Saturday, November 23, 2019
Monday, November 11, 2019
"பாபர்மசூதி" தீர்ப்பும் ,
இயக்குனர் அமீரின்
கருத்தும் .....!!!
உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி பலர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். "பருத்தி வீரன் " பட இயக்குனர் சமூக வலைத்தளத்தில் பகிரங்கமாக தன கருத்தை சொல்லிவருபவர். அவர் தீர்ப்பு பற்றி தன் கருத்தை சொல்லியிருக்கிறார் .
மிகவும் வித்தியாசமான அதேசமயம் ,முதிர்சசியான கருத்தினை சொல்லி இருக்கிறார் ..
" கொலைக்கு கொலை என்பதுஇஸ்லாமிய மார்க்கத்தில் உள்ளது தன் மகன் கொலைசெய்யப்பட்டான் என்றால் நான் ரத்த உறவுள்ள நான் கொலை செய்ய உரிமை உள்ளவன்> அதற்காக யாரையும் கொலை செய்வ தில்லை . என்மகனை கோலா செய்தவனை கொலைசெய்ய எனக்கு இஸ்லாமிய சட்டமனுமதி அளிக்கிறது. இஸ்லாமிய நாடுகளில் இந்த சட்டம் நடைறைப்படுத்தப்படுகிறது "
"இது ஒருவகை நியாயம் . கொலைசெய்தவர் தவறாக நடந்து விட்டது - இதற்காக நான் வருத்தப்படுகிறேன். ஏற்படும் நட்டத்தை பணம் மூலம் நிவர்த்தி செய்கிறேன் என்றும் சொல்லலாம்.சம்மந்தப்பட்டவர்கள் அவரை மன்னித்து அதனை ஏற்றுக்கொள்ளலாம்.இதுவும் இஸ்லாமிய சட்டத்தில் உள்ளது> "
"இந்த இரண்டும் தவிர மூன்றாவதாக ஒன்றும் உள்ளது.மகனை இழந்தவர் அந்த கொலையாளியை மன்னிக்கலாம் . இறைவன் அவருக்கு நல்லதையே செய்வான்"
"பாபர் மசூதி இடிக்கப்பட்டுவிட்டது . அந்த இடம் அரசுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அறக்கட்டகை மூலம் அரசு அங்கு ஒரு கோவிலக்கட்ட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்துக்களின் நம்பிக்கையை மேலிறுத்தி இப்படிகூறுகிறார்கள்.இது சரியா தப்பா என்பதைவிட நானுறு ஆண்டுகளாக நாம் அனுபவித்தோம். இப்போது அமைதிக்காக அவர்கள் அனுபவிக்கட்டுமே . இஸ்லாம் வழிபாட்டுத்தலம் தான் வேண்டும் அது எந்த இடம் என்பதை சொல்வதில்லை " என்றார் .
மிகவும் வித்தியாசமானப்பார்வையை கொண்டிருக்கிறார் .
"அதேசமயம் இந்த இடி ப்பு விஷயம் இதோடு நின்றுவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறார், சு.சாமி வகையறாக்கள் இந்தியா முழுமைக்கும் ஒரு பட்டியலை தயார் நிலையில் வைத்துக்கொண்டு திரிகிறார்கள்> சமரசக்குழவில் இஸ்லாமியர் சார்பாக இத்தொடு முடிவுக்கு வரவேண்டும் என்று உத்திரவாதம் கேட்டபோது எதிர்தரப்பினர் அளிக்க மறுத்துவிட்டனர்" என்பதையும் அமீர் சுட்டிக்காட்டியுள்ளார் .
பெரும்பாலான இந்துக்கள் அப்படி ஒன்று நடப்பதை ஆதரிக்கமாட்டார்கள் என்ற தன் நமபிக்கையும் அமீர் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் அமீருக்கு நம் பாராட்டுக்கள்.
Sunday, November 10, 2019
உச்ச நீதிமன்ற தீர்ப்பும் ,
பாபர் மசூதியும்....!!
மசூதி இடிக்கப்பட்டு இரண்டு சமூகங்களுக்கு இடையே பிரசசினை உண் டான பொது இதனை பேசி தீர்க்க வேண்டும் என்று இடது சாரிகள் கருதினர் . அப்படி முடியாவிட்டால் இரண்டு கடசியினரும் நீதிமனறத்தின் தீர்ப்பினை ஏற்றுக்கொள்வது தான் சரியாக இருக்கும் என்றும் குறிப்பி ட்டனர் .
இப்போது திப்பு வந்துள்ளது. முதலில் அமைதிகாப்பது மிகமுக்கியம் . தீர்ப்பை அலசுவது என்பது ஒருபக்கம் நடக்கட்டும். நாட்டின் அமைதி என்பது மிகமுகக்கியமான ஒன்றாகும்.
தீர்ப்பின் முக்கியமான வற்றை பார்க்கலாம்.
1992ம் ஆண்டு மதவெறியர்கள் பாபர் மசூதியை இடித்தது ஒரு கிரிமினல் குற்றம் என்று தீர்ப்பு கிறுகிறது . அப்படியானால் அந்த குற்றமிழைத்தவர்களுக்கு என்ன தண்டனை ?
1949ம் ஆண்டு தொழுகை நடந்து கொட்டிருக்கும் கட்டிடத்திற்குள் இரவு ராமர் பொம்மையை கொண்டுவைத்தது குற்றம் என்று தீர்ப்பு குறிப்பிடுகிறது. வைத்தவர்களை என்ன செய்ய ?
1991ம் ஆண்டு இந்திய அரசு ஒரு சட்டம் கொண்டுவந்தது. அதன்படி இந்தியா சுதந்திரம் பெற்ற பொது எந்தெந்த வசுழிபாட்டு தலங்கள் எந்தெந்த மதத்தினரிடம் இருந்ததோ அது அப்படியே இருக்க வேண்டமென்று அந்த சட்டம் குறிப்பிடுகிறது. பாபர் மசூதி மட்டும் அதிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டது> இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்கிறது தீர்ப்பு..
மசூதி இடிக்கப்பட்ட இடம் சர்சசைக்குரியதாக அறிவிக்கப்பட்டது யாருக்கு சொந்தம் என்பது வழக்கு. மசூதி கட்டப்படுவதற்கு முன்பு அங்கு கோவிலை இருந்தாக சொன்தை நீதிமன்றம் ஏற்க வில்லை . அதேபோல் நிலம் மசூதிக்கு சொந்தம் என்பதையும் ஏற்கவில்லை.
ஆகையால் நிலம் அரசுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு கூறுகிறது. 2.7 ஏக்கர் நிலத்தை அரசுக்கு சொந்தம் என்று தீர்ப்பு குறிப்பிடுகிறது. . இஸ்லாமியர்களுக்கு மசூதிக்காட்ட 5 ஏக்கர் நிலத்தை அவர்கள் விரும்பும் இடத்தை தேர்வு செய்து கட்டித்தரவேண்டும் என்கிறது தீர்ப்பு.
இறுதியாக அரசு வசம் வந்துள்ள நிலத்தை ஒரு அறக்கட்டளை அமைத்து அதன் மூலம் அங்கு ஒரு கோவில் கட்டி கொடுக்க வேண்டும் என்பதும் தீர்ப்பாகும். இது பெரும்பாண்மை இந்துக்களின் நாம்பிக்கை யை அடுத்து எடுத்ததாக தெரியவந்துள்ளது.
இந்த திப்பினை எதிர்த்து மாறிய பரிசீலனை செய்ய மீள்வார்கள் என்றும் குறைப்படுகிறது.
ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக தீர்ப்பு சொல்லியிருக்கும் பொது மறு ஆய்வு நிராகரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
Tuesday, October 15, 2019
(அவர் நினைவில் )
ப.ரத்தினம் எழுதிய ,
சிறந்த நாடகம்,
"ஒரு கல் கனி கிறது " ...!!!
1977ம் ஆண்டு வாக்கில் தேசிய நாடக பள்ளி காந்திகிராம பல்கலையில் நாடக பயிற்சி முகாமை நடத்தியது. தமுஎச விலிருந்து பரத்தினம் அவர்களும் நானும் கலந்து கொண்டோம்.
ஜெயந்தன்,அன்றைய மாணவர் மு.ராமசாமி,வேசங்கரன் ,என்ற ஞனி ,கலைஇயக்குனர் கிருஷ்ண மூர்த்தி என்று பலர் கலந்து கொண்டனர்.
ஆத்யம் ரங்காச்சாரி, சிவராம கரந்த் , பிரசன்னா, பி.வி கரந்த்,பிரேமா கர ந்த ஆகியோர் வகுப்பு எடுத்தனர்.பேராசிரியர் ராமானுஜம்,எஸ்.பி சீனிவாசன் ஆகியோர் நடத்தினர்.
ஸ்தானிஸ்லாஸ்க்கி யிலிருந்து,டென்னஸி வில்லியம் வரை, உத் பல்தத்,பதால் சர்க்கார், பாசி, விஜய் டெண்டுல்கர் என்று நாடக ஆளுமையாக்களின் பரிசியம்முதன் முதலாக கிடைத்தது.
குழந்தையின் ஆச்சிரியத்தோடு ரத்தினம் அவர்கள் குறிப்புகளை எடுத்துக்கொண்டார்.
டெண்டுல்கரில் ஒப்பற்றநாடகம் "சகாராம் பைண்டர் ." மரத்தியநாடகத்தி ன் உச்சம் அந்த நாடகம்.
சகாராம் ஒரு லும்பன். சகல கேட்ட பழக்கங்களும் உள்ளவன்.நகரத்தின் கேடுகெட்ட ரவுடி. அவன்வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவம் அவனை புரட்டிப்போடுகிறது. மிகசிறந்த மனிதனாக அவனை மாற்றுகிறது. இதுதான் நாடகம்.
பிரத்தினம் மனதை பாதித்தஇந்தநாடகத்தை "ஒரு கல் கனிகிறது "என்ற அற்புதமான நாடகமாக எழுதினர்.
மதுரை பீப்பிள்ஸ் தியேட்டர் அரங்கேற்றினார்கள்.
எல்.ஐ.சி ஊழியரான நீல கண்ட ஜோஷி இதனை இயக்கினார்.
இந்த குழு அரங்கேற்றிய முக்கியமான நாடகங்களில் இதுவும் ஒன்றாகும்.
Monday, October 14, 2019
என் முன்னோடி
ப.ரத்தினம்
மறைந்தார் ...!
அஞ்சலிகள் !!!
1962ம் ஆண்டு வாக்கில் "தாமரை " இதழில் என் முதல்சிறுகதை வெளிவந்ததிலிருந்து ரத்தினம் அவர்கள் பரிச்சியம். கட்சி ஒன்றாயிருந்த காலம்.
நவபாரதி ,முப்பால் மணி , காஸ்யபன், ப.இரத்தினம் என்று ஒரு ஜமா சேர்ந்திருப்போம். கலை ,இலக்கிய பெறு மன்றம் தான் எங்கள் புகலிடம்.
காலம் மாறியது. 1969ம் ஆண்டு செம்மலர் பத்திரிகையை கு.சின்னப்ப பாரதி ஆசிரியராக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. அவருக்கு உதவியாக உள்ள ஆசிரியர் குழுவில் என்னை சேர்த்துவிட்டார் தோழர் ப.ரத்தினம்.
நெருக்கம் அதிகமானது. மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை மாநாட்டிற்காக அவர் எழுதிய நாடகம் "நெஞ்சில் ஒரு கனல் "பீப்பிள்ஸ் தியேட்டரின் சார்பாக அரங்கேற்றப்பட்டது. வையை செழியன் என்ற பெயரில் எழுதி இருந்தார். இயக்கியவர் காஸ்யபன்,
செம்மலரில் ப.ரத்தினம் என்ற பெயரில் எழுதிவந்தார். சில சமயங்களில் மதிச்சியம் கணேசன் என்ற பெயரிலும் எழுதி உள்ளார்.
1974ம் ஆண்டு செம்மலரில் எழுதிவந்த எழுத்தாளர்கள் மதுரை பெரியார் நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தில் சந்தித்தோம்.தமிழகம் பூராவிலும் இருந்து வந்திருந்தவர்கள் 16 பேர்.
நமக்கு என்று ஒரு எழுத்தாளர்சங்கம் ஆரம்பிக்க முடிவாகியது. 1975ம் ஆண்டு சங்கம் உதயமாகியது. மதுர மாவட்ட செயலாளராக ரத்தினம் அவர்கள்பணியாற்றினார்கள். என்னையும்மாவட்ட செயலாளராக ஆக் கி அழகு பார்த்தார்கள்.
அப்போது மார்க்சிஸ்க்காட்ச்சியின் மாநிலக்குழு மதுரையில்செயல்பட்டு வந்தது. கடசியின் முது கெலும்பாக பணியாற்றினார். தன்னை எப்போதுமே முன் நிறுத்திக்கொள்ளாத மனம் கொண்டவர்.இளைஞர்களை ஆதரித்தது செயல்படுவார்.
அற்புதமான அந்த தோழரின் மறைவு கட்சிக்கும் தனிப்பட்டமுறையில் எனக்கும் பெரும் இழப்பாகும்.
அவருக்கு என் அஞ்சலிகள்!!!
Sunday, September 22, 2019
கோமல் சுவாமிநாதனும் ,
அருங்காட்ச்சி அரங்கமும் .....!!!
அப்போது நான் மதுரையில் இருந்தேன் .கோமல் அவர்களிடமிதுனது தந்தி வரும். " நாளை பாண்டியனில் வருகை. மாலை நாலுமணிக்கு "சந்தானம் " வாருங்கள். ரங்கராஜா புரம் போகிறோம் "என்று இருக்கும்.
மறுநாள் மாலை ரங்கராஜா புறம் சென்று அங்கு ஆசிரியர் பணிசெய்யும் நீலமணி வாத்தியாரை பார்ப்போம்.
"மதுரை வீரன் அம்மானை " என்ற கிராமியப்பாடலை பதிவு செய்து வருவோம். இப்படி நிறைய அவர் சேர்த்து வைத்துள்ளார். "இவை அழிந்து விடக்கூடாது ஐயா !பாதுகாக்கப்படவேண்டும் என்பார்.இப்படி பல அனுபவங்கள் உண்டு.
இரண்டு பெரும் பலநாடக விழாக்களுக்கு செல்வோம். அவர் அருகில் அமர்ந்து கொண்டு நாடகம் ப்பார்ப்பதே ஒரு சுகம்.
மதுரை யில் ஒரு நாடக விழா ! அதில் "பரிக்கிறமா " என்ற நாடகம்கோவாவில் இருந்து ஒரு குழு போட்டது. மலை யாள நா டகமிருந்தது.
ஒரு விழாவில் "பனி வாள் " என்ற நாடகம் .டாக்டர் வேலு சரவணன் ஆரம்ப காலத்தில் போட்ட நாடகம். வித்தியாசமான அரங்க அமைப்பு .உடல் மொழி . வசன உச்சரிப்பு. மற்றோரூ நாடகம் - பாண்டிசெறி பேராசிரியர்......ஆறுமுகம் என்று நினைவு - ரயிலடியின் ஒரு பகுதி தான் அரங்கம்.இருப்புப்பாதை முன் மேடை வழியாக பார்வையாளர்கள் வரை வரும் .இரண்டு பேர் இருப்புப்பாதையில் பேசிக்கொண்டு வருவார்கள் வருவார்கள். ரயில் வருவது ஒளியின் முலமும் ஒலியின் மூலமும் உணர்த்தப்படும்.
எனக்கு இது புது அனுபவம். "என்னய்யா இது? "என்று கேட்டேன்.
"பிறகு இரவு பேசிக்கொள்ளலாம் .இப்போது பாரும் " என்றார்.
மதுரைபலக்லைக்கழக பேராசிரியர் டாகடர் ராம மூர்த்தி பேசினார்.
இரவு நாங்கள் இருவரும் விவாதித்தோம்.
"சாமா ! திருவனந்தபுரம் போயிருக்கேறா ?
"போயிருக்கேன் "
'அங்க நகைக்கடைல தங்க நாகை மட்டும் இருக்காது . தந்த சிலை களும் வச்சிருப்பாங்க "
"ஆமா ! அழகான யானை கூட்டம், மான்கள் னு இருக்கும்"
"அதுமட்டுமில்ல வே ! ஊஞ்சலில் ஆடும் ராதையும் கிருஷ்ன்ணனும் ராதையும் இருக்கும்" ..ராதைக்கு 25 வயது .கிருஷ்ணருக்கு 15 வயது.காதலிச் சாங்க .ராதை யின் சேலை காற்றில்பறக்க கண்ணன் மீது நளினமாக சாய்ந்திருப்பாள் .அவள் கழுத்தை வளைத்தது கண்ணன் வேணுகானம் இசைப்பான்.அவன் உடல் 15 வயதை காட்டும் முகம் குழந்தை முகமாக ருக்கும் ".
"பார்த்திருக்கிறேன்,மணிக்கணக்கில் சோறுதண்ணி இல்லாமல் பார்க்கலாம்"
"அது சரி ! அதுக்காக தினம் பூ செய்யும் விக்கிரகம் மாதிரி சந்தனம் குங்குமம் புஷ்பம் சாத்த முடியாது.. அந்த அற்புதமான கலைஞனை கவுரவிக்க பாராட்ட அந்த பதுமையை அருங்காட்ச்சி அரங்கத்தில் தா வைக்க வேண்டும்."
"புரியுதா வே "
"புரிஞ்சுட்டு"
Tuesday, August 27, 2019
"அஞ்சல் அட்டை "
காஷ்மீரோடு தொடர்பு கொள்ள அஞ்சல்அட்டை ஒன்றுதான் வழி . ஆகா ஷாஹித் அலி என்ற கவிஞர் இதனை ஒரு கவிதையாக எழுதி உள்ளார்.
கர்நாடக இசை கலைஞர் T . M . கிருஷ்ணா இதனை பாடி காணொளியாக ஏற்றியிருக்கிறார். காணொளியில் பின்னணியாக செயல்படாத காஷ்மீர த்துத்தொலைபேசி நிலையங்களின் "பீப் -பீப் " ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும்.
tmkrishna -reciting agha shahid ali's poetry என்று google சென்றால் கேட்டு சோகத்தைஅனுபவிக்கலாம்.
இதோ அந்த கவிதை:
காஷ்மீர் என்னுடைய மின்னஞ்சல் பெட்டிக்குள் அடங்கிவிட்டது !
என்வீடு 4"X 6"தான் !
எனக்கு சுத்தம் பிடிக்கும் !
இப்போது நான் அரைஅங்குல இமாலயத்தை என் கையில்பிடித்திருக்கிறேன் !
இது தான் என்வீடு !
என்று சொல்லிக்கொள்ளலாம் !
நான் வீட்டிற்கு போக முடியாது!
நான் திரும்பும் பொது வண்ணங்கள் ஒளிராது !
ஜீலம் நதியின் தண்ணீர் சுத்தமாக இருக்காது !
என் அன்பு மிக அதிகமாக வெளிப்படுத்தப்பட்டுவிட்டது !
என் நினைவுகள் த ன் கூர்மையை இழந்துவிட்டன .!
அதற்குப்பதிலாக
ஓரு புகைப்படத்தின் கழுவப்படாத பிலிம்
போல கருப்பு வெள்ளையாகவும்,
வெள்ளை கருப்பாகவும் ராட்சத்தனமாக தெரிகிறது !!!
நன்றி :svv
Sunday, August 25, 2019
நாடக விழா ,
பற்றி,
நிறைவாக ...!!!
23 இடுகை -தொடர்ச்சியாக நாடகம் பற்றி எழுதி வந்தேன் .
பேராசிரியர் Dr .ரவிக்குமார் (ஸ்ரீராசா ) அவர்கள் பலவருடங்களாக என்னை வற்புறுத்தி வந்தார். இடது சரி நாடக வளர்ச்சி பற்றி எழுதும்படி ! மதுரையில் இருக்கும் பொது எழுதாமல் இருந்து விட்டேன்.இப்பொது முதுமையும் இயலாமையும் சேர்ந்து புலம் பெயர்ந்து வந்த இடத்தில் எழுத ஆரம்பித்தேன்.
எந்த தரவும் இல்லை . நினைவுகளை வைத்து எழுதினேன். காலவர்த்தமானங்களில் தவறு இருக்கும் வாய்ப்பு அதிகம் தான். கலந்து ஆலோசிக்கக் கூட தமிழ் தெரிந்தவர்கள் இல்லை.
ஆனாலும் எழுதினேன் .எங்கே முடிப்பது என்று தெரியவில்லை .
1989ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி டில்லி அருகில் காசியாபாத்தில் "ஹல்லபோல் " என்ற நாடகம் நடந்து க்கொண்டிருந்தது. ஜனநாட் யமஞ்ச் என்ற சப்தர் ஹஷ்மியின் குழுவினர் நடத்தினார்கள். காங்கிரஸ் குண்டர்கள் அந்த குழுவினரை தாக்கினார்கள்> படுகாயமுற்ற சப் த்தர் ஹஷ்மி அடுத்தநாள் இறந்தார்.
இந்தியா புராவிலும் நாடகவியலாளர்கள் துடித்து எழுந் தனர் .தமிழகம் மின்சாரம் பாய்சசியது போல் எழுந்தது
கிராமம் நகரம் என்று பாராமல் தெருவுக்கு தெரு சப்தர் ஹஷ்மி நாடக குழுக்கள் தேன்றின .நூற்றுக்கணக்கில் குழுக்கள் உருவாகின..
இந்த குழுக்களின் வரலாற்றினை ஆவணப்படுத்தவேண்டும்.
நான் ஒரு skeliton ஐ மட்டுமே செய்துள்ளேன். அதற்கு ரத்தமும் சதையும் நரம்பும் அளித்து அழகுபடுத்தவேண்டியது வருங்கால வரலாற்றாளர்கள் பணியாக விடுகிறன்.
இது ஒரு ஸ்கெலிடன் கூட அல்ல. சில குறிப்புகள் மட்டுமே .
இந்த தொடரை இதோடு நிறைவு செய்கிறேன்...!!!
வாழ்த்துக்கள் ...!!!
Friday, August 23, 2019
(நாடக விழாவை முன் நிறுத்தி )
Dr .செல்வராஜின் ,
நாடக ,
உலகம்...!!!
78ம் ஆண்டாக இருக்கலாம். தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் மதுரை பச்சரிசிக்கார சந்தில் கவி அரங்கம் நடத்திக்கொண்டு இருக்கிறது.
ஒரு பையன். கருப்பாக - மூ க்கும் முழியுமாக - அப்படியே மடியில்வைத்து கொஞ்சசும் அழகுடன்-மேடையில் ஏறுகிறான். நெருப்புத்துண்டங்களாக வார்த்தைகள்கள் விழுகின்றன.
அருகில் இருந்தவரை பையன் யார் என்று கேட்டேன்.மதுரை மருத்துவகல் லூரி மாணவன். மாணவர் இயக்கத்தில் இருக்கிறான். பட்டிவீரன் பட்டி அருகில் ஒருகுக்கிராமம்.பெயர் செல்வராஜ் என்கிறார்.
Dr சேதுராமன், Dr .சீனிவாசன், சக்தி, சத்தியநேசன், முருகன் ஆகியோர் வளர்த்த மதுரை மருத்துவ மாணவர் சங்கத்தினபாரம்பரியத்தை சேர்ந்தவர் செல்வராஜ். கல்லூரி வளாகத்திற்குள் தி.மு.க; அதிமுக என்று யாரும் அண்டவிடாமல் பார்த்துக் கொண்ட வர்.
அதிமுக பிரமுகர் பழக்கடை பாண்டி " மருத்துவ கல்லூரில செல்வராஜ் னு ஒருபய இருக்கான்பா ! நம்மளா உள்ள விட மாட்டேங்கங் பா " என்று போது மேடையில் புலம்பும் அளவுக்கு செல்வராஜின் செயல்பாடுகள் இருந்தது.
என்ன வளர்சசி ! எத்தகைய வளர்சசி !! அந்த பையன் தான் இன்று மதுரையில் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான Dr .செல்வராஜ்.
அதோடு செல்வராஜ் நாடகங்களும் போட்டுக்கொண்டிருந்தார். அவரே எழுதி இயக்குவார் .அதில் "வாடகை வீடு " மிக முக்கியமான நாடகம்.ஏழை எளிய மக்களை கசக்கி பிழியும் சொந்தக்காரகளமுண்டு>
புறம் போக்கு நிலத்தில் குடிசை போட்டு வாடகைக்கு விடும் சண்டியர் நிறைந்த ஊர்தான் மதுரையும். ஏழை எளிய மக்களை கசக்கி பிழியும் வீட்டு சொந்தக்காரர்களும் உண்டு இந்த முரணை அற்புதமாக சித்தரிக்கும்நாடகமாகும் அது.
உணவு,உடை,இருக்க இடம் தரவேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு உள்ளது. இருக்க இடமளிக்கவேண்டும்.என்று அரசி ன் பொறுப்பை சுட்டிக்காட்டும் நாடகம் ஆகும். சுமார் 200 முறை போட்ட நாடகமும் அதுதான்.
செல்வராஜின் மாற்றோரு நாடகம் "கல்கி வந்தார் " என்பதாகும்.பாபர் மசூதி யின் பின்புலத்தில் மகாவிஷ்ணு கல்கி அவதரம் எடுத்து வருவார்> அவரோடு நாரதரும் வருவார் .அயோத்தியில் ராமன் பிறந்தானா ? என்று கேள்வியை எழுப்புவார்.
செல்வராஜ் எழுதிய நாடகங்கள் புத்தகமாக சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கல்லூரி பேராசிரியராகஇருந்து ஒய்வு பெற்ற மனை வியொடு Dr .செல்வராஜ் மதுரையில்வசித்து வருகிறார்..அவருடைய ஒரேமகள் குஜராத் பல்கலையில் ஆராய்சசி மாணவியாகஇருக்கிறார்.
மன அமைதி,நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கொண்டு Dr செல்வராஜ் மக்கள் பணியில் ஈடுபட வாழ்த்துகிறேன்.
Thursday, August 22, 2019
(நாடக விழாவை முன் நிறுத்தி )
ஜீவ பாரதியின் ,
"இங்கே மாப்பிள்ளை கிடக்கும் "
நாடகம்...!!!
அத்வானியின் ர(த்)த யாத்திரை முடிந்து நாடு குழம்பிப்போயிருந்த நேரம். கலை துறையில் செயலாற்றிக்கொண்டிருந்த இடதுசாரி கலைஞர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்தனர்.
நாடுமுழுவதும் உள்ள கலைஞர்களை டெல்லிக்கு வரச்செய்து ஆலோசனை நடந்தது. முழுக்க முழுக்க தோழர் சீதாராம் எச்சூரி தலைமையில் கூட்டம் நடந்தது.
'ராமாயணமும் மகாபாரதமும் இந்தியர்களுக்கு சொந்தமானது. அறிவார்ந்த கருத்துக்கள் நமக்கும் சொந்தமானது தான்> அவற்றை பயன்படுத்தவேண்டும். "சம்பவாமி யுகே யுகே " என்ற நாடகத்தை துக்ள க் சோ போடுகிறார். நாம் என் அப்படி செய்வதில்லை. புராணங்களை மறுவாசிப்பு செய்யவேண்டும்." என்று அவர் கருத்துக்களை சொன்னார்.
இந்த கூட்டத்திற்கு தமிழகத்திலிருந்து பண்பாடு செய்லபாட்டாளர்களான கலைஞர்கள் அருணன்,காஸ்யபன், டாக்டர்.செல்வராஜ், பிரளயன்,ஜீவபாரதி ஆகியோர் சென்றிருந்தோம்.
அந்த ஜீவ பாரதி எழுதிய நாடகம் தான் "இங்கே மாப்பிள்ளை கிடைக்கும்." என்ற நாடகம்.
கும்பகோணம் பாத்திரத்தொழிலாளர்கள் இடையே தொழிற்சங்க பணியாற்றிக்கொண்டிருந்தவர் தோழர் ஜீவ பாரதி.
பஜாரில் உள்ள கடை அது.முகப்பில் "இங்கே மாப்பிள்ளை கிடை க்கும் " என்ற போர்டு தொங்கும். உள்ளே பல்வேறு ஷோ கேசுகளில் விதம் விதமான மாப்பிள்ளைகள் உயிரோடு அடைத்து வைக்கப்பட்டிருப்பார்கள். ஒரு ஏழை விவசாயி மகளை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை வாங்க வருவான்>.ஷோ கேசில் உள்ள மாப்பிளை ஒருவன் பார்த்து அந்த பெண் தேர்ந்த்டுப்பாள் .அழகான டாக்டர் மாப்பிள்ளை . விவசாயி விலை கேட்ப்பான். அவனால் கொடுக்க முடியாது. அவனுடைய தகுதிக்கு கால் முடமான ஒரு மாப்பிள்ளையை வாங்கிக்கொண்டு மகளை அழைத்துக்கொண்டு செல்வான்.
சிறிது நேரத்தில் விலை உயர்ந்தகாரில் செல்வந்தர் ஒருவர் வருவார். அவரோடு அவருடைய மகளும் வருவார்.ஷோ கேசில் தேடி அலை ந்து ஒரு ஐ.ஏ.எஸ் மாப்பிள்ளையை தேர்ந்த்டுப்பாள் . செல்வந்தர் கடைக்காரர் சொன்ன விலைக்கு செக்கை கொடுத்துவிட்டு "சரி ! பாக் பண்ணி கார் டிக்கில போடும் " என்று உத்திரவிடுவார்.நாடகம் முடியும்.
ஷோ கேசில் உள்ளமாப்பிள்ளிகள் தங்கள் தகுதி,விலை ஆகியவற்றை கிளிப்பிள்ளைகள்போலசொல்லிக்கொண்டிருப்பார்கள்.
பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள்.
"உஷ் ! சத்தம் போடாதீர்கள்.நீங்களும் உங்கள் மகளுக்காக என்கடக்குதான் வரவேண்டும் என்பார் கடைக்காரர்.
கடை க்காரராக ஜீவ பாரதி நடிப்பார் . செல்வந்தராக மிடுக்கான நடையும் கம்பிரமும்கலந்து எல்ஐசி ஊழியர் ரகுபதி அவர்கள் நடிப்பார்கள்.
தமிழ்நாடு முழுவதும் வலம் வந்த நாடகமாகும் இது. பல மொழிகளில் சென்றதும் ஆகும்.
மறக்க முடியாத நாடகங்களில் ஒன்றும் கூட ...!!!
Wednesday, August 21, 2019
(நாடக விழாவை முன் நிறுத்தி )
கோவில்பட்டி "தர்சனா " குழுவும் ,
"கோணங்கியின்"
மறுபக்கமும் ...!!!
தமு எ ச வின் செயல் வீரர்களில் கோவில்பட்டி தோழர்களுக்கு சிறப்பான பங்கு உண்டு.
சிறந்த படிப்பாளிகள் ! அதேசமயம் ஈவு இரக்கமற்ற விமர்சகர்களும் கூட !!
பால் வண்ணம் தலைமையில் ஒரு குழு செயல்பட்டுவந்தது. Dr .மனோகர்,துரை பாரதி, கிருஷி, தமிழ்ச்செல்வன் ,ராமசுப்பு, மணி , கோணங்கி.உதய சங்கர் ,நாறும்பூ என்று அதில் பலர் உண்டு.
இவர்கள் அமைத்ததுதான் தர்சனா கலை குழு. பல அற்புதமான நாடகங்களை இவர்கள் படைத்துள்ளார்கள் . அதில் "பச்சோந்தி" என்ற நாடகம் முதன்மையானது.
தெரு நாய் ஒன்று வழிப்போக்கனை கடித்து விடுகிறது.அவன் நகராட்ச்சி அதிகாரியிடம் புகார் அளிக்கிறான். அதிகாரி நாயை பவுண்டில் அடைக்க உத்தரவிடுகிறார். காவல்காரன் "ஐயா ! இது பட்டாளத்து அதிகாரி விட்டு நாய் போல் தெறிக்கிறது தெரு நாயல்ல " என்கிறான்.
அதிகாரி புகார் கடுத்தவன பார்த்து " ஏன்யா ! நாய் வாயுள்ள கைய கொடுத்த கடிக்காம என்ன செய்யும். இவனை பிடிச்சு சிறையிலே அடையுங்கள் என்று உத்தரவிடுகிறார்.
காவலாளி " ஐயா ! இந்த நாய் பட்டாளத்துக்காரர் விட்டுநாய் போல் தெரியவில்லை ! தெரு நாய் போலும் இல்லை. அவர்விட்டுக்கு அவர் தம்பி வந்திருக்கிறர் .அவர்கள் நாய் போல்தெரிகிறது." என்கிறான் .
அதிகாரி தன் உத்திரவை மாற்றுகிறார்.
ஜார் மன்னர் ஆட்ச்சிக்காலத்தில் அதிகாரிகள் எப்படி பச்சொந்திகளாக இருந்தார்கள் என்பதை கிழித்துக்காட்டும் ஆண்டன் செகாவின் நாடகம் இது. இதில் மனோகர் நடித்திருப்பார் .இன்றய குணசித்திரனடிகர் "சார்லி" தான் அன்றைய மனோகர்.
சம்ஸ்கிருத மொழியில் "ஆதிசங்கரர் " என்று பல விருதுகளை பெற்ற படம் வந்தது. அதன் தயாரித்து இயக்கியவர் ஜி .வி .அய்யர்.அந்த படத்தில் அய்யருக்கு உதவி இயக்குனராக பணியாற்றியவர்தான் இன்றைய துரை பாரதி.
இவர்களின் மாற்றோரு நாடகம் " ஜப்தி " என்பதாகும். கூட்டுறவு வங்கியில் கடன்வாங்கி செலுத்தமுடியாமல் தவிக்கும் மக்களின் அவலங்களை சித்தரிக்கும் நாடகம். ஜப்தி அதிகாரியாக கோணங்கி நடிப்பார்.மிகவும் soft ஆன முகம்கொண்ட கோணங்கி அதிகாரியின் ஆணவத்தோடு கூடிய கோரமுகத்தை காட்டி அருமையாக நடிப்பார். கடன்வாங்கிய விவசாயி ஜப்தி நடவடிக்கையால் கதறி அழும் காட் சியில் விவசாயின் நடிப்பில் பார்வையாளர்களும் அழுவார்கள் .விவசாயியாக தமிழ்ச்செல்வன் நடிப்பார்.
1979ம் ஆண்டு மதுர நாடக விழாவில் இவர்கள் "தேரோட்டிமகன்" நாடகத்திலிருந்து ஒருகாட்ச்சிய மட்டும்நடித்துக்காட்டினார். கோணங்கி, நாறும்பூ ஆகியோர் கிரீடம் தரித்து பஞ்ச பாண்டவர்களாக வந்தனர்.
"ஜப்தி " நாடகத்தின் பொது கோணங்கி கூட்டுறவுத்துரையில் அதிகாரியாக பணியார்க்கொண்டிருந்தார் .அதுவும் கடன் வசூல் அதிகாரியாக. ஜப்தியால் விவசாயிகள் படும் அவதியை சித்தரிக்கும் நாடகத்தை போட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நான் ஜப்தி செய்யும் அதிகாரியாக பணியாற்றுவது அநியாயம் என்று கருதி
கோணன்ங்கி அந்த பதவியிலிருந்து விலகிவிட்டார்.
கோணங்கியின் மறுபக்கம் இதுதான்.
அவரை வாழ்த்துவோம் ...!!!
Tuesday, August 20, 2019
(நாடக விழாவை முன் நிறுத்தி )
திருப்பூர் நாடக குழுவும் ,
"விழிப்பு" நடராசன் ,
அவர்களும்...!!!
127 நாட்கள் நடந்த போராட்டம். பின்னலாடைநகரமே துடித்து எழுந்தது. திருப்பூர் தொழிலாளர்களின் ஒரே கோரிக்கை "பஞ்சப்படி ".
பஞ்சப்படி எனறால் என்ன வென்றே தெரியாத அந் தொழிலாளர்களுக்கு போதமுட்டிஅவர்களை போராளிகளாக்கும் பணியை செய்தவர் தான் "விழிப்பு "நடராசன்.
வசதி யுள்ள குடும்பம். textile engineering ல் பட்ட மேற்படிப்பு. ஆயிர க்கணக்கில் ஊதியம் கிடைக்கும் பதவிகளை வேண்டாம் என்று கூறிவிட்டு, பின்னலாடை தொழிலாளர்களின் பாடுகளை களைய வந்தவர்தான் விழிப்பு நடராசன்.
அவர்களோடு பேசினார் விவாதித்தார் பஞ்சப்படி பற்றி விளக்கினார்.அவர்களே அத கதையாக்கினார்கள்.அந்தக்கதையை நாடகமாக்கினார். திருப்பூர் நாடக குழு பிறந்தது.
மணி க்குமார் ,பாவல்,நாகராஜ் என்று ஒரு ஜமா சேர்ந்தது.போராட்டம் நடந்த அத்துணை நாட்களும் நாடகம் நடந்தது.தமிழகம் முழுவதும் வியப்பையோடு பார்த்த நிகழ்வாகும் அது.
நாடகக்குழு அதோடு நின்றுவிடவில்லை. தமிழகத்தில் நகராட்ச்சி தேர்தல் வந்தது. திருப்பூர் நகராட்ச்சி தேர்தலில் பிரசாரநாடகம் நடத்தினார்கள். "முனிசிபாலிட்டி -முனிசிபாலிட்டி "என்ற நாடகத்தை உருவாக்கினார்கள் .அதில் நடிக்க நடிகை -தொழில்முறை நடிகை வேண்டியதிருந்தது. விழிப்பு, மணிக்குமார் , ராசமணி ஆகியோர் மதுரையில் என் வீட்டுக்கு வந்து ஏற்பாடு செய்ய சொன்னார்கள்.மதுரையிலிருந்து இரண்டு நடிகைகளை ஏற்பாடு செய்தே ன்.ஒருமாதம் திருப்பூரில் பணியாற்ற முடிந்ததுஅவர்களுக்கு,தங்குமிடம்,உணவுத்தவிர சம்பளமும் கொடுத்து நாடகக்குழுவினர் கவனித்து கொண்டனர்.
இந்த குழுவினர் வட்டங்கள் என்ற நாடகத்தினையும் நடத்தினார்கள். அசுவகோஷ் எழுதிய இந்த நாடகம் பரவலாக பேசப்பட்ட ஒன்றாகும்.
திருப்புர் கட்டக் குழுவினரின் "பஞ்சப்படி" நாடகமும், விழிப்பு நடரசனும் அந்த நகரத்தின் முன்னோடிகள் என்றால் அது மிகை அல்ல ....!!!
Sunday, August 18, 2019
(நாடக விழாவை முன் நிறுத்தி )
"சென்னை நாடக குழுவும் ",
பிரளயனும் .......!!!
த .மு.எ .ச வின் மாநில மாநாடு திருநெல்வேலியில் 90ம் ஆண்டு நடந்தது. அதன் கலை நிகழ்ச்சியில் சென்னை கலைக்குழுவினர் முழுநீள முன் மேடை நாடகம் போட்டனர். முன்ஷி பிரேம் சந்த எழுதிய "மோதிராம் " என்ற இந்தி நாடகத்தை பிரளயன் அவர்கள் நெறியாளுகை செய்து மேடை ஏற்றினார்.
ஸ்டேட் வங்கியில் பணியாற்றிய கோவிந்த ராஜன் மோதிரமாக சிறப்பாக நடித்தநாடகம் இது.
சப்தர் ஹஷ்மியின் ஜனநாட்ய மஞ்ச் இந்த நாடகத்தை போட்டுள்ளனர். "வேசி " யாக மாலா ஸ்ரீ யும் அவரால் மயக்கப்பட்ட போலீஸ் அதிகாரியாக ஹபீப் தன்விரும் நடிப்பார்கள். சென்னை கலைக்குழுவினர் போட்ட மேடை நாடகம் இது.
பிரளயனின் முன் முயற்சியில் பல பரிசோதனைகளை இந்தக்குழுவினர் செய்துள்ளனர். வீ தி நாடகங்களாக அவர்கள் சென்னை நகரத்தையே கலக்கி வந்தனர்.தொழிலாளர் போராட்டங்கள்,தேர்தல் கால பிரசாரங்கள் என்று அவர்கள் தீவிரமாக செயல்பட்டு வந்தனர்.
பரிசோதனை முயற்சியாக அவர்கள் இசைநாடகங்களையும் நடத்தினர்.நான்கு கால்களைக்கொண்ட மிருகம் ,முதுகெலும்பை நிமிர்த்தி முன் கால் களை கைகளாக மாற்றும் இசை நாடகம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். நடிகர்கள் பாடி ஆடிக்கொண்டே "தாஜ்மகால் " சிற்பமாக மாறும் காட்ச்சி பிரமிப்பை உண்டாக்கும்.
"ஏகைலைவன் பெருவிரல் " ஒரு அற்புதமான படைப்பாகும்.
பிரளயன் ஷண்முக சுந்தரம் சந்திர சேகரன் தமிழ்நாட்டில் மட்டுமல்ல ,அகிலஇந்தியாவில் ஏன் உலகம் தழுவிய நாடகவியலாளராக திகழ்கிறார்.
சமீபத்தில் அவர் "மத்தவிலாச பிரகாசம் " என்ற நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் . 7ம் நூற்றாண்டில் மகேந்திர வர்மா பல்லவன் சம்ஸ்கிருதத்தில் எழுதிய நாடகமாகவும் அது. சிவனை ஆராதிப்பவர்களில் காபாலிகர்களும் உண்டு. அவர்கள் மண்டையோட்டை பயன்படுத்துவார்கள்.சைவர்கள் வேறுவகையில் வழிபடுவார்கள்.பல்வேறு சிவப்பக்த்தார்கள் பல்வேறு முறையில் வழிபடுவார்கள்> ஆனாலும் சிவன் ஒருவன்தான்.இதனை பகடியாக உயர்ந்த தளத்தில் சொல்வது தான் இந்தநாடகத்தின் பலமும் பலவீனமும் ஆகும் .
தான் கொண்ட கருத்துக்களை மக்களுக்கு சொல்ல பிரளயன் நாடகத்தை பயன்படுத்தி கொண்டார்.
நாடகத்துறை பிரளயன் சண்முக சுந்தரம் சந்திர சேகரனை பயன்படுத்திக்கொள்கிறது.
எனக்கு பிரளயனை நிரம்ப பிடிக்கும் ...!!!
Saturday, August 17, 2019
(நாடக விழாவை முன் நிறுத்தி )
காஸ்யபனின் ,
"வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் "
நாடகம் ...!!!
தமிழக- கேரள எல்லையோரத்தில் உள்ள களியக்காவிளை தான நாடகம் நடக்கும் இடம் .தென்னை மரத்தோட்டங்கள் அதிகம் உள்ள பகுதி.இந்து ,முஸ்லீம்,கிறிஸ்துவ மரமேறிகள் வாழும் அமைதியான இடம் .
வாரணாசியிலிருந்து திவ்யானநத மடத்திசிசேர்ந்த காவி சட்டைக்காரன் அந்த ஊருக்கு வறுகிறான். அந்த கிராமத்து சிறுவர்களை நல்வழிப்படுத்துகிறான் . அவர்களை தினமும் குளிப்பாட்டி.நல்ல ஆடை களைஉடுத்தி திருநீறு பூசி காலையில் தேவாரம் ,திருவாசகம் என்று கற்றுக்கொடுக்கிறான். கல்வி கற்றுக்கொடுக்கிறான்.
ஊர் பெரியவர்கள் மகிழ்ச்ச்சி அடைக்கிரறார்கள்.அவர்களும் காலை கூட்டங்களில் பங்கு கொள்கிறார்கள் .மூத்தவர் பலவேசம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். அப்பாவியான அவர் அநாதையான கபூர் என்கிற சிறுவனை வளர்த்தார். இன்று கபூர் பெரியவனாகி மனைவியோடு வாழ்கிறான்.
இஸ்மாயில் காக்கா ஒரு மரமேறி. அந்த கிராமத்தில் உள்ள ஓடைக்கு பெயர் சிக்கந்தர் ஓடை. அதன் கரையில் ஓலைகுடிசை போட்டு இஸ்லாமியர்கள் "துவா"நடத்துவார்கள்.
மதுரையிலிருந்து சம்மந்தர் மடத்து சாமியார் வருகிறார்.. அவரும் காவிக்கரனோடு சேர்ந்து பிராத்தனை செய்கிறார்.தேவாரம் திருவாசகம் என்று சொல்லியவர் புதியதாக ஒரு பாட்ட சொல்லிக்கொடுக்கிறர்ர்.
"இந்து என்றே சொல்லிவிடு '
இந்து இன்றே சொல்லிவிடு"
இந்து என்றும் என்றுவிடு "
என்று பாடுகிறார்கள்.
ஓடைக்கு பெயர் சிக்கந்தர் ஓடை இல்லை எனும் அது கந்தர் ஓடை ஏறும் அதன்கரையில் முருகன் கோவில்கட்டி வாரியார் சுவாமிகளை வைத்து குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்கிறார். பலவேசம் இதில் உற்சாகமாக பங்கேற்கிறார். கபூர் எச்சரிக்கிறான். இஸ்மாயில் காக்க கொதித்து எழுகிறார்..
மரமேறிகள் மத்தியில் குரோதம் உருவாகிறது. இந்த சமயத்தல் தான் கபூர் மரத்திலிருந்து கீழே விழுந்து படுத்துவிடுகிறான் .பிழை க்க வழியிலாதவனுக்கு தோட்ட முதலாளியும் நட்ட இது கேட்கிறார்கள்.தோட்டமுதலாளி பாய் மறுக்கிறார். பலவேசம் ஸ்டிரைக் அடிக்க சொல்லுகிறார். இஸ்மாயில் காக்க எதிரக்கிறார்.
"நான் வாங்கிட்தாரெண்டா.விழுந்தவன் முஸ்லீம்.கேக்கபோறவன் முஸ்லீம். தோட்ட முதலாளி முஸ்லீம். கேக்கிற முறைல கேட்ட முதலாளி கொடுப்பர் "என்கிறார்.
"வே !இஸ்மாயில் பாய் ! இந்தாப்பாரும் ! மார்க்கம் மயிறுன்னு எங்கிட்ட வாராதிரும். நன் பிலிப்பு நாட்டாரு,சம்முக அண்ணாசி னு தோட்டமுதலாளிய சங்கத்தத்துல நட்ட ஈடு கொடுக்கக்கூடாது னு தீர்மானம் போட்டிருக்கோம"ன்ரு மறுத்து விடுகிறார் முதலாளி.
சோகமாக வந்த இஸ்மாயில் காக்கா மரமெறிகள் ட இத சொல்லுதா ரு..
அப்பம் கதி?'
ஸ்டிரைக் அடிக்க வேண்டியதுதான்'
ஆனா பலவேசம் சம்மதிக்க மாட்டான்ல"
நீறு ம்தான் அவர் சொன்ன கேக்கமாட்டேறு "
அது தப்பு தாம்ல "
இதைகேட்டுக்கொண்டிருந்த பலவேசம்
"வே ! இஸ்மாயில் பாய் ! போதும் வே நாம புத்திகெட்டு அலைஞ்ச்சது. கபூருக்கு நல்லது நடக்கணும் இல்லைனா ஒருபாய மரத்துல ஏறப்படாது"
முஷ்டியை உயர்த்துகிறார்.
இஸ்மாயில் பாய் "எவனாவது மீறி ஏறினா .காண்ட .காலை வெட்டுப்புடுவேன் என்று கைகளை மடக்கி முஷ்டியை உயர்த்துகிறார்.
நாடகம் முடிகிறது.
இந்தநாடகத்தின் முக்கிய பாத்திரங்கள் இஸ்மாயில் பாயின் 8வயது மகள் பாத்திமா,பலவேசத்தின் 7வயது மகன் பழனி. கள்ளம் கபடமற்ற அந்த குழந்தைகளின் பார்வையில் காஸ்யபன் நாடகத்தை கொண்டு சென்றிருப்பார்.
அக்கா இந்து முஸ்லிம்னா என்னக்கா ?
ஒண்ணுமில்லைல ! இந்து தாடிய எடுத்துட்டு மீசையை வைப்பான். முஸ்லீம் மீசையை எடுத்துப்புட்டு தாடியை வப்பான்.
அம்புட்டுதானா என்று சொல்லிவிழுந்து விழுந்து பழனி சிரிக்கிறான்.
எம்ல சிரிக்கே
இல்லக்கா ஆறுமாசம் அமைப்பட்டான் வரலைனா
வரலைனா
ரெண்டு பேருக்கும் தாடியும் வளந்துடும்,மீசையும் வளந்துடும், யாரு இந்து,யாருமுஸ்லீம்னு தெரியாது.
அரங்கமே கைதட்டி சிரிக்கும் .
ஆம்பளை ய்ங்க அடிசுசு க்கிட்டு சாகும் பொது கபூரின் மனைவியும், பலவேசத்தின்மனைவியும் அன்பு செலுத்தும் காட்ச்சிகளில் கண்ணீர் சிந்தாதவர்கள் கிடையாது.
இந்தநாடகத்தில இரண்டு பாடல்கள் உண்டு.
"முக்கா முழம் நெல்லு பயிறு என்ற பச் சை மால் அவர்களின் பாடலும், "நாங்க மனுசங்கடா "என்ற இன்குலாப் பாடலும் சரியாக அமைந்தது. இந்தப்பாலகளுக்காகவே கூட்டம் கட்டி ஏறும். குறிப்பாக ரத யாத்திரையை சித்ததரிக்கும் மறைமுககாடசியாகும் இது.தமிழகம் முழுவதும் சுற்றிவந்தநாடகம்.இது.
இன்று உள்ள இளைஞ்ர்களுக்கு இப்படி ஒரு நாடகத்தை த.மு.எ ச கலை ஞர்கள் நடத்தினார்கள் அதுவும் ஐம் \பதுக்கும்மேற்பட்ட ஊர்களில் என்பது ஆச்சரியமாகவே இருக்கும்.
எல்லாப்புகழும் த மு எ ச வுக்கே !!!
Wednesday, August 07, 2019
(நாடக விழாவை முன் நிறுத்தி )
குமரேசன் ---
தொழில் முனைவர் ,
நடிகரான கதை ...!!!
"அசாக்" என்ற குமரேசன் கல்லூரி நாட்களிலேயே முனைப்பாக செயல்படுபவர். படிக்கும் காலத்திலேயே தி.வி சந்திர சேகரன் போன்ற நன்பர்களளோடு திரிவார். பின் நாளில் சந்திரு "திவேசன் " என்ற புனை பெயரில் செம்மலரில் எழுதிவந்தவர் .ஒரு இடதுசாரி.
அவரோடு குமரேசனுக்கு பல இடது சரி நன்பர்களுக்கிடைத்தனர்> விவாதங்கள்.வகுப்புகள் ,கூட்டங்கள் என்று அவர் மனதில் அந்த சிந்தனைக்கள் பதிந்தன. படிப்பு முடிந்ததும் சந்திர சேகரன் ஸ்டேட் வங்கியில்பணியில் சேர்ந்தார் .தொழிற்சங்க ஈடுபாடு அவரை ஒரு அகில இந்திய .தலைமைக்கு அருகில் இட்டுச் சென்றது. .
படிப்பு முடிந்ததும் குமரேசன் தொழில்முனைவரானார் அப்போதெல்லாம் மதுரையில் நூற்பு ஆலைகள் அதிகம். பஞ்சை நூலாக நூற்று "கண்டு"களில்பொதிவார்கள். ஆலைகளுக்கு கண்டு களை சப்பளை செய்யும் தொழிலை செய்துவந்தார்.மதுரையில் ஐந்து ஆலைகள் ,விருதுநகர்,கோவில்பட்டி , விக்கிரம சிங்க புறம்.என்று தென்தமிழகத்தில் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். நல்ல வருமானம். நல்லவசதி.
மதுரையில் எம்.பி ராமசந்திரன் என்று இடதுசாரி தலைவர் இருந்தார்.. தொழிற்சங்க தலைவரும் கூட. அவர் வாலிபர்கள்,மாணவர்கள் ஆகியோரை வைத்து நாடகங்கள் நடத்துவார்.அப்படிப்பட்ட நாடாக்கக்குழுதான் செம்மலர் கலைக்குழு. எம்.பி ஆரோ டு சேர்ந்து குமரேசன் நாடகத்துறையில்செயல்பட்டார். மதன் என்பவர் இயக்குனராகவும், ரகமத்,ஜீவா போனறவர்களா நடிகர்களாகவும் அந்த முழூ மதுரைநகரையே கலக்கிவந்தது .தினம் வீதி நாடகங்கள் ,இவர்கள் நாடகம் போடாத இரவே இல்லை என்றநிலை ஏற்பட்டது.
இதனால் குமரேசனின் தொழில் பாதிக்கப்பட்டது..தொழிலா? இயக்கமா? என்ற கேள்வி எழுந்த பொது குமரேசன் கட்சியினமுழுநேர ஊழியராக சேர்ந்தார். தீக்கதிர் அலுவலகத்தில் ஆசிரியர் குழுவில் இணைந்து முழுநேர ஊழியரானர் .
இந்த சமயத்தில் தான த.மு.எ சங்கம் சென்னையில் மூன்றாவது நாடகவிழாவை நடத்த முடிவுசெய்தது. பெரியவர் கே.முத்தையா அவர்கள் மதுரை பீப்பிள்ஸ் தியேட்டர் அதில் ஒரு புதிய நாடகத்தை அரங்கேற்ற வேண்டும் என்று விரும்பினார். "காஸ்யபன் " அப்போது எழுதிய நாடகம் தான "வண்ணங்கள் வேற்றுமை பட்டால்" என்ற நாடகமாகும்'
தெற்கத்திய தென்னைமர தோட்டத்தொழிலாளர்கள் பற்றிய கதை அமைப்பு.அதிலப்துல்கபூர் என்ற கதாயகன் பாத்திரத்தில் குமரேசன் னைத்தாரா. முன்வழுக்கையும் நாராய்த்த தாடியும் கொண்ட இன்றைய குமரேசன் அல்ல. அன்று இளமையும் துடிப்பும் கொண்ட குமரேசன் அவர்.
அரங்கேறிய நாடகத்தை பார்வையாளர்கள் மின்சாரம் பாய்சசியது போல் கரகோஷத்தோடு வரவேற்றனர் .நாடக முடிந்ததும்,கோமல் சுவாமிநாதன் ஓடிவந்து காஸ்யபனை கட்டி தழுவி "bold very bold என்னால் கூட முடியாது"
என்று பாராட்டினார்.
இந்த நாடகம் தமிழகத்தில் போடாத கிராமமே இல்லை என்று ஆகியது. குமரேசன் தமிழகம் அறிந்த நாடக நடிகரானார்.
அப்போது சென்னையில் இருந்த தீக்கதிர்ப்பதிப்பினை பலப்படுத்த கட்ச்சி முடிவெடுத்தது.குமரேசனை கட்ச்சி சென்னைக்கு அனுப்ப முடிவு செய்தது.மனைவி,இரண்டு குழந்தைகளோடு குமரேசன் சென்னை வந்தார்.. சென்னையில் வாடகை வீடு , குடும்பச்செலவு என்று சொற்ப அலவன்ஸில் அவர் எப்படி வாழ்ந்தாரா என்பதை மார்க்ஸ் தான அறிவார்.
ஆனால் பத்திரிகை யில் சிறப்பாக பணியாற்றினார் .குறிப்பாக பண்பாட்டுத்துறையிலும்,நாடக திரைப்பட விமரிசனங்கள்.இலக்கிய நிகழ்சசிகள் என்று பத்திரிகையையே பரவலாக்கினார். இதனை அங்கிகரித்த கடசி குமரேசனை சென்னை பதிப்பின் பொறுப்பாளராக்கியது.
முதுமையின் காரணமாக ஒய்வினை ஏற்ற குமரேசன் தொலைக்காட்ச்சிகளில் கட்ச்சியின்கருத்தாளராக செயல்பட்டு வருகிறார்.
குமரேசன் அவர்கள்,மனஅமைதி,நல்ல ஆரோக்கியத்தொடு நீண்ட காலம் வாழ்ந்து மக்கள் பணியில் ஈடுபட்ட வாழ்த்துகிறேன். !!!
Saturday, August 03, 2019
(நாடக விழாவை முன் நிறுத்தி )
" இ.கே .நயனாரு"ம் ,
"நினைவுகள் அழிவதில்லை "
நாடகமும் ...!
கேரளத்தின் வட மேற்கில் உள்ளது காசர்கோடு வட்டம். .சுதந்திரத்திற்கு முன் அந்த பகுதி மதராஸ் மாகாணத்தோடு இணைந்திருந்தது.விவசாயிகள் குரூரமாக சுரண்டப்பட்டு வந்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக ஐந்து இளைஞர்கள் புறப்பட்டனர். இந்த அவலம் நீங்க வேண்டுமானால் பிரிட்டிஷாரை எதிர்த்து சுதந்திரத்திற்காக போராட வேண்டும் .என்று பிரசாரம் செய்தனர்.
பிரிட்டிஷ் போலீஸ் அடக்கு முறையை ஏவி விட்டது . ஆயுதத்தோடு விவசாயிகள் நடத்தியதாக்குதலுக்கு இளைஞர்கள் தலைமை தாங்கினார்.பிரிட்டிஷ் போலீஸ் தப்பி ஓடியது> அதில் ஒரு போலீஸ் காரன் ஆற்றுப் பாலத்தில் ஓடிக்கொண்டிருந்தவன் மக்களிடமிருந்து தப்பிக்க ஆற்றில்குதித்தான்.ஆற்றில் வெள்ளம் அதிகமிருந்ததால் இறந்தான்.
போலீஸ் இறந்த தற்கு காரணம் அந்த இளைஞ்சர்கள் தான் என்று போலீஸ் அவர்களை தேடியது. மடதில் அப்பு,அபுபக்கர், சிறுகண்டன்,குஞ்சாம்பு , ஆகிய நால்வர் பிடிபட்டனர்.ஐந்தாவது இளஞன் கடைசிவரை பிரிட்டிஷ் போலீசிடம் பிடிபடவில்லை.
வழக்கு நடந்தது.நான்கு இளஞர்களுக்கும் துக்கு தணடனை விதிக்கப்பட்டது.மதராஸ் உயர்நீதிமன் றம் அதனை உறுதி செய்தது.
அந்த ளாவர் தான் "கையூர்தியாகிகள் " என்று கேரளா சுதந்திர போர் வரலாற்றில் இடம் பெற்றனர்.
கையூர் கர்நாடக கேரளா எல்லையில் உள்ளது. கர்நாடகத்தின் புகழ் பெற்ற எழுத்தாளரான நிரஞ்சனா இதனை "சிராஸ்மரனே"என்ற அற்பு தமான நாவலாக எழுதினர்.கேரளத்து வீர வரலாறு முதன்முதலாககன்னட இலக்கியத்தின் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் அந்த நாவல் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டது.
இந்திராகாந்தி அம்மையார் அவசர நிலையை அறிவித்த போது தமிழக மார்க்சிஸ்ட் கடைசி தலைவர்களில் ஒருவரான பி.ஆர்.பரமேஸ்வரன் தலைமறைவாக இருந்தார்.அந்த சமயத்தில் அவர் அந்த நாவலை தமிழில் மொழி பெயர்த்தார். "நினைவுகள் ஆழிவதில்லை "என்ற அற்புதமான இலக்கியம் தமிழுக்கு கிடைத்தது .
வேலூரில் இருந்த அரசு ஊழியர்கள், வங்கி,இன்சூரன்ஸ் ஊழியர் ஆகியோர் ஒரு நாடகக்குழுவை அமைத்தனர்." நினைவுகள் அழிவதில்லை " என்ற நாவலை நாடகமாக்கினர்.தஞ்சை நாடக விழாவில் அதனை அரங்கேற்றினர்.
அந்த கையூர் தியாகிகள் தூக்கு மரம் ஏறும் காட்ச்சியை குறிப்பாக அவர்கள் உடல் மறையும்போது "இன்குலாப் ஜிந்தாபாத்" என்று அவர்கள் முழக்கமிட்ட காட்சியை பார்வையாளர்களும் சேர்ந்து கோஷமிட்டதை என் வாழ்நாளில் மறக்க முடியாது.
இயக்கத்தை விட்டு வெளியேறினாலும் இந்த நாடகத்தில் மாஸ்டராக நடித்த அரசு ஊழியர் சங்கத்தலைவர் கங்காதரன் மிகசிறப்பாக நடித்தார்என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.
நான்கு இளைஞர்களை பிடித்த பிரிட்டிஷ் போலிஸாரால் அந்த ஐந்தாவது இளைஞனை பிடிக்க முடியவில்லை. ஆறு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த அவன் சுதந்திரம் பெற்றபிறகு அவன் மீது போடப்பட்ட வழக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது.
அந்த வீரமிக்க இளைஞன்தான் மூன்றுமுறை கேரளத்தின்முதல் அமைச்சராக இருந்த
இ.கே . நாயனார் என்ற தீரன் !!!
Friday, August 02, 2019
(நாடக விழாவை முன் நிறுத்தி )
"தஞ்சை
விழாவின்
வெற்றி..."
தமுஎச மாநிலம் தழுவிய அளவில் இரண்டாவது நாடக விழா இரண்டு வகையில்வெற்றி கரமாக நடந்தது .
முழு நீள நாடகமாக ஜெயந்தனின் "நினைக்கப்படும் " நாடகத்தை பீப்பிள்ஸ் தியேட்டர் காரர்கள் அரங்கேற்றியது ஒன்று.
நான்கு அங்கமாக விரியுமிந்த நாடகத்தில் ஒவ்வொரு அங்கமும் ஒரு கதையாகும்.
முதல் அங்கத்தில் ஒருகுடும்ப தலைவரின் பாடுகள் சித்தரிக்கப்பட்டிருக்கும். லஞ்சம் வாங்கி அவர் வீட்டிற்கு பணத்தை கொண்டுவந்து கொட்டுவார். வீட்டில் உள்ளவர்களை அதனை ருசித்து அனுபவிப்பார்கள் . ஓரூ கட்டத்தில் ஒரு இளைஞன் கொடுத்த புகாரின் பேரில் அவர் மாட்டிக்கொள்வார் . குடும்பத்தினர் அவரை வெறுப்பார்கள் .பிழைக்கத்தெரியாதமனுஷன் என்று வசை பாடுவார்கள். செய்வதறியாது திகை \த்த தலைவர் புகார் கொடுத்த இளைஞரிடம்புகாரை வாபஸ் வாங்க சொல்லி கெஞ்சுவார். இறுதியில் அந்த இளைஞன் காலில் விழுந்துவிடுவார். அதிர்ந்து போன அந்த இளைஞன் விம்மி அழுவான் .நாடகம் முடிகிறது.
குடும்பத்தலைவராக துரைராஜும் , இளைஞனாக எல்.ஐ சி சூரிய போஸும் அற்புதமாக நடிப்பார்கள்.இறுதிக்கட்ச்சியில் அவர்கள் மேடையில் "உறைநிலை"யில் நிற்க பார்வையாளர்கள் அதிர்ந்து நிற்பார்கள்.
இரண்டாவது அங்கம்,தமிழக கேரள எல்லையோர கிராமத்தில்நடப்பதாகும் .பிழைக்க வழியில்லாத கிராமத்து மக்கள். அந்தக்கிராமத்து பெண்கள் ரேஷன் அரிசியை வாங்கி கேரள த்தில் விற்று வயிறு வளர்க்கும் நிலை .காவலர்களும்,வாட்சர்களும் அவர்களை பிடித்து கடத்தல் காரர்கள்,பதுக்கல் காரர்கள் என்று வதைப்பார்கள். அவர்களுக்கு லஞ்ச்ம கொடுத்தல் குடும்பவருமானம் போய்விடும் என்பதால் அந்த பெண்கள் அவர்களுக்கு "சுகம்" கொடுப்பார்கள் .
மூன்றாவது அங்கம் ஒரு பத்திரிகை அதிபர் பற்றியது எப்படி எழுத்தாளர்களை சுரண்டப்படுகிறார்களா என்பது சித்தரிக்கும் காட்ச்சியாகும். பதிப்பு தொழில் எப்படி printing industry ஆகிவிட்டது என்பதை சொல்லும்.
நங்கவது அங்கம் ஒரு வெற்றிகரமான திரைப்பட நடிகை பற்றியதாகு ம்.மிகவும் சிறந்த நடிகையான அவர் படங்களில் நடிக்க போட்ட ஒப்பந்தங்களில் horizantal agrement ம் உண்டு என்ற அவலத்தை வெளிச்சம் போட்டு காட்டும்.
இந்த நாடகத்தை ராஜ குண சேகர் இயக்கி இருந்தார். விழாவில் வெகுவாக பாராட்டப்பட்ட நாடகம் இது.
முத்தாய்ப்பாக தஞ்சையில் போட்ட நாடகம் தான்
"நினைவுகள் அழிவதில்லை " காவியமாகும் ...!!!
Thursday, August 01, 2019
(நாடக விழாவை முன் நிறுத்தி )
"ஜெயந்தன் " எழுதிய ,
"நினைக்கப்படும் "
நாடகம்...!!!
மதுரை "பீப்பிள்ஸ் தியேட்டர் "குழுவினர் தஞ்சையில் நடந்த இரண்டாவது நாடக விழாவில் ஜெயந்தனின் "நினைக்கப்படும்" நாடகத்தை அரங்கேற்றினார்கள். இந்தவிழாவை மணியரசன் அவர்கள் முன்னின்றுநடத்தினார்கள்.
அப்படியானால் முதல்நாடக விழா எப்போதுநடந்தது என்று கேள்வி எழலாம். 1977ம் ஆண்டு த.மு.ஏ சங்கத்தின் செயற்குழு மாவட்டம் தோறும் நாடகுழுவினைஉருவாக்கவேண்டும்.நாடகவடிவத்தையும்பயன்படுத்தி சங்க கலைஞர்கள் உற்சாக படுத்த வேண்டும் என்று முடிவு செய்தது.
மதுரை. கோவில்பட்டி, திருப்பூர் சென்னை என்று பல குழுக்கள் இதில் பங்கு பெற்றன. ஒவ்வொரு குழு பற்றியும் தனியாக எழுத இருக்கிறேன்.
ராமானுஜம்,எஸ்.பி சீனிவாசன் ஆகியோர் வகுப்புகளை நடத்தினர். நாடகம்,திரைப்படம் ஆகிய இரண்டும் எப்படி வடிவத்தில் வித்தியாசப்படுகிறது என்பது பற்றி காஸ்யபன் கருத்தரங்கத்தில் பேசினார்.இறுதி நாளன்று சௌராஷ்டிரா பள்ளியில் பீப்பிள்ஸ் தியே ட்டர்சாரின் நாடகம் நடந்தது.
தஞ்சை விழாவின் பொது பல மாவட்டங்களிலிருந்து குழுக்கள் தங்கள் படைப்புகளை அரங்கேற்றின . பற ம்பை செல்வன் ஓர் Mime நாடகத்தைக்கொண்டு வந்தார். இதில் ஜான்சன்,பறம்பை,கந்தர்வன் ஆகியோர் நடித்தனர்.
கோவில்பட்டி "தர்சனா" குழுவினர் தங்கள் படை ப்பை முன்வத்தனர். கொண ங்கி,ராமசுப்பு, உதய சங்கர், தமிழ்ச்செல்வன், நாறும் பு நாதன் என்று பலர் பங்கு பெற்றனர்> மகா பாதத்திலிருந்து ஒரு காட்ச்சிய போட்டதாக நினைவு.
தணிகைச்செல்வன் செங்கை தோழர்களை பயன்படுத்தி ஒரு புராண மறுவாசிப்பு நாடகத்தை நடத்தினார்.
சகஸ்ரநாமம், பிரசன்னா,ராமானுஜம் ஆகியோர் பங்கு அளித்தனர்.
Wednesday, July 31, 2019
(நாடக விழாவை முன் நிறுத்தி )
"கே.எம்." அவர்கள் எழுதிய ,
"புதிய தலைமுறை "
நாடகம் .....!!!
1975 மாண்டு ஜூலை மாதம் 12 ம் தேதி மதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உதயமாகியது .அதன் ஆயத்த மாநாட்டில் தீக்கதிர் ஆசிரியர் கே>முத்தையா அவர்கள் எழுதிய "புதிய தலைமுறை "என்ற நாடகத்தை பீப்பிள்ஸ் தியேட்டர் காரர்கள் அரங்கேற்றினார்கள்.
சனாதன தர்மத்தில் ஊரிய புரோகிதர் அவர். அந்தணர்களை வீடுகளில் புரோகிதம் செய்து கடினமாக வாழ்க்கையை நடத்தி வருகிறார் . அவர் மகன் பரந்தாமன்> அப்பாவி.பயந்த சுபாவம் உள்ளவன். அவனையும் புரோகித தொழிலுக்கு பழக்கி வருகிறார்.
தந்தைக்கு அடங்கி நடப்பவன் பரந்தாமன். "துஷ்டனை கண்டால் தூரவிலகு "என்று போதிக்கப்பட்டவன் .
அவன் பக்கத்தி வீட்டில் வக்கீல் ஒருவர் வசிக்கிறார்.அவருடைய மகள் இளம் விதவை .நல்ல படிப்பும் துனிச்சலும் உள்ள பெண்.வீட்டின் முலையில் உக்கார வைக்கப்ப்டுகிறாள். பரந்தாமன் வக்கீல் வீட்டிற்கு சென்று அவருக்கு உதவிகளை செய்வான். அவனுக்கு உள்ள ஒரே ஆறுதல் வக்கீலின் மகளோடு பேசி உலக விஷயங்கள் தெரிந்து கொள்வது தான் .அவர்களுக்கு இடையே ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது.
அந்த பெண் பரந்தாமனை அழைத்துக்கொண்டு பட்டணம் சென்று புதிய வாழக்கையை நடத்துகிறாள் .பரந்தாமன் பட்டணத்தில் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றுகிறான் . தொழிற்சங்கத்தில் ஈடுபாடு கொண்டு மாறி வாழ்க்கையை சந்திக்கிறான்.
இந்தநாடகத்தில் புரோகிதர் பாத்திரமும்,பரந்தாமன் பாத்திரமும் மிகவும் வித்தியாயசமாக படைக்கப்பட்டிருந்தது. புரோகிதருக்கு கண் அறுவை சிகிச்சை நடக்கிறது.ஆசாரமான அவர் மறுநாள் காலை குளிக்கிறர் .இது அவர் உடலை பாதிக்கிறது .கே.எம்.அவர்கள் இந்த பாத்திரத்தை காஞ்சி பெரியவர் சாயலில் படைத்திருப்பார்.
இந்த நாடகத்தை காஸ்யபன் இயக்கி இருந்தார். ராஜகுணசேகர் இசை அமைத்திருந்தார். "நான் வாழ்ந்து காட்டுவேன் "என்று வக்கீலின் பெண் பாடும் பாடல் புகழ் பெற்ற ஒன்றாக மாறியது.
மதுரை மில் தோழலாளியான துரைராஜ் இதில் சிறப்பாக செய்திருப்பார்.
அப்பாவியான பயந்த பரந்தாமனாக காஸ்யபன் நடித்திருந்தார். அப்பாவி யாகவும்,பயந்தவனாவும் அன்று நடித்து வந்த டி .ஆர். ராமசந்திரன் பாணியில் காஸ்யபன் நடித்து அந்த பாத்திரத்துக்கு மெருகேற்றினார்.
அவர்நாடிப்பை பார்த்த இயக்குனர் ஆர்.செல்வராஜ் தான் இயக்கிய "புதியஅடிமைகள் " படத்தில் காஸ்யப்பனை நடிக்க வைத்தார் .
தமிழகம் முழுவதும் சுற்றி வந்த வெற்றிகரமான நாடகங்களில் இதுவும் ஒன்று.
Tuesday, July 30, 2019
(நாடக விழாவை முன் நிறுத்தி )
மின் வாரிய சுந்தரம் எழுதிய
"பிதாவே என்னை மன்னியும் "
நாடகம்...!!!
மின்சார வாரியத்தில் தொழிலாளியாக சேர்ந்தவர் தோழர் சுந்தரம் அவர்கள். அவர் எழுதிய நாடகம் தான் "பிதாவே என்னை மன்னியும் "என்ற நாடகமாகும். மதுரை பீப்பிள்ஸ் தியேட்டர்ஸார் அரங்கேற்றிய நாடகங்களில் பாராட்டப்பட்ட நாடகங்களில் ஒன்றாகும்.
கர்த்தரின் மீது ஆழ்ந்த நமபிக்கையும்,திருசபையின் மீது அர்ப்பணிப்பும் கொண்டவர் அந்த பாதிரியார். தன பங்கு மாக்களை தினம் சந்தித்து அவர்களை ஜெபக்கூட்டங்களுக்கு வரும்படி செய்வார் . அந்த கிராமத்து மக்களும் பாதிரியாரிடம் மிகவும் பணிவோடும் மரியாதையோடும் நடந்து கொள்வார்கள்.
பாதிரியாரை உறவுப்பையன் அவரிடம் ஏதாவது விமரிசனமாக சொல்லுவான்.'பாவ மன்னிப்பு என்பது சரியல்ல. குற்றம் செய்தவன் தண்டனையைஅனுபவித்தே ஆகவேண்டும். அவனை மன்னிப்பது தவறு" என்று வாதிடுவான்.
"தவறு செய்யாதவர் மனிதர் எவர் உள்ளார். எல்லாருமே தவறு செய்தவர்கள் தான். பாவம் செய்தவர்கள் தான். ஒரு பாவம் செய்தவன் மற்றோரு பாவியை எப்படி தண்டிக்க முடியும். அவனை மன்னிப்பதே சரி" என்று பாதிரியார் விளக்கமளிப்பார்.
அந்த கிராமத்தது பண்ணையார் ஜெபக்கூட்டத்திற்கு தவாறா மல் வருபவர். பாதிரியார் அவர் வருவதை பாராட்டி சொல்வார். பண்ணையார் சகலவிதமான குற்றங்களையும் செய்ப்பவர் .ஒவ்வொரு ஞயிரும் கூட்டம் முடிந்ததும் கூண்டிலேறி தன் பாவங்களை "ஒப்புவித்து " மன்னிப்பு கோறுவார்.கள்ளமின்றி மன்னி ப்பு கோரும் பண்ணையாரை பாதிரியாருக்கு நிரம்ப பிடிக்கும்.
அந்தவாலிபனோ இதனை எதிர்ப்பான்.
பாதிரியாரின் தங்கை சீரழிக்கப்பட்டு இறந்து விட்டாள் . திருசபை கூட்டம் முடிந்ததும், பண்ணையார், கூண்டிலேறி அந்த பெண்ணை கற்பழித்ததையும்,கொலைசெய்ததையும் "ஒப்புவித்து " மன்னிப்பு கோருகிறான்.
திருசபையின் இருக்கும் சிலுவையின் முன்னால் சென்ற பாதிரியாரை தன அங்கியை கழற்றி பீடத்தில் வைத்துவிட்டு "பிதாவே என்னை மன்னியும் "என்று கூறி கோவிலை விட்டு வெளியேறுகிறார். நாடகம் முடிவடைகிறது.
வெகுவாக விமரிசிக்கப்பட்ட பாராட்டப்பட்ட நாடகம் இது.சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட நாடகம்.
ராஜ குண சேகர் பாதிரியாராக நடிப்பார். பாதிரியாருக்கே உள்ள கம்பிரமும்,நெகிழ்ச்ச்சியும் பார்வையாளனை கட்டி போட்டுவிடும்.
இந்த நாடகத்தை அவரேதான் இயக்கவும் செய்தார் .
தமிழகம் முழுவதும் இந்த நாடகம்போடப்பட்டது. திண்டுக்கல்லில் பேகம்பூரில் போட்டபோது அந்த மக்களாராவரம் செய்து வரவேற்றனர்.
கோவையில் அந்த மக்கள் தலைவன் தோழர் ரமணி வெகுவாக புகழ்ந்தார் .
"சாமா ! உலகத்தின் முதல் புரட்ச்சியாளன் ஏசு பிரான் தான் " என்று கூறி விளக்கினார்.
இந்தநாடகத்தை எழுதிய சுந்தரம் ஒய்வு பெற்று மதுரை அனுப்பானடியில் வசித்து வருகிறார்.
சுந்தரம் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
.
Monday, July 29, 2019
(நாடக விழாவை முன் நிறுத்தி )
E .M . ஜோசப் ,
மாணிக்கம் ,
ஆகியோரும்
நடித்தார்கள்...!!!
கொஞ்ச்ம கொஞ்சமாக பீப்பிள்ஸ் தியேட்டர் அறிமுகம் தொடர்ந்தது. மதுரை நகரத்தில் தைக்கால் தெரு,செல்லூர்,திருப்பறம் குன்றம், என்று வீதிகளில் கொட்டகை போட்டு நாடகங்களை நடத்தினார்கள்.
முதல் நாடகமான "நெஞ்சில் ஒரு கனல் "நாடகத்தில் ஒரு கம்பெனி அதிகாரி வேடத்தில் அன்று மருத்துவராக இருந்த தோழர் தா.ச.ரசாமானி அவர்கள் நடித்தார்கள். சாதாரணமாக பேசும் பொது கூ ட கொச்சை தமிழில் அவர் பேச மாட்டாரா.பண்டித தமிழ்த்தான் அவர் பேசுவார். அடுத்த முறை அவருக்கு பதிலாக எல்.ஐ.சி ஊழியர் தி.வி நாராயணன் நடித்தார்.
இந்தநாடகத்தில் இரண்டு மாணவர்கள் பாத்திரம்வரும்.அதில் உபேந்திரனும் ,கலையான சுந்தரமும் நடித்தார்கள்.நல்லஉயரமும் கம்பிரமான தோற்றமும் நடுத்தறவயதும் கொ ண்டு அவர்கள் வருவதை பார்வையாளர்கள் ரசிக்கவில்லை. ஆகவே செல்லூரில் நாடகம் போடும் பொது இ.எம்.ஜோசப்,அவர்களை நடிக்க வைத்தோம். பள்ளிமாணவனைப்போல் இருந்த அவர் கடசித்தமாக பொருந்தினார்.. மற்றோரு மாணவனாக மாணிக்கம் அவர்கள் நடித்தார்கள்.
பொது வாழ்க்கையும்,தொழிற்சங்க பாணியும் ஜோசப் நாடகங்களில் நடிக்க முடியாமல் செய்து விட்டது.
மாணிக்கம் தன இறுதிக்காலம் வரை பீப்பிள்ஸ் தியேட்டரின் முக்கிய நடிகராக விளங்கினார்.
பிற்காலத்து,அசாக் என்ற குமரேசன் கதாநாயகனாக நடிக்க வந்தார்.
கிட்டத்தட்ட 25 வருடங்கள் இயங்கி வந்த இதன் முக்கியமான நாடகங்கள் பற்றி எழுதவிருக்கிறேன்.
Sunday, July 28, 2019
(நாடக விழாவை முன் நிறுத்தி )
கட்சி காங்கிரசும்,
பீப்பிள்ஸ் தியேட்டரும் ....!!!
1971ம் ஆண்டு கடசி காங்கிரசைமதுரையில் நடத்த முடிவு செய்தது. "இநதியா புராவிலும் இருந்து பார்வையாளர்கள் வருவார்கள்>.தமிழகத்தின் கலாசார பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் விதமாக காலை நிகழ்ச்ச்சிகள் அமைய வேண்டும். ஒரு அருமையான நாடகத்த்தை போட வேண்டும் "என்று செயற்குழு உறுப்பினர் கே.முத்தையா அ வர்கள் கூறினார்கள்.
மாவட்டக் குழு எல்.ஐ.சி தோழர் நாராயண் சிங் அவர்களிடம் இந்த பணியை செய்யும்படி கேட்டுக்கொண்டது.
தனபால் பாண்டியன் ,மூ த்த எழுத்தாளர் ப.ரத்தினம், உபேந்திரநாத் ஜோஷி, காஸ்யபன்.மதுரை மில் , தொழிலாளிகள் துரைராஜ்,சேதுராமன், என்று ஒரு ஜாமாவை அழைத்து கே.எம் தலைமையில் கூட்டம் போட்டார்.சிங் அண்ணன் .
இறுதியில் ரத்தினம் அவர்கள் எழுதிய திய நாடகத்தை போடுவதும்.அடா காஸ்யபன் இயக்குவது என்று முடிவு செய்தார்கள்.
நாடகத்தை ஒருகுழுவாக அமைத்து கடசி பின்புலமாக இருந்தால் நீடித்து நிலைக்கும் என்று காஸ்யபன் குறிப்பிட்டார்..
தனபால்பாண்டியன் தலை வராகவும், உபேந்திரன் செயலாளராகவும் குழு அமைக்கப்பட்டது.
வங்க நாடக நடிகர் உட்பல் தத் அவர்களை பாலா ஈர்ப்பு கொண்ட காஸ்யபன் இந்த குழுவுக்கு "P eople's Theatre " என்றுபெயர் வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
எல்லாரும் ஏற்றுக்கொண்டு அந்த பெயரில் குழு ஆரம்பமாகியது.
ரத்தினம் அவர்களை எழுதிய நாடகம் தான் "நெஞ்சில் ஒரு கனல்" என்ற முதல் நாடகமாகும்.
தனபால் பாண்டியன் கதாநாயகனாக வும்,துரைராஜபண்ணையாராகவும் நடித்தார்கள் . காஸ்யபன், சேதுராமன்,மின்வாரிய சுந்தரம்,கே.பி ஆறுமுகம் , ரங்கராஜ், என்று பலர் சேர்ந்தார்கள். ஒத்திகை மூன்று மாதம் நடந்தது.
அப்போது தன வங்கதேச விடுதலை போராட்டம் கடுமையான நிலையை அடைந்ததால் கடசி காங்கிரஸ் ஒத்திவைக்கப்பட்டது. நாடகக்குழு செய்வதறியாது திகைத்தது. குழுவின் மனதறிந்த நாராயண் சிங் இந்த நாடகத்தை வசூல் நாடகமாக எட்வார்டு அரங்கத்தில் பட முடிவு செய்தார் .
அரங்கேறிய நாடகத்தை பத்த்ரிக்கைகள்புகழ்ந்தன. குறிப்பாக இந்தியன் எக்ஸ்பிரஸில் வி.டி. தாமஸ் அவர்கள் மிகவும்சிறப்பான விமரிசனத்தை ழுடி இருந்தார்.பாரவையாளர்களின் பாராட்டும் சேர்ந்து கொண்டது .
இந்த நாடகத்தில் பிணமேடையை கவனிக்க எல்.ஐ சி தோழர்கள், ராஜகுணசேகர்,எஸ்.பி.கலயாணசுந்தரம், ராஜகோபால் ஆகியோர் வந்தனர்.பின்நாளில் ராஜ் குணசேகர்,நடிகராக ,சீஸை அமைப்பாளராக,இயக்குனராக பரிணமித்தாரா. கலையானி நடிகராக ,ஒப்பனைகலைஞராக மாறினார்.
பல்வேறு மாவட்டக்குழுக்கள் நாடகத்தை போட விரும்பின. கரூர் ,கோவை,திருப்பூர்,சேலம், தஞ்சை , நெல்லிக்குப்பம், நாகர் கோவில் என்று குழு தமிழகம் முழுவதும் அறிமுகமாயிற்று.
பின் மேடை,திரைசீலை இசை ஒப்பனை என்று எல்லாவற்றையும் குழுவே செய்து கொண்டதால், மிகவும் குறைத்து சிலவில் நாடகங்களை போட முடிந்தது. இசைத்துறையில் சிறப்பாக பணியாற்றும் சந்திர சேகரன் (lic ) வந்து சேர்ந்தார்.
Lic ஊழியர் சங்கத்தின் தலைவராக பணியாற்றியவர் சந்திர சேகரன்.
Saturday, July 27, 2019
(நாடக விழாவை முன் நிறுத்தி )
SAP அவர்கள் ,
எழுதிய நாடகம் ,
"ரத்த புமி "...!!!
1946 லிருந்து 1951ம் ஆண்டுவரை நிஜாமின் தெலுங்கானாவில் விவசாயிகள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தினர். அந்த தள நாயகன் பி.சுந்தரய்யா இந்த விவசாய பெருங்குடி மக்களுக்கு "தளபதியாக " இருந்து செயலாற்றினான் ."The Thelugana Strugle என்ற நூலையும் எழுதினான்.
அதனைப்படித்த தோழர் SAP அதிலிருந்து ஒரு சிறு பொறியை எடுத்து வீரமிக்க நாடகமாக்கினார்.அதுதான் "ரத்தபூமி " .
நிஜாமின் ஆடசியில் விவசாயிகள் ரயத்துவாரி,மற்றும்ஜமிந்தாரி முறையில் இருந்தனர். ஜமீன்தார்,ஜாகிர்தார்,நவாபுகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரர்கள்.அந்த நிலத்தில்ப்பாயும்,நதி,நீர்நிலைகள் ,மலைகள்,மரங்கள்,காடுகள் ,விலங் குகள்,பறக்கும் பறவைகள், ஏன் வாழும் மனிதர்கள் உட்பட அவர்களுக்குச சொந்தம்.
அந்த மனிதர்கள் கொடூரமாக சுரண்டப்பட்டனர். பெண்டு பிள்ளைகள் சீரழிக்கப்பட்டனர். அப்படி வாழ்ந்த ஒருகிரமாத்து சிறுவன் இந் தகொடுமை பிடிக்காமல் எழுகிறான்> "குமரய்யா " என்ற அவன் வா லிபனாகும் பொது இவர்களை எதிர்த்து ஆயுதம் தாங்கி போராட முடிவு செய்கிறான்.
ஆரம்பத்தில் நிஜாமின் கூலிப்படையை எதிர்த்து போராடும் அந்த மக்கள் சுதந்திரம் பெற்ற பிறகு, இந்திய ராணுவத்தை எதிர்த்து போரிடுகிறார்கள்.
குமரய்யாவின் போராட்டத்தை சித்தரிக்கும் நாடாகம்தான் "ரத்த பூமி "
தீர மிக்க இந்த நாடகத்தை எம்பிஆர் இயக்கி இருந்தார்.உணர்சசி கரமான வசனமும் கதை அமைப்பும் கொண்டிருந்தாலும் , தமுக்கம் கலையரங்கின் "போதாமை"யால் நாடகம் சோபிக்காமல் போயிற்று.
ஆனாலும் எம்பிஆர் முழு நீள நாடக வடிவத்தையும் கைக்கொண்டார் என்பதற்கு "ரத்த பூமி" சாடசியாக திகழ்கிறது.
இந்த சமயத்தில் தான் 1971ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்ச்சி தன அகில இந்திய மாநாட்டை மதுரையில் நடத்த முடிவு செய்தது.
அதனையொட்டி"People's Theatre "மக்கள் நாடக மன்றம் என்ற குழு ஒன்றும் உதயமாகியது.
Friday, July 26, 2019
(நாடக விழாவை முன் நிறுத்தி )
"Real Theatre என்ற
நிஜ நாடகமும் ,
ஸ்தானிஸ்லாவ்ஸ்கியும்...."
உலகப்புகழ் பெற்ற நாடக வியலாளர் தான் கான்டன்டைன் ஸ்தானிஸ்லாவ்ஸ்கி . 1863ம் ஆண்டில் பிறந்த அவர் புரட்ச்சிக்கு முன்னும்,பின்னும் ரஷ்யாவில் வாழ்ந்தவர்.
செகோவ்,புஷ்கின் ,டால்டாய் ஆகியவர்களை விரும்புபவர். செகாவின் நாடகங்களை இயக்கி நடித்தவர்புகழ் பெற்ற மாஸ்கோ ஆர்ட் தியேட்டரை உருவாக்கியவர்.
அவர் எழுதிய Theaory of Acting என்ற நூல் இன்று உலகம்பூராவிலும் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டிருக்கிறது. நாடக யுக்திகள் பலவற்றை பரிசோதனை செய்தவர்.
ஒரு நாடகத்தில் பிரும்மாண்டமான கோட்டை ஒன்றை சித்தரிக்க வேண்டியதிருந்தது .பழைய கோட்டை ஒன்றை விலைக்கு வாங்கி,அதன் மதில் சுவரை அப்படியே பெயர்த்தெடுத்து மேடையில் நிறுவினார்> நிஜமான கோட்டையை பயன்படுத்தியதால் அந்த வகை நாடகங்களுக்கு RealTheatre என்று பெயர் சூட்டினார்.
பார்வையாளர்களும்,விமர்சகர்களும்,பத்திரிகையாளர்களும் நாடககத்தைப் பார்த்து பிரமித்தனர்.பிரும்மாண்டமான கோட்டையை புகழ்ந்து எழுதினர். பாராட்டினார்.
பாவம் ஸ்தனிஸ்லாவ்ஸ்கியோ நொந்து நூலாகிப்போனார் . அற்புதமான கதை,அருமையான கருத்து,சிறந்த நடிப்புஇவற்றைமறந்து பார்வையாளர்கள் கோட்டைசுவரை ப்புகந்தது அவருக்கு பிடிக்கவில்லை.அத்துனையும் வீணாகிவிட்டதே என்று நினைத்தார்.
தன அடுத்த நாடகத்தில் இதனை மாற்றினார்.மேடையில் மிகவம் அழகான ,நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட ஒரு ஜன்னலை வைத்தார்.
"பார்வையாளர்களே ! இந்த ஜன்னல் ஒருகுறியீடு ,இந்த ஜன்னல் இவ்வளவு என்றால் இந்த அரண்மனை எவ்வளவு அழகாகாயிருக்கும், அது இருக்கும் கோட்டை எப்படியிருக்கும் என்பதை உங்கள்கற்பனைக்கு விட்டு விடுகிறேன் என்று ஆறிவித்ததுவிட்டு நாட கத்தை நடத்தினார் இதற்கு symbolic theatre என்று பெயர்வைத்தார்."
இதனை எனக்கு விள க்கிக் கூறிய ராமானுஜம் அவர்கள் " நான் வகுப்பு எடுக்கும் பொது real thaeatre என்பதை நிஜ நாடகம் என்று தவறாக குறிப்பிட்டு விட்டேன் அதனால் வந்த குழப்பம் தான் இது.மேடையின் நிஜம் அல்ல முக்கியம்.நாடகம் சொல்லும் பிரச்சினைகளின் நிஜம் தான் முக்கியம்" என்று விளக்கினார்.
எம்.பி ராமசந்திரன் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி தோழர்களை இணைத்து மதுரை நகரத்தையே கலக்கிக் கொண்டிருந்தார். ரகமத்,ஜீவா,குமரேசன் என்று ஒரு ஜமா அவரிடம் இருந்தது.மதுரை தெருக்களில் ஏதாவது ஒன்றில் இவர்நாடகம்நடக்காத நாள் இல்லை என்று ஆகியது.
எம்.பி,ஆர் முழு நீள நாடகங்களையும் போட்டார்.
அவற்றில் மிகவும் முக்கியமானது SAP அவர்கள் எழுதிய
"ரத்த பூமி "
என்ற நாடகமாகும் .
Thursday, July 25, 2019
(நாடக விழாவை முன் நிறுத்தி )
"தேசிய நாடக பள்ளியின் ,
பட்டறை ........"
"தேசிய நாடக பள்ளி காந்தி கிராம் பல் கலைக்கழகத்தில் ஒரு பட்டறையை நடத்துகிறது.உ ங்களை ஒரு மாணவராகசேர்த்துள்ளேன் " என்று ராமானுகம் அவர்கள் எனக்கு தகவல் அனுப்பி ஒருந்தார். 76-77 ஆண்டாக இருக்கலாம்..நான் முத்த தோழர் கே.முத்தையா அவர்களிடம் சொன்னேன்.
பொங்கய்யா! போங்க ! என்ன னு தெரிஞ்ச்சுக்கிடலாம் " என்று அவர் கூறினார்.மதுரையின் மூத்த எழுத்தாளரான ப.ரத்தினம் அவர்களும் நானும் அதில் கலந்து கொண்டோம்.
எங்களோடு ஜெயந்தன், ஷாஜகான் கனி, மாணவர் மு.ராமசாமி ஆகியோரும் சேர்ந்தனர். பின்னாளில் தமிழ் திரையுலகில் சிறந்த கலை இயக்குனரான கிருஷ்ன மூர்த்தி ,தெலுங்கு நடிகரான சாயநாத் (அப்போது 20 வயது ) என்று வந்தனர்.
ஆத்யம் ரங்காச்சாரி, பி.வி காரந்த் ,பிரேமா கராந்த், குரூப், பிரசன்னா ஆகியோர் வகுப்பு ஆசிரியர்களாக இருந்தனர்> ராமானுஜம்,மற்றும் எஸ்.பி சீனிவாசன் முழூ வகுப்புகளையும் நிர்வாகித்தனர் .அந்த ஆண்டுதான் பட்டம் பெற்ற ராஜு ( ஒப்பனை ) உதவியாக இருந்தார்.
நாடக பிரதி எடுத்தல்,இயக்கம்,நடிப்பு, ஒப்பனை, பின் மேடைநிர்வாகம்,,நிறம் என்று பலதலைப்புகளில் வகுப்புகள் நடந்தன.
துன்பவியல்,இன்பவியல், நகைசுசுவை, அபத்த நாடக வகைகளும் அறி முகம் செய்யவிக்கப்பட்டது.
பத்து நாள் பயிற்சி முடிந்ததும், மதுர காந்தி கண்காட்ச்சி அரங்கில், குருப் எழுதிய "காங்கேயன் " நடக்க ஒத்திகை நடத்தப்பட்டது. பின்னர் பயிற்சி மாணவர்கள் தயாரித்த ந.முத்துசாமியின் நாற்காலி காரர்கள் என்ற நாடகம் அரங்கேறியது.காஸ்யபன் நாற்காலிக்காரராக நடித்தார்.
ஒருவாரம் கழித்து ராமானும் அவர்கள் தலைமையில் மதுரை மாணவர்கள் கூடினோம். மதுரையில் நாடகங்களைப்போட ஒரு அமைப்பை உருவாக்கினோம். அதனை நிர்வாகியாக மாணவர் மு.ராமசாமியை இணைத்தோம்.
ராமசாமியின் மேற்பார்வையில் மதுரையில் தெருநாடகங்கள் போடப்பட்டன.ராஜாஜி பூங்கா,சாந்திநகர், பல்கலை,மற்றும் பாத்திமாக்கல்லூரி வளாகம் ஆகியவற்றில் நாடகங்கள் போடப்பட்டன.
மதுரையி பென்னர் -காக்கில் என்ற பிரிட்டிஷ் கம்பெனி இருந்தது.அந்த கம்பெனி தொழிலாளர்களின் தலைவராக எம்.பி ,ராமசந்திரன் இருந்தார்.மார்க்சிச கட்சி உறுப்பினறான அவர் தெருநாடகங்களை போடுவார்> தன் நடக்குழுவுக்கு நிஜ நடக்க இயக்கம் என்று பெயர்வைத்திருந்தார்.மக்களின்பிரசினையை நாடகம் மூலமாக கொண்டுசெல்வது அவருடைய நோக்கம்.
தெரு நாடகங்களை போட்டுக்கொண்டிருந்த மு.ராமசாமி அவர்கள், இந்தப்பெயரை எம்.பி ஆர் வைப்பது சரியா என்று கேள்வி எழுப்பினார்.
இதனைப்பற்றி ராமானுஜம் அவர்களை கலந்து கொள்வது என்னு முடிவு செய்தென்.
Wednesday, July 24, 2019
(நாடக விழாவை முன் நிறுத்தி )
"பேராசிரியர் ராமானுஜம் அவர்களின் ,
"புறஞ்சேரி "
நாடகம் ......!!"
நெல்லைமாவட்டம் நான்குனேரியை சேர்ந்தவர் ராமானுஜம் அவர்கள்.தேசிய இயக்கத்தில் ஈடுபட்ட குடும்பம்.இடதுசாரியான "ஆராய்ச்சி " வானமாமலையின் உறவினர். சென்னையில் பிரபலவக்கீ லான என்.டி . வானமாமலையின் நெருங்கிய உறவினர். காந்திய கொள்கையில் ஈடுபாடு கொண்டு கதர் இயக்கத்தின் முன் நின்றவர்.காரல் மார்க்ஸை நேசிப்பவர்.
கேரளத்தின் வாலிபர் சங்கம்,மாணவர் இயக்கம் ஆகியவற்றிற்கு நாடக பயிற்சி அளித்தவர். தமிழ் நடக ஆர்வலர்களை நவீன நாடகவியல் பால் ஈர்த்தவர்.எஸ்.பி.சீனிவாசன் அவர்களோடு இணைந்து காந்தி பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் செயல்பட்டவர்.
"புறஞ்சேரி" சிலப்பதிகாரத்தின் ஒரு சிறு துண்டை கதைக்களமாகக் கொண்டது.மாதவியிடமிருந்த வந்த கோவலனை அழைத்துக்கொண்டு கண்ணகி புதிய வாழவை தேடி மதுரை வருகிறாள்.கவுந்தி அடிகளின் உதவியோடு மதுரையின் வடபகுதியில் உள்ள இடையர் சேரியில் தங்குகிறாள்.
சேரிப்பெண்களுக்கு கண்ணகியும், கோவலனும் ரதியும் மன்மதனுமாக தென்படுகிறார்கள்.அங்கு வசிக்கும் நிமித்தக கிழவனுக்கோ அவர்களின் வருகை நல்லசகுனமாக படவில்லை. பாண்டிய நாட்டிற்கு இவர்களால் தீங்கு வரும் என்று கணிக்கிறான் .
புதிய வாழ்வை தேடிவந்த கண்ணகியை ஊழ் புரட்டிப்போடுகிறது. இந்தப்பகுதியை மட்டும் ராமானுஜம் நாடகமாக்கி இருந்தார்.
நாடகம் ஆரம்பமாகும் பொது கட்டியங்காரன் வந்து அறிமுகப் படுத்துவான். நாடகம் முடியும் பொது கட்டியங்காரன் மங்கள வாழ்த்து பாடாமல் திரையினை மூடாமல் நாடகம் முடிந்தது என்று அறிவிப்பான்.
அவசர நிலைக்காலத்தில் நடத்தப்பட்ட நாடகம். வாழும் உரிமை கூட மறுக்கப்பட்ட நிலையில் நான் மங்கள ஆரத்தி பாடலை பாடமாட்டேன் . என்று இந்தநிலை மாறுமோ அன்றுதான் நான் வாழ்த்து பாடுவேன் என்று கட்டியங்காரன் கூறுவதோடு நாடகம் முடியும்.
கட்டியங்காரனாக ஜெயந்தன் நடித்தார். சேரி மனிதராக மு.ராமசாமி மிக சிறப்பக நடித்தார்.காஸ்யபன் கோவலனாகவும் ,காந்தி பல்கலை ஆசிரியர் கண்ணகியாகவும் நடித்தனர்
பேராசிரியை டாக்டர் குருவம்மாள் கவுந்தி அடிகளாக நடித்தார்.
கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுங்களுக்கு முன் எர்ணாகுளத்தில் நடந்த தேசிய நாடக விழாவில் நடிக்கப்பட்டது "புறஞ்சேரி" .
Tuesday, July 23, 2019
(நாடக விழாவை முன் நிறுத்தி )
"நாடகமல்லாதவற்றை ,
நாடகம் என்று ,
நம்பி ......."
70ம் ஆண்டுகளின் முற்பகுதியில் "உதயம் " என்று ஒரு பத்திரிக்கை வந்து கொண்டிருந்தது .அதில் வெங்கட் சுவாமிநாதன் ஒருகட்டுரையில் "நாம நாடகமல்லாதவற்றை நாடகம் என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறோம் " என்று குறிப்பிட்டிருந்தார்.
நாடகத்தில் எதோ சாதித்திக்கொண்டிருக்கிறோம் என்று கர்வப்பட்ட என் போன்றவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இநதிய நாடகம் என்பதுஅந்த பிரிட்டிஷாரை பார்த்து அவர்களின் நாடகபாணியில் "கொச்சையா"க நகலெடுத்த "பார்சி" நாடகபாணிதான் என்ற கருத்தை அவர் சொல்லியிருந்தார்.
குவைத் நாட்டிலிருந்து வந்திருந்த "அல்காஸி " என்ற நாடக வியலார் இந்திய நாடகங்களின் பற்றி சொல்லியுள்ளார்.
" இந்திய நாடகத்தின் தந்தை இரு கருதப்படும் அஸ்வகோஷ் கிரேக்க இந்திய கலப்பினத்தின் வாரிசு ஆவார் . பிரிட்டிஷ் நாடகங்கள் வருவதற்கு முன்பே இங்கு "காளிதாசனின் அபிஞன சாகுந்தலம் " இருந்தது .சம்ஸ்கிருத நாடகத்தில் நாடக மேடையில் எதை காட்டக்கூடாது என்று இலக்கணம் எழுதி இருந்தார்கள்.நாடகத்தில் கதாநாயகன் எட்டு வகைதான்,கதாநாயகி எட்டு வகைதான் என்று நிர்ணயம் செய்து இருந்தார்கள்.
இந்திய நாடகத்தின் மரபு என்பது கேரளத்து கதகளியில், தமிழகத்தின் கூத்துமுறையில்,தெலுங்கு புற்ற கதா வில்,மராட்டியத்தில் லாவணி ,தமாஷாவில் உள்ளது என்பதை சொன்னவர் அல்காஸி.
இந்திய நாடகத்தை மீட்டுருவாக்கம் செய்ய நினைத்த பண்டித ஜவகர்லால் நேரு தேசிய நாடக பள்ளியை ஆரம்பித்தார் .அதன் தலைவராக அல்காஸியை நியமித்தார்.
அப்படி தேசிய நாடக பல்கலையில் படி த்தவர்களில் பேராசிரியர் ராமானுஜம், பிரசன்ன போன்றவர்கள் புதிய நாடகவியலை Dramatics கற்றுக்கொடுக்க ஆரம்பித்தரக்ள்.
தேசிய நடக்க பயிற்சிப்பள்ளி யின் வகுப்பில் தமிழக நாடக செயல்பாட்டாளர்கள் சிலரை படிக்க வைத்தவர் ராமானுஜம் அவர்கள்.
அந்த முதல்பட்டறையில்,ஜெயந்தன், மு.ராமசாமி, ப .ரத்தினம் ஆகியோரோடு காஸ்யபனும் பயிற்சி பெற்றார்.
ஆண்டுதோறும் நடைபெறுமதேசிய நாடக விழாவில் ராமனுஜம் அவர்கள் இந்த மாணவர்களை வைத்து ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.
"புறஞ்சேரி" என்ற அந்த சிலப்பதிகார நாடகத்தில் ஜெயந்தன்,மு,ராமசாமி ஆகியோர் நடித்தனர் .எர்ணாகுளத்தில்நடந்தஇந்தநாடகத்தில் காஸ்யபன் கோவலனாக நடித்தார்.
அடுத்து "புறஞ்சேரி " பற்றி எழுதுகிறேன்.
Monday, July 22, 2019
(நாடக விழாவை முன் நிறுத்தி )
ஓவியர் புத்தன் ,
இயக்கிய ,
" செவ்வானம் "நாடகம்....!!!
மதுரை மேலமாசி வீதியில் நாங்கள் இளந்தாரிகள் கூடி வம்பளப்போம். அப்போது மதுரையயில் கர்ணன் என்ற எழுத்தாளரிருந்தார் அவரும் கலந்து கொள்வார் . வம்பளப்பு என்றால் எம்.ஜி.ஆர் ,சிவாஜி,ஜெமினி ,ரஜினி,கமல் என்று அல்ல !
ஓ ஹென்றியையும், மாப்பாசானயும் விவாதிப்போம். சாமர்செட்மாம் அவர்களையும் அலெக்ஸ்சாண்டர் டுமாசையும் விமரிசிப்போம். செகோவையும் தி.ஜ.ரா வையும் ஒப்பு நோக்குவோ.ம். அண்ணாவின் நாடகங்களையும், தோப்பில் பாசியின் "நிங்கள் என்னை கம்யூனிஸ்ட்டாக்கி " நாடகத்தையும் அலசுவோம்.புத்தனும் மற்றவர்களும் கலந்து கொள்வார்கள் .
மதுரை குதிரை வண்டிக்காரர்கள் சங்கம் என்று இருந்தது அதன் தலைவர் "பூச்சி" என்ற தோழர்> அவர கட்சியின் மாவட்டக்குழுவிலிருக்கிறார். பி ராமமூர்த்தியின் மணிவிழா வருகிறது.அதனை சிறப்பாக கொண்டாட கடசி முடிவு செய்திருக்கிறது என்று கூறினார்>
எங்களுக்கு உற்சாகம் பீறிட்டது> அந்தவிழாவில் நாடகம் போடுவது என்று முடிவுசெய்தொம். புத்தன் இயக்கம். கே.முத்தையாவின் "செவ்வானம் "நாடகம்.
நடிகர்களிருக்கட்டும் . அதற்கான நிதி ஆதாரம். ?
மதுரையில் அப்போது "கருடா சிட பண்டு " கம்பெனி இருந்தது. அதன் தலைவர் ராதாகிருஷ்னான் . இளைஞர்.கலைஇலக்கியம், முற்பாயோக்கு என்று ஆசைப்படுபவர். புத்தனுக்கும் தெரிந்தவர் .அவர் கதாநாயகனாக நடிக்க சம்மதித்தார்> ஒத்திகை ஆரம்பமானது>
இந்த நாடகத்தில் ஒரு சர்க்கிள் இன்ஸ்பெக்ட்டர் பாத்திரம் உண்டுகளையான முகத்தோடு வாட்ட சட்டமான நபரை தேடினோம். எல்.ஐ.சி ஊழியர் சங்க தலைவர் தனபால் பாண்டியன் நல்ல களையான முகமும் உயரமும் கொண்டவர். முடியாது என்று அவர் "கதற கதற" அவரை நடிக்க வைத்தோம்..
கீழ் வானில் செம்பருதிக் கோளம் - இது
கிழக்கெல்லாம் சிவப்பாகும் காலம் !
தாழ்வான மனிதகுலம் வெல்லும் _ மக்கள்
தர்மத்தின் கை ஓங்கி நில்லும்
என்ற புகழ் பெற்ற பாட்டோடு அந்த நாடகம் அரங்கேறியது .
இதே நாடகத்தை மதுரை பீப்பிள்ஸ் தியேட்டர்ஸார் தமிழக மெங்கும் நடத்தினர்.தனபால் பாண்டியனின் தமபி எல்.ஐ.சி ராஜ குண சேகர் கதாநாயகனாக நடித்தார்> பின்னாளில் மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர் குமரேசன் நடித்தார்> பட்டப்படிப்பு முடிந்தபின், குமரேசன் சென்னையில் திரைப்படக்கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்றார்> சக்கரவர்த்தி என்று பெயரை மாற்றிக்கொண்டு நடித்தார். இயக்குனர் செல்வராஜ் அவர்களின் "பொண்ணு ஊருக்கு புதுசு "என்ற படத்தில கதாநாயனாக நடித்தார்.
Sunday, July 21, 2019
(நாடக விழாவை முன் நிறுத்தி )
பி.ஆர் அவர்கள்
நடித்த
நாடகம்...!!!
1947 ஆகஸ்டு 15ம் தேதி இந்தியா விடுதலை பெற்றது. அந்த விடுதலைக்காக போராடி,அடிபட்டு மிதிபட்டு பிரிட்டிஷ் போலாரிஸாரின் அடக்குமுறையால் சிறையில் அடைக்கப்பட்ட காங்கிரஸ் காரர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதேசமயம் சிறையில் இருந்த கம்யூனிஸ்டுகள் ஆயிரக்கணக்கில் அந்த ஆகஸ்டு 15 ம் தேதி சிறையில்தான் இருந்தனர்.
பல்வேறு வழக்குகளில் அவர்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருந்தனர்.அந்த இளம் தோழர்களின் மன உறுதியை தளரசசெய்வதுதான் ஆட்ச்சியாளர்களின் நோக்கம் .
இதனை மாற்றி அமைக்க சிறைக்குள்ளே கடசி தலைவர்கள் பலநடவடிக்கைகளை எடுத்தார்கள்.
தன வாழ்க்கையில் 9வருடம் சிறையிலும் மூன்று வருடம் தலைமறைவாகவும் இருந்து வாழ்ந்தவர ஐ.மாயாண்டி பாரதி . அவரருகில் அமர்ந்து பணியாற்றும் வாய்ப்பு பெற்றவர்களில் நானும் ஒருவன்.
"சாமா ! ரயில்ல ஏறினா "பெயில் ". "வான் " ல ஏறினா " ஜெயில் "அதுதான் அன்றைய வாழ்க்கை .என்பார் ஐமாபா.
"எழுத படிக்க வகுப்புகள் நடக்கும். தமிழ் தெரியும்னா இங்கிலீஷ வகுப்பு நடக்கும். பாட சொல்வாங்க . பாடல் எழுத சொல்வாங்க. கவிதை போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு பொட்டி நடத்துவாங்க."
"சு.பாலவிநாயகம் னு ஓத்தார் இருந்தாரு.நெல்லை மாவட்டத்துக்கறாரு .தர்க்க வியல் பொருள்முதல் வாதத்தை குழந்தைக்கு பாலாடைல போட்டு தரமாதிரி வகுப்பை எடுப்பரூ. நம்ம என்.எஸ், பி ஆர் னு எல்லாரும் வகுப்பு எடுப்பாங்க ."
"நான் சும்மா இருப்பேனா. நாடகம் போடணும்னு ஆரம்பிச்சென் . பகத்சிங் பற்றி எழுதி இருந்தேன். அத போடணும்னு ஆசை. எஸ்.பி.வி கிட்ட சொன்னேன்> அது பி ஆர் காதுக்கு போயிட்டு."
"நாடகம் புதுசா எழுத சொன்னாரு. நம்ம பெரிசு தான் எழுதித்து"
"யாரு பி;ஆரா?"
"இங்க பெரிசு யாரு. முத்தையா தானே "
"அவரும் அப்பா ஜெயிலதான் இருந்தாரு."
"9 சீன் வரமாதிரி ஒருமணிநேர நாடகத்தை எழுதினார். நடிகர்கள் வேணுமே. அப்பம் பி.ஆருக்கு 35 அல்லது 40 வயசுக்குள்ள இருக்கும். ஜம்முனு இருப்பாரு. ரெண்டு உதடும் சேர்ந்துக்கிட்டு மூக்குமுழியுமா இருப்பாரு,முகத்துல ஒரு சுழி இருக்கும்.என்ன ? கால்கள்தான் கொஞ்சம் விந்தி நடப்பது. மற்றப்படி நடிக்க முடியும். நான் சும்மா யிருக்காம கதாநாயகன் பி ஆர் னு சொன்னேன். கூட இருந்தவங்க புறாவும் கைதட்டல் ஆதரிசங்க."
"பின்னால 60கள்ல முத்தையா90 சீன் கொண்ட நாடகமாக்கி அபுத்தகமா போட்டாரு." என்று ஐமாபா முடித்தார்.
1968-69 ம் ஆண்டு பி.ஆர் அவர்களின் அறுபதாம் ஆண்டுவிழா நடந்தது .அந்தவிழாவில் மதுரை ஓவியர் புத்தன் அதேநாடகத்தை மூன்றுமணிநேரம் நடத்தினார்.
"செவ்வானம் " என்ற அந்த நாடகம் பற்றி அடுத்து எழுதுகிறேன்.
Wednesday, July 17, 2019
(நாடக விழாவை முன் நிறுத்தி )
"பொன் மலை "
என்ற அந்த
புண்ணிய பூமியில்....."
தென் இந்திய ரயில்வே ,எம்எஸ் எம் ,பி என் ஆர் ரயில்வே என்று இந்தியாமுழுவதும் பிரிட்டிஷ் காம்ப்பெனிகள் வசம் இருந் ரயில்வே துறையை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று ரயில்வே தொழைலாளர்கள் போராடினர்.அமைச்சர் கோபாலசாமி அய்யங்கார் உலகமே வியக்க இந்திய ரயில்வே துறையை உருவாக்கி நாட்டுடைமை ஆக்கினார்.
இதற்கான வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தியவர்களில் முக்கியமானவர்கள் தென் இந்திய ரயில்வே தொழைலாளர்கள் சங்கமாகும். அதன் கேந்திரமான தலைமை இருந்த இடம் தான் அந்த புண்ணிய பூ மியான பொன்மலை .
பி.ராமமூர்த்தி, அனந்தன் நமபியார்,பரமசிவம், உமாநாத் ஆகியோரின் பாதங்கள் பட்ட புழுதிமண்ணைக்கொண்டது அந்த நகரம். தொண்ணுற்று ஆறு வயதில் கம்பத்தில் ஒய்வு எடுத்துக்கொண்டிருக்கும் அப்துல் வஹாப் (அத்தா ) அலுவலக செயலாளராக பணியாற்றிய சங்கம் அங்குதான் இருக்கிறது.
அந்த தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் ஆண்டுவிழாவில் கலை நிகழ்சசிகளை நடக்கும் அதில் போட்ட நாடகம் ஆயிரக்கணக்கான மக்களை ஈர்த்தது.
அது "முன்மேடை" நாடகம் . நாடகம் ஆரம்பிக்கும் பொது முன் மேடையில் ஒரு பெண் அமர்ந்து பூக்களை தொடுத்துக் கொண்டே பாடுவார். பின் மேடையில் நாடகம் ஆரம்பமாகும். நாடகம் முடியும்போது பாட்டும் முடியும்.
"பாட்டு முடியும்முன்னே " என்ற இந்த நாடகத்தை எழுதியவர் அன்றைய மாணவர் இயக்கத்தை சேர்ந்த டி .செல்வராஜ்.
நெல்லை மதிதா கல்லூறியில் பட்டம் பெற்று பின்னர் சட்டம்பயின்றவர் .
பின்னாளில் தா.மு,எ .சாவை ஆரம்பித்த முன்னோடி. சாகித்திய விருது பெற்ற முத்த எழுத்தாளர் .
இந்த நாடகத்திலகதாநாயகனாக நடித்தவர் அன்றைய பிரபல நடிகர் என்.என்.கன்னப்பா.
"சிட்டுக்குருவி சிட்டுக்குருவி " என்ற பிரபலமான பாட்டை பாடியபடி ஆடும் அஞ்சலி தேவி யோடு கதாநாயகனாக நடித்த"டவுண் பஸ் "படத்தில் கதாநாயகனாக் நடித்தவர் .அன்றைய வசூல் சக்ரவர்த்தி.அவரை ஒரு கம்யூனிச களோடு நாடகம் போடுகிறார் என்ற காரணத்தினாலே ஓரம் கட்டப்பட்டவர்..
பின்னாளில் தோழி ல் முறை நாடகத்தில் பணியாற்றினார்.கோவையில் மார்க்சிஸ்ட் கடசி நடத்திய அரசியல் மாநாட்டில் அவர் அரிச்சந்திர மயான காண்டத்தை ஒருமணிநேரம் நடத்திக்காட்டினார் .ஒரே நடிகர் அந்த ஒருமணிநேரம் பார்வை யாளர் களை கட்டிப்போட்டது நினைவை விட்டு அகலாது.
இந்த நாடகத்தில் நடித்த இன்னொரு திரைப்பட நடிக்கர் டி .கே .பாலசந்தர் .
இ வரும் ஓரம் கட்டப்பட்டார்.
இந்த நாடகத்தில் கதாநாயகியாக நடித்தவர் தர்மாம்பாள் என்பவர்.
ஆம் !மறைந்த முதல்வர் முகருணாநிதி அவர்கள் "எனது மகள் கனிமொழியின் தாயார் தர்மாம்பாள் " என்று சட்டமனறத்தில் அறிவித்தாரே அதே தர்மாம்பாள் தான்.
தூத்துக்குடியிலிருந்து தேர்வாகி திமு.க வின் நாடாளுமனற உறுப்பினராக உள்ள கனிமொழி அவர்களின் தாயார் ராசாத்தி அம்மாள் தான அந்த நடிகர் .
ராசாத்தி அம்மையாரின் பூர்வாசிரம பெயர் தர்மாம்பாள்.
Monday, July 15, 2019
(நாடக விழாவை முன் நிறுத்தி )
"செம்மலர்" நாடக குழுவும்,
கவிஞர் வேலுசாமியும் ...."
(த.மு.எ .ச உருவாவதற்கு முன்பே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பண்பாட்டுத்துறையில் பலர் செயல்பட்டு வந்தனர் .அவர்கள் பற்றிய தரவுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அதனை முத்த தோழர்களா ன உங்களைப்போன்றவர்கள் பதிவு செய்யக்கூடாதா என்று என்னை பலர் கேட்டுவந்தனர் .இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே நான் செய்திருக்கலாம் .. இப்போது புலம் பெயர்ந்து வந்து தமிழில் பேசக்கூட ஆளில்லாதநிலையில் எழுத ஆரம்பிக்கிறேன். சம்பவங்கள் உண்மைதான் என்றாலும், பெயர்,காலம் ஆகியவற்றை நினைவுகளின் உதவியால் தான் எழுத்து கிறேன். தவறிழைக்க வாய்ப்பு உண்டு. )
கோவை மாவட்டத்தில் அந்த மாபெரும் தலைவன் கே.ரமணி தலைமையிலொரு சிறு குழு பண்பாட்டு தளத்தில் செயல்பட்டு வந்தது.கம்பராயன்,டாக்டர் பாலகிருஷ்ணன், கவிஞர் வேலுசாமி என்று அவர்களில் பலர் உண்டு.
மறைந்த கவிஞர் வேலுசாமி "செம்மலர் " என்ற நாடக குழுவை நடத்திவந்தார்.
"தானம் " என்ற நாடகம் அதன் முக்கியமான நாடகங்களில் ஒன்று.
தெலுங்கானாவில் விவசசாயிகள் ஆயுதம் தாங்கிய புரட்ச்சியை நட த்தினார்கள் . 1946ம் ஆன்டிவிலிருந்து 1949 ஆண்டுவரை ஜமீன்தார்கள்,நிலச்சுவான்தார்கள், மிட்ட மிராசுகளிடமிருந்து நிலத்தை பிடுங்கி நிலமற்ற விவசாயிகளிடம் பிரித்து கொடுத்தார்கள். மூன்று ஆண்டுஅந்த புரட்ச்சிகர ஆடசிநடந்தது. பின்னர் நேருவின் காங்கிரஸ் ஆடசி புரட்ச்சியாளர்களை ராணுவத்தின் உதவியோடு அழித்து ஒழித்தது.
தெலுங்கானா புரட்ச்சியின் வெற்றி இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு பரவி டக்கூடாது என்பதில்மத்திய அரசு எசசரிக்கையாக இருந்தது.இந்திய மக்கள் திரளில் விவசாய கூலிகள் அதிகம் அவர்களுக்கு நிலம் அளிக்க்கப்படவேண்டும். வன்முறை மூலமாக அல்ல . அஹிம்சை முறையில் நிலவுடமையாளர்களிடமிருந்து நிலத்தை தானமாக பெற்று அதனை கூலி விவசாயிகளுக்கு கொடுக்க முடிவு செய்திருக்கிறோம். அதற்காக "பூமிதான் "இயக்கத்தை உருவாக்கினார்கள். அந்த பவுனார் ஆசிரமத்து சாமியார் வினோபா அவர்கள் தான் இதனை தலைமை தாங்கி நடத்தினார். இந்தியா புறாவும் சுற்றி நிலத்தை தனமாக பெற்று விநியோகம் செத்தார் .
அந்த கிராமத்திற்கு வந்த வினோபா பண்ணைகளிடம் தானம் கேட்டார் பண்ணையார்கள் தானம் கொடுத்தனர் அதனை விவசாயி ஒருவனுக்கு வினீபா அளிக்கிறார்.விவசாயி தன்குடுமபத்தோடு சென்று நிலத்தை பார்க்கிறான் சரளை கற்களும்,குண்டும் குழியுமான கட்டாந்தரை. அவற்றிக்கு அடியில் பாறைகள் .தானம் கொடுத்த பண்ணையாரிடம் சொல்ல அவர் அவனுக்கு கடன் உதவி அளிக்க முன் வருகிறார். நிலம் பண்படுத்தப்பகிடுகிறது அடுத்து நீர்வசதிக்காக கிணறு வெட்டுகிறான் . இதற்கே மூன்று நானகு வருடங்கள் ஆகிவிடுகிறது. கடுமையாக உழைத்து பயிரிடுகிறான் . அவனை பார்க்க வந்த பண்ணையார் நிலம் சாகுபடிக்கு தயாராக இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். விவசாயியை பாராட்டுகிறார்.
மறுநாள் பண்ணையாரின் கணக்கு பிள்ளை வந்து விவசாயியிடம் அவன் வாங்கிய கடனை திரும்ப கேட்கிறான். அவனிடமிருந்து நிலைமை கையகப்படுத்தப்படுகிறது.விவசாயி கட்டிய குணத்தோடு தெருவுக்கு வருகிறான்
தென்பகுதியில் சுற்றுப்பயணம் செய்த வினோபா திரும்பும் வழியில் அதே கிராமத்திற்கு வருகிறார். சாவடியில் அமர்ந்து மேலும் தானம் கொடுங்கள் என்று கேட்கிறார் கை களை நீட்டி! கூட்டத்தில் நின்று கொண்டிருந்த விவசாயி தான் கட்டி இருந்த கோவணத்தை அவிழ்த்து "இந்தா தானம் " என்று வீசி எறிகிறான் .
நாடகம் முடிகிறது.
கிஷன் சந்தர் எழுதிய இந்த நாடகத்தை கவிஞர் வேலுசாமி நடத்தினார்..
பின் நாளில் தாமு எ ச வுடன் இணைந்து அதன் செயற்குழு உறுப்பினராக பணியாற்றினார். .!
Saturday, July 06, 2019
ஃபாசிசம்
என்றால்
என்ன ?
19 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மத்திய ஐரோப்பாவில் வடிகட்டிய வலது சாரிகளின் சிந்தனை தொகுப்புதான் அரசியல் வடிவம் பெற்றது .1919 ம் ஆண்டிலிருந்து 1945 ம் ஆண்டுவரை தொடர்ந்தது . முதல் உலகப்போரின் இறுதியில் ஆரம்பித்து இரண்டாம் உலகப்போரின் இறுதியில் இற்று விழுந்தது.
முதல் உலகப்போரின் வெற்றியில் தான் இரண்டாம் உலகப்போர் ஒளிந்து கொண்டிருந்தது என்றும் வரலாற்றாளர்கள் வர்ணிப்பார்கள். முதலுலகப்போர் முடிந்ததும் வெற்றி பெற்ற முதலாளித்துவ நாடுகள் தோல்விகண்ட ஜெர்மனியை அதன் இறையாண்மையை மரியாததையை படு கேவலமாக மதித்தன..
ஜேர்மனிய மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டனர். காயப்பட்ட ஜேர்மனிய ஆவேசம் பழிவாங்க காத்திருந்தது. அடால்ப் ஹிட்லர் தொன்றினான்.
அருகில் இத்தாலி நாட்டில் முசோலினி வளர்ந்தான் பாசிசம் என்ற சிந்தனைக்கு அரசியல் வடிவம் தந்தவன் முசோலினி. Faces என்ற லத்தின் வார்த்தைக்கு சுள்ளிகளின் கட்டு என்று அர்த்தம் .சுள்ளிகளை காட்டிலிருந்து கொண்டுவர கோடாலி வேண்டும். அந்த கோடாலியை குறியீடாக ஆக்கினான் முசோலினி . அவன் வகுத்த சித்தாந்திற்கு பாசிசம் என்று பெயரிட்டான் .
ஹிட்டலர் அதனை நாஜியிசம் என்று சொன்னான் .
இத்தாலி,ஜெர்மனி, தவிர ஸ்பெயினின் பிராங்கோ,போர்ச்சுக்கலின் சலாசர், ஆஸ்திரியா, வடக்கே நார்வே ,தெற்கே கிரேக்கம் என்று பாசிசம் வளர்ந்தது ..கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இருந்தது.கிழக்கே ஜப்பானிலும் இதனை காணமுடிந்தது.
கடைந்தெடுத்த அதீதமான தேசபக்தி !
அதன் காரணமாக யதேச்சாதிகாரம் !
மாற்று கருத்தை கடுமையாக தடை செய்வது!
ஜனநாயகத்தை அடியோடு வெறுப்பது !
அத்தகைய நிறுவனங்களை சீர்குலைப்பது !
தேசத்தை ராணுவமயமாக்குவது !
மக்களை தேசத்தின் அடிமைகளாக கருதுவது !
கடுமையான கம்யூனிச எதிர்ப்பு !
இவைதான் பாசிசத்தின் முக்கியமான கோட்பாடுகள் .
1945ம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் ஸ்டாலினின் தலைமையில் தன்னந்தனியாக செஞ்செனை பெர்லீனின் நாடாளுமன்றத்தில் செங்கொடியை ஏற்றிய அந்த அற்புதமான தருணத்தில் பாசிசம் வீழ்ந்தது .
ஆனாலும் அதன் மிச்சங்கள் அவ்வப்போது அரை பாசிசமாகவும், வலது சாரிகளின் அரசியல் தத்துவமாகவும் தலைதூக்கத்தான் செய்கின்றன !!!
..