Monday, November 30, 2015
Saturday, November 28, 2015
தி.மு.க - அ .தி.மு.க லாவணி ...!
தமிழ் செம்மொழியானது யாரால் ? தொல்காப்பியரிலிருந்து, வள்ளுவரிலிருந்து ,கமபனிலிருந்து ,பாரதி ,புதுமப்பித்தனிலிருந்து இதனச் சாதித்தவர்கள் ஏராளம் ! சூரியநாராயண சாஸ்திரி என்ற பரிதிமார் கலைஞரும் பொறுப்பு ! இதற்காக கிராமம் கிராமமாக ,சிற்றூர் ,பேரூர்,நகரம் ,மாநகரம் ,நகராட்சி மாநகராட்சி என்று கருத்தரங்கள் நடத்தி,மாநாடு நடத்தி மக்களிடையே சொல்லி அவர்களின் ஆதரவைதிரட்டிய த.மு.எ.சவும் பொறுப்பு ! இறுதியாக டெல்லி சென்று ஜநதார் மந்தர் ரிலிருந்து ஊர்வலமாகச் சென்று பிரத்மரிடம் மனுகொடுத்து வேண்டிய ,தமிழறிஞர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்கலைஞர்கள் பொறுப்பு !
இது பற்றி கண்டு கொள்ளாத தி .மு.க வும் அதிமுகவும் இப்போது "நாந்தான் நாந்தான்" என்று லாவணி பாடுவது வேடிக்கை !
தமிழகத்திலிருந்து 250க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும்,கலைஞர்களும் த.மு.எ.ச வின் தலைமையில் டெல்லி சென்றார்கள் !
அவர்களை வரவேற்று,தங்கும்வசதி,உணவு ஏற்பாடு,மற்றவற்றைசெவ்வனே செய்துகொடுத்தவர் மதரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர் பி.மோகன் அவர்கள் !
பிரதமர்,மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க ஏற்பாடு செய்து உதவியவர் "வைகோ "அவர்கள் !
பா.ம.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உர்வலத்தில்கலந்து கொள்ள மறுத்து விட்டார்கள் ! மனுவில் கையெழுத்து போட்டார்கள் !
அண்ணா தி.மு.க உறுப்பினர் மலைச்சாமி வருகிறேன் என்றார்! ஊர்வலம் புறப்படும் வரை காத்திருந்தோம் ! முந்திய இரவு அவசர அழைப்பின் பேரில் சென்னை சென்றுவிட்டதாக கூறினார்கள் !
தி .மு.க கலந்து கொள்ள மறுத்து விட்டது!
காங்கிரஸ் கட்சியின் சுதர்சன நாச்சியப்பன் வந்தார் ! பிரதமரிடம் மனு கொடுக்கும்பொதும்கூட இருந்தார் !
பிதம்ரிடம் எங்களை வைகோவும்,மோகனும் அழத்துச் சென்றார்கள் !
த.மு.எ.ச தலைவர்அருணன் அவர்கள் மனுவை முழுவதுமாக படித்து பிரதமர் "வாஜ்பாயிடம் "கொடுத்தார் ! " we are working on it " என்று பிரதமர் பதிலளித்தார் !
பதவியை விட்டு விலகும் வரை எதுவும் செய்யவில்லை !
அடுத்து ஐக்கிய முற்போக்கு அரசு ,இடதுசாரிகளின் ஆதரவோடு வந்தது !
தமிழ் செம்மொழி என்று அறிவித்தது !
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கமும்
கலை இலக்கிய விருதுகளும்........!!!
நாற்பதாம் ஆண்டில் காலடி வைக்கும் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் எழுத்தாளர்கள் சங்கம் வழக்கம் போல் சென்ற ஆண்டிற்க்கான விருதுகளை அறிவித்திருக்கிறது .
வெளி மானிலங்களில் உள்ள எழுத்தாளர் அமைப்புகள் தொடர்ந்து ஆண்டுதோரும் எப்படி நீங்கள் இப்படி லடசக்கணக்கான பெருமானமுள்ள விருதுகளை அளிக்கீறீர்கள் என்று கேட்டு ஆச்சரியப்படுகிறார்கள் .
அகில இந்திய உருது,இந்தி எழுத்தாளர் சங்கம் சில ஆண்டுகளூக்கு முன்பு கலகத்தாவில் மாநாட்டினை நடத்தியது. மதிப்பிற்குரிய எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியும் நானும் கலந்து கொண்டோம். கேரளா,கர்நாடகா,ஆந்திரா,மராட்டிய,மபி.உ.பி,பஞ்சாப் மாநில எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர் . அவர்கள் நாம் நடத்தும் கலை இரவு பற்றி கேள்விப்பட்டு மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். மாலை 6 மணியிலிருந்து விடிய விடிய பார்வையாளர்களை கட்டிப்போட்டு எப்படி நடத்துகிறீர்கள் என்று கேட்டார்கள்.
எங்கள் பிரகதீஸ்வரனையும்.கரிசல் குயிலையும் ,உரை வீச்சாளர்களயும்,சிறு.குறு நாடக கலைஞர்களையும் பற்றி விவரித்தேன்..
மனிதாபிமானத்திலிருந்து, புரட்சிவரை கொண்ட சங்கத்தின் பத்து அம்சத்தைச் சொன்னேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக "கலையும் இலக்கியமும் மக்களுக்காகவே " என்ற சங்கத்தின் கோட்பாட்டயும் குறிப்பிட்டேன்.
நான் தங்கி இருந்த அறைக்கு வந்த பல எழுத்தாளர்களொடு பேச வாய்ப்பு கிடைத்தது.
"தமிழ் வாசகர்களுக்கு 50ம் ஆண்டுகளிலேயே விச காண்டெகர் அறிமுகம் "என்று சொன்ன பொது மரட்டிய எழுத்தாளர் என் கையைக்குலுக்கினார். "தாகூரும் சரத் சந்திரரும் எங்கள் கிராமங்களில் தொடர்கதையாக வாரப்பத்திரிகைகளில் படிக்கப்பட்டவர்கள். பிரெம் சந்தும், வியொகி ஹரியும் எங்களுக்குத் தெரிந்தவர்கள். தகழியும்,பாஸ்கரும்,வேமண்ணாவும் , மாஸ்தியும் நாங்கள் அறிவோம் .
நணப்ர்களே உங்களுக்கு பாரதிய கொஞ்சம் தேரியும்.புதுமைப் பித்தனை தெரியுமா? அழகிரி சாமியை தெரியுமா? சின்னப்ப பாரதியை தெரியுமா ? "
என்று கேட்டு அவர்களை அசத்தினேன் !
தமிழின் சிறந்த படைப்புகளெல்லாம் மற்ற இந்தியமொழிகளில் வந்துள்ளதா ?என்று
ஆர்வமாககெட்டார்கள் !
"ஆம் ! "என்று பொய் சொல்ல எனக்கு தயக்கமாக இருந்தது.
Friday, November 27, 2015
"மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி !"
"வாழ்க ! வாழ்க !" என்று ஒலித்தது !!!
90 ம் ஆண்டுகளின் ஆரம்பம் ! செங்கலைக் காட்டி இந்துத்வா காரர்கள் கலகம் செய்து கொண்டிருந்த காலம் ! இவர்களை சந்திப்பது எப்படி ? என்று இடதுசாரி கலைஞர்கள் ஆலோசித்தபடி இருந்தனர் !
இந்தியா பூரவிலும் கலைஞர்களை வரவழைத்து அவர்களூக்கு போதனை செய்ய முடிவு செய்யப்பட்டது !
தமிழ் நாட்டிலிருந்து அருணன் தலமையில், குமபகோணத்தைஸ் செர்ந்த ஜீவகுமார்,பிரளயன்,மதுரை டாக்டர் செல்வராஜ் ஆகியொரொடு நானும் சென்றிருந்தேன் !
மத்திய குழுவின் மெற்பார்வையில் பயிற்சி நடந்தது ! முழுக்க முழுக்க அதனை நடத்தியவர் சீத்தாரம் எச்சூரி அவர்கள் ! மேடைகளில் அவரை பார்த்திர்ந்தாலும் மிக அருகில் அவருடைய பெச்சைக்கேட்டது அப்போது தான் !
இந்த முகாமில் அரூணன் அவர்கள் தமிழக நிலமையை விவரித்து நமது கலைப்பணி எப்படீருக்கிறது என்பது பற்றி விவரித்தார்கள் ! நானும் என்முறை வந்த பொது நாம் என்ன செய்யலாம் என்பது பற்றி பேசினேன் !
செக்கச்சிவந்த மேனி ! சுருண்ட முடி ! கூரிய மூக்கு ! அகன்ற வாய் ! குழிவிழுந்த மோவாய் ! கருப்பு சட்டை,கால்சராயில் காம்பீரமாக அவர் பெச ஆரம்பித்தார் ! ஆற்றொட்டம் போன்ற ஆங்கில உறை ! பண்டைய இலக்கியங்களிலிருந்தும் ,கலை வெளிப்பாடுகளீலிருந்து மேற்கோள் காட்டிய பேச்சு ! நவீன நாடகங்கள், சமகால இலக்கியங்கள் , நவீனத்துவம் .பின் நவீனத்துவம் என்று பெருமழையாய் கொட்டினார் !
தமிழ் நாட்டிலிருந்து வாந்திருந்த எங்களைப்பர்த்து "நீங்கள் "சோ" ராமசாமியின் சம்பவாமி யுகே யுகே" என்ற நாடகத்தைப் பார்த்திருகிறீகளா ? என்று கேட்டர் ! நான் கையைத்துக்கீனென் ! புராணங்களையும்,இதிகாசங்களையும் அவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் ?நாம் ஏன் பயன்படுத்தக்கூடாது! அவை நமக்கும் சொந்தமானது தானே ? '" பிரமிப்பில் நாங்கள் ஆழ்ந்து கொண்டிருந்தோம் !
இந்தியாவின் முக்கிய கலை ஆளுமைகள் அமர்ந்திருந்தனர் ! என் நினைவு சரியென்றால் ஹபீப் தன்வீர் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார் ! இயக்குமர் ஏம்.எஸ். சத்யூ வும் இருந்த ஞாபகம் !
நாங்கள் தமிழ்நாடு திரும்பினோம் !
த.மு.ஏ.சவின் மாநில மாநாடு நடக்க விருந்தது ! அதனை கோவையில் நடத்த முடிவாகி இருந்தது!
சங்கத்தின் மைய உறுப்பினர்கள் மாநாடு நிகழ்ச்சி நிரல் பற்றி விவாதித்து முடிவு செய்தொம் !
மாநாட்டிற்கு சிவத்தம்ம்பி, ஜெயகாந்தன் ,ஆகியொரைக் கூப்பிட முடிவானது ! நான் என்பங்கிற்கு சீத்தாராம் எச்சுரி அவர்களி கூப்பிட வெண்டும் என்று ஆலொசானை கூறினேன் !
அவர் வந்தால் போகவர விமானச்செலவு ஆகுமே என்ற கவலை வந்தது ! கோவை மாவட்ட செய்லாள்ராக இருந்த வக்கீல் ஆனந்தன் அது எங்கபாடு ! கூப்பீடுங்கள்" என்று பச்சைக்கொடி காட்டிவிட்டார் 1
த.மு ஏ சவின் வரலாற்றில் கோவை மாநாடு தன் முத்திரையப்பதித்த ஓன்றாக மாறியது !
சீத்தாராம் அவர்களை விமான நிலையத்திலிருந்தூ அழைத்து வந்து ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பு எனக்கு வந்தது ! என்னோடு கானரா வங்கி தோழர் மாதேஸ்வரன் இருந்தார் ! இது தவிர
ஏஸ் ஏ.பி, கருணாகரன்,மாணீக்கம் ஆகியோறோடு வீமான நிலயம் சென்றொம்! அவருக்கு சால்வை இட்டு வரவேற்கும் வாய்ப்பினை சங்கம் எனக்கு அளித்து !
கிரிம் கலர் பாண்ட்டும்,வெள்ளைசட்டையும் அணிந்திருந்தார் ! குளித்து வந்தார் ! மாலை பெசுவதற்கான குறிப்புகளை தயார் செய்தார் ! உணவருத்திணொம் ! சிறு தூக்கம் ! தூங்கும் போஹும் அதே பாண்ட் அதே சட்டை !
"ஏன் தோழர் ? ரிலாக்ஸ்டா கைலி உடுத்திக்குங்களேன்?"
"you are too inqusitive ! comrade ? "
"how ?"
"a r r e baabaa ! i forgot to bring my dress ! ikept my dress on the table ! my inner garments are there ! but paant and sahirt i forgot ! "
தோழர் மாதேஸ்வரன் தான் அந்த யொசனையை சொன்னர்! அருமையான மயில் கண் ஜரிகை செலம் குண்டஞ்சு வேட்டியை பொட்டு அண்ணணை மாப்பிளை மாதிரி மேடைல ஏத்திடுவோம் என்ற்றர் ! தயங்கிய சீத்தாராம் எச்சூரி அவர்களை எல்லருமாகச்சேர்ந்து அமுக்கி விட்டொம் !
மாலை மெடையில் ஏறினார் ! செக்கச்சிவந்த மெனி ! சுருண்ட முடி ! கூறியமூக்கூ ! அகன்ற வாய் ! குழிவிழுந்த மோவாய் ! ஜரிகை வேட்டி ! மாப்பிள்ளை போல மேடையில் ஏறினார் !
"சீத்தாராம் எச்சூரி ! வாழ்க !வாழ்க !!"
என்ற கோஷம் வீண்ணைப் பீளந்தது
"மார்க்சிஸ்ட் கட்சி வாழ்க !வாழ்க!
என்று என் காதில் ஒலித்தது!!!
Thursday, November 26, 2015
"நாங்கள்
இஸ்லாம் ஆனவர்கள் "
2000 வது ஆண்டு பிறந்தவுடன் "மில்லியணம் " என்று கொண்டாடினார்கள். நிருபர் ஒருவர் நோபிள் விருது பெற்ற அமார்த்திய சென்னிடம் முதல் ஆயிரமாவது ஆண்டில் நடந்த முக்கியமான நிகழ்வு என்ன ? என்று கேட்டிருக்கிறார்.
"இந்தியாவிற்கு இஸ்லாம் அறிமுகமானது தான் "என்றார் அவர்
அரேபிய மணல் வெளிகளில் அதற்கு முன்பும் மக்கள் வாழ்ந்தார்கள் .அவர்களுக்கு என்று ஒரு சமூக அமைப்பை வைத்திருந்தார்கள். உலக நாடுகள் பலவற்றோடு தொடர்பு கொண்டார்கள். பண்ட ,பண்பாட்டு பரிமாற்றங்கள் நடத்தினார்கள் .தமிழகத்தோடும் தொடர்பு கொண்டிருந்தார்கள்.
தமிழகத்தின் கிழக்கு கடற்கரைகளில் தாங்கள் கொண்டுவந்த பொருட்களை அப்போதைய அரசர்களின் அனுமதியோடு "கிட்டங்கிகளை" அமைத்து வர்த்தகம் புரிந்தார்கள். வர்த்தகர்கள் முறைவைத்து தங்கள் நாடு சென்று வருவார்கள். அவர்களில் சிலர் இங்கேயே தங்கி பண்டங்களை பாதுகாப்பார்கள்.
நுற்றாண்டுகளாக இவை நடை பெற்றன . கிட்டங்கிகள் இருந்த இடங்கள் குடி இருப்புகளாகி அவர்கள் இந்தமண்ணொடு கலந்து வாழ்ந்தார்கள்.ராமநாத புறத்தில் இருக்கும் "கீழக்கறை " உதாரணம்
அப்போது தான் அரேபிய நாட்டில் ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது. "நபிகள்" நாயகம் அவதரித்து, இனக்குழுக்களிடையே ஒருமையை வளர்க்க புதிய மார்க்கமாக "இஸ்லாம் " (அமைதி )என்ற பாதையை கொடுத்தார்கள்.மிகவும் இளமையான இந்த மார்க்கம் தன்னுள் பல முற்போக்கான கொள்கைகளை கொண்டதாக இருந்தது.
அரேபியாவில் எற்பட்ட மாற்றம் அரேபிய வியாபாரிகள் மூலம் இங்கும் பரவியது.
கிட்டங்கிகளீலும் குடி இருப்புகளிலும் வாழ்ந்தவர்களும். தங்களையும் மாற்றிக் கொண்டார்கள்.
"கீழக்கறை" யில் வாழும் முஸ்லீம்கள் இன்றும் தங்களை "இஸ்லாமானவர்கள் " என்றுதான் அழைத்துக் கொள்கிறார்கள் .
அந்த கிழட்டு ஆச்சார்யாவும் ,இளைஞர் ராஜ்தாக்கரெயும் இவர்களை பாகிஸ்தானுக்குபோகச்சொல்கிறார்களே ?
நியாயமா ???
Monday, November 23, 2015
த.மு .எ .க.சங்கத்தின் முதல் மாநாடு !!!
Monday, July 07, 2014
நினைந்து
நினைந்து
நெஞ்சம் ......!!!
1975ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் துவங்கியது ! வரும் 12ம் தேதி 39 ஆண்டுகள் கழிந்து 40 ம் ஆண்டுக்குள் புகுந்து கொள்ள விருக்கிறது !
மதுரையில் எழுத்தாளர் சங்க முதல் மாநாட்டை நடத்த சில எழுத்தாளர்கள் ! -அப்போது அவசர நிலை அறிவிக்கப்படவில்லை - தமுக்கம் கலை அரங்கில் நடத்த முடிவாகியது ! ஆனால் ஜூன் மாதம் 25 ம் தேதி அவசர நில பிரகடணம் வந்தது !
இந்தியா முழுவதும் முடங்கியது ! எழுத்தாளர் சங்கமோ கருத்தரங்கம் , சொற்பொழிவு ,கவியரங்கம் ,நாடகம் என்று சமூக பிரச்சினைகளை தோட்டு தன நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு இருந்தது !
நினைக்க நினைக்க நெஞ்சம் விம்மத்தான் செய்கிறது !
முதல் மாநாட்டில் எப்பேற்பட்ட ஆளுமைகள் பங்கெடுத்தார்கள் !
அந்த மாபெரும் தீரர் சங்கரய்யா முழுமையாக இருந்து நடத்திக் கொடுத்தார் !
இந்த எழுத்தாளர் படைக்கு தளபதியாக இருந்து தோழர் கே முத்தையா அவர்கள் வழிநடத்தினார் !
பூனே நகரத்தில் பிறந்து புகழ்பெற்ற ப்ஃர்கூசன் கல்லூரியில் பயின்று தன வாழ்நாள் முழுவதையும் "ஒர்லி " மலைவாழ் மக்களுக்காக அர்ப்பணித்த கோதாவரீ அம்மையார் துவக்கிவைத்தார் !
மராட்டிய ம்மொழியின் மிகச்சிறந்த எழுத்தாளரான அவர் " மனிதன் விழிதெழுந்தபோது " என்ற நூலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர் !
கேரளத்தின் இலக்கிய விமரிசகர் கோவிந்த பிள்ளை சிறப்புரை !
" பிரசண்ட விகடன்" ஆசிரியர் நாரண துரைகண்ணன் , ' கண்ணன் " பத்திரிக்கை ஆசிரியர் ஆர்.வி ஆகியோர் வந்திருந்து வாழ்த்திப் பேசினர் !
வடக்கே சென்னையிலிருந்து ஜானகி காந்தன்,தெற்கே நெல்லையிலிருந்து புலவர் கந்த சாமி ,மேற்கே போடியிலிர்ந்து புத்தூரான் , கிழக்கே பரமக்குடியிலிருந்து கந்தர்வன் , ஜான்சன் என்ன்று தமிழகத்தின் நான்கு திசைகளிலிமிருந்து 110 பேர் வந்திருந்தனர் !
மாநாடு முடிவில் நாடகம் ! கே முத்தையா அவர்கள் எழுதிய "புதிய தலைமுறை " நாடகம்- மதுரை பீப்பிள்ச் தியேட்டர் குழுவினர் நடத்தினர் !
சாஸ்திரிகள் ஒருவர் புரோகிதராக வாழ்கிறார் ! அவர் மகன் பரந்தாமன் என்பவனுக்கு மந்திரங்ககளை கற்றுக் கொடுத்து அவனையும் புறோகிதனாக்குகிறார் ! பக்கத்து வீட்டில் வசிக்கும் வக்கீலின் விதவை மகளொடு பரிச்சியம் ஏற்படுகிறது பரந்தாமனுக்கு ! இருவரும் நகரம் சென்று புதிய வாழ்வைத்தேடுகிறார்கள் !
கே.எம் ,அவர்கள் இந்த நாடகத்தில \காஞசி மகான் பெரியவர போன்று சாஸ்திரிகளைச் சித்தரித்திருப்பார் ! மதுரை மில தொழிலாளி துறை ராஜ் நடித்தார் ! பர்ந்தாமனாக காஸ்யபன் நடித்தார் ! அவரே நாடகத்தை இயக்கினார் !
நாடகத்திற்கு டிக்கட்டு ரூ 1 ,2 ,3, 5 என்று இருந்தது ! மிகவும் அதிகம் என்று பேச்சும் வந்தது ! நாடகம் மூலம் 2800 ரூ மிச்சம் ! அதனை தமுஎச பண்டில் கொடுத்துவிட்டார்கள் !
மாநாட்டிற்கு வரும் சார்பாளர்கள் ,பார்வையாளர்கள் கட்டணம் 5/- ரூ ! மாநாட்டில் பலர் பேசும் பொது அதிகம் என்று பேசினர் !
முதல் மாநாட்டிற்கான சிலவு 30,000 /-ரூ !
மாநாட்டிற்காக பி,எம். குமார்,வீரபத்திரன்,கார்மேகம், பூச்சி போன்ற மூத்த தோழர்களீன் பணி மறக்க முடியாதது !
( கடினமான விஷயங்களை தவிர்த்து எளிமையான விஷயங்களை எழுத மாட்டீர்களா ? என்று அன்பர் ஒருவர் கேட்டிருந்தார் )
"உறக்கமும் குறட்டையும் "
பொதுவாக நன் குறட்டை விடுவதில்லை. எங்கள் குடும்ப பாரம்பரியம் அப்படி.
என் மாமனார் குடும்பத்தில் குறட்டை விடவில்லை என்றால் அவர்களை அந்த குடும்ப உறுப்பினராக ஏற்றுக்க்கொள்ள மாட்டார்கள்.
என் மாமனார் உட்பட மைத்துனர்கள் மைத்துனிகள் குறட்டை விடுவதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்.
சமிபத்தில் என் மைத்துனி ஒருவர் வந்திருந்தார். மிகவும் விசேஷமாக குறட்டை விடுவார். ஆச்சரியமாக இருக்கும்.
எல்லாரும் தூங்க ஆரம்பித்த பிறகு குறட்டை விடுவார்கள். இவர் குறட்டையை ஆரம்பித்து விட்டு தூங்க ஆரம்பிப்பார். "இப்படி தூங்குகிறாரெ ,ரயில் டிக்கெட்டை எல்லாம் பத்திரப்படுத்தி இருக்கணுமே "என்று நினைத்தேன்.
என் mind voice கேட்டது போன்று குறட்டையை நிறுத்திவிட்டு " மாமா ! டிக்கெட்டை கை பைல பத்திரமா வச்சிருக்கேன்"நு " சொல்லிட்டு குறட்டைய ஆரம்பித்தார்.
சார் ! என் மைத்துனர் குறட்டை கொஞ்சம் விசேஷமானது. நீங்கள் இங்கிலீஷ் படம் பாப்பிங்களா? அதுவும் warfilm ? அதுல பீரங்கிகுண்டு எரியற காட்சி பாத்திரிக்கீங்களா ? குண்டு பாயும் பொது மெலிதாக ஒரு "விசில் " சத்தம் கேட்கும் " அது மாதிரி குறட்டை விடுவார். குண்டு போய் எதிரிகட்டடத்தை தூளாக்கும் இல்லையா ? அப்பம் பூகம்பம் மாதிரி சத்தம்கேட்கும் ! என்மைத்துனரும் அதேமாதிரி அச்சு அசலா விடுவார் சார் !"
என் உயிரே போனாலும் அவரை ரயில்ல அனுப்ப மாட்டேன்.
என்ன செய்ய ?
ஒரு தரம் பாண்டியன்ல போகவேண்டிய தாயிட்டுது.ராத்திரி பூறாம் தூங்கவிடாம பேசிக்கிட்டு,சீட்டாடிகிட்டு சமாளிச்சேன். விருத்தாசலம் வந்ததும் எனக்கு கொஞ்சம் கிறங்கிடுச்சு.லேசா சாஞ்சுட்டேன்.
மைத்துனரும்தூங்கி இருக்காரு. விசில்சத்தம் வந்திருக்கு.நாந்தன் தூங்கிட்டெனே !
குண்டு போட்டுட்டாரு..
முன்றாவது கோச்சுல இருந்த TTE பதறிப்போயி செயின பிடிச்சு இழுக்க வண்டி நிக்க ,மறுநாள் என் போட்டொவோட என் மைத்துனர் சிரிசுக்கிட்டு பெருமையா நிக்கிற படம் தமிழக பத்திரிகைகள்ல வந்திருந்தது சார்.!
என் மாமனார் வீட்டுக்கு போனா ஹால்ல தான் எல்லாரும் படுப்பம்.பத்துபத்தரைமணீ ஆனா மிருகக்காட்சி சாலை மாதிரி சிங்கம் கர்ஜிக்கும்.புலி உறுமும்..நரி ஊளையிடும் .நாய் குறைக்கும் .
நான் எட்டு மணிக்கே படுக்கற மாதிரி பாவ்லா காட்டுவேன். 9 மணிக்கு நைசா எழுந்து ஏதாவது சினிமா கொட்டகைக்கு போயிடுவேன்.
இந்திபடம்தானே . நமக்கு ஒருமண்ணும்புரியாது. கண்ணை மூடிக்கிட்டு தூங்கிடுவேன் .
ஒருநாள் நான் கிளம்பறத பாத்து என் மாத்துனரும் வரேன்னரு. ஆன மட்டும் தவிர்க்க பாத்தேன்.முடியல. நல்ல ரிக்ளைன் நாற்காலி. நல்ல தூங்கிட்டென்.
மைத்துனர் குண்டு போட்டுட்டார். சினிமாக்காரன் சிலைடு போட்டு F 21, f 22
பார்வையாளர்கள் வெளியெ வரவும் நுபோட்டு எங்கள மரியாதையா அனுப்பிட்டான். ஆனா மறுநாள் வடநாட்டு இங்கிலீஷ் பத்திரிகள்ள வந்திட்டு சார் !
நீங்க கேட்குது புரியுது சார். என் துணைவியார் குறட்டை விடுவாங்களான்னு கெக்கறீங்க ?
கலயானமாகி 53 வருசம் ஆகுது.
குடும்ப அமைதியை கெடுத்துடாதீங்க சார்வாள் !!!
Friday, November 20, 2015
எங்களின் தொழிற்சங்க தந்தை
" தோழர் நாராயணன் அவர்களுக்கு "
அஞ்சலி !!!
"நான் அப்போது ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். சுதந்திரத்தீர்குமுன்பு.மூத்த உழியர்கள் ஜனவரிமுதல் தேதி அதிகாரிகளை பார்த்து வாழ்த்து சொல்வார்கள். வேறும்கையொடு அல்ல. ஆப்பிள் ,ஆரஞ்சு, அல்லது இனி ப்புபொட்டலங்களொடுசெல்வார்கள்.
நான் புதியவன்.என்னையும் அழைத்து சென்றார்கள். எங்கள் கிளை அதிகாரி kRK .பட் என்பவர். எல்லரும் அவருக்கு வாழ்த்து சொன்னார்கள். பரிசுபொரு ளைகொடுத்தார்கள். என் முறை வந்த பொது நானும் சென்றேன். நான் கையில் எதுவும்கொண்டுசெல்ல வில்லை.
கைகுலுக்கினேன்.
What Narayanan you are very Hot ? என்றார் அதிகாரி.
எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை.
I am always hot sir ! என்று சொல்லி வைத்தேன்
அவர் முகம் சிவந்து விட்டது.
i n That case I Will pour ice cold Water on your head !"என்றார் அதிகாரி.
அவர் என்னவோ மிகப்பெரியந கைச்சுவையை சொல்லி விட்டது போன்று வந்திருந்தசகஊ ழி யர்கள் சிரித்தார்கள். எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது.என்ன செய்ய ? நான் ஒரு சாதாரண டைப்பிஸ்ட் ! அவ்ர்கிளை மேலாளர்.
காலம் மாறியது..
1960ம் ஆண்டு. இன்சூரன்ஸ் துறை நாட்டுடமை யாக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. மதுரை மண்டல அலுவலகத்தில் நான் பாணியாற்றி க்கொண்டிருந்தேன் ..
KRK பட் இப்போது மண்ட மேலாளராஇருக்கிறார்ஹை திராபாத்திலிருந்து
மதுரை மண்டலத்திற்கு மாற்றலாகி வந்தார் .
வந்தவர்தொழிற் சங்க நடவடிக்கை களை பற்றி விசாரித்திருக்கிறார்.பழைய ஓரியண்டல்நாராயனன் தான் இப்போது மண்டல சங்க தலைவர் என்று கூறியிருக்கிறார்கள். கோட்டு சூட்டுபோட்டமனடலமேளாளரான krk பட் சேம்பரை விட்டு எழுந்து நான் இருக்கும் அறைக்கு வந்தார்.
hallo ! naaraayaNan ! how are you ? என்று கைகுலுக்கினார்
நான் அன்றும் டைப்பிஸ்ட் தான்>இன்றும் டைப்பிஸ்ட் தான்.
ஒரே ஒரு வித்தியாசம்தான் உண்டு.
அன்று ஒரியண்டல்கம்பெநியில் தொழிர்சங்க அமைப்பு இல்லை. இன்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழையர்சங்கம் என்ற தீரமிக்க சங்கம் இருக்கிறது." அது தான் வித்தியாசம்."
(961ம் ஆண்டு நாராயணன் அவர்கள் மதுரையிலிருந்து திண்டுக்கல் மாற்றலாகி சென்றார்கள் . அப்போது ஊழியர்கள் கூட்டத்தில் பேசியது)
Wednesday, November 18, 2015
"மைதிலி சிவராமன் பற்றிய ஆவணப்படம் "
"சிதறிய காலம் "
"Fragments of past "
மைதிலி சிவராமன் அவர்கள் அமெரிக்காவில்பணியாற்றி ய காலம் அது. ஐக்கிய நாடுகள்சபையின் காலனி ஆதிக்க எதிர்ப்பு கமிட்டியின் அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்தார் .
விடுதலைக்காக போராடியமக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு. - அவருடைய வாழ்வைப் புரட்டிப் பொட்டது.அவர் நெஞசைக் கவர்ந்த தலைவர்களில் முக்கியம்மானவர்கள் மூவர் .
ஒருவர் மார்ட்டின் லூதர் கிங் .
இரண்டாமவர் சே குவேரா
மூன்றாமவர் பிஃடல் காஸ்ட்ரோ.
காலனி ஆதிக்க எதிர்ப்பு ஊர்வலங்கள் , ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றில் கலந்து கொள்வார். இவற்றை படங்களாக ஆவணங்களாக படமாக்கி அவருக்கு அவருடைய அருமை மகள் கல்பனா காட்டிக் கொண்டிருக்கிறார்.
ஒரு சின்னக்குழந்தை வாய்பிளக்க பார்ப்பதுபோல் மைதிலி அவர்கள் அதனைப் பார்த்து கைதட்டி மகிழ்கிறார்.
"இது எல்லாம் நான்தானா? அவர் எழுதிய கட்டுரைகளைப்பர்த்து இதை நான் தான் எழுதினேனா ? " அவர் சின்னக்குழந்தையாய் கேட்கும்போது நம் நெஞ்சம் விம்முகிறது.
"அம்மா உனக்கு ஓண்ணும் இல்லை அம்மா.உன்னுடையஞாபக சக்திகுறைந்து வருகிறது. அது உன்குற்றம் அல்ல "
மகள் தாயை தேற்றுகிறாள்.
"தோழர் ! தோழர் !" என்று என் இதயம்கதறுகிறது.
"எப்பேர்பட்ட ஆளுமை தாயே !!"
அமெரிக்க ஏகாதிபத்தியம் குயூபா வை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயலாற்றிய காலம். "k"
எழுத்தை உச்சரித்தாலே சுட்டு வீழ்த்த சி.ஐ எ தயாராக இருந்தது..
அந்த தீரமிக்க பெண் அமெரிக்க அரசின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு சின்னஞ்சிறு விமானம் மூலம் ஒரு சிறு travel bag ஐ மட்டும் எடுத்துக்கொண்டு குயூபா சென்றுவந்தார்.
மதுரையில் மாதர் சங்க அமைப்புக் கூட்டத்திற்காக வந்திருந்தார் .மாவட்ட கட்சி அவரை தங்க வைக்க வேண்டிய பணியை என்னிடம் அளித்தது. என்விட்டில் இரண்டு நாள் தங்க ஏற்பாடு. மண்டையன் ஆசாரி சந்திலிருந்து செல்ல வேண்டும்.ஆட்டோ பார்த்தேன்.
"தோழர் எதற்கு ஆட்டோ?." ஸ்கூட்டரின் பின்னாலமர்ந்து ஒரு சின்ன travel bag ஓடு வந்தார்.
"தோழர் ! நீங்க க்யூபா போயிருக்கெளாமே ?"
"அது ஒரு wonderfull experience. வண்டிய பாத்து ஓட்டுங்க ! அப்புறம் பேசலாம் !" என்றார்.
மறுநாள் காலை குளித்து உடைமாற்றிக்கொண்டிருந்தார் "தோழர்! தோழர் ! என்று இறைந்து கூப்பிட்டர்.
"Com . the is the same bag I took to Cuba " I never miss it " என்று கை கொட்டி சிரித்தார்.
அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் பௌனார் ஆசிரமத்தில் விநோபவை சந்தித்திருக்கிறார்.
கீழ் வெண்மணி பற்றி அவர் எழுதிய காட்டுரை மிகவும் பிரபலமானது. "46 பேரை தீயிட்டு பொசுக்கிய கிராதகர்களை நீதி மன்றம் விடுதலை செய்தது.
"these gentlemen will never kill " என்பது தீர்ப்பு .
"The gentlemen killers of kizhavenmani " என்று தலைப்பிட்டு கட்டுரை எழுதினார் மைதிலி அவர்கள்.
ஆவணப்படத்தில் இந்த காட்சி காண்பிக்கப்படுகிறது."நானா ! நானா ! எழுதினேன் " என்று அவர் கேட்கும் பொது " தாயே ! தாயே " என்று நெஞ்சம் அலறுகிறது.
மைதிலிஅவர்களின் மகள் கல்பனா " விடுதலை போரினில் வீழ்ந்த மலரே " என்று பாட முடியாமல் துக்கம் அவர் தொண்டையை அடைக்கிறது.. சமாளித்துக்கொண்டு பாடுகிறார்.அவர் கண்கள்.குளமாக நாமும் கண் கலங்குகிறோம் .
கலை இலக்கிய அன்பர்கள், ஊழியர்கள் அத்துணை பெரும் போற்றீ பாதுகாக்க வேண்டிய ஆவணப்படம் .
Monday, November 16, 2015
நினைக்க நினைக்க
இனிக்கும் செய்தி...!!!
தாழையுத்து என்ற சங்கர் நகர் அருகில் இருக்கும் கங்கை கொண்டானில் "கொலா" தொழிற்சாலையை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் போராடினார்கள் ! அரசு உட்பட எவரும்கண்டுக்கல ! சிவகங்கைமாத்தூரில் கம்யுனிஸ்டுகள் "கோலா" கம்பெனியை எதிர்த்து பொராடினார்கள் ! கண்டுக்கல ! ஜார்கண்டில் ஒரு ஆற்றையே 60 மைல் நீளத்திற்கு "கொலா" கம்பெனிக்கு விற்று விட்டர்கள் !கண்டுக்கல ! இந்த போரட்டங்களில் பங்கு கொண்ட மனிதனுக்கு இது பற்றிய செய்தி வந்தால் மனம் நிறைவையாவது தரும் ! அதே மன நிலைதான் "கத்தி" படத்தை பார்த்த கம்யுனிஸ்டுகளூக்கும் !
ஒரு இலக்கிய படைப்போ,கலைப்படைப்போ ,புரட்சியை நடத்தி விடாது ! ஆனால் பிரும்மாண்டமாக நடக்க விருக்கும் அந்த புனிதப் போரின் முன்னணிப்படையாக அவை sappers and miners ஆக செயல்படும் ! அப்படிப்பட்ட advance guard ஆக செயல் பட கலை இலக்கிய வாதிகளை தூண்டும் செயல்தான் கம்யூணீஸ்டுகள் "கத்தி "பற்றி விமரிசிப்பது !
புரட்சி நடந்த பிறகும் கூட சோவியத்தில் நிலத்தில் இறங்க விவசாயிகள் பயப்பட்டர்கள் ! "குலக்குகள்" மீண்டும் வந்து விடுவார்களோ என்று பயந்தார்கள் ! அவர்களுக்கு புரட்சி என்றால் என்ன என்று தெரியாது ! அவர்களுக்கு புரட்சி பற்றி கற்றுத்தர லெனின் அவர்கள் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் அழைத்தார் ! அப்பொது உருவானது தான் "Battle ship...." , "October ...", Blue mountain" போனற படங்கள் ! இவை புரட்சி நடக்கும் போது காமிரவும் கையுமாக எடுக்கப்பட்டது அல்ல !
எங்கள்தலவர் "சுனில்மைத்ரா " அவர்கள்குறிப்பிடுவார்கள் !" சோவியத் புரட்சி பற்றி ஐம்பது அறுபது புத்தகங்களாவது வந்திருக்கும் ! நான் சுமார் முப்பது புத்தகங்களைத்தான் படித்துள்ளேன் மீதமுள்ளதை படிக்க முடியவில்லை " என்று குறிப்பிடுவார் !
புரட்சிப்படை வரும் பொது எதிரிகள் ஒளிந்திருந்து தாக்குவார்கள் ! எதிரிகளிடமிருந்து வீரர்களை பாதுகாக்க முண்ணனிபடை செல்லும் ! அது வீரர்கள்செல்ல விருக்கும் பாதையை செப்பனிடும் ! அங்குள்ள கண்ணி வெடிகளை அகற்றும் ! ஒளிந்திருக்கும் எதிரிகளின் முதல் தாக்குதலை சந்திக்கும் ! எதிரிகள் எங்கு பதுங்கி இருக்கிறார்களென்பதை பின்னல் வரும் வீரர்களுக்கு அடையாளம் காட்டும்!எதிரிகள் பகுதிக்குள் சென்று அந்த மக்களை நம் பக்கம் இழுக்க கலை இலக்கியத்தை பயன்படுத்தி கருத்து விதைகளைத் தூவும் !மிகுந்த சேதத்தை சந்திக்கும் ! இந்த முண்ணணிபடை போரில் மிகவும் முக்கியமான பணியை தன்னலம்கருதாது செய்யும்!
இதனை செய்யும் கலைஞர்கள் எழுத்தாளர்கள் தான் முற்போக்கு எழுத்தாளர்கள் ! புரட்சி கலைஞர்கள் !
தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் ,கலைஞர்கள் 2015ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதியில் மதுரை நகரத்தில்தங்கள் 40 ம் ஆண்டு விழாவை நடத்த கூடப்போகிறார்கள் !
நினைக்க நினைக்க இனிக்கும் செய்தி !!!
Sunday, November 15, 2015
கெட்டவார்த்தை சொல்லி ஏசணும் போல இருக்கு அண்ணே !!!
ஓம் .....ஸ்வாஹா !!!
அண்ணன்மார்களே இத படிச்சிட்டு கோபப்படாதிங்க !!!
சம்ஸ்கிருதத்தில மந்திரம் சொல்லுதான் ம்லா ! அத ஆரம்பிக்கும் போது "ஓம்" நு சொல்லி அராம்பிக்கான். முடிக்கும் பொது "ஸ்வாஹா" நு முடிக்கான் .
என் தெரியுமா ?
உலகம் எப்படி இருக்கு நு தெரியுமா ? அடிதடி, வீரம் போன்ற குணம் உடையவர்கள் இருக்கிறார்கள்.இவர்கள் எது கொடுத்தாலும் திருத்தி அடியாம இன்னும் இன்னும் நு கேட்கிரவங்களாம்.(ரஜத் குணம் )
அடுத்து .இதுவே போதும். என்று கிடைத்ததை வைத்து திருப்தி அடைபவர்களாம். (சத்வ குணம்.)
அதற்கு அடுத்தவங்க இருட்டுல இருக்கிறவங்க.எதுவமே தெரியாத அப்பாவிங்க .( தமோ குணம்)
இந்த மூன்று குணத்தையும் சார்ந்து குறிக்கிற ஒற்றைச் சொல் தான் "ஓம் "
என்ற பிரணவ மாம்.
(எனக்கு தெரியுது அண்ணெ உங்களுக்குகோபம் வருது என்பது )
அப்பம் முடிக்கும்போது எதுக்கு" ஸ்வாஹா " நு கேட்டேன் .
ஒரு காலத்துல தேவ லோகத்துல தேவர்கள் எல்லாம் கஞசிக் கில்லாம சிங்கி அடிச்சிக்கிட்டு இருந்தாங்களாம். ஒடிப் போயி பிரும்மா கால விழுந்தாங்களாம். அவன் மூக்கப்பிடிசிக்கிட்டு தியானம் பண்ணினான்.
'ஏய் பசங்களா ! பூலோ கத்துல சோத்த மனிதர்கள் யாக குண்டத்துலபோடுதாங்க> அத பக்குவமாஎடுத்து உங்களுக்கு "பார்சல்" பண்ணி அனுப்புஅச்சொல்லுதேன்." அப்படின்னாராம்.
"அண்ணெ ! அது முடியாது " அக்னி சொல்றான்.
"ஏண்டெய்? "
"ஏண்ணெ ! எனக்கென்ன பெண்டாட்டியா இருக்கா ? சமைக்க ? "
பிரும்மா திரும்ப தியானம் பண்ணினார்.
"அப்பம் பொம்பள சாமி வந்து என்ன வேணும் டேய் ? நு கேட்டிருக்கு.
"அக்னிக்கு பொண்டாடி இல்ல ? நீ வேணும் நா போயி....."
"சரிப்பா " நு சொல்லி அந்தம்மா அவன் வீட்ல போய் வாழ ஆரம்பிச்சுடுச்சு.
"அந்தம்மா பேரு "ஸ்வாஹா" .எவன்லாம் ஸ்வாஹா" நு சொல்லி மந்திரத்தை முடிக்கானோ அவனுக்கு சோருகிடக்கும் நு பிரும்மா சட்டம் போட்டாரு..
இத மார்க் கண்டுபிடிச்ச facebook ல போட்டு உலகம்புரா அனுப்பீருக்கான்
அண்ணெ ?
கேட்ட வார்த்தை சொல்லி ஏசணும் போல இருக்கு !
உங்களுக்கும் அப்படித்தான அண்ணெ ?
யார ஏசறது ???
Saturday, November 14, 2015
டாக்டர் ஜாண் செல்லதுரையும்
நானும் .................!!!
செவ்வாய்கிழமைதான் (17.11.2015 ) தான் அவருக்கு 49 வயது ஆகிறது. நாகபுரியில் இந்திய அமைதி மையத்தின் இயக்குனராக இருந்தவர் தன பணியை மாற்றிக்கொண்டு தற்போது ஒரு அறக்கட்டளையில் ஆராய்ச்சித்துறையில் ஜலகாவ் என்ற ஊரில் பணியாற்றுகிறார்.
நெல்லை மாவட்டம் சேரன் மாதேவியை சொந்த ஊராகக்கொண்டவர். தினம் பஸ்ஸில் சென்று ம.தி.தா இந்து கல்லூரியில் விலங்கியல்படித்துபட்டம் பெற்றவர்.
நண்பர்களோடு சேர்ந்து Friends Commune என்ற பரிசோதனை வாழ்வை ஆரம்பித்தார். ஐந்தாறு நண்பர்களோடு அலங்காநல்லூரின் அருகில் உள்ள காட்டுப்புகுதியில் நிலம்வாங்கி வாழத்தோடங்கினார் .அந்தநிலத்தில் அங்கு வசிப்பவர்கள் எல்லாரும்குடும்பத்தோடு உழைப்பார்கள். எல்லாரும் அதனை பங்கிட்டு வாழ்வார்கள். ஒரு புதிய சமூகத்தை உருவாக்க இந்த இளைஞர்கள் துடித்து எழுந்தனர்.
குஜராத் பல்கலைகழகத்தில் சுற்றுப்புற சூழல்பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார் . ஆராய்ச்சிக்கு அவர் தேர்ந்தெடுத்த பொருள் "Conflict" என்பதாகும். எந்த மோதலையும் சமாதானமாக தீர்க்க முடியும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளவர் டாக்டர். ஜாண்.
நாகபுரியில் இருக்கும் வரை நாங்களிருவரும் விவாதிக்காத பொருள் இல்லை என்றெ சொல்லலாம். .
மூன்று வருடத்திற்கு ஒருமுறை பத்து வயதிலிருந்து பனிரெண்டு வயதுள்ள தென்கொரிய சிறுவர் சிறுமியர் இருவரை இந்தியா அழைத்து வந்து 8.9.10 வகுப்பு வரை கல்வி புகட்டி அவர்களை மீண்டும் அவர்களை ஊருக்கு அனுப்பி வைப்பார். அந்தநாட்டில் ஆங்கிலம் படிக்க வாய்ப்புகள் குறைவு என்பதால். எனக்கு தெரிந்து இது பத்து ஆன்டுகளூக்கும்மேலாக நடக்கிறது.
அவர் ஜலகாவ் சென்ற பிறகு தீபாவளி அன்று அவருடைய அருமை மகள் அனிதாவையும் அழைத்துக்கொண்டு என்னை பார்க்க வந்தார்.
வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். வைணவம் பற்றி,பகத்சிங் ,கொடிகாத்த குமரன் பற்றி, பற்றி என்று விவாதம் தொடர்ந்தது.
சேரன் மாதேவி ஊர்க்காரர் என்பதால், வா .வே.சு. அய்யரின் குருகுலம் பற்றியும் ,"சம்பந்தி போஜனம்" பற்றியும்கேட்டேன் ..
"ஐயா! குருகுலம் பற்றி பேசும் முன்பு காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் நடந்ததையும் தெரிந்து கொள்வது நல்லது ஐயா ! அங்கு பிராமணர்களுக்கு தனி சாப்பாடு.! மேல்சாதி இந்துக்களுக்கு தனி பந்தி. இது சரியா ? இன்றய நோக்கில் இது பெரியதவறு என்பதில் ஐயமில்லை. 1910-1930 ம் ஆண்டுகளை நினைத்து பார்க்க வேண்டும் ஐயா ! அவர்கள் தத்தம் சொந்த பழக்க வழ்க்கங்களெப்படி இருந்த போதிலும் அதனை கணக்கிடாமல் இந்திய சுதந்திரம்,பிரிட்டிஷ் ஏகதிபத்திய எதிர்ப்பு ஆகியவற்றிர்க்காக நின்றனர் வா.வே.சு அய்யரின் தேச பக்தியை குறைத்து மதிப்பிட முடியுமா ?இளம் வயதுனருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியை அளித்ததாக கூறுவார்கள்.,அவர் பிராமணர்களுக்கு தனிபந்தி வைத்தது இன்றையசமூகநீதிபார்வையில் தவறுதான். .அதனை மாற்ற வேண்டும் என்று பெரியார் அவர்கள் அன்றே கோரியது அவரின் தீர்க்க மான பார்வையை சொல்கிறது.இதற்கு மேல் இதில் விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை "என்றார் .
மிகச்சிறந்த காந்தீய வாதியான டாகடர் ஜாண் செல்லதுரை அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.!!!
Friday, November 06, 2015
சின்னையா காசி அவர்களின் .....3
சென்னையில் கொடம் பாக்கம் ,விருகம்பாக்கம்,வளசரபாக்கம் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தெரிந்த விஷயம் தான்.
நண்பர் இசக்கி முத்து அவர்களை பார்க்க சென்றிருந்தேன். வங்கியில் முத்த அதிகாரி. தலித் குடும்பத்தை சேர்ந்த அவரும் நானு சமஸ்கிருதம் படித்தோம்.அது பற்றி ஒரு நாவலே எழுதலாம் .
எங்களுக்கு விருந்து அவர் விட்டில். அவருடைய துணைவியார் பவம் "மாங்கு-மாங்கு " நு வீட்டு வேலையில இருந்தார்.
"ஏம்மா! உதவிக்கு ஆள் இல்லையா ?"
"இருக்காங்க தோழர் ! இன்னைக்கு வெளியூர்ல ஷுட்டிங் "
இந்தப் பகுதியில் பல வீடுகளில் இப்படித்தான் நடக்கிறது. விட்டு வேலைக்கு உதவியாக வரும் பெண்கள் மிகவும் சுறு சுறுப்பாகவும், நறிவிசாகவும் இருப்பார்கள். .வேல அவ்வளவு சுத்தமாக இருக்கும். ஒரே ஒரு சிக்கல்.. என்று . லீவு எடுப்பார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது.
அவர்கள் parttime domestic helper and parttime actors (extra )..
இந்த பகுதியில் காய்கறி விற்பவர்கள், சிறு வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் பலர் இப்படி இரண்டு வண்டிகளில் பயணம் செய்து தான் குடும்பத்தை சுமக்கிறார்கள்,
நான் நடிக்கப் போனபடத்தின் ஷுட்டிங் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள பகுதியில் நடந்தது. மொத்தம் முன்று ஷெட்டுயுல் .
எங்கள் யூனிட்டில் துணை நடிகைகள் முன்று பேர் இருந்தனர். ஒய்வு நேரங்களில் கிட்டத்தட்ட இருபது பேர் நடிகர்கள், டெக்னீஷ்யன்கள் என்று அமர்ந்து பேசுவோம்..
உயிர் என்றால் என்ன? அறிவு என்றால் என்ன? கலை இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்,காலம் என்றால் என்ன ? வெளி என்றால் என்ன ? என்று ஒவ்வொரு நாளும் அவர்களிடையே பேசுவேன்.மார்க்ஸ்,ஏஞ்சல்ஸ் எழுதிய Art and litereture என்ற புத்தகத்தை பகல் நேரங்களில் படித்து வைத்துக் கொள்வேன் . எந்த சமயத்திலும் அவர்களுடைய பெயரை உச்சரிக்க மாட்டேன்.
இது என்பாலவர்களை ஈர்த்தது. பலர் என்னிடம் நெருக்கமாகவும், மனம்விட்டு பேசவும் ஆரம்பித்தார்கள
துணை நடிகைகள் தங்கள் கதை களை மனம் விட்டு பேசினார்கள். உலக வாழ்க்கையல் நாம் நடிகர்,நடிகைகள மிகவும் கேவலமாக பேசுவதும், நடத்துவதும் எவ்வளவு பாவகரமான செயல் என்பதை புரியவைத்த அனுபவம் அது .
அந்த துணை நடிகை கோயம்புத்தூரில் இருக்கிறார்.அவுடைய கணவர் கோவையில் ஜவுளி வியாபாரி, எற்கனவே திருமண ம் ஆனவர். இவர் இரண்டாவது .
"ஏன்மா ! சினிமா காரங்க இரண்டாம் தாரமாவே வாக்கப்படுரீங்க ? "
" புத்தி கெட்டு பகட்டு பேச்சை நம்பி வீட்டைவிட்டு வந்துட்டோம். வந்தபிறகு இந்த சுழல் லேர்ந்து மீள முடியாம தவிக்கிறோம் சார். கல்யாணமா? நினைச்சு பாக்கமுடியுமா ? சார் ! ராத்திரி பத்து மணிக்கு போலீஸ்காரன் வந்துஇன்ஸ்பெகர் குப்பிடராறு ம்பான். நேர அவருக் நு இருக்கர லாட்ஜுக்கு போகணும்."
அவர் கண்களில் கண்ணிர் வழிந்தது. நடிக்க வில்லைஇப்போது.
"டாப் ஸ்டார இருந்த நடிகைகள் கதை தெரியும்தானே சார் ! இப்ப நான் இன்னாருடைய மனைவி ! ஒரு பாதுகாப்பு இருக்கு !எனக்கு ஒரு சுயம் வந்திருக்கு "
பெருமூச்சு விட்டார். "எல்லாம் முடிஞ்சு போச்சு சார்.! என் மகளை ஹாஸ்டல்ல போட்டிருக்கேன் சார். என்னை புரிஞ்சுகிட்டா ! அவ காலேஜ் லக்சரர ஆகணூம்ன்கா ! நான் ஐ.எ.எஸ் படிங்கன். முதலாளி தான் படிக்க வைக்கறார்."
சரியாக பத்துமணிக்கு அந்த மாவட்டத்தில் eb காரன் grid மாத்துவான் .30 வினாடி லட் அணைஞ்சு எரியும்..
"மணி பத்தாயிட்டுது சார் ! நீங்க தூ ங்குங்க " என்றார் அந்த அம்மையார்.
"தூக்கமா ? இன்னிக்கு இல்லை " என்று நினைத்து கொண்டே எழுந்தேன்.
Thursday, November 05, 2015
சின்னய்யா காசி அவர்களின் ........2 !!!
அவர்களை "லைட் பாய் " என்று அழைப்பது சரி அல்ல. ." லைட் அங்கிள்" "லைட் தாத்தா " என்று தான் கூப்பிட வேண்டும்..
அந்த ஸ்டூடியோவில் டப்பிங் நடந்தது . நானும் போயிருந்தேன் . வேறு படங்களுக்கான படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்தது.நாங்கள் ஓய்வாக வேடிக்கை பார்த்துக் கொண்டருந்தோம்.
ஊர்வலக்க்காட்சி . .கதாநாயகன் தலைமையில் .. ஒரு பள்ளமான பகுதியில் இருந்து மேடேறி வாரவேனும். வெகு துரத்தில் இருந்துகாட்சி ஆரம்பிக்கும். கதாநாயகன் நெருங்க நெருங்க காமிரா அவரை குறிவைக்கும். பலகோணங்கள்.பல பக்க வாட்டு தோற்றங்கள் என்று நெளிசலை எடுத்து விட்டார்கள் .இவை அத்துணைக்கும் ஈடு கொடுத்து விளக்குகள் இருக்க வேணும் . சூரிய ஒளியானதால், கூடுதலாக reflector பயன் படுத்தப்[பட்டது. கதா நாயகனின் மூக்கு நிழல் அவன் உதட்டில் விழாமல் reflector ஐ கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க நெருங்க உயர்த்தி பிடிக்க வேண்டும்..படப்பிடிப்பு முடிந்தது . காமிரா காரர் இயக்குனர்காதில் கிசுகிசுத்தார்.
"சார் ஒன்மோர் ஷாட்" .
"போய்யா ! வேலையைபாரு ! எல்லா எடிட்டிங்க்ல பாத்துக்கலாம்"என்றார் நடிகர்.
அவர்களுக்கு சந்தேகம் முக்கு நிழல் பிரச்சினைதான் . " எவண்டா reflector பிடிச்சவன் ." இயக்குனர்.
அந்த லைட் அங்கிள் "நான் தான் சார் " என்றார்.
அவர் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்
."60000 ரூ போச்செல ! ஓங்கப்பனா கொடுப்பான்"
"packup " எல்லாரும் கலைந்து சென்றனர்.
பின்னாளில் அந்த ஷாட் சரியாகவே வந்திருந்தது என்பது தெரிய வந்தது ;.
1979 -80 ஆண்டுகளில்கோடம்பாக்கம் "ராம்" தியேட்டர் அருகில் துணை நடிகர்கள் காத்திருப்பார்கள் .8 மணியிலிருந்து எஜெண்டுகள் வந்தபின் "கால்ஷிட் " கிடைத்தால் சம்பளம்.
கிடைக்காதவர்கள் தியேட்டர் அருகில் உள்ள சந்திற்கு போய்
காத்திருப்பார்கள். இதில் துணை நடிகர்களிளிருந்து டெக்னிஷியன்களும் உண்டு.
8.30 மணிக்கு பெரிய கொத்தனார் கள். பெயிண்ட் கன்ட்ராகடர்கள், கலயாண சமயல் கான்ட்ராக்டர்கள் வருவார்கள்.
" on the waterfront " திரைப்படத்தில் வருவது போல அன்றைய கூலி வேலைக்காக ,இந்த டாக்டர்களும்,வக்கீல் களூம் முண்டி அடித்துக் கொன்டு போட்டி போடுவார்கள். 200 -300 ரூ கொண்டு போனால் தானே அவர்கள் வீட்டில் அடுப்பு எரியும்.