Saturday, May 25, 2019


நீ!

மேலும் மேலும் 

பறக்க வேண்டும் 

தோழா!!!


அந்த தொண்டு கிழம் சங்கரய்யா அவர்களின் இடது புறம் P R N அவர்களும் வலது புறம் su .ve  யம் அமர்ந்திருந்ததை  நெஞ்சம்  விம்ம கண் கள் பனிக்க பார்த்து மகிழ்ந்தேன் .

பல்லாண்டுகளுக்கு முன் திருப்பரம் குன்றம் பதினாறு கால் மணடபத்தின் முன் போடப்பட்ட மேடையில்கவிதை வாசித்த மாணவன் அல்ல இப்போது.   

உன் உதட்டசைவில் வெளிப்படும் வார்த்தைகளை மாஸ்க்கோவில் ,பெய்ஜிங்கில்,ஹனாயில், லாவோஸில் கூர்ந்து கேட்பார்கள். 

நீ இந்திய புரட்ச்சிகர இயக்கத்தின் statemen ஆகிவிட்டாய்.

கீழடி மண்ணை  சுமந்தவன் மட்டுமல்ல .!

பாலுக்கு அழும் சிசு,

பசித்து அழும் குழந்தை ,

படிப்புக்கு அழகும் சிறுவன்,  

வேலைக்கு அழும் வாலிபன், 

தன்  குடும்பத்திற்கு அழும் தாய்,

தன்  இயலாமைக்கு அழும் கிழவன் 

இவர்களை  சுமக்க போகிறவன் நீ.


அகிலத்தின் link நீ !

லெனின் தொடுத்த மாலையின் இந்திய கண்ணி  நீ!

சு.வே ! இந்த உலகம் முழுவதும் பறந்து திரி !


பற !

மேலும் மேலும் 

பற !!

Monday, May 13, 2019
தமிழ் திரையில் 

இஸ்லாமியர்களின் வாழ்க்கை 

பதிவுகள்.....!!!
சமீபத்தில் இப்படி ஒரு கருத்தரங்கம் நடந்தது . அனீஸ்,நவீன்,தாமிரா,மிரா கதிரவன் என்று பலர் கருத்துரை ஆற்றினர். கோபி நாயனார் , மாரி  செல்வராஜ் ,லெனின் பாரதி ஆகியோரும் பங்கேற்றனர்.ஒரே சுதப்பல்..லெனின் பாரதி மட்டும்  வணிகம் ,வணிக மாயம் என்று கூறினார்> இந்த கருத்தரங்கை நடத்தியவர்களுக்கு பின்னணியாக யுகபாரதி இருந்ததாக கூறினார்கள்> அவரும் பேசினார்.

திரை உலக பிரசினைகளுக்கு தீர்வு திரை உலகத்தினுள் இல்லை .சமூகம்,அரசியல்,பண்பாட்டு தளங்களில் ஏற்படும் அதிர்வுகள் திரை உலகை  பாதிக்கின்றன. 

இரண்டு பாரதிகளும்  Pan Indian திரை உலகை அதன் வரலாற்றை மார்க்சிய  மெய்ஞானத்தின் அடிப்படையில் பார்ப்பது நன்மை பயக்கும்.

திலீப் குமார் இநதிய திரை உலகி முத்த வர. யூசுப் கான் என்ற இஸ்லாமியர் அவர் .

மீனாகுமாரி என்ற அற்புதமான நடிகைதான் மஜபீன் பானு என்ற இஸ்லாமியர்.

பேகம் மும்தாஜ் தான் மதுபாலா. இந்த பெயர் மாற்றங்கள் ஏன் ஏற்பட்டன.?

லாகூரிலும்,கராசியிலும்,பெஷாவரிலும்  இருந்து விரட்டப்பட்டு சோறில்லாமல்,தங்க இடமில்லாமல் மும்பை வந்திறங்கிய தேவ்  ஆன்ந்துகளும்,சோப்ராக்களும் தான் இந்திய திரைப்படத்தை மும்பை திரை உலகை  உருவாக்கினவர்கள் . 

Rk  ஸ்டுடியோவின் முதலாளி ராஜ் கபூருக்கு நிதி ஆதாரமாக செயல்பட்டவர் கடலூரை சேர்ந்த ஹாஜி மஸ்தான் பாய்.

docto  ராகி முகம்மது ரேஜா என்பவர்  அலிகார் பல்கலைக்கழக பேராசிரியர். அரபி,உருது,சம்ஸ்கிருத மொழிகளில் தேர்சசி  பெற்றவர் .திரைக்கதை வசனம் எழுதி விருது பெற்றவர் இஸ்லாமிய தத்துவத்திலும்,உபநிஷத்,கீதை  ஆகியவற்றிலும் தேர்சசி  உள்ளவர்.

மகாபாரதம் தொடருக்கு திரக்கத்தை வசனம் எழுதியவர் . மகாபாரதம் காலத்தால் உருவானது வியாசன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உருவாகியிருக்கும்.மகபாரதம் நிகழ்சசி துவங்கும் பொது "நான் காலம் பேசுகிறேன்" என்றுதான் ஆரம்பமாகும்.அதில் வரும் கீதோபதேசம் காட்ச்சிகள் பாராட்டப்பட்டதற்கு காரணம் டாக்டர் ரேஜா அவர்கள்தான்.

இந்திய புராணங்களின் மீது அவர்கொண்ட பற்றுதல் காரணமாக தன மகள்களுக்கு பார்வதி என்றும் சரஸ்வதி என்றும் பெயரிட்ட மகிழ்ந்தார்.சரஸ்வதி முகம்மது என்பவரை மணந்து கொண்டு லண்டனில் பிபிசி யில் செய்தி வாசிப்பவராக இருக்கிறாரா.

பாரவ்தி முகம்மது என்பவரை மணந்து கொண்டு தூர்தர்ஷனில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார் .

இந்திரா அம்மையார் மறைந்த பொது ஏற்பட்ட கலவரத்தின் பொது foot soldier களா க இந்த நிக்கர் பாய்ஸ்  இருந்தார்கள். செய்திகள் வாசிப்பது "பார்வதி முகம்மது  " சொல்வதை அவர்களால் தாங்கமுடியவில்லை> ராஜிவி டம் சொன்னார்கள்> பார்வதி முகம்மது தூர்தர்ஷனிலிருந்து நீக்கப்பட்டார்.

திரை உலகம் என்பது எவ்வளவு மெல்லியதான ஒன்று என்பதை சொல் வது தான் என் நோக்கம்> எதிலும்,எங்கும் சொதப்பல் இருந்து கொண் டே இருக்கும் உலகம் இது .

யுகபாரதியும்,லெனின் பாரதியும், இது பற்றி மேலும் கற்று தெளிவு கொடுக்க வேண்டும் எனது தான் என் ஆசை .   

 

Saturday, May 11, 2019

மொழி வழி ,

மாநிலங்கள் 

பிரிந்த பொது ...!!!
மதராஸ் மாகாணத்தில் மலையாளம்,கன்னடம்,தெலுங்கு பேசும் பகுதிகளும் சேர்ந்தே இருந்தன. ஆந்திராவின் கடற்கரையோர  பகுதிகள், மலபார் பகுதி, கோலார்  பகுதி ஆகியவையும் மதராஸ் மாகாணத்தையோடு இருந்தன.

இந்தியா சுதந்திரமடைந்ததும் state reorganising commiission  என்ற அமைப்பை உருவாக்கி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன . மதராஸ் பகுதியிலிருந்து ஆந்திரா பிரிந்தது> 1957  ஆண்டுவாக்கில் நிஜாமின் தெலுங்கானா பகுதியும் ஆந்திராவோடு இணைக்கப்பட்டு புதிய ஆந்திர பிரதேசம் உருவாகியது.

தாற்காலிகமாக கார்னுலை  தலைநகரமார்க் கொண்ட ஆந்திராவில் சஞ் சிவரெட்டி முதல்வராக இருந்தார் ஏற்கனவே சட்டமன் றம் உயர்நிதிமன்றம் என்று தலைநகரமாக இருந்த ஹைதிராபாத் ஆந்திர பிரதேசத்தின் தலைநகரமாக ஆகியது.

கிட்டத்தட்ட இதே காலத்தில் தான் நான் ஹைதிராபாத்தில் பணியில் சேர்ந்தேன்,

ஆந்திராவின் ரெட்டிகளும்,காப்பு களும் ஆதிக்கம் செலுத்தும் நிலை முழுமையாக உருவாகாத நிலை. ஹதீராபாத் நிஜாமின் மிசச சொச்சங்கள் ,உருது மொழி அந்த இஸ்லாமிய மென்மையான கலாசாரம்  ஆகியவை மிகுந்திருந்த காலம் அது..

உலகத்தின் மிகசிறநத கவிதை மொழிகளில் ஒன்று உருது. . சைக்கிள் ரிக்ஷ ஓட்டும் தொழிலாளி கூட ஷெர்வானி போட்டுக்கொண்டு " ஆயியே ! சர்க்கார் ! தஷ்ரிப் றக்கியே ! நவாப் ! ககாந் தக் ஜனா ஹை !" என்று மரியாதை கலந்து பேசும் மொழியை நான் மிகுந்த ஈடுபாட்டோடு ரசிப்பேன் .

அங்கு  பாட சாலைகளில் பாடமொழி உருது. பல்கலையிலும் உருது  ஏன் ? இஞ்சினீரிங் கல்லூரியிலும் உருது தான். மருத்துவ கல்லூரியிலும் உருது - அதுதான் பயிற்றி மொழியாக இருந்தது.

சன்சிவ ரெட்டி ,சஞ்சிவய்யா ,பாஸ்கர் ராவ் என்று வந்தார்கள். பயிற்று மோழியை  மாற்ற வேண்டும் என்றா ர்கள். ஒருவேளை தெலுங்க மொழியாக மாற்றப்போகிறார்களோ என்று நினைத்தேன்.

பயிற்று மொழியாக ஆங்கிலத்தை கொண்டுவந்தார்கள்.

மொழிவாரி மாநிலம் உருவாக்கும் போதுமானில மொ ழிகளுக்கும், மொழிபேசும் இனத்திற்கும் பாதுகாப்பு இருக்கும் என்றுதான்  நான் நினைத்தேன் .

என்ன செய்ய !!!???


Tuesday, May 07, 2019
"ஐக்கிய முன்னணியும் 


அதன் தாக்கமும் ......."
தேசிய ஜனநாயகமா ? (National  Democracy ) மக்கள் ஜனநாயகமா  ? (Peoples   Democracy ) என்ற விவாதம்நடந்த பொது மக்கள் ஜனநாயகத்தின் பக்கம் நின்றவர்களில் நானும் ஒருவன்.

பரந்து பட்ட தமிழக அரசியலில் அப்போது இனவாதமும்,பிரிவினை வாதமும் தூக்கலாக நின்ற நேரம்.

  மதுரை வைகை யில் மேல் கட்டப்பட்ட ஆல்பர்ட் விக்டர் பாலத்தில் "தமிழா வங்கத்தைப்பார்- வர்க்க உணர்வுகொள்" என்று எழுதும் இளைஞர்களை  கொண்டாடி மகிழ்ந்தோம்.

இனவாதத்தையும்,பிரிவினையையும் எதிர்த்து பிரசாரம் செய்தோம். "திராவிட நாடு திராவிடருக்கே " என்று ஆதிநாளில் கோஷம் போட்டவனும் நான்தான் . 

1965ம் ஆண்டு "Hindi Imperialism  Down Down " என்று அச்சடித்த தபால் அட்டைகளை விநியோகம் பண்ணி இருக்கிறேன்.மொழிப்போராட்டத்தில் தீவிரமாக இறங்கி போராடிய மாணவர்களை கைவிட்டு தலைவர்கள் ஒதுங்கிய பொது இடதுசாரி தொழிற்சங்கங்கள் அவர்களுக்கு ஆதரவாக நின்றன .  

1967ம் ஆண்டு தேர்தல் வந்தது . அப்போது தான் ஐக்கிய முன்னணியின் செயல் பாடு முக்கியமானதாக மாறியது> காங்கிரசின் ஏக போகத்தை முறியடிக்க எதிர்க்கட்ச்சிகள் தங்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பாதுகாக்க வேண்டும் என்ற நிலை  உருவாகியது. 

திராவிட முன்னேற்ற கழகத்தோடு இணைந்து ஏழு கடசிகள் சேர்ந்து செயல்பட முடிவாகியது. இனவாதத்தையும்,பிரிவினை வாதத்தையும் எதிர்த்த்வந்த் இடது சாரிகளில் ஒருபகுதி இதனை ஏற்க தயங்கியது.

குழு க்களுக்குள் நடந்த விவாதங்களில் தலைவர்கள் பங்கெடுத்து ஐக்கிய முன்னணி  பற்றி விளக்கினர்.

"இடது சாரிகள் தனிமைப்பட வேண்டும் என்பது தான் வர்க்க எதிரிகளின் விருப்பம்> அப்போது தான் அவர்களை அழித்து ஓழிக்கமு டியும் .நாம் மக்களோடு மக்களாக இருக்கும் வரைதான் நமக்கு பாதுகாப்பு.இன்று பெருவாரியான மக்கள் தி .மு.காவோடு இருக்கின்றனர்  இந்த யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும். .அது மட்டுமல்ல> அவர்களோடு இணைந்து செயல்பட்டுக்கொண்டே அவர்களின் அணிகளிடை ஊடாடி நம் கருத்தை சொல்லி அவர்களை நம்பக்கம் திருப்பவேண்டும். அதுதான் ஐக்கிய முன்னணியின் நோக்கம்" என்று தலைவர்கள் விளக்கம் தந்தார்கள்.

1967ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் நான்கு நாடாளுமன் \றம்,,12 சட்டமன்றத்தில் வெற்றி பெற்று "சர்வதேச அனாதைகள் " என்று கேலி செய்தவர்கள் முகத்தில் கரியைப் பூசினோம். .. இதன் முழு ப்பலனை 1975ம் ஆண்டு உணர்ந்தோம்.

அவசரநிலைக்காலம் வந்தது. அதே நேரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் உதயமாகியது .கொடூரமான அடக்குமுறையை எதிர்த்து நிற்க வேண்டிய தருணம் .பல்வேறு அமைப்புகள் அதிகார பீடத்திற்கு சரணாகதி அடைந்த பொது தமு எ  சங்கம்  மட்டும்  நிமிர்ந்து நின்று செயல்பட்டது .

1975 நவம்பர்மாதம் ரகசியமாக இலக்கிய  முகம் நடத்த முடிவு செய்ததுமுத்த எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி நாமக்கல்லில் இலக்கிய முகாமை ரகசியமாக நடத்தினார் . இந்த இலக்கிய முகாமில் "சம்ஸ்கிருத மொழி யின் தாக்கம் " என்ற தலைப்பில் பேச என்னை பணித்திருந்தார்கள்.

கன்னடத்தலிருந்து Dr  நாகராஜ்,சித்தலிங்கையா, (அப்போது மாணவர் ) சேக்கிழார்  ஆகியோர் வந்திருந்தனர் .

பெருஞ்சித்திரனாரின் பின்னால் சுற்றிவந்த இளைஞர்கள் இனவாதத்தையும் பிரிவினை வாதத்தையும்கைவிட்டு வர்க்க அரசியலைத்தேடி வந்திருந்தனர் . முக்கியமானவர்களாக போதிய வெற்பன்<அறிவுறுவோன்,யானை முகத்தான் என்று தஞ்சை யிலிருந்தும் ,சாத்தூர்,சிவகாசி ,சேலம் சென்னை என்று திக வினர் சங்கத்தில் உறுப்பினராகி வந்திருந்தனர் .ரகசியமாக நடந்த இந்த முகாமுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து  கிட்டத்தட்ட 110 பேர் வந்திருந்தனர்.

தலைவர் கே.முத்தையா அவர்கள் "இப்போது சம்ஸ்கிருத இலக்கியத்தின் தாக்கம் " என்ற தலைப்பில் காஸ்யபன் பேசுவார் என்று அறிவித்தார்>

முறுக்கு மீசையோடு இருந்த பொதியவேற்பனின்  கை களைக்குலுக்கியபடி கம்பிரமாக மேடையை நோக்கி நடந்தேன். .

Wednesday, May 01, 2019

"கங்கை வற்றிவிட்டால் "இந்திரா என்ற பெண் தமிழகத்தை சார்ந்தவர் தந்தை பெய்ர் கிருஷ்ணமூர்த்தி.

 "மைலாபூர் வகையறா" .இன்று "பெப்சிகோ " கம்பெனியின் முதன்மை அதிகாரி. சம்பளம் கொண்ஜ்சம் தான். 48 கொடி ஆண்டுக்கு.

அமெரிக்காவுல "மெடடர்" என்ற கம்பெனி இருக்கு. நம்ம ஊர்ல விருந்தாளி வந்தா கோழி அடிசு கொளம்பு வைப்போம். அமெரிகாவுல மாட அடிச்சி கறிச்சோறு பொடுவானுக..அமெரிக்கா முழுவதும் மாட்டிறைச்சி சப்ப்ளை பண்றவங்க மெடடர் கம்பெனிதான் . 

இந்த கம்பெனியோட இந்திராவினுடைய பெப்சிகோ ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கு .மைலாப்பூர் வகையறா இல்லையா ? அதனால பசுமாட்டை அடிச்சு தனியா ஒரு "பக்ஷ்ணம் " பண்ண ஏற்பாடு பன்னித்தரென்.. அத வினியோகம் பண்ர உரிமை எனக்கு தாங்க " என்பது ஒப்பந்தம் .

இப்பம் அமெரிகாவுல இந்திய பசுமாட்டு பக்ஷ்ணம் தான் சக்கை போடு போடுது.


மோடி ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள்ல என்ன செஞ்சாரு நு கேக்காங்க. மாடு இறைச்சி மட்டும் 15 சதம் கூடீ இருக்கு ஏற்றுமதில !!.


உலகத்த்ல மாட்டிறைச்சி எற்றுமதில பிறெசில் நாடுதான் முதல் இடம்.

மோடி அதன "பீட்" பண்ணீட்டாரூ. இப்பம் இந்தியாதான் மாட்டிறைச்சி ஏற்றுமதில முதல் இடம். ..


இந்திர அம்மையார் இந்தியா வந்திர்ந்தார். மோடி கைகுலுக்கி வரவேற்றார்.

கையை கங்கை ஜலம் கொண்டு கழுவல.


இந்திரா அம்மையார் திருபதி கொவிலுக்கு  போய் சாமி கும்மிட்டாங்க .

கொவில கங்கை  ஜலம் கொண்டு கழுவல?


கங்கை வற்றி விட்டதா ?