Monday, April 29, 2019


"புனை" பெயரும் ,

பிரபல எழுத்தாளர்களும் ...!!!
"கணையாழி " என்று ஒரு தமிழ் பத்திரிக்கை டெல்லியிலிருந்து வந்து கொண்டிருந்தது. பின்னர் அது சென்னைக்கு மாறியது மாதம் ஒருமுறை வந்து கொண்டிருந்த அந்த பத்திரிகை  இப்போதும் வருகிறதா  தெரியவில்லை.

அந்த பத்திரிகையில் "முஸ்தாபா " என்ற பெயரில்  மாதம் ஒரு கட்டுரை வரும் .ஆரம்ப காலத்தில் அசோகா மித்திரன் அதனை எழுதி வந்தார்  பின்னர் ஆசிரியர் கஸ்தூரிரங்கன் அதே பெயரில் எழுதி வந்தார்> அதன் பின்னர் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் அதே பெயரில் எழுதினர் .

1950 ஆண்டுகளில் "குமுதம் " பத்திரிக்கை வர ஆரம்பித்தது.தமிழ் பத்திரிக்கை உலகையே புரட்டிப்போட்ட அந்த பத்திரிக்கை ஆரம்பத்தில் மாதம் ஒன்று தான் வரும் பின்னர் அதனை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியிலும் 15ம் தேதியிலும் மாதம் இரண்டாக கொண்டு வந்தார்கள்> அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி ,10 ம் தேதி, 20 தேதி என்று மாதம் மூன்றாக்கினார்கள் .பின்னர்  ஒவ்வொரு வியாழக்கிழமையும் வரும் வாராந்தரி யாக கொண்டுவந்தார்கள்.

"அ"ண்ணாமலை, "ர"ங்கராஜன், "சு"ந்தரேசன் என்ற மூவர் தான் ஆசிரியர்களாக இருந்தார்கள் ."அரசு "  என்ற புனை பெயரில் குமுதத்தில் கேள்வி பதில் ஒருகாலத்தில் பிரபலம்.அதனை இந்த மூவரும் தான் எழுதிவந்தார்கள் .

தவிர எஸ் ஏ பி , பாக்கியம் ராமசாமி, புனிதன் என்ற பெயரிலும் இந்த மூவரும் சிறுகதைகள் தொடர்கதைகள் எழுதி வந்தனர் ஒருகாலத்தில் இந்தியாவில் மிக அதிகமான விற்பனைகொண்ட ஒரே பத்திரிகையாக திகழ்ந்தது.

ஆன்மிக வாதிகளும் புனை பெயர்களில் எழுதி வந்துள்ளனர். தென் தமிழகத்தின் பாரம்பரியமிக்க  மடாதி பதி ஒருவர் அவ்வ்ப்போது "ஆதி " என்ற புனைபெயரில் எழுதியுள்ளார். 

அவர் வேறு யாருமல்ல !

முத்தவர் !   குன்றக்குடி அடிகளார்தான் !!

"தீக்கதிரில் " மட்டுமே அவர் எழுதிவந்தார்!!!


 

Sunday, April 21, 2019
"மதுபானி" ஓவியமும் ,

அந்த மணமகளும் ....!!!
ராஜிவேணுகோபால் வீட்டிற்கு சென்றிருந்தேன். அது 2010 ஆண்டாகயிருக்கலாம் .தோழர் ராஜியின் தாயார் -தந்தை இருவருமே எனக்கு பரிச்சையா மாணவர்கள் ,ராஜி சிறுகுழந்தையாக இருந்த போதே தூக்கி வைத்து விளையாடியவன் நான்  .

அந்த சின்னஞ்சிறு குழந்தை இன்று தோழர் ராஜி. சென்னை தலைமை அலுவலக ஊழியர் சங்க பொறுப்பளர்களில் ஒருவர்".மரம் சும்மா இருந்தாலும் காற்று அதனை அசைக்கத்தான் செய்யும்."

ராஜியின் மகள் "இந்து "அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.இந்துவின் தம்பி "நந்தா " படு சுட்டி..

பாரதியின் புதுமைப்பெண் இந்து.சாதி மறுப்பு,சாமி மறுப்பு, மூட நமபிக்க்கை மறுப்பு,பெண்விடுதலை என்று தனித்து நிற்கிறாள் இந்து .பொறியியல் பட்டப்படிப்பில் ஐந்து ஆண்டுகள் படித்து, கட்டிடக்கலையில் பட்டம் பெற்றவள்.

ராஜி தம்பதியரை விட  இந்த பெண்ணின் எதிர்காலம் பற்றி அதிகம் கவலைப்பட்டவன் நான் . நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமே ! அவள் ஒரு ஆதர்சமாக எடுத்துக்காட்டாக துலங்க வேண்டுமே என்ற கவலை எனக்கு உண்டு. அடிக்கடி ராஜியையும் வேணுவையும் அழைத்து அவள் திருமணம் பற்றி விவாதிப்பேன்,நானே சில இடங்களை யோசனை கூறினேன்> அமையவில்லை.

திடீரேன்று இருநாள் வேணு தொலைபேசி மூலம் தெரிவித்தார்> இந்து விற்கு திருமணம் முடிவாகி விட்டது என்றார் . மத்திய அரசு ஊழியர் சங்கத்தில் பொறுப்பாளராக இருக்கும் சுஜாதா - கிருஷ்ணன் தம்பதியரின் புதல்வன் அஸ்வின் தான் மாப்பிள்ளை. "தாலி " கட்டிக்கொள்ள மாட்டேன் என்று கூறி வந்த இந்து 93 வயதான ஒய்வு பெற்ற துணை கலெக்டர் வரதாசசாரி தாத்தா வின் வேண்டுகோளை ஏற்று கொண்டது மனதுக்கு நிம்மதி அளித்தது. வேறு எந்த வைதிக சடங்குகள் இன்றி அற்புதமாக நடந்த இந்த திருமணத்திற்கு முத்து மீனாட்ச்சியோடு  நானும் சென்றிருந்தேன்..என் வாழ் நாளில் எனக்கு கிடைத்த அற்புத தருணம் அது

திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தாம்பூலத்திற்கு பதிலாக "இசைத்தட்டாக சுழலட்டும் இனிய வாழ்க்கை " என்ற வேணுகோபாலன் அவர்கள் எழுதிய நூல் கொடுக்கப்பட்டது.

அந்த நூலின் முகப்பு  படபடத்தை வரைந்தவர் மணமகள் இந்து.

"மதுபானி " ஓவிய வகையைச சேர்ந்தது இந்த படைப்பு.வடக்கு பீகாரின் மதுபானி கிராமமே இதற்கு புகழ் பெற்றது. இதனை மிதிலை பிராந்தியம் என்றும் கூறுவார்கள் .பிகார்-நேபாள எல்லைப்பகுதி இது .இங்குதான் ஜனகன் அரசனாக இருந்தான் என்பார்கள்> இங்கு புராணகாலத்து சீதா பிறந்ததாக நமபுகிறார்கள்.

மதுபானி  ஓவியம் வடிவியல் ( Geometric ) சார்ந்தது .வெறும்   கோடுகளால் ஆனது கோடுகளுக்கு இடப்பட்ட வெளியை சிறு சதுரம்,வட்டம், முக்கோணம என்று நிரப்புவார்கள்.அப்படி நிரப்பும் போதே அதில் ஒரு வடிவம் தோன்றும்படி அமைப்பார்கள்.உலகப்புகழ் பெற்ற இந்த ஓவியக்கலையை மதுபனி  கிராமத்து மக்கள் பாதுகாத்து வருகிறார்கள்.

இந்து என் கட்டிடக்கலையில் வேணு சேர்த்தார் என்பதற்கு எனக்கு விடை  கிடைத்தது .

ராஜி-வேணு தமப்தியருக்கு ஒரு வேண்டுகோள். நந்தா வுக்கும் திருமணம் நடக்கும். அப்போது  இந்தக் கிழவனாயும் முத்து மீனாட்சி யையும்  சக்கர நாற்காலியில் வைத்து நகர்த்தி கல்யாண  மண்டபத்தில் பார்வையாளனாக வைக்க வேண்டும் .


வாழ்த்துக்கள் "இந்து-அஸ்வின் " தமபத்தியரே !!!

Friday, April 19, 2019இந்த
சித்தர்கள் ...!!!


மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி . அதற்கு முன்னால்    ஒரு இரும்பு சுத்தியல் மூலம்  பல்லை உடைத்து விழ செய்கிறார்கள்.    இடுக்கியை கொண்டு அவன்  விரல் நகத்தை சதையோடு பிய்த்து எறிகிறார்கள் .அவன் முழங்கை ,முழங்கால் ,மூட்டுகள் கணுக்கால் இணைப்புகளை மர  சுத்தியலால் நொறுக்குகிறார்கள். அவனை தூக்கிலிடுகிறார்கள் .அவன் சடலம் வங்காள விரிகுடாவில் வீசி எறியப்படுகிறது. அவன் தான் "சூரிய சென் ".

யுகாந்தர் என்ற அமைப்பை உருவாக்கி தனி படைய நிறுவினான்> படைக்கு ஆயுதம் சேகரிக்க சிட்டகாங்கில் உள்ள ஆயுதக் கிடங்கை தாக்கினான் .அதில் பிடிபட்ட சூர்யா சென் தூக்கிலிடப்பட்டான்>சூர்யா சென்க்கு உதவியவர்கள் கணேஷ் கோஷும்,ஆனந்த் சிங் என்பவனும்.கணேஷ் கோஷ் தப்பி சந்திரநாகூரில் தலை மறைவாக இருந்தான். அவனும் கைது செய்யப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டு அந்தமான் தீவிற்கு அனுப்பப்பட்டான்.

--------------------------------------------------------------------------------------------------------------------------  

1979 மாண்டு சென்னையில் citu  வின் அகில இந்திய மாநாடு நடந்தது. 4000 க்கும் மேற்பட்ட சார்பாளர்கள் கலந்து கொண்ட பிரும்மாண்டமாநாடு. முற்றிலும் வி.பி.சிந்தன் தலைமையில் ஏற்பாடுகள் நடந்தன . அதனை cover செய்ய தீக்கதிரிலிருந்து வி.பரமேஸ்வரன் சென்றார்? அவருக்கு உதவியாக நான் சென்றேன்.

தமிழகம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் வந்திருந்தனர் ."இந்து " ராம் ஒரு தொண்டராக செயல்பட்டார். மத்திய குழு  அலுவகத்தில் பணியாற்றிய என்.ராமகிருஷ்னன் ( தோழர் சங்கரய்யாவின் தம்பி ) வந்திருந்தார் .முத்த தலைவர்களை சந்தித்து அவர்களின் பெட்டியை தீக்கதிரின் வார மலரில் போடுவது என்னுடைய நோக்கம் .ராமகிருஷ்ணனின் உதவியை நாடினேன்." ஆகா அருமையான யோசனை. வாருங்கள்.  அதோ நிற்கிறாரே அவர்தான் கணேஷ் கோஷ். சிட்டகாங் ஆய்தகிடங்கு தாக்குதலில் ஈடுபட்டவர்> அவரிடம்  வாங்குங்கள். ஆனால் லேசில் அமையாது "'என்றார் .    

விபிசி யின் உதவியை நாடினேன்.அழைத்து சென்றார்.

"com ! gosh -this is ThiLipan ! our  dailis reporter.he wants to have an interview from you!" விபிசி சென்றுவிட்டார்>


"what interview ? no ..no nathing doing !"


"com .I want to write your story in our daily. Pl help me !"


"story .. I dont have any story. iam  humble worker. no ..no.."


"our younger generation must know the past ?"


"I dont have any oaast no..no.."


"com. I know you are Ganesh the revoutionary> you are part and parcel of Cittakaong attack. . I know some thing more .Do not know how much true .If you dont give me the interview I will write what I know"...


"are you threatning Me. Iwil go to the court. "


"youwill not  com. because it is our own daily..


there was a smile in his face. and he said "All right young man> iwill give you fifteen minites . Tomorraow morninga between 9.Am to 9.15

 and he left hariedly.


எனக்கு சந்தோசம் தாங்கவில்லை> எப்பேர்ப்பட்ட மனிதர்> ஆகா .இரவு முழுவதும் அவரையே  நினைத்துக் கொண்டிருந்தேன். மறுநாள் காலை விபிசியா சந்தித்து அவர் தங்கி இருக்கும் இடத்திற்கு எப்படி போக என்று கேட்டேன்.

"என்னப்பா சொல்ற அவர் நேத்து ராத்திரியே விமானத்துல கல்கத்தா போயிட்டார் ! நேத்து intervew வாங்கலையோ ? "என்றார்..


"ஏன் தோழர் இப்படி பண்ணிட்டார் ! இவர்களின் தியாகம் நம்ம அணிகளுக்கு தெரியவேண்டாமா/?என்று வருத்தத்தோடு கேட்டேன்.


"அவர்கள் தியாகம் செய்தது நாட்டுக்காக மக்களுக்காக. interview க்காக இல்லை.அவர்கள் தான் தனது என்ற நிலையை கடந்த சித்தர்கள்." என்றார் 

விபிசி என்ற சித்தர்.

   

   

Wednesday, April 17, 2019எழுத்தாளர்கள்,

கலைஞர்கள் , 

வணிகர்கள் ,

ஆகியோருக்கு

நன்றிகள்...!!!

வணிகர்கள் சங்க தலைவர் வெள்ளையன். அவர் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். " பொதுவாக எங்கள் சங்கம் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுவது வழக்கம் இல்லை.ஆனா ல் இந்தமுறை  நாங்கள் அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்தில் வாக்களித்து மார்க்சிஸ்ட் கடசி வேட்பாளர்களை வெற்றி பெற  செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளோம் .காரணம் அவர்களை எங்கள் பிரச் சினைக்காக கடுமையாக போராடினார்கள் " என்று கூறியுள்ளார். 

மதுரையில் சு.வெங்கடேசன் அவர்களுக்காக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர்  ஒரு மாதத்திற்கு மேல் பிரச் சாரஞ் செய்து தேர்தலில் நேரடியாக  தங்கள் பங்கை செலுத்தியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்கள்,கவிஞர்கள் ,நாடக நடிகர்கள் ,திரை உலக பிரபலங்கள் ,ஓவியர்கள், என்று மதுரை நகரத்தையும் மேலூரை  யும்  தெருத்தெருவாக சுற்றிவந்து சு.வெங்கடேசனுக்காக பிரசசாரம் செய்தனர்..

வாக்காளர்கள் தங்கள் ஆதர்ச எழுத்தாளர்கள்,கலைஞர்கள்,கவிஞர்கள் நேரில் வந்து  கேட்டதை சொல்லி சொல்லி  பரவசப்படுகிறார்கள்.

இவை சு வே அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு பழைய நினைவுகள்தட்டு கின்றன.

தோழர் நன்மாறன் எழுத்தாளர் சங்கத்தின் செயல்விரரும் கூட.கவிஞர் .மதுரை பீப்பிள்ஸ் தியேட்டர் குழுவில் நாடகத்தில் நடித்தவர் .எளிமையான மனிதர்>  மதுரை கிழக்கு தொகுதியில் மார்க்சிஸ்ட்  கட்சி சார்பாக சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டார்.சங்கத்தலைவர்  கே.முத்தையா அவர்களை தலைமையில் நடந்த கூட்டத்தில் நன்மாறனை ஆதரித்து நாம் செயல்பட வேண்டும் என்று நான் யோசனை சொன்னேன். அப்போது அந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை..

"காஸ்யபன் ! கவலைப்படாதீங்க ! நாம இன்னும் அரசியல் படுத்தவேண்டும் "  என்றார் கே முத்தையா அவர்கள்.

அவர் விருப்பத்தை இன்றைய தமுஎகச தலைமை அமோகமாக நிறைவேற்றியுள்ளது.

எல்லாப்   புகழும்  தமுஎசவுக்கே!!!

Monday, April 15, 2019
பிரான்ஸ் நாட்டின் ,

நிர்வாக சட்டம் ..... !!!

(Administerative law )மக்கள் பணியில் ஈடுபடும் வ்வொரு நாட்டு அரசும் நிர்வாகத்தின் மூலமாகவும், அரசு நிர்வாகிகளின் மூலமாகவும் பணி  செய்கிறது.

இந்த பணியினை செய்ய வேண்டிய நேரத்தில், செய்ய வேண்டிய முறையில் செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் இருந்தால் அதனால் பொது மக்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். தவறு செய்த நிர்வாகம் தண்டிக்கப்படவேண்டும். அதுமட்டுமல்லாமல் தவறு செய்த நிர்வாகியும் தண்டிக்கப்படவேண்டும். இதனைத்தான் நிர்வாக சட்டம் Administerative law என்கிறார்கள்> இப்படிப்பட்ட சட்டம் பிரான்ஸ்    நாட்டில் நடைமுறையிலுள்ளது. 

இதே போன்ற சட்டம் என்ன காரணத்தாலோ இந்தியாவில் இல்லை.

சமீபத்தில் "ரஃபேல் " ஊழல் அம்பலமானது இதில் சம்மந்தப்பட்டுள்ளதாக கருதப்படும் அம்பானி கம்பெனிக்கு பிரான்ஸ் நாட்டு நிர்வாகம் கோடிக்கணக்கான ரூ மதிப்புள்ள வரிசலுகையை அளித்துள்ளது .இந்த சலுகை ரஃபேல் ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு கொடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ்  நா ட்டு ஊடகங்கள்  அம்பலப்படுத்தியுள்ளன .

சம்மபந்தப்பட்ட நிர்வாகமும், நிர்வாகிகளும் நிர்வாக சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

மாட்டிக்கொண்ட நிர்வாகிகள்  இதன் முலகர்த்தாவான இந்திய  அரசியல்வாதிகளை  மாட்டி விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

அரூபத்தின் அற்புத வேலைகள்   ஆரம்பமாகிவிட்டன.!!

இனிமேல் தான் வேடிக்கை இருக்கிறது !!!  

Wednesday, April 10, 2019
நெகிழ்ச்சியான

பயணம் ....!!! 

தோழர் ராஜேஸ்வரி -வேணுகோபால் தம்பதியரின் செல்வி இந்து - அஸ்வின் திருமணத்திற்காக சென்னை வந்திருந்தேன் .

6-4-19 அன்று மாலை 6மணிக்கு வரவேற்பு நிகழ்ச்ச்சியில் கலந்து கொண்டேன். சுமார் 7 மணிக்கு  இரா .தே . முத்து மற்றும் சில தோழர்களோடு மார்க்சிஸ்ட் கடசியின் மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வந்திருந்தார்கள்.அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் .

பேச்சின் ஊடே  "வரவேற்புக்கு வந்ததில் மகிழ்ச்சி. அதை விட உங்களைப்பார்த்தது மிகவும் மகிழ்ச்சி  "என்று குறிப்பிட்டார்

1971ம் ஆண்டு தேர்தலின் பொது மதுரை வந்திருந்தார்> அப்போது அவர் மாணவர் . அண்ணாமலையில் அறிவியல் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார்> மாணவர் இயக்கத்திலும் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.அப்போது அவரோடு உடன் படித்துக் கொண்டிருந்த ராமலிங்கம் கதிரேசன் என்ற அருணனும் தேர்தல் பணிக்காக வந்திருந்தார் .

மதுரை 1 நம்பர் சந்தில்  அப்போதுமாநிலக்குழு அலுவலகமும் தீக்கதிர் அலுவலகமும் செயல்பட்டு வந்தது. கே. எம் தலைமையில் தீக்கதிர் வந்து கொண்டிருந்தது வ.உ சியின் பேரன அ சண்முசுந்தரம் ,கோவைஞனபாரதி     ஆகியோரோடு நானும் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.

மாணவர்கள் இருவரும் தேர்தல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள் .45   ஆண்டுகள் ஓடிவிட்டது .

  "நீங்கள் மாநில செயலாளர்.நான் வந்து உங்களை   சந்தித்து இருக்க வேண்டும் ".என்றேன் .

   "உங்களை .எத்தனை ஆண்டுகள் கழித்து பார்க்கிறேன் .மகிழ்ச்சி தோழர்" என்கிறார்.தோழர் KB . 


மனம் நெகிழ்ச்ச்சியடைய கண்கள் கசிந்தது .1971ம் ஆண்டு நான் பார்த்த மாணவன் அல்ல அவர் 


ஒருபுரட்ச்சி கர கட்சியின் தலைவர் .


"லால் ஸலாம் காம்ரேட் "