Wednesday, December 21, 2011

சாகித்ய அகாதமி விருது...

சாகித்ய அகாதமி விருது......

இந்த ஆண்டு தமிழ் மொழிக்கான விருது எங்கள் தமிநாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் சு.வெங்கடெசன் அவர்களுக்கு அளிக்கப்பட்டதாக அறிவிப்பினைக்கேட்டதும் இனிய அதிர்ச்சி. மதியம் 12 மணிக்கு அவரை தொடர்பு கொண்டபோது அதிகாரபூர்வமாக தகவல் எதுவும் இல்லைதான்.

1980 ஆண்டுகளின் துவக்கத்தில் தமிழ் புலவருடன் அலைந்து கொண்டிருந்த அந்த பால்வடியும் முகம் தான் எனக்குநினைவிருக்கிறது.என்ன அற்புதமான ,ஆரோக்கியமான வளர்ச்சி.! த .மு எ.க.ச.வின் பொதுச்செயலாளர் , சிறந்த நவலாசிரியர், திரைப்பட கthai ஆசிரியர்,தற்போது சாகித்ய அகாதமி விருது!.சுவே அவர்களே வாழ்த்துக்கள்.

வெங்கடேசனைவிட மூத்த எழுத்தாலர்கள்பலருண்டு.அவர்களுக்கு இன்னும் கொடுக்கப்படவில்லயே என்ற ஆதங்கமும் சரியே! வண்ண நிலவன்,வண்ணதாசன், ஜெயமோகன்,குருசு,ஜாகீர் ராசா ஆகியொருக்கு கொடுக்கப்படவில்லையே என்ற ஆதங்கமும் சரிதான்.அதோடு, தலித் இலக்கியத்தை துவக்கி, யதார்த்த வாதத்தை ஆரம்பித்து வைத்த டி.செல்வராஜ் , கு.சின்னப்பபாரதி ஆகியோர் பெயரை மறந்துவிட்டதுஅவர்களுக்கு நினைவில் வராமல் போனதுவருத்தமளிக்கச்செய்கிறது

என்ன செய்ய?

Saturday, December 17, 2011

பேயை விரட்டப்போய் பிசாசைப் பிடித்தார்கள்......

பேயை விரட்டப் போய் பிசாசைப் பிடித்தார்கள்.....

அழகான அரண்மணையைக் கட்டவிரும்பினான் ஒருவன்.கட்டிமுடித்ததும் தான் தெரிந்தது அதில் அவனுக்கு முன்பாகவே ஒரு பேய் குடிவந்து விட்டது என்பது. பேயை விரட்ட பூசாரியைக் கூட்டி வந்தான்.அவனோ அரண்மணையின் ஒவ்வொரு செங்கலிலும் பிசாசை குடிவைத்துவிட்டான்

இந்தியா என்னும் அழகான அரண்மனையை கட்டினொம் அதில் அமர்ந்த பேய்களை ஒட்ட மன்மோகன்,சிதம்பரம்,மாண்டேக் சிங் என்று மூன்று பூசாரிகளைக்கொண்டுவந்தோம் .பேய்களுக்குப் பதிலாக ஊழல் பிசாசுகளை குடிவைத்துவிட்டார்கள். பேயும் பிசாசுகளும் இருக்கட்டும். இந்த பூசாரிகளிடமிருந்து நாட்டைக் காக்க வேண்டிய பெரும் பணி நம் முன்னே வந்துவிட்டது.

கெட்டு அழுகி பூஞ்சைகாளான் பிடிக்கும் தானியத்தை பட்டினியால் சாகும் மக்களுக்குக் கொடுக்கக் கூடாதா என்று நீதிமன்றம் கேட்டது. மக்கள் சோம்பேறிகளாகிவிடுவார்கள் அதனால் கொடுக்கமாட்டொம் என்றார்கள். சமீபத்தில் தணிக்கை மற்றும் கணக்கு பரிசீலன செய்யும் அதிகாரி சொல்லியிருக்கிறார்.ஆண்டுக்கு 1,90,000 கோடி வரி வசூலாகமல் இருக்கிறதாம். இதில் 160000 கோடி கண்டிப்பாக வசூலாகாது என்கிறார்.

இது பற்றி நடாளுமன்றத்தில் கேட்டால் தண்ணிப்பாம்பு மாதிரி நாக்கைத் துருத்திக்கொண்டு சிதம்பரம் நியாயப்படுத்துவார்.

கிட்டத்தட்ட 1,40,000 கொடி பாக்கிவத்திருப்பவர்கள் 12பேர். 120 கோடி மக்களில் 12பேர் வரி கொடுக்காமல் இவ்வளவு பணத்தை வைத்துள்ளார்கள். இவர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாட ஜேத்மலானிகள், பூஷன்கள்,சிதம்பரம்கள் உண்டு.

கள்ளப்பணத்தை எந்தஊரில் எந்த வங்கியில் போடவேண்டும் என்கிறீர்களோ அங்கு போட தயாராக ஏஜெண்டுகள் உள்ளனர்.அதில் முக்கியமானவன் ஹாசன் அலி கான். இவன் மட்டும் பாக்கி வைத்திருக்கும்வரி 50,345 கோடி. இவனுடைய கூட்டாளியின் மனைவி சந்திரிகா தபூரியா கணக்கில் வரி பாக்கி20,540 கோடி.நரசிம்ம ராவுக்கு சூட்கெசில் 1 கோடிகொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஹர்ஷத் மேத்தா வரி பாக்கி 15944 கோடி .

இவர்கள்,மற்றும் கள்ளப்பணக்காரர்களின் பெயரை சொல்லமாட்டேன்னு சாதிக்கிறாங்கள்.சொன்னா என்ன ஆயிறும். ரோட்ல இந்தப்பயிலுக சொகுசு கார்லபொகும்போது ரோட்டொரமா நின்ணு "ஒகோ இவந்தானா அவன் " ந்னு பெருமூச்சு விடுவோம். தூக்கி போட்டு மிதிக்கவா போறோம்.

Wednesday, December 14, 2011

நண்டு கொழுத்தால்......

நண்டு கொழுத்தால்......

ஜனாதிபதிக்கான தேர்தல் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடை பெற உள்ளது. தற்பொது ஜனாதிபதியாக இருப்பவர் ஒபாமா.இவர் மீண்டும் ஜனாதிபதியாக விரும்புகிறார்.இ வர் ஜனநாயகக் கட்சி உறுப்பினர். இவரை எதிர்த்து ரோம்னி என்பவர் நிற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ரோம்னி குடியரசுக்கட்சசி உறுப்பினர்.இரண்டு கட்சியுமே பெரும் பணக்காரர்களை அண்டிபிழைக்கும்கட்சிகள் தான் . தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் என்ன வித்தியாசம்!அதேதான் இவை இரண்டுக்கும்

அமேரிக்கா தற்பொது . கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. சென்ற தேர்தலின் பொதும் இதே நிலமைதான்.வேலையின்மை அதிகரிப்பு,மக்களுக்கான நிவாரண உதவிகள் ரத்து, நிதி நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக திவாலாவது, என்று திணறியது. இவற்றிலிருந்து மீளமுடியுமா? என்று திகைத்து நின்ற போது "ஆம்! நம்மால் முடியும்" என்ற கோஷத்தை முன் வத்து ஒபாமா பொட்டியிட்டார். மக்கள் நம்பினர்.அவர்கள் ஆதரவோடு வெற்றி பெற்றார்..

நிலைமையில் மாற்றம் எதுவும் இல்லை. மக்கள் ஆதரவு நடவடிக்கை களுக்குப் பதிலாக, தனியார் நிதிநிறுவனங்களுக்கு அரசு உதவிகளைச்செய்வதின் மூலம் நிலமையைச்சமாளிக்க முயன்றார்.தாங்கமுடியாத சுமைகளை மக்களின் மீது ஏற்றிய பொது அவர்கள்நிதி நிறுவனங்களை பிரிதிநிதித்துவப்படுத்தும் "வால் ஸ்ட்றிட்டை " தாக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலமையில் அடுத்த ஆண்டு தெர்தலை சந்திக்க ஜனநாயகக் கட்சியும் ,குடியரசுக்கட்சியும் களமிறங்க உள்ளன. இரண்டு கட்சிகளிடமும் நலிந்து போன் முதலாளித்துவ தீர்வினைத்தவிர எதுவும் இல்லை . ஆகவே இரண்டு கட்சிகளுமே மக்களின் கவனத்த திருப்ப யுத்தவேறியை பயன்படுத்த முடிவு செய்துள்ளன என்பது சமீப பெச்சுகளிலிருந்து வெளிப்படுகிறது. அவர்களு க்கு ஒரு எதிரி வேண்டும்.

தோதான எதிரியாக அவர்களுக்கு தற்போது ஈரான்கிடைத்துள்ளது.
ஆப்கானிஸ்தான,ஈராக், லிபியாஎன்று முடிந்தநிலையில் இன்று ஈரானை அமுக்க நினைக்கிறார்கள் .

அமெரிக்காவில் உள்ள சவுதி தூதரகம் தாக்கப்பட்டது. அதன் தூதுவரைக் கொல்ல ஈரான் சதி செய்தாதாக அமேரிக்கா குற்றம் சாட்டுகிறது. இந்த தாக்குதல் சம்மந்தமாக அப்ரசியாஎன்ற நபர்கைதுசெய்யப்பட்டுள்ளார்.அவர் ஈராணிய வம்சத்தை செர்ந்தவர். அப்ரசியாவின் உறவினர் .கோலம் சாவ்ரி. இவர் ஈரான் நாட்டிற்குள் ஈரானை எதிர்த்து கலகம் செய்யும் குழுவை சார்ந்தவர். சவுதி துதரகத்தைத்தாக்க இவருக்கு இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்பு உதவியுள்ளது. இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி ஈரான் மீது யுத்தம் தொடுக்க பவேலை நடக்கிறது. சர்வதேச அணுசக்தி இணையம் அமெரிக ஆதரவு நிலை எடுத்து ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.இதில் வேடிக்கை என்ன வென்றால் சி.ஐ.ஏ வும், எஃப்.பி.ஐ யும் இதனை எதிர்க்கிறது.போதுமன ஆதாரம் இல்லை என்று இவை கருது கின்றன

அமெரிக்க ஜனதிபதிதேர்தலுக்கு முன் இரான் தாக்கப்படலாம்.

நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்பார்கள். அமெரிக்கவில் ஜனதிபதி தேர்தல் வந்தால் ஏழை நாடு ஒன்று தாக்கப்படத்தான் வேண்டுமா!!

Saturday, December 10, 2011

நல்லவரா...? கெட்டவரா...?

நல்லவரா? கெட்டவரா?.........

இந்தியாவில் அவசரநிலைக்காலம் முடிந்து ஜானதா ஆட்சிஏற்பட்டது. இந்திய -சின எல்லைத்தாவாவை தீர்க்க முயற்சிகள் எடுக்கப்பட பல யோசனைகள்கூறப்பட்டன .பாதுகாப்புத்துறையில் ஆலோசகராக கே.சுப்பிரமணியம் என்பவர் இருந்தார். இந்திய அரசோடு ஒரு உடன் படு கொள்ள இது தான் சரியான நேரம் என்று அவர் சீனாவிடம் கூறினார்.

"காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தால் எந்த ஒப்பந்ததைப் போட்டாலும்எதிர்க்கட்சி வலது சாரிகள் எதிர்க்கவே செய்வார்கள் . இப்போது அவர்கள் அதிகமாக உள்ள ஜனதா ஆட்சியில் ஒப்பந்தம் போடுவது சரியாக இருக்கும்.சீனா ஒரு கம்யூ நிஸ்ட் நாடு என்பதால் இதனைசொல்கிறேன் "என்று ஒரு விசித்திரமான காரணத்தையும் அவர் கூறினார்.

இந்தக் கருத்தை சுப்பிரமணியம் சாமியும் ஏற்றுக் கொண்டிருந்தார்.சுப்பிரமணியம் சாமிக்கு "மாண்டரின் சீனமொழி " எழுதவும் பேசவும் தெரியும் .அவர் சீனநாட்டுக்குச்சென்றார்.அங்கு சென்று மக்கள் சீன குடியரசுத்தலைவர் டெங்க் ஷியோ பிங்க் அவர்களைச்சந்தித்தார்." இந்திய அரசாங்கத்தோடு எல்லை பிரச்சினை பற்றி ஒரு தீர்வு ஏற்பட இது ஒரு நல்ல தருணம்.அரசாங்கத்தில் பழய ஜனசங்கத்தினர் அதிகம் உள்ளனர். அவர்கள் இந்துத்துவ வாதிகள்.அவர்களை சரிசெய்ய ஒரு நல்லெண்ண நடவடிகை எடுங்கள்". என்று கேட்டுக்கொண்டார்.

"இந்துக்களுக்கு மிகவும் புனிதமானது "கைலாச யாத்திரையும் ,மானசரோவர் ஏரியில் நீராடுவதும்.1962 தாவாவுக்குப் பிறகு இந்த யாத்திரை செல்வது தடைபெற்றுள்ளது..இதனை மீண்டும் அனுமதிப்பதின் மூலம் சீனா தன் நல்லெண்ணத்தை வெளிபடுத்த வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார்.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாக சுப்பிரமணியம் சாமியின் தலைமையில் "கைலாச" யாத்திரை மீண்டும் துவங்கியது.

பாதரசம் வெப்பத்தைத் தாங்காது.மிகக் குறந்த வெப்பமானாலும் அது சுருங்கி விரியும் .அதனால் தான் அதனை " உஷ்ணமானி" யாக பயன்படுத்துகிறார்கள்.சுப்பிரமனியம் சாமியும் அதே போன்று எப்போது என்ன சொல்வார் செய்வார் என்பதை சொல்லமுடியாது.வாஜ்பாய் பற்றி "அவர் குடிகாரர், சபல புத்திக்காரர்" என்று குற்றம் சாட்டியதும் அதனால் ஜனதா கட்சியில் ஏற்பட்ட விளைவுகளூம் வரலாறாகும்.

"ராமர் பாலம் " இருந்தது . இலங்கைக்கு நடந்தே இப்போதும் போகலாம் "என்று கூறி தனுஷ்கோடியிலிருந்து தன் துணைவியாரோடு நடக்க முயன்று தோல்வியச்சந்தித்தவர்.

இந்திராகாந்தி அம்மையார், வாஜ்பாய், கருணாநிதி ,ஜெயலலிதா என்று அத்துணைபேரையும் நீதிமன்றத்தில் நிறுத்தியவர்.

சுப்பிரமணியம் சாமி மதுரை அருகில் உள்ள சோழவந்தானை பூர்வீகமாகக் கொண்டவர்.மயிலாப்பூரில் பிறந்தவர்.தந்தை சீதாரமன் சுப்பிரமணியம் ,மத்திய அரசில் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர் . சுத்தமான ஐயர்(பாப்பான்).சாமியின் தாயார் தமிழ் பேசும் திருச்சூரைச்சேர்ந்த கெரளத்துப் பெண்மணி.சாமியின் அத்திம்பெர் யூத மதத்தைச்செர்ந்தவர். அவருடைய மகள் சுபாஷினியை ஹைதர் என்ற முஸ்லீமுக்கு மணமுடித்திருக்கிறார். அவருடைய மைத்துனியின் கணவர் கிறிஸ்துவர். அவர் மனைவி டாக்டர் ரொஹனா பார்சி மதத்தைச்செர்ந்தவர்.

சுப்பிரமணியம் சாமி நல்லவரா? கெட்டவரா?

Thursday, December 08, 2011

வாய் கொழுப்பு....

வாய் கொழுப்பு....

சோழவந்தான் முல்லிபள்ளம் தெரு சுப்பிரமணியம் சாமியின் வாய்க்கோழுப்பு உலகமறிந்த ஒன்று.1965ம் ஆண்டு அமெரிக்கபல்கலையான புகழ் பெற்ற ஹார்வர்டு பலகலைகழகத்தில் முனவர் பட்டம் பேற்றார். அதே பல்கலையில் பெராசிரியராகப் பணியாற்றினார்.

இந்தியா வந்த பிறகும் அந்த பல்கலையின் கோடை கால பள்ளியில் பெராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.இவ்வளவு இருந்தும் "இந்துத்துவா " மோகம் அவரை ஆட்டுவிக்கும் .சமீபத்தில் ஒரு பதிப்பகத்தின் இதழ் ஒன்றில் அவர் எழுதியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

"இந்த்தியாவில் உள்ள மசூதிகளை யெல்லம் இடித்து விட வேண்டும். தங்கள் முன்னோர்கள் இந்துக்கள்தான் என்று ஏற்றுக்கொள்ளும் முஸ்லீம்களுக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்க வேண்டும்" என்று எழுதியிருந்தார். நம்மூரில் உள்துறை iஅமைச்சர் ப .சிதம்பரம் வாயில் கட்டை விரலை வைத்துக்கொண்டு இருந்தார். கூகிள்,யாகு,ஃபேஸ் புக் மீது பாய்ந்துவிழும் கபில் சிபல் மூச்சு விடவில்லை.

ஹார்வர்டு பல்கலைகழகத்தின் மதக்கல்வித்துறை பேராசிரியர் தியானா என்ற அம்மையார் இதன கடுமையாக சாடினார். இப்படிப்பட்ட ஒரு மத குரோத உணர்வு கொண்ட ஒருவர் நமது பல்கலையில் ஆசிரியராக இருப்பது கேவலமானது. அவரை உடனடியாக நீக்க வேண்டும் என்று கமிட்டியில் தீர்மானம் கொண்டுவந்தார். பெரும்பான்மையினர் ஆதரிக்க நிறை வேறியுள்ளது. "சாமியின் கூற்று பொதுவானதல்ல.தேவையற்றதும் கூட" என்று தியானா அம்மையார் கூறியுள்ளார்.

"இது யூத அமெரிக்கர்களும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் ஆங்கிலோ சாக்ஸன் ப்ராடெஸ்டெண்ட் சர்ச்தான் எங்கள் முன்னோர்கள் என்று சொன்னால் தான் வாக்குப் போட அனுமதிக்க முடியும்" என்பது போல் உள்ளது என்று ஹார்வர்டு பல்கலையின் வரலாற்றுப் பேராசிரியர் சுகதா போஸ் கூறியுள்ளார்.

சுப்பிரமணியன் சாமியின் வாய்க்கொழுப்பு அவர் வேலையை நேற்று பறித்து விட்டது.

Monday, December 05, 2011

சங்கீதாவின் கணவர்.....

சங்கீதாவின் கணவர்.....

என் துணைவியாருக்கு வீட்டு வேலைகளில் உதவியாக இருக்கும் அம்மையார்தான் சங்கீதா.அவருடைய கணவர் தினம் காலையில் எழுந்ததும் 1000 ரூ கடன் வாங்குவார், அதற்கு காய்கறி வாங்கி தள்ளூவண்டியில் வைத்து தெருதெருவாகச்சென்று விற்பார்.இரவு 7மணிக்கு கடனை வட்டியோடு திருப்பிக் கொடுப்பார். ராக்கெட்வட்டி என்றோ மீட்டர் வட்டி என்றோ அந்த அம்மையார் சொல்வார்கள்

இவர்களுக்குப் பதிலாகத்தான் "வால்மார்ட்" வரப் போகிறது. மிகப் பிரும்மாண்டமான அமெரிக்கக் கம்பெனி.அதனுடைய விற்று வரவு 18 லட்சத்து 95 ஆயிரம் கோடிரூபாய். சங்கீதாவின் கணவர் இந்த கம்பேனியோடு போட்டியிடவேண்டும். டிஸம்பர் மாதம் 1ம் தேதி சங்கீதாவின் கணவர் வியாபாரம் செய்யவில்லை. கெட்டதற்கு சங்கீதா
"ஹர்த்தால் ஐயா!

" எதற்காகத்தெரியுமா?

" தெரியாது.என்னமோ எங்க பொழப்புல மண்ணை பொடுதாங்கனு எங்காஆளு சொல்லிச்சு"

நான் விவரத்தச்சொன்னேன் .

"ஐயா இது சர்க்காருக்கு தெரியாதா?"

"நல்லாதெரியுமே"

"தெரிஞ்சும் ஏன் செய்தான் செத்த பயலுக"

நான் பதில் சொல்லவில்லை .

"அடுத்த தடவை இவனுகளுக்கு ஒட்டு போடக்கூடாது "

"வாரவன் மட்டும் யொக்கியமா?"
சங்கீதா மவுனமானாள். திடீரென்று அவள் முகத்தில் பிரகாசம்."நீங்க நில்லுங்களேன் ஐயா! நாங்க எல்லாம் செர்ந்து ஓட்டு பொடுதோம்".
தனக்கு தெரிந்தவர்,நெருக்கமனவர் தெர்தலில் வருவது சங்கீதாவுக்குப் பிடித்திருந்த்தது என்பதை அவருடைய முகம் ஜொலித்ததில் புரிந்த்தது.நான் பதில் சொல்லவில்லை.மையமாக தலையை ஆட்டிவத்தேன்.

Friday, December 02, 2011

மூலதனம் என்ற வனவிலங்குகளால் குத்திக் கிழிக்கப்படுகிறதே....

வன விலங்குகளால் குத்திக் கிழிக்கப்பட்டுவிட்டதே........

இரண்டாம் உலகப் போருக்குப்பின் கிட்டத்தட்ட நாற்பத்தியைந்து ஆண்டுகள் அமைதியாக இருந்த உலகம் தற்பொது முலதனம் என்ற வனவிலங்க்கால் குத்திக் கிழிக்கப்பட்டு கெட்பாரற்று பொய்விட்டதே!

1989ம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் சோவியத் நாட்டின் அதிபர் கோர்பசோவ் தன் ராஜினாமாவை அறிவித்தார். சொவியத் நாட்டின் கொடி கிரம்ளின் மாளிகையில் இறக்கப்பட்டு ரஷ்யாவின் கொடி ஏற்றப்பட்டதும் அதே டிசம்பரில் தான். கோர்பசோவ் இந்தியா வந்தார் .அவர் வந்ததைக் கொண்டாடும் விதமாக மதுரையில் புலவர் புத்தூரான் தலைமையில் மதுரை நேரு வினாயகர் கோவில் முன்பு த.மு.எ.ச. சார்பில் பிரும்மாண்டமான் கவியரங்கம் நடத்தினோம்.கோர்பசோவின் நேற்றியில் இடது பக்கம் மச்சம் உண்டு வழுக்கைத்தலையில் பளிச்சென்று தெரியும் .ஆனந்தவிகடன் அந்த மச்சத்தை இந்தியாவாக வரைந்து சொவியத்தின் மனதில் எப்பொதுமே இந்தியாதான் இருப்பதாக கார்டூன் போட்டு கவுரவித்தது.

என் அலுவலக நண்பர் காலம் சென்ற எஸ்.கே மூர்த்தி மாஸ்கோ வாணொலி யில் பேச சென்றிருந்தார்.அவர் வாங்கி வந்த "ப்ரஸ்தொய்கா" புத்தகத்தை படித்து விட்டு "கிளாஸ்நாட் "பற்றி விவாதிப்பேன். சுபிட்சத்தின் பாதிப்புதான் சோவியத்தின் பிரச்சிசினை என்று கொண்டேன். பேருந்து கட்டணம் 5 கோபக் 1935ம் ஆண்டிலிருந்து அப்படியே இருக்கிறது. தொழிலாளியின் ஊதியம் உயர்ந்து கொண்டெவருகிறது.அவன் கையில் சேமிப்பு அதிகமாகிறது.அவனுக்கு நுகர்வு பொருள் தேவை. அதனை வாங்க அவன் விரும்புகிறான் ஆனால் கிடைக்கவில்லை அதுதான் பிர்ச்சினை என்று நாங்கள் கருதினோம். ஆனால் அவனோ முதலாளித்துவ ஜனநாயகம் பற்றி அரை குறையாக கேள்விப்பட்டு எல்ஸ்டினின் தலைமையில் அதனைக் கேட்டான் . .

லெனின் ,ஸ்டாலின்,என்று பிரஸ்னோவ் எல்லாருமே சர்வாதிகாரிகள் என்று ஒருவிமரிசன்ம் உண்டு.ஆம்.உழைக்கும் மக்களின் சர்வாதிகாரம் (dictatorship of proletariat) .அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை ஆயுதம் தான். மூலதனம் அதனை பயன் படுத்தலாம் என்றால் உழைக்கும் வர்க்கம் பயன்படுத்த்க்கூடாதா? இளம் சோவியத் நாட்டை அழிக்க வெள்ளை ராணுவம் (white army) அனுப்பப்பட்டபோது செஞ்சேனை அதனை நோறுக்கித்தள்ளியதற்கு அந்த சர்வாதிகாரம் தான் உதவியது. இரண்டாம் உலக யுத்தத்தில் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் மிக அதிக அளவில் சந்தித்தது சொவியத்தநாடுதான் அமெரிக்காஅல்ல .இருந்தும் கிழக்கு ஐரோப்பிய, வளரும் நாடுகளை தன் நாடுபோல் பதுகாத்து வளர்த்தது சோவியத் நாடுதான் தன்மக்களுக்கு இலவச மருத்துவம்,இலவச கல்வி,உணவு,உறைவிடம் அளித்த அரசும் அதுதான்.ஜனநாயகம் வேண்டும் என்று கோரியபோது அதனை சரியாக கையாள முடியாமல் கோர்பசோவ் திணறினார். சோவியத் ஒன்றியத்தை காக்க முடியாமல் ஓடினார் என்பது உண்மைதான்.ஆனால் சோவியத் நாட்டில் சத்தான உணவில்லத குழந்தையைப் பார்திருக்கமுடியாதே...

மூலதன ஜனநாயகமென்ற பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு கட்டியிருந்த கோவணத்தை இழந்துவிட்டோமே. அதனை எதிர்த்து நின்ற சொவியத் தகர்ந்து போனபின் இன்று கேட்பார் இல்லாமல் நிதி மூலதனம் ஆட்டம் போடுகிறதே! அமைதியான உலகம் மூலதனமென்ற வனவிலங்கால் குத்திக் கிழிகப்படுகிறதே!

மீளும் வழி எது? ஏது?...சிந்திப்போம் !