Saturday, April 27, 2013

"சார் ! நுள்ளிட்டான் சார் "........!!!


ஒண்ணாப்பு படிக்கிற புள்ளய "சார் ! சங்கரு நுள்ளிட்டான் சார்! " "சார் ராமு என் சிலேட்டை அழிச்சிட்டான் சார் " நு சொல்லிக்கிட்டே இருக்கும் !

அதே மாதிரீ தான் ராம சுப்பய்யர் வாரிசுகள் தங்கள் பத்திரிக்கை களில் சீனாக்காரன், நுள்ளிபுட்டான்! துப்பிட்டான் நு சொல்லிக்கிட்டே இருப்பானுக! இது பரவாயில்ல சாமி! வடநாட்ல பாத்திங்கனா! டைம்ஸ் ஆப் இந்தியாவில இருந்து அம்புட்டு பயகளும் சீன எதிர்ப்பு  செய்தி போடாம இருக்க மாட்டாங்க! 

"லடாக்குக்கு கிழக்க இருக்கற பிரச்சின ஸ்தல பிரச்சினை ! அதை எப்படி சமாளிக்கணும்னு எங்களுக்கு தெரியும் நு" நம்ம தலைப்பா கட்டு சொல்லிட்டாரு!

ஆனா இதப்பத்தி முழு விபரத்தை ஒரு பய சொல்லல ! தப்பு ...தப்பு ..."இந்து "சொல்லியிருக்கு !

கொஞ்சம் வரலாற்றை பாக்கலாமா?

1950ல   இந்தியா குடியரசாச்சு! ஒவ்வொரு நாடும் அந்த நேரத்துல தங்களோட அரசியல் எல்லை எதுன்னு அறிவிக்கும்!  நம்மூர்லயும்   அத செஞ்சாங்க! surve of India இது பற்றி வரை படம் தயாரிச்சு 1950 ஆண்டு வெளியிட்டது ! 
 
பாகிஸ்தானுக்கும் நமக்கும் இடைல  உள்ள எல்லை இப்ப இருக்கிற மாதிரியே தான் அப்பமும் போட்டிருந்தாங்க!

சீனா வுக்கான எல்லைய பொதுவா மக்மோகன் கோடு ன்னு காட்டினாங்க! ஆனா தூர கிழ்க்குப்பகுதில கலர மாத்தி unidentified நு போட்டாங்க! tirap division நு காட்டினாங்க! மத்தியபகுதில தான உத்திர காண்ட்,இமாசல்பிரதேசம் லாம் இருக்கு!

காஷ்மீருக்கு கிழக்குபகுதி,அக்சாய் சின் அங்கெல்லாம் notdefined போட்டாங்க !

இந்தப்படத்தை உலகம்பூரா அனுப்பினாங்க!

என்ன எளவோ தேரியல? 1954ல பல்டி அடிச்சுட்டாங்க! எல்லா  படத்தையும் வாபஸ் வாங்கி இப்ப சொல்ற மாதிரி படத்தை போட்டாங்க!

கெட்டிக்காரன்னு நினச்சு நாடாளு மன்ற லைப்ரரில இருந்தும் படத்தை நீக்கிட்டாங்க! 

ஆனா மத்த நாடுகளுக்கு 1950ல் அனுப்பின படம் இருக்குமே! அத என்ன செய்ய!

1955,56,57,ஆண்டுகளில் சீனா வாங்க பேசி முடிச்சுடுவம்னு சொல்லி குப்பிட்டது! சூ -யேன் -லாய் இந்தியாவுக்கே வந்தார்! 

அவர்கூட பேசப்படாது நு குடியரசுத்தலைவர் ராஜேந்திர  பிராசாத் சாதிச்சார்! மீறி  பேசினா நான் பதவிய ராஜினாமா செய்வேன் நார்!   

நெருவாலஒண்ணும் செய்ய முடியல !

இப்பம் அவன்" ரோடு போட்டான்கோடு போட்டான் "நு புலம்பறாங்க! 

"If ever a proposition is made by which a border is settled through military action then that  must certainly be wrong " என்றார் இ.எம்.எஸ் .!

   புத்தியோட  போழைச்சுக்குங்கப்பா!!! 








Thursday, April 25, 2013

பேராசிரியர்களே! மாணவர்களுக்கு 

சொல்லுங்களேன் ......!


நான் சிறுவனாக  இருந்த போது நெல்லை மந்திர மூர்த்தி பள்ளியில் 6ம் வகுப்பு படித்தேன்!(1948 இருக்கலாம்).
எங்கள் பள்ளி ஆசிரியர்கள் சண்முகம்பிளை,மகாலிங்கம்பிள்ளை ஆகியொர் முருக பக்தர்கள்! ஆண்டுக்கு ஒரு முறை "சிலோன்" சென்று கதிர் காமத்து கந்தனை வழிபட்டு வருவார்கள்! அதோடு அந்த ஊர் மக்களிடம் பள்ளிக்கு நன்கொடை வசூலித்து வருவார்கள்!

1971ம் ஆண்டு ! கதிர்காமம் நகரத்தில் நடுத்தெருவில் ஒரு இளம் பெண்ணை அடித்து இழுத்துவந்தார்கள்! அவளை நிர்வாணமாக்கி நான்கு பேர் கற்பழித்தார்கள்! பின்னர் அவளை சுட்டார்கள்! அவள் உயிர் பிரியும் தருணத்  தில்" தண்ணீ ர்  , தண்ணீர் " என்று கதறினாள்! எவரும் வரவில்லை !

அவளைக் கற்பழித்தவர்கள் இலங்கை ராணுவத்தினர்! ரத்தம் கொதிக்கிறதா!அவசரப்படாதீர்கள்! அவள் ஒரு சிங்களப் பெண்! இலங்கை முதலாளித்துவ அரசினை  துக்கி எறிய ஆயுதம்தாங்கிபோராடும் "ஜனதாவிமுக்தி பெருமுனா " என்ற இடது சாரி இயக்கத்தைச் சார்ந்தவர்!

அதே 1971ம் ஆண்டு ! இலங்கைபூராவும் 4000 சிங்கள வாலிபர்கள் கொல்ல ப்பட்டனர் ! அவர்கள் சடலங்கள் எரிக்கப்பட்டன! விறகை வீணாக்க வேண்டாம் என்று பாதி எறிந்த சடலங்களை ஒடும் ஆற்றில் வீசி எறிந்தனர்!

வாங்க தேசப் போரில் இந்தியா சம்மந்தப் பட்டிருந்த நேரம்! இரு
ந்தும் இலங்கை ராணுவத்திற்கு இந்தியா உதவியது! மேற்கத்திய நாடுகள் உதவின! மனித உரிமைக்காரகள் கட்டை விரலை வாயில் வைத்துக்கொண்டு சப்பினர்!  

கொல்லப்பட்டவர்கள் இடது சாரீஇளைஞர்கள் !

இதோடு நிற்க வில்லை !

1989ம் ஆண்டு ! இலங்கை பூராவிலும் 60000 வாலிபர்கள் அவர்கள் இடது சாரிகள் கொல்லப்பட்டனர் !

நம்ம ஊர் திராவிடக் குஞ்சுகள் ,தமிழ் தேசீய குஞ்சுகள் போத்திக்கிட்டு இருந்தாங்க! 

இது வரலாறு!  

இது பாவம் அப்பாவி மாணவர்களுக்கு தெரியாது! 

ச்சீமான் வாயை ...வேண்டாம் தப்பா எழுதிருவேன் !!

லயோலா கல்லூரி பேராசிரியர்களுக்குமா தெரியாது!!   

அட! ஒய்வு பெற்ற பேராசிரிய்ர்களாவது மாணவர்களுக்கு சொல்லலாமே!!!

" ஆரோக்கியமா...." இருக்குமே!


 

 







Tuesday, April 23, 2013

(இது ஒரு மீள் பதிவு )

இ.பி கோ 375
சிறு கதை


இ.பி.கோ---375 (காஸ்யபன்)

யாதவ குல அரச வம்சத்தில் புகழ் பெற்றவன் சுரன் இவனுடைய மகன் தான் வசுதேவன். சுரனுக்கு வசுதேவன் தவிர பிரீதா என்ற மகளும் உண்டு.

அந்தப்புரத்தில் அமர்ந்து சுனைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் சுரன்.தூரத்தில் சிறுவன விளையாடிக்கோண்டிருந்தான். மூன்ரு வயது.பிரீதா வயதான தாதியுடன் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள்தந்தை சுரனைப் பார்த்ததும். ஓடிவந்து தந்தையின் மடியில் அமர்ந்த்தாள்.

"தந்தையே! நாம் போஜநாட்டிற்கு போகப்போகிறோமா?"

"ஆம் மகளே!ஆனால் நான் வரவில்லை நீ மட்டும் தான் சிறிய தந்தை குந்தி போஜனோடு செல்கிறாய்"என்றான் சுரன்

சுரனும் குந்தி போஜனும் தாயாதிகள்.நெருக்கமான நண்பர்கள். போஜனுக்கு வாரிசு இல்லை.சுரனுக்குப் பிறக்கும் இரண்டாவது குழந்தையை போஜனுக்கு தத்துக் கொடுப்பதாய் சுரன் சத்தியம் செய்து கொடுத்திருந்தான்.

துர்வாசரும், வியாசரும் மந்திரகோஷங்களை முழங்க,குந்தி போஜன் சுரனின் மகளான பிரீதாவை தன் மகளாக தத்து எடுத்துக் கொண்டான்.

"குழந்தாய்! இனி போஜன் தான் உனக்கு தந்தை. இனி போஜநாட்டிலேயே நீ வாழவேண்டும்." என்று சுரன் கூறினான்.

சிறுமி புரிந்தும் புரியாதவளாக தலையை ஆட்டிவிட்டு கிழத்தாதியைப் பார்த்தாள்.

"பிரீதா என் று இனி உன்னை அழைக்க முடியாது குழந்தாய்! நீ குந்தி போஜனின் மகளாகி விட்டாய்.இனி உலகுக்கு குந்தி என்றே அறியப்படுவாய்" என்றார் மகரிஷி துர்வாசர்.

. குந்தி போஜன் நண்பனும் யதுகுல அரசனுமான சுரனிடம் விடை பெற்றுக் கொண்டு நன்கு அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் ஏறினான்.அவர்களுக்கு முன்னும் பின்னுமாக ஏராளமாக பொன்னும் பொருளும் தாங்கிய வண்டிகள் சென்றன.

-----------------------------------------------------------

கிழத்தாதி குந்தியைப் பார்த்து முகிழ்ந்தாள்.அவளுடைய அழகும் புத்திசாலித்தனமும் கிழவியைத் திணற வைத்தது.அழகழகான உடைகளை தேடிபிடித்து குந்திக்கு உடுத்தி தாதி அழகு பார்ப்பாள்.எந்த உடையும் பத்து நாட்களுக்கு மேல் தாங்காது.உடை முழுவதும் குந்தி நிரம்பி வழிவாள்.வயது ஏறிக்கொண்டு வருகிறது. உடலில்சிறு சிறு மாற்றங்கள்.

இப்போதேல்லாம் குந்தி கேட்கும் கேள்விகளுக்கு கிழத்தாதியால் பதில் சொல்லாமலிருக்க முடியவில்லை. ஆண்-பெண் பற்றீ குந்தி கெட்கும் கேள்விகள் விரைவில் அவள் பரிபக்குவம் அடையப்போகிறாள் என்பதி தாதிக்கு உணர்த்தியது.

குந்தி போஜன் குந்தியின் மீது உயிரையே வைத்திருந்தான்.ஆன்டுதோறும் அவளுடைய ஜன்ம தினத்தன்று முனிபுங்கவர்களை அழைத்து நட்சத்திர ஹோமம் நடத்துவான்.

ஹொமத்திற்கு வந்திருந்த துர்வாசர் விடை பேற்று செல்ல வந்திருந்தார்.போஜன் மகள் குந்தியோடு வந்திருந்தவர்களுக்கு தக்க சன்மானங்களைக் கொடுத்துக்கொண்டுஇருந்தான்.

"முனிபுங்கவ! தங்களுக்கு நான் என்ன செய்துவிட்டேன்." துர்வாசரைப் பார்த்துக் கேட்டான்.

"போஜராஜனே! எமது ஆசிரமத்தில் குற்றேவல் புரிய உன் மகள் குந்தியை அனுப்பி வை"என்றார் துர்வாசர். திடுக்கிட்டுப் போன போஜன் இருகரங்களையும் கூப்பி" சுவாமி! அவள் சிறுமி!....அவளால்.."என்றான

"அதனால் தன் கூப்பிடுகிறேன் "

துர்வாசரின் கோபத்தை அறிந்த போஜன் அதற்குமேல் பெசவில்லை.

_______________________________________________

துர்வசரின் ஆசிரமத்தில் ஓடியோடி குற்றேவல் புரிந்து வந்தாள் குந்தி.கிழத்தாதியோடு நதியில் நீராடிவிட்டு பூக்களை பறிப்பாள். மாலைகளைத்தொடுப்பாள். ஒரு நாள் தனிமையில் இருந்த போது கிழத்தாதியை துர்வாசர் தனியாக அழைத்துப்பேசினார்.

"சுவாமி...!"

" குந்தி எப்படி இருக்கிறாள்?" என்று துர்வாசர் தாதியிடம் கேட்டார்.

"சின்னஞ்சீறுமி! ஓடியாடி பூப்பரித்து விளையாடி மகிழ்கிறாள்"

"அவளுக்கு எல்லாம் சொல்லிவத்திருக்கிறாயா?"

" சுவாமி! அவள் சிறுமி..."

"இன்று இரவு அவள் பஞ்சணையில் நீ படுக்க வேண்டாம்"

திடுக்கிட்டு துர்வாசரை பார்த்தாள் தாதி.கண்கள் சிவந்திருந்தன.தாடிக்குள் பருத்த உதடுகள் கோரமாய் வளைந்திருந்தது.

------------------------------------------------------------------------------

" இரண்டு மூன்று நாட்களாக இரவு நீ ஏன் என் பஞ்சணைக்கு வருவதில்லை"குந்தி தாதியிடம் கேட்டாள்.

"---------"

" நான் கேட்கிறேனே பதில் சொல்"

தாதி ந்மிர்ந்து பார்த்தாள். மிரண்டு போன குந்தியின் கண்கள் தெரிந்தன.

" என் அடி வயிறு வலிக்கிறது"

குந்தியை ஆதூரமாக அணைத்துக்கொண்ட தாதி குந்தியின் வயிறை வருடிவிடாள்.

"தாதி! எனக்கு உணவு வேண்டாம்.உணவைப்பார்த்தாலே குமட்டிக் கொண்டு வருகிறது"

'குந்தி! நீ அவரத்தடுக்க வில்லயா?"என்று கேட்ட தாதியையே பார்த்துக் கொண்டிருந்தாள் குந்தி.

" என்ன நடக்கிறது என்பது தெரிவதற்கு முன்பே எல்லாம் நடந்துவிட்டது"

"பிண்?"

" நான் பரிபக்குவம் அடையவில்லை என்று அவரிடம் கெஞ்சினேன்"

-------------------------------------------------------------------------------------

"குந்தி! நீ இப்போது கர்ப்பமாகி இருக்கிறாய்" என்றாள் கிழத்தாதி.



("தீக்கதிர்" பத்திரிகையின் இணைப்பு இதழான" வண்ணக் கதிரில்" 2004ம் ஆண்டு ஜூலை வெளியானது)
   

Sunday, April 21, 2013

சாம்பார் (ஜி )

புராணம் ........!!!


நன் 1948ம் ஆண்டு 12 வயதுசிறுவனாக இருந்த போது முதன் முதலாக நாகபுரி வந்தேன் ! அப்போது என்னை மராட்டிய நண்பர்கள் "மதராசி " என்று அழைப்பார்கள்! அதிலொரு நியாமும் இருந்தது !அன்று இருந்த மதறாஸ் மாகாணத்தில், தெலுங்கு ,கன்னடம்,மலயாளம்,தமிழ்பேசும் மக்கள் வாழ்ந்தனர்! பின்னர் மொழிவாரி மாநிலங்கள்   வந்தன ! 

இப்போது தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களை "இட்லி-சாம்பார் " என்கிறார்கள் !

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் ,சிவாஜி, ஜெமினி ஆகியோர் திரைத்துறை யில் கொடி கட்டி  பறந்து கொண்டிருந்த நேரம்! சிவாஜியும்,எம்.ஜி.ஆறும் திராவிடக்கட்சியில் இருந்தனர்! அதனால் அவர்களுக்கு தன மான தமிழர்களின் வெறித்தனமான ஆதரவு இருந்தது! ஆரம்பகாலத்தில்  அவர்களும் அதனை  தங்களின் முன்னேற்றத்திற்கு லாவகமாக பயன்படுத்தி வந்தனர் ! லால்குடியில் நடந்த மாநாட்டில் "அண்ணா ஆணையிட்டால், கருணா கட்டளையிட்டால் எக்ரிமென்டுகள் எத்தன இருந்தாலும் கிழித்திஎறிந்து விட்டு இயக்கம் காட்டும் பாதையில்செல்வேன்" என்று சூளுரத்தவர் தான் சிவாஜி!

மூகாம்பிகை கோயிலுக்கு போனவர்தான் எம்.ஜி .ஆர்!

இவர்களுடைய ஆதரவாளர்களான திராவிடக் குஞ்சுகள் "ஜெமினி கணேசனை  
"சாம்பார்" என்று கிண்டலடிப்பார்கள் ! ஏன் ? பிற்காலத்தில்கமல  ஹாசனையும்  சாம்பார் என்று கிண்டலடித்தார்கள் !

வடநாட்டில் "சாம்பார் " தமிழனையும்,தமிழ்நாட்டில் பாப்பானையும் கிண்டல் செய்ய பயன்பட்டு வந்த வார்த்தையாக இருந்தது!

சாம்பார் என்பது தமிழ்நாட்டில் ஒரு உணவுப் பொரூள்  ! அதன் மூலம் பற்றி சமீபத்தில் கிடைத்த செய்திகள் வியப்பை அளிப்பதாக இருந்தது !

தமிழ்நாட்டில் தஞ்சை பகுதியில் மராட்டியர் ஆட்சி நடந்தது! சரஸ்வதி மகால் என்ற அற்புதமான புத்தகக் காப்பாகம் அவர்களால்  ஏற்படுத்தப்பட்டது   மராட்டிய மன்னர்கள் கலை ,இலக்கியம்,ஆகிய துறைகளை வளர்த்தெடுப்பதில் அக்கறைகாட்டினர்! 

ஷாஜி ராவ் என்ற தஞ்சை மன்னர் சமையல் கலையிலும் வல்லவர்! தர்பாருக்கு வரும் முக்கிய விருந்தினர்களுக்கு தன்கையால் சமைத்து உணவு பரிமாறுவார்! புதிது புதிதாக செய்து அளிப்பார்!

மராட்டியர்கள் புளியை அதிகம்சேர்க்க மாட்டார்கள் ! அவர்கள் செய்யும் "தால் 
துவரம் பருப்பினை கடைந்து செய்யப்படுவது! அதில் புளிப்பிற்காக எலுமிச்சை சாறை சேர்த்துக் கொள்வார்கள்  உரப்பிற்காக இரண்டு பச்சை மிளகாயை கிள்ளிபோட்டுக் கொள்வார்கள்!

தமிழ் நாட்டு உணவு வகையில் புளி ஒரு முக்கியமான அம்சம்! சில வடநாட்டு நண்பர்கள "இம்லிவாலா " என்று தமிழ்   நாட்டவர்களை குறிப்பிடுவார்கள்!

அரசர் ஷாஜி மராட்டிய 'தால் " ,புளி, காய்நத மிளகாய் மூன்றையும் சேர்த்து ஒரு புதிய குழம்பினத் தயார் செய்தார்! புதிய  பண்டம் செய்தால் அதற்கு பெயர் வைப்பது அவருடைய வழக்கம்!

சிவாஜியின்மகன் "சாம்பாஜி" யின் மீது  மிகுந்த மதிப்புக்கொண்ட அவர் அந்த புதிய குழம்பிற்கு "சாம்பாஜி " என்று பெயர் வைத்தார்!

தமிழ் நாட்டில் ஒரு பழக்கமுண்டு ! ராமன் என்றால் மனிதன்! ராமர் என்றால் கடவுள்! கிருஷ்ணன் என்றால் மனிதன்! கிருஷ்ணர் என்றால் கடவுள்  தங்கள் மரியாதைக்கு உரியவர் என்றால் "ர் " விகுதி போட்டு அழைப்பர்கள் !

"சாம்பாஜி"யை  "சாம்பார் " என்று சொல்ல ஆரம்பித்தார்கள்!

"சாம்பார்" என்ற உணவு வகை மராட்டிய -தமிழக கலப்பு !!




 






  

Monday, April 15, 2013

யாழ் மக்கள் வாக்களித்த 

"சோஷலிச தமிழ் ஈழம் "

எங்கே ?

நம்ம  ஊர் தமிழ் குஞ்சுகள்  ஈழத்திற்காக மக்கள் 1977ம் ஆண்டு தேர்தலில் வாக்களித்து விட்டர்கள் என்று சொல்கிறார்கள் ! அது உண்மை தான்!
என்ன! அது பாதி  உண்மை!

1977மாண்டு நடந்த தேர்தல் பற்றி தேடியபோது சில சுவாரசியமான தகவல் கள் கிடைத்தன!

இந்த தேர்தலில் தமிழார் ஐக்கிய விடுதலைமுன்னணி  போட்டியிட்டது! அவர்களொடு விடுதலைப் புலிகள் இயக்கம் ஆதரவினை நல்கியது !
 ஐக்கிய முன்னணி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் புதிதாக வரவிருக்கும் ஈழம் பற்றி தெளிவாக  குறிப்பிட்டது!அவை :

சோஷலிச தமிழ் ஈழம் 
பொருளாதாரமும்,பிராதான் உற்பத்தி சாதனங்களும் அரசுடமையாக்கும் 
சுரண்டலற்ற ,சாதிகளற்ற சமூகம் 
முஸ்லீம்களுக்கு தன்னாட்சி 
சிங்களர்களுக்குதாய் மொழியில் கலவி 
ஏகாதிபத்திய எதிர்ப்பு 
அணிசெராக்கொள்கை 
விவசாயிகளுக்கு பாதுகாப்பு 
தனிச் சொத்துக்கு உச்ச வரம்பு 
சிங்கள முற்போக்காளர் களோடு நல்லுறவு 
தீண்டாமை ஒழிப்பு!

1977மாண்டு ஜூலை மாதம் இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களின் ஆதரவிக் கேட்டு போட்டியிட்டார்கள்! விடுதல புலிகள் இதனை முன் மொழிந்து ஆதரித்தார்கள்  

தமிழார் ஐக்கிய முண்ணணி அமோக வேற்றி பெற்றது!மொத்தமுள்ள 18 இடங்களையும் வென்றது! இலங்கை நாடாளுமனறத்தில் ஆளும் கட்ட்சிக்கு அடுத்த எண்ணிக்கை கொண்டகட்சியாக வந்தது!

ஆனால் 15-7-89 ம்தேதி தமிழர் ஐக்கிய விதலை முண்னாணியின் தலவர்கள் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோர் விடுதலைப் புலிகளால் சுட்டு கொல்லப்பட்டனர் !

 இதனை அந்த மார்க்சியமாணவன் என்று மார்தட்டிக் கொள்ளும் இயக்குனர் மணிவண்ணன் அவர்களுக்கும்  லயோலா கல்லூரி மாணவர்களுக்கும்
யாராவது தெரியப்படுத்துங்களேன் !










Saturday, April 13, 2013

பாலசந்திரன் படத்தை 

"சானல் 4" க்கு கொடுத்தது யார்?


"தமிழ் தேசீய "குஞ்சுகள் பாலசந்திரன் படம் இந்து பத்திரிகையில்  வந்ததும்போட்டா ஆட்டம் ! எப்பாடி ! 

இந்த படம் எப்படி வெளிவந்தது என்பது ரகசியமாக இருந்தது! அது என்ன ? மற்ற பத்திரிகைகளில் வரவில்லையே ? ஏன் ?

இலங்கை அரசு இலங்கையிலிருந்து வரும் பத்திரிகைகளை அடக்கி வைத்திருந்தது! மீறிய பத்திரிகையாளர்களை கணக்கு பார்த்தது ! சிலர்   தப்பி வெளிநாட்டில் வசிக்கிறார்கள்! இவர்கள் சிங்களர்கள் ! பத்திரிகையாளர்கள் !

மனித உரிமைக்காக உயிரைக் க் கொடுத்து போராட முன்வரும் இடது சிந்தனையாளர்கள்!

பி.பி.சி யோடு நெருக்கமான தொடர்புள்ளவர்கள் ! இலங்கை அரசு செய்யும் கெடுபிடி பிடிக்காமல் (சானல்4)சிங்கள தமிழ் செய்தியை நிறுத்திவிட்டது! 

"சானல்4" க்கு செய்தி கிடைக்காத நிலை !

இலங்கை அரசால் வெளியேற்றப்பட்ட சிங்கள பத்திரிகையாளர்கள் இலங்கையில் இருக்கும் தங்கள் ஆதரவாளர்கள்  மூலம் செய்திகளைச் சேகரித்து கொடுத்து வந்தார்கள்!

 25 பேர் தனியாக ஒரு அமைப்பை நடத்தி வருகிறார்கள்! அதன் மூலம்  இலங்கை அரசுசெய்த்து வரும் செயல்களை வேளிஉலகத்திற்கு கொணடு செல்வது அவர்களுடைய நோக்கம்!

"சாணல்  4" க்கு காணொளியையும் படங்களையும் கொடுத்தவர்கள் இந்த சிங்களர்கள் தான்!

உனக்கு எப்படி தெரியும் ? கேட்பது காதில்விழுகிறது!

"ஜெயா " தொலைக்காட்சியில் "மே 17 " இயக்கத்தை சார்ந்த ஒருவர் பேட்டியின்(14-4-13) போது குறிப்பிட்டார்! 




 





Tuesday, April 09, 2013

சுனிதா வில்லியம்ஸ் ,

ஹரேன் பாண்டே ,

நரேந்திர மோடி ......!!!

இரண்டு நாளாக சில பத்திரிகைகள் நரேந்திர மோடி நாமாவளியை ஆரம்பித்து விட்டன! மோடி முதலமைசராக வருவதற்கு முன் செசுபாய் பட்டேல் முதலமைச்சராக இருந்தார்! சிறு வயதிலிருந்தே ஆர்.எஸ் .எஸ்  காரர் !

மோடி யும் அப்படிபட்டவர் தான்! உள்குத்து வேலைகளில் மோடி செசுவைவிட  கெட்டிக்காரர்! குஜராத்தில் பட்டேல் ஆதிக்கம் அதிகம் 1 மோடி காத்திருந்தார்! எம்.எல்.ஏ க்களை செட்டப்பண்ணி செசுவை பதவி இறக்கினார்!

வாஜ்பாய்,அத்வானி ஆகியோர் தலையிட்டனர்!     மோடி முதலமைச்சர்! செசுபாயின் ஆதரவாளர்கள் முக்கிய அமைசர் பதவி என்பது சமரசதிட்டம் !

சேசுவின் சிஷ்யர் ஹரேன் பாண்டே! உள்துறை அமைச்சரானார்! கோத்ரா சம்பவம்நடந்தது! எறிந்த சடலங்களை கோத்ராவிலிருந்து அகமதாபாத் கொண்டுவந்து காட்சிப் பொருளாக்கி இந்துக்களை உசிப்பிவிட திட்டம் தீட்டப்பட்டது! ஹரேன் பாண்டே இதனை எதிர்த்தார்! கடுமையான விளைவுகள் எற்படும்! அதனை   சமாளிக்கும் அளவுக்கு நம்மிடம் போலிஸ் இல்லை என்று அதனைத் தடுத்து விட்டார்! 

மோடி வேரு வழியில் தன வேலையை செய்து முடித்தார் !

உள் துறை அமைச்சரான பாண்டேக்கு பல விஷயங்கள் தெரியும்.! அவர் செசுபாய் ஆள்! அவர் வாயை அடைக்கவேண்டும் ! பாண்டே காந்தி நகரில் இருக்கும் அலுவலகம் வரும் போது  அலுவலக வாயிலில் அவருடைய கார் நிறுத்தப்பட்டது ! இரன்டு பேர்காருக்குள் இருக்கும் உள்துறை அமைசர்  பாண்டேயை சுட்டனர்! அவர் வாயை மட்டுமல்ல -அவருடைய உடலையும் துணியால் மூடிவிட்டனர்! 

சுனிதா வில்லியம் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் தான் ஹரேன் பாண்டே! பாண்டேயின் மனைவியுடன் தான் தங்குவேன் என்று அறிவித்து விட்டார் !

கொலைகார மோடியை பார்க்க மறுத்துவிட்டார்!

2014ல் மோடி இந்தியாவின் பிரதமராவாரா!?

நீங்க ஓட்டு போட்டால் ஆகலாம்!

போட்றுவீங்களோ !!!







இரண்டு பேர் பாண்டெயைச் ச்ட்டுவுடு ஓடிவிட்டனர்!

Friday, April 05, 2013

"நீயா ? நானா ?"வில் 

சந்திர சேகரன் சொன்னது 

சரிதனா?....!!!

சென்ற வாரம் நடந்த நீயா?நானா? நிகழ்ச்சி காதல் திருமணம் ,சாதீய எதிர்ப்பு, தீண்டாமை என்று பல விஷயங்கள் பற்றி விவாதித்தது!

இந்த  விவாதத்தில் கலந்து கொண்ட சந்திரசேகர் என்ற பார்வையாளர் சில புதிய செய்திகளைச் சொன்னார்!

அவருடைய பேச்சின் மையப்புள்ளியாக " சாதியையும்.தீன்டாமையையும் இங்கு வந்துள்ளவர்கள் தெளிவில்லாமல் பேசுகிறார்கள் " என்பது இருந்தது!  

"சாதி இருந்தது! ஹரப்பா காலத்திலும் இருந்தது ! ஆனல் தீண்டாமை இல்லை !அசோகர் காலத்தில் சாதி இருந்தத்து ! தீண்டாமை இல்லை! நம் நாட்டில் 5000 ஆண்டுகளாக சாதி இருந்தது! தீண்டாமை கி.பி 5ம் நூற்றாண்டில் தான் வந்தது! இன்றைய தலித்துகள் அன்று பௌத்தர்களாக இருந்தவர்கள் " என்று குறிப்பிட்டார்! 

தமிழகத்தைப் பொறுத்தவரை இருண்ட காலம் என்று 2ம் நூற்றாண்டிலிருந்து 5ம் 6ம் நூற்றாண்டு வரை என்பார்கள்! இதே காலம்  களப்பிறர்கள் காலம் என்று கருதுகிறவர்களும் உண்டு! களப்பிரர்கள் பௌத்தர்கள் என்றும் கூறப்படுவதுண்டு!

பண்டய சேர சோழ பாண்டியர்கள் உதிர்ந்த நிலையில் களப்பிறர்கள் ஆண்டனர்! இந்து மதத்தை உயிர்பிக்க வந்த சங்கரர் போன்றோர் 
பௌத்தர்களை களையெடுக்க செய்த யுக்தி "தீண்டாமை" என்றும் கருதுபவர் உண்டு ! 
வரலாற்றாளர்களும் ,அறிவியலாளர்களும் பரிசீலித்து உண்மையை தேடவேண்டும் !!!





டு 

Wednesday, April 03, 2013

(மீள் பதிவு )

Wednesday, April 18, 2012

"கிருஷ்ணா டாவின்ஸி "என்ற "பவர்ஃபுல்" எழுத்தாளரைப் பறிகோடுத்துவிட்டோமே.....
கிருஷ்ணா டவின்சி என்ற பவர்ஃபுல் எழுத்தாளரை பறிகொடுத்துவிட்டோமே..........

விகடன் 18-4-12 இதழில் வெளிவந்த "காலா...அருகே வாடா" என்ற கதையைப் படித்தேன். என்ன பவர்ஃபுல் எழுத்து என்று வியந்து போனேன். கிருஷ்ணா டாவின்சி எழுத்துக்களை விடாமல் படி.த்து வருபவன் நான். பிறகு தான் தலைப்பு பக்கத்தில் ஆசிரியர் குறிப்பில் அவர் மறைந்த செய்தியை கண்டு அதிர்ச்சி யடைந்தேன்.

கிருஷ்ணாவைத்தெரிந்தவர்கள் அவர் எழுத்தின் மூலம் அவரைப் புரிந்து கொண்டவர்கள் ,என் போன்றவர்களின் சோகம் தாங்கமுடியாதது.எந்த அளவுக்கு அவர் விஷய ஞானமூள்ளவர் என்பதற்கு ஒரே ஓரு உதாரணம் "விஜய் டிவி "யில் வரும் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய பங்கு பற்றி நான் கேள்விப்பட்டதை குறிப்பிட்டாலே போதும். அந்தநிகழ்ச்சியின் தயாரிப்பாளர் அதனை நடத்தவிருக்கும் நடிகர் சூர்யாவிற்கு பயிற்சி அளிக்க விரும்பினார். சரியான நபராக கிருஷ்ணாவை தேர்ந்தெடுத்தார். "ஹாட் சீட்டில் "கிருஷ்ணா "அமர சூர்யா ஒரு பாடலை ஒலிபரப்ப அது எந்த படம் என்பதை சோல்லவேண்டும்.பாடல் ஒலித்ததும்" சாய்ஸ்" வேண்டாம் அது "நீழல்கள்" படத்தில் வரும் பாடல் என்றார் கிருஷ்ணா. "மடைதிறந்து பாடும் நதி அலை நான்" என்று வாலி எழுதிய படல் தான் ஒலித்தது..

"டாவின்ஸி" உலகப் புகழ் பெற்ற ஓவியர் மட்டுமல்ல.கணிதமேதை.பொறியியல் மேதை. "பழைய ஏற்பாட்டை" முழுமையாகபுரிந்து கொண்ட மேதை. அதனால் தான் நானும் அந்தப் பெயரை என் பெயரோடு "டாவின்ஸியை" செர்த்துக்கொண்டேன்." என்று தன் பெயருக்குவிளக்கமளித்தவர் கீருஷ்ணா.

திரப்படத்துறையினரோடு மிகவும் நெருக்கமான தொடர்பு கொண்டவர்.இயக்குனர்கள் ராம், லிங்குசாமி ஆகியொர் அவருக்கு வேண்டியவர்கள். குமுதம் பத்திரிகையிலிருந்த போது "அரசு" பதிலகளை எழுதியவர்.

தபால்துறைதொழிற்சங்கதலைவர் தோழர் பஞ்சாபகேசனுக்கு உறவினர்.மார்க்ஸீய சிந்தனை வசப்பட்டவர்.

விகடனில்வந்த அவருடைய கதையின் நாயகன் பெயர் முருகேசன். அது அவர்தான் என்பதை நீனைக்கும் போது தொண்டைஅடைக்க இதயம் விம்முகிறது.










long live 

A .I  .D  .W  .A .....!!!

"அபிராமி காதலித்து திருமணம் செய்து கொண்டார்! அவர் கணவர்பெயர் மாரிமுத்து ! பட்டதாரி வாலிபர்."வோடபோன்"  ல்  வேலை பார்த்தார். 

அபிராமியின் குடும்பத்தினர் ஏற்கவில்லை ! காரணம் மாரிமுத்து தலித் குடும்பம்!  அவருடைய தாயார் சொல்லிப்பார்த்தார் ! அபிராமியும் படித்தவர் ! திருமணம் என்றால் மாரிமுத்துவோடுதான் என்று சொல்லிவிட்டார்!


குடும்பத்தினர் வேறு  மாப்பிள்ளையோடு திருமண எற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தனர்! அபிராமி  ரவோடு ராவாக வீட்டை விட்டு வெளியேறினார் ! மாரிமுத்துவும் அபிராமியும் திருமணம் செய்துகொண்டனர்! கிராமத்தில் இருக்க முடியவில்லை!

சென்னை வந்தனர் ! ஓராண்டு தனியாக வாழ்ந்தனர்! குழந்தைபிறந்தது ! சொற்ப சம்பளத்தில் வாழ்க்கையை ஒட்டமுடியவில்லை! பல நாள் பட்டினி! குழந்தையோடு சமாளிக்க முடியவில்லை! செத்தாலும் சொந்தகிராமத்திற்கு போய் சாகலாமென்று தம்பதியர் முடிவு செய்தனர்!

கிராமத்தில் அபிராமியின் உறவினர்கள் ஏற்கவில்லை!   ஏமாற்றி மாரிமுத்துவை அழைத்துச் சென்று கொன்றுவிட்டனர் ! "


31-3-13 அன்று" நீயா நானா" நிகழ்ச்சியில் அபிராமி கண்ணீரோடு சொன்ன தாவல்  இது!  
தொகுப்பாளர் கோபிநாத் முகம் வாட மௌனமானார்! பார்வையாளர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தனர்! 

"கூலி வேலைக்கு  போகமுடியவில்லை! வேலை தர மறுத்தார்கள்! 
குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டினார்கள்! அந்தக் குழ்ந்தை தலித்துக்குப் பிறந்ததாம் !"
"அப்புறம் எப்படி அம்மா?" கோபிநாத ஆதுரமாக கேட்டார் !
மீண்டும் நிசப்தம் !

"சனநாயக மாதர்சங்கமும்,கம்யூனிஸ்டுகளும் தான் அடைக்கலம்தந்தார்கள் "
 
பார்த்துக் கொண்டிருந்த என் கண்கள் கசிந்தன! இதயம் மேலேறி தோணடைகுழியை அடைத்தது ! இரண்டு கைகளையும் தட்டினேன்! அருகில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த மைத்துனர் பிரண்டு படுத்தார் !

அம்மா ஜானகி அம்மா !

அம்மா  பாப்பா அம்மா!

மைதிலி அம்மா !!

RED SALUTE TO  YOU COMRADES !

LONG LIVE A.I .D.W.A !!! 








Tuesday, April 02, 2013

(தமிழ் எழுதப் படிகத் தெரிந்த ஒவ்வொருவரும் அறிந்து ஒள்ள வேண்டிய பதிவு )
"the making of the Madras working class "
‘புதுதில்லி, ஏப். 2-
தோழர் திலீப் என்கிற வீரராகவன் எழுதிய சென்னைப் பெருநகர தொழிற்சங்க வரலாறு (The Making of the Madras Working Class) என்னும் புத்தகம் லெப்ட்வேர்ட் பதிப்பகத்தால் பிரசுரிக்கப்பட்டு அவர்களது அலுவலகமான ‘‘மே 1’’ அரங்கத்தில் மார்ச் 21 அன்று வெளியிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் நூலினை வெளியிட்டுப் பேசியதாவது:
‘‘தோழர் திலீப் என்கிற வீரராகவன் எழுதிய ‘‘சென்னைப் பெருநகர  தொழிற்சங்க வரலாறு’’என்னும் புத்தகத்தை வெளியிடுமாறு நான் பணிக்கப்பட்டிருக்கிறேன். இந்தப் புத்தகம் லெஃட்வேர்ட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. பொதுவாக புத்தக வெளியீட்டாளர்களே புத்தகத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொள்வதில்லை. எனினும் இப்புத்தகத்தின் உள்ளடக்கம் என் நெஞ்சை மிகவும் தொட்டுவிட்டதால் நான் இதனை வெளியிட ஒப்புக்கொண்டேன்.
நான் பார்த்த, படித்த புத்தகங்களிலேயே இந்தப் புத்தகம்தான் சென்னை மாநகரத் தொழிலாளர் வர்க்க இயக்கத்தைக் குறித்துப் பேசிடும் முதல் புத்தகமாகும். இப்புத்தகத்தில் 1918க்கும்  இரண்டாம் உலகப்போர் துவங்கும் காலம் 1939க்கும் இடையிலான காலகட்டத்தைக் குறித்து எழுதப்பட்டுள்ளது.
தோழர் திலீப் வீரராகவன் சென்னை மாநகரத்தில் தொழிற்சங்க இயக்கத்தின் ஆரம்பகால கட்டங்கள் குறித்தும், சென்னை மாநகரத்தில் தொழிற்சாலைகளும்  தொழிலாளர்களும் உருவான பின்னணி குறித்தும்  இந்தப் புத்தகத்தில் விவரித்திருக்கிறார்.
1918இல் மதராஸ் லேபர் யூனியன் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே முதலாவதாகப் பதிவு செய்யப்படட தொழிற்சங்கமாக மதராஸ் லேபர் யூனியன்தான்  கருதப்படுகிறது.  மதராஸ் லேபர் யூனியன் மிகவும் நெருக்கமாக ‘பின்னி’ என்று அழைக்கப்படும் பக்கிங்காம் மற்றும் கர்நாடிக் ஆலையுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கிறது. சென்னை மாநகரில் இருந்த மிகப்பெரிய டெக்ஸ்டைல் ஆலை இது. இவ்வாலை 1980களில் முற்பகுதியில் மூடப்பட்டது.  1918இலிருந்து ‘பின்னி’ ஆலைதான் சென்னை மாநகரில் தொழிற்சங்க இயக்கத்தின் மையமாக இருந்திருக்கிறது.  பம்பாய் மற்றும் கல்கத்தா மாநகரங்களோடு ஒப்பிடும்போது அங்கேஇருந்த அளவிற்குத் தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாக சென்னையைச் சொல்ல முடியாது. பிரிட்டிஷார், சென்னையை தங்களுடைய அரசியல், நிர்வாகம் மற்றும் வர்த்தக மையமாகத்தான் நீடிக்கவேண்டும் என்று விரும்பியதால், இங்கே தொழிற்சாலைகள் திறக்கப்படுவதை அவர்கள் ஊக்குவிக்கவில்லை. டெக்ஸ்டைல்கள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள், சில இன்ஜினியரிங் தொழில்பிரிவுகள், டிராம், பஸ் போக்குவரத்து ஆகியவைதான் இங்கே இருந்திருக்கின்றன. இவை குறித்து இப்புத்தகத்தில் நன்கு சித்தரிக்கப்பட்டிருப்பதோடு, அங்கே தொழிற்சங்க இயக்கங்கள் உருவாகி வளர்ந்ததையும் வீரராகவன் மிகவும் நன்றாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
மதராஸ் லேபர் யூனியன் எவரும் எதிர்பார்க்க முடியாத பின்புலத்திலிருந்த வந்துள்ள மக்களால் தொடங்கப்பட்டது. இந்த சங்கத்தைத் துவங்கிய தலைவர்களில் மிகவும் முக்கியமாகக் கருதப்படுபவர் ஒரு மத நிறுவனத்தை நடத்தி வந்தவராவார். அவரது பெயர் ஜி. செல்வபதி செட்டியார். அவர் தன்னுடைய மதநிறுவன வளாகத்திலேயே ஓர் அரிசிக் கடையும் வைத்திருந்தார்.  தொழிலாளர்கள் அவரது கடைக்குச் சென்று அரிசியும், அதற்கு அடுத்த கடையில் எண்ணெய்யும், அதற்கு அடுத்ததாக இருந்த கடையில் துணிமணிகளும் வாங்கிச் செல்வது வழக்கம். இக்கடைகளின் உரிமையாளர்கள் என்ற முறையில் இங்கே கடை வைத்திருந்த இவர்களுக்குத் தொழிலாளர்களின் வாழ்வு குறித்தும், அவர்களின் பிரச்சனைகள் குறித்தும் தெரியும். இவர்கள்தான் மதராஸ் லேபர் யூனியன் தொடங்குவதற்கும் கருவிகளாக இருந்திருக்கின்றனர். உண்மையில் தோழர் வீரராகவன் மேற்படி செல்வதி செட்டியாரை சந்தித்து பேட்டி எடுத்திருக்கிறார். மேற்படி செல்வதி செட்டியார் 1985 வரை வாழ்ந்திருக்கிறார்.
மதராஸ் லேபர் யூனியன் உதயமானதை அடுத்து அது சென்னையைச் சுற்றியுள்ளள தொழிற்சாலைகளில் பணியாற்றிய தொழிலாளர்கள் மத்தியிலும் சங்கங்கள் தொடங்குவதற்கான தூண்டுதலை ஏற்படுத்தியது.
தோழர் வீரராகவன் இந்தப் புத்தகத்தில் ‘பின்னி’யில் ஆரம்ப காலங்களில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் குறித்து நன்கு விளக்கியிருக்கிறார். மேலும் இப்புத்தகத்தில் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக நீடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்தும் விவரித்திருக்கிறார்.
சென்னையில் அப்போது ரயில்வே கம்பெனி ஒன்று உருவாகி இருக்கிறது. மதராஸ் மற்றும் தெற்கு மராத்தா என்று பெயரிடப்பட்டிருந்த அந்த ரயில்வே கம்பெனியில் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் நடைபெற்றிருக்கிறது.  அந்த சமயத்தில் ரயில்வே தொழிலாளர்கள் நடத்திய் வீரஞ்செறிந்த வேலைநிறுத்தம் குறித்து வீரராகவன் மிகவும் அருமையான சித்திரத்தை வழங்கியிருக்கிறார்.
தொழிற்சங்க இயக்கத்தை செல்வபதி மற்றும் சுயாட்சி இயக்கத்தை (Home Rule Movement) சேர்ந்த பல தலைவர்கள் தலைமையேற்று நடத்தி இருக்கின்றனர். சென்னைதான் இந்திய பிரம்மஞான சங்கத்திற்கும்,  அன்னி பெசண்ட் அம்மையாரின் சுயாட்சி இயக்கத்திற்கும் தலைமையகமாக இருந்தது என்பதும் உங்களுக்குத் தெரியும். இவர்கள்தான் தொழிலாளர்களின் இயக்கங்களுக்கு ஆரம்பகாலத்தில் தலைமை வகித்திருக்கிறார்கள். மிகவும் ஆர்வத்தை அளிக்கக்கூடிய நபரான பி.பி. வாடியா பிரம்மஞான சங்கத்துடன்தான் நெருக்கமாக இருந்து வந்தார். இவர்தான் மதராஸ் லேபர் யூனியனுக்கும் ‘பின்னி’ ஆலைத் தொழிலாளர்களுக்கும் தலைமை வகித்துள்ளார். இவ்வாறு சங்கத்தின் தலைவர்களாக சீர்திருத்தவாதிகள்தான் இருந்திருக்கின்றனர் என்றும் அவர்கள் சுயாட்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது பிந்தைய காலங்களில் காங்கிரசைச் சேர்ந்தவர்களாகவோ இருந்திருக்கிறார்கள் என்று வீரராகவன் சுட்டிக்காட்டியுள்ளார்.
1933க்குப்பின்னர்தான் இடதுசாரி சக்திகள் முன்னுக்குவருகின்றன. தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படும் சிங்காரவேலர்  தொழிலாளர்களின் சங்கங்களை அமைக்கிறார்.  தொழிலாளர் வர்க்கத்தின் பல போராட்டங்களுடன் தன்னை இணைத்துக் கொள்கிறார். ஆயினும் அவர் அந்த சமயத்தில் தொழிலாளர்களுக்கென்று ஓர் அமைப்பினைக் கட்டத் தவறிவிடுகிறார். அவர் அந்நாட்களில் தமிழ்நாடு மற்றும் சென்னை மாநகரின் தொழிற்சங்க இயக்கத்தில் குறிப்பிடத்தக்க விதத்தில் பங்கேற்றிருக்கிறார். ஆயினும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும், ‘தாதா’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட அலீம் ஹைதர் கான் முயற்சியால் முதல் கம்யூனிஸ்ட் குழுவும் உருவானபிறகுதான்  தொழிற்சங்க இயக்கத்தில் இடதுசாரித் தலைமை வெளிப்படத் துவங்கியது.  தோழர் பி.ராமமூர்த்தி மற்றும் பல தலைவர்கள் அதன்பின்னர்தான் தொழிற்சங்க இயக்கத்துடன் அறிமுகமானார்கள்.
வீரராகவன் இவர்களில் பலரைச் சந்தித்து பேட்டி கண்டிருக்கிறார். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தேசிய இயக்கத்திலும் அகில இந்திய அளவில் தொழிற்சங்க இயக்கம், விவசாய இயக்கம் ஆகியவற்றைக் கட்டுவதிலும் முன்னணியில் இருந்திருக்கிறது. ஆயினும் சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி அத்தகையதொரு நிலையைப் பெற முடியவில்லை. உண்மையில் தோழர் பி.சுந்தரய்யா தன் கம்யூனிஸ்ட் பணியை சென்னையிலிருந்துதான் துவங்கினார். ஆயினும் தொழிற்சங்க இயக்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு என்பது துவக்கத்தில் இல்லை. மேலும் சென்னை, தொழிற்சங்க இயக்கத்தின் மையமாகவும் அப்போது மாறவில்லை.
வீரராகவன் அப்போது தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபட்ட சீர்திருத்தவாத் தலைவர்கள் குறித்து மிகவும் விமர்சனரீதியாக இந்நூலில் எழுதியிருக்கிறார். பல சமயங்களில் ‘பின்னி’ தொழிற்சாலையில் வேலைபார்த்த தொழிலாளர்கள் சீர்திருத்தவாதத் தலைமையைவிட வேகமாக முன்னேறிச் சென்றிருக்கிறார்கள். தலைவர்களின் விருப்பங்களையெல்லாம் மீறி முன்னேறியிருக்கிறார்கள்.  வாடியோ போன்று தலைமை தாங்கியவர்களின் உணர்வுகளை முழுமையாக மதிக்கக்கூடிய அதே சமயத்தில், தொழிலாளர்களின் வாழ்க்கை மீது அவர்கள் மனப்பூர்வமாகக் கரிசனம் கொண்டிருந்தார்கள் என்பதையும் ஒப்புக்கொள்ளும் வீரராகவன், அவர்கள் புரட்சியாளர்கள் அல்ல என்பதையும், புரட்சிகர தொழிற்சங்க இயக்கத்தின் சிந்தனைகளை அவர்கள் பெற்றிருக்கவில்லை என்பதையும் மிகச் சரியாகச் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அன்றைய சென்னைத் தொழிற்சங்க இயக்கம் குறித்து ஆய்வு செய்துள்ள வீரராகவன் நான்கு விதமான முடிவுகளுக்கு வருகிறார். அவை நான்கும் மிகவும் சரியானவைகள் (valid and correct) ஆகும்.
முதலாவதாக, அன்றைய தினம் காங்கிரஸ் கட்சியால் தலைமை தாங்கப்பட்ட தேசிய இயக்கம் குணாம்சத்தில் முதலாளித்துவ (பூர்சுவா) மனப்பான்மையைப் பெற்றிருந்தது. எனவே அது,  பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்திற்குக் கொடுத்த முக்கியத்துவத்தை, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்குக் கொடுக்காதது மட்டுமல்ல, அவற்றை மூடி மறைத்திடவும் முயற்சிகளை மேற்கொண்டது. தொழிலாளர்கள் மத்தியில் சோசலிச மற்றும் கம்யூனிச சிந்தனைகள் வளரத் தொடங்கியதைக் கண்டு அது அவர்களை அணிதிரட்டுவதையே குறைத்துக் கொண்டுவிட்டது.
இரண்டாவதாக, இடதுசாரி சக்திகள் தலைமையில் இருந்த இயக்கங்கள் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் கடும் அடக்குமுறையை ஏவி அவற்றை நசுக்குவதில் வெற்றி கண்டன. இது சீர்திருத்தவாதத் தலைவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததோடு, தொழிலாளர்களைத் தங்கள் கீழ் வைத்துக்கொள்வதிலும், அரசியல் நடவடிக்கைகளில்  ஈடுபடாமல் வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளை மட்டும் எழுப்புவதோடு தங்களைச் சுருக்கிக் கொள்வதிலும் நிறைவடைந்தனர்.
மூன்றாவதாக, காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவர்களும் கம்யூனிஸ்ட்டுகளும் தொழிற்சங்க இயக்கத்திற்குள் தாமதமாக வந்தபோதிலும், அரசின் கடும் அடக்குமுறை காரணமாக அவர்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. சீர்திருத்தவாதத் தலைவர்களையும் அவர்களால் புறந்தள்ள முடியவில்லை.
நான்காவதாக, இந்திய சமூகம் பல்வேறு கலாச்சாரங்களையும், பலவீனங்களையும் உள்ளடக்கிய ஒன்று. நிலப்பிரபுத்துவ, சாதிய மற்றும் வகுப்புவாத சிந்தனைகள் மிகவும் மோசமானமுறையில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு சமூகமாக இது இருந்ததால், தொழிலாளர்கள் மத்தியில் புரட்சிகர வர்க்க உணர்வு உருவாவதற்கு அவை மாபெரும் தடைக்கற்களாக அமைந்திருந்தன.
இவ்வாறு வீரராகவன் மிகவும் சரியான முறையில் முடிவுக்கு வருகிறார்.
வீரராகவன் தன் கண்பார்வையை இளம் வயதில் இழந்து விடுகிறார். இப்புத்தகத்திற்கான ஆராய்ச்சியை மேற்கொள்ளும்போது அசாத்தியமானமுறையில் தன் நினைவுகளின் அடிப்படையிலேயே இதனை எழுதியிருக்கிறார். இதனை எழுதும் காலத்தில் ஆவணங்களைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் மட்டும் அவர் இதனை எழுதிடவில்லை. அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் பி.ராமமூர்த்தி, வி.பி. சிந்தன் போன்ற அனைவரையும் சந்தித்து, அவர்களைப் பேட்டி கண்டிருக்கிறார். தோழர் வி.பி. சிந்தன் என்னை ஆகர்ஷித்ததைப்போலவே, வீரராகவனையும் கணிசமான அளவிற்கு ஆகர்ஷித்திருக்கிறார்.
மாணவராக இருந்த காலத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். அப்போது நடைபெற்ற அரசியல் நடவடிக்கைகளில் அனைத்திலும் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்திருக்கிறார். தொழிலாளர்கள் நடத்திடும் வாயில் கூட்டங்கள், வேலை நிறுத்தங்கள் அனைத்திலும் அவரைக் காண முடியும்.
இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு வீரராகவனுக்குத் துணையாக இருந்தவர்களில் தோழர் எஸ்.எஸ். கண்ணன் மிகவும் முக்கியமானவர். காரல் மார்க்ஸ் நூலகம் என்று தனியார் நூலகத்தைத் தன்னந்தனியாக நடத்தி வரும் அவருக்கு வயது 90. அவர் வீரராகவனுக்கு இப்புத்தகத்தை எழுதுவதற்கு படிப்பவராக (scribe-ஆக) இருந்ததுடன், புத்தகங்களை சேகரிப்பதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருந்தார். இவரது தமிழாக்கத்தில் இப்புத்தகம் ஏற்கனவே தமிழில் வெளிவந்துவிட்டது.
இந்தப் புத்தகத்தை வெளியிடுவதில் லெப்ட்வேர்ட் மிகவும் பெருமைப்படுகிறது. இதனை மிகவும் பாராட்டுவதுடன், அனைவரும் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார். பின்னர் இதனை அவர் வெளியிட  முதுபெரும் அறிஞர் ஜி.பி. தேஷ்பாண்டே அதனைப் பெற்றுக்கொண்டார்.  லெப்ட் வேர்ட் மேலாண்மை ஆசிரியர்  சுதான்வா தேஷ்பாண்டே (மேனேஜிங் எடிட்டர்) நிகழ்ச்சிக்குத் தலைமைவகித்தார்.
(தொகுப்பு: ச.வீரமணி)
Posted by ச. வீரமணி: at 12:34 AM No comment