸ்யபன்" என்று அறிமுகம் செய்தார் வக்கீல் சுப்பிர மணியம்.


அசடு வழிய நாங்கள் இருவரும் கை  குலுக்கிக்கொண்டோம். 

 

Thursday, July 23, 2015

ஸ்நேகலதா ரெட்டி அவர்களும்

அவசர நிலை காலமும்........!!!

"ஸம்ஸ்காரா" என்ற திரைப்படம்  கன்னட திரை உலகை சர்வதேச அளவில் பார்க்க வைத்த படமாகும்!

 சீத்தாராம ரெட்டியும்,சிங்கிதம் சிணிவாச ராவும் இயக்கிய இந்த படத்தில் கிறிஷ் கர்னாட்,லொகெஷ், ஆகியோர் நடித்தனர் .கதாநாயகியாக  சித்தாராம ரெட்டி அவர்களின் மனைவி ஸ்நெகலதா நடித்தார்.

ஸ்னெக லதா வின் பெற்றொர் கிறிஸ்தவ குடும்பத்தினர். அரசியல் ஈடுபாடு உள்ளவர்கள் .டாக்டர் ரம்மனொகர் லோகியாவோடு நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள் ! ஸ்நேகாவும் பிரிட்டிஷ் எடிர்ப்பு,சோஸ்லிச கருத்துக்களை கொண்டவர். . சென்னையில் 60ம் ஆண்டுகளில் இயங்கிய "மெட்றாஸ் கிளப்" என்ற நாடக குழுவில் நடித்தவர். ஜார்ஜ் பெர்ணாண்டசின் ஆதரவாளர்.

"ஸமஸ்கார"கதையை 1965ம் ஆண்டு யு.ஆர்.அனந்தமூர்த்தி மாணவரக  இருக்கும் போது எழுதினார் ! அவர்தன்னுடைய நூலில் " அவசர நிலைகாலத்தில் தலமறைவாக இருக்கும் பெர்ணண்டசை சந்திக்க சென்றேன் ! என் கண்களை கட்டி காரில்  அழைத்து சென்றார்கள் ! அவருடன் இரண்டுமணி நேரம் பெசினேன்.என்னிடம் உதவி கேட்டார்.அவசர நிலை க்கு எதிர்ப்பு இல்லை .மக்கள் அதன ஆதரிக்கிறார்கள் என்ற பொய்யை இந்திரா வெளிநாடுகளில்ல்பிர்ச்சாரம் செய்கிறார் ! இதன முறியடிக்க நான் உதவவேண்டும் என்று கெட்டுக் கொண்டார்

.

"அவசர நிலையை எதிர்த்து ரகசிய இயக்கம்  வேண்டும் ! அதன் மூலம் ஆபத்தில்லாத குண்டு வெடிப்புகளை நடத்தி நமது எதிர்ப்பை காட்ட வேண்டும் " என்றார்.

பெங்களுரில் உள்ள பிரும்மாண்டமான சட்டமன்ற கட்டிடத்தில் உள்ள கழிவறையை தேர்ந்தெடுத்திருகிறோம். அது பயன் பாட்டில் இல்லை ! அதில் சத்தம் அதிகம் கோடுக்கும் வேடியை வெடிக்டகச்செய்ய்வேண்டும்.இது ஆபயத்திலாதது.சேதம் விளைவிக்காது ! என்றார். 

இதனை ஸ்நெகலதா ரெட்டி கொண்டு வைப்பார்  நீங்கள் இதற்கு உதவவேண்டும் என்றார்.

ஆனால் இதற்கு முன்பாகவே ஸ்நெகலதா கைது செய்யப்பட்டு விட்டார். 

பங்களுர் சிறையில் அவர் சித்திரவதை செய்யப்பட்டார் . பெர்ணாண்டஸ் மறைந்திருக்கும் இடத்தை சொன்னால் விட்டுவிடுவதாக கூறினார்கள் ! 

அதே சிறையிலிருந்த மது தண்டவதே கூறுகிறார்' "நட்ட நடுனிசியில் ஸ்நெகாவின் அலறல்கேட்கும்.  .அவரை அடிக்கும்சத்தம்   கேட்கும் ! " எதுவும் செய்ய முடியாமல் நான் தவிப்பேன் " என்கிறார்.

சித்திரவதை தாங்காமல் ஸ்நேகாவை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்கள் . பின்னர் வீட்டுக்கு அனுப்பினார்கள்.வீடு வந்த ஐந்தாம் நாள் ஸ்நெகலதா ரெட்டி மரண மடைந்தார் !   .

ஜார்ஜ் பெர்ணாண்டஸ் தங்கி இருந்த் இடத்தை மட்டும்  அவர் தன் மூச்சு இருக்கும் வரை சொல்லவில்லை ..

ஸ்நேகலதா ரெட்டி நாடக,திரைப்பட நடிகை மட்டுமல்ல !

இந்தியாவின் தீரமிக்க பெ ண்களில் ஒருவர்!!! 


Wednesday, July 22, 2015

 





















"ஜுலை" மதம் த.மு.எசவுக்கு

சொந்தமானது ........!!!

தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு சொந்தமான மாதம்தான் "ஜூலை" மாதமாகும்.!

சரியாக நாறப்து ஆண்டுகளூக்கு முன் 1975 ஜூலை மாதம் 12,13, தேதிகளில் மதுரை தமுக்கம் மைதானத்தில் அந்தப் புரட்சிப்பெண்மணி கோதாவரி பருலெகர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு இன்று தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கமாக  புகழ்பரப்பி நிற்கும் அமைப்பு உருவான மாதம் அது..

1907ம் ஆண்டு பிறந்த கோதாவரி கோகலே சுதந்திர போராட்ட வீரர் கோபாலகிருஷ்ண கோகிலெயின் சகோதர்ரரின் மகளாவார் ! பூனே நகரத்தின் புகழ் பெற்ற ஃபெர்கூசன் கல்லூரியில் பொருளாதரமும்,அரசியல் விஞ்ஞானமும் படித்துபட்டம் பெற்றவர் ! அதுமட்டுமல்லாமல் சட்டக்கல்லூரியில் சேர்ந்து மகராஷ்ட்ற மாநிலத்தின் முதல் பெண் வக்கீலாக ஆனவர் !

படித்து முடிநதும் கோகலே ஆரம்பித்த sevents of india society ல்  ஆயுட்கால உறுப்பினராக சேர்ந்த இளம் பேண்ணாக திகழ்ந்தவர் ! அதில் பணியாற்றிய இளைஞர் பருலேகரோடு விவசாயிகளை ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டார் ! 

தானே மாவட்டத்தில் உள்ள "ஒர்லி" இனமக்களை ஒருங்கிணைக்கும் பணி அவரிடம் கொடுக்கப்பட்டது ! அந்த பழங்குடி இன மக்களொடு தங்கினார் ! பின்னாளில் அவர் எழுதிய நூலில் "காலை எழுந்ததும் குளிக்க வேண்டும் என்று கூறினேன் ! ஒரு பெண் எனக்கு திறந்த வெளியில் இரண்டு பாறைகளுக்கு இடையே தேங்கி இருந்த ஒரு "குட்டை"யை  காட்டினார் ! பாசிபடர்ந்து பச்சைபோர்த்தி இருந்த அதில் குளிக்க நான் தயங்கினேன் ! அப்போது வேறொரு பெண் பானயொடு வந்து பாசியை விலக்கி நீரை எடுத்துக் கொண்டு மேலே ஏறினாள் ! அவளிடம் கேட்ட போது குடி நீருக்காக கோண்டு செல்வதாகக் கூறினாள்.    குளிக்க நான் தயங்கும் இந்த நீரைத்தான் இந்த மக்கள் குடிக்க பயன்படுத்துகிறார்கள் என்பது என்னை அதிர்ச்சியில்தள்ளியது ! நான்,என் படிப்பு என் உழைப்பு ,என்வாழ்க்கை அத்துணையையும் இந்த மக்களின் முண்ணெற்றத்திர்காக அர்ப்பணிக அன்று முடிவு செய்தேன் ' என்று கோதாரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அப்பாவி மக்களைதிரட்டி போராட ஆரம்பித்தார் ! தன்னுடன் பணியார்ரும் பருலேகரை மணந்தார் ! தெலுங்கான விவாசாயிகளின் ஆய்தம் தாங்கிய புரட்சி, வங்கத்தில் நடந்த "தோ-பிகா"

எழுச்சி, கையூறில் நடந்த கிளர்ச்சி ஆகியவற்றிற்கு ஒப்பான "ஒர்லி இன மக்களின்" போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார் ! 

கணவர் பருலேகர் " Revolt of Orli " எழுதிய நூல் இன்றும்  ஆவணமாக  கருதப்படுகிறது !

அந்தமக்கள் கோதாவரியம்மையாரை "கோதூதி" என்றே அழைக்கிறார்கள் ! அவரை தங்கள் "தாய்தெய்வமா"க வழிபடுகிறார்கள் !

தன் அனுபவங்களை " மனிதன் விழித்தெழுந்த போது " என்ற நூலாக எழுதினார். மராட்டிய மொழியின் சிறந்த படைப்பாக அதனை சாகித்திய அகாடமி விருதுகொடுத்து தன்னைபெருமைப்படுத்திக் கொண்டது !

மேடையில் தமிழ் எழுத்தாளர்கள்  நாரண துரைக்கண்ணன், ஆர்.வி ஆகியோர் இருக்க அந்த புரட்சி பெண் த.மு.எ.ச.வை துவக்கி வைத்தார்! 

தமுக்கம் மைதானத்தின் ஒரு மூலையில்  அமர்ந்து கொண்டு இந்தக்கட்சியை பரவசத்தொடு பார்த்த நான் எவ்வளவு பாக்கியவான் 

Monday, July 13, 2015

அன்புதோழர் வெண்புறா சரவணன் அவர்களுக்கு .....!




"கடல் காவல் படையின் டொர்னியர் விமானம் ஒரு கி.மி ஆழத்தில் சிதறியதை கண்டுபிடித்தவர்கள்

கோகுல்ராஜை கொலை செய்தவனை கண்டு பிடிக்க வீல்லையே" என்றுதன் கோபம் கலந்த ஆதங்கத்தை நிலைத்தகவலாக வெண்புறா அவர்கள் இடுகை இட்டிருந்தார்கள். நாற்பத்தி மூன்றூ ஆண்டுகளுக்கு முன் நடந அந்த அரசியல் சம்பவம் பற்றி நினவு வந்தது ! அதனை தகவலாக எழுது கிறென்:


1972ம் ஆண்டாக இருக்கலாம் ! இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு தி.மு.க வை அசைக்க முடியாது என்று அறிவித்து 170சொச்சம் இடங்களைப் பெற்று ஆட்சியைப் பிடித்து ஓராண்டு ஆகி இருந்தது !


திண்டுக்கல்லில் நாடாளுமனர இடைத்தேர்தல் அறிவித்திருந்தார்கள் ! மார்க்சிஸ்டு கட்சி சார்பில் அருமைத்தோழர் சங்கரய்யா அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்கள் .திமுக பிரிந்து எம்ஜியார் அண்ணா திமு.க ஆரம்பித்திருந்தார் ! அதிமுக சார்பில்தீண்டுக்கல்லில் மாயத்தேவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதிமுக முதன் முதலாக தேர்தலை சந்திக்கிறது ! எம்ஜியார் அவர்களூக்கு தேர்தலில் ஜெயித்தே ஆக வேண்டியகட்டாயம் ! ஆளும் திமுக வுக்கோ கௌரவப்பிரச்சினை ! அதிமுகவை தோற்கடிப்பதின் மூலம் எம் ஜி ஆரின் அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்க வைக்கவேண்டிய கட்டாயம் ! மார்க்சிஸ்கட்சியின் உதவியாய் எம்ஜி ஆர் நாடினார். தோழர் சங்கரய்யாவை  வாபஸ் பெறவைத்து மாயதேவரை ஆதரிப்பதாக மார்க்சிஸ்டு கட்சி அறிவித்தது !


முதல்வர் கருணாநிதி அதிகார பலம்,பணபலம் ஆகியவற்றொடு வன்முறையையும்கையாண்டு வெற்றி பெற முடியுமென்று கருதினார் !


பொதுக் கூட்டங்களில் எம் ஜி ஆர் பெசமுடியாத நிலை தோற்றுவிக்கப்பட்டது ! செந்தோண்டர்கள் முன்னும் பின்னும்வர மார்க்சிஸ்ட் தலைவர் ஏ.பாலசுப்பிரமானியம் எம் ஜி ஆரை கிராமம் கிராமமக அழைத்து சென்று பிரச்சாரம் செய்ய வைத்தார் 

 

இருந்தாலும் பூலாவாரி சுகுமாறன் என்ற அதிமுக தொண்டர் படுகோலை செய்யப்பட்டார் ! எதிர்க்கட்சிகள் கொலை காரனை கைது செய்ய குரலேழுப்பின ! முதல்வர் கருணானிதி அசையவில்லை  !  ஏ.பி அவர்கள் வேண்டு கோள் விடுத்தார் ! முதல்வர் மசியவில்ல ! கெஞ்சினார் ! எதுவும் நடக்க வில்லை !" நான் கொலைகாரனைஅடையாளம் காட்டுகிறேன் ! கைது செய்யுங்கள் என்று அறிவித்தார் "  ஏ.பி அவர்கள் ! கலிஞர் உதாசீனப்படுத்தினார் !


ஏ.பி வெகுண்டு எழுந்தார் ! "நாளை காலைக்குள்  கைது செய்யுங்கள் ! இல்லைஎன்றால் செந்தொண்டர்களோடு கொலைகாரன் வீட்டு வாயிலில் நான்" தர்ணா" இருப்பேன்" என்று அறிவித்தார் !


அரசுபணிந்தது !