பெத்தானியாபுரம் முருகானந்தம் அவர்களே!
மதுரை அரசரடிவழியாக திண்டுக்கல்செல்லும் சாலையில் 60ம் ஆண்டுகளில் வைகை ஆற்றில் காமரஜர் பாலம் கட்டும்போது பெத்தானியாபுரம் வெறும் தென்னந்தொப்பாக இருந்தது. அந்தத் தோப்பின் நிழலில் தங்கி படித்தவன் நான்.
திருப்பரம் குன்றம் பதினாறூகால் மண்டபத்தின் வழியாக தமிழ்கூத்தனின் கைகளைப் பற்றிக்கொண்டு வெங்கடெசன் இலக்கிய நடை பயிலும்போதே அவரை அறிந்தவன் நான்.
" காவல் கோட்டம்" நாவல் பற்றி அறிந்து கொள்ளலாம் என்று உங்கள் இடுகைக்கு வந்த எனக்கு ஏமாற்றமும் அதிர்ச்சியும் தான் மிஞ்சியது.படைப்பைவிட படைப்பாளியை விமரிசித்த்ருக்கிறீர்கள்.அவர் சார்ந்த கட்சியை விமரிசித்திருக்கிறீர்கள்.அதன் காரணமாக திசை மாறி வசை மாரி பொழிந்திருக்கிறீர்கள்.
"செங்கல் பூசை" செய்தது தெரிந்ததுதானே.அதனால் என்ன ? இ.எம் எஸ் , பி.ஆர் ஆகியோர் A.I..CC உறுப்பினராக இருந்தவர்கள் .உலகம்போற்றும் மர்க்ஸீய தத்துவஞானிகள் ஐந்து பெரில் ஒருவர் இ.எம்.எஸ். மார்க்ஸிஸ்ட் கட்சியின் தூண்களில் ஒருவர் பி.ஆர். மத்திய பிரதெசத்தில் தீவிரமான மார்க்சிஸ்ட் உறுப்பினராக இருந்த சுரெந்திரகுல்கர்ணி பா.ஜ.கவுக்கு போனார்.அத்வானியின் அரசியல் அலோசகராக இருக்கிறார்."காவல் கோட்ட"த்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் ஐயா!
நூல் வெளிவந்த புதிதில் எஸ்.ராமகிருஷ்ணன் விமரிசித்திருந்தார்."நம் கண் முன்னால் வளர்ந்த சின்ன பையன்(ர்).முதலில் நல்ல கவிஞன். இப்பொது நாவல். வளாரட்டுமே." என்று அவருக்கு கடிதம் எழுதியிருந்தேன்."இன்றும் சு.வே . என் நண்பன் தான்" என்று பதில் எழுதினார்.இது விருது பெறுவதற்கு முன்பு.இன்று "காவல் கோட்டம்" விருது பெற்றபிறகு அந்த நூலுக்கு அச்சுக்கோத்தவரிலிருந்து பசைதடவி பைண்டு செய்தவரிலிருந்து மொழிபெயர்த்தவரிலிருந்து "நான் தான் நான் தான் " என்றால்சுவே என்ன செய்யவேண்டும் என்று நினைகிறீர்கள்." ஒன்றோ இரண்டோ பக்கங்களை கொடுத்து மொழிபெயர்த்துத் தரும்படி என்னிடம் கேட்டார்.செய்து கோடுத்தேன்." அவருக்கு விருதாக கொடுக்கப்படும் லச்சம் ரூ யில் எனக்கு ஆயிரம் ருயை நிச்சயம்கெட்கமாட்டேன். மாறாக பெருமைப்படுவேன்.
விருது கிடைத்தால் பங்குவேண்டும்.இல்லையென்றால் மேல்,கீழ் மூடி படுத்துவிடுவீர்களா?
"கந்தசாமி" எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்தான்.உள்ளே இருந்து போராடாமல் வெளியேறினார். என்ன செய்ய முடியும்.?
எம்.பி ஆக ஆசைப்படுகிறார்---நாயக்கர் கல்லுரி---இலக்கியம்பேசுங்கள் ஐயா!
"சு.வே"என் த .மு.எ.க சாவின் செயலாளர். அதற்க்கும் மெல் என் கட்சிக்காரன். அவருக்குக் கிடைத்தது எங்களுக்குக் கிடைத்ததாகும்.
"பஞ்ச மந்திரம்" என்ற சமஸ்கிருத வார்த்தயின் தமிழ் வடிவத்தை பெயராகக் கொண்டவர் நீங்களோ என்று அஞ்சுகிறேன். "மார்க்சிஸம் மகத்தானது". அதனைச்சிறுமைப்படுத்தாதீர்கள். திரைப்படத்துறையிலேயே சாவுங்கள். அதுதான் உங்களுக்கு தோதானது.
Wednesday, February 15, 2012
Thursday, February 09, 2012
சட்டமன்றத்திலேயே "கெட்டவார்தை படம்".......
சட்டசபையிலேயே "கெட்டவார்த்தை" படம்......
ஆப்கானிஸ்தானத்திலிருந்து பர்மாவரை இமயத்திலிருந்து குமரிவரை ஏன் முடியுமானால் கடாரமும் சேர்ந்து அகண்ட பாரதமாகும்வரை பிரும்மசாரியாகவே இருப்பதாக சத்தியம் செய்துள்ள பா.ஜ.க தலைவர்கள் உண்டு.தான் விரும்பிய பெண்ணை திருமணம்செய்ய முடியாமல் அந்தப்பெண்ணுக்கு திருமணமாகி அவளுக்குப் பிறந்த குழந்தையை " தன் " மகளாக நினைத்து வளர்க்கும் தலைவர்களும் உண்டு. சுப்பிரமணியம் சாமியைக் கேளுங்கள் -கதை கதையாக அவிழ்த்துவிடுவார்.அமைச்சராகி வெளிநாட்டு தூதுவர் கொடுத்த விருந்தில் குடித்து கும்மாளமிட்ட தலைவரை அம்பலப்படுத்தியவர் சுப்பிரமணிய சாமி .
பூனே நகரத்தில் "வைப்பாட்டியும்" மும்பைநகரத்தில் மனைவியையும் கொண்டு குடும்பம் நடத்தும் பா,ஜ,க அமைச்சர் உண்டு.சன்னியசினியாயிருந்தாலும் காதலில் வீழ்ந்த தலைவியும் அவர்களிடையே உண்டு.
இப்பொது கர்நாடகசட்டமன்றம் நடந்துகொண்டிருக்கும்போதே "கெட்டவார்த்தை" படம் பார்த்த அமைசர்களும் பா.ஜ.க.வில் இருக்கிறார்கள்.அதனை பார்த்த அமைச்சர்களில் ஒருவர் "பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை" அமைச்சர். அவர் கொடுத்த விளக்கம் அதைவிட கோடூரமானது. "அவர் ஒரு கருத்தரங்கத்தில் கலந்து கொள்ளவிருக்கிறாராம். "கும்பலாக கற்பழிபது" பற்றிய கருத்தரங்கமாம்.அதற்காக அமெரிக்காவில் நடந்த "கற்பழிப்பு" காணொளி" நாடாக்களை பார்த்துக்கோண்டிருந்தார்களாம் " .
இந்தப் பாவிகள் தான் ராமருக்கு கொவில் கட்டப் போகிறார்களாம். ராமர் பட்டாபிஷேக படத்தைப் பார்த்தால் சாதாரணமாக நாம் கன்னத்தில் பொட்டுக்ககோள்வொம். இவர்களுக்கு மனதில் சீதை மட்டும் நிர்வாணமாகத் தெரியும் வாய்ப்பு உண்டு..

Tuesday, February 07, 2012
தேசீய கீதம் ......
சென்னை நகரத்தின் மையமான பகுதியில் உள்ள பிரும்மாண்டமான மைதானம் அது.அதன் இரண்டு புறமும் நிழலுக்காக மரங்கள் உள்ளன. கிராமங்களிலிருந்து பிழைப்பைத் தேடி நகரம் வந்துள்ள ஒன்றிரண்டு கிராமத்து ஜனங்கள் சிலர் அந்த நிழலையே தங்கள் தங்குமிடமாக குடித்தனம் நடத்துகிறார்கள் .
அரசுவிழாக்கள் நடைபெறுவதும் அங்குதான். கட்சிகளின் பேரணிகள் நடை பெறுவதும் அங்குதான்.இப்படிப்பட்ட சமயங்களில் போலீஸின் தொந்திரவுக்குப் பயந்து அந்த மக்கள் தங்கள் சட்டி பானையைத் தூக்கிக் கொண்டு பக்கத்திலுள்ள பாலத்தினடியில் பதுங்கிக்கொள்வார்கள்.ஆண்கள் கூலி வெலைக்குப் போகிறார்கள். பெண்கள் குழந்தைகளொடுமரத்தடியில் சமைப்பது முதல் சகல வேலைகளையும் பார்த்துக்கொள்வார்கள்.சில பெண்கள் வருமானமில்லாத நேரத்தில் "நடுநிசி உழப்பாளர்"களாக மாறுவார்கள்.
அன்று அரசுவிழா. மந்திரி வந்து தேசீயக் கொடியை எற்றவிருக்கிறார்.கூட்டம் குவிந்துள்ளது. மரத்தடியில் இரண்டு நாளாக வருமானமிலாமல் ஒருபெண் தன் ஐந்து வயது மகளோடு நிற்கிறாள்.மைதானம் நிரம்பியிருக்கிறது.அந்தச்சிறுமி ஒரத்தில் இருக்கும் ஒரு நடுத்தர வயது மனிதரை நெருங்குகிறாள்.அவன் தனியாக இருக்கிறான். அவன் தொடையை அந்தச்சிறுமி தட்டுகிறாள். இரண்டு தொடைக்கும் நடுவில் லேசாக தடவுகிறாள்.அவன் சிறுமியைப்பார்க்கிறான்.அவள் " அந்தா அம்மா" என்கிறாள் அவன் புரிந்து கொள்கிறான்.மரத்தடியில் நிற்கும் அவளை ப்பார்த்து கண் சாடை காட்டுகிறான்.மெதுவாக மரத்தடியை நோக்கி நகர்கிறான். சிறுமியும் அவனைப் பின்தொடர்கிறாள் .
தலைவர் கொடியேற்ற "ஜன கண மன" என்று பின்னணியோசை கேட்கிறது
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் - ஒருகுறும்படத்தின் திரைக்கதை இது. சென்னை திரைப்படக்கல்லூரி மாணவர் தயாரித்த படம்.அந்த மாணவர் பெயர் ருத்ரையா .
"அடர் கருப்பு" காமராஜ் தன் இடுகையில் "அவள் அப்படித்தான்" என்றபடம் எடுத்த ருத்ரையா வைப்பற்றி குறிப்பிட்டுள்ளார். அற்புதமானபடம். கமல ஹாசனும் , ரஜனி காந்த்தும் தங்கள் வாலைச்சுருட்டிக்கொண்டு ருத்ரையா சொன்னது போல் நடிதிருப்பார்கள். இளம் வயது ஸ்ரீப்ரியாவின் மிகச்சிறந்த நடிப்பு இரண்டு சூப்பர் ஸ்டார்களையும் தூக்கி சாப்பிடும் வகையில் இருக்கும்.
கருப்பு வெள்ளை படம் தான்.திரைப்படத்திற்கு நீளமும் அகலமும் மட்டுமே உண்டு. அவள் அப்படித்தான் திரைப்படத்தில் மூன்றாவது பரிமாணத்தை வெளிப்படுத்தும் வகையில் காமிரா பளிச்சிடும்.இருட்டையும் வெளிச்சத்தையும் கலந்து குறிப்பாக ஒரு பாடல் காட்சியில் மிகச்சிறப்பான ஒளிப்பதிவு அருமையாக இருக்கும்.
அசோக்குமாரும்,பாலுமகேந்திராவும் ,கண்ணனும் ,வாசும் தலை எடுப்பதற்கு முன்பே காமிரா வை ராபர்ட் சிறப்பாக கையாண்டுள்ளார்.
ருத்ரையா" கிராமத்து அத்தியாயம் " என்ற படத்தையும் எடுத்தார். கமல ஹாசனின் அண்ணனும் சாரு ஹாசனின் தம்பியுமான சந்திர ஹாசன் நடித்த படமாகும் . தமிழகத்து ரசிக மகாஜனங்கள் ருத்ரையாவை புறக்கணித்தனர். அவர் "போங்கடா பொங்க " என்று கோயம்புத்துருக்கு ரயிலேறி விட்டார்.