Sunday, December 30, 2012

திலகருக்காக வாதாடிய

ஜனாப் முகமது அலி ஜின்னா .....!!மகாகவி பாரதி சுதந்திரத்திற்காக படு பட்ட தலைவர்களில் வட இந்திய தலைவர்கள் பற்றி உணர்ச்சி மிக்க பாடல்களை எழுதியுள்ளார் ! நௌரோஜி ,திலகர்,கோகலே ,காந்தி என்று எழுதியுள்ளார்.! ஆனாலும்   திலகர் அவருக்கு மிகவும் நெருக்கமான விருப்பமானவர் !

மாஜிஸ்டிரேட் ,ஜுட்ஜு பதவிக்கு மனு செய்து கொண்டிருந்த
காங்கிரஸ்கரர்கள் மத்தியில் "சுதந்திரம் என்பிறப்புரிமை "என்ற  கோஷத்தை திலகர் வைத்தார்.! பிரிட்டிஷ் காரர்களுக்கு விசுவாசத்தை காட்ட விரும்பியவர்கள் அவரை
தீவிர வாதி என்று முத்திரை குத்தி ஒதுக்கி வைத்தனர் ! அவரை ஆதரித்த பாரதி.,வ.உ.சி, சிவா  ஆகியவர்களை  மயிலாப்பூர்  வக்கீல்களால் நடத்தப்பட்ட காங்கிரஸ் ஒதுக்கி, அவர்களை  துன்புறுத்தியது !  

சமயத்திற்காக காத்திருந்த பிரிட்டிஷ் அரசு திலகர் மீது ராஜதுரோக  வழக்கை போட்டது.!
காங்கிரஸ் வக்கில்கள் ஏனோ வரவில்லை.!திலகர் தன்னுடைய சிஷ்யனு ம் ,இளம் வக்கீலுமான முகம்மது அலி ஜின்னாவை தனக்காக வாதடும்படிக்  கேட்டுக் கொண்டார்.! திறமையாக வாதாடிய ஜின்னாவின் வாக்கு சாதுரியத்தை அன்று எல்லாரும்போற்றினர் !

பிரிட்டிஷ் நீதி மன்றமோ அவருக்கு பத்து ஆண்டு தண்டனை விதித்தது.!அதில் ஐந்து ஆண்டுகள், பர்மாவில் உள்ள மண்டலே சிறையில் நாடு கடத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று உத்திரவிட்டது.  !

சிறைவாசம் முடிந்து வந்த திலகர் சர்க்கரை நோயினால் அவதிப்பட்டார். 1916ல் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார். சோவியத் புரட்சி அவருக்கு உத்வேகமளித்தது. தன்பத்திரிகையில் விளாடிமிர் லெனினை புகழ்ந்து கட்டுரைகள் எழுதினார் !

ஹோம் ரூல் இயக்கத்தில்தீவிரமாகப் பங்காற்றினார்.1920ம் ஆண்டு மறைந்தார்
       ரஸ்       

 2012ம் ஆண்டு பிரசுரமாகாத 

செய்திகள் சில ........!!


கொல்கத்தாவில்  பார்க் தெருவில் ஒரு கற்பழிப்பு நடந்தது . பத்திரிகையில் செய்தியாக வந்தது .
மேற்கு வாங்க முதலமைச்சர் இதற்கு பதில் சொன்னார் ." விலை மாது ஒருவருக்கும்,அவருடைய வாடிக்கையாளர் ஒருவருக்கும் பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தகறாரினை மார்க்சிஸ்டுகள் கற்பழிப்பு என்று கதைக்கிறார்கள் "என்றார்.

குத்து சண்டை வீரர் மேரி கோம் ஒலிம்பிக் போட்டியில் வென்றார். அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் (லண்டனில் ) கேட்டார்" மணிபூர் வீரர்களுக்காக மத்திய அரசு அனுப்பும் விளையாட்டு பொருட்களை
அதிகாரிகள் டெல்லியில் அமுக்கிவிட்டு, மணிப்பூரில் கள்ள  மார்க்கெட்டில் விற்கிறார்களா  ? என்று கேட்டார் . பின்னல் அமர்ந்திருந்த ஒருவர் "ஆமாம்! இனி ஒலிம்பிக்  போட்டிக்கு செல்லும் ,  நிர்வாகிகள் அதிகாரிகள் ஆகியோரின் எச்சில் தட்டுகளை வீரர்கள்   கழுவும் கேவலத்தையும் நிறுத்துவோம்" என்றார். அவர் விளையாட்டு அமைசகத்தின் சார்பில் வந்தவர்.

2ஜி  அலைக்கற்றை ஊழலில் சிறையிலிருந்தவர் பானட் என்ற அதிகாரி. இவர் இந்திய ஒலிம்பிக் கமிட்டிபோட்டியில்    வெற்றி பெற்றார். "அடுத்து நான்  சர்வ   தேச   ஒலிம்பிக் கமிட்டிக்கு  போட்டி இடுவேன். இந்தியாவை ஒதுக்கி வைத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியையே ஒதுக்கி வைப்பேன் " என்றார் . 

என்.டி . திவாரி என்பவர் மத்திய அமைச்சராக இருந்தார். உ.பி ,மற்றும் உத்தராஞசல் மாநிலத்தில் முதல் அமைசராக இருந்தார். ஆந்திராவின்
கவர்னராகவுமிருந்தார்.வயது.80 . மனுஷன் ஒரு மாதிரி. விடியோ எடுத்துட்டாணுக . கவர்னர் பதவியை ராஜினாமா  செய்தார்.அவர்மேல  டெல்லி வக்கீல் கேசு போட்டார். திவாரி தானென் தந்தை என்று. திவாரி மறுத்தார். நீதி மன்றம் டி என்.  எ பரிசோதனைக்கு உத்திரவிட்டது .பத்திரிகைல இதெல்லாம் வந்தது..ஒரு நிருபர் ஏன் பரிசோதனைக்கு மாட்டென்கரீங்க ? நுகேட்டார்.  "ஒரு ஆளுக்கு சரின்னேன அப்புறம் வர்றவனுக்கு என்ன பதில்சொல்ல ? என்று அவர் திருப்பிகேட்டது பத்திரிகைல வரவில்லை.


பரிசோதனை நடந்தது. திவாரி தான் டெல்லி வக்கீலோட உண்மையான தந்தை என்று தீர்ப்பு வந்தது. அந்த அம்மா காங்கிரஸ் கட்சியின் குட்டிதலவரின் மனைவி .

குடியரசுதலவர் பிரணாப் முகர்ஜியின் மகன் "தெள்ளுமணி" !பேரு  அபிஜித் முகர்ஜி . டெல்லியில் ஓடும் பஸ்ஸில் கற்பழிக்கப்பட்டு  வீசி  எறியப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு  பெண்கள் போராடினார்கள். :'இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் அழகாக இருந்தார்கள், நான் வாலிபனா இருந்த போது இப்படி அழகான பெண்கள் போராட
 வரூவதில்லை . எங்கப்பாவுக்கு என்னதான் அவசரமோ " என்றான் !
 பத்திரிகைகள் மூச்சுவிடவில்லை .


ஆதாரம் : டைம்ஸ் ஆப் இந்தியா ( 30 -12 -12 )

ஞ்சல் ஆகிய

Monday, December 24, 2012

ஒரு  ஊறுகாய் தாத்தா .....!!!"தீக்கதிர் " பத்திரிகைக்கு மதுரையில் கட்டிடம் கட்ட முடிவாகியது  . "ஜனசக்தி"  பத்திரிகைக்காக வாங்கிய இடம் கைவந்துவிட்டது. மதுரை பை-பாஸ் சாலைக்கும்,கொன்னவாயன் சாலைக்கும் இடையே அரைகுறையாக கட்டப்பட்டிருந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு வேலை  ஆரம்பமாகியது. இந்த கட்டிட வேலையை கண்காணிக்க "ஆர்.ஆர் " என்று அன்போடு அழைக்கப்பட்டமுது பெரும் தோழர் ராமராஜ்  பொறுபளிக்கப்பட்டார்

விவசாயிகளின் தலைவர் ராமராஜ் .கட்சி பிரிநதபோது பலதலைவர்கள்  ,மற்றும் தொண்டர்கள் சிறையிலிருந்தனர்.. மேலும் பலர் தலைமறைவாக செயல்பட்டனர். தன்னந்தனியாக கிராமம் கிராமமாகச் சென்று விவசாயிகளை ஒன்று திரட்டி மார்க்சிஸ்டு கட்சிக்கு கொண்டுவந்த மகத்தான பணியைச் செய்தவர் ராமராஜ்.. அங்கேயே தங்கி சமைத்து சாப்பிட்டு வந்தார்.

மதுரை  1ம் நம்பர் சந்தில் அப்போது தீக்கதிர் பத்திரிக்கை செயல்பட்டு வந்தது. ஆர்.ஆர் அங்க் அடிக்கடி வருவார் என் வீடும் கொன்னவாயன் சாலைக்கு அருகிலிருந்தது வெறும் சோறும் தயிரும் சாப்பிடும் அவருக்கு வெஞசனமாக பள்ளியில் படிக்கும் என்  மகன் அல்லது மகள்மூலமாக  ஊறு காய் கொடுத்து அனுப்புவேன்.அவர்களைப் பொருத்தவரை அந்த மாபெரும் தலைவர் "ஊறுகாய் தத்தா".

இந்த  சமயத்தில் தான் அவசர் நிலை வந்தது. தலைமறைவு தலைவர்களுக்கும், வெளியில் செயல் படும் தலைவர்களுக்கும் தொடர்பாக ஆர்.ஆர் செயல் பட்டு வந்தார்.

நான் வசித்த பகுதியில் "சூரிய போஸ் " என்று ஒரு தோழர் இருந்தார் . அவருடைய தந்தை நேதாஜியின் ராணுவத்தில் பணியாற்றியவர். இது தவிர என்னோடு பணியாற்றிய தோழர் இப்ராகிம் அவர்களுக்கு "போஸ் " நெருக்கமானவர் .அவர் அடிக்கடி விளாங்குடி பெரிய கருப்பன் கொடுத்தார் 
என்று கூறி   ஒரு கவரை கொடுப்பார். போஸ் கொடுப்பதை .ஆர் ஆர்  இடம் கொடுக்கவேண்டியது என் பொறுப்பு..ஒரு சிறிய எவர்சில்வர் டப்பாவில் அந்த பிளாஸ்டிக் கவரை வைத்து அதன் மீது வாழையிலையினை வைத்து அதில் ஊறுகாயை போட்டு என் குழ்ந்தைகள் மூலம் கொடுத்தனுப்பி விடுவேன்.

என் மகன் MA  மற்றும் IRPM  முடித்து BL படித்து மத்திய உள் துறை அமைச்சகத்தில் பணியாற்றுகிறான்.

என் மகள் MA , Mphil , ML முடித்து வக்கில் தொழில் செய்கிறாள்.  வேடிக்கை என்ன வென்றால்  அவர்கள் இருவருக்குமே நான் அவர்களை இப்படி use ( misuse ) பண்ணினேன் என்பது தெரியாது.இந்த இடுகையை பார்த்து
தெரிந்து கொண்டால் தான் உண்டு..  

Thursday, December 20, 2012

செல்வராஜ் தோழா சாகித்ய அகதமி

தன்னை புதுப்பித்துக் கொண்டது !!!

"தேநீர்" செல்வராஜ் ,அதற்கு முன்பு "மலரும் சருகும்" செல்வராஜ், இன்று
"தோல் " செல்வராஜ் என்ன அற்புதமான பரிணாமம்!  தோழா தமிழகத்து முற்போக்கு இயக்கம் காத்திருந்த தருணம் இது!

சாகித்ய அகாதமி தன்னை புதுப்பித்துக் கொண்டது என்று தான் பதிவு
செய்ய வேண்டும்!

உன் கையைப் பிடித்துக் கொண்டு தோழர்  ஜீவா  அவர்கள்  உன்னை  "ஜனசக்தி"  பத்திரிக்கை அலுவலகத்தில் கொண்டு சேர்த்தாரே ! நினைவிருக்கிறதா !

கலை இலக்கிய பெருமன்றத்தை ஆரம்பிக்க காரைக்குடியில் நடந்த கூட்டம்
நினைவு தட்டுமே!

"மலரும் சருகும்" எழுதி தலித் இலக்கியத்தின் முன்னோடிதமிழனாச்சே நீ !

பாம்பனார் எஸ்டேட் சென்று அங்கு உன் "தேநீர்" பற்றி கருத்துரையாற்ற  சென்ற பொது அந்த பாடசாலை வாத்திமார் என்னைச் சுற்றி நின்று உன்னை
புகழ்ந்ததை கேட்டு சொக்கிப் போனவன் நான் !

சுதந்திர போராட்ட வீரர் வாழவிட்டான்- லட்சுமி  அம்மாள்  தம்பதியர்  இருவருமே சிறையில் இருந்தவர்கள்.    லட்சுமி அம்மாளுக்கு சிறையில் பெண் குழ்ந்தை பிறந்தது .அந்தக் குழந்தைக்கு "பாரத புத்திரி " என்று பெயர் வைத்தார்கள்!
தோழா!அந்த பாரதபுத்திரியை சாதி மறுப்புத்திருமனம் செய்து கொண்டவன் நீ ! 

 ஆரம்ப காலத்திலிருந்து தமிழ்நாடு  முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை வழி நடத்தினாய் !

" செம்மலரில்" நீ  எழுதிய மூலதனம் நாவல் பெரும் வரவேற்பை பெற்றது!

பார்க்கும் போதெல்லாம் பேகம்பூர் தோல் பதனிடும் தொழிலாளர்கள் பற்றி   பேசுவாய் !
 அவர்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த எ\.பாலசுப்பிரமணியம் , மதனகோபால்,, தங்கராஜ் ஆகிய கம்யுனிஸ்டுகளை காவிய நாயகர்களாக படைத்தாய்!

இந்திய இலக்கியத்தில் தோல் பதனிடும் தொழிலாளர்களை  ,அவர்களுக்காக ,அவர்களொடு இணைந்து போராட்டம் நடத்திய வரலாற்றை
காவியமாக்கிய  தோழனே !

உனக்கு இந்திய தொழிலாளி வர்க்கத்தின் வாழ்த்துக்கள் !!!
 \     

Thursday, December 13, 2012

பட்டொளி வீசிப்

பறக்கும் செங்கொடி ......!!!


அறுபதாம் ஆண்டுகளின் முன்பகுதி ! கம்யுனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான "ஜனசக்தி" மதுரையிலிருந்து கொண்டு வர முயற்சி நடநதது. அதற்கான இடம் கட்டிடம்  மற்றும் இயந்திரங்கள் வாங்குவதற்காக கம்பெனி பங்குகளை விற்க முடிவாகியது.  கட்டிட வேலயும் ஆரம்பிக்கப்பட்டது இந்த சமயத்தில்தான் கட்சிக்குள் வலது,இடது என்று ஆரம்பித்து கட்சி பிரிந்தது.

கட்டிட வேல நின்றுவிட்டது. பத்திரிகைக்காக ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி ரிசீவர் மூலம் நிர்வகிக்க வேண்டியதாயிற்று. பாதி வேலை முடிந்த கட்டிடம் புதர் மண்டி  போயிற்று. ஒருகட்டத்தில் கமபெனியின் இயக்குனர்களாக இருந்தவர்களில்  பெரும்பாலோர்  வலது கோஷ்டியை  சேர்ந்தவர்கள்  .அவர்கள்  அரைகுறை கட்டிடத்தை விற்றுவிட முடிவு செய்தார்கள். மதுரையில் தியாக ராசா செட்டியாரின் தமிழ் நாடு பத்திரிகைக்கு விற்க முயன்றார்கள். அதன் பிறகு தமிழ் முரசு என்ற பத்திரிகைக்கு விற்க பேரம் நடந்தது. 

நீதி மன்றம் நியமித்த "ரிசிவர் " ASR  . chary என்ற பிரபல வக்கீலாவார். இவர் முது பெரும் கம்யூனிஸ்டு தலைவர் ASK ஐயங்காரின் சகோதரர் ஆவார்.
ஏழை தொழிலாளர்களிடம் வசூல் செய்து வர்க்க அரசியலை பிரசாரம் செய்ய ஆரம்பிக்கப்பட்டபத்திரிகை அதன் இடத்தை வர்க்க எதிரிகளுக்கு விற்பது அவர் மனதிற்கு உவப்ப இல்லை.விற்க,வாங்க சகல அதிகாரமும் அவருக்குமட்டுமே இருந்தது.

பி.ராமமூர்த்தி அவர்களைச் சந்தித்தார்."  உங்கள் கட்சி சமரசம் இல்லாமல் தொழிலாளர்களுக்காக பணி புரிகிறது.விற்பதற்கான முழு அதிகாரமும் .
எனக்கு இருக்கிறது .என்ன சொல்கிறீர்கள் " என்று கேட்டார்.சகல ஏற்பாடுகளையும் செய்து பத்திரம் பதிவாகும் வரை யாருக்கும் சொல்லவேண்டாம் என்று  கூறி  பரிமாற்றம் நடந்தது..

மறு நாள் காலை கொண்ணவாயன் சாலை தோழர்கள், பரவைமில்
தோழர்கள், ஆரப்பாளையம்,மங்ச மேடு தோழர்கள் மர்க்சிஸ்டு   கட்சி கோடியை ஏற்ற சென்றார்கள்.

அங்கு வலது கட்சி தொண்டர்கள், பறவை மில் மண்டை ராமன்.ஆட் டு ராமன்,கோனையன்,மதுர மில் கடப்பறை ஆகியொர் கம்பு கட்டைகளோடு  நின்றார்கள்.

போலீசார் வந்து கட்டிடம் கைமாறிவிட்டது என்று எடுத்த்ச் சொல்லி அவர்களை கலைந்து  போகச் சொன்னார்கள் '

விண்ணதிர கோஷமிட்டு தோழர்கள் செங்கொடியை ஏற்றினார்கள்.

மதுரை-தேனி சாலையில் அரசரடி சதுக்கத்திலிருந்து வடக்கே வைகை ஆற்றுப்பாலத்தைப்  பார்த்தால் மறுகரையில் கம்பிரமாக பட்டொளி வீசி செங்கொடி பறப்பதைப் பர்க்கலாம் .

அந்தச் செங்கொடியின் கீழே தான் "தீக்க்திர் "  அச்சடிக்கப்பட்டு, வெளி வருகிறது

அதன் ஐம்பதாம் ஆண்டு விழா!! தோழர்களே  வாழ்த்துவோம் 111 

Sunday, December 09, 2012

பாபர் மசூதி இடிப்பும்

அரவிந்தன் நீலகண்டனும் .......!


சமீபத்தில் பதிவர் நண்பர் ஒருவர் "மசூதி இடிப்பு" என்று தன்னுடைய முகநூ லில் குறிப்பிட்டிருந்தார். இந்துத்வா நண்பர்களின் தத்துவ ஆசானான அரவிந்த நீலகண்டன் கொதித்து எழுந்து "மசூதியா ? இடிப்பா? " என்று கேட்டார். அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு சர்சைக்குரிய கட்டடம் (disputed structure ). மசூதி என்றால் வாய் வெந்து போகும் அவர்களுக்கு !!

அது என்னசர்ச்சை ? உருவாக்கினவர்களே அவர்கள் தான் ! இந்த மாதம் 22ம தேதி "Ayodhi : the dark  night " என்ற புத்தகம் வெளி வருகிறது அந்த புத்தகம் 1949ம ஆண்டு டிசம்பர் மாதம் 22-23ம தேதி நள்ளிரவில் நடந்தது பற்றி சொல்கிறது.மசூதி இருப்பது இந்துத்வா வாதிகளுக்கு கண்ணை வலித்தது. சுதந்திரம் பெற்ற உடன் இந்துத்வாவின் இந்துமகா சபாவின் செல்வாக்கை அதிகரிக்க ஏதாவது செய்ய வேண்டும் என்பது
அவர்களின் உடனைத்தேவை. சதி திட்டம் தீட்டப்பட்டது.

அபிராம் தாஸ் என்ற 6அடி உயரம் கொண்ட தடியன்  இவனை "நிர்வாணி
அக்கரா  " என்ற மடத்தை சேர்ந்தவன் என்று கூறிக்கொள்கிறார்கள்.இவனுடைய சகோதரன் இந்து சேகர் ஜா , ஜுகல்  கிஷோர் ஜா ஆகியவர்களோடு சேர்ந்து காரியங்களை முடிக்கத்திட்டமிட்டனர்.

22ம தேதி இரவு 12 மணிக்குமேல் இவர்கள் கள்ளத்தனமாக " ராம்  லாலா "
சிலைய மசூதியின் நடுவில்கொண்டு வைத்துவிட வேண்டும். வெளியிலுள்ளவர்கல்  இவர்களின் சமிக்ஞைக்காக  காத்திருப்பார்கள். 
சமிக்ஞை வந்ததும் சுயம்புவாக ராமச்சந்திர முர்த்தி சீதையோடு எழு ந்தருளி விட்டார் என்று இரவோடு இரவாக தண்டோரா
போடுவார்கள். அகில இந்திய இந்து மகாசபாவின் தலைவன் அதேசமயத்தில்  ப்சாபாத்தில்  "ராமர் தோன்றினார்"   என்று சுவரொட்டிகளை அடித்து அயோத்தி முழுவதும்
ஒட்டுவான்.  

காடு மாதிரி இருந்த பாபர் மசூதி கட்டிடத்திற்கு காவலாக முகம்மது இஸமாயில்  என்பவன் இருந்தான் அவன இந்த முவரும  அடித்து விரட்டி விட்டு  சிலையை வைத்து விட்டார்கள்.காலையில் அப்பாவி ஜனங்களை உசுப்பிவிட சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஆகிவிட்டது.

கலக்டர் வந்தார். கலக்டர் கே.கே நாயர். இவன் ஒரு செட்டப்பு கேசு. கேரளத்திலிருந்து வந்த  இந்து மகாசபை ஆதரவாளன். சுயம்புவாக வந்த ராமர்-சீதா இருவருக்கும் பூஜை புனஸ்காரம் செய்ய மசூதிக்குள் அனுமதி கொடுத்தான்.
சர்ச்சை ஆரம்பமானது இப்படித்தான் .

Ayodha : The dark night ,(harper collins )Autors : Krishna Jha and Dhirendra K jha
ஆதாரம் :டைம்ஸ் ஆப் இந்தியா (6-12-12)
Thursday, December 06, 2012

 திரைப்பட விமரிசனம் :

"டாக்டர் B .R. அம்பேத்கர் "

( ஊமைகளின் நாயகன்)


டிசம்பர் 6ம்  தேதி  காவல் துறை,ராணுவம் ,துணை ராணுவம்  பாதுகாப்புப் பணியில் இருக்க, டிசம்பர்மாதத்து மென்குளிரில் கம்பளிஆடைகளப் போர்த்திகொண்டு "பொதிகை " ஒளிபரப்பிய டாக்டர் அம்பேத்கர் (தமிழ் ) திரை படத்தை பார்த்தேன்.

1998ம ஆண்டே தணிக்கை முடிந்தாலும் 2000 ஆண்டுதான் படம் திரைக்கு .
வந்தது .காரணம்,அப்போது வாஜ்பாய் பிரதமராக இருந்தார்.தமிழில் வந்தபோது அதனை வெளியிட தமிழ் நாட்டு தேசபக்தர்கள்  மறுத்து விட்டார்கள். தமிழ்நாடு  முற்போக்கு எழுத்தாளர்கள் கலஞர் சங்கம் முன்கைஎடுத்து இயக்குனர் லெனின் அவர்களின் உதவியோடு தமிழகத்தில்  சில  நகரங்களில்  திரையிட்டார்கள். இன்று  தமிழ்  கூறும்  நல்லுலகம  இந்த அற்புதமான  படத்தை பார்க்கும் வாய்ப்பை பெற்றார்கள்.

தன்னந்தனியாக ஒரு மனிதன் தன சகமனிதர்களின் இழிவைப் போக்க
என்ன செய்யவேண்டுமோ அதனைச்செய்த மாமனிதரின் காவிய படைப்பு .

அண்ணல் சிகாகோவில் படிப்பதில் ஆரம்பிக்கிறது படம்.சாலையின்
 மறுபக்கம் நிக்ரோக்கள். மற்றோரு பக்கம் வெள்ளையர்கள் .  வெள்ளை பேராசிரியர்கள் கறுப்பர்களின் இழிநிலை போக்க குரலெழுப்புவது 
    இளம் அம்பேத்கரை   உசுப்புகிறது..லண்டன் செல்கிறார் படிப்பு முடிந்து
இந்தியா வந்து சமஸ்தானத்தில்வேலைக்கு சேருகிறார். தங்க இடம் கிடக்கவில்லை. அரசராலும் உதவ முடியவில்லை  .பார்சி சத்திரத்தில்  தங்குகிறார். அவர் பார்சி அல்ல என்று தெரிந்த விடுதி காப்பாளன் அவருக்கு தொழுவம் போன்ற இடத்தில் தங்க வைக்கிறான் வெளிநாடு சென்று படித்த இளைஞன் பிறப்பினால் இழிவு படுத்தப்படும் காட்சி பார்வையாளனை கலங்க வைக்கிறது.

கல்லுரியில்பெராசிரியராக இருக்கிறார்.தொண் டைகிழிய வகுப்பு எடுத்துவிட்டு ஆசிரியர் அறையில் நீர்  அருந்த போகும் பொது சக பேராசிரியர் தடுக்கிறார்."நி விட்டிலிருந்து தண் ணிர்   கொண்டுவந்து குடி என்கிறார். இது தீட்டகிவிடும் என்கிறார்.தீட்டு போக மந்திரம் உண்டே ! நான் சொல்லட்டுமா என்று அம்பேத்கர் கூறி மந்திரத்தை சொல்கிறார் .
(நான்  கைதட்டிவிட்டேன்.அருகிலிருந்த மனைவி புன்சிரிப்போடு ஆமோதித்தார்)

ஆடும்மாடும் குடிக்கும் குளத்தில் அந்த மக்கள் குடிக்கக்கூடாது என்கிறார்கள். போராட்டம்நடத்த முடிவாகிறது அவரோடு அணியிலுள்ள சித்தாலே ,சகஸ்ர புத்தே கெய்க்வாட்  போன்றவர்களின்  உதவியையும் பெற்றுக் கொள்கிறார். போராட்டத்தின் ஒரு பகுதியாக "மனுஸ்மிருதியை ",
 எரிக்கிறார்கள். சித்தாலே "ஆகுதி"  மந்திரத்தை சொல்லி நெருப்பில் ஏடுகளை போடுகிறார்.(கை தட்டினேன். புன்னகையும் கிடைத்தது)

முதல் வட்டமேசை மாநாட்டில்  காங்கிரஸ் கலந்து கொல்லவில்லை . அம்பேத்கரும் ராவ் பகதூர் சீனிவாசனும் கலந்து கொள்கிறார்கள். இரண்டாவது  மாநாட்டில் காந்தியும் கலந்து கொள்கிறார்.

இடைக்கால அரசு ,அரசியல் நினைய சபை,அரசியல் சட்ட முன்வரைவு ,இந்து 
சீர்திருத்த சட்டம்,என்று அரசியல் நிகழ்வுகள் அவருடைய கடுமையான
உழைப்பை  கோருகின்றன. பிறந்தது  இந்துவாக  .நான்    போகும்போது  இந்துவாகபோகமாட்டேன்  என்கிறார். மௌல்விகள்,பாதிரியார்கள், சாமியார்கள்,இந்து மகா சபா தலைவர்கள், சீக்கிய குருமார்கள் அவரை தங்கள் மதத்தில் சேர மொய்க்கிறார்கள். யாருமே தாழ்த்தப்பட்டவனின் உரிமை பற்றி பேச மறுக்கிறார்கள். இறுதியில் புத்தமதத்தில் சேருகிறார்.


அம்பேத்கராக மமுட்டி வாழ்ந்திருக்கிறார். அவரூ க்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது. வட்டமேசைமாநாட்டில்,சட்டசபையில், காந்தியோடு என்று அவர் பேச்சும் குரலும் அதன் கம்பிரமும் மனத்தில் ரிங்கரித்துக்  கொண்டே
இருக்கிறது.

முதல் மனைவி ரமாபாயாக சொனால் குல்கர்னி,சவிதா பாயாக மிருனாள் குல்கர்னி அருமையாக செய்துள்ளனர். மறைந்த மோகன் கோகலே காந்தியாக வாழ்ந்திருக்கிறார்.

"நான் கபிர் சொல்கிறேன்! இது குருடர்களின் உலகம்"என்ற பாடல் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஐந்து பாடல்களும் அருமை. இசை அமைத்த அமர் ஹல்திகர் சிறப்பாக செய்துள்ளார்.

..கலை இயக்குனர் புகழ் பெற்ற நிதின் தேசாய் . தேசிய விருது இந்தப்படத்திக்காகவும் பெற்றுள்ளார். அசோக் மேத்தாவின் நேர்த்தியான படப்பிடிப்பு சிறப்பாக உள்ளது. சிறந்தபட விருதினையும் பெற்றுள்ளது.

அம்பேத்கர் ஒருபத்திரிகைய நடத்துகிறார் "அதன் பெயர் "மூக் நாயக் " .
ஊமைகளின் தலைவன் என்று அர்த்தம்.. 

அந்த ஊமைகளை பேச வைத்தவர் அண்ணல் அம்பேத்கர்!.  

அவர்களை உரக்கப் பேசவைப்பது நமது கடமை !!

Wednesday, December 05, 2012
சமஸ்கிருத

மொழியும் கவிதாயினிகளும்.....!!

சமீபத்தில்

சென்னையில் பெண்கள் சம்மந்தமாக த.மு.எ.க.சங்கத்தின் சார்பாக ஒரு கருத்தரங்கு நடந்தது.அதுபற்றிய விபரங்களை முகநூலில் நண்பர்கள் பகிர்ந்து கொண்டனர்.

அங்கு

சில கருத்துரயாளர்கள் சமஸ்கிருத மொழியில் கவிதாயினிகளே கிடையாது என்ற கருத்தை வலியுருத்தியதாக கூறப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 60 வருடங்களாக சம்ஸ்கிருத மொழி தமிழகத்தில் கற்பிகப்படுவதில்லை. சம்ஸ்கிருதம் பற்றிய நமது புரிதல் என்பது மிகக்குறைவானதாகீ விட்டது. கிறித்துவத்தைப் பிரச்சாரம் பண்ண வந்த கால்டுவெல்,பிரிட்டோ போன்றவர்கள் கூறிய தவறான தகவல்கள் வரலாறாக்கப் பட்டு அதுவே இன்று நம்பபபடுகிறது.

சம்ஸ்கிருதம்

தேவ பாஷை என்றும்,அந்து அந்தணர்களின் மொழி என்றும் நம்பப்படுகிறது .உண்மையோ முற்றிலும் வேறானது.ராமாயனத்தை எழுதிய ரட்சன் (வால்மீகியோ) னோ கீதையை எழுதிய வியாசனோ,காளிதாசனோ பிராமணர்கள் இல்லை. சமனமும்

,பௌத்தமும் ஓங்கியிருந்து வேத மதம் பலகீனமாக இருந்த போது அதனை மீட்டுருவாக்க முயற்சிகள் நடந்தன.சங்கரன் நம்பூதிரி என்ற தத்துவ விசாரகர் அத்வைத( .Monism) பிரச்சாரம் செய்துவந்தார்.இந்தியா பூராவும் பயணம் செய்தார்.மத்தியப்பிரதேசத்தில் இருந்த மண்டன் மிஸ்ரர் என்ற தத்துவ வாதியோடு விவாதித்தார். அதில் வேற்றி பெற்றர். ஆனால் மண்டன மிஸ்ரரின் மனைவி உபவ பாரதி என்ற பெண் என்னோடு விவாதம் செய்து வேற்றி பெற்றல்தான் நீங்கள் வெற்றி பெற்றதாக எடுத்துக் கோள்ளமுடியும் என்று அறிவித்தார். சங்கரரும் விவாதத்தில் பங்கு பெற்றார். அவர் தோல்வியுற்றர். இங்கு முக்கியமானது சங்கரரின் தோல்வியல்ல.தத்துவ விசாரணையில் பெண்ணும் பங்கெடுத்துக் கொள்ளும்வாய்ப்பு இருந்தது என்பதை சுட்டிக்காட்டுவதுதான் நோக்கம்.

சம்ஸ்கிருத

மோழியில் கவிதாயினி இல்லை என்ற கூற்றுக்கு வருவோம். "செம்மலரில்" வரும் முற்போக்கு கதைகளை சம்ஸ்கிருத மொழியில் மொழிபெயர்த்து பிரசுரம் செய்யும் எழுத்தாளார் முத்து மீனாட்சி அவர்களிடம் கேட்டபோது அவர் சிலகுறிப்புகளை கோடுத்தார். தொன்மைக்

காலத்திலேயே பல கவிதாயினிகள் இருந்ததாகக் குறிப்பிட்டார் ."விஜ்ஜிக்கா","ஷீலாபத்தாரிகா", " விகட நிகம்பா"என்று கவிதாயினிகளின் பெயர்களை அடுக்க ஆரம்பித்தார். கொஞ்சம் பிற்காலத்தில் "க்ஷமராவ்","கமல் அப்யங்கர்" என்று பிரபலமானவர்களின் பெயரைக் குறிப்பிட்டார்."அக்னிக்ஷிகா:" என்ற தொகுப்பை எழுதிய புஷ்பா தீக்ஷித் என்ற கவிதாயினி பற்றியும் கூறினார் நவின கவிஞர்கள் பற்றி நான் கேட்கவில்லை. .

சம்ஸ்கிருத

மொழியில் கவிதாயினிகள் இல்லை என்று கூறமுடியாது என்பதை சுட்டுவது மட்டுமே இந்தக்கட்டுரையின் நோக்கம்.

Saturday, December 01, 2012


Red Salute to Com.

P.G. ....!

 

 

கேரள

முற்போக்கு இலக்கிய செயல்பாட்டாளரும், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஓருவரும், தேசாபிமானை பத்திரிகயின் ஆசிரியராகப் பணியாற்றியவருமான பி. கோவிந்தபீள்ளை மரணமடைந்தார்.முற்போக்கு இலக்கியத்திற்கு அவருடைய மறைவு மிகப்பெரிய இழப்பாகும்.குறிப்பாக தமிழ்நாடு,முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு அவருக்கு இருந்த தோடர்பும், ஆதரவும் முக்கியமானதகும். சங்கம் ஆரம்பிக்கும் காலத்திலேயே அவருடைய ஆளோசனையைப் பெற்றோம்.

1975

ம் ஆண்டு அவசர நிலைக்காலத்தில் த.மு.எ.ச துவங்கப்பட்டது.புதிதாக வந்த இளம் எழுத்தாLaர்கLai ஒருமுகப்படுத்தி அவர்களின் இலக்கிய ஞானத்தை விகசிக்க வைக்க ஒரு பட்டறை நடத்த சங்கம் விரும்பியது. அந்த பட்டறையை நடத்த பி. கோவிந்தபிள்ளைய அழைக்க முடிவாகியது. பட்டறையை எங்கு நடத்துவது? அவசரநிலை காலத்தில் எப்படி,யார் நடத்துவது என்ற கேள்விவந்த போது கு.சின்னப்பபாரதி.நாமக்கல் வக்கீல் சுப்பிரமணியம்,பெரியவர் பழனிச்சாமி ஆகியொர் நாமக்கல்லில் நடத்த முன்வந்தனர்.ரகசியமாக நடத்தபட்ட எழுத்தாளர்கள் பட்டறை.தங்கள் வீடுகளில் கூட எங்கு செல்கிறொம் என்பதை சொல்லவேண்டாம் என்று வரும் எழுத்தாளர்களிடம் சங்கம் கேட்டுக் கொண்டது.(பாதுகாபு கருதி.)

தமிழ்

எழுத்தாளர்கள் கிடடதட்ட 118 பேர்ர்வந்திருந்தனர். அங்கு தான் முதன் முதலாக பொதியவேற்பன், அறிவுறுவோன்,(தஞ்சை)பச்சையப்பன் (சென்னை) பெராசிரியர் செழியன்,ம.ந.ராமசாமி(திச்சி) கவிஞர் செம்மலர் செல்வன்( துறையூர்) ஆகியோர் வந்திருந்தனர்.கேரளத்திலிருந்து ஸ்ரீதரன்,குரூப், ஆந்திராவிலிருந்து சாந்தா ராவ் வந்திருந்தனர். பங்களூரிலிருந்து D.R. நாகராஜ்,சேக்கிழார், மாணவராயிருந்த சித்தலிங்கய்யா, சுப்பிரமணியம் ஆகியொர் வந்திருந்தனர். கோவிந்தபிள்ளக்கு

பெருமைதாங்கவில்லை. அவருக்கு மொழிப்யர்ப்பு வசதிக்காக அவர் பின்னல் என்னை அமரவைத்திருந்தனர்

இந்த

பட்டறையில் தான் சித்தலிங்கையா. தன்னுடைய புகழ் பெற்ற "நன்ன ஜனங்களு" என்ற பாடலை பாடி முதன்முதலாக அரங்கேறினார்.

கண்கள்

கசிந்த P.G. கண்ணடியைக் கழற்றி முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

"Com ! are you alright?"

நான் கேட்டேன்.

"Yes ! Yes !"

"a bit emotional ?"

"com ! progressive writers from kannada,thelugu,thamizh,malayaalam writers have assembed.! This is the moment faor progressive litterary movement to rejoice ! A literary activist like Me --Iam not shedding tears- it is ANANDHA PASHPAM."

 

RED SALUTE COM.P.G.