Saturday, October 31, 2015சின்னய்யா காசி அவர்களின் 

நிலைத்தகவலை முன்வைத்து....!!!
அருமைத் தோழர் சின்னையா காசி  அவர்கள்  "விஸ்வரூபம் " படத்தில் "கதக்." நடன படபிடிப்பு பற்றி காட்சி வடிவத்தில் பதிவிட்டிருந்தர்கள். நடிகர்கள்,நடிகைகள், நடன மாஸ்டர்கள், பாடகர்கள், வாத்தியம்வாசிக்கும்கலைஞர்கள், புகைப்பட கலைஞர்கள், லைட்மேன் கள், எடிட்டர்கள் , என்று உயிரைக்கொடுத்து காட்சிகளை உருவாக்குகிறார்கள்.நாம் அதன பார்த்து ரசிக்கிறோம்.அல்லது குப்பை என்று துக்கீ எரிகிறோம்.இது அந்த கலைஞர்களின் உழைப்பை அவமானப்படுத்துவது என்றே நான் கருது கிறேன்.


1979-80ம் ஆண்டுகளில்திரைப்படத்தில் நடிக்க நானும்போனேன். தோழர்கே.முத்தையாஅவர்கள்"உன்னை கட்சி அனுப்புகிறதுஅங்கு பொய் கட்சிக்கிளைஅமைக முடியுமா என்று பார் " என்று சொல்லியனுப்பினார்


துணை இயக்குனர்கள்லட்சுமினாராயணன், காசி,துனை புகைப்படகலைஞர்கள் கோபால் , போன்றவர்களை சுரண்டி பார்த்ததில் கொஞ்சமெளிச்சம் கிடைத்தது .அவர்களிடம் சொவியத் திரைப்படங்கள், கதைகள்  நாவல்கள்,என்று இரவு முழுவதுவும் பெசுவோம்.விவாதிப்பொம். 


Ballard of a soldier,Fall of  Berlin, Moscow distrust tears ,Blue Mountain என்று படங்கள்பற்றிபெசுவோம்.".ஸொவோ கலர்"   படச்சுருளுக்கும் , கோடாக்,கெவா சுருளுக்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றி விவாதிப்போம். இவை அவர்களை என்பால் நெருக்கம் கொள்ள வைத்தது.  இதெபோல் , தையற்கலைஞர்கள், லைட்பாய்ஸ், துணை நடிகர்கள் ,நடிகைகள் ஆகியோர் படும்பாட்டினை நேரில் காண முடிந்தது.


நானும் துணை இயக்குனர் இரண்டு பெரும் விடுதியில்தங்கி இருந்தோம் . இரவு 10 மணி இருக்கும். குளியலறையில் சத்தம் கேட்டது. நான் ஏ.சியறை ஆதலால்   நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தேன். ஜன்னலில் உள்ள திரைச்சிலையை காணவில்லை .  அதனை சரிசெய்ய எழுந்தேன்.  விளக்கை போட்டென். "சார் ! சார் !சார்!" என்று அலறல் சத்தம் கேட்டது.

துணை  இயக்குனர் ஒருவர் திரைச்சிலையை உடுத்திக்கொண்டு படுத்திருந்தார்.


மறு   நாள் படப்பிடிப்பிற்கு  போக உடை இல்லை. அவரிடம் இருந்த ஓரே பாண்ட்,சட்டை, உள்ளாடைகளை தோய்த்து உணர்த்தியிருந்தார்  அதற்காக மின் விசிரியை போட்டிருந்தாற் ஏ.சி ரூம் . குளிருக்காகவும், அம்மணத்தை மறைக்கவும் திரைச்சிளைய பயன்படுதி இருக்கிறார்

"ஏன்யா ? வீட்டுக்கு போய் துணியை எடுத்து வரவேண்டியது தானே ? "

"வீடு எங்க இருக்கு ?"

"ரூமிருக்கு இல்லையா?" 

"நாங்க என்ன எல்.ஐ.சி   லயா வேலை பாக்கோம்."


பேச்சை நிறுத்தினேன்.


( அடுத்த இடுகையில் லைட்பாய்பற்றி எழுதுகிறேன்.)


Friday, October 30, 2015

கலைஞர்கள் நம் பின்னால் ---2
"கலைஞர்கள் நம் பின்னால் "என்று ஒரு நிலைத்தகவல் எழுதி இருந்தேன். அதனை ஆந்திர தோழர்கள் பார்த்து தொலை பெசிமூலம் பாராட்டினார்கள். மார்க்ஸிஸ்ட் கட்சியின் நாளிதழான  "பிரஜாசக்தி " திருப்பதியிலிருந்து ஒரு பதிப்பினை வெளியிடுகிறது. அந்த பதிப்பின் நிர்வாகியான தோழர் வி.சந்திர சேகர் இந்த செய்தியை படித்து விட்டு எழுதி இருந்த தகவலை இங்கே தருகிறேன்:


"நீங்கள் திருப்பதியில் செயல்படும் ஜனபாத கலைஞர்கள் சங்கத்தின் வளர்ச்சி,செயல் திட்டம்,பிரச்சினகள பற்றி விரிவாக எழுதீருந்தீர்கள்.சமிபத்தில் 38000 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சங்கம் திருப்பதியிலிருந்து திருமலை வரை ஒரு பாத யாத்திரையை நடத்தி,தங்கள் கோரிக்கைகளை எடுத்து உரைக்க சென்றார்கள்.( தேவஸ்தான )அதிகாரிகள்முதலில் அனுமதிமறுத்தார்கள். சங்க உறுப்பினர்கள் "மலையப்ப ஸ்வாமியே !- கோவிந்தா ! கொவிந்தா !, ஏழுமலையானே ! -கொவிந்தா! கோவிந்தா !என்று குரலெழுப்பிய போது அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை . காட்டு வழியிலும்,கொவிலுக்கும் செல்ல அனுமதித்தார்கள். அதிகாரிகள், எங்கள் உறுப்பினர்களுக்கு தரிசன ஏற்பாடுகளை செய்ய வேண்டியதாயிற்று. காட்டுப்ப்பதையில் உள்ள சொதனச்சாவடியில் வன இலாகா கணக்கின் படி இது வரை இல்லாத அளவுக்கு கூட்டம் வந்ததாக பதிவாகியுள்ளது."


("தலையில்  மொட்டை, நேற்றியில் திறுமண் , வாயில் இறைவனின் நாமம் - ஆகியவற்றொடு ஒன்றுபட்டு நின்றதால் கிடைத்த வெற்றி இது." )

Wednesday, October 28, 2015


(ஆந்திராவில்)

ஆடல்,பாடல் நாடக கிராமீய

கலைஞர்கள் நம்பின்னால்....!!!

அன்னமாசாரியாரின் கீர்தனைகளை அவர்கள் பாடுவார்கள். நாதஸ்வரம் , வேங்குழல், மேளம் என்று கொவில்திருவிழாக்கள் அவர்கள் இல்லாமல் நடக்காது ஆந்திர கிராமங்களில் நிகழ்ச்சி நடத்துவார்கள். இவர்களை ஒன்றிணத்து இவர்கள்வாழ்வாரத்தினை மேம்படுத்த முயற்சிகள் நடந்தன. 38000 பேர் கிட்டத்தட்ட இதில் கலந்து கொண்டனர்.

ஆந்திர மானிலத்தில் உள்ள கோவில்கள்,கிராமிய சிறு தெய்வங்கள் ஆகியவற்றின் திருவிழாக்களில் பங்கு பெறும் அத்துணை பேரும் இதி உள்ளார்கள்.

தமிழ்னாட்டின்,செலம்,தர்மபுரி,கிருஷ்னகிரி ஆகிய மாவட்ட கலைஞர்களும் இதிலுள்ளனர்

.தஞ்சையின் புகழ்பெற்ற பாகவத மேளா குழுவினர் சேர்ந்துள்ளனர். திருவாரூர் தியாகராஜ ஆரதனயில் பங்கு பெரும் இசைக்கலைஞர்கள் வாத்திய கோஷ்டியினர் ஆகியோரும் உண்டு. தமிழகத்து கோவில்களைவிட ஆந்திராபக்கம் அதிக நிகழ்ச்சிகள் கிடைப்பதால் இவர்கள் ஆந்திராவை நம்புகின்றானர

இரண்டு மாதங்களுக்கு முண்ணால் இவர்களின் மாநில மாநாடு திருப்பதியில் நடந்தது. இவர்களை ஒன்றீணைத்து சங்கமாக அமைத்து அந்த சங்கத்தினை சி.ஐ.டி.யு வோடு இணத்துள்ளனர்.

இந்த மானாட்டில் த.மு.எ.கசவின் தலைவர்களில் ஒருவரான ஏஸ்.ஏ பெருமாள் அவர்கள் கலந்து கொண்டு இரண்டாயிரம் சார்பாளர்கள் முன்னால் சிறப்புரை ஆற்றினார்.

இவர்கள் திருவழாக்களீல் , ஸகுந்தல-துஷ்யந்தன், காலிதாச சரித்திரம் ,பாமாவிஜயம் போன்ற நாடகங்களை பொடுவதோடு , மக்கள் விழிப்புணர்வு சமுக நாடகங்களையும் போடுகிறார்கள்.அதுமட்டுமல்லமல், அன்னமாசாரியாரின் கீர்த்தனகளில், மதமாச்சரியங்களை 

எதிர்க்கும் கீர்தனைகளை பாடுகிறார்கள்.

இவர்களுடைய கோரிக்கைகளை வென்றெடுக்க சங்கம் உறுதிகொண்டுள்ளது.

இந்த கலைஞர்கள் தங்களுக்கு முதலில் அரசு அடையாள ஆட்டைகலை வழங்க வேண்டும் என்று கோறியது.ஆந்திர அரசு தற்பொது அடையாள அட்டைய்களை வழங்கியுள்ளது.

கோவில் நிர்வாகம் நிகழ்ச்சிகளை பாகுபாடில்லாமல் வழங்கவேண்டும்.

கலைஞர்களுக்கு பாலியல் தொந்திரவு கூடாது.

ஒவ்வோரு குழுவுக்கும் மாதம் ஏழு நிகழ்ச்சியாவது கொடுக்க வேண்டும்.

நலிந்த மூத்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம்கொடுக்கப்பட வேண்டும்.

இவை பற்றி சங்கம் திருப்பதி தேவஸ்தானத்துடன் பேசி வருகிறது.

இந்த பெச்சு வார்த்தையில் சி.ஐ.டியு வின் சார்பாக தோழர் யதுகிரிகலந்து கொண்டுள்ளார்.

யதுகிரி மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆவார்.


Tuesday, October 27, 2015


"பாட்டு அவர்களுக்கு 

ஓட்டு எங்களுக்கு .....!!! "

1950 -54 ம் ஆண்டுகளில் என் சகோதரர் மணிமுத்தாறு அனைக்கட்டுமான திட்டத்தில்பணியாற்றிவந்தார் நாங்கள் வசித்த வீட்டிற்கு அருகில் தான் பிரும்மாண்டமான வொர்க் ஷாப் இருந்தது.அதில் ஃபோர்மான் ஆகபணியாற்றியவர்தான் சீதாராம ஐயர்.

பாளயங்கோட்டை திம்மராஜ புரத்தை செர்ந்தவர். குடும்பம் பாளையில் இருக்க அவர் ஒர்க்ஷாப் ஓரத்தில் தங்கிக் கொண்டார். இரவு ஒண்பது மணியானல் ஒரு கட்டிலில் அமர்ந்து கொண்டு பாடத்துவங்குவாற்.தியகராஜர் ராமர் மெல் பாடிய கீர்த்தனை . பின்னர் திவ்யபிரபந்தம். நாமாவளி. பஜனை பாடல்கள். தீப பிரதட்சண பாடல்கள் என்று இருக்கும்.

நெல்லைமாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து,பாபனாசம் வரை தமிரவர்ணிகரையிலுள்ள கொவில்கள் அத்துணையிலும் அவருடைய பாட்டு ஒலிக்கும். எந்த பஜனைகோஷ்டியானாலும் அவரைத்தான் கூப்பிடுவார்கள்.

அவருடைய பொதுப்பணி அதொடு முடிவடைந்து விடுவதில்லை. அணைக்கட்டில் நூற்றுக்கானக்கான கூலிகள் வேலை பார்க்கிறார்கள். குறிப்பாக செலம் மாகவட்டத்திலிருந்து"ஒட்டர்கள்" என்ற தெலுங்கு /கன்னட மொழி பெசும் மக்கள் அதிகம் உண்டு. 

இது தவிர கேரளத்திலிருந்து "மாப்ளாஸ்" என்று அழைக்கப்படும் இஸ்லாமிய தொழில் தெரிந்த் கூலிகளூம் உண்டு. 5 டன் 10 டன் பாறைகளைக்கூட கொஞ்சம்கூட சேதமில்லாமல் நூரு அடி உயரமானாலுக்,பள்ளமானாலும் தூக்கி செல்லும் தோழில் நுணுக்கம் தெரிந்தவர்கள். பத்து பத்து பேறாக "எத்திருமாலி ஐலி ஜாலா " என்று அவர்கள் கோஷம் போட்டுக்கொண்டு பாறைகளை தூக்கீச்செல்வது அற்புதமான காட்சியாகும்.

இந்த கூலிஜனங்களை ஓன்றுபடுத்தி சங்கம் அமைத்தவர் சீத்தாராம அய்யர். அந்த சங்கத்திற்கு தலைவராயிருந்தவர் முருகானந்தம் என்ற கம்யூணீஸ்ட். முருகானந்தமும், அய்யரும்மிகவும் நெருக்கம். அணைக்கட்டு பகுதிக்குள் முருகானந்தம் வரக்கூடாது என்று தடை போட்ட பொது

கூலி ஜனங்களை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்தவர் சீத்தாரம அய்யர்.

"நீர் கம்யுணிஸ்டா? "என்று கெட்ட பொது "ஆமாம்! அதுக்கு என்ன? "என்றுபதில்கேள்விகேட்டவரவர்.

"கோவில்,பஜனை,பாட்டு நு போரெறய்யா?"

ஓ! அதுவா! இந்த பயலுகளுக்கு ஒண்ணும் தெரியாது. எந்த கொவில்சாமிக்குஎன்ன பாடணும்னுகூட தரியாது.விவரம் கெட்டவங்க.ஆனா நல்லவங்க. நான் சொன்னா கேப்பானுங்க.இவங்க சொலறத் கெக்க ஒருகூடமிருக்கு.என்ன பண்ண.நான் சொல்ர ஆளுக்குஓட்டுபொடுவாங்க."என் பாட்டு அவங்களுக்கு .அவங்க ஓட்டு எங்களுக்கு . எனக்கு முருகானந்தம் ஜெயிச்சு எம்.பி ஆகணும்.அவ்வளவு தான்." என்று விளக்குவார்.

அணை கட்டி முடிந்து பிர்ம்மாண்டாமாக நிற்கிறது. ஆனால் அங்கு வேலை செய்த கூலிகள்?

பலரை வைகை திட்டத்திற்குஅனுப்ப ஏற்பாடுசெய்தார்.அவரை நெய்வேலிக்கு அனுப்பி விட்டார்கள்.நூற்றுக்கனக்கானவர்களை நெய்வேலிக்கு .அழைத்துச் சென்றார்.

சீததராமய்யருக்கு இலக்கியத்திலும் ஆர்வம் உண்டு. கூலி தொழிலாளர்களை ஒன்று படுத்திசங்கம் அமைக்க அவர் எடுத்த முயற்சிகளை நாவலாக எழுதினார். "நானா,நாமா " என்ற பெய்ரில் அந்த நாவல் "செம்மலரில்'தொடராக வந்தது. நெய்வேலி யில் பணியார்ரிய பிரகு ஓய்வு பெற்று சென்னையில் தங்கினார்."அணைக்கட்டிலிருந்து சுரங்கம்வரை" என்ற அவருடைய நாவலும் செம்மலரில் தொடராக வந்தது.

பின்னாளில் அவருடைய "நானா நாமா " நாவல் செம்மலர் ஆசிரியர்கே. முத்தையா அவர்கள் முன்னுரையுடன் நூலாக வந்தது.

த.மு எ.ச வின் மூத்த சென்னை தோழர்களூக்கு "ஜானகி காந்தன் " எனற எழுத்தாளரை தெரிந்திருக்கும். 

மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினரான தோழர் சீத்தராமன் தான் "ஜானகிகாந்தன் " என்பது தெரிந்திருக்காது...


Monday, October 26, 2015

(இது ஒரு மீள் பதிவு )தோழர் சீத்தாராமனும் ,
நானும்........!!!

 1975 ம் ஆண்டு வாக்கில் தொழார் சீத்தாராமனை சந்தித்தேன் ! மேற்கு வங்கத்தில் வாழ்ந்து வரும் தமிழர்! மார்க்சீய சிந்தனையாளர் ! மே.வங்கத்தில் தணிக்கை அதிகாரியாக அவருடைய உறவினர் பணியாற்றிவந்தார் !

தீக்கதிர் அலுவலகத்தில் தங்கினார் !அவரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றேன் ! நாங்கள் கோவில் வாசலை அடையும் பொது காலை 7 மணி இருக்கும் ! "நடையானை " கொண்டு பொய் வைக்க சென்றேன் ! தோழர் அதுவரை கோவில்வாசலிலேயெ நின்றார் !

"வாருங்கள் " என்று கூறி  கோவிலுக்குள் போக முயன்றேன் !

"இருங்கள் தோழர்" கோவில் வாசலில் நின்று கும்பிட்டு விட்டு போகிறவர்களை பார்த்துக்கொண்டு நின்றார் !

காய்கறி மார்க்கெட்டிலிருந்து கூடை நிறைய காய்கறியோடு ஒரு அம்மையார் கோவிலுக்கு நேர் நின்றார் ! "ஆத்தா! இன்னிக்கு படி அளந்துடு தாயே !" என்று வணங்கி விட்டு நடையான மாட்டிக் கொண்டு சென்றார் ! "நீ  தான  ஆத்தா ! வெயில கூடைய தூக்கிட்டு விக்க போற ! மினாட்சியா  அலையப் பொறா !" என்று நக்கலா சொன்னேன் ! அந்த அம்மா திரும்பவில்ல ! 20-25 கிலோ காய்கறி கூடைகனம் ! " எம்பொழப்பு ! அப்படி ! நல்ல இரு " என்று சொல்லிக்கொண்டே சென்றார் !

தொழார் சித்தாராமன் கிளம்பினார் ! நாங்கள் கொடிமரம் பக்கமாக நடந்தோம் ! பலிபீடத்தின் அருகில் தரையில் விழுந்து நமஸ்கரிப்பார்கள்

வயதான அம்மையார் தன மகளொடு விழுந்து வணங்கினார் ! " மீனாட்சி! லோக மாதா !  தகப்ப இல்லா பொண்ணு அம்மா ! சாய தோள்  இல்லை ! நீதான் ஒருவழி காட்டணும் ! " என்று இருகைகளையும் நீட்டி வேண்டிக் கொண்டார் !

அந்தப்பெண் கூனி குறுகி அருகில்நின்று கொண்டிருந்தார் ! இளப்பமாக பார்த்தேன் !

கோவிலுக்குள் சென்றோம் அப்போதெல்லாம் வரிசை,கிடையாது ! மள மள வென்று படியேறி உள்ளெ சென்றோம் !  சொக்கநாதர் கோவிலையும் பார்த்தோம் !

வயதான பெரியவர் அமர்ந்திருந்தார் ! அவர்    அருகில்  அவர் மனைவி   கண்பார்வை  அற்றவர் ! சீத்தராமன் அவர் அருகில் சென்றார் ! தன பையிலிருந்து நூறு ரூபாய் தாள எடுத்து அந்த பெரியவர் கையில்கொடுத்தார் ! பெரியவர் நிமிர்ந்து பார்த்தார் ! அவர் வாய் கோணியது ! வாங்கிக் கொண்டார் !

நாங்கள் அம்மன் கோவில் வழியாக திரும்பினோம் ! "கொஞ்சம் உக்கருவோமெ " என்றார் ! தூண்  ஓரமாக உக்கார்ந்தோம் !

"நீங்கள் அந்த பெரியவருக்கு நுறு ரூ கொடுத்திருக்கக் கூடாது ! "

"ஏன்?"

"நாமே நம் சகமனிதர்களை பிச்சைக்காரர்களாக்குகிறோம் "

"நாம் கொடுக்கவில்ல என்றால் யார் கொடுப்பார்கள் ? "

"சொக்கநாதன் தயவில் தன நூறு  ரூ  கிடைத்ததாக நினைப்பார் !"

"நினைக்கட்டுமே "

"அது மூடத்தனம் இல்லையா ?"

"எது ?காய்கறி விற்கும் அம்மையாருக்கு பிழைக்க வழி செய்ய மாட்டோம் ! முதிர்கன்னியாய்  வைத்துக்கொண்டு தன்னந்தனியாக வாழும் பெண்ணிருக்கு பாது காப்பு கொடுக்க மாட்டோம் ! கண் புறை நோயாளிக்கு மருத்துவம் கிடையாது ! ஏதுமற்ற நிலையில் அவர்கள் கோவிலை நாடினால் அது மூட நமபிக்கையா ? "

தோழர் சீத்தராமன் எனக்கு எதையோ புரிய வைக்க முயல்கிறார் !

"இந்த பாவப்பட்ட மக்கள் நம்பின்னால் நிற்க வேண்டியவர்கள் ! அவர்களை தேவை இல்லாமல் வெறுக்கிறோம் ! மற்றவர்களிடம் தள்ளி விடுகிறோம் !கோவிலுக்கு போவது மட்டும் ஆத்திகம் அல்ல ! போகாதவர்கள் எல்லாம் நாத்திகர்களல்ல ! கோடிக்கணக்கான மக்கள் இந்த நாட்டில் ஆத்திகர்கள் ! அவர்களை என்று நம்பக்கம் கொண்டுவரப்போகிறோம் !"

சீத்தாரமன் புறப்பட்டார் !

Sunday, October 25, 2015

தீண்டாமையை  எதிர்த்த முதல் போராளி 

ஏசு பிரான் அவர்களே ..............!!!

 மிகவும் கொடுரமான முறையில் தீண்டாமையை அமல் படுத்தியவர்கள் யூதர்கள்.. சுமேரியர்கள் என்ற அந்த பகுதி மக்களை அவர்கள் ஒதுக்கி,ஒடுக்கி வைத்திருந்த வரலாறு படிக்க படிக்க நெஞ்சம் பதறும்.

சுமேரியர்கள் கண்ணால் பார்த்தாலே "தீட்டு" என்றார்கள். அதனால் அவர்கள் மலைக்குகைகளிலும் , பாறைகளுக்கு இடையே உள்ள பள்ளங்களிலும் வசிக்க வேண்டும் என்று உத்திடவிட்டனர். பொது வெளியில் அவர்கள் வரக்கூடாது . அப்படியே வந்தாலும் துணியால் அவர்கள் பார்வை படாமல் மறைத்துக் கொண்டு வரவேண்டும். அவர்களுக்கு வாழ்வாதாரமான உரிமை எதுவும் கிடையாது. நோய்,பிணி எதுவானாலும் மருத்துவம் அவர்களுக்கு கிடையாது..

யூதர்களின் கொவில்புசாரிகள் சொன்னது தான் சட்டம்..ஏழை எளிய மக்களிடம் இறைவன் பெயரை  சொல்லி அநியாய வரியினை வசூலிப்பார்கள்.

இந்த கொடுமைகளைக் கண்டு வெகுண்டு எழுந்தவர் ஏசுபிரான்..கூன்,குருடு,நொண்டி,மற்றும் முடியாத வயோதிகர்களை பாதுகாப்பது முக்கியம் என்றார் அவர் நோயிலும் பிணியிலும் செத்துக்கொண்டிருந்த மனிதர்களுக்கு செவகம் செய்வது தான் இறை வழிபாடு என்றார்.

இதனை பிரச்சாரம் சேய்து வந்தார்.ஏழைமக்கள் அவர்பால் ஈர்க்கப்பட்டனர்.
பூசாரிகள் சொல்வதை விட ஏசு சொல்வதையே   மக்கள்  கேட்க ஆரம்பித்தனர்.

பூசாரிகள் அநியாயமாக வரி கேட்பதை ஏசு பிரான் எதிர்த்தார்.
"அரசனுக்குகொடுக்கவேண்டியதை அரசனுக்கு கொடு . ராயனுக்கு கொடுக்கவேண்டியதைராயனுக்கு கொடு " என்று உபதேசித்தார்.

ஊர்  ஊராகச் சென்று பிரச்சாரம் செய்தார். 

போகும் வழியில் மிகவும் தாகமாக இருந்தது. எதிரே தண்ணிர் குடத்துடன் வந்த சுமேரியப் பெண்ணிடம் குடிநீர் கேட்டார். அவள் பயந்து "நீ யூதன்.என்கையால்  நீர் அருந்தினால் என்னை கொன்றுவிடுவார்கள் "என்றார்.
"உன்னை நான் காப்பாற்றுகிறேன் " என்ற ஏசுபிரான் அவள் கொடுத்த  நீரை  பருகினார்.   இந்த செய்தியை கேட்ட புசாரிகள் கோபம் அதிகரித்தது.

அவர் தன பிரச்சாரத்தையும் ,பயணத்தையும் தொடர்ந்தார்.

சுமேரியர்களின் குடியிருப்புவழி  யாக செல்லநேர்ந்தது. சுமேரியப்பேண் ஒருவர் நோய்வாய்பட்ட தன பத்து வயது மகளோடு காத்திருந்தாள் " ஏசு பிரானே ! என் மகளுக்கு கடுமையான காய்ச்சல். நான் உங்களிடம் மருந்துகொடுக்கும்படி யாசிக்கிறேன்..இதற்காக என்னை கொன்றுவிடுவார்கள். மருந்துகொடுங்கள். நான் சாகிறேன் என்மகளுக்காக . அவள் பிழைத்து எழட்டும் " என்று கதறினாள் .".

அவள்குடிசையில்தங்கி அவள்மகளுக்குமருந்திட்டு குணப்படித்தினார் ஏசு பிரான்.

சிஷ்யர்கள் தடுத்துப் பார்த்தனர்" அவள் சுமேரியப்   பெண். தீண்டத்தகாதவள் " என்றனர் .

"இந்த பூமியில்  பிறந்த உயிர்கள் அனைத்தும் சமம். அதில் மேலோர்,கீழோர்  ,தீண்டத்தகோதோர் என்று இல்லை ' என்றார் ஏசுபிரான்.

ஏசு பிரானை சிலுவையில் அறைந்தத்ற்கான காரணங்களில் ஒன்று அவர் தீண்டாமையை    ஒழித்ததும்தான்


(பி.கு . நல்ல காலம். அப்போது தமிழக பகுத்தறிவாளர்கள் யாரும் ஏசுபிரான் அருகில் இல்லை. இருந்திருந்தால்," பார்ப்பனீயம்,மனுநீதி" என்று  கூறி  ஏசுவையே  குழப்பி தீண்டாமையை நீடிக்கச் செய்திருப்பார்கள் .முற்போக்காளர்கள் என்னை மன்னித்தருள வேண்டுகிறேன்..) 
 Saturday, October 24, 2015

"Ilaco building vigil "
"இலாகோ கட்டிட பாதுகாப்பும் "

எல்.ஐ.சி சங்க ஊழியர்களூம்......!!!மதிப்பிற்குறிய எஸ்.எ .பி அவ்ர்கள் மேற்கு வங்கத்தில் நடந்த "துர்கா பூஜை " பற்றியும் அதனை மக்களை சந்திக்க மார்க்சிஸ்ட் கட்சி  பயன் படுத்திக்கொண்டதையும் பற்றி அழகாக குறிப்பிட்டிருந்தார்கள்.

எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைமை  கணிணியை எதிர்த்த போராட்டத்தில் இதெ யுக்தியை பயன்படுத்தியது நினவு  தட்டியது.

60 ம் ஆண்டுகளின்  முற்பகுதியில் எல்.ஐ.சி   நிர்வாகம்  "மறு சீரமைப்பு "            -reorganization  என்ற திட்டத்தை கொண்டுவந்தது . அதன் நோக்கம் எல்.ஐ.சி யை பிரித்து கணிணியை புகுத்துவதாகும். ஊழியர்களுக்கோ சங்கத்திற்கோ தெரிவிக்காமல் ரகசியமாக  ஆரம்பித்தார்கள்

1965ம் ஆண்டு பாகிஸ்தான்"கட்ச் "தீவு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்தது.இந்தியா இதற்கு சரியான பதிலடி கொடுத்ததுபாகிஸ்தான் ராணுவத்தை விரட்டி அடித்து,"லாகூருக்கு "  சிலகிஂமி வரை பிடித்துக் கொண்டது> உக்கிரமா னா சண்டையில் பாகிஸ்தான் எதையும் செய்யும் ! அதனிடம் அமெரிக்க கொடுத்தf 16 ரக விமானங்களிருப்பதால் இந்திய நகரங்களை  தாக்கும் என்று ராணுவம் கருதியது.

குறிப்பாக பம்பாய் நகரம் தாக்கப்படலாம் என்று கருதியது. அதனால் இரவு முழுவதும் black out பண்ண முடிவு செய்யப்பட்டது தெருத்தெருவாக  விடுகளிலும்  ,தெருக்களிலும் விளக்குகள் எரியாமல் பார்க்க தோண்டர்கள் நியமிக்கப்பட்டனர் நகரமே இரவு நேரத்தில் கறுப்புத்திரை போர்த்தியதுபோலானது.

மனச்சாட்சியற்ற ஏல ஐ சி நிர்வாகம் தன்னுடைய "கணினி 'மயமாக்கும் திட்டத்தை இந்த நேரத்தில் நிறைவேற்ற முடிவு செய்ததுஅரசாங்கத்தின் உதவியோடு இரவோடு இரவாக கணினியை மத்திய அ லுவலகத்தில் நிறுவியது  .

ஏற்கனவே ஒன்று வந்து விட்டதால் ஊழியர்களின் எதிர்ப்பு கூர்மழுங்கிவிடும் 
என்று கருதி மாற்றொன்றை  கல்கத்தாவில் நிறுவ திட்டமிட்டது.
 
இது பற்றி மத்திய அரசோடு நடந்த பேச்சு வார்த்தையில் அப்போது இருந்த chairman   M .R . Bide என்பவர்   computer is on the high seas . it will  be installed in ilaco building No power can stop it " என்று கொக்கரித்தார்.

லக்ஷ்மி இன்சூரன்ஸ் கட்டிடமாகிய " இலாகோ "  நாலாவது மாடியில் வைக்க முடிவாகியது. அதன மேலே கொண்டு போக அந்த கட்டிடத்தின் அருகில் இருந்த முட்டு சந்தில்ஹைடிராலிக் இயந்திரத்தை நிறுவி னார்கள்.

சங்கத்தலமை நிலைமையை விவாதிதது..  முட்டுச் சநதில் அருகில உள்ள மக்களின் உதவியோடு அந்த கட்டிடத்தினை  ஒட்டி " துர்க்கை அம்மன் சிலையை " வைத்து  பந்தல் போட்டு துர்கா பூஜையை கொண்டாடியது> பூஜை ஒருமாத காலம் நடக்கும் என்றும் அறிவித்தது.

இரவு நேரங்களில் பாதுகாப்பு அளிக்க ஊழியர்கள் முறைவைத்து பந்தளில் படுக்க ஏற்பாடு செய்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக தினம் ஒரு அரசியல்தலைவர் பூஜையை பார்க்க வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. 

அப்போது முதலமைச்சராயிருந்த  அஜாய் குமார்  முகர்ஜி வந்தார்.
துணை முதல்வராயிருந்த "ஜோதிபாசு வந்தார் . தினம் ஒரு அமைச்சர் கலந்து கொண்டதால் நிர்வாகத்தால் எதுவும் செய்யமுடியவில்லை.

அப்போது தோழர் பி ராமமூர்த்தி அவர்களை பம்பாய்  அழைத்து  சென்ற    நிர்வாகம் நிறுவிய கம்யூட்டரைக்காட்டி   சங்கத்தை ஏற்றுக்கொள்ளும் படி   ஆலோசனை கூரும் படி கேட்டுக் கொண்டது .அவர் சங்கத்தோடு நீங்கள் பேசுங்களேன் என்று கூறிவிட்டார்.

கப்பலில் வந்து இறங்கிய பிரும்மாண்டமான கணிணி Fort william  கோட்டையில் துருப்பிடிக ஆரம்பிக்க எல்.ஐ.சி நிர்வாகம் அதனை கப்பல்படைக்கு விற்றது.

அன்று 40000 உழியர்கள் நடத்திய  போராட்டத்தால் இன்று  ஒருலட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களை கொண்டுள்ளது எல்>ஐ>சி>

ilaaco vigil என்பது வரலாறாகியது.


 Thursday, October 22, 2015

என்னைப  பொறுத்தவரை (சிவாஜியைவிட ) 

எம்.ஜி.ஆர்  தான் நடிப்பில் சிறந்தவர் ........!!!

நடிகர் சங்கம் பற்றிய எனது பதிவிற்குப்பிறகு  தமிழ்நாட்டிலிருந்து ஏகப்பட்ட கோபக்குரல்கள் தோலை பேசி மூலம்!

எம்.ஜி.ஆர் படத்தையே பார்க்காமல் அவர்தான் சிலாஜியைவிட சிறந்த நடிகர் என்று சொல்ல உனக்கு எவ்வளவு துணிச்சல் ? என்று கொதித்து விட்டார்கள்.

விஞ்ஞான பூர்வமாக  நடிப்பை வகைப்படுத்தினால் எம்.ஜி ஆர் தான் சிறப்பு என்பது.புலப்படும். நான் எம்.ஜி ஆர் படங்களையே பார்த்ததில்லை என்பது சரியல்ல.. 62 ம் ஆண்டுக்கு பிறகு பார்த்ததில்லை. அதற்குமுன்னால் பார்த்திருக்கிறேன்.

"நாம் "   என்றொரு படம். முகம்கோரமாகி  கண்ணடித்துண்டுகளீல் பார்த்துகதறுவார் . அற்புதமான சித்தரிப்பு..

"தாய்  மகளுக்கு கட்டிய தாலி " என்றொரு படம். அதில் ஜமுனா என்பவர் நடித்திருப்பார். அவர் இறந்து விட்டார் என்று கருதி கதறுவார். அந்த பெண்ணின் பெயர் "காவேரி.".  கிட்டத்தட்ட 17 முறை " காஆஅவேரி' ' கவிரி"
"கா.வே...ரி "  என்று கதறுவார் ஒவ்வொரு முறையும் ஒரு modulation ' அற்புதமாக இருக்கும்.
"அந்தமான் கைதி " என்தங்கை "ஜெனோவா " இவையெல்லாம் அவருடைய நடிப்புத் திறமையை வெளிக்காட்டிய திரைப்படங்கள்.

பக்ஷிராஜாவின்" மலைக்கள்ளன்" என்ற படம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கம். அன்றைய மிகப்பெரிய   இயக்குனர். உங்களுடைய அடுக்கு மொழி வசனத்தை தூக்கி எறிந்து விட்டு யதார்த்தமான பேச்சு மொழியில் எழுதுங்கள் என்று கூறி  கருணாநிதியை வசனம் எழுதச்சொன்னார். கருணாநிதிக்கும்.எம்.ஜி ஆருக்கும் புகழ் சேர்த்தபடம்.  இந்தியில் நடித்த திலிப் குமார் அசந்த படம்.

நடிப்பு என்பது பாத்திரமாக மாறுவதல்ல. பார்வையாளனுக்கு நான் பாத்திரமல்ல . நான் பாத்திரம் போல நடிக்கிறேன். என்ற பிரக்ஞையை .உறவாக்குவது தான் நடிப்பு.

பல உதாரணங்களைச் சொல்லலாம். அலுவலகங்களில், சிறு நிகழ்ச்சிகளில் நண்பர்கள்  mimicry செய்வார்கள். ரஜினி"போல செய்வார்கள். கமல் போல, பாலையா போல செய்வார்கள்.

மேடையில் நண்பர் மட்டுமே இருப்பார்>ரஜனி இருக்க மாட்டார்.ரஜனி "போல "
கைகால் அசைவு,குரல் என்று இருக்கும். அது நண்பர்தான் என்பது நம் உள்ளுணர்வு சொல்லும். அடுத்தவினாடி பாலையாவாக செய்து காட்டுவார்>அங்குபாலையா இல்லை என்று தெரிந்து நாம் ரசிப்போம் அது தான் நடிப்பு.

இதே போன்ற நடிப்பை நாம் ஜெமினியிடம் பார்க்கலாம்.ஆண்டனி என்ற கிறீஸ்துவப்பையன் . பல பெயர்களில் பிராடு வேலைகளை ச் செய்து வாழ்வான். இவை அத்துணையாகவும்  நடித்து "நான் அவனில்லை" என்பார் ஜெமினி கணேஷ். அதுதான் நடிப்பு.

பாத்திரமாகவே மாறி,நம்மையும் பாத்திரத்தின் உணர்வுகளுக்குள் அமிழ்த்தி melodrama பண்ணுவது நடிப்பு அல்ல>


மீண்டும் சொல்கிறேன்.!

சிறந்த நடிப்புக்கு சொந்தக்காரர் எம்.ஜி.ஆர் தான்.

Tuesday, October 20, 2015

"நடிகர் சங்கத்தில் உறுப்பினராக 

நான் இருந்தேன் ....."

1962ம் அண்டு ஹைதிராபாத்திலிருந்து நான் மதுரைக்கு மாற்றலாகி வந்தேன்.  1960 அல்லது  1961 ஆக இருக்கலாம் .மதிப்பிற்குறிய எம்.ஜி ஆர்  அவர்கள்  படப்பிடிப்புக்காக ஹைதிராபாத் வந்திருந்தார்கள்.

நடராஜ் என்பவர் தயாரிப்பாளர் .படத்தின் பெயர் நினைவிலில்லை. அதில் வைஜயந்தி மாலா அம்மையார் நடித்ததாக நினைவு. .

அப்போது ஹைதிராபாத்தில் south indian       cultural association  என்ற அமைப்புஇருந்தது  திவான் பகதூர் ஆரவாமுத அய்யங்கார், ஜஸ்டிஸ் சீனிவாசன்  போன்றோர் தலைவர்களாக இருந்து வநத காலம். என்னை மாதிரி பொடியன்கள் அதன் செய்ல்வீரரகள்.

எழுத்தாளர்கள் தி.ச.ராஜு ,சுபஸ்ரீ போன்றவர்கள் எங்கள வழிநடத்தினார்கள். சேங்காலிபு ரம்,பாலகிரு ஷ்ன சாஸ்திரிகள் என்று இருந்த  சங்கத்தை, நல்லபாடகர்கள், நாடகங்கள் ஆகியவற்றை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரினோம்.சங்கத்தின் உட்கிளையாக பாரதி அரங்கம் தோன்றியது. 

ரயில்வேயில் வேலை பார்க்கும் ராஜாமணி, தொலைபேசி நிறுவனத்தில் வேலை   பார்த்த ராமமூர்த்தி, ,நெல்லை  ஆறுமுகம் என்று ஒரு ஜமா சேர்ந்து எம்.ஜி.ஆர்  அவர்களை பார்க்க சென்றோம்.

சரோஜினி சாலைக்கு எதிர்புரம் உள்ள குதிரைப் பந்தய மைதான கரையில் இருந்த பெரிய விடுதியில் அவர்தங்கீருந்தார். இரவு எட்டு மனக்கு மேல்  சென்று சந்தித்தோம்.

"என்ன தேஜஸ். எழுமிச்சம்பழ கலர்  உடம்பு தங்கமாக ஜொலிக்கிறது.  கடகட வென்ற சிரிப்பொலி யோடு அவர் எங்களை வரவேற்றார். அந்த ஹோட்டலில் குடிக்க தனியாக ஏற்பாடு உண்டுகுடியின் கேடு பற்றி  எங்களுக்கு எடுத்துச் சொன்னார்..எங்களுக்கு அவர் பேச பேச உற்சாகம் .எங்கள் நண்பர் ஒருவர் அந்த உற்சாகத்தில், "நீங்க  வந்திருப்பது தெரியாது. முன்னமேயெதெருந்திருந்தால் ஓர் வரவேற்பு ஏற்பாடு செய்திருப்போம்" என்று கூறினார் அதனால் என்ன ? நீங்கள் ஏற்ப்பாடுசெய்யுங்கள் . நான் மூன்று    நாளிருப்பேன்  நான் வருகிறன்" 'என்றார். 

பெரியவர்களை கலந்துகொண்டு அவ்ர்களின் வேண்டா வெறுப்ப வாங்கிக்கட்டிக்கொண்டு  பஷீர் பாக்ருகில் உள்ள உருது  கல்லூரி ஹாலில் வரவேபு நகழ்ச்சியை நடத்தினோம்..

IA AND A S பரீட்சையில் தேர்வு பெற்று உதவி தணிக்கை அதிகாரியாக  இருந்த இளைஞர் சீனிவாசன் தலைமையில் நடந்தது.

நடிப்பு பற்றி எம்.ஜி.ஆர் அவர்கள் அருமையான சொற்பொழிவு ஆற்றினார். குறிப்பாக நடிகனு ம் பாத்திரமும்  அன்னியமாகி நிற்கவேண்டும் என்பது பற்றி alieanation  theory  பற்றி விளக்கினார் . மதராசில் உள்ள நடிகர் சங்கம் பற்றிகுறிப்பிட்டார் . நீங்கள்  நாடகம் போடுவதாக கூறினார்கள்.நீங்களும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகலாம் . நடிகன் குரல்  என்று பத்திரிக்கை நடத்துகிறோம்.அதிலும் சந்தாதாரராக ஆகுங்கள் என்று கேட்டுக் கொண்டார்

இறுதியில் எங்கள் அமைப்புக்கு 10,000 ரூ நன்கொடை அனுப்புவதாகவும் சொன்னார்.

நாங்கள் உறுப்பினரானோம். நடிகன் குரல் சந்தாதாரரானோம். " வரவேற்றுப் க்கு 300 ரூ தண்டம் நு சொன்னவங்கலீடம் பத்தாயிரம் வரட்டும்டா உங்க முஞ்சியில 300 ஒவாயை எரீயிறோம் என்று பேசினோம்.

இரண்டு மாதங்களாயிற்று. பணம் வரவில்லை . சென்னை சென்று பார்த்தேன்.அவரைப் பார்க்க முடியவில்லை. உள்ளேயே வட வில்லை.

அப்போதெல்லாம் அம்பாசடர் காருக்கு 50காசு மினிமம்..பெபிடாக்சி என்பார்கள் .அதற்கு 25 காசு  மிநிமம். உள்ளே போகமுடிந்தது . பயில்வான் மாதிரி ஒருவர் அமர்ந்திர்ந்தார் அதெல்லாம் பார்க்க முடியாது என்று கூறிவிட்டார்> நான் திரும்பினேன. அப்போது ஒரு  ஸ்டான்ட நடிகர் என்னிடம்   வந்தார் .
"தம்பி ! தலைவர் அப்படித்தான் சோல்வார் அதுக்காக எடுத்து கொடுப்பாங்களா? இதுக்கு போயி இம்பிட்டு துரம் வருவாங்காளா .பாத்து போழை ச்சிக்கிடுங்க தம்பி" என்றார்

நொந்து நூலாகி  ஹைதிராபாத் வந்தேன். அலுவலகத்தில் எனக்கு மதுரை மாற்றல் உத்திரவு வந்திருப்பதாக சொன்னார்கள். முச்சு விடாமல் மதுரை கிளம்பிவிட்டேன்.

மற்றவர்கள் 300 ரூ கேட்டால்.?

அதன் பிறகு 28 வருடம் ஹதிராபாத்  பக்கமே தலைவைத்து படுக்கவி ல்லை.

1962க்கு பிறகு எம்.ஜி.ஆர் படமே பார்த்ததும் இல்லை.

Saturday, October 17, 2015

"சு.வே . மீது கொலை வழக்கு "

பத்து ஆண்டுகள் அலைந்தார் ......!!!


திருப்பரம் குன்றத்தில் கார்த்திகை  தீபம் ஏற்றுவது வழக்கம்.அதில் இந்துமுன்னணியினர் சண்டி த்தனம் செய்வது வழக்கம். அவர்களுடைய நோக்கம் தீபம் அல்ல. மலையின் மேல் இறக்கும் "சிக்கந்தர் தர்க்கா " வினை அகற்ற வேண்டும். 

இதனை தடுத்து நிறுத்தியவர் சு.வேங்கடேசன். எழுத்தாளர்களையும்  கலைஞர்களையும் இணைத்து இந்த போராட்டத்தினை நடத்தினார்.
கோபங்கொண்ட எதிரிகள் வெங்கடேசனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். 

அவரை பாதுகாப்பாக வைக்க வேண்டிய நிலை .பல தோழர்கள்  பொறுப்பேற்க முன் வந்தனர். மதுரை எல்.ஐ.சி ஊழியர் குடியிருப்பில் என் வீட்டி தங்க நான் யோசனை கூறினேன்.  வேறு இடத்தில் பத்து பதினைந்து நாட்கள்வரை பாதுகாப்பாக வைத்திருந்தனர்.ஆனா இந்து முன்னணியினர் விடவில்லை. தங்களை  தாக்கி  கொலை செய்யமுயன்றதாக வழக்கு தொடுத்தானர்.பத்து பேரை கொலை செய்ய முயன்றதாக வழக்கு .

பத்து ஆண்டுகள் சு.வெங்கடேசன்  கோர்ட்டுக்கும்,போலீஸ் நிலையத்திற்கும் நடந்தார்.      

தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர் சங்கம் தண்ணிர் மட்டும் விட்டு வளர்க்கப்படவில்லை தோழர்களே !!!

Thursday, October 15, 2015

"மலரும் சருகும் "

 செல்வராஜ் ....!!!எழுபதாம் ஆண்டுகளில் நவீனதமிழ் இலக்கியத்தில் சொசலிச யதார்த்தவாத படைப்புகள் என்றால் அது என்போன்றோர்களுக்கு  "மலரும் சருகும் " மற்றும் "பஞ்சும் பசியும்" ஆகிய படைப்புகளிலிருந்து ஆரம்பமாகிறது.
அப்போதெல்லாம்  செல்வராஜ் என்றால் எங்களுக்கு தெரியாது. "மலரும் சருகும் செல்வராஜ் என்றால் தான் அடையாளப்படுத்துவோம்.

அதுமட்டுமல்ல.தலித்துகளை மையமாக முதன் முதலில்  வைத்து படைத்தவர்  . செல்வராஜ்தான் .

வானம் பார்த்த பூமியான கயத்தாறு பகுதியில் வாழ்ந்து செத்துக்கொண்டிருந்த அந்த தலித்  மக்களை ஏமாற்றி மேற்கு மலைதேயிலை தோட்ட கூலி களாக்கிய காலத்தை , தோட்டத்தோழிலாளர்களின் பாடுகளை அவர்களில் ஒருவராக இருந்து பார்த்தவர் செல்வராஜ். அதனை 70ம் ஆண்டுகளில்"தேநீர் " என்ற ஒப்பற்ற நாவலாக எழுதியாரும் செல்வராஜ்தான்.

டாக்டர் கனகசபாபதியும்.டாக்டர் சிவத்தம்பியும்  மிகவும் பாராட்டிய படைப்புகள் ஆகும் அவை..

செல்வராஜ் எழுதிய நாடகங்களும் முக்கியமானவைகளாகும். ரயில்வே தொழிலாளர்களின் மாநாடு திருச்சி பொன்மலையில் நடந்தது (60 களில்) .
அதில் அவர் எழுதிய நாடகம் " பாட்டுமுடியு முன்னே "   இன்றும் பேசப்படும் ஒன்றாகும்..இடது சாரிகளின் நாடகங்கள்ளில்   அப்போதேல்லாம் திரைப்பட நடிகர்கள் டி கே பாலசந்தர்,என்.என்.கண்ணப்பா, விராச்சாமி ,பிரபாகர்,காந்திமதி ஆகியோர் நடிப்பார்கள்.

அவருடைய "யுக சங்கமம் " என்ற நாடகமும் முக்கியமானதாகும். சமிபத்தில் அவரோடு தொலைபேசியில் உரையாடியபோது அது  பற்றி மிகவும்பரவசத்தொடு நினைவு கூர்ந்தார் .

"சென்னை மியுசியம் அரங்கில் அரங்கேற்றம் . எஸ்.வி .சகஸ்ரநாமம், டி கே.சண்முகம் . சௌந்தரா கைலாசம் ஆகியோர் வந்திருந்தனர். நாடகம் முடிந்ததும் டிகே எஸ் மேடைக்கு ஓடிவந்து என்னை கட்டிதழுவிக்கொண்டார். சங்கித நாடக அகடமியின் விருதினை பலத்த எதிர்பிக்கிடையில் நான் ஒரு இடதுசாரி என்று தெரிந்தும் சௌந்தரா கைலாசம் அளித்தார் நாடகத்தில் கதா  நாயகனாக  என்.என்கன்னப்பா நடித்தார் கதாநாயகியாக தமிசகத்தின்மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி அவர்களின் துணைவியார் தர்மாம்பாள் என்ற ராஜாத்தி அவர்கள் நடித்தார்கள் "   என்றார் செல்வராஜ்.

திண்டுக்கல் நகரில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதிகம். பாதுகாப்பற்ற தொழிற் சூழலில் தலித் மக்கள் அதில் உழைத்து வந்தனர்.அவர்களை ஒன்றுபடுத்தி அவர்களுக்கு ஒரு சங்கம் அமைக்க இரண்டு பேர் வந்தனர்அவர்களுடனேயே தங்கி உண்டு உறங்கி அவர்களை தைரியப்படுத்தி சங்கம் அமைத்தவர் வக்கீல் எ பாலசப்பிரமணியம் ஆவார்
பின் நாளில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகவும் ,அரசியல் தலைக்குழு உறுப்பினராகவும் உயர்ந்தவர்.

மற்றோருவர் மதன  கோபால் என்ற இளைஞர் . அன்றைய காங்கிரஸ் அரசு மதன கோபாலை கைது செய்து, வாயில் செருப்பை கொடுத்து அடித்து தெருதெருவாக இழுத்துச்சென்றதை பெரியவர்கள் இன்றும் நினைவு கூறுவார்கள்.

இந்த இருவரையும் கதாநாயகனாக்கி செல்வராஜ் எழுதிய நாவல் தான் "தோல் " என்ற படைப்பாகும். சாகித்திய அகாதமி இதற்க விருது அளிக்க அதனை ஏற்றுக்கொண்டு செல்வராஜ்  அகதமிக்கு பெருமை சேர்த்தார். 


சாகித்திய அகாதமி விருதினை கர்நாடக எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு  கண்டனமாக பல எழுத்தாளர்கள் திருப்பி கொடுத்து வருகிறார்கள்.  
 இந்த எதிர்ப்பாளர்கள்  பக்கம் நாம் நிற்போம்.

அதே  சமயம் தமிகத்திலிருந்து  அகாதமி விருது பெற்றவர்கள் எவரும் இப்படி செய்வில்லையே என்று அவர்களை தூற்றாமலிருப்போம்.

அவர்கள்  "பஞ்சமாபாதகங்கள் " எதையும் செய்து விடவில்லை என்பதால்.

Tuesday, October 13, 2015

மனிதாபிமானத்திலிருந்து , புரட்சி வரை ,

பத்து அம்ச கொள்கை உண்டு த.மு.எ.ச.  வுக்கு....!!!
எந்த ஆண்டு என்பதுநினைவில் இல்லை ,முப்பது ஆண்டுகள் இருக்கலாம். சாத்தூரில் நடந்தது. சாராய வியாபாரிகளிடையே நடந்த சண்டையை சாதிச்சண்டையாக்கினார்கள்.

 மேல் சாதி இந்துவும்,தலித்தும் கந்தக பூமியில் கறுப்பாகத்தானே இருப்பார்கள். வெட்டி சாய்த்துக் கொண்டார்கள். நகரம் ரணகளமாகியது. சுத்து பட்டு கிராமங்களிலும் சிக்கல் . விருது நகருக்கு தெற்கே தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து நின்றுவிட்டது. முன்று நாட்கள் கேள்வி கேட்க நாதி இல்லை.

பஸ் நிலையத்தில் கட்சிக்கொடிகள்  பறக்கத்தான் செய்தன.

அந்த இரண்டு இளைஞர்களும் இந்த மரண அமைதியை சகிக்க தயாராக இல்லை. 

ஐந்து வயதிலிருந்து பதினந்து வயதுள்ள பள்ளி மாணவ்ர்களை திரட்டினார்கள்.
"உயிரைப் பறிக்கத் தெரிந்த பெரியோர்களே, உயிரை கொடுக்க முடியுமா உங்களால்" "வாருங்கள் ! சாத்தூரை அமைதி பூங்காவாக மாற்றுவோம் " என்று பதாகைகளை ஏந்தி குரலேழுப்பிக்கொண்டு ஊர்வலமாக வந்தார்கள். அவ்களுக்குப் பின்னால் அந்த குழ்ந்தை களின் பெற்றோர்கள்  வந்தார்கள். 

அந்த இளைஞர்கள் பெயர் "மாதவராஜ், காமராஜ். " இருவரும் எங்கள் த.மு.எ.ச.வின் கிளை செயல் வீரர்கள்.

மதுரையிலிருந்து தேனி மாவட்டம் பிரியாத காலம் அது. மதுரை மாவட்ட மாநாடு தேனீ நகரத்தில் அந்த மேட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது . இரண்டுநாள் மாநாடு. முதல் நாள் இரவே சாதிக் கலவரம் ஆரம்பமாகிவிட்டது.மாநாட்டு மண்டபத்திலேயே போலீஸ் தங்க  வேண்டிய நிலை.அமைதிப் பேச்சுவார்த்தையில் கே.முத்தையா அவர்கள் கலந்து கொண்டார்கள். இரண்டாம் நாள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் செல்ல முடியவில்லை பஸ் போக்குவரத்து நின்றுவிட்டது.

ஏற்பாட்டாளர்கள் செய்வதறியாமல் தீகைத்தார்கள்.  200 பேருக்கு உணவுதங்குமிடம் வேணுமே. தேனியிலிருந்து செல்ல வழியில்லை. பெரியகுளம் பகுதியிலிருந்து ஒண்றிரண்டு பஸ் கள்  போவதாக செய்திகள் வந்தன
 பெரியகுளம் போக வழியில்லை. வழியிலும் கலவரம் நடக்கிறது. எழுத்தாளர்களும் கலைஞர்களும் கூடி முடிவெடுத்தார்கள். வந்திரந்த சார்பாளர்கள்,பார்வையாளகள் ,நண்பர்கள்  எல்லாரும் கலவரப்பகுதி வழியாக அமைதி ஊர் வலமாகச் செல்வது என்பதுதான்  முடிவு.

அந்த குன்றின் சரிவுகள் வழியாக 200 பேரும் கைகோர்த்து நடந்தார்கள்.

அவ்ர்கள் வாயிலிருந்து  "we shall  overcome "  "வேற்றி பெருவோம் நாம் " என்ற பாடல் மலைமுகடுகளில் எதிரொலிக்க  கம்பிரமாக நடந்தார்கள்.


த.மு.எ.சங்கம் அவசர நிலையில் செயல்படும் சங்கமும் தான்.

Sunday, October 11, 2015

(தீக்கதிர்(12-10-15) பத்திரிகையில்  இலக்கிய சோலையில் வந்த கட்டுரை

 

நிஜ நாடகமும் 

நானும...........!!!

மதுரையில்" ஃபென்னர் -காகில் "என்று ஒரு கம்பெனி இருந்தது. பிரும்மாண்ட மான இயந்திரங்களின் சக்கரங்களை இயங்கச்ச்செய்யும் உறுதியான பெல்ட்டுகளை தயாரிக்கும் தொழிற்சாலையாகும் அது.மதுரை மில் நிர்வாகதோடுஇனைந்து செயல்பட்டு வந்தது.

அதன் தோழிலாளர்களின் சங்கத்தலைவர்களில்

ஒருவர் தான்  தோழர் எம்.பி.ராமச்சந்திரன் . கலை இலக்கியதுறையில் ஆர்வம் உள்ளவர். நன்றாகப்படுவார். நடிப்பார். நாடகங்களை நடத்துவார். ஏழை எளிய மக்களின் துன்ப துயங்களை சிறு,குறு நாடகங்களாகப் போடுவார். கூட்டங்கள் ஆரபிக்குமுன், மேடை அலங்காரம் எதுவுமின்றி பாட்டாளிகளின்பாடுகளை சித்தரிப்பதாக அவை இருக்கும் .

உண்மையான (நிஜமான)சம்பவங்களை சித்தரிப்பவைகள் அவை. அதனால் அந்த நாடக குழுவுக்கு "நிஜ நாடக இயக்கம்" என்று பெயர் வைத்தார்.

மதுரை தெருக்களில் அவர் நாடகம் நடத்தாத சந்துகள் இல்லை என்றே சொல்லலாம்.

மதுரை நகரத்தில் நாடகத்தில் ஆர்வமுள்ள நண்பர்கள் நிறைய இருந்தனர். தோழர்கள் ஜெயந்தன், ப.ரத்தினம், பெராசிரியர் ஷாஜஹான் கனி, காஸ்யபன் மற்றும் மதுர பல்கலைகழக மாணவர்கள் ஆகியோரை வைத்து பேராசிரியர் ராமானுஜம் அவர்களும்,எஸ்.பி சீனிவாசன் அவர்களும் காந்தி கிராம பலகலைக்கழகத்தில் நாடக பட்டறை ஒன்றை தேசீய நாடக பள்ளியின் ஆதரவோடு நடத்தினார்கள் .

பி.விகராந்த்,பிரெமா கராந்த்,சங்கர குரூப்,சிவராம கராந்த் ,ஆத்யம் ரங்காசாரிஆகிய முன்னோடிகள்வகுப்புகளை  நடத்தினார்கள்.

இப்படி பயிற்சி பெற்ற நண்பர்களை ஒருங்கிணைத்து மதுரையில் நிஜ நாடகக் குழு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. பலரும் பல்வேரு அலுவலகங்களில் பணியாற்றிக் கொண்டிருந்ததால் பலகலை மாணவர் ஒருவரைகொண்டு குழுவை நடத்த முடிவு செய்யப்பட்டது.

மதுரை ராஜஜி பூங்கா,சாந்தி நகர் ,பாத்திமா கல்லூரி,மற்றுமுள்ள வளாகங்களில் இந்த குழு நாடகங்களை போட்டு வந்தது.        

ஒருகட்டத்தில் ,எம்.பி.ராமசந்திரனின் நிஜநாடக இயக்கமும், நிஜ நாடகம் போடும்குழுவும் நகரத்தில்   நாடகங்களை நடத்திவந்தன. 

இது குழப்பத்தை உண்டுபண்ணும் என்று நினைத்த குழுவினர் இயக்கத்தின் பெயரை மாற்றமுடியுமாஎன்று கேட்டனர்.

 இது பற்றி நான் பெராசிரியர் ராமானுஜம் அவர்களிடம்விவாதித்தேன்.

" நிஜ நாடகம்" என்பது ஒரு "misnomer"!  நான் வகுப்பு எடுக்கும் பொது செய்த தவறு. உலகப்ப் உகழ் பெற்ற நாடக வியலாளர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி நாடகவியலில் பல பரிசோதன முயற்சிகளை செய்தவர். திரைச்சீலை ஆகியவற்றைபயன்படுத்தாமல் காட்சிகளை மேடைகளில் அமைத்தால் என்ன? என்று நிணைத்தார். ரஷ்யாவின் செல்வாக்கு மிக்க குடுமபத்தை சேர்ந்த அவர் தன் நாடகத்தில் வரும் ஒரு காட்சிக்கு கோட்டை கொத்தளம் தேவையாக இருந்தது.நிஜமான பழையகோட்டை ஒன்றிலிருந்து மதில் சுவரைபெயர்த்து மேடையில் வைத்தார். இதற்கு

"Real theatre "   வகைப்படுத்தி கூறினார். 

மக்கள்கூட்டம் கூட்டமாகவந்து காட்சியப்பர்த்து பிரமித்தனர். மகிழ்ச்சி அடைத்த ஸ்டானிஸ்லாவ்ஸ்கி அவர்களிடம் நாடகம், ,கருத்து ஆகியவற்றை பற்றி கேட்டார்.நாங்கள் கோட்டையைத்தான்பார்த்தோம். நாடகத்தை எங்கே பார்த்தோம் என்றார்கள். அதிர்ச்சி அடைந்த அவர் மீண்டும் பரிசோதனையில் இறங்கினார்.

பிரும்மாண்டமான அரண்மனையை சித்தரிக்கவேண்டியதிருந்தது.மிகவும் வேலைப்பாடுள்ள   "அழகான பெரிய ஜன்னல் " ஒன்றை செய்து , அதனை மேடையில் வைத்தார். பார்வையாளர்களே இந்த ஜன்னலே இவ்வளவு அழகாக இருந்தால் அரண்மனையை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறென்.என்றார். இதனை "symbolictheatre " என்று அவர் வகைப்படுத்தினார். வகுப்பில் "real theatre" நிஜ நாடகம் என்று நான் குறிப்பிட்டது தான் இந்த குழப்பத்தைற்குகாரணம். "நிஜ   நாடகம்" என்பது உருவம் சார்ந்தது."நிஜ நாடக இயக்கம் 

" என்பது உள்ளடக்கம் சார்ந்தது ." என்று பேராசிரியர் ராமானுஜம் விளக்கினா

Saturday, October 10, 2015
மார்க்ஸ், அம்பேத்கர் வந்தாலும் 


உயர் மத்தியதர வர்க்கம் முக்கால் அழுதது . பெட்ரோல் விலை அநியாயத்துக்கு உயர்ந்து விட்டதாம்..  காரணம் என்ன என்பதை சிந்திக்கத்தேரியாத மூடர்கள் .  குறைத்தார்கள் .

ஹோட்டலில் உணவருந்தினால் பில் கொடுப்போம். 18 ரூ ஆனால் 20 ரூ நோட்டை நிட்டுவோம்.அவன் இரண்டு ஒத்த ரூ நாணயத்தை தருவான் வாங்கி கையில் வைத்துக்கொண்டு வெளியே வந்தால் குருட்டு,நொண்டி ,கிழடுகள் கையேந்தி நிற்கும். கையில் உள்ள இரண்டு ரூபாயில் ஒன்றை பையில் போட்டுக் கொண்டு ஒன்றை எரிந்து விட்டு கர்ணன் பரம்பரையில் வந்தவன் போல நடை போடும் புத்தி நம்முடையது .

அதேபோல் தான் 50 காசு.90 காசு என்று பிச்சை போடுவது போல பெற்றோல்விலையை குறைத்தார்கள். மொத்தம் 6அல்லது 7 ரூ குறைத்திருப்பான்.  மகிழ்ந்து திளைத்து நிற்கிறோம்.-நமக்கு குறைந்து விட்டதல்லவா?

பொருளாதார புளுகுணிகள் புது புது வார்த்தைகளால் நம்மை மயங்க வைப்பார்கள். நமக்கு புரியக்குடாது என்பது தான் அவர்கள் எண்ணம்..
பெட்ரோல் விலை  உயர்வு என்பது CASCADING EFFECT  உள்ளதாம். பெட்ரோல் விலை உயர்ந்தால் கட்டணம் உயருமாம். கட்டணம் உயர்ந்தால் கச்சபொருள் விலை உயருமாம்.  அதனால் உற்பத்தியான பொருள் விலை குடுமாம். 
பெட்ரோல் விலையை காட்டி ரயில்  கட்டணத்தை உயர்த்தினார்கள். இப்போதும்  ரயில் கட்டணம் குறைக்கப்படவில்லையே. முனியாண்டியும்,முத்துச்சாமியும் தானே கொடுக்கப் போகிறார்கள் .
இதை சொல்லிதானே பஸ் கட்டனத்தை உயர்த்தினார்கள் கருணாநிதியும் ஜெயலலிதா அம்மையாரும்.

ரூபாய்க்கு முணு படி ன்னு புளுகி ஆட்சியைப்பிடித்தார்கள் . இன்று 1/2 படி அரிசி 25 ஓவா. கருணாநிதி இப்போது புலம்புகிறார் . ஒரு கிலோ துவரம் பருப்பு  180 ரூ. நல்ல விளைச்சல் இருந்தாலும் பச்சைப்பயறு 170ரூ . என்கிறார்..

நாம் கேட்க வேண்டியதை ,அவரிடம் நாம் கேட்க வேண்டியத அவர் கேட்கிறார்.

நமக்கு வேறு முக்கியமான பணிகள்  உள்ளன. . . 
குஜராத் காரர் அல்ல,வாஜ்பாயும், அத்வானியும் நினைத்தாலும் சம்ஸ்கிருதம் செல்வாக்கு பெறாது அதன நவீனப்படுத்த இந்த பரிவாரங்கள் அனுமதிக்காது
நமக்கு பாதிரியார் சொல்லிகொடுத்த புளுகு முட்டைகள் இருக்கிர்ர்ர்றதே..
சம்ஸ் கிரு தம்.பாப்பான்,பாப்பனியம் .ஆறுமாதமாய் எதிர்த்துக் கொண்டு இருக்கிறோம். 

இப்போது மாட்டிறைச்சி. மின் கிலோ 700 ரூ ஞான்ஆட்டிறைச்சி 500,600 ஞான்.
மாட்டிறைச்சி 300 ரூ ஞான். மைதா மாவு பஞ்சம் போக்கி பணியாரம்  உருண்ட  ஒன்னு 5 ரூ ஞான் . முனியாண்டியும் முப்புடாத்தியும் அததின்னுப்போட்டு வேலைக்கு போறான் .நாம அவனோட உரிமையை காப்பாத்த மாட்டிறைச்சி விருந்து வைக்கிறோம்.  

இந்தா இதுபுரட்டாசி மாதம்> ஐப்பசி ,கார்த்திகை வந்தாசுனா நமக்கு வேற சொலி வந்திரும். ஆமா அலங்கானல்லுரு  குலச்சாமி ,பண்பாடு, தமிழர் விரம் நு காப்பாத்த "ஜல்லிக்கட்டு " நடத்தனும்லா !

நமக்கு கருத்து சதந்திரம் உண்டு டே! 

எத ஏப்பம் சொல்லணும்கராத  அதானியும்,அம்பானியும் கார்பரேட் கம்பெனிகளும் தான் முடிவு பண்ணுவாங்க!

மார்க்ஸ் , அம்பேத்கர்,நு யார் வந்தாலும் இநதியாவை காப்பாத்த முடியுமா ???, 
யோசிச்சுதான் பதில் சொல்லணும் !!!!!
Friday, October 09, 2015

(கலைஞர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் )
"சபாஷ் பாலாஜி "

"keep it up "அகில இந்திய மருத்துவ விற்பனைப்பிரதினிதிகளின் சங்க தலைவர்களில் ஒருவர் மஜும்தார் .
தமிழகத்தில் ஜோசப் ,கணேஷ் ஆகியோர் சங்கத்தை  முன் நின்று நடத்தியவர்கள்.
மதுரையில் ப்ரோஸ் கான், ஸ்ரீதர், ஜெரோம் , மறைந்த கோபி ஆகியோரை தெரியும். தஞசையில் பாலாஜி ,ரங்கராஜன் ஆகியோரை பழக்கமுண்டு.டை  கட்டி சூட்டு கோட்டு போட்டு கொத்தடிமைகளாக இருந்த விற்பனைப் பணியாளர்களை மனிதப் பிறவிகளாக்க சங்கம் பட்ட பாடு சொல்லி மாளாது. 

பாலாஜி அவர்களில் ஒருவர்.முக நூல் நபர்களுக்கு "பாலாஜி வெங்கடராமன் " என்றால் தெரியும். மருந்து உற்பத்தியாளர்களுக்கு ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.கலைஞர தொலைக்காட்சியில் "விடியலே வா " என்ற நிகழ்ச்ச்சியில் மருந்து தோழில் பற்றிய நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.பயனுள்ள கருத்க்க்களை ஆற்றோட்டமாக   பொழிந்தார்..
"மருந்து துறையில் முக்கியமாக பொது சுகாதாரம் அவசியம்." என்று ஆரம்பித்தார்." குடிநீர்,சத்தான உண்வு ,சுற்றுச்சூழல் இவை தான் பொது சுகாதாரத்திற்கு முக்கியம். இதனை அரசாங்கம் தான் செய்து தரவேண்டும்..
மக்கள் கணக்கு எடுக்கும் பொது ஒரு சதுர மைலுக்கு எவ்வளவு பேர் வசிக்கிறார்கள் என்று சொல்வார்கள், அதே போல ஒவ்வொரு ஆண்டும் மழைக்கு முன்பாக" கொசுக்கள் "  ஒரு சதுர மீட்டருக்கு எவ்வளவு என்று மகத்திய அரசு கணக்கு கொடுக்கும்.இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் அனுப்பப்படும். ஏப்ரல் அல்லது மேமாதம் அனுப்புபடும். ஜூன்,ஜூலை ஆகஸ்டு மாதங்களில் மழைக்கு முன்பாக குழிகளையும்,தண்ணிர் தேங்கும் இடங்களையும் சீர் செய்ய்வேண்டும். மாநில அரசுகள் இதனை செய்ய மாட்டார்கள். டோங்கு மலேரியா காயச்சல் வராமல்  தடுக்க  முடியாமல் போகிறது."
பெட்டி எடுத்த ஸ்ரீவித்யா  " ஜினறிக் மருந்து என்கிறார்களே ?" என்று இடைமறித்தார்.

"ஆம் ! ஜினறிக்,பிராண்டு என்று இரண்டுவகை உண்டு" என்று பாலாஜி விளக்க ஆரம்பித்தார்.

"மருந்து களின் ரசாயன சேர்க்கையை ஜீனரிக் எனலாம் அமெரிக்காவில் இதுதான் அதிகம் டாக்டர்கள் எதை எதை சேர்க்க வேண்டு ம் என்று எழுதுவார்கள்.விற்பனை செய்பவர்கள் அதனை சேர்த்து மருநதாக்கி தருவார்கள். உண்மையில் அமெரிகாவுக்கு ஏற்றுமதியாகும் ஜீனரீக் மருந்து களில் பெரும் பகுதி இந்தியாவிலிருந்து தான் செல்கிறது..புற்று நோய்க்கு ஒரு பிராண்டு மருந்து உள்ளது அதன் விலை 1,08,000 ரூ . அதூவெ ஜீனரிக் மருத்ந்தானால் .வெறும் 8000 ரூபாய்தான்"

"இந்தியாவில் லாபம் கொழிக்கும் தொழிலில் மூன்றாவது இடத்தில் உள்ளது மருந்து தயாரிக்கும் தோழில்." 

மருந்து தயாரிக்கும் தொழிலில் உள்ள நுடபாமான விஷயம்களை ஒரு சமுகத்தின   கண்ணோட்டத்தில்  பாலாஜி சித்தரித்தது  அற்புதமாக இருந்தது.

சபாஷ் ! பாலாஜி !!! 

Tuesday, October 06, 2015

வாஜ்பாய் ,காந்தி  மற்றும் 

சோசலிசம் ............!!!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் உங்கள் கட்சியின் கொள்கை என்ன என்று கேட்டபோது.,Gandhian socialism என்று பதிலளித்தார்.

இது இந்துத்வா வாதிகள் காந்தியக் கொன்றபிறகு  நடந்தது. அவருக்கு அன்று அப்படி ஒரு நிர்பந்தம் ஏற்பட்டிருக்கலாம்.

இன்று அரைடிரவுசர்கள் கூட" பசுவைக் கொல்லக்கூடாது " என்று காந்தியே சொல்லி இருக்கிறார் என்று அடித்து விடுகிறார்கள். எதையுமே சம்மந்த சம்மந்தமிலாமலேடுத்து விடுவதில் இவர்களை மிஞ்ச ஆளில்லை .

காந்தி சொன்னார் என்பது உண்மை . இவர்கள் அந்த உண்மையின் பகுதியைமட்டும் சொல்வார்கள்.

காந்தி "பொருளாதாரகாரணங்களை கொண்டு அதனை  சொன்னார்.

"நிலம்பார்த்த பூமி இது. கடுமையாக உழைக்கும்விவசாயிகளைக் கொண்ட நாடு .அவர்களின் உறுதுணையாக உழைப்பைக் கொடுப்பது காளைகள்  .அவற்றை பாதுகாக்க வேண்டும் .காளைகளுக்கு துணை வேண்டும்.அதனால் பசுவையும் பாது காக்கவேண்டும் " என்றார்.

"நான் மனிதனை மனிதன் நேசிக்க  அன்புகாட்ட வேண்டும் என்பவன் .அஹிம்சையின் உச்சம் மனிதனையும் தாண்டி பிற உயி ர்களிடம் அன்பு காட்டுவது ஆகும்."

"அதற்காக மாமிசமுண்பவர்கள வெறுக்க வேண்டியதில்லை .அவர்களிடம் பேசி அவர்களை சைவ உணவுக்கு மாற்றலாம். அவர்கள் மாறவில்லை என்றால் அது அவர்களுடைய தவறு அல்ல. தவ்று நம்முடையது. அவர்கள்மாறும் வரை பேசவேண்டியது நம்கடமை "என்றார்.

காந்தியைவிட காந்தியத்தில் நம்பிக்கை உள்ளவர்" கான் அப்துல் காபர்கான் ."எல்லைபுற் காந்தி" என்று அழைக்கப் பெற்றவர்.

அவர் ஒரு முறை காந்தியை சந்திக்க சேவாகிராமம் வந்திருந்தார் அவருடன் அவருடைய பேரக்குழந்தகளும் வந்திருந்தனர்.ஆசிரமத்தில் சைவ உணவுதான் உண்டு. அண்ணல் காந்தி அடிகள் வெளியிலிருந்து மாமிசம் வாங்கி வரச்செய் து,குழந்தைகளுக்கு கொடுக்கச் செய்தார்'பாவம் !குழந்தகள்.அவர்களை பட்டினி போடக்கூடாது"என்று விளக்கினார்.


காந்தியை கொன்றவர்கள் காந்தீயம் போசும் காலமாகிவிட்டது !!!

Sunday, October 04, 2015

(சிறு கதை அல்ல )

"சுத்தமான இந்தியா "

(ஸ்வாத் பாரத் )


அதனை டவுன் என்று கூற முடியாது. பெரிய நகரமும் அல்ல . சுற்றுவட்டர கிராமனகளிலிருந்து படிக்க வரும்கல்லூரி அது.

மீனாட்சி முதலாம் ஆண்டு படிக்கிறாள் .தினம் பஸ்ஸில் வரவேண்டாம் என்பதால் விடுதியில் தங்கி படிக்கிறாள். அவளுடைய அறையில் தங்கி படிப்பவள் தான் மணிமேகலை .

மீனாட்சி மத்தியதர குடும்பத்தை சேர்ந்தவள் . தந்தை அருப்புக்கோட்டை அருகில் வங்கியில்பணியாற்றுகிறார். 

மணிமேகலையை மத்தியதரம் என்று கூறிக்கொள்ளலாம் . அப்பா "சாக்னா" கடாயில் சரக்கு மாஸ்டர்  .  நகரத்தில் வாடகை கொடுக்க முடியாது என்பதால் அருப்புக்கோட்டை அருகில் ஒரு கிராமத்தில் விடு எடுத்து தங்குகிறார். மனைவியும் பத்து வயது மகனும் கிராமத்தில் உள்ளார்கள். 

சனிக்கிழமை யை ஒட்டி  விழா வந்ததால் விடுமுறை. விடுதியில் யாரும் இருக்க மாட்டார்கள். வெள்ளிக்கிழமை மாலை மீனாட்சியும்மணிமேகலையும் தங்கள் வீட்டிற்கு போகவேண்டும்.

மணி மேகலைக்கு  விருப்பமே இல்லை.ஒன்று இர்ண்டு பேர் கூட விடுதியில் இருக்கமாட்டார்கள். விடுதி ஊழியர்கள்கூட கிளம்பிவிடுவார்கள். வேண்டா வெறுப்பாக அவளும் மீனாட்சியோடு கிளம்பினாள் .

"ஏட்டி மணி! வீட்டுக்கு தெரியுமா டி ?"

"தம்பி ரோட்டு விலக்குல   நிப்பான் !"

அருப்புக் கோட்டைக்கு மூன்று கிமீ முன்னால ரோடு திரும்பும். அந்த விலக்குல இறங்கி மணிமேகலை தம்பியோட கிராமத்துக்கு போக வேண்டும் 

டிராவல் பாக் சகிதம்  இரண்டுபேரும் கீழெ இறங்கினார்கள். 

"கொஞ்சம் ஒக்காருவோம்டி " என்றாள்   மணிமேகலை. 

"சனியனே ! என்ன ஆச்சு ?"

"இருடி?"

"இங்கேருந்து பஸ் ஸ்டாண்டு போகணும் "

"போவோம்! போவோம் ! ஏட்டி ! "ரெஸ்ட் ரூம் " போய்டு வந்திடுதேன்! ஊருக்கு போனா திறந்த வெளில தான் ஒக்காரணும்"

மீனாட்சி மணிமேகலையை பார்த்தாள். கண்களில் ஈரம் கசிந்து கொண்டிருந்தது . பாவம் சனியும் ஞாயிறும் தாண்டி திங்கள் கிழமை வரை அடங்கி ,அடக்கி  இங்குவந்து "ரெஸ்ட் ரூம் " .....

மணிமேகலை "ரெஸ்ட்  ரூம். " கதவை தாழிடும் சத்தம் கேட்டது.

மீனாட்சி தன "அன்றாய்டு" பேசியை விரித்தாள். யூ ட்யூபில்  காட்சி விரிந்தது.

"சிலிகான் பள்ளாத்தாக்கில் பாரதப்பிரதமர் நரேந்திர மோடியின் கையை "நாதெள்ள ரெட்டி " குலுக்கி விட்டு தன கையை மீண்டும்மீண்டும் துடைத்துக் கொண்ட காட்சி பலமுறை விரிந்தது.......


Thursday, October 01, 2015

(இந்தப்பதிவு  "Mahathma Gandhi -the last 200 days  "  என்ற நூலை ஆதாரமாக கொண்டது )அண்ணல் காந்தி அடிகளின் கடைசிபிறந்த   நாள்

2-10-1947  ..............!!! 


" நான் 125 வயது வரை வாழ்வேன். என்மக்களுக்கு சேவை செய்வதின் மூலம்  இறைவனுக்கு தொண்டூழியம் செய்வேன் "என்றார் அடிகள்.

அதற்கு ஏற்றார்ப்போல் தன் உடலையும்  உள்ளத்தையும்  வளர்த்துக் கொண்டார்.

சுதந்திர  இந்தியாவில் அவருடைய முதல்பிறந்த நாள் வந்தது.உலகம் பூறாவிலும் இருந்து 2-10-47  வாழ்த்து  செய்திகள்  குவிந்தன. லார்டுமவுன்பாட்டன் லேடிஎட்வினா சகிதம் வந்து வாழ்த்து சொன்னார்

அதிகால 5மணிக்கு சர்தார் பட்டேல் வந்தார்.  காலை பிரார்த்தனைக்கு பிரதமர் நேருவும்,முன்ஷியும் வந்து ஆசிபெற்றனர்.

ராஜகுமாரி அமிர்த்கௌர் மற்றும் அமைச்சர்கள் வந்து வாழ்த்து  தெரிவித்தனர்.

"மிகவும் பலவீனமான,ஒல்லியான இந்த மனிதர் சக்கரவர்த்திகளை விட பலமானவர்.இவர் நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கை தந்தவர். கோழை இந்தியர்களை தீரனாக்கியவர். கீழே விழ இருந்தவனை தூக்கி நிறுத்தியவர்.மிருக உணர்வு கொண்டவனை மனிதனாக்கியவர் . அவர் என்தலைவர் ,ஆசான், தந்தை " என்று கவிதையில் வாழ்த்தினார் சரோஜினி நாயுடு . 

"இந்தியா இருண்டு கிடக்கிறது .அதில் ஒரே ஒரு தீபம் மட்டும் எரிந்து கொண்டிருக்கிறது. கலவர பூமியில் அமைதி,சமாதானம் இரண்டையும் சுமக்கும் ஒரே தூண்  அவர்தான் "என்றார் கவர்னர் ராஜ கோபாலாச்சாரி .

அந்த தூண் அடிவானத்தை இழந்து நிற்கிறது. அந்த தீபத்தின் எண்ணை மிகவும் குறந்து விட்டது.

வாழ்த்துக்களை ஒரு ஏளனமான உதட்டுச் சுழிப்போடு தான் ஏற்க முடிந்தது..

" நான் 1915ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தேன்.அன்றிலிருந்து மத நல்லிணக்கித்திற்காக நின்றேன். நமது மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் ஒன்றுபட்டு வாழமுடியும் என்று நம்பினேன். இன்று நாம் எதிரிகாளாக வாழ்கிறோம்.! இதனைப்பார்க்க நான் 125 வருடம் அல்ல ,100 வருடமல்ல, 90 வருடமல்ல  உயிரோடு இருக்க வேண்டுமா ? நான் 79 வயதிற்குள் நுழைகிறேன் .என்னை புரிந்து கொண்டவர்களுக்கு சொல்கிறேன் .இந்த மிருகத்தனத்தை கைவிடுங்கள். இந்த பைத்திய காரத்தனத்தைகைவிட்டு விட்டுஎன்பிறந்தநாளை கொண்டாடுங்கள். உங்கள்  உள்ளத்தில் உள்ள கோபத்தை கை விடுங்கள். இல்லை யென்றால் நான் தங்க இங்கே இடமேது ? "


அண்ணல் காந்தி அடிகளின் உடலைக் கொன்றது நாதுராம்கோட்சே என்பவனாக இருக்கலாம்.

அவர் ஆன்மாவை ................!!!!????