விநாயக சதுர்த்தியும் ,
நானும் ........!!!
நான் குடியிருக்கும் அடுக்ககத்தில் 70 குடும்பங்கள் உள்ளன ! கூட்டாஞ்சோறு பொங்குவது மாதிரி தலைக்கு 500/-ரூ வசூல் செய்து இந்த ஆண்டு கொண்டாடுகிறார்கள் !
காலையிலும் ,மாலையிலு ம்வழி பாடு இருக்கும் ! து ணைவியார் செல்வார் ! பொறுப்பாளர் "சார் வரவில்லையா ? " என்று கேட்டுள்ளார் !
"இங்கு எல்லாருமே இந்துக்கள் ! ஒன்றோ இரண்டோ கிறிஸ்துவர்களும்,இசுலாமியர்களும் இருந்தால் என்ன செய்வீர்கள் "
"அதிகமா இருக்கும் இந்துக்காளொடு சேர வேண்டியது தான் ! சார் என்ன நாத்திகரா ? "
அம்மையார் இல்லை என்றும் சொல்லாமல் இருக்கு என்றும் சொல்லாமல் மையமாக தலை அசைத்துவிட்டு வந்துள்ளார் !
"இந்தியாவில் நாத்திகர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள் ? " வீட்டிற்கு வந்ததும் என்னிடம் கேட்டார் !
1954-57 ம் ஆண்டுகளில் மேட்டூரில் பணியாற்றினேன் ! 1951ம் ஆண்டு சேலம் மாவட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் 50000 பேர் தங்களை நாத்திகர்கள் என்று பதிவு செய்திருந்தார்கள் !
61 ம் ஆண்டில் இதுமிகவும் குறந்து விட்டது ! சமூக செய்ல்பாட்டாளர் ஒருவரிடம் விசாரித்த் பொது இளம் தலை முறையினரை கவர ஏற்பாடுகள் இல்லை ! இருப்பவர்களையும் தத்துவார்த்த போதன செய்வது குறைந்து விட்டது ! மூத்தவ்ர்களை மரணம் ஆட்கொண்டுவிட்டது ! என்று விளக்கினார் !
இன்றைய கணக்கில் இந்தியாவில் சுத்த சுயம் பிரகாசமான நாத்திகர்கள் 1,00,000 பேர் இருக்கலாம் என்று கருது கிறேன் ! கிட்டத்தட்ட 120 கோடி மக்கள் தோகையில் இது கணக்கிலேயே வராது !
அப்படியானால் மிச்சமுள்ளவர்கள் ஆத்திகர்களா ? பளிச்சென்று பதில் கூற முடியாத கேள்வி இது !
இறை நம்பிக்கை நிரந்தரமாக மனிதனை வசப்படுத்துவது இல்லை ! அவன் அவ்வப்போது பல கேள்விகளுக்கு தன்னை உட்படுத்தி கொள்கிறான் !
"ஆண்டவன் ஆகாசமத்தில் தூங்கு கிறானே !
மாந்தரெல்லாம் மாநிலம் மேல் ஏங்குகின்றாரெ !
நம் அனைவருக்கும் அவன் ஒரு தந்தை என்றாலே !
சிலர் கொடுப்பவர் சிலர் எடுப்பவர் என்று இருப்பதெதாலே !
கூன்,குருடு , நொண்டி ,செவிடு,ஊமை பிறப்பதெதாலே !
நிறை குறைகளுக்கோ இதுவரைக்கும்பதிலும் தெரியலே !!