Tuesday, October 30, 2018

கதை ,

கற்பனை ,

திருட்டு !!!
"சர்கார்" திரைப்படம் பற்றிய சர்ச்சை ! வருண் ராஜேந்திரன் தன்னை அங்கிகரிக்க வேண்டும் என்கிறார். முருகதாஸ் என் கதை என்கிறார். இருவரும் சமாதானமாகிவிட்டார்கள். 

நான் இந்த அசிங்கம் பற்றி எழுதப்பபோவதில்லை.

"கற்பனை என்பது இல்லை "(there is no fiction ) என்கிறார் கார்ல் மார்க்ஸ்.

இது அறிவியல்.

இல்லாததை கற்பனை செய்யமுடியாது. இந்த உலகம் நமக்கு வெளியே இருக்கிறது. இதை நாம் எப்படி அறிகிறோம்.நமக்கு அது எப்படிப்புலப்படுகிறது .

பார்க்கிறோம். கேட்கிறோம்.நுகர்கிறோம்.ருசிக்கிறோம். தொடுகிறோம். ஆகவே புலப்படுகிறது.

நமக்கு வெளியே இருப்பதை  நாம் நம்புலன் களின் வழியாக உணர்கிறோம்.இந்த உணர்வின் முதிர்ச்சியில் அறிகிறோம்.

வெளியே இருப்பது உண்மை .அப்படி இருப்பதால் தான் நமக்கு புலப்படுகிறது .இல்லாதது புலப்படாது. புலப்படாததை கற்பனை செய்யமுடியாது.

இந்த கட்டுரையை படிப்பவர்கள் ஒரு பரிசோதனை செய்யலாம்.

ஐந்து வினாடிகள் கண்களை மூடிக்கொள்ளுங்கள்.எதை வேண்டுமானாலும் கற்பனை செய்து பாருங்கள். அது நீங்கள் இதுவரை பார்த்திராத ,நுகர்ந்திராத,கேட்டிராத,ருசித்திராத தொட்டிராத ஓன்றாக இருக்கவேண்டும்.

முடியுமா ?

முடியாது.

அதனால் தான் இல்லாத கடவுளுக்கு கூட இருக்கும் மனிதனின் கண்,மூக்கு,கை ,கால்,சிங்கம்,யானை என்று தெரிந்ததாய் உருவகப்படுத்துகிறோம். 

இல்லாத ஒன்றை கற்பனை செய்ய முடியாது.  

கற்பனை என்பது இருந்த ஒன்று. 

அப்படியானால் copy right எப்படி வந்தது?

நானும் நீங்களும் உணவு விடுதிக்கு போகிறோம்.உனவு அருந்திய பின்  கடையில் வெற்றிலை  போடுகிறோம். விடுதியின் பக்கத்தில் வீசி எறியப்பட்ட எச்சில்   இலையில் மிதமிருப்பதை ஒருவன் எடுத்து உண்கிறான். அதனைப்பார்த்த நீங்கள் பரிதாபப்படுகிறீர்கள்.அது உங்கள் மன தை வாட்டுகிறது .அதனை ஒருகவிதையாக,கதையாக கட்டுரையாகஎழுதுகிறிர்கள். . நான் அதை பற்றி கவலையில்லாமல் கட்டமண்ணாக    இருக்கிறேன். உங்களையும் என்னையும் வேறுபடுத்த எழுதிய உங்களுக்கு அந்த உரிமை கொடுக்கப்படுகிறது.

கலை இலக்கியம் கற்பனை என்று அந்த ஜெர்மனிய  கிழவன் எழுதியதை படிக்கப்படிக்க பிரமிப்பாக  இருக்கிறது

Saturday, October 13, 2018

பிரான்சு நாடும் ,

சுவிஸ் நாடும் !!!பிரான்ஸ் நாடு தயாரிக்கும் போர்விமானம் ரஃபேல் என்பதாகும். இந்தியா இதனை வாங்க ஒப்பந்தமாகியிருக்கிறது. 

இந்தவிமானத்தை டசல்ட் என்ற  காமப்பேனி  தயாரிக்கிறது.

பிரான்சுநாட்டு அச்சு  மற்றும் மின்ணணு ஊடகங்கள் இந்த ஒப்பந்தத்தை விசாரித்து கிழித்து தொங்க போட்டுள்ளன. 

மத்திய அமைச்சர் நிர்மலா அவர்கள் டசல்ட் கம்பெனி தொழிற்சாலையை பார்க்க அவசர அவசரமாக பிரான்ஸ் போயிருக்கிறார் 

பாடகி சின்மயி அவர்கள் சுவிஸ்நாடு போயிருந்தார்.

இசை நிகழ்ச்சியில் பங்கு பெற.

இந்த நிகழ்சசியின்  இசை இயக்குனர் இனியவன் என்பவர்.

சின்மயி மற்ரும் உள்ளவர்கள் சுரேஷ் என்பவர் வீட்டில் தங்கினார்கள். உன்னி மேனன்,வைரமுத்து ஆகிய இருவரும் விடுதியில் தங்கினார்கள்எனறு இனியவன் குறிப்பிட்டுள்ளார்.

சின்மயி புகாரில் கூறியது போல் எந்த சமபவமும் நடக்க வில்லை என்று கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர் சுரேஷ் என்பவர்.

ஈழமக்கள் உதவிக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்ச்சி இது.

சுரேஷுக்கு தமிழைவிட ஜெர்மன் மொழி ஆளுமை அதிகம்.

வைரமுத்து தங்கியிருக்கும் விடுதிக்கு தன மகளை தனியே அனுப்பவேண்டாம்  என்று ஜெர்மன் மொழியில் கூறி உள்ளார்.

சின்மயிக்கு ஜெர்மன் மொழி எழுத பேச படிக்க தெரியும்.  

சினமயி சொன்ன புகார் எதுவும் நடக்க வில்லை .வைரமுத்தது தங்கி இருந்தவிடுதி நுறு மெயில் தள்ளி உள்ளது என்று சுரேஷ் கூறினார்.

இசை நிகழ்ச்ச்சி மிகசிறப்பாக நடந்ததாக சுரேஷ் கூறினார்.

மகிழ்ச்ச்சியடைந்த வைரமுத்து தன்பயணசெலவு,தங்கும் செலவை மட்டும் வாங்கிக்கொண்டு தனக்கு என்று எதுவும் வேண்டாம என்று கூறியதாக சுரேஷ் குறிப்பிட்டார்.

அதனால் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதை வீட அதிகமாகசின்மயி அவர்களுக்கு சம்பளம் கொடுத்ததாகவும் சொன்னார்.

பாவம் அமைசர் நிர்மலா சீதாராமன்!

பாவம் சின்மயி அவர்கள்.!

ரொம்ப பாவம் வைரமுத்து அவர்கள் !!

Wednesday, October 10, 2018

"Me too" 

and

"திரை உலக பிரபலங்கள் "...!!!
இந்தி தொலைக்காட்ச்சி ஒன்றில் பின்னணி பாடகர் திருமதி சின்மயி அவர்கள் பேட்டி கொடுத்திருந்தார் .தான் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டதாக  குறிப்பிட்டது பற்றி அந்த பேட்டியிருந்தது.

களப்பிரர் காலம்பற்றி ஆராய்ந்து எழுதிய தமிழ் அறிஞர் மு.ராகவஅய்யங்கார் குடும்பத்தை சேர்ந்தவர் சின்மயி. பலசரக்குக் கடையில் பெருச்சாளியை அடித்து தூக்கி எறிவது போல  "அந்த பாப்பாத்தி " சொன்னதை தூக்கி எறிந்துவிடலாம் தான் .ஆனால் சில உண்மைகளை சுடத்தான் செய்கின்றன.

sex என்பது ஒரு taboo என்ற மனநிலையில் உள்ள சமூகத்தில் நம் விட்டு குழந்தைகள் அது பற்றி அறிந்து கொள்ளும் ஒரே வழி இப்படித்தான் என்று இருக்கும் பொது இது சகஜமான ஒன்றாக கருதப்படுகிறது.

தன தங்கையின் பாவாடையை தூக்கி பார்க்காத அண்ணன் ,அண்ணி குளிக்கும்போது எட்டிப்பார்க்காத தம்பி, கூட்டமும் நெ ரிச்சலும் மிகுந்த "பஸ் " சில்  பெண்ணின் மார்பகத்தை இடிக்காத ஆண்மகன் இந்த பூலோகத்தில் இருக்க முடியாது . இடிவாங்கியதை உலகம் முழுக்க சொன்ன பெண்ணும் இங்கு இல்லை. 

ஆனாலும் இவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

"Me too "   ஆண்கள் எழததயாரா ? ஒவ்வொருத்தனம் பக்கம் பக்கமாக எழுதவேண்டியதிருக்கும்.

தான் மிகவும் மதிக்கும் குடும்பத்து பெரியவர் நடந்து கொண்டதை பார்த்து நடுங்கி அடங்கிய சிறுமிகள் எத்தனை எத்தனை ?

விழிப்புணர்வு பெரும் சமூகம் தன்னை தகவமைத்துக்கொள்ளும்போது இத்தகைய சர்சசைகள் எழத்தானே செய்யும். 

அமைதியாக இதனை கடந்து  போவது தான் உத்தமம் !

Tuesday, October 09, 2018
(விமர்சனம் அல்ல )


"பரி ஏறும்  ..." திரைப்படத்தை ,

முன் நிறுத்தி ,

டாக்டர் ரவிகுமாருடன் .....!!!

நான் "பரி ஏறும்  ..." படம் பார்க்கவில்லை.பார்க்கும் வாய்ப்பும் இல்லை/ ஆனால்  வலைத்தளத்தில் இந்த படம் பற்றிய விமரிசனங்கள், write up கள் , கட்டுரைகள் கொட்டிக்கிடக்கின்றன. அந்த படம்பற்றிய நேர்மறையான  எழுத்துக்கள் சிறப்பாக உள்ளன. 

இந்த படம் பற்றி  திரைப்பட ஆய்வாளர், கவிஞர்,ஓவியர் ஸ்ரீரசா என்று அன்போடு அழைக்கப்படும், டாக்டர் ரவிக்குமார் அவர்களோடு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன் .

மிகவும் வித்தியாசமான விமரிசனத்தை வைத்தார். 

"திரைப்படங்களில் சாதி பிரசினை இதற்கு முன்பும் சித்தரிக்கப்பட்டு  வந்திருக்கிறது.திரைப்பட தயாரிப்பாளர்களும் சரி, இயக்குனர்கள்,மற்றும் எழுத்துத்தாளர்களும் சரி ஒரு தலித் இளைஞன் மேல்சாதி அல்லது இடைநிலை சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்து சுகமாக வாழ்கிறான் என்பதை மட்டும் சித்தரிப்பதில்லை " என்றார் .

வலைதளத்தில் அவர் ஒரு பேட்டி கொடுத்திருந்தார் . " மதுரை வீரன் காலத்திலிருந்து இப்படியான சித்தரிப்புகள் தான் நடந்து வருகிறது. .சக்கிலியர் சாதியில் பிறந்த மதுரைவீரன் நாயக்கர் அரண்மனை பெண்ணை காதலித்தால் கால்மாறு  கைம்மாறு வாங்கப்படுவான் என்று வருகின்றது.பாரதி கண்ணம்மா , பருத்தி வீரன், என்று பார்த்தாலும் இதுதான் நிலைமை . ரஞ்சித் தயாரிப்பிலமாரி செல்வராஜ் தயாரிப்பிலும் இது தான் நிலைமை .ஏன் ? " அவர் கேள்விக்கு பதில் சொல்பவர் இல்லை.

பள்ளர் சாதி இளைஞர் பிராமணப்பெண்ணை மணந்து கொண்டு சுகவாழ்வு வாழ்வதும் அரசியல் பிரமுகராக வருவதும் என் இவர்கள் கண்களில் படமறு க்கிறது.  பயமா ?

இதோடு நானா நிற்கவில்லை> எனக்கு தெரிந்த மனநல மருத்துவரை கேட்டபோது அவர் சொன்னது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

"பலநூறு ஆண்டுகளாக இந்த மக்கள் சாக்கடைப்புழுக்களாக நடத்தப்பட்டனர்.இப்போது தான் அதுவும் கடந்த 60து 70து  ஆண்டுகளாகத்தான் கொஞ்சமாக மிகவும் கொஞ்சமாக கல்வி அறிவு பெற்று மிகசிறு பகுதியினர் மனிதர்களாக நடத்தப்படுகின்றனர் .தங்களுக்கு விடிவுகாலம் வரதா  என்று ஏங்கி தவிக்கின்றனர் ."அடித்தால் திருப்பி அடி " என்று சொல்ல அவர்களிடையே ஒரு சீனிவாசராவ்,ஏ .பாலசுப்பிரமணியம், பி.ராமமூர்த்தி இல்லையே .தங்களுடைய வாரிசுகளுக்காவது இந்த இழிநிலை கூடாது என்று நினைக்கிறார்கள் . தங்கள் வாரிசுகளாவது மேல்சாதி  அல்லது இடைநிலைசாதியில் மணவாழ்க்கையை அமைத்துக்கொணடால்  இதை தாண்டிவிட முடியுமா என்று பார்க்கிறார்கள் . தங்கள்வாரிசுகள் சாதி மறுப்பு திருமணம் செய்வதை ஆதரிக்கவோ ஊக்குவிக்கவோ செய்கிறார்கள் " என்று விளக்கினார் .

எனக்கு ஒரு கருத்து உண்டு . பட்டியல் இணைத்து பையன் ஒரு ராஜ்குமாரியைத்தான் மணமுடிப்பேன் என்று அலையவில்லை. இளவரசனும்,சங்கரும் உலகமகா அழகி என்பதற்காக காதலிக்கவில்லை. மனம் ஒப்பி நமது பக்கத்துவீட்டு,எதித்துவிட்டு பெண்போன்ற வரைதான் காதலித்தார்கள். மணம் செய்து கொண்டார்கள் .

பரியன்  பழகும் பெண் மூக்கும் முழியும் கறுப்பாகஇருந்தாலும் நாம் அவர்களை இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று தான் ஆசைப்படுவோம்.

திரைப்படங்களில் ஏன் இப்படி உலகமகா அழகியாக சித்தரிக்கிறார்கள் ?

அதே சமயம் இந்த "பரி யேறும் பெருமாள் " சாதி ஒழிப்பு என்ற தலைப்பில் ஒரு உரையாடலை  ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்,வாலிபர்,மாதர் இயக்கங்கள் இந்த உரையாடலை பரவலாக கொண்டுசெல்லவேண்டும். !!!