Thursday, March 30, 2017
Sunday, March 26, 2017
NEET தேர்வு வந்தால் ,
+2 பள்ளிகளை மூடிவிடலாம்.....!!!
மும்பையில் எனக்கு தெரிந்த குடும்ப பையன். நன்றாக படிப்பான்.. தற்போது அமெரிக்காவில் கை நிறைய சமபளம் வாங்கிக்கொண்டு வசிக்கிறான்.அவனைப்பார்த்து ஏழு வருடம் ஆகிவிட்டது .சமீபத்தில் திருமண பத்திரிக்கை கொடுக்க வந்திருந்தான்.பேசிக்கொண்டிருந்தோம்.
"சவுகரியமா இருக்கிறாயா ? "
"அதெல்லாம் ஒன்னும் குறை சல் இல்லை தாத்தா ! "
"என்னடா ! ஒருமாதிரி இழுக்கறே ! IIT கிடைக்காம NIT கிடைச்சதாலயா?
அவன் IIT ல படிக்க ஆசைப்பட்டான். பத்தாம் வகுப்பு படிக்கும் போதே முனைப்பாக இருந்தான். ஏகப்பட்ட டியூஷன் சென்டர்களை விசாரித்தான். மகாராஷ்டிராவில் தனியார் பயிற்சி பள்ளிகள் ஏராளம். பத்தாம் வகுப்பிலிருந்தால் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி கொடுப்பார்கள். சில சிறப்பு மையங்கள் உண்டு .அவர்களிடம் இரண்டு வருடமும் முழு நேரமும் படிக்கவேண்டும் அங்கு "சீட்" நிசசயம். குரைந்தது 1.5 லடசத்திலிருந்து 2 லட்சமாகும்.டியூஷனுக்கு மட்டும்.
+2 பள்ளி க்கு போக முடியாது அது பற்றி கவலைப்பட வேண்டாம். டியூஷன் மையம் கவனித்துக்கொள்ளும். இங்கு ஏராளமான "உப்புமா " பள்ளிகள் உண்டு.அவர்களுக்கும் இந்த டியூஷன் மையத்திற்கு TIE UP .உண்டு . இரண்டு ஆண்டுகளும் தங்கள்பள்ளியிப்படித்ததாக சாண்றிதழ் கொடுப்பார்கள்.இது தவிர அந்தப்பள்ளியிலேயே +2 பரிட் சை சென்டரை போட்டு எழுதவும் விடுவார்கள்.
இந்த பையனும் அப்படி படித்தவன். அவனுக்கு IIT இல்லாமல் Nit இடம் கிடைத்தது.
"இல்லை தாத்தா ! நல்ல Impressionable age . அந்த school life miss ஆனது தான் சங்கடமா இருக்கு." என்றான்.
ஏழு வருடம் ஆகிவிட்டது.மகாராஷ்டிராவில் இப்படி குறு க்கு சா லோட்டியவர்களில் முக்கிய மாணவர்களிலொருவர் மறந்த அமைச்சர் மகாஜன் .
பா.ஜ .க ,சிவசேனை தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாவட்டத்தை குத்தகைக்கு எடுத்து உயர்கல்வி சேவை செய்து வருகிறார்கள்.
இப்போது NEET தேர்வு வரப்போகிறது .
முதலைக்கு நாக்கு கிடையாது.முழுங்கத்தான் செய்யும்.
இந்தமுதலைகள் தயாராகி நிற்கின்றன .
தமிழகத்தில் என்ன குறைந்து விடுமா என்ன ?
Thursday, March 23, 2017
அசோகமித்திரனும் ,
த.மு. எ .ச .வும் .....!!!
80 ம் ஆண்டுகளின் முற்பகுதியில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தமிழ் நாவல் பற்றி தன் கவனத்தை திருப்பியது ஏற்கனவே சிறுகதை துறையில் தடம் பதித்த நிலையில் எழுத்தாளர்களை நாவல் துறையிலும் "மடை " திருப்பிவிட விரும்பியது
அதற்காக சென்னை யில் ஒரு நாவல் பட்டறையை நடத்த விரும்பியது.சிகரம் செந்தில்நாதன் தலைமையில் சென்னை மைலாப்பூர் கல்யாண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
சிறந்த நாவலாசிரியர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்கள் முன்னிலையில் அவர்களுடைய படைப்பு ஒன்று விமரிசிக்கப்படும். ஆசிரியர் அந்த விமரிசனத்திற்கு பதிலாகவும், தான் படைத்த விதத்தையும் விளக்குவார்> பின்னர் பங்கு பெரும் எழுத்தாளர்கள் விவாதிப்பார்கள்.
இப்படி ஒரு பட்டறையை முதன் முறையாக த.மு.எ.ச நடத்தியது .நாவல் ஆசிரியர்கள் கு.சின்னப்ப பாரதி,பொன் நீலன் , அசோகமித்திரன் என்று பலஆளுமைகள் அழைக்கப்பட்டிருந்தனர். அசோகமித்திரன் எழுதிய "தண்ணீர் " நாவலை விமரிசிக்க என்னை நியமித்தனர். இந்த பட்டறையில் தான் முதன் முதலாகஇயக்குனர் பாலு மகேந்திராவும் கலந்து கொண்டார்.
எனக்கு ஒருபக்கம் தயக்கம். அசோகமித்திரன் வந்ததும் என்னை தனியாக சந்தித்தார். ஒடிசலான தேகம்,மிகவும் மெலிதான குரல். நான் செகந்திராபாத்திலிருந்தவன் என்பதும், கிங்ஸ் ரோடு, ரெயினிலயம், ரயில்வே காலனி, என்று பேசி சகஜமாகி கொன்டேன்.
" தயக்கமில்லாமல் விமரிசியுங்கள்.படைப்பாளியாமுன்னால் வைத்துக்கொண்டு விமரிசனம் செய்வது என்பதை உங்களால் தான் செய்யமுடியும். எப்பெடி என் நாவலை யும், "தண்ணீர் " படைப்பையும் தேர்ந்தெடுத்திர்கள் ? "என்று கேட்டார்.
"மத்தியதர குடும்பத்தின் பாடுகள் மிகச்சிறப்பாக படைக்கப்பட்டுள்ளது. விமரிசனத்தில்மேலும் குறிப்பிகிறேனே " என்று பதிலளித்தேன். என்கைகளை இருக்க பாற்றிக்கொண்டார்,கண்கள் கலங்கியிருந்தன . "ஏன் கலங்கு கிறீர்கள்."
"இது ஆனந்த கலங்கல் ! வாருங்கள் " என்று என்னை பேச அழைத்தார்.
கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்கள் ஓடிவிட்டது.எங்கு பார்த்தாலும் இரண்டு பல் வரிசையும் தெரிய என்னை அணைத்து கைகொடுத்து விசாரித்து விட்டுத்தான் போவார்.
அவருடைய" பதினெட்டாவது அட்ஸரேகை " நாவலை அன்பர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும்
முழுமையாக எழுத்தைமட்டுமே நம்பி வாழ்ந்த தியாகராஜன் என்ற அசோகா மித்திரன் காலமாகி விட்டார்.
அஞ்சலிகள் ! பெரியவரே ! !
Wednesday, March 22, 2017
"மாயா வாத"மும்
"சர்ப்ப -கந்த தோஷ"மும் ...!!!
"நான் இருக்கிறேன் என்று நீ நினைக்கிறாய் "" ஆகையால் நான் இருக்கிறேன். "உண்மையில் நான் இல்லை." "நீ நினைப்பது ஒருமாயை "என்று மாயா வாதிகள் வாதிடுவார்கள்.
இந்திய தத்துவ ஞானிகள் இதனைப் பற்றி நிரம்ப பேசி இருக்கிறார்கள். எழுதி இருக்கிறார்கள் வாதிட்டு உள்ளார்கள். இதில் ஆதிசங்கரரின் பங்கும் உண்டு.
பௌராணிகர்கள் இதனை விளக்குவார்கள் . காலையில் தொடுத்த பூ மாலை யில் உதிர்ந்து வெறும் வாழை நாராகி விடுகிறது. அதனை குப்பையில் எரிந்து விடுகிறோம். அரைகுறை வெளிசத்தில் அதனை பார்த்தவர் அது காற்றில் அசைவதை கண்டு "பாம்பு " என்று அலறுகிறார். விளக்கு வெளிசத்தில் பார்க்கும் பொது அதுபாம்பு இல்லை வாழை நார் என்று தெளிவடைகிறோம். பாம்பு என்று "நினைத்த"து "மாயை ". உண்மையில் இருந்தது வாழை நார் .
வூட்டுப்படி ஓரத்தில் , பொந்துகளில் பாம்பு இருக்கலாம். நாம் அது வாழை நார் என்று "நினைத்து" தூக்கி எரிய "நினைத்தா"ல் அது சிறி பாய்ந்து ஓடிஒளிந்து கொள்ளும். இங்கு நாம் நினைத்த வாழை நார் "மாயை"
இப்படி உலகமே மாயை என்று மாயாவாதத்தினர் சொல்வார்கள்.
இதனை மறுதலிக்க வேண்டியது பொருள்முதல் வாதிகள் கடமை.
சமூகவிஞ்ணியும், அரசியல் வாதியுமான பி.ராமமூர்த்தி அவர்கள், லக்னோ ,கான்பூர் ஹைதிராபாதி நகரங்களில் தூய்மையான உருது மொழியில் பேசுவார் . டெல்லியில் இந்தியில் பேசுவார்>மக்களவையில் ஆங்கிலத்தில் உரையாற்றுவார் .பேசவாடாவில் தெலுங்கில் பேசுவார்தமிழகத்தில் தமிழில் பேசுவார்.
இவைதவிர சம்ஸ்கிருதமும் தெரிந்தவர்அவர்.
" மாயாவாதிகள் சர்ப்ப (பாம்பு) கந்த (குப்பை )தோஷத்தை பற்றி பேசுவார்கள். வாழி நாரை பார்த்து பாம்பு என்று கூறுவது உண்டு .வாழை நாரை மட்டும் பார்த்து பாம்பையே பார்த்திராதவன் பாம்பு என்று கூறமாட்டான்.பாமபை மட்டும் பார்த்து வாழிநாரை பார்த்திராதவன் குப்பை என்று சொல்லமாட்டான்."
"அவன் வாழை நாரை பார்த்தது உண்மை. பாம்பை பார்த்ததும் உண்மை . இரண்டும் இருந்ததும் அதனை அவன் எப்போதோ பார்த்ததும் உண்மை .அவை மாயை அல்ல ". என்று பி ராமமூர்த்தி அவர்கள் விளக்குவார்கள்.
ஐயா ! மீண்டும் பிறப்பெடுத்து வாரும். எங்களுக்கு கற்று கொடுக்க !!!
"அறிவு சார் உரிமையும் ,
அதன் பின் வந்த சர்ச்சையும்.. "
முகநூலின் எந்த பக்கத்தை திருப்பினாலும் இளையராஜாவையோ, SPB யையோ குறிப்பிடாமல் எந்த பதிவும் வருவதில்லை என்ற நிலைமை உள்ளது. Intelectual Property Rights பற்றி தெரிந்தவர்கள் மவுனம் காக்க மற்றவர்கள் அவர்கள் மனம் போன போக்கில் நிலைத்தகவலிட்டு வருகிறார்கள்.
வரலாற்றின் இண்டு இடுக்குகளில் தேடிப்பார்த்தால் இதற்கான விடை கிடைக்கிறது
சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் Dr .பி.வி .கேஸ்கர் என்ற அமைசர் ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருந்தார்> லண்டன் சென்று ஓ ளிப்பரப்புத்துறையில்படித்தவர். அப்போதெல்லாம் மாதமிருமுறை "வானொலி "என்ற பத்திரிக்கை வரும்.சென்னை,திருச்சி , கோழிக்கோடு,திருவனந்தபுரம் வானொலி நிலையங்களின் நிகழ்ச்ச்சி நிரல்கள் தேதி .நேரம் ஆகியவற்றோடு வரும். நிமிஷக்கணக்கு கூட தவறாமல் ஒளிபரப்பாகும். திரை பாடல்கள் என்றும் அதில் வரும்.ஒளிபரப்பப்படும் திரைப்பாடல்களுக்கான உரிமைத்தொகையாக படத்தயாரிப்பாளர்களுக்கு பாடலுக்கு ஒரு ரூ விதம் அனுப்பப்படும் .
உப்புமா கம்பெனி தயாரிப்பாளர்கள் என்றால் அனுப்பமுடியாது . பாடிய நலிந்த இசை கலைஞர்களுக்கு எதுவும் கிடைக்காது.
அகில இந்திய அளவில் இந்த கலைஞர்களுக்காக இசை இயக்குனர் நௌஷாத் ஒரு அமைப்பை துவக்கினார்.எதோ கொஞ்சம் உதவி செய்ய முடிந்தது. இந்த அமைப்பின் தமிழக பிரிவில் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் எம்.பி. சீனிவாசன் செயல்பட்டார்.அவரே ஒரு புகழ் பெற்ற இசை அமைப்பாளரும் கூட .
பின்னணி இசை ,மற்றும் பாடல்கள் பிரபலமாகும் பொது தயாரிப்பாளர்கள் கொழுத்த பணம் பெறறார்கள். இந்த சமயத்தில் தான் Performing Artist சங்கம் உருவானது. இசைஅமைப்பாளர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு இசை அமைக்க அதன் பணப்பயனை சம்மந்தமே இல்லாத தயாரிப்பாளர்கள் கொண்டு போவதை எதிர்த்தார்கள். வழக்கு நடந்தது> கிழக்கிந்திய சலனப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் நிகழ்த்து கலைஞர்களுக்கும் நடந்த வழக்கில் நீதிபதி கிருஷ்ணய்யர் மிகவும் முக்கியமான தீர்ப்பினை கொடுத்தார்.
(கொஞ்ச்ம பழைய கதை )
"பவளக்கொடி " என்ற படத்தில் M K T நடித்தார்.பாடல்கள் சக்கை போடு போட்டன. வெளிநாட்டு கிராம போன் கம்பெனி அதனை வெளியிட்டது.அநியாயத்துக்கு லாபம் கிடைத்தது>இதற்கிடையே சிந்தாமணி,சிவகவி,என்று MKT யின் புகழ் உயர்ந்தது. அவர் தனக்கு ராயல்டி அதிகம் வேண்டும் என்று கம்பெனியிடம் கேட்டார்>கம்பெனி மறுத்தது.அவர் பாட மறுத்தார்.அந்நிய கம்பெனி தன வேலையை காட்டியது."ராஜ கோபாலசர்மா " என்பவரை பாடவைத்தது .சர்மா mkt போன்றே அச்சு அசலாக பாடுவார்.
"Mk தியாகராஜபகவதர்
போல்
பாடிய படப்பாடல்கள் " என்று வெளியிட்டது .
நீதிபதி கிருஷ்ணய்யர் தயாரிப்பாளர்களின் உரிமையை ஏற்றுக்கொண்டார். அதே சமயம் இசை அமைப்பாளரின் திறமையும் மதிக்கப்படவேண்டும் என்று கூறினார். பாடல்கள் திரை இடப்படும்போது உரிமை தயாரிப்பாளருக்கு>அதே பாடல்கள், தனியாக ஒளிபரப்பப்பபடுமானால், ( படசேர்க்கை இல்லாமல்) உரிமை இசையமைப்பாளருக்கு என்று கிருஷ்ணய்யர் விளக்கினார். திரைப்பட ,தயாரிப்பாளர்,இசை அமைப்பாளர்,பாடகர்வாத்தியக்காரர்கள் என்று ஒவ்வொருவர் பாங்கினையும் விவரித்து கிருஷ்ணய்யர் கொடுத்த தீர்ப்பு சர்வதேச புகழ் பெற்ற தாகும்..
மதுரையில் சத்குரு சங்கீத கல்லூரி என்று உள்ளது. அதில படித்த மாணவி சங்கீதத்தில் MA முடித்தார் . அன்னை தெரசா பல்கலையில் MPhil காண ஆராய்சசியில் இறங்கினார் . legal aspects of musicology என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார் .
மனித குலம் கூட்டாக வாழ்ந்த காலத்தில் தோன்றிய சேர்ந்திசையிலிருந்து ஆரம்பித்து, உபரிஉழைப்பு , சொத்து,தனி உரிமை என்று மாறி இசையும் தனிநபர் சொத்தாக மாறியதை கட்டுரையில் சுட்டி இருந்தார் அந்த மாணவி .
பல்கலை பேராசிரியர்கள் அந்த மாணவியை பாராட்டி நீ ஏன் நலிந்த இசை கலைஞர்களின் வாழ்நிலையை மாற்ற முயற்சிக்கக் கூடாது என்று ஆலோசனைகூறினார்கள். மாணவி அதனை ஏற்று BL படித்தார். பின்னர் ML முடித்தார் . Intelectual property பற்றி ஐக்கிய நாடுகள் சபை நடத்தும் சிறப்பு தேர்வினையும் எழுதினர் .
தற்போது பெண்களின் உரிமை,மற்றும் IP சட்டம் சார்ந்த (குறிப்பாக இசை சம்மந்தப்பட்ட ) துறையில் advocate ஆக திருச்சியில்பணியாற்றுகிறார்.
அவ்வப்போது தினமலர், தீக்கதிர், குமுதம் போனற பத்திரிகைகளில் இவை பற்றி கட்டுரைகளை Advocate ஹன்ஸா என்ற பெயரில் எழுதி வருகிறார் .
Thursday, March 16, 2017
பி.ராமமூர்த்தி அவர்களின் ,
திருமண சிலவு ,
ரூ 9 /- தான் .....!!!
அண்ணல் காந்தி அடிகளின் அறைகூவலுக்கு இணங்க ஏராளமான இளை ஞர்கள் சுதந்திர போராட்டத்திற்க்குதித்தனர்>தங்கள் படிப்பு தொழில் ஆகியவற்றை தூக்கி எறிந்து விட்டு தங்களையே இந்த வேள்வியில் ஆகுதியாக தர முன்வந்தனர்.பலர் குடும்பம்,பந்தம் ஆகியவற்றை துறந்து வந்தனர்> குடும்ப வாழ்க்கை போராட்ட வாழ்க்கைக்கு பொருந்தாது என்று நினைத்தனர்.திருமண வாழ்க்கையை புறந்தள்ளினார்.பலர் சுதந்திரம் கிடைத்தபின் தான் திருமணம் என்று சப்தம் செய்தனர் .பின்னாலிலிவர்களில் பலர் கம்யூனிஸ்ட் ஆகினார்..
பி.ராமமூர்த்தி அவர்கள் காங்கிரஸ் கடசியில் இருந்தார். திருமணம் பற்றி சிந்திக்கவே இல்லை. பி. ஆர் காங்கிரசில் இருந்தாலும் பெரியாருக்கு அவர்மேல்ப்பிரயம் அதிகம்.பல சமூக சீர்திருத்த நடவடிக்கைகளில் இருவரும் ஒத்த கருத்தை கொண்டவர்கள்.
1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது .1952ல் சட்டமன்ற தேர்தல் மதராஸ் மாகாணத்திற்கு நடந்தது> காங்கிரஸ் ஆடசி கம்யூனிஸ்டுகளை நரவேட்டை ஆடிய காலம் அது. பிஆர் அவர்கள் சிறையில் இருந்தார். அப்போது தான் தேர்தல் நடந்தது. பெரியாரும் திராவிடர் கழகமும் பி.ஆரை வெற்றிபெற முனைப்பாக செயல்பட்டது . சிறையில் இருந்தபி ஆர் வெற்றி பெற்றார்.
மொழி வாரி மாகாணபிரிவினை நடந்து மதராஸ் மாநில சட்டமன்றமாக மாறிய பொது பி ஆர் எதிரக்கட்சி தலைவரானார்.
பெரியாரின் செல்லப்பிள்ளை பி ஆர் என்று அப்போது குறிப்பிடுவார்கள். நாற்பது வயதிற்கு மேல் தன செல்லப்பிள்ளைக்கு திருமணம் செய்விக்க பெரியார் விரும்பினார். "உங்கள் இஷடம் " நீங்கள் என்ன சொல்கிறீர்களா அதனை கேட்கிறேன். அனால் என்னிடம் காலணா கூட கேட்கக்கூடாது"என்று பிஆர் கூ றி இருக்கிறார்.
பின்னாளில் தீக்கதிர் பத்திரிகை ஆசிரியராக இருந்த கே.முத்தையா அவர்களின் மனைவி யமுனா அம்மையார்.அவருடைய தங்கை அம்பாள். கம்யூனஸ்ட குடுமபம். அடக்குமுறையின் பொது சில வருடங்கள் மும்பை ஏ.ஐ டி யு சி அலுவலகத்தில் பணியாற்றியவர்கள்.
பெரியார் தலைமையில் அம்பாள்,பி ஆர் திருமணம் நடந்தது> மிக எளிமையான திருமணம். திருமணம் முடிந்ததும் அவரவர் அவரவர் வீட்டிற்கு உணவருந்த செல்லவேண்டும் என்பது நிபந்தனை.எல்லாரும் கிளம்பினர்.
கிளம்பும் சமயத்தில் " ராமமுர்த்தி இங்கவா " என்று பெரியார் அழை த்தார். "இந்தாப்பா" என்று ஒரு ரூ பாயை நீட்டினார்.
"ஓரு ரூ தான் மொய்யா ? "என்று கேட்டிருக்கிறார் பி ஆர்.
" எண்ணிக்கிடா மொய் எழுதினேன்," கல்யாண சிலாவுக்குத்முடியாதுனு சொல்லிட்டே> ஓங்கலையானத்துக்கு நான் செலவழிக்கவா. அதான்அம்பாள் ட கேட்டேன் .பத்து ரூ கொடுத்தது .உனக்கு ஒன்னு. அம்பாளுக்கு ஒன்னு .தலைமை வகித்த எனக்கு ஒன்னு .மூணு ரோஜா மாலை வாங்கினேன். 9 ரூ மிசசம் ஒரு ரூ .அம்பாள் ட ஞாபகாமா கொடு " எ ன்றார் பெரியார்.
9 ரூ பாய் சிலவில் எதிர்க்ட்சி தலைவர் திருமணம் என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன .
அந்த பி ஆரை தான் "பஞ்சாபகேசய்யர் மகன் தானே " என்று ஏசினார் முரசொலி மாறன்.
Wednesday, March 15, 2017
நாத்திகமும் ,
ஆத்திகமும் ...!!!
உலகில் தற்போது சுமார் 85 கோடியிலிருந்து 90 கோடி இந்துக்கள் இருப்பதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது.
அதேசமயம் நாத்திகர்கள் 110கோடி இருப்பதாகவும் சொல்கிறது . இந்த நாத்திகர்கள் மிகவும் அதிகமாக வடக்கு ஐரோப்பாவிலும் ,வடக்கு அமெரிக்காவிலும் இருப்பதாக குறிப்பிடுகிறார்கள்." ஸ்காண்டிநேவியன் நாடுகள் " என்ற நார்வே ,ஸ்விடன், டென்மார்க், பெல்ஜியம் ,ஜெர்மனி போன்றநாடுகளில் இவர்கள் அதிகம் இருக்கிறார்கள். இந்தநாடுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் நலமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இங்கு கல்வி இலவசம். உயர்கல்விவரை இலவசம் . வேலை வாய்ப்பு நிவாரணம் உண்டு.
வளைகுடா நாடுகளிலிருந்தும் , கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் ஏராளமான மக்கள் இங்கு குடியேறுவதும் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதும் நடக்கிறது .
தமிழகத்தின் சனாதன குடும்பத்தில் பிறந்த நெல்லை மாவட்ட நண்பர் தற்போது அமெரிக்காவின் சிகாகோநகரத்தில்வசிக்கிறார். கிரீன் கார்டு வாங்கியுள்ளார். மிகத்திவிரமான பகுத்தறிவாளர்.(Rationalist ) ரிபப்பாளிகன் கடசியின் தீவிரமான ஆதரவாளர். இந்தியாவந்தால் நாகபுரிவந்து ஒருநாளாவது என்னோடு தங்கி விவாதிப்பார்.
இந்திய பகுத்தறிவாளர்களும் மேலை நாட்டு பகுத்தறிவாளர்களுக்கும் உள்ள வேறுபாடுகளை விவாதிப்போம்.
"கருப்பு சட்டை நாத்திகம்" என்று ஒரு கட்டுரை தொகுப்பு எழுதி உள்ளார்..பெரியாரின் கருத்துக்கள்த்துநீர் த்துப்போனதையும் அதன் தற்போதைய போதாமையையும் கண்டு வருத்தப்படுவார்.
கடவுள் இல்லை இல்லவே இல்லை என்பவர் பெரியார். சாதிகள் ஒழிக்கப்படவேண்டும். அதன் சல்லிவேறான மனுநீதியும்,தீண்டாமையும் ஒழிக்கப்படவேண்டும்.மனுநீதியின் ஆணிவேர் பிராமணியம் . ஆகவே அதனை கடுமையாக எதிர்த்தார்.
பெரியாரை ஆதரித்த திராவிட நலசங்கத்தாரும்பிராமணியத்தை எதிர்த்தார்கள்.பிராமணரல்லாத மேல் சாதி பிள்ளை யும்முதலியும் மற்றவர்களும் தங்கள் நலன் சார்ந்து எதிர்த்தார்கள். அவர்கள் சாதியை ஒழிக்க முற்படவில்லை.
பெரியாரிட மிருந்து பிரிந்த அண்ணாதுரை அவர்கள், மிகப்பெரிய மாற்றத்தை தன் அரசியல் நலன் கருதி செய்தார். கடவுள் இல்லை என்பதை மாற்றி,"ஒன்றேகுலம் ஒருவனே தேவன்" என்கிறார்.
பிராமணர்களை அணைத்துக்கொண்டு பிராமணியத்தை எதிர்ப்பதாக அறிவித்தார்.
இந்த இரண்டு மாற்றமும் திராவிட கச்சியை ஆடசி அதிகாரத்தில் ஏற்றியது.ஆனால் பெரியாரின் நாத்திக பிடிப்பு தளர ஆரம்பித்தது.
எங்கள் விவாதத்தில் மிக முக்கியமான இந்த மாற்றத்தை சொல்லி அந்த அமெரிக்க பிரஜை சொல்லிசொல்லிமாய்ந்துபோவார்.
என்னுடைய உறவுக்கார இளைஞன் தற்போது சுவீடனில் வசிக்கிறான். மிகவும் சாஸ்திரோத்தமான வாழ்க்கையை கொண்டவன். என் அரசியல் தத்துவார்த்த நிலையை கடுமையாக எதிப்பவன். சமீபத்தில் அவன் இந்தியாவந்திருந்தான். கடுமையான மாற்றம் தெரிந்தது.
"சித்தப்பா ! நான் உங்கள் ஆதரவாளனாகி விட்டேன். " என்றான் .
தீவிரமான நாத்திகம் பேசுகிறான்.
"aaத்திகம் என்பது தீராத ஒரு நோய். போலியோ நோயால் பா திக்கப்பட்டவனை நாம் வெறுக்க முடியுமா? அவனுக்கு வாழ உரிமையில்லையா ? அவனோடு பேசுகிறோம்.அவன் அனுபவத்தை அவனுக்கே எடுத்து சொல்கிறோம் . அவனை சிந்திக்க வைக்கிறோம். சிந்திக்க ஆரம்பித்து விட்டான் என்றால் அவன் நம்மோடு சேர்வதை தவிர அவனுக்கு வழி எது.? "
அவன் சிறுவனாக இருந்த பொது என் முன்னால் படித்து வளர்ந்தவன். மகிழ்ச்ச்சியாக இருந்தது.
அறுபது வயது பேச்சி அக்கா தலையில் கீரை கட்டுக் கூடையை சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு பிள்ளையார் கோவில் சாமியை கும்பிட்டு வியாபாரத்திற்கு போகிறாள். அன்றைய வியாபாரம் சரி இல்லை என்றால் அவள் வீட்டில் அடுப்பு எரியாது. அவளுக்காக நாம் என்ன செய்திருக்கிறோம்.
அவளுக்கு "சாமி கும்பிடுவதைத்தவிர' வேறு கதி !
Tuesday, March 14, 2017
" தோழர்கள் கவனத்திற்கு "
என்ற SAP அவர்களின்
நிலைத்தகவலை முன்னிட்டு ...!!!
மிகசரியான நேர த்தில் வந்துள்ள நிலைத்தகவல் அது . அதுவும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வந்தபின் இடதுசாரிகளுக்கு ஆலோசனை கூற பலர் வந்து விட்டார்கள். இவர்களுக்கு பதில் சொல்கிறேன் என்று சில அரை குறை கள் புறப்பட்டுள்ளன.
முப்பது நாற்பது ஆண்டுகள் புழுதிக்காட்டிலும், வரப்புகளிலும் அணிகளைக்கட்டிக்காத்து வளர்த்தவர்களுக்கு இந்த வெம்பிய பிஞ்ச்சுகள் ஆலோசனை கூறுவது அபத்தமாக உள்ளது. அதைவிட அபத்தமாக பதில் சொல்ல அரைவேக்காடுகள்முனை கின்றன .
சிலர் ஜனன மரண கணக்கை தோண்டி எடுக்கிறார்கள்..பொலிட் பீரோவில் எத்தனை பிராமணன் ?என்று கேட்கிறான். பதிலுக்கு உன் தலைமையில் எத்தனை கோனார்கள் ? என்கிறான்.
" அடித்தால் அடி " வாடா என்றால் போடா என்று சொல் "என்று கற்றுக்கொடுத்தார் சீனிவாசராவ். சவுக்கடியையும் சாணிப்பாலையும் நிறுத்தினார். தஞ்சை விவசாய பெருங்குடி மக்களை அக்கிரகாரத்தினுடாக ஊர்வலமாக அழைத்துசென்றார். நிமிர்ந்து நின்று பேசவைத்தார். அவரையே "கன்னடத்து பாப்பான் " என்று ஏசியவர்களும் உண்டு.
தலித் வக்கீல் மீதே தீண்டாமை சட்டத்தின் கீழ் ( அவர் கம்யூனிஸ்ட் )வழக்கு போட்ட புத்திசாலி போலீஸ் அதிகாரிகளைக் கொண்டது தான் தமிழகம்.
நம் எதிரிகளின் பின்னால் அணிதிரண்டு நிற்கும் மக்களை வென்றெடுக்க இதுவல்ல வழி. நெருங்குபவனையும் விரட்டி அடிக்காதிர்கள் .
"எல்லாரையும் எதிரிகளாக்கி சுத்த சுயம்பிரகாசமாய் நிற்பது லெனினியக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதை மெத்த பணிவோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் " என்கிறார் sap .
இந்த அரைவேக்காடுகளுக்கு பணிவோடு சொன்னால் புரியாது.
மண்டையில் அடித்து சொல்லுங்கள்.
Sunday, March 12, 2017
மனோகர் பாரிகரும் ,
ராஜகோபாலச்சாரியும் ...!!!
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வந்துள்ளன . கோவைவை ஆண்ட பாஜக முதல்வர் உட்பட எட்டு மந்திரிகள் தோற்றனர் .காங்கிரஸ் 17 தொகுதிகளில் வென்று பெரியக்கடசியாகிவிட்டது.பாஜக விரற்கு 11 இடங்கள் தான் . காங்கிரஸ் நான்கு இடங்களை சுயெச்சை மூலம் பெற்று ஆடசி அமைக்க நாக்கை துருத்திக்கொண்டு வந்தது.
கவர்னர் சின்கா மனோகர் பாரிகரை அழைத்து ஆடசி அமைக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார். பாரிகரும் மத்திய அமைசசர் பதவியை விட்டு விட்டு பாஜக முதல்வராகப்போகிறார்.
இது ஜனநாயக படுகொலை என்று கூக்குரல் எழுந்துள்ளது.
1952ம் ஆண்டு அன்றைய மதராஸ் மாகாணத்தில் தேர்தல் நடந்தது.காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது,கம்யூனிஸ்டுகள் தலைமையில் உருவான கூட்டணி ஆட்ச்சியை பிடித்தது. முதல்வர் யார் ?கம்யூனிஸ்ட்கட்சியை சேர்ந்த நாகிரெட்டியா, பி.ராமமூர்த்தியா, அல்லது கூட்டணியை இருந்த பிரகாசம் காருவா என்று பாத்திரிகைகள் எழுத ஆரம்பித்தான.
அப்போது கவர்னராக இருந்தவர் ஸ்ரீ ஸ்ரீ பிரகாசா. மத்திய நேரு ஆடசியின் உத்தரவின் பேரில் பிரகாசா ராஜ கோபாலாச்சாரியை அழைத்து ஆடசி அமைக்க சொன்னார்.கூட்டணியில் இருந்த மாணிக்கவேலரை பிடித்து ராஜாஜி பெரும்பான்மையை காட்டினார்.
கம்யூனிஸ்டுகள் ஆட்ச்சிக்கு வரக்கூடாது என்பதற்காக அன்று காங்கிரஸ்காரர்கள் செய்த ஜனநாயகப்படுகொலை இன்று காங்கிரஸ் வரக்கூடாது என்று பாஜக வால் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
Friday, March 10, 2017
"ராஜகுண சேகர் "
பன்முக திறமை கொண்ட ,
"No 1 Master "
வடக்கே சிதம்பரம், தெற்கே நாகர்கோவில்,கிழக்கே ராமேஸ்வரம், மேற்கே பழனி என்று பறந்த மதுரை மண்டலத்தின் விருது நகர் கிளையில் தட்டச்சராக இருந்தார் ராஜகுணசேகர். தஞ்சை ,நெல்லை பிரிவதற்கு முன்.
செய்நேர்த்தி என்பதை அவரிடம் காணமுடியும். Balance sheet லிருந்து வரவு சிலவு கணக்குவரை இயந்திரத்தின் spacebaar கணக்கிட்டு பிசிறு இல்லாமல் செய்வார். பல அதிகாரிகள் தங்களுடைய அறிக்கைகள் குறிப்புகளை நேராக சேகரிடம் கொடுத்து அடிக்க சொலவதை நானே பார்த்திருக்கிறேன்.
அப்போதெல்லாம் "காத்ராஜ் " டைப்பிஸ்டுகளுக்காக அகில இந்திய அளவில்ப்போட்டிகள் நடத்தும். இரண்டு முறை பரிசு பெற்றிருக்கிறார் சேகர் .
மட்டுமல்ல விளையாட்டிலும் அவருக்கு. காரம்,செஸ், டேபிள் டென்னிஸ் என்று மாட்டு மில்லாமல் இறகு பந்து, வாலிபால் இரண்டிலும் சிறந்து நின்றவர் .குழு காப்பதனாக பணியாற்றியவர். Zone அளவில் குழு காப்டனாக இருந்தார். ஒருகட்டத்தில் குழு மானேஜர் இந்தியாமுழுவதும் குழுவை அழைத்து சென்றிருக்கிறார்.
இசையில் ஆர்வமுள்ளவர். ஆர்மேனியம், கி போர்டு, தபேலா வாசிப்பார். மதுரை பீப்பிள்ஸ் தியேட்டர் குழுவின் இசை இயக்குனர். கே.முத்தையா அவர்களின் "புதிய தலைமுறை " நாடகத்தில் சனாதன குடுமப்த்தில் பிறந்த இளம் விதவை தன காதலனோடு சென்னை சென்று புதிய வாழ்க்கைக்காக செல்வாள்."நான் வாழ்ந்து காட்டுவேன் "என்றபாடலுக்கு வரியும், இசையும் அமைத்தது இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது .
சிறந்த நடிகர். அவருடைய அண்ணன் தனபால் பாண்டியன் செவ்வானம் நாடகத்தில் நடிப்பார். அவர் ஒய்வு பெற்றபோது சேகர் நடித்தார். தம்பி தம்பி தான்! அவருடைய மிகசிறந்த நடிப்புக்கு உதாரணம் "பிதாவே இவர்களை இல்லை என்னை மன்னியும் " என்ற நாடகம். சபையில்நடக்கும் அக்கிரமங்கள் பிடிக்காமல் தன உடுப்பைகழற்றி பிதாவின்காலடியில் வைத்து விட்டு சபையை விட்டு வெளியே ரும் காட்ச்சியில் தூய கிறிஸ்தவன்கூட விம்மி அழுது விடுவார்கள்.
மட்டுமல்ல .நல்ல இயக்குநரும்கூட ."பிதாவே இவர்களை மன்னியும் " நாடகத்தை இயக்கியவரும் அவர்தான் .1984ம் ஆண்டு சென்னையில் நாடக விழா நடந்தது அதில் காஸ்யபன் எழுதிய "வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் " நடந்தது. இயக்கியவர் சேகர். தமிழ் நாட்டின் பட்டி தொட்டி எல்லாம் நடத்தப்பட்ட நாடகம்.
அகில இந்திய விஜ்ஞான ஜாத்ரா மதுரை வந்தபோது அவர்களை வரவேற்று நாடகம் போட்டோம். நான் கலீலியோவாகவும் ,அவர் போப் ஆண்டவராகவும் நடித்தோம். நாடகத்தின் பெயர் "கலிலியோ " .பார்த்தவர்கள் "போப் " நாடகம் என்றே " இன்றும் சொல்வார்கள்.
கலைத்துறை மட்டுமல்ல .சிறந்த எழுத்தாளரும் கூட ஒவ்வொரு வாரமும் "தீக்கதிர் " அலுவலகம் வந்து எழுத்துவார் வண்ணக்கதிரில் தி ரைப்பட விமரிசனங்கள் எழுதுவது அவருடைய பணிகளில் ஒன்று.
மதுரை கிளை ஒன்றில் "த்வனி " என்றொரு அமைப்பு இருந்தது>மாதம் மூன்று ரூ வசூலிப்போம். அப்போதெல்லாம் தி .ஜ,ரா, ,ஜெயகாந்தன், என்று படைப்புகளை வாங்கி படிப்போம். அதனை நிர்வகிக்கும் பொறுப்பை சேகர்தான் செய்வார்.
இன்சூரன் ஊழியர்களின் ஊணும் உயிருமான சங்கத்தின் செயல வீரர். ஒருகட்டத்தில் மண்டல நிர்வாகியாக பொறுப்பேற்றார். அப்போது அவர் உத்தமபாளையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தலைமை வகித்து பேசியது இன்றும் என்காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
சனிக்கிழமை தோறும் கிளை 1 கூடுவோம். அந்த வாரம் வந்த peoples democracy விவாதிப்போம். தொகுத்து வழங்குவது சேகர்தான்.
மார்க்சிய அடிப்படை நூல்களை கற்றவர் . மார்க்சிஸ்ட்கட்ச்சியின் ஊழியர்.