Thursday, September 28, 2017சரசுவதி பூஜையும் ,


முற்போக்கு இலக்கியமும் ...!!!


நான்வசிக்கும் அடுக்ககத்தில்  நாற்பது குடும்பங்கள் உள்ளன . வங்காளிகள், பிஹாரி, எம்.பி ,உபி ,மராட்டி,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்.என்று இந்தியாவின் சகலப்பகுதி மக்களும் உள்ளனர்.இங்கு வசிக்கும் பெண் களில் முத்துமீனாட்ச்சி முக்கியமானவர்.


காரணம் வயது 75 +  ! அது தவிரஅவர்இந்தி,தமிழ்,ஆங்கிலம்,சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் எழுத படிக்க  சரளமாகப்பேச முடிந்தவரும்கூட.  மேலும் வங்காளி,மராட்டி மொழிகளில் பேசி சமாளிக்கும் அளவுக்கு தெரிந்தவர். அதனால் அவர் இந்த குடும்பங்களின் "டார்லிங் " எனலாம்.


இந்த பெண்கள் நன்றாக படித்த நல்ல  பணியில் இருப்பவர்கள் ! இருந்தவர்கள். என் வீட்டிற்கு எதிராக இருக்கும் அம்மையார் பொறியியற் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர். காலையில் முத்துமீனாடசியைப்பார்த்ததும் காலை தொட்டு வணங்குவார். அப்படி ஒரு sentiment உள்ள வர்கள் இவர்கள்.


இவர்கள்  கூட்டு வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவர்கள். எந்த பண் டிக்கையானாலும் குறிப்பாக விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, என்று வந்தால் ஆட்டம் பாட்டம் தான்.


முது மினாடசியை ஒவ்வொரு வீட்டிலும் அழைத்து ஆர்த்தி குங்குமம் அளிப்பார்கள். அதோடு ஏதாவது பரிசுப்பொருளும் கொடுப்பார்கள்.   கடந்த 15 வருடமாக இது நடந்து வருகிறது. எங்கள் வீட்டில் நீத்தார் நினைவு நாள்கூட கிடையாது . 


முத்து மீனாட்ச்சிக்கு இப்போதெல்லாம் ஒவ்வொருவீட்டுக்கும் செல்வது ஆயாசமாக இருக்கிறது.முதுமையும்,இயலாமையும் காரணம்.இந்த ஆண்டு மற்றவர்களை வரவழைத்து ஆர்த்தி குங்குமம் கொடுக்கலாமென்று ஆசைப்பட்டார். அதனை சரசுவதி பூஜை அன்று நடத்தலாம் என்று அபிப்பிராயப்பட்டார். கொலுவைப்பதில்லை அதனால் சரசுவதி பூஜையை எப்படி கொண்டாடுவது என்று யோசித்தோம்.


சரசுவதி பட்த்தினை மாட்டி கொண்டாடலாம் என்று முடிவாகியது.பரிசுப்பொருள் என்ன வாங்குவது என்று இரவு முழுவதுமயோசித்தோம்.


"ஏனுங்க ! செம்மலரில் வந்த கதைகளை இந்தி,ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து செய்த புத்தகங்கள்கொடுத்தால்  என்ன ?"என்றார்   முத்துமீனாட்ச்சி .


"இது தவிர வங்க மொழியில்  ஐந்து,மராத்தியில் நான்கு ,தெலுங்கி பத்துக்கதைகள்  பிரசுரமாகியுள்ளன அவற்றின் ஜெராக்ஸ் நகலை எடுத்து ஒருவடிவமாக்கி கொடுக்கலாம் 'என்றும் கூறினார்.


இந்த யோசனை சரியாக தெரிந்தது. காரியங்கள்  வேகமாக நடந்தன.


இந்த ஆண்டு  செம்மலர் தமிழ்கதைகள் அவரவர் தாய் மொழியில் சரசுவதி அம்மனின் பிரசாதமாக கிடைக்கும் .


"ஏன் மாமா ! சரசுவதி அம்மனை முற்போக்கு எழுத்தாளர் சங்க உறு ப்பினராக்கிவிடுவீர்கள் போல் இருக்கு" என்று என் மைத்துனர் கேட்டார். 


"அதுவும் நடக்கலாம் " என்றேன் நான் !Wednesday, September 27, 2017

(மீள் பதிவு )


" புளுகுணிகள் "

நான் வசிக்கும் அடுக்ககத்தில் ஐந்து மாடிகள் உள்ளன> அந்த மனிதர் ஐந்தாவதுமாடியில் இருந்தார்.  ஜிப்பா,பைஜாமாபோட்டிருப்பார். சிலசமயம் வடநாட்டு பஞ்ச்கசம் அணிந்திருப்பார். நெற்றியில் சந்தனகோடு நடுவில் குங்குமம்.சுத்தமான சுயம் சேவக். இவரைப் பொறுத்தவரை  தான் சுயம் சேவக் என்பதை காட்டிக்கொள்வதில் பிரியம் கொண்டவர்.


எங்கள்  யார்ட்டிவீ ட்டி லாவது  பூஜைமணி அடிக்கும்   சத்தம் கேட்டால் அந்த வீட்டின் பூஜை அறைக்குள் புகுந்து விடுவார்அவருக்கு தெரிந்த பாடல்கள்,ஸ்லோகங்கள் என்று பாட ஆரம்பித்து விடுவார்.சில சமயம்பிரவசனங்கள்செய்ய ஆரம்பித்து விடுவார்.பாதி  தப்பாக இருக்கும். இங்கு விநாயக சதுர்த்தி, விஜய தசமி என்று கூட்டு வழிபாடு நடக்கும்.பந்தலில் அமர்ந்தால்  லேசில் எழந்திரிக்க மாட்டார்.   


நான் காலையில் "இந்து" பத்திரிக்கை படிப்பவன். ஹைதிராபாத் பதிப்பு. நேற்றைய பதிப்பு நாளை வரும். தலையங்கம், நடுப்பக்க  கட்டுரை, சிறப்பு கட்டுரை ஆகியவற்றுக்காக வாங்குவேன். சிலசமயம் வரவில்லை என்றால் கீழே சென்று செக்க்யுரிட்டியிடம் இருந்து பெற்றுக்கொள்வேன்.


ஒருநாள் அப்படி வாங்கி வரும்போது இந்தமனிதர்  எதிர்ப்பட்டு விட்டார். "இந்து" பத்திரிகையா? என்று விசாரித்தார்.


"ஆம்" "


"நானும் வாங்க வேண்டும் "


"வாங்குங்களேன் "


"இந்து" தர்மம் பற்றியும் இந்து மதம் பற்றியும் நிறைய கட்டுரைகள் வரும் .அதனால்தான்"


இந்த கிறுக்கன் என்ன சொல்கிறான் என்று யோசித்தேன்..பத்திரிகையின் பெயர் " இந்து"ஆகவே அப்படித்தான் இருக்குமென்று நினைத்து விட்டான்.நின்றால்  ஆபத்து என்று கருதி லிப்டுக்குள் புகுந்து  விட்டேன்.


மதியம் தான் கட்டுரைகளை படிப்பது வழக்கம் . ஒருநாள்  அப்படி படித்துக்கொண்டிருந்தேன்.இந்தமனுஷன் எட்டி பார்த்தார் .  " வாருங்கள்"என்றேன்  அமர்ந்தார்.


"நான் சிறு வயதிலேயே "இந்து" ஆசிரியர் சொற்பொழிவை "ரஷிம்பாக்கில்" கேட்டிருக்கிறேன்.அருமையாக பேசுவார் : "


"யாரு ? அவர் N .ராம் .அவருக்கு வயது 60 அல்லது 61 தானே இருக்கும் !" 


ரஷீம் பாக் பாக் எனபது ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் இருக்கும் இடத்திலுள்ள மைதானம்.


"ஆமாம் இல்ல ! அவருடைய தந்தை நாராயண் !'


"அவர் பெயர் நரசிம்மன்."


"ஆமாம் .அவர்தான்.  மைதானத்தில் பெரும் கூட்டம். அவர் அற்புதமாக பேசினார்.அருகில் அவர்மகன் சின்ன பையன் ராம் பூணுல் போட்டு நின்று கொண்டு சுலோகம் சொன்னான் " 


என்முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடிக்கஆரம்பித்து விட்டது. "இந்தாங்க ! போன் " என்று கூறி முத்து மினாடசி கை  பேசிய நீட்டினாள். எடுத்துக்கொண்டுவெளியேறினேன். போன் சத்தமேயில்லை ." அந்த ரூம்ல போய் இருங்க .இந்த ஆளு போனப்புரேம் வாருங்க " .என்று சமாளித்தார் .


மறை ந்த தலைவர் ஏ.பாலசுப்பிரமணியம் கூறுவார் ." ஒரு கூடை செங்கல்லும் "பிடாரி"னா என்ன செய்யமுடியும்டா சாமா ? "என்பார் 


"ஒரு அரசன்  இருந்தான். தனக்கே தனக்கு என்று அரண்மனை கட்டினான் .அவன் குடிபுகுமுன் அங்கு பேய் குடிபுகுந்து விட்டது. மலையாள தேசத்திலிருந்து மந்திரவாதியா அழைத்து  பேய் ஓட்ட ஏற்பாடு செய்தான்.மந்திரவாதி என்ன  செய்தும் பேயை ஓட்டமுடியவில்லை.


"மகாராஜா ! நீங்கள் அரண்மனை சுவருக்கு செங்கல் வாங்கினீர்கள் இல்லையா ? அவை அத்தனையிலும் பேய் புகுந்துவிட்டதுஇதனை ஓட்டமுடியாது " என்றான் மந்திர வாதி..


நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலம் போனார் "அங்கு உங்கள்நாட்டு இளவரசி ருக்மனியை எங்கள் கிருஷ்ணன் மணந்தான் " என்றார் நாகபுரியில் உள்ள 8ம் வகுப்பு சிறுவன் " விதர்ப்ப தேசத்து இளவரசி ருக்மணி  அது நாகபுரியை சுற்றி உள்ள தேசம்."என்று பிரதமருக்கு பதிலளித்தான்.


பிரதமராகுமுன் மோடி திருசி  வந்தார்." வ.உ.சி தலைமையில்நடந்த உப்புசத்த்யாக்கிரகம் "என்று கூறி புதிய சரித்திரமெழுதினார் ..


கூடை செங்கல்லும் பிடாரி என்றால் என்ன செய்ய முடியும்.!!!


அறியாமை வேறு .!


புளுகுவது வேறு !!


இவர்கள் புளுகுணிகள்.!!!Monday, September 25, 2017

"காவேரி மேலாண்மை வாரியம் " பா.ஜ .க. வின்  இரட்டை நாக்கு...!!!
  காவேரி  வாரியம்  அமைக்க  நீதிமன்றம் >உத்திரவிட்டது . அதனை காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை. இதனை வெகுவாக விமரிசித்த அன்றைய பா..ஜ .க.

நதிநீர்  தாவா     வந்தால் என்ன செய்ய வேண்டும்  என்பது என்பது பற்றி நமது அரசியல் சட்டம் குறிப்பிட்டுள்ளது.மத்திய அரசு ஒரு திட்டத்தை  வகுத்து     சம்மந்தப்பட்ட மாநிலங்களோடு விவாதித்து அதனை நாடாளுமனறத்தில்  வைக்க  வேண்டும் .நாடாளுமனறம்    முடிவு செய்யும் .


மத்திய அரசு இதுவரை  வழிகாட்டுதலை  பிணைப்பற்றவில்லை. நர்மதா திட்டத்தை 70 ஆண்டுகள் இழுத்தடித்து இரண்டு நாள் முன்பு நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் .இது பற்றி நாடாளுமனறத்தில் வாயை திறக்க வில்லை> ஆளும்கட்ச்சியும்சரி ,ஆண்ட காட்ச்சியும் சரி !


 கோதாவரி  பிரச்சினையிலும் நாடாளுமன்றம் செல்லவில்லை .

காவேரி பிரச்சினையில்    மட்டும் பா.ஜ.க பல்டி  அடிக்கிறது.  மாநிலங்கள் அவை  உறுப்பினர் சிவா இதனை எழுப்பினார். அமைசசர் "இதனை உச்ச நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் " என்று  எழுத்து மூலம் பதில் அளித்தார் .

இரண்டு நாள் முன்பு உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம் ஏன் அமைக்கவில்லை என்று கேட்டது .  "நீதிமன்றம் தலையிட முடியாது.இது   நாடாளு மன்றத்தின் உரிமை " என்று மத்திய அரசு" கூறியுள்ளது  

கர்நாடகாவில் தேர்தல் வருகிறது .!


 மேலாண்மை வாரியம் வராது !!!
Thursday, September 21, 2017

உலக யுத்தம் வந்தால் ,

அடுத்து கற்காலம் தான் ...!!!


"அடுத்த உலக யுத்தம் என்பது அணுயுத்தமாக தான் இருக்கும்.    அதன் பிறகு கற்காலம் தான் மிஞ்சும்  " என்று  விஞ்ஞனி ஒருவர் கூறினார் .


ராணுவப்பலத்தில் இன்று உலகத்தில் முதல் இடத்தில் இருப்பது அமேரிக்கா . அணு ஆயுதம்,அதனை  செலுத்தும் ஏவுகணைகள் அணுசக்தி நீர்முழ்கி,  என்று  ஏராளமான ஆயுத பலம் கொண்டுள்ளது.அடுத்து இருப்பது ரஷ்யா ! இரண்டாவது இடத்திற்கு போட்டி போடும் நிலையில்   சீன  தேசம்  வளர்ந்துள்ளது.

சீனாவிடமும் அணுகுண்டு, ஏவுகணை என்று உள்ளது. சீனாவை எதிர்த்து இன்று இந்தியா நிற்கிறது .அணு ஆயுதம்,அதனை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இந்தியாவிடம் உள்ளன .இன்று ஒரு ஏவுகணை மூலம் 104  சட்டலைட்களை ஏவும் சக்தி இந்தியாவிற்கு உள்ளது என்பதைக் கண்டு உலகம் வியந்து நிற்கிறது . எந்த நாட்டின் எந்த பகுதியிலும் என்ன நடக்கிறது என்பதை செயற்கை கோல்கள் மூலம்  அறிந்து . கொள்ள  முடியும். இறுதி போரின் பொது புலிகளின் நடமாட்டத்தைஇலங்கை ராணுவத்திற்கு புகைப்படமாக கொடுத்ததே இந்தியாதான் என்று பேச்சு  அடிபட்டது நினைவிருக்கலாம் .

இந்திய சீன  எல்லைத்தகராறு  அடிக்கடி சீறி எழும் பொது  இந்துத்வா காரர்கள் வெறி கொண்டு கத்துவது வழக்கம். 

இப்போது வடமேற்கே லே பகுதியில் இந்திய சீனா ராணுவம் முட்டிக்கொண்டு நிற்கிறது .நேருக்கு நேர் ,(eye to eye ) நிற்கிறது. தவறான சிறு நடவடிக்கையும் படு  பயங்கரமான யுத்தத்தில் கொண்டு நிறுத்தி விடலாம் . துப்பாக்கி.  என்றால் துப்பாக்கி  ! பீரங்கி என்றால் பீரங்கி  ! அணுகுண்டு என்றால் அணுகுண்டு !

இரண்டு ராணுவமும் மாற்று ஆயுதத்தை உபயோகிக்க ஆரம்பித்துள்ளன . இருவருக்கும் அழிவு எப்படி  என்பது தெரிந்தே  உள்ளது

சீன  ராணுவம் இந்திய  வீரர்களை நோக்கி  2" 3" சரளைக்கற்களை வீசுகிறார்கள்.பதிலுக்கு இந்திய வீரர்கள் சீன  வீரர்களை நோக்கி 4" சரளைக்கற்களை வீசுகிறார்கள். 

"காயம்" தான் ஏற்படுகிறது.உயிர் சேதமோ,அழிவோ இல்லை.

"அணுகுண்டு வைத்திருப்பதால் ஒருவன் பலசாலியாக முடியாது. அவன்   வெறும் காகிதப்புலி " என்றார் மாவோ !

சரிதானே !!!Saturday, September 16, 2017
மதமாற்றம் முடியும் !


சாதி மாற்றமும் முடியும் !!
ஒரு இந்து கிறிஸ்துவராக முடியும். இஸ்லாமியராக முடியும். ஆனால் ஒரு தேவர் அய்யராக முடியுமா ? 


நம் பொதுப்புத்தியில் முடியாது என்றே பதிந்துதுள்ளது.ஆனால் நிதர்சன வாழ்க்கையில் இது நடந்தே வருகிறது.


நான் வசிக்கும் பகுதியில் எனக்கு தெரிந்த கர்நாடக மாநில குடும்பம் வாழ்ந்து வருகிறது. தீவிரமான கிருஷ்ன பக்தர் ! காலையில் good morning என்று சொல்ல மாட்டார். "அரே கிருஷ்ணா " என்பார் . ஒருநாள் என்னிடம் வந்து நான் பிரமணனாகப்போகிறேன் என்றார். அவர் பிராமணர் அல்ல என்பது கூட அவர் சொல்லித்தான் இப்பொது தான்  தெரியும். இப்படி அவர் பலதடவை,பல மாதங்களாக சொல்லியிருக்கிறார்.


திடீரென்று ஒருநாள் அவருடைய நடை உடை பாவனையில் மாற்றம் . இடையில் பஞ்ச்கச்சம். ஜிப்பா தலையில் பின் பகுதியில் நீளமாக உச் சிக்குடுமி !  என்னிடம் "நான்பிராமணனாகதீட்சை பெற்றுக்கொண்டேன்"   என்று கூறினார் .அவர் மனைவியும் மாறியிருந்தார் எனக்கு ச்சரியமாக   இருந்தது.பிரபு பாதர் என்று ஒரு மகான் இருந்தார்.அவர் தீவிரமான கிருஷ்ண பாக்தர். கிருஷ்ணர் ஒருவர் தன தெய்வம் வேறு தெய்வம் இல்லை என்று நம்பும் ஒரு மதத்தை  நிறுவினார். அமெரிக்காவிலும்,ஐரோப்பாவிலும், ஆஸ்திரேலியாவிலும் பரப்பினார் ஏராளமான வெள்ளைக்காரர்கள் இதில் இணைந்தனர்.


இந்த மதத்திற்கு INternaational society for Krishna conciusness (இஸ்கான் ) என்று பெயர். வெள்ளைக்கார கிருஷ்ண பக்தர்கள் பூணுல்.உச் சிக்குடுமி ,பஞ்ச்கச்சம் கட்டிக்கொண்டு வாழ்ந்தனர்> பிரபு பாதர் இவர்களுக்கு தீ ட் சை அளித்தார்.


வெள்ளைக்கார ஹென்றி பிராமணனாக லாம் என்றால் இந்தியர்கள் என் முடியாது?


நமதுகர்நாடக நண்பர் குடும்பமும் தீட்சை பெற்றது .
எனக்கு ஒரு யோசனை ! 


டாக்டர்கிருஷ்ணசாமி பேசாமல் தீட்சைபெற்று பிராமாணராகிவிட்டால்..!! 


இடஒதுக்கீடு பிரச்சினையே  வராதே !!!  


 


மதமாற்றம் முடியும் !

சாதி மாற்றமும் முடியும் !!ஒரு இந்து கிறிஸ்துவராக முடியும். இஸ்லாமியராக முடியும். ஆனால் ஒரு தேவர் அய்யராக முடியுமா ? 

நம் பொதுப்புத்தியில் முடியாது என்றே பதிந்துதுள்ளது.ஆனால் நிதர்சன வாழ்க்கையில் இது நடந்தே வருகிறது.

நான் வசிக்கும் பகுதியில் எனக்கு தெரிந்த கர்நாடக மாநில குடும்பம் வாழ்ந்து வருகிறது. தீவிரமான கிருஷ்ன பக்தர் ! காலையில் good morning என்று சொல்ல மாட்டார். "அரே கிருஷ்ணா " என்பார் . ஒருநாள் என்னிடம் வந்து நான் பிரமணனாகப்போகிறேன் என்றார். அவர் பிராமணர் அல்ல என்பது கூட அவர் சொல்லித்தான் இப்பொது தான்  தெரியும். இப்படி அவர் பலதடவை,பல மாதங்களாக சொல்லியிருக்கிறார்.

திடீரென்று ஒருநாள் அவருடைய நடை உடை பாவனையில் மாற்றம் . இடையில் பஞ்ச்கச்சம். ஜிப்பா தலையில் பின் பகுதியில் நீளமாக உச் சிக்குடுமி !  என்னிடம் "நான்பிராமணனாகதீட்சை பெற்றுக்கொண்டேன்"   என்று கூறினார் .அவர் மனைவியும் மாறியிருந்தார் எனக்கு ச்சரியமாக   இருந்தது.


பிரபு பாதர் என்று ஒரு மகான் இருந்தார்.அவர் தீவிரமான கிருஷ்ண பாக்தர். கிருஷ்ணர் ஒருவர் தன தெய்வம் வேறு தெய்வம் இல்லை என்று நம்பும் ஒரு மதத்தை  நிறுவினார். அமெரிக்காவிலும்,ஐரோப்பாவிலும், ஆஸ்திரேலியாவிலும் பரப்பினார் ஏராளமான வெள்ளைக்காரர்கள் இதில் இணைந்தனர்.

இந்த மதத்திற்கு INternaational society for Krishna conciusness (இஸ்கான் ) என்று பெயர். வெள்ளைக்கார கிருஷ்ண பக்தர்கள் பூணுல்.உச் சிக்குடுமி ,பஞ்ச்கச்சம் கட்டிக்கொண்டு வாழ்ந்தனர்> பிரபு பாதர் இவர்களுக்கு தீ ட் சை அளித்தார்.

வெள்ளைக்கார ஹென்றி பிராமணனாக லாம் என்றால் இந்தியர்கள் என் முடியாது?

நமதுகர்நாடக நண்பர் குடும்பமும் தீட்சை பெற்றது .


எனக்கு ஒரு யோசனை ! 

டாக்டர்கிருஷ்ணசாமி பேசாமல் தீட்சைபெற்று பிராமாணராகிவிட்டால்..!! !

இடஒதுக்கீடு பிரச்சினையே  வராதே !!!  

 

 

Thursday, September 07, 2017லிங்காயத்துகள் ,


"இந்துக்கள் அல்ல "

கௌரி லங்கேஷ் அறிவித்தார் .

பத்திரிகையாளரும்,சமூக செயல் பாட்டாளருமான கௌரி லங்கேஷ் அடையாளம்  தெரியாதவர்களால் ( ! ) சுட்டு கொல்லப்பட்டார் .

எந்த சமரசமுமில்லாமல் கம்பிரமான வாழ்க்கையை  வாழ்ந்தவர்  கௌரி.


பெருமாள் முருகன் எழுதிய "மாதொரு பாகன்" நாவலை ஆதரித்ததால் கர்நாடக பிராமண சங்கத்தினரால் வசைபாடப்பட்டார். 


எழுத்தாளர் பைரப்பா "பர்வா" என்ற நாவலை எழுகினார்  அந்த நாவல் மாகாபாரதத்தின் மறு  வாசிப்பாகும் . கணவனால் சந்ததி பெற  முடியாத பெண்கள் வேறொரு ஆணோடு கூடி  வாரிசு பெற்றுக்கொள்ளலாம்.இதனை  இந்து சாஸ்திரம் அனுமதிக்கிறது. இதனை  "நியோகி தர்மம் " என்று வர்ணிக்கிறார்கள். தன்னுடைய நாவலில் பைரப்பா  இதனை எழுதியுள்ளார்.


அவரை கண்டிக்காத பிராமணர்களும் இந்துத்வா வாதிகளும் பெருமாள் முருகனை எதிர்ப்பது என் ? என்று கேள்வியாய் எழுப்பினார் . பைரப்பாபிராமணன்.பெருமாள் முருகன் பிராமணன் அல்ல .அப்படித்தானே என்கிறார்.    


லிங்காயத்துகள் இந்து மதத்தை சார்ந்தவர்கள் அல்ல .அவர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பியுள்ளார். 

கர்நாடகமாநிலத்தில் "நக்சலைட்" கள் மறுவாழ்வுக்கான குழு வில் பணியாற்றிவந்தார்.  


சமரசமற்ற அந்த போராளியை  கொன்றுவிட்டார்கள் !


Monday, September 04, 2017

"காவிரிப்படுகையும்

 சு.வெங்கடெசனும்"காவிரிபடுகையில் கம்யூனிஸ்டுகள்  பொருளாதார நிலையை மாற்ற எடுத்தனடவடிக்கைகளின் பயன் தான் அங்கு தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் மற்ற பகுதிகளில் இருப்பதை விட குறைந்துள்ளது என்று பொருள்பட சு.வெங்கடெசன் கூறியுள்ளார் ( தடம் பத்திரிகை தபாலில் இன்னும் வரவில்லை )


வாசுமுருகவேல் என்பவர் அதற்கு எதிர்வினை ஆற்றீயுள்ளார் .அயோத்தி தாசரையும்,இரட்டைமலை சிணிவாசன், பெரியார் என்று குறிப்பிட்டுள்ளார். கம்யுணீஸ்டுகள் காலம்கடந்து சாதியை தொட்டுள்ளனர் என்று குற்றம்சாட்டியுள்ளார். இதில்மிகவும் வேதனயான ஒன்று சில இடது சாரி அறிவு ஜீவிகள் (?)கூட தங்களை  அறியாமயால் இதன ஒத்துக்கொள்ளும் மனப்பாங்கு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.


கம்யூனிஸ்டுகளி ன் செல்வாக்கை குறைக்க "பறையன் கட்சி "  என்று வர்ணித்தது காலத்தால்  பிந்தய ஒன்றாகும் .


"அடித்தால் திருப்பி அடி "  என்று போர்க்குணமிக்க  மக்களுக்கு கற்றுக்கொடுத்தது கம்யூனிஸ்டு இயக்கம்.


"வாடி !" என்றால் "வாடா" என்று திருப்பி சொல் என்று குறிப்பிட்டது கம்யூணீஸ்ட இயக்கம் .


சினிவாச ராவையும்,, ஏ.பால்சுப்பிரமணியத்தயும் தவிர்க்க முடியுமா?

தொல்பதனிடும் தொழிலாளர்கள் வீட்டில் தங்கி உண்டு உறங்கிய வர் ஏ.பி.

 ராமாயணத்தை மறுவாசிப்பு செய்து பெரியாருக்கு எடுத்துக் கொடுத்தவ்ர்கள் ஏ.பி யின் தந்தை அமிர்தலிங்கம் அய்யரும்,அவருடைய தமயனார் நிதிபதி பரமேசுவர அய்யரூம் தான்..

கவிரிபடுகை மக்களின் விடுதலக்கா சினிவாச ராவின் தீரமிக்க பாடுகளை மறப்பவர்களும் .மறுப்பவர்களும் இருக்கிறார்களே என்று எண்ணூம் பொது வேதனிதன்மிஞ்சுகிறது.


இருவரும் பிரமணராக பிறந்தது அவர்கள் தவறல்ல என்பதை மட்டும் குறிப்பிடுகிறேன்.


Friday, September 01, 2017திரைப்பட இயக்குனர் ,


"ராம் " சாமியாரின் ,


உபதேசங்கள் ....!!!

" நான் அடிமை .  எப்போது அடிமையானேன் தெரியுமா ? முதலாளித்துவத்தின்  மோசமான வடிவமான  ஜனநாயகத்தை இடது சாரிகள் என்று ஆதரிக்க ஆரம்பித்தார்களோ அன்றிலிருந்து  " என்று திரைப்பட இயக்குனர் "ராம் "சாமியார்  உபதேசித்துள்ளார்.


கிட்டத்தட்ட பத்து நாட்களாக யு டியூப் நிகழ்ச்ச்சியை திருப்பினால் ராம் அவர்களின் பேச்சு தான். அவர் எடுத்து சமீபத்தில் வெளிவந்த "தரமணி "என்ற படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வடநாட்டில் இருக்கும் நான் அந்தப்படத்தை பார்க்கவில்லை>யு  டியூபில் அது பற்றி மிகசிறப்பாகச்சொல்கிறார்கள்.


உண்மையில் அவர்கள் விவரிப்பது போல் இருந்தால் மிகவும் பாராட்டப்பட வேண்டிய படைப்பாகத்தான் இருக்கும்.


ராம் அவர்களின் "தங்க மீன்கள் ", "கற்றது தமிழ் " பார்த்திருக்கிறேன்.மிகவும் வித்தியாசமான படைப்புகள் தான் அவை இரண்டும். தற்போது "தரமணி " பற்றி மிகசிறப்பாக விமர்சிக்கப்படுகிறது> மிகவும் dicriminate பண்ணி பார்க்கும் விமரிசகர்கள் கூட நல்லவிதமாக குறிப்பிடுகிறார்கள்.


ராம் சிறந்த படிப்பாளி. அதனாலேயே சிறந்த படைப்பாளியாகவும்  இருக்கிறார். பொலன்ஸ்கி பற்றி அவருக்கு தெரியும். அந்த நாட்டில் ஒருவர் திரைப்பட இயக்குனராக வேண்டுமானால் குறைந்தது 18 ஆண்டுகள் படிப்பும்பயிற்சியும் வேண்டும். அதன் பிறகு தான் இயக்குனராக முடியும்.


கோலிவுட்டில்   அப்படி இல்லை..


ஊடகங்கள்  ராமின் வெற்றியை தங்களுக்கு காசாக்கப்பார்க்கின்றன.அவரை நேர்காணல் என்ற பெயரில் சலிக்கசெய்கின்றன. பாவம் ! அவரும் பதில் சொல்லி விளக்கம் சொல்லி, அலுத்து விட்டார் இப்பொது  பல்கலை களி ல் மாணவர்களிடையே பேசஆரம்பித்துள்ளார் .மனோன்மணியம் சுந்தரனார் பலகலை  மாணவர்களிடயே    பேசும் பொது தான் இந்தஇடுகையின் முதல் வரியில் சொன்ன  உபதேசத்தை செய்துள்ளார் .


"ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி " என்று ஒரு சொலவடை உண்டு.இடது சரியை யார் வேண்டுமானாலும் ......


கம்யுனிஸம்    செத்து விட்டது  என்று  அந்த ஊசிப்போன  ராசா கத்துவான்.


நீங்களுமா ? ராம் ! வேண்டாமே !!!
"காலமும் ,கடவுளும் ...!!! "

"காலம் என்றால் என்ன ? "என்று அறிவியல்ரீதியாக தெரிந்து கொள்ள முயன்றே.ன் ! அந்த முட்டு சந்தில்  கடவுளைப்பற்றியும் புலப்பட்டது.

"காலம் என்றால் என்ன ? what is Time ? It is an intervel between two phenamena "என்கிறது அறிவியல்.

"காலம் என்பது இரண்டு சம்பவங்களுக்கான இடைவெளி "


கட்டியாரத்தின் சின்ன முள்  1 லயிருக்கிறது .இது ஒரு சம்பவம்  . சின்ன முள் 2 ல் இருக்கிறது இதுவுமொருசம்பவம். இரண்டுக்குமான இடைவெளி ஒருமணி நேரம்.

நான் இங்கே எழுதிக்கொண்டிருக்கிறேன்.நீங்கள்பார்க்கிறீர்கள் .இது ஒரு சம்பவம். நான் இந்த பூமியில் பிறந்தேன் .அதுவுமொரு சம்பவம் இரண்டுக்கும் .இடைவெளி 82 ஆண்டுகள். 

காலம் எப்போது ஆரம்பமாகியது.? நான் பிறந்த போதா ? அதற்கு முன் என்தந்தை பிறந்தார் !அப்போதா ? என்பாட்டான் பிறந்த போதா ? அதற்குமுன் ...! நாயக்கர் காலமா? பிரிட்டிஷார் வந்தப்போதா? சேர சோழ பாண்டியர் காலமா? அசோகன் ஆண்டபோதா ? அலெக்ஸ்சாண்டர் வந்தப்போதா? காலம் எப்போது ஆரம்பமாகியது ?

தொடுவானம் போல் நீண்டு கொண்டே  இருக்கிறதே !எதை ஆரம்பம் என்று நினைக்கிறோமோ அது அதற்கு முந்தய சம்பவத்தின் முடிவாக இருக்கிறது எது ஆரம்பம் ? எது first ?

ஆங்கிலத்தில் காலத்தை மேலிருந்து கீழாக சொல்லும் பொது century  என்று ஆரம்பிப்பார்கள். பின்னர் year ! அதன் பிறகு month ,week ,day என்று குறைந்து கொன்டே வரும் . ஒருநாளை 24 மணிநேரமாக சொன்னார்கள்.அதனை hour  என்றார்கள். ஒருமணிக்கு 60 நிமிடம்- மிகக்குறைந்த கால அலகாக ஒரு நிமிடத்திற்கு 60 second என்கிறார்கள்.

60 first என்று வைக்கவில்லை. ஏனென்றால் எது first என்று நிர்ணயிக்க முடியவில்லை. அதனால் second என்று வைத்தார்கள்.


காலத்தின் ஆரம்பம் தெரியவில்லை .  முடிவு எப்போது?எது முடிவான சம்பவம் என்று நினைக்கிறோமோ அது முடிய போகும்  சமபவத்தின் ஆரம்பமாக இருக்கிறது.


ஆரம்பமும் முடிவும் தெரியாததாகஇருக்கிறது. ஆதியும் அந்தமும் இல்லாமலிருக்கிறது.

நமது ஆன்மிக வாதிகள் ஆதியுமந்தமுமில்லாத அருள் ஜோதி என்கிறார்களே !


அறிவியலும் ஆன்மிகமும் சந்திக்குமிடமா இது ?


கோடி ரூபாய் கொட்டிக்கொடுத்தாலும் பதில் கிடைக்காத கேள்வி !!!