Tuesday, April 29, 2014

HOME
ABOUT
POSTS RSS
CONTACT
LOG IN
Wednesday, July 27, 2011

"அம்பாசமுத்திரம் கந்தசாமி "
சிறு கதை "அம்பாசமுத்திரம் கந்தசாமி "

"ஸ்ரீ அம்மவுக்கு கந்தசாமி வணக்கங்களோடு எழுதிக்கொள்வது.இங்கு நான் நலம்.அங்கு நீங்கள் , உங்கள் மறுமகள் புஷ்பா,பேத்தி இந்திரா, பேரன் காமராஜ் ஆகியொர் நலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.என்னைப் பற்றி ....

" சோல்ஜெர்ஸ் கம்-அவுட் " என்று காப்டன் ஞானெஷ் வர்மாவின் கர்ஜனை கேட்டதும் கந்தசாமி கடிதம் எழுதுவதை நிறுத்தினான். மூன்று நாட்களாக கடிதம் எழுத நினைத்தும் முடியவில்லை.பங்கருக்குள் உள்ள பெற்றொமாக்ஸ் வெளிச்சத்தில் உட்கார்ந்து எழுத ஆரம்பித்த உடனேயே சிம்மம் கர்ஜித்தது.எழுந்துவெளியே ஒடும்போது மற்றவர்களும் " 'அசெம்பிள்' ஆகியிருந்தனர்.

மலை உச்சியில் பாகிஸ்தான் ராணுவமும் முஜாகிதீனும் இருந்தனர்." ஃபயர்" என்று உத்திரவிட்டதும் பீரங்கி முழக்கமிட்டது.பழுப்புநீற வெளிச்சத்தோடு குண்டுகள் பாய்ந்தன.பத்து நிமிட தாக்குதலுக்குப்பிறகு மவுனம்.

அடுத்த உத்திரவு வரை வேலையில்லை.

மீண்டும்கந்தசாமி பங்கருக்குள் நுழைந்தான்.அவனோடு சிக்னலைச்சேர்ந்த சோமசேகரும் நுழைந்தான். சோமசேகர் கர்நாடகத்துக்காரன்.கந்தசாமி கடிதத்தைத் தொடர்ந்தான் .

"என்னை பற்றி கவலைபட வேண்டாம்.நீங்கள் நம்ம வளவில் உள்ள கோனார்வீட்டு டி.வி யில் பார்த்துவிட்டு என்னைபற்றி பயப்படுவீர்கள் என்று நினைத்துத்தான் எழுதுகிறேன்.இங்கு எங்களுக்குப் பாதுகாப்பு உள்ளது.நல்ல சத்தான உணவு கொடுக்கிறார்கள் .'

. சோமசேகர் எழுந்து தன் வாட்டர் பெக்கில் இருந்து தண்ணிர் குடித்தான்.ஒரு சிகரெட்டை எடுத்துபத்தவைத்து கந்தசாமியிடம்நீட்டினான்.தனக்கு ஒன்றைப் பத்தவைத்துக்கொண்டான்.அவன் மடியில் இருந்த பிளாஸ்டிக் பையில் வறுத்த பயறு இருந்தது. ஒரு பிடியை எடுத்து கந்தசாமி வாயில்போட்டுக்கொண்டான்.மூன்று நாட்களாக நூடில்ஸ்,பயறு ,சிகரெட் தான் ஆகாரம் .

"ஏய!காந்த்! முன்று நாளா உன் பூட்ஸை கழட்டவில்லை" என்றான் சேகர்."
" நீ நான்குநாட்களாக கழட்டவில்லை " என்றான் கந்தசாமி.இருபத்துநான்கு மணிநெரமும் கண்துஞ்சாத பணி.இந்ததேசத்தின் இருத்தலை உணர்த்தும்பணி.கடிதம் எழுதத் துவங்கினான்.

"இங்கு குளிர் அதிகம் தான் .ஆனால் பத்திரிகைச்செய்திகளைப் பார்த்து பயப்படவேண்டாமம்மா! ...குத்தாலத்தில் அருவியில் தலையைக் கொடுத்ததும் உடம்பு முழுவதும் சிலிர்த்து குளிர்பாயும்..அதே பொலத்தான்.. ஒரே ஒரு வித்தியாசம்..அங்கு அருவியிலிருந்து தலையை எடுத்துவிட்டால் குளிர் குறைய ஆரம்பிக்கும்..இங்கு இருபத்து நலுமணி நேரமும் எலும்பிற்குள் பாயும் குளிர் ...."

பங்கிற்கு வெளியே பூட்ஸ் கால்கள் உரசும் சத்தம்.இருவரும்வேளியே வந்தார்கள்.காப்டன் வர்மாகைதேர்ந்த குதிரையை தடவிக் கொடுப்பதைப்போல தடவிக் கொண்டிருந்தார்.இருந்த இடத்திலிருந்து 40கி,மீ.தூரம் குண்டுகளை வீசும் திறன்.மூன்று குன்றுகளைத் தாண்டி எதிரிகள் இருக்கிறார்கள்,அவர்களுடைய பீரங்கி பிரிட்டிஷ் காரனுடையது.25 கி.மீ பாயும்.
" ... எங்களிடம் வலுவன பீரங்கி உள்ளது.பொபர்ஸ் பீரங்கி..செங்கோட்டையிலிருந்து வீசினால் திருநெல்வெலி கொக்கிரகுளம் தகர்ந்துவிடும். அவ்வளவு வலுவானது .அதனால் பயப்பட வேண்டாம்..."


வெளியில் பால் நிலா ரம்யமாக இருந்தது.கந்தசாமி சிகரெட்டைப் பத்தவைத்துக்கொண்டு பங்கர் ஹோல் மூலமாக சிகரட் நுனியை மறத்துக் கொண்டு பார்த்தான் .எதிரிகள் இருக்கும் மலையில் மூன்று பகுதிகளையும் காவல் காக்கிறார்கள்.உச்சியில்இருப்பவர்களை நெருங்கி விரட்ட வேண்டும்.விரட்டமுடியது.அவனிடம் அதிநவீனமான சிறிய ஆயுதங்கள் உள்ளன.அவன் அவற்றை வீணாக்க வேண்டும்.அதற்கு மேலும் ஆயுதங்கள் வருவது தடுக்கப்பட்டு வருகிறது .

மலைகளின் நான்காவது பகுதிசெங்குத்தான பாறைகளைக் கொண்டது.அதன் மூலம் நமது வீரர்கள் ஏறுகிறார்கள்.சிறு சிறு குழுக்களாக..ஆறுஅல்லதுஎட்டுபெர்கொண்டகுழுக்களாக ...கந்தசாமிக்கு மகள் இந்திரா நினைவு வந்தது ...
."..அம்மா இந்திராவை உன் மருமகள் புஷ்பா மருத்துவக் கல்லூரியில் சேர்க்க ஆசைப்படுகிறாள்.நம்மால் முடியுமா? இடம் கிடைக்காது.தவிர பணம்கட்ட முடியுமா? அதனால் அவளை பி.எஸ் ஸியில் சேர்த்துவிடு.நான் தனியாக புஷ்பாவுக்கு எழுதுகிறேன் .அம்பை நகராட்சி உறுப்பினர் ஒருவரை ஆம்பூர் மச்சானுக்கு தெரியும்.அவர் மூலமாக கல்லூரியில் இடத்துக்கு ஏற்பாடு பண்ணு..சவத்துப் பய காசு கேப்பான்..கொடுத்துவிடு...:
மலை ஏறுபவர்கள் மீது உச்சியில் இருப்பவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள். இதில் இரண்டு நன்மைகள்.எதிரிகள் வசமுள்ள ஆயுதங்கள் குறையும்.தாக்குதலையும் மீறி நம் வீரர்கள் உச்சியை அடந்துவிட்டால் லாபம்.இடையே ஏறும் வீரர்கள் தாக்குதலில் உயிரிழந்தால்.. இது ராணுவம் ..நடப்பது யுத்தம்...எதிரிகளிடம் ஆயுதம் குறைந்து வருகிறது என்பது புலப்படுகிறது. ஏறி வருபவர்களை கொல்ல பெரும் பாறைகளை நம் வீரர்கள் மீது உருட்டி விடுகிறார்கள் .கந்தசாமி மீண்டும் தொடருகிறான் .

"... பொட்டல் புதூர் தாவூது ஞாபகம் இருக்கா அம்மா .. நான் பங்களுரில இருக்கும் போது உனக்கு கட்டில் கொடுத்துவிட்டேனே...அவன் போயிட்டான்..."

எதிரிகள் தங்கியிருக்கும் மலை உச்சிக்கு நேர் கீழே தாவூது பதுங்கி யிருந்தான்.நம் வீரர்கள் மலையில் ஏறும்போது நாற்பது கி .மீ. தள்ளி யிருக்கும் வர்மாவுக்கு தகவல்கொடுப்பான்.அவர்கள் ஏறி பாதுகாப்பான பாறைகளுக்கு பின்னால் சென்றதும் பீரங்கி படைக்கு தகவல் கொடுப்பான்.பீரங்கி மலை உச்சியில் உள்ள எதிரிகளைத்தாக்கும்.பீரங்கியால் நம் வீரர்களைப் பார்க்கமுடியாது.நம் வீரர்களால் பீரங்கிபடையை பார்க்க முடியாது.இருவருக்குமிடையே உள்ள இடைவெளியை இட்டு நிரப்பியவன் தாவூது.அவனை கண்டுகொண்ட எதிரிகள் வீசிய பீரங்கிக் குண்டு அவனை ரத்தம்,சதை,எலும்பு என்று பிய்த்து எறிந்துவிட்டது.
கந்தசாமி குளிருக்காக் காலை ஸ்லீப்பிங்க் பாக் கிற்குள் நுழைத்துக் கொண்டான். கடிதம் தொடர்ந்தது

. "...காமராஜை தீர்தபதி ஹைஸ்கூல்ல சேர்த்துடு...புஷ்பா அவனை கான்வெண்ட்ல இங்கிலீஷ் மீடியத்துல சேக்கணம்னு நினைக்கிறா...பெரிய செலவு...அவளுக்கு அப்பர் தெரு சம்முகக்கனி மகனோடு பொட்டி போடணும் ...சம்முகக் கனி இரும்புக்கடை வச்சிருக்கான்.லட்சம்லட்சமா சம்பாதிக்கிறான்...லட்சம்லட்சமா நன்கொடை கொடுக்கவும் முடியும்.நான் திருவனந்தபுரத்திலேருந்து இங்க வந்ததும் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது.குளிரு அதிகம்தான்.பத்தாயிரம் பதினைந்தாயிரம் அடி உயரம்தான்.ஆனா சும்மாவா இதுக்காகவே மாதம் 120 ரூ கொடுக்கான்...சண்டை சீக்கிரமாமுடிஞ் சுடும்னு தோணுது... அது நல்லதுதான்..ஆனா நமக்குதான் கஷ்டம்...கீழ இற்ங்கிபுட்டா ..120 ரூ வெட்டிடுவான்..சண்டை முடிஞ்சதும் லீவு தருவாங்க....உன்னையும் ...குழந்தைகளையும் பார்க்க வருவேன்..".புஷ்பா தினம் சின்னச்சங்கரன் கோவிலுக்கு எனக்காக போறாளாம்...எழுதியிருந்தா...அவள பயப்படாம இருக்கச்சொல்லு ...கொவிலுக்குப் போற பாதை ஒரே புதரும் முள்ளுமா இருக்கப்போவுது.பூச்சி பட்டை இருக்கும்...அதுதான் எனக்கு பயமா இருக்கு...வெளிச்சத்திலேயே போய் வரட்டும்...மத்தப்படி என்னை பத்தி கவலைபட வேண்டாம் .....""

கந்தசாமியின் கடிதம் ஆர்மி பொஸ்டாபிஸில் சேர்க்கப்பட்டது.
அம்பசமுத்திரதிலுள்ள கந்தசாமியின் அம்ம சண்முகவடிவுக்கு "தந்தி"வந்தது. கடிதம் வரும்..

(கார்கில் போர் முடிந்ததும் செம்மலரில் பிரசுரமான கதை)



.

Monday, April 21, 2014

ஒரு ஓட்டுக்கு 1,000 /- ரூ .....!!!




ஒரு ஒட்டுக்கு ரூ 1,000 /- !!!
ராமகுரு நடந்து ராமானுஜம் வீட்டிற்கு சென்றார் ! "உம்ம வீட்ல எத்தன ஓட்டுயா ?" ராமனுஜத்திடம் ராமகுரு கேட்டர் !
"நாலு ஒட்டு "
"ஓட்டுக்கு 1,000 ரூ "
"சரி "
"ம்.ம். ஒருகாரியம் பண்றேன் "
"என்ன ?"
"ரவுண்டா ஐஞ்சாக்கிடறேன் "
"சரி "
"இந்தாரும் ..5,000 க்கான ரசீது "
ராமானுஜம் 5000 ரூ நன்கொடையை தென்காசி சி.பி.ஐ வேட்பாளர் நிதிக்கு கொடுத்தார் !
ராம குரு நெல்ல நகரத்தின் பிரபலமான டாக்டர் ! முற்போக்கு சிந்தனயாளர் !
ராமானுஜம் நெல்லை நகரத்தின் முக்கிய மான மன நல மருத்துவர் ! மருத்துவ கல்லுரியின் பெராசிரியர் ! முற்போக்காளர் !
Like ·  · Share

Sunday, April 20, 2014

குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு .....!!!


தமிழ்நாட்டில் இருக்கும் "டாஸ் மாக் " கடைகளையும் ,குஜராத
 மாநிலத்தில்மது விலக்கு அமல்படுத்தப்படுவதையும் ஒப்பிட்டு முகனூலில் எழுதுகிறார்கள் !

கூகிளுக்கு சென்று "குஜராத்  மதுவிலக்கு "என்று அடித்தால் தகவல்கள் கொட்டும் !

1946 ஆ 48ஆ என்று நினைவில்லை ! நான் முனிசிபல் பள்ளியில்படித்துக் கொண்டிருந்தேன் !

"மது அரக்கன்  ஒழிந்தான் " என்று கோஷம் போட்டுக்கொண்டு நாங்கள்  நெல்லையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு விழாவில்கலந்து கொண்ட நினைவு  தட்டுகிறது !

சின்ன வயதில் எங்கள் "மாரி  நாடார்" தோப்பில்  நெஞ்சில் தோல் மூடி போட்டுக்கொண்டு கள் இறக்குவதை பயத்தோடு தூரத்தில் நின்று கொண்டு பார்த்திருக்கிறேன் ! 

பெரியவர்கள் நாங்கள் பார்கக்கூடாது என்று விரட்டி விடுவார்கள் !

 "காந்திக்கு ஜே " என்று கூவிக்கொண்டெ காந்திகுல்லாய் போட்ட பெரியவர்கள் போலீஸ்  அடியை வாங்கிக் கொண்டு மறியல் செய்ததையும் பார்த்திருக்கிறேன் !

எங்கள் தலைமுறைக்கு "தண்ணி " போடுவது என்பது என்னவென்றே தெரியாது !

1970மாண்டு ஆகஸ்டு 31ம் தேதி கருணாநிதி தமிழகத்தில் மதுவிலக்கு ரத்து செய்தார் !

ராஜாஜி போன்ற தலவர்கள் எவ்வளவோ வேண்டியும் கருணாநிதி கேட்கவில்லை !

இன்று பொதையோடு தள்ளாடும் பள்ளி மாணவர்களைக் கூட பார்க்க முடிகிறது !

மறந்த நடிகர் என்.எஸ் .கிருஷ்ணன் மதுவிலக்கு பிரச்சாரம் செய்த காட்சிகள் திரைப்படங்களில் வந்ததுண்டு !

மது விலக்கு தேவையா என்ற விவாதம் நடந்ததுண்டு !

மது விலக்கை ரத்து செய்ய வேண்டும் என்று "போலீஸ் கண்ணன் " என்பவர் போராட்டம் நடத்தியதுமுண்டு !  

பொருளாதார ரீதியாக மதுவிலக்கை ரத்து செய்வது சரிதான் என்று சொன்னவர்கள் உண்டு ! இந்த கருத்து  பின்னாளில் எனக்கு சரியாகப் பட்டதும் உண்டு !

இன்று நிலைமை அப்படி இல்ல !

சுய நலத்திற்காகவும்,அரசியல் காரணங்களுக்காகவும் , அரசின் easy money approach க்காகவும் மது பயன்படுத்தப்படுகிறது !

வட நாட்டில் குறிப்பாக ம.பி,மகாடாஷ்டிரா ,உபி, மாநிலங்களில் sugar loby என்று உண்டு !

சர்க்கரை ஆலை முதலாளிகள் ! அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் ! இவர்கள்கரும்பு விலையிலிருந்து ,அரவையிலிருந்து , விவசாயிகளை வஞ்சித்து கொள்ளையடிப்பவர்கள் ! காங்கிரஸ் ,பாஜக என்று குறுக்குசால் ஓட்டுபவர்கள் ! 

கரும்பு ஆலைகளின் கழிவுப் பொருள் தான் சாராயத்திற்கு கச்சாப் பொருள் !

பாஜக தலைவர் நிதின் கட்காரி ஒரு சாராய ஆலைக்கு சொந்தக்காரர் ! பூர்த்தி என்ற குழுமத்தின் தலைவர் ! இவரைப்போன்ற ஆலை முதலாளிகள் எல்லாகட்சிகளிலும் உள்ளனர் ! இவர்கள் தான் மதுவிலக்கு வேண்டுமா வேண்டாமா என்று தீர்மானிப்பவர்கள் !

காந்தி பிறந்த மாநிலமென்ற ஒரே காரணத்திற்காக மூச்சைப் பிடித்துக் கொண்டு குஜ ராத்தில் மதுவிலக்கு பேருக்கு   இருக்கிறது !

அரசாங்கத்திற்கு வரவேண்டிய 4000 கோடி ஆண்டு வருமானம் போலிஸ் காரர்களுக்கு லஞ்சமாக் போகிறது ! அவர்கள் மதுவிலக்கு வேண்டும் என்கிறார்கள் !

குஜராத்தில் உள்ள சுற்றுலாத்துறையினர் மதுவிலக்கைரத்து செய்ய வேண்டும் என்கிறார்கள் ! இதில் முக்கியமானவர்   நரேந்திர சிங் ராதர் என்பவர் ! இவருக்கு துணையாக தினேஷ் இந்து ஜா இருக்கிறார் !

குஜராத்தில் 60க்கும் மேற்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலமுள்ளது ! இவைகளில் மதுவிலக்கு அமல்படுத்தப்படவில்லை !

கள்ளச்சாராய்மென்பது குஜராத்தின் சிறப்பு ! மகாராஷ்டிரா,ம.பி,உபி மாநில sugar loby யின் கை ஓங்கி உள்ளது !

"சபர் மதி ஆசிரமத்தில்மட்டும் குடிக்கக்கூடாது " என்ற நிலையில் மதுவிலக்கு அமல் படுத்தப்படும் காலம் வெகு தூரத்திலில்லை என்றே படுகிறது !














































 



















Friday, April 18, 2014

வளர்ச்சியின் நாயகன் அல்ல மோடி !

அழிவின் நாயகன் ....!!

உமா பாரதி வர்ணனை .!


ஒருபக்கம் வடநாட்டில் மோடி பிரச்சாரம் நடக்கிறது !

பின்னாலேயே காங்கிரஸ் ஒரு சில ஒலிப்பேழைகளை  வினியோகித்து வருகிறது !

உமா பாரதி பாரதிய ஜனதா கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவர் ! 

மோடியை "விகாஸ் புருஷ் "( வளர்ச்சியின் நாயகன் ) என்று பா.ஜ.க.வினர் கூறி வந்தார்கள் !

உமா பாரதியோ மோடி "வினாஸ் புருஷ் " ( அழிவின் நாயகன் ) என்று வர்ணித்தார் !

இந்த cd யைத்தான் காங்கிரசார் ஒளி பரப்பி வருகிறார்கள் !

இதோடு அவர்களுக்கு இன்னோரு cd யும்  கிடைத்துள்ளது !

"சல்வார் கமீஜ் " ஆடையில் பெண்கள் கூட்டத்தில் புகுந்து தப்பி  ஓடின சாமியார் ராமதேவ் பாஜகவின் வேட்பாளர் தேர்வில் பங்கு பெற்றார் !

அவருக்கு வேண்டிய சாமியார் பெயர் " மகான் சந்த்நாத் " ! அவருக்கு "ஆல்வர்" தொகுதியில் பெட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று வாங்கினார் ! 

தேர்தல் சிலவுக்கு பா.ஜ,க கொடுக்கும் என்று கூறியுள்ளார் !

"மகான் சந்த்நாத் " பா.ஜ .க விடமிருந்து பணம் வராத நிலையில் கையை பிசைந்து கொண்டு ராம தேவிடம் ஓடினார் !

நல்ல காலம் ! ஜெய்பூரில் ராமதேவ் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டு இருந்தார் !

அங்கு ஓடிச் சென்று " பா.ஜ.க விடமிருந்து பணம் வரவில்லை ! என்ன செய்வது என்று புலம்பி யுள்ளார் !

"முட்டாளே ! இவ்வளவு "மைக்" இருக்கு ! இங்க வந்து புலம்புகிறாயே !" என்று கோபத்தில் கத்தியிருக்கிறார் !

பாவம் ! அதுவும் சேர்ந்து பதிவாகி விட்டது ! 

ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கேலாட் சும்மா இருப்பாரா ! 

ஊர் பூரா இந்த சாமியார்களுக்கு பா.ஜ.க பணம் கொடுக்கும் விஷயத்தை ஒளிபரப்பி வருகிறார்  !










Thursday, April 17, 2014

ஆட்சிக்கு வராத போதே .......!!!


"செம்மலர் "பத்திரிகையில்   நான் எழுதிய கதை களை மொழிபெயர்ப்பாளர் முத்து மீனாட்சி அவர்கள் அவ்வப்போது இந்தியிலும்,சம்ஸ்கிருதத்திலும் மொழி பெயர்க்க அவை பத்திரிகைகளில்   வெளிவந்தன !

இந்தியில் அதன ஒரு தொகுப்பாக கொண்டுவர விரும்பினேன் ! பதிப்பகத்தை நாடினேன் ! கிட்டத்தட்ட பதினெட்டு கதைகளை தொகுப்பாக்கினேன் ! 

புத்தகம் வெளியிடும் முன்பாக மதிப்பிற்குறிய "சீத்தாரம் எச்சூரி " அவர்களிடம் முன்னுரை வாங்க ஆசைப்பட்டேன் ! தோழர் கே. வரதராஜன் அவர்கள் உற்சாகப்படுத்தி வாங்கித்தந்தார்கள் !

மிக்க  மகிழ்ச்சியோடு முன்னுரையும் அச்சாகியது !

பதிப்பக த்திலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்கள் ! 

தொகுப்பில் புராண மறுவாசிப்பு கதைகளும் இருந்தன ! குறிப்பாக திரௌபதி கர்ணன் மீது ஆசை கொண்டதும்  அதன அவள் யமதூதனிடம் ஒப்புக்கொள்வதும் அதனால் அவள் சொர்க்கத்திற்குள் அனுமதிக்கப்படாமல் பேயாக அலைவதும் கதையின் மையப்புள்ளீயாகும் !

பதிப்பகத்திற்கு வந்திருந்த எழுத்தாளர் ஒருவர் புத்தகத்தின் rough copy ஏய் படித்துவிட்டு பதிபகத்தாரிடம் " ஏன்யா ! இந்த ஊருல இந்த புத்தகத்தை வெளியிடுகிறாயே ! உன் அச்சகம், ஷோ ரூம் அத்தனையையும் அடிச்சு நொறுக்கி விடுவானுக " என்றுகூறியிருக்கிறார் !

பயந்து போன பதிப்பாளர் , "அந்த கதையை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக வேறுகதை தாருங்கள் ! சேர்த்து விடுகிறேன் "என்றார் !

பதிப்பாளரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த விருப்பமில்லை !

அதேசமயம் என் மதிப்பிற்குறிய எச்சூரி அவர்கள்முன்னுரை எழுதிய பிறகு அதனை மாற்ற மனமில்லை !

இறுதியில் ஒரு ஏற்பாட்டிற்கு இருவரும்  உடன் பட்டோம் 

"இந்த தொகுப்பினால் வரும் எல்லாவித மான சர்ச்சைக்கும மூல எழுத்தாளரான காஸ்யபன் அவர்களே  பொறுப்பு " என்று எழுதிக் கொடுத்தேன் 

இது புத்தகத்தில் Disclaimer ஆக அச்சடிக்கப்பட்டு 2007ம் ஆண்டு வெளிவந்தது ! 
 
பாவம் ! இவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால், 
ஜோ ,பத்ரி,குருஸ் என்ன செய்யப்ப் போகிறார்களோ  !!!












Saturday, April 12, 2014

காய்ந்த இலையை கங்கையில் முக்கினால் 

பச்சை இலை யாகுமா .......?


ஜெஷோதாவைப் பற்றி நாம் கேட்டால்  மோடியின் நிலைமையை விளக்குகிறார்கள் !

பால்ய விவாகம்,தாம்பத்திய உறவு,தியாகம் என்று பேசுகிறார்கள் !

நீங்கள் மதுரை  மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போயிருக்கிறீர்களா  ?

அங்கே அம்மன் கொடிமரத்தின் அருகே நின்றுகொண்டு ,இருகைகளையும் நீட்டி "தாயே மீனாட்சி " என்று நெக்குருக வேண்டும்  தாய்மார்களை  பார்த்திருக்கிறீர்கள ?

தலிக்குத்தங்கமும்,காது மூக்குக்கு தங்கமும் போடமுடியாமல் வயது முதிர்ந்த தன்  மகளை  கரையேற்ற முடியாமல் உருகும் தாயைப் பார்த்திருக்கிறிகளா !

வீடுகளில் வேலை செய்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் கடனை வாங்கி மகளை கரயேற்றும் தாயை பார்த்திருக்கிறீகளா ?

திருமணமாகி முன்றே ஆண்டுகளில் விதவையாகி கையில் குழந்தயோடு திரும்பியமகளை பார்த்து  தாயும் தந்தையும் படும் வேதனையை அனுபவித்திருக்கிறீர்களா ?

தனக்குப் பிறகு இவளுக்கு யார் பாதுகாப்பு ? என்ற அவ்ர்களின் வலி தெரியுமா ?

"விதவை தரிசு நிலம் என்று பகலில் கூறிவிட்டு இரவில் பள்ளியறைக்கு  அழைக்கும்" சாமியார்கள் உள்ள பூமியில் அவர்கள்வேதனை  புரியுமா ?

பதினைந்து வயதில் திருமணமாகி  பதினைந்தே நட்களில் கணவனால் கைவிடப்பட்ட  ஜெஷிதா வின் தந்தையும் தாயும் பட்ட வேதனை ?

மாலை ஐந்து மணி யானால் ஜோஷிதா இன்னும் வரவில்லையா ?என்று அவ்ள் தாயும்,தந்தையும் புலம்பியிருப்பார்களே ! அதன் பின்னால் இருக்கும் சோகம்  தெரியுமா ?

ஜோஷிதாவுக்கு மறுமணம் செய்வதா வேண்டாமா என்று எத்தனை இரவுகள் தூங்காமல் இருந்திருப்பார்கள் ?

அந்தக்குடும்பத்தில், ஜோஷிதாவின் தந்தை,சகோதரர்கள், சக மனிதர்கள் அத்துணை பெரும் என்ன பாடு பட்டிருப்பார்கள் !

காய்ந்த சருகாகிவிட்ட தாயே ! உனக்கு என் வந்தனங்கள் !

ஆனால் ! உன் கணவனை நான் மன்னிக்க மாட்டேன் !!








































































































Thursday, April 10, 2014

ஜெஷோதா என்ற அபலையின் கண்ணீரை 

வாக்குகளாக்கும் கொடூரம் .......!!!


அந்தச் சிறுமிக்கு பதினைந்து வயதில் திருமணமாயிற்று ! அவள் கணவன் பதினான்கு நாட்கள் அவளோடு வாழ்ந்தான் ! பதினைந்தாம் நாள் அவளைவிட்டு பிரிந்தான் ! திரும்பிக்கூட பார்க்கவில்லை ! நாற்பத்தி ஆறு வருடங்கள் ஓடிவிட்டன ! இப்போது அவனுக்கு அவள் நினவு தட்டியுள்ளது ! அவள்தான் என் மனைவி என்று சொந்தம் கொண்டாட ஆரம்பித்துள்ளான் !

அந்தச் சிறுமியின் பெயர் ஜெஷோதா ! அவள் கணவனின் பெயர்  
 "ந். ந். நரேந்திர மோடி "!

பாவம் ! அந்த அபலைப் பெண் தந்தை வீட்டிற்கு சென்றாள் ! படித்தாள் !  பள்ளி ஆசிரியையாக பணியாற்றினாள் ! ஒய்வு பெற்று மாதம் 14000ரூ பென்ஷனில் வாழ்கிறாள் ! 

அவள் கணவன் மோடி! மக்கள் சேவைக்கு செல்வதாக கூறி ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தில் சேர்ந்தான் ! குஜராத் மாநில முதலமைசராக ஆனான் ! உலகத்திற்கு தான் ஒருபிரம்மசாரி என்று கூறிக்கொண்டான் !

உலக  பத்திரிகைகள் இந்தியாவில் நடக்கும் தேர்தல் மோடி-ராகுல் என்ற இரண்டு பிரம்மசாரிகளுக்கு இடையே நடக்கும் தேர்தல் என்று வர்ணிக்கின்றன !

ஒரு சின்னஞ்சிறு பெண்ணீன் வாழ்க்கையை கெடுத்தவன் என்று உங்களுக்கு கோபம் வரலாம் !

ஆனால் அதையும்வாக்குகளாக மாற்றும் தந்திரம் மோடிக்கும் அவர் ஆதரவாளர்களுக்கும் உண்டு !

இந்தி ,மராத்தி ,குஜராத்தி பத்திரிகைகள் இதை எப்படி எழுதுகின்றன தெரியுமா?

என்ன இருந்தாலும் ஜெஷோதா "இந்து" பெண் ! 

அவள் கணவன் முதலமைச்சராக வேண்டும் என்று காலில் செருப்பணியாமல் விரதம் இருந்தாள் !

"எனக்கு இனி என்ன வேண்டும் ! அவர் என்னை  மனைவி என்று அங்கீகரித்தால் போதும்" என்று ஜெஷோத தன்னிடம்கூறியதாக அவருடைய சிநேகிதிகுறிப்பிட்டாராம் ! கார்ப்ரேட் பத்திரிகைகள் எழுதுகின்றான !

"ஜெஷோதா இப்போதெல்லம் "அரிசி" சோறு சாப்பிடுவதில்லையாம்! தினம் ஒருவேளை  தான் சாப்பிடுகிறாராம் ! தன கணவன் பிரதமராக வேண்டும் என்பது தான் அவருடைய விரதத்திற்கு காரணமாம் " 

"உற்ற தோழிகளுடன் தீர்த்தயாத்திரை போயிருக்கிறார் கணவனுக்காக!"
  பத்திரிகைகள் எழுதுகின்றன! 

பா.ஜ.க என்பது ஒரு அரசியல் கட்சி அல்ல !

ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க எதை வேண்டுமானாலும் செய்யும் கொடுர புத்தி கொண்டவர்களின் கூடாரம் !!!





























































 










































Wednesday, April 09, 2014

யார்  அந்த "சவுரப் படேல் " .....?  


"யோக்கியன் வரான் ! சோம்பை  தூக்கி  உள்ளெ வை "  என்று கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு !

செல்வாக்கு மிக்க "மொள்ளமாரி"யை  பகைத்துக் கொள்ள மாட்டார்கள் ! அதே சமயம் அவன் "மொள்ளமாரி " என்பதை நாசூக்காக உணர்த்தி விடுவார்கள் !

தீரு பாய் அம்பானி என்ற தொழிலதிபர் மறைந்து விட்டார் ! அவர் ஆரம்ப காலத்தில் பெற்றோல் பங்கில் பெற்றோல் ஊ த்தும் பணியாளாக இருந்தார் !

இன்று இந்தியாவின் முக்கியமான பெற்றோல் கம்பெனிகளில் ஒன்று அம்பானியின் "ரிலையன்ஸ்" நிறுவனம் ! 

இவர் எப்படி இவ்வளவு பெரிய தொழில் அதிபரானார் ?

நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக்கூடாது என்பார்கள் !

பிரும்மாண்டமான நதி அது பிறக்குமிடத்தில்பார்த்தால் ஒரு கற்பாறையின் இடுக்கிலிருந்து சிறு தாரையாக நீர் வழியும் காட்சி தான் தெரியும் !

காட்டில் பயணம் செய்யும் பயணிகளை கொள்ள அடித்தவன் தான் மகிரிஷி வால்மீகி யானான் !

அழுக்கான யமுனை சேர்ந்த பிறகு  கங்கை "திரிவேணி " யாகிறது !

மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் , விநதிய காடுகளில் கஞ்சா பயிரிட்டு அதை வெளிநாடுகளுக்கு அனுப்ப ஏற்பட்டதுதான் பம்பாய் துறைமுகம் !

அந்த கஞ்சா வை விற்ற வியாபாரிகள் தான் இன்றைய இந்திய தொழிலதிபர்கள் !
பிறன் மனைவியரை மோகித்து , வேசியரோடு இருந்தவர்தான் "அருணகிரி நாதர் !

சரி ! இருக்கட்டும் !

தீரு பாய் அம்பானிக்கு மூத்த சகோதரர் ஒருவர் உண்டு !

R .H . அம்பானிஎன்று பெயர் .!

அவ்ருடையசெல்லமகள் தான் "இலா" !

இலாவுக்கு திருமணம் ஆனது !

அவர்கணவர் பெயர் "சவுரவ் படேல் "

இவர் நரேந்திர மோடி அமைச்சரவியில் இருக்கிறார !

மாநில பெற்றொலியதுறை அமைச்சராக இருக்கிறார் !

இந்த  அர்வுந் கேசரிவால் ஒருகூட்டத்தில் சவுரவ் படேல்  அம்பானிக்கு உறவினர்  என்று கூறிவிட்டார் !

கொதித்து எழுந்த ப.ஜ.க  தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்பியது !

தேர்தல் கமிஷன் உடனடியாக சவுரவ் படேலுக்கு இது உண்மையா என்று கேட்டு கடிதம் எழுதியது !

"திருமணம் செய்து கொண்ட வகையில் அம்பானி எனக்கு உறவு தான் " என்று சவுரவ் எழுதியுள்ளார் !

மோடி பிரதமரானால் ...! 

இந்திய முதலாளிகள் உறவினர்களுக்கு 

வேலை கிடைக்கும் -அமைச்சர்களாக !!!











Monday, April 07, 2014


தாய்தான்

சிறு கதை



தாய்தான் (காஸ்யபன்)








(இளம் கிரிகெட் வீரர் மஹேந்திர சிங் தோனி தலைமையில் இந்தியா தோற்றபோது அவர் அவமனப்ப்டுத்த்ப்பட்டார் கட்டிக்கொண்டிருந்த வீடு செதப்படுத்தப்பட்டது.தன்னந்தனியாக இருந்த. அவர் தாய்தந்தயர் அச்சுருத்தப்பட்டனர்.அவருடைய சகொதரி மிரட்டப்பட்டார். 2007ம் ஆண்டு .தென் ஆப்பிரிக்காவில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த இறுதிபோட்டியில் இந்தியா வென்று உலகக்கோப்பையைக் கைப்பற்றியது இனி கதையைப் படியுங்கள்)






காம்பவுண்ட் கதவு பூட்டியிருந்தது.கோபக்காரப் போலீஸ்காரர் நின்று கொண்டிருந்தார்.


அவர்கள் வயதானதம்பதியர்.அவ்வப்பொது யாராவது வந்து கதவைத் தட்டினார்கள்."தேவை இல்லமல் அவர்களை ஏன் சிரமப்படுத்துகிறீகள்" என்ரு கூறி போலீஸ்காரர் அவர்களை அனுப்பிவிடுவார்.


அந்த அம்மாள் வெளியில் தலையைக்காட்டவில்லை.. ஜன்னல் கதவைக் கூட சாத்திவிட்டு உள்ளேதான் இருந்தார். 


மணி மூன்றாகிவிட்டது.


"சூடாக தேநீர் தரட்டுமா?" என்றார் அம்மையார்.


"சரி"


" கொரிக்க ஏதாவது? "


நம்கீனையும் பொரியையும் கலந்து அதில் எலிமிச்சைச்சாறை பிழிந்து ஒரு தட்டில் கோண்டுவந்தார். பெரியவர் அதனை ஸ்பூனால் எடுத்து சாப்பிட ஆரம்பித்தார்.


மகனின் கொடும்பாவியை எரித்த நினைவு தட்டியது தொலைக்காட்சியில்,பத்திரிகைகளில் பார்த்தபோது பயமாக இருந்தது புதிதாக .கட்டப்படும் வீட்டையே இடிக்க வந்தார்களே.....


அன்று அவர்கள் முகத்தில் எவ்வளவு கொடூரம்-எவ்வளவு ஆவேசம்.எதிரில் உள்ளது எதுவானாலும்-உள்ளதுயாரானாலும் அழித்துவிடும் கொடூரம்.வாசலில் கதவு தட்டும் ஒசை கேட்டது. மாப்பிளை தான் வந்தர்.


"மணி நான காகிவிட்டது.நீங்கள் தனியாக இருப்பீர்களேஎன்றுதான் வந்தேன்" என்றார் மாப்பிள்ளை குப்தா.


"ஜெயந்தி எப்படியிருக்கா?"


"உணர்ச்சிப்பிழம்பாக இருக்கா"


"ஏன்?" 


"நீங்க தனியாக இருப்பதால்" 


ஜெயந்தியும் குப்தாவும் ராஞ்சியில் இல்லை.எண்பது மைல் தள்ளி வெளியூரில் இருக்கிறார்கள்."நான் இங்கு குழந்தகளோடுஇருக்கிறேன்.நீங்கள் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் துணையாகப் போய் இருங்கள்.என்று என்னை அனுப்பிவைத்தாள்".குப்தா கைகால் கழுவிக்கொண்டு வந்தான்.மாமியார் கொடுத்த தேநீரை அருந்திக்கொண்டே தொலைக்காட்சிப்பெட்டியைப் போட்டான்.ஆரம்பமாகப் பொகிறது.


இந்தியா "டாஸ்" வென்று ஆட ஆரம்பித்தது.


முதல் பந்தை எதிர் கொண்டது உத்தப்பாதான்.சில கணங்கள் தாமதிக்க பந்து எறியப்பட மட்டையோடு பாய்ந்து தன்னையே வீசினார்மைதானமே அதிர்ந்தது.


குப்தாவின் மாமனாரும் மாமியாரும் நெஞ்சைப்பிடித்துக்க் கொண்டார்கள்.எதிரணி வீரர்கள் கட்டிப்பிடித்து மைதானத்திலேயே கொண்டாடினர்கள்.


பிரும்மாண்டமான திரையில் அவுட் இல்லை என்று வந்ததும் மீண்டும் கரகோஷம்.


மணி எட்டேமுக்கால்.வீட்டு வாசலில் கோஷம் போடுகிறார்கள்.தெரு க்களில்,வீதிகளில் கிராமங்களில்,நகரங்களில்,மும்பை,டில்லி, சென்னயில் கோண்டாட்டம்.இந்தியா வெற்றி பெற்றுவிட்டது.


குப்தா கதவத்திறந்தார்.தம்பதியர் இருவரும் வாசலுக்கு வந்தனர்


பெரியவர் குளமான கண்களைத்துடைத்துக்கொண்டு ரசிகர்களுக்கு கை காட்டினார்.


அம்மையார் வெகுநேரம் வரை விம்மிவிம்மி அழுதுகொண்டிருந்தார்." தோனிதான் ஜெயிச்சுட்டானே.ஏண் அழறே" என்றார் பெரியவர்.


"மாமா! அத்தை கண்ணில் வருவது ஆனந்தக்கண்ணீர்" என்றார் குப்தா.


"இல்லை!பாகிஸ்தான் காப்டன் ஷொயிப் மாலிக்கின் தயாரை நினைத்து அழுகிறேன்"என்றார் அந்த அம்மையார்.




( 14-10-2007 வன்னக்கதிரில் பிரசுரமான சிறுகதை)

    



கண்கள் பனிக்க கையெடுத்து கும்பிடுகிறென்  "தோழர்களே  !!!


"முதன் முறையாக என் கட்சி தோழருக்கு நான் வாக்களிக்கப் பொகிறேன் !" என்று புளகாங்கிதமடைகிறார் விருது நகர் தோழர் !


வட சென்னையில் வாசுகி சென்ற பகுதியில் மக்களின் உற்சாகம் மெய் சிலிர்க்க வைக்கிறது !


தலித் மக்கள் கோவில் நுழைவுப் பொராட்டத்தில் முன் நின்ற ஆனந்தனை கையெடுத்து கும்பிடுகின்றனர் தாழ்த்தப்பட்ட மக்கள் !


வயது முதிர்ந்த அம்மையார் அவர் !  மூன்று மாதமாக முதியொர் உதவித்   தொகை வரவில்லை !  

இருந்தாலும் முன் எச்சரிக்கையாக நல்லது போல்லாதது  சிலவுக்காக சிறுக சிறுக சேர்த்து வைத்திருக்கிறார் ! 


தீண்டாமை ஒழிப்பு முன்னணிதலைவர் சாமுவேல் ராஜ் வாக்குக் கெட்டு வருகிறார் ! "என் வாக்கு உனக்குத்தன் ! இந்தா ! செலவுக்கு வச்சுக்கோ ! " என்று அந்த அம்மையர் சாமுவெல் ராஜிடம் கொடுக்கிறார் ! கண்ணிர் மலக ,நா தழுதழுக்க தோழர்கள் அதன பெற்றுக் கொள்கின்றனர்!


புது வெள்ளம் பாய்கிறது !


எத்தனை நாள் ...! எத்தனை நாள் காத்திருந்தாய் ! 


இந்த வேள்விக்காக ! 


எத்தனை பொறுமை உனக்கு !


உனக்கு பிடிக்காதவர்களொடு உறவாட உத்திரவு வந்த பொதும் கலங்காமல் கடமையாற்றினாயே ! 


கண்கள் பனிக்க கையெடுத்து கும்பிடுகிறென் தோழா

Thursday, April 03, 2014

​​​​​​​​​​​​​​​ (​ப.ஜ.க வந்தால் )

கடல் மட்டுமல்ல,  கடற்கரையையும்,

நதிகளையும் விற்று விடுவார்கள் ....!!!


நெற்று பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள் ! மோடி அவர்கள் டெல்லி விமான நிலையத்தில் மூன்று  மணீ நேரம் விமானத்திற்காக காத்திருந்தாராம் ! 

ரே பெரேலி விமான தளத்தில் ஹெலிகாப்டருக்காக இரண்டு மணிநேரம் காத்திருந்தாராம் ! 

ஆரப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் டீ கடை வைத்திருக்கும் சேகர் !  டீ விற்றவர் விமானத்தில் பறக்கிறார் என்று நினைக்கிறார் ! நமோ டீ  கடை வாதிகளும் அப்படியெ நினைக்கிறார்கள் !

அவ்ர்களுக்கு தெரியாது ! நரேந்திர மோடி பறப்பது சொந்த விமானத்தில் அல்ல -"அதானி "கம்பெனியின் விமானத்தில் என்பது !

குஜராத் அரபிக் கடற்கரையில் அமைந்துள்ள மாநிலம் ! 

அதன் வழியாக ஆப்பிரிக்க,அரேபிய ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல நவீன துறைமுகம் "முந்தரா " என்ற பகுதியில் அமைக்க விரும்பினார்கள் !

அதற்காக கடல் பகுதியையும் அதுசார்ந்த கடற்கரையையும் நரேந்திர மோடி 
அதானி என்ற முதலாளிக்கு "ஈன " கிரயத்திற்கு கொடுத்தார் !

மிகவும் நவீனமான துறைமுகம் உருவானது ! குஜராத்திலிருந்து ஒரு ஆணி, வெளிநாட்டு போக வேண்டுமனாலும் அதன் வழியாகத்தான் போகவேண்டும்!  இறக்குமதியும் அப்படியெ ! 

கப்பல் வந்தால்,நின்றால்,புறப்பட்டால் அதானிக்கு காசு ! 

அண்ணே ! வீடு சொந்தமா இருக்கும் ! காரு சொந்தமா இருக்கும் ! இங்க துறைமுகமே சொந்தம் அண்ணே!

துறைமுகம்போக மீதி இடங்களில் அடுக்குமாடி கட்டிடங்கள் ! அலுவலகங்கள் ! கொள்ளை விலைக்கு விற்பனை ! இன்று இந்தியாவின் மிகப் பெரியா பணாக்காரரகளீல் "அதானி "குழுமமும் ஒன்று !

டீ கடை சேகர் விடல சைக்கிள் இருக்கும் ! வசந்த பவன் ரெட்டியார் வீட்ல ஸ்கூட்டர் இருக்கும் ! மாடர்ன் லாட்ஜ் முதலாளி வீட்ல கார் இருக்கும் !

அதானி அண்ணன் தம்பிகள்    ஒவ்வோருவருக்கும்  ஒரு சொந்த விமானம் காத்திருக்கும் !!!

பட்டா அவங்க பேர்ல ! 

புரிஞ்சா புரிஞ்சுக்கோ !

சதீஸ்கர்ல இவங்க ஆண்டாங்க ! 

நல்ல செழிப்பான பூமி ! மத்திய இந்தியாவுல விவசாயம் கொழிக்கும் பக்தி ! அங்க ஒரு நதி ! பேரு "ஷிவநாத் " ! 

அதுல ஒரு ஐம்பது அறுபது மைல் நீளத்துக்கு வித்து புட்டாங்க !

ஆமாண்ணே ! நதியை வித்துபுட்டாங்க !

யாருக்கு தெரியுமா ?

பெப்ஸி கோலாவுக்கு !

அந்த "தொரை" என்ன செஞ்சான் தெரியுமா?

சுத்தி வளச்சு வேலியை போட்டான் ! ஒருபய வரப்ப்டாதுன்னூட்டான் ! அங்க உள்ள ஆத்து தண்ணி,மீனு, அருவி அம்புட்டும் அவனுக்குதானாம் !

இப்பம் சனங்க -சொத்துக்கு மட்டும் இல்ல ​​ குடிக்கவும் கழுவவும் "சிங்கி" அடிக்காங்க !!

பாஜாக தஞசாவூருல நிக்க போறாங்களாம் ! காவிரியை வித்துருவாங்க !

மதுரைல நிப்பாங்களாம் !   மீனாட்சி தாயை காப்பத்தணும் !

கன்னியாகுமரில ! ஆத்தாடி ! விவேகானந்தர் பாறை ! திருவள்ளூவர் சிலை !

அண்ணே ! 

டீ  வேண்டாம் அண்ணே !

நீத்தண்ணியே  போரும் அண்ணே !!!