"ராகுல்சாங்கிருத்யாயனின் "
இந்தி படைப்பு
தமிழில் .....!!!
சுமார் மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கும்.பாரதிபுத்தகாலயத்தின் நிர்வாகிகளில் ஒருவரான முகம்மது சிராஜ் அவர்கள் எனக்கு ஒரு புத்தகத்தினை அனுப்பி இருந்தார் . 1940ம் ஆண்டுகளில் வெளியான இந்தி மொழி நூல் அது . மூல பிரதி கிடைக்காததால் அதன் ஜெராக்ஸ் பிரதியை அனுப்பி இருந்தார்
ராகுல் சாங்கிருத்யாயன் அவர்கள் எழுதிய " வால்காவிலிருந்து கங்கைவரை " என்ற நூல்தான் அது.
முத்து மினாடசி அவர்களின் உதவியோடு வாசித்தேன். கம்யூனிஸ்ட் கடசியில் புதிதாக வரும் இளம் தோழர் களுக்கு இரண்டு நூல்களை படிக்க கொடுப்பது வழக்கம் . ஒன்று கார்க்கி எழுதிய "தாய்" நாவல். இரண்டாவது ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய "வால்காவிலிருந்து கங்கை வரை ". ஏற்கனவே நான் ராகுல்ஜி யின் நூலை படித்திருந்தேன்.
இந்தி பதிப்பு கொஞ்ச்ம வித்தியா சமாக தெரிந்தது. தமிழில் இல்லாத சில கூடு தலாக சில பகுதியிலிரூ.ந்த மாதிரியும் எனக்கு தோன்றியது. தொழார் சிராஜ் அவர்களிடம் இதனை சொன்னேன். " அப்படியானால் இந்தியிலிருந்து தமிழு க்கு ஒரு பதிப்பு கொண்டுவரலாம்" என்று யோசனை கூறினார் .
பாரதி புத்தகாலயம் சிராஜின் யோசனை யை ஏற்றுக் கொண்டு மொழிபெயர்ப்பை ஆரம்பிக்க சொன்னது.
இந்தி இலக்கியமென்றதும் நம் மனதில் முன்ஷி பிரேம்சந்த் தான் நினைவுக்கு வருவார் மிகவும் அற்புதமான சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியவர். 1936ம் ஆண்டு இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நேருவும் ,இ.எம்.எஸ்ஸும் . ஆரம்பித்த பொது சங்கத்தின் தலைவராக பிரேம்சந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மிகவும் அற்புதமான படைப்புகளை பிரேம்சந்த் அவர்கள் உருதுமொழியில் தான் ஆரம்பகாலத்தில் எழுத்தினார். பின்னர் தான் இந்தி மொழியில் எழுத ஆரம்பித்தார்.
இந்தி மொழி பல்வேறு வட்டாரங்களில் பல்வேறு வகையில் கையாளப்பட்டு வந்தது. அவற்றில் "பிரிஜேபாஷா " என்ற வட்டார மொழியும், "அவதி " என்ற வட்டார மொழியும் மட்டுமே இலக்கிய வாதிகளால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.
ராகுல்ஜியின் நூலை முத்து மினாடசி அவர்கள் மொழிபெயர்க்க துவங்கினார்.கிட்டத்தட்ட ஆறுமாதம் ஆகியது.
பாரதி புத்தகாலயத்தினர் மிகுந்த அக்கறை எடுத்து பிழை திருத்தியதோடு மட்டுமல்லாமல், மொழிநடையை சரளமாக்க வும் செய்தனர்.
சென்ற வாரம் பாரதிபுத்தகாலயத்தின் நிர்வாகிகளில் ஒருவரான தொழார் பி.கே ராஜன் அவர்களிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.
"வாக்காவிலிருந்து கங்கை வரை " நூலின் இரண்டு பிரதிகளை அனுப்பி இருக்கிறேன் "என்ற மகிழ்சசி தரும் செய்திதான் அது.
காலம் காலத்திற்கும் நிற்கபோகும் ஒரு அற்புதமான படைப்பை தமிழுக்குதந்த முத்துமினாடசி அவர்களுக்கும் பாரதி புத்தகாலயத்திற்கும் நம் பாராட்டுக்கள்.