Wednesday, August 23, 2017
Monday, August 21, 2017
"துர் சொப்ன நகரே "
( city of nightmare )
வங்கதேசம் உருவானது 1971 ம் ஆண்டு. அதன் வெற்றி மேற்கு வங்கத்தில் சித்தார்த்த சங்கர் ரே தலைமையில் ஒரு அரை பாசிச ஆடிசியை கொண்டு வந்தது.அப்போது நடந்த தேர்தலில் மார்க்சிஸ்டுகள் கொல்லப்பட்டனர். வாக்கு சாவடிகள் சூறையாடப்பட்டன . ஜோதி பாசு அவர்கள் தொகுதியில் வாக்காளர்கள் வாக்கு சாவடிக்குள் போகவிடவில்லை .அவர்களே வாக்குகளை போட்டுக்கொண்டார்கள். காங்கிரஸ் கடசியின் மாணவர் இயக்கமான சத்ரபரிஷத் குண்டர்கள் இதனை அரசின்பாதுகாப்போடு செய்தனர்.
அப்போதுமாணவர் அமைப்பின் தலைவர்களாக இருந்தவர்கள், மம்தா பானர்ஜி,சுபத்ரோ முகர்ஜி,பிரியறஞ்சன் தாஸ் முன்ஷி ஆவார்கள்.
தேர்தலமோசடியை கண்டித்த ஜோதி பாசு, அரசு அவர்தோறறார் என்று அறிவிக்கும் முன்பே conceded defeat . 280 தொகுதியில் 14 தொகுதியில் மார்க்சிஸ்டுகள் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலைமையை சட்ட பூர்வமாக சமாளித்து மார்க்சிஸ்க்கட்சி.
சட்டமன்றம் an assembly of fraud என்று ஜோதிபாசு அறிவித்தார். ஐந்து ஆண்டுகள் சட்டமன்றத்தை மார்க்சிஸ்ட் கடசி புறக்கணித்தது.
14 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படும் வரை காத்திருந்த 14 பெரும் தேர்தல் அதிகாரியிடமிருந்த அந்த அறிவிப்பை வாங்க மறுத்தனர் .இதன் காரணமாக தேர்தல் முறைமை முடிவானதாக கொள்ள முடியாதுசட்டமன்றத்திற்கு வராத உறுப்பினர்கள் பெயரை நீக்கவும் முடியாது> சித்தார்த்த சங்கர் ரே மறு தேர்தலும் நடத்தமுடியாது .
தெருவில்,விதிகளில்,வீடுகளில், சாலைகளில் ,அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதனை எதிர்த்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் விஸ்வரூபமாக எழுந்தனர் .
70ம் ஆண்டுகளிலிருந்தே சிறையில் இருந்த நாடக கலைஞர் உத்பல் தத் விறு கொண்டு எழுந்தார். baricade ,city of nightmare , now the kings turn ,என்ற மூன்று நாடகங்களை எழுதினர் . மூன்று நாடகங்களும் தடை செயப்பட்டன.
தடையை மீறி நாடகங்கள் நடந்தன .பார்க்க வரும் பார்வை யாளர்களை சத்ரபரிஷத் குண்டர்கள் தாக்கினர் . ஒரு கையால் தடிஅடியை தங்கி கொண்டு மறுகையால் டிக்கட்டை வாங்கிக்கொண்டு மக்கள் கூட்டம் கூட்டமாக நாடகத்தை பார்த்தனர் .
city of nightma
அரங்கத்தின் பின் பகுதியி ஒரு சாலை. சாலையின் மையத்தில் போக்குவரத்து மேடை அதன் அருகில் ஒருகுப்பைத்தொட்டி. முன் மேடையின் இடது புறம் "டீ " கடை . வலது முன்மேடையில் முதலாளிமார் அமர்ந்து விவாதிக்கும் அறை .
டீக்கடையில் கவலையோடு தொழிலாளர்கள் விவாதித்து கொண்டிருக்கிறார்கள் முதலாளிகளின் வன்முறை, டதொழிற்சங்க ஊழியர்கள் கொலை செய்யப்படுவதுஎன்றுபேசிக்கொண்டிருக்கிறார்கள்.
முதலாளி மார்கள் வலது மேடையில் எப்படி தொழிலாளர்களை அடக்குவது என்பது பற்றி ஆலோசித்து கொண்டிருக்கிறார்கள்.. அவர்களளோடு டீக்கடையில் இருந்த ஒருவன் இருக்கிறான் . அவன் அவர்களின் கையாள் . பல கொலைகளை செய்தவன்.குப்பி சாராயத்திற்காகவும் கோழிக்கறிக்காகவும் எதையும்செய்பவன் .
ஒருகட்டத்தில் அவன் ஒரு கொலையை செய்ய மறுக்கிறான்.
முதலாளிகள் உஷாராகிறார்கள்.இவனை விட்டு வைத்தால் தங்கள் சதிவேலைகள் அமபலமாகிவிடும் என்று அஞ்சுகிறார்கள்.அடியாள் வைத்து கொலை செய்ய திட்டமிடுகிறார்கள் .
அவன் ஓடுகிறார்ன். ஒருபக்கம் அடியாட்கள். பின் மேடையிலிருக்கும் சாலையில் ஓடுகிறான்> எதிரே துப்பாக்கயுடன் போலீசார் . வேறு வழியின்றி அவன் மேடையில் ஏறி தான் செய்த கொலைகளை கூறுகிறான், உண்மையில் நடந்த கொலைகளையும் யார் தூண்டுதலில் நடந்தது என்பதையும் அவன் அறிவிக்கிறான் போலீசார் சுடுகிறார்கள் அவன் பிணமாகி .
குப்பை தொட்டியில் வீழ்கிறான்.
அரங்கம் முழுவதும் செய்தித்தாள் பிரம்மாண்டமாக விரிகிறது .
IN AN ENCOUNTER A TERRIST WAS KILLED
நாடகம் முடிகிறது .
மார்க்சிஸ்ட் கடசியின் உறுப்பினரான உத்பல் தத் ,மும்மை கப்பல் படை எழுச் சியை தன துரோகத்தால் வீழ்த்திய காங்கிரஸ் பற்றி எழுதிய நாடகம் தான் :"கல்லோல் " (துரோகம் ) என்ற நாடகம்., அதற்காகத்தான் அவர் சிறையில் அடைக்கப்பட்டார் .அது பற்றி தனியாக எழுத வேண்டும்.
உத்பல்தத் நாடகக் குழுவின் பெயர் Liitle Peoples Theatre
1972ம் ஆண்டு மதுரையில்மார்க்சிஸ்ட் கடசியின் காங்கிரஸ் நடந்தது . அதில் தமிழ் நாடகம் போட கடசி பணித்தது. எல்.ஐ சி,வ ங்கி ஊழியர்கள்,மில் தொழிலாளர்கள் ,பொது தொழிலாளர்கள் கொண்ட நாடக குழு உருவாக்கியது .
அந்தக்குழு தான் peoples theatre !
அதன் முதல் நாடகத்தை கடசி காங்கிரசில் மேடை ஏற்றியது .
மதுரை முதுபெரும் எழுத்தாளர் ப.ரத்தனம் நெஞ்ச்சுக்குள் ஒரு கனல்"என்ற நாடகத்தை எழுதினார் .
அதனை இயக்கம் பணியினை அடியேனுக்கு கடசி அளித்தது.
Thursday, August 17, 2017
அற்புதம், அற்புதம், அற்புதம் !!!
வாழ்த்துக்கள் ராமகிருஷ்ணன் அவர்களே !!!
1948அல்லது 49 ஆக இருக்கலாம். நெல்லை டவுனில்நான் எட்டாம் வகுப்புப்படித்துக்கொண்டிருந்தேன். ஓவிய ஆசிரியர் அழகேசன் சிறு புத்தகங்கள்படிக்கக்கொடுப்பார். கரிபால்டி, ஆலிவர் க்ராம்வெல், வால்டேர் ஆகியோரின் வாழ்க்கை பற்றி வே சுவாமினாத சர்மா எழுதிய புத்தகங்கள் அவை. கனமான நீல அட்டை போட்டு 20 அல்லது 30 பக்கங்கள் இருக்கும். ஒருமுறை ஒருபுத்தகத்தை கொடுத்து, இங்கேயே படி.வீட்டுக்கு கொண்டு போகாதே என்று கூ றி ஒரு புத்தகத்தை கொடுத்தார். அட்டையில் கார்ல் மார்க்ஸ் என்று இருந்தது.
அதன் பிறகு மார்க்ஸ் பற்றியும்,அவருடைய தத்துவம்யுபற்றியும் நிறைய படித்து வருகிறேன்.
இன்று காலை U டியூபில் மார்க்ஸ் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் உரையை கேட்டேன் .
" எல்லோருக்கும் வணக்கம் ! திருப்பூரில் ...." என்று ஆரம்பித்து தங்கு தடை இல்லாத பேசசு .ஆற்றோட்டம் போன்ற சொற் பிரயோகம் எங்கும் பிசிறுதட்டாத உசசரிப்பு.
மார்க்ஸ் சின் வாழ்கையில் அருகில் இருந்து அனுபவித்தவர்களால் கூ ட இப்படி சித்தரிக்க முடியுமா ?
மார்க்ஸ் ஒரு சிந்தனையாளன் தான். அவணுக்குள்ளும் ஒரு காதல் நெஞ்சம் உள்ளதே. அவன் காதலி ஜென்னி அவனை வீட நான்கு வயது மூத்தவள்.
"மார்க்ஸ் ! நீ சின்ன குழந்தையாக இருந்த போதே உன்னை பார்த்தவள் நான் " எத்தனை குறும்புகலந்த காதல் மனம். ராமகிருஷ்ணன் ஜென்னியை பற்றியும் மார்க்ஸ்பற்றியும் பேசும் பொது உணர்ச்சி வசப்பட்டார். பார்வையாளர்களும் கூ ட . காரணம் அவர்கள் இருவரும் வாழ்ந்த வாழ்க்கை. .
மார்கஸ்,ஹெகல், ஏங்கல்ஸ் , எப்பேர்ப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள்..
தன்னை நாடற்றவராக மார்க்ஸ் அறிவித்தார் என்று கூறியபோது அவர் குரல் தழுதழுத்தது. .கேட்டுக் கொண்டிருந்த என்கண்களிலுமஈரம் கசிந்தது.
மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்றை படித்திருக்கிறேன்.
ஆனால் ராமகிருஷ்ணன் மூலம் கிடைத்த அனுபவம் என் ஆயுளுக்கும் மறக்க முடியாதது .
வாழ்த்துக்கள் ராமகிருஷ்ணன் .!!!
Wednesday, August 16, 2017
"இந்தி " இலக்கியத்தின் அடித்தளம் ,
"உருது " மொழியே ....!!!
மேலை நாட்டினர் குறிப்பாக அரேபிய ,பாரசீக மக்கள் இந்தியாவோடு பரிவர்த்தனை செய்த காலம் உண்டு . அவர்கள் சிந்து நதியை தாண்டிய மக்கள் பேசும் மொழியை "சிந்துஸ்தானி " என்று அழை த்தார்கள்.பின்னாளில் அது இந்துஸ்தானி யாக மருவியது
சிந்து நதிக்கு கிழக்கேயும் தென்கிழக்கேயும் பறந்து பட்டபகுதியில் (slang )வட்டார மொழியே புழக்கத்திலிருந்தது.கொடுக்கல் வாங்கலில் வர்த்தக ரீதியாக மொழியிலும் கொடுக்கல் வாங்கல் ஏற்பட்டது .
பிரிஜ் பாஷா, அவைத்த பாஷா ,கரி போல் , என்று பேசிவந்த வட்டாரங்களில் ,அரபியும்,,பாரசீகமும் கலந்து ஒருபுதிய மொழி உருவாகி யது. இதனை அன்று "உருது" என்று அழைத்தர்கள் "உருது "என்ற அரேபிய வார்த்தைக்கு "சந்தை என்று பொருள் என்று கூறுகிறார்கள்.
இதுவே தெற்கேயும், தென்கிழக்கேயும் பரவிய பொது அங்கு இருந்த வட்டார மொழி சம்ஸ்கிருத வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்திக்கொண்டது .இதனை "இந்துஸ்தானி "அழைத்துக்கொண்டார்கள்.
தமிழ் இலக்கியம் போல் இந்திக்கு என்று ஒரு தொன்மையான பாரம்பரியம் இல்லை அதுவே ஒரு நவீன மொழி. ஒரு தொல் காப்பியரையோ, வள்ளுவரையோ கொண்ட பார ம்பரியம் அதற்கு இல்லை. பண்டைய தமிழை நவீனப்படுத்தியவர்களாக,நாம் கருதும்,பாரதி, , வ,வே சு, புதுமைப்பித்தன் ஜெயயகாந்தன் போன்று இந்தி மொழியில் அவர்கள் இலக்கிய கர்த்தாவாக கருதுவது "தன பத் ராய் " என்ற படைப்பாளியை இவர்தான் இந்தி இலக்கியத்தின் பிதாமகர் என்று கருதப்படும் "பிரேம்சந்த் " .
பத்து நாவல்கள்,250 சிறுகதைகள் ,ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ள இவர் வாரணாசி அருகில் ஒரு கிராமத்தில் 1880 ஆண்டு வாக்கில் பிறந்தவர்.
அங்குள்ள இஸ்லாமிய மதராசாவில் அரபியும்,பாரசிகமும் படித்தவர்அப்போதெ ல்லாம் ஆங்கிலப்படிப்பு இல்லை.
ஆரம்பகாலத்தில் இந்தி இலக்கியத்தின் பிதாமகர் என்று கருதப்பட்டமுன் ஷி பிரேம் சந்த் தன படைப்புகளை "உருது""மொழியிலேயே படைத்தார்.
காந்தி அடிகளின் வேண்டு கோளுக்கு இணங்க தன அரசு பணியை விட்டு வெளியேறினார். "ஹன்ஸ்" என்ற பத்திரிகையை நடத்தினார் .
ஐரோப்பாவில் பாசிசம் உருவாக்கிக் கொண்டிருந்த நேரம். எழு த்தாளர்கள் கலைஞர்கள் அதனை எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பித்தனர் அதன் எதிரொலியாக, பண்டித ஜவஹர்லால் நேரு ,நம்பூதிரிபாடு ஆகியோர் இந்தியாவிலும் எழுத்தாளர்களை ஒன்றிணைத்து இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற ஒரு அமைப்பை "லக்னோ "வில் 1936ம் ஆண்டு உருவாக்கினார் அதன் முதல் தலைவராக பிரேம்சந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Sunday, August 13, 2017
-----------------------------------------
Do not impose Hindi
Down with Hindi Imperialism
-----------------------------------------