Monday, July 28, 2014


தோழர் சங்கரய்யாவும் ,

என் திரை உலக வாழ்க்கையும் ...!!!


1979 ஆண்டாக இருக்கலாம் ! சிகரம் செந்தில் நாதனிடமிருந்து கடிதம் வந்தது ! "யுக சந்தி "பிலிம்ஸ் "தாகம்" நாவலை திரைப்படமாக எடுக்கிறது ! முதல்  ஷெட்யுல் நாமக்கல்லில் தொடங்குகிறது ! உங்களுக்கு அதில் பங்கு இருப்பதால் உடனேயே சென்று கு.சின்னப்பா பாரதியை தொடர்பு கொள்ளவும் " என்று தகவல் !

" அன்னக்கிளி  " செல்வராஜ் இயக்கம் ! அன்னக்கிளி,பதினாறு வயதினிலே , கிழக்கே போகும் ரயில்,புதிய வார்ப்புகள் என்று பாரதி ராஜா,இளையராஜா,செல்வராஜ்மூவரும்கோடம்பாக்கத்தபுரட்டிபோட்டுக்கொண்டிருந்த நேரம் !  தாகம்  நாவலை "புதிய அடிமைகள் " என்ற பெயரில் படமாக்க முடிவாகியது ! திரைகதையை இயக்குனர் அமைக்க சின்னப்பபாரதி வசனம்! இளையராஜா இசை ! தணிகை  செல்வன் பாடல்களை எழுது கிறார் ! அன்று இரவே புறப்பட்டு விட்டென் !

கதாநாயகனாக கன்னட நடிகர் குமார ராஜா ! கதாநாயகி மறந்த இ.ஆர்.சகாதேவன் மகள்விஜயலட்சுமி ! சிலோன் சின்னையா ! நிலஉடைமையாராக காஸ்யபன் ! அவரது மனைவியாக மதுரை ஜெயந்தி ! ! மற்றும் மாதுரை மில் தொழிலாளி துரைராஜ் ! 

முதல் ஷெட்யுலில் எனக்கு வேலை இல்லை ! பத்து நாளும் சின்னப்ப பாரதிக்கு உதவியாக  இருந்தேன் !

பாரதியால் முழுமையாக வசனத்தில்கவனம்செலுத்தமுடியவில்லை ! தயாரிப்பு,நிதி ஏற்பாடு என்று மூழ்கிவிட இயக்குனரே அதனையும் பார்த்துக் கொண்டார் ! "தாகம் : நாவலிலிருந்து திரைக்கதை திசை மாறி விட்டது !

நிலச்சுவான்தாராக நடிக்கும் எனக்கு கதைப்படி ஒருமகன்புத்தி சுவாதீனமில்லதவன் ! அவனுக்கு ஒரு ஏழைப்பெண்ணை ஏமாற்றி திருமணம் நடக்கிறது !மாமனாரே  அந்தப் பெண்ணை பெண்டாள்வதாக  கதை !மருமகளை சீண்டும் காட்சி ! மாமனாராக நான் !

பத்து வருடம் பதினைந்து வருடம் கோடம்பாக்கத்தில் நடிக்க  அலைந்தும்கிடக்காத வாய்ப்பு எந்த சிரமுமில்லாமல் எனக்கு கிடைத்தாலும் இப்படி ஒருகாட்சி முதன் முதலாகவருவதை எண்ணி நொந்து நூலகிப் போனேன் !

காமிரா வளையத்திற்குள் இயக்குனர் நிற்கச் சொன்னார் ! அந்த பெண்ணை பார்த்து நான் என் கண்களில் இச்சையைக் காட்டி நேருங்க வேண்டும் என்றார் ! முதலில் சுற்றிலும் பாருங்கள் ! பின்னர் நெருங்குங்கள் ! என்றார் !

ஒத்திகை ! நான் நின்றேன் ! வலது புறம் பார்த்தேன் ! ஜன்னல் வழியாக நிறையபேர் ஷூட்டிங்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் ! சங்கடமாக இருந்தது ! இடது புறம் பார்த்தேன் ! திடுக்கிட்டேன் ! அங்கு ஜன்னலருகில் ஒர்நாற்காலியில் அமர்ந்துகொண்டு ஷூட்டிங்கை பார்த்துக் கொண்டிருந்தார் தோழர் சங்கரய்யா அவர்கள் ! நாடி நரம்புகள் தளர  "ஆத்தாடி நான் வரலை " என்று கூவிக்கொண்டே ஓடிவிட்டேன் !

செல்வராஜ் ஒடிவந்து என்ன என்ன என்று கேட்டார்!" தலைவர் முன்னால் இப்படி நடிக்க  முடியாது ! என்னய்யா அநியாயம் " என்றேன் ! சங்கரய்ய அவர்களின் அண்ணன் ராமானுஜம் ! அவருடைய மகன் தான் செல்வராஜ் ! "சின்னையா" என்று கூறி  கொண்டெ சென்று அவர் கதைக் கடித்தார் !

 தலைவர் எழுந்து சென்றார் ! 

"புதிய அடிமைகள் " படத்தோடு என் திரை  உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டேன் !Friday, July 25, 2014

"நமஸ்தே சதா வத்சலே மாத்ரு பூமி !!!"


மூடப்பழக்க வழக்கங்களை முடிவுக்கு கொண்டுவர தன்  வாழ்  நாள் முழுமையும் போராடியவர் டாக்டர் .நரேந்திர தபோல்கர் !

பில்லி ,சூனியம், பேய்,பிசாசு ஓட்டும் மந்திரவதிகளிலிருந்து, ஏசு  வருகிறார் ,புட்டபர்த்தி   சாய்பாபா என்ற போலிச்சாமியார் வரை ஓட ஓட விரட்டியவர் அவர் !

ஏசுவின் கண்களிலிருந்து கண்ணிர் வருகிறது என்று கூறி அதனை புனித நீராக குடிக்கும் கிறிஸ்தவர்களிடம் அது புனித நீரல்ல , மாடியில் உள்ளகழிபிடத்திலிருந்து கசியும் "கழிவு நீர்" என்று நிருபித்த "இடமருகு" அவர்களின் துணையாக இருந்தவர்" தபோல்கர் "!

மராட்டிய மாநில மூட நம்பிக்கை ஒழிப்பு இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் அவர் !  

2013ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20   நடை பயிற்சியில் சென்று கொண்டிருந்த போது அவரை சுட்டுக் கொன்றார்கள் !

மராட்டிய முதல்வர் காந்தியைக் கொன்றவர்கள் தான் தபோலகரையும் கொன்றார்கள் என்று பகிரங்கமாக அறிவித்தார் !

மூட நம்பிக்கையை ஒழிப்பதற்கான அவசர சட்டத்தையும் அறிவித்தார் !

இந்த கொலைகாரர்களைகண்டுபிடிக்க புனே நகர போலீஸ் கமிஷனர் "குலாப் ராவ்  போல் "தலைமையில்  ஒரு குழு செயல் பட்டு வருகிறது ! 

ஒருவருடம் நெருங்கி விட்டது ! அவர்களால் "கண்டுபிடிக்க" முடியவில்லை !

தற்போது புதிய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் ! 

விளக்கு ஏற்றி கோலம் போடுகிறார்கள் ! அதன் முன் கோலம் போட்டு ஒருபலகையை வைத்தார்கள் ! சாமிகும்பிட்டு அதன் மெலொருகிண்ணத்தை வைத்து "ஆவி" யை வரவழைத்து "குறி "கேட்கிறார்கள் !

"Gulaab rao Pol  using  planchet to crack Narendra Dabholkar s  murder mystery " TOI - 26-7-14   

"நமஸ்தே சதா வத்சலே மாத்ரு பூமி "

(என் பிரியமான தாய் நாடே  உன்னை வணங்குகிறேன் ) 
Thursday, July 24, 2014

இந்த அதர்ம யுத்தத்தை 

நடத்துவதே அமேரிக்கா தானே .....!!!
உலகத்தின் முதல்  "அதர்மயுத்தம் " பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்வாவால் குருஷேத்திரத்தில் நடை பெற்றது என்று பௌராணிகர்கள் கூறுவார்கள

எப்படியாயினும் வெற்றி பெறவேண்டும் ! தார்மிக நெறிமுறைகள், எதைப் பற்றியும் கவலைப்படாமல் போர் புரிய வேண்டும் ! குழந்தைகள் ,முதியோர் ,நோயாளிகள் , என்று விதி பார்த்து பேர் நடத்த வேண்டியதில்லை ! 

அப்பாவி மக்களைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை ! நவீன கிருஷ்ண பரமாத்மாவாக அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்து வருவதும், உலக சண்டியர்களுக்கு உதாரணமாக  இருப்பதும் அதுதான் !

கஷ்மீரில் தீவிர வாதிகள் அப்பாவி பொதுமக்களைகேடயமாக பயன்படுத்தி ராணுவத்தை தாக்குவார்கள் ! பதில் தாக்குதலுக்கு   ராணுவம் தயங்கும் ! எதிர்த்து தாக்கினால் பலியாவது யார் பாதுகாப்புக்காக ராணுவம்வந்ததோ அவர்களுக்குத்தான் சேதம் !

ஆப்கானில் இது தான் நடந்தது ! இலங்கையில் இதுதான் கொஞ்சம் மாறி நடந்தது ! 

தரையில் மக்களை கேடயமாக பயன்படுத்துவது போய் வானிலும் மக்களை பயன்படுத்த "உக்ரைன் " ராணுவம் ஆரம்பித்து விட்டது ! 

எதிப்பாளர்கள் வசமிருக்கும் பகுதிகளைத் தாக்க வானிலிருந்து குண்டுகளை போடவேண்டும் ! எதிர்ப்பாளர்களின் தாக்குதலிலிருந்து தப்ப ஒரு கேடயம் வேண்டும் ! தன்  ராணுவ விமானத்திற்கு கேடயமாக பயணிகள் விமானத்தை பயன் படுத்தியது !

இராக்,ஆப்கன், போன்ற பகுதிகளின் வானில் பயணிகள் விமானம் பறக்க அனுமதிப்பதில்ல !

"உக்ரைன்" அரசு மட்டும்   அனுமதித்து ஏன்?

மலேசிய பயணிகள் விமானத்திற்கு பாது காப்பு என்ற பெயரில் இரண்டு ராணுவ விமானங்கள்  ஜூலை 17ம்  தேதி  சென்றதா? 

ஜூன் மாதம்  16ம்தேதி பயணிகள் விமானத்திற்கு பாதுகாப்பாக சென்ற "உக்ரைன்" ராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா?

இந்த கேள்விகளுக்கு விடை அமெரிக்காவுக்கு தெரியும் !

சர்வ தேச விமான போக்குவரத்து மையத்திற்கு (IA tA ) வுக்கு தெரியும் !!

பிரிட்டனுக்கு தெரியும் !!!


Wednesday, July 23, 2014

"சுப்பிரமணியம் சாமி "

தானடித்த மூப்பாளர் .... !


சுப்பிரமணியம் சாமி ஒரு "தானடித்த மூப்பாளர்" என்று அமெரிக்க பதிவாளர் கணேசன் A  சுந்தர் என்பவர்  தன்னுடைய இடுகை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் !

இதற்கு ஆதாரமாக சு .சாமி ன்   பேச்சை யும்மேற்கோள் காட்டியுள்ளார் !

பாபர் மசூதி இடிக்கப்பட்டு மூன்று  மாதம் கழித்து ஹைதிராபாத்தில் உள்ள மதினா கல்வி அறக்கட்டளையில் 1993ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் பேசினார் !

"ஆர்.எஸ்.எஸ்  பைத்தியங்கள் தான் இதைச் செய்தனர் ! அவர்களின் முகமூடிதான் பா.ஜ.க "

" அவர்கள் "இந்து" ஆதரவாளர்கள் அல்ல ! மாறாக முஸ்லீம் எதிர்ப்பாளர்கள் மட்டுமே "

"அரசியல் சட்டம் 370  ஐ எதிர்ப்பார்கள் ! ஆனால் 371 a பற்றி வாயைத் 
   திறக்க  மாட்டார்கள் "

"இதன் படி மிசோரம்,அரூ ணசல பிரதேசம், ஹிமாசலபிர்தேசம் , தெலுங்கானா ஆகிய பகுதிகளில் நிலம் வாங்க முடியாது என்பதை ஆதரிப்பார்கள் " 

"இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து போராடித்தான் சுதந்திரம் பெற்றோம் ! அவ்ர்கள் சவூதி அரேபிய முஸ்லிம்களல்ல ! இந்தியர்கள் "

"சோனியா காந்தி அம்மையார்  " சரஸ்வதி தேவி"க்கு சமமானவர் !"

"வாஜ்பாய் குடிகாரர் ! ஸ்திரி லோலர் "  

வாஜ்பாய் அரசை ஆதரித்தார் ! பின்னர் காங்கிரசோடு சேர்ந்து அதன கவிழ்த்தார் !

அவருக்கு அமைசர் பதவிக்கான இலாகா சரியாக கொடுக்கவில்லை என்பதற்காக !

இவரை தகாடியாவும் ,சிங்காலும் ஆதரிக்கிறார்கள் ! ஹார்வர்டில்  படித்தவர் ! வெளிநாட்டில் பிரச்சாரம் செய்ய பயன்படுவார் என்று இருவரும் நினைக்கிறார்கள் !

சரி ! மோடி ஏன் அனுமதிக்கிறார் ! மோடியப் பற்றியும் எதையாவது ஒளறிக் கொட்டினால் ! "சனியன் ஒரு மூலைல கிடக்கட்டும்" ங்கிற நினைப்பு தான் !

சு.சாமியை ஆத்திரமூட்டாம பாத்துகிடுதாங்க !

"எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் " நு செய்யரவரு !  என்னிக்கு என்ன செய்வாருனு கவலைல  தான் ப.ஜ.க தலைமையும் இருக்கு !  

"ஜனதா கட்சியினுடைய அகில இந்திய தலைவராக இருந்தவரு ! தமிழ் மாநில தலைவராக முடியுமான்னு பாத்தாரு ! முடியல !

பாஜக அகில  இந்திய தலைவரு அமித் ஷா ! 

தன்னோட வாய்ப்புகளை இவர்தான் கெடுக்கிறரோ நு சு.சாமி நினைக்காராம் ! 

நினைக்கட்டும் !!! நல்லது தானே !!!! Saturday, July 19, 2014

(இது ஒரு மீள்பதிவு ) 

தொழர் A .நல்ல சிவன் நினைவாக HOME
ABOUT
POSTS RSS
CONTACT
LOG IN
Wednesday, April 28, 2010

they were...2
அவர் என்னுடைய நெருங்கிய நண்பர்.பனிரெண்டாம் வகுப்பில் அவருடையமகள் 1100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளார். நண்பருடைய தந்தை தமிழகத்தில் மரியாதைக்குரிய பெரியவர்.என் நண்பரின் மகளுக்கு அறிவியல் பட்டப்படிப்பில் கணக்கினை சிறப்புப்பாடமாக எடுத்துக்கொள்ள விருப்பம்.இரண்டு கல்லூரிகளிலிருந்து இடம்கொடுத்தார்கள். நண்பருக்கு மகளை நாங்களிருந்த குடியிருப்புக்கு அருகில் உள்ள பிரபலமான கல்லூரியில் சேர்க்க விருப்பம்.நான் இருக்கும் சாந்தி நகரில் அந்தகல்லூரி பேராசிரியை ஒருவர் குடியிருந்தார்.என் மனைவிக்கு அவரை பழக்கம் உண்டு.நண்பர் என்னிடம் அந்தகுறிப்பிட்ட பேரசிரியை மூலம் இடம் கிடைக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்."ஐயா உங்கள் தந்தை பெயரைச்சொன்னாலே கிடைக்குமே" என்றேன்.அவர் அதனை விரும்பவில்லை. என் மனைவி மூலம்பேரசிரியரை அணுகினேன். "என்னங்க! அந்தப் பெண்ணின் தாத்தா எம்.பி யாமே..அவர் கூட சொல்லவெண்டாம். அந்தப் பெண்ணின் தாத்தா எம்.பி என்றுநீங்கள் யாரா வது நிர்வாகத்திடம் சொன்னாலே போதும்,இடம் கிடத்துவிடும்"என்று பேரசிரியர்சொன்னதாக.கூறினார்.நிர்வாக்த்திற்கு போன் செய்யலாமா என்று யோசித்தேன் .ஏம்.பி ஏன்ன சொல்வாரோ என்ற பயமும் இருந்தது. நான் பணியாற்றும் தீக்கதிர் பத்திரிக்கையின் பொதுமேலாளராக் இருந்தவர் தோழர் அப்துல் வஹாப்.நாங்கள் "அத்தா" என்று அன்போடு கூப்பிடும் அவர் சுத்ந்திரபோராட்டவீரர்.பிரிட்டிஷ் விமானப்ப்டையில் சேர்ந்து கட்சிக்கிளையை உருவாக்கினவர்.அவர் மூலம் எம்.பியை அணுகிடலாமென்று நிணைத்து அவரை அணுகினேன்."பார்க்கலாம்.நீ ஏதாவது உறூதி கொடுத்திருக்கிறாயா? " என்று என்னை கேட்டார்நான் இல்லை என்று தலையாட்டினேன்.இரண்டு நாள் கழித்து அவரிடம் போய் கேட்டேன்."நல்லகாலம் தோழர் எம்.பி என்ன.சொன்னார் தெரியுமா?ஏன் அத்தா! என் பேத்திக்கு காலேஜில சீட்டு வாங்கத்தான் கட்சி என்னை எம்.பி ஆக்கியிருக்குன்னு நினைக்கேளா? என் று கேட்டதக சொன்னார்.அந்த எம்'பி, தமிழர்களுக்கு தமிழில் தந்தியடிக்கும் உரிமையைப்பெற்றுத்தந்த ஏ. நல்லசிவன் அவர்கள்தான்.
Posted by kashyapan at 12:12 AM 9 comments  

"சமஸ்கிருதம் 

இந்துக்களுக்கு  மட்டுமே சொந்தமா ? .."


"ஆதிசிவன் பெற்றெடுத்தான் " தமிழை என்பார்கள் ! தமிழை  தன பக்கமிழுக்க சைவர்கள்சொன்ன வார்த்தை  இது !

பழம் பெரும் நூலான "தொல் காப்பியம் " சமணரால் எழுதப்பட்டது ! தமிழ்மறையாம் திருக்குறள் வள்ளுவனால்   எழுதப்பட்டது !  வள்ளுவன் சைவனல்ல !

ஐம்பெரும் காப்பியங்களை எழுதியவர்களில் எத்தனை பேர் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் !

ஒளவை  இந்துவா ? ( எஸ்.எஸ். வாசனும் ,கொத்தமங்கலம் சுப்புவும் என்னை மன்னித்தருள்வாராக )

மொழிக்கு ஏது மதம்?  ஏது சாதி ?

சமஸ்கிருதத்தின் முதல் நூல் "அஷ்டா த்யாயி " என்ற இலக்கண நூல் ! இதனை எழுதியவர் பாணினி என்பவர் ! ( கி.மு. 3-5 நூற்றாண்டு )

சீன யாத்திரிகர் யுவான் சுவாங் குறிப்புப்படி இவர் பிறந்த கிராமம் "சல்தூரா "! இது தட்சசீலா பல்கலைஇருந்த  இடத்திற்கு அருகில் உள்ளது ! அங்கு இவருக்கு சிலை உள்ளது ! இந்த நூலை எழுத அவருக்கு அரோமி என்ற வரிவடிவம்பயன்பட்டதாக மொழியியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள் ! ஆரோமி என்ற மொழி யேசுகிறிஸ்துவின் குல மொழி யாகும் !  தட்சசீலம் இன்றய  பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ளது !

புத்தமத வரலாற்றுக் குறிப்புகள் சம்ஸ்கிருத மொழியில் உள்ளன ! பர்மாவிலிருந்தும்ஜப்பனிலிருந்தும் இந்தியா வந்து பாலி மொழியும்,சமஸ்கிருதமும்கற்றுச்சென்ற வர்கள் அதிகம் !

நாகபுரியில் பாலி  மொழி மற்றும் சம்ஸ்கிருத மொழியில்முனைவர் பட்டம்பெற்ற நண்பர்கள் எனக்கு உண்டு ! அவர்களில் பலர் பௌத்த மதத்தினர்! 

ஜெர்மனியிலிருந்து "மாக்ஸ் முல்லர் "வந்து சம்ஸ்கிருதத்தின்
மேன்மையைஉலகிற்குச் சொல்லாமல்போயிருந்தால் இன்றய  "இந்துக்கள்" பலருக்கு "சுக்கலம் பரதரம் " என்ற வழிபாட்டு முறையே 
தெரியாமல்போயிருக்கும் ! 

ஆனாலும் இந்த இந்துத்வாகாரர்கள் கையில் சம்ஸ்கிருதம் " படும்பாட்டை சொல்லி முடியாது !

எது வெல்லாம் கூடாதோ அதன செய்தே தீருவது என்று முனைப்பாக இருப்பார்கள் !

சம்ஸ்கிருத மொழியில்  பட்டப்படிப்பு,முது நிலை ,முனைவர் வரை சோதிடம் படிக்கலாம் ! இதனை சாதித்தவர் டாக்டர் எம்.எம்.ஜோஷி ! இவர் அணு விஞானத்திலும் ,இயற்பியலிலும் பேராசிரியராக இருந்தவர் !

நாகபுரி அருகில் "காம்டி "என்ற இடமிருக்கிறது ! இந்தியாவிலேயே காளிதாசனுக்கு கோவில் உள்ள இடம் ! "குல குரு கவி காளிதாஸ் பல்கலைகழகமென்று உள்ளது ! அதில் சம்ஸ்கிருத இலக்கியம், இலக்கணம்,தத்துவங்கள் ஆகியவற்றைசம்ஸ்கிருத மொழியில்பட்டமேற்படிப்புவரை  படிக்கலாம் !!

எல்லாவற்றிர்க்கும்மெலாக "நாத்திகம்" பாடத்திலும்  பட்ட மேற்படிப்பு  படிக்கலாம் !
  
இந்த இந்துத்வா வாதிகள் இந்த பல்கலையை கெடுத்து குட்டிசுவராக்கி
   விடாமல் இருக்க வேண்டும் ! 

மிக நவீனமான கண்டு பிடிப்புகள் கூட சம்ஸ்கிருதத்தில் உள்ளது  என்று சாதிக்கிற்றர்கள் !

முக நூலில் இவர்கள் எழுதும் அபத்தத்திற்கு அளவே இல்லாமல் போயிற்று !

தண்ணிருக்கு நவீன formule  H 2 o ! இது அதர்வண வேதத்தில் இருப்பதாக நரசிம்ம ராமானுஜம் என்பவர் குறிப்பிட்டுள்ளார் ! ( பிராணம் ஏகம் அன்யாத்வே ) என்ற வாசகத்தையும் எடுத்து காட்டியுள்ளார் !

சமண  மதத்தில் உலகம் எப்படி உருவானது என்ற கேள்வியை எழுப்பி பதில்கூறுவார்கள் ! 

உலகம் "ஸ்கந்த"ங்களால் ஆனது என்கிறார்கள் ! "ஸ்கந்தம்  "என்றால் molecule !
இதனை பிரிக்க முடியாது என்று அன்றைய அறிவியல் கருதியது !

ஆனால் புஷ்பக விமானம் அன்றே இருந்தது என்று சாதிப்பவர்கள் இருக்கிறார்கள் !

டாகடர் அப்துல் கலாம் மதுரை  வந்திருந்தார்கள் ! அப்பொது அவ்ர்கள் ஏவுகணை பற்றிய தீவிர ஆராய்ச்சியில் இருந்தார் ! அவரை சந்திக்க தீக்கதிர் பத்திரிக்கை நிருபர் நாராயணன் சென்றிருந்தார் ! அவரிடம் "புஷ்பக விமானம் பற்றி  கேட்டார் !
"அன்றைய புராண காலத்தில் அறிவியல் அந்த அளவுக்கு வளர்ந்திருக்க வாய்ப்பு இல்லை ! ஆனால்பறவைகள் போல தானும்பறக்க வேண்டுமென்று ஒரு மனிதன் சிந்தித்திருக்கிறான் ! அதன கற்பனையாக எழுதி பார்த்திருக்கிறான் ! பல நூற்றாண்டுகள் மனிதன் கனவு கண்டிருக்கிறான் ! அதன் முடிவில் ப்ரைட் சகோதரர்கள் அதன வென்றெடுத்துள்ளார்கள் " என்று விளக்கினார் !

எல்லாம் இருந்தது என்பது எவ்வளவு தவறோ  அவ்வளவு தவறு எதுவும் இல்லை என்பது !

மொழி மக்களுக்குச் சொந்தமானது ! 

எந்த ஒரு மதத்திற்கும் அல்ல !!!
Wednesday, July 16, 2014

"சங்கரய்யா "

என்ற நாடக விமரிசகர் .....!!!


1960 ம்  ஆண்டு களின்  பிற்பகுதி !  தஞ்சையில் விவசாயிகள்   மாநாடு! குறிப்பாக உழைக்கும்பெணகளை திரட்டும் மாநாடு ! திருவாரூரில் நடந்தது ! ஆந்திராவிலிருந்து விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய புரட்சியில் போரிட்ட வீர மங்கைகள் "அல்லுரி சுயராஜ்யம் , உதயம் "ஆகியோர் வந்திருந்தனர் ! விவசாயிகளை ஒன்றுபடுத்தி ஸ்தாபனப்படுத்தும் தலைவர் பொறுப்பில் தோழர் என்.சங்கரய்யா இருந்தார் !

மதுரை "பிபிள்ஸ் தியேட்டர் " நாடகம் போட ஏற்பாடகியிருந்தது ! ப.ரத்தினம் அவ்ர்கள் எழுதிய "நெஞ்சில் ஓர் கனல் " என்ற நாடகம்.! பண்ணையாரின் கொடுரத்தை எதிர்த்து உழைப்பாளிகளை ஒன்று திரட்டும் கதை ! காஸ்யபன் இயக்கம் ! கதாநாயகன் பண்ணையாரைஎதிர்த்து போராடுகிறான் ! அவனுக்கு உதவியாக விவசாயிகளை திரட்டூம் பணியைச்செய்பவன் அவன் தோழன் ! அவனுக்கு சந்திரன் என்று பெயர் வைத்தோம் ! நாடக பாத்திரங்கள் அவனை சந்திரய்யா ,சந்திரய்யா என்று கூப்பிடுவார்கள் ! மேடையில்" சங்கரய்யா சங்கரய்யா " என்றெ கூப்பிடச் சொன்னேன் ! தஞ்சையில் போடுவதால் விவாசாயத்தோழர்களின் உற்சாகமான கரகோஷத்தை பெறலாம் என்பது நோக்கம் !எங்கள்குழுவினருக்கு உற்சாகம் ! தஞ்சையில்போடுகிறோம் ! என்.எஸ்  முனபோடுகிறோம் ! அவருடைய விமரிசனத்தை பெறலாம் ! எப்பேர்பட்ட வாய்ப்பு ! தோழர்கள் அற்புதமாகவும்,உணர்ச்சி பூர்வமாகவும் நடித்தனர் ! 

நாடகம் முடிந்ததும் பார்வையாளர்கள், குறிப்பாக பண்ணையாராக நடித்தவரை ( மில் தொழிலாளி துரைராஜ் ) அடிக்காத குறைதான் ! மறுநாள் காலை  நான்கிளம்புவதற்கு முன்னதாக என்.எஸ் அவர்களிடம் விடை பெற சென்றேன் ! நாடகம் பற்றிய அவருடைய கருத்தை கேட்கலாமேன்பது தான் முக்கிய காரணம் !

வேளியே கிளம்பிக் கொண்டிருந்தார் ! என்னைப் பார்த்ததும் என்னையும் கூட வர்ச் சொன்னார் ! 

நாங்கள் பண்ணையார் ராமநாதன் அவர்கள் தோட்டத்திற்கு சென்றோம் ! வெள்ளை சட்டை,வெள்ளை வேட்டி ,உயர்ரக கதரில் போட்டிருந்தார் ! மொழு  மொழு என்று  திருத்தப்பட்ட முகம் ! அவருடைய பள்ளிக் கூடத்தில் தான்  மாநாடு நடந்தது ! அதில் உள்ள திறந்த வேளி மேடையில்தான் நாடகம்னடநதது !

என்,எஸ் அவர்களிடம் நிகழ்ச்சியை பற்றி பேசினார் ! அவருக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினோம் !

"தோழர் ! இவர்தான் பண்ணையார் ராமநாதன் ! எப்படி இருக்கிறர் என்று பார்த்தீர்களா ! ?"

"பண்ணையார் மாதிரி தெரியவில்லை ! ஒரு பள்ளி ஆசிரியர் மாதிரி ..."

"பண்ணையார் எல்லாருமே கொடூரமானவர்கள் இல்லை ! அவர்களிலும்  போராட்டங்கள சந்திக்க ,சமரசம் செய்து கொள்ள தயாராக இருப்பவர்கள் உண்டு" குறுக்கிட்டுவிட்டு என் எஸ் தொடர்ந்தார் ! "கிராமத்து மனிதன்,விவசாயி எல்லாருமே அப்பாவிகள் அல்ல ! இரண்டு பக்கமும் இருவிதமான குணம் கொண்டவர்களிருப்பார்கள் ! அது தான் யதார்த்தம் !"

"------------"

"உங்கள் நாடகம் இன்னும் யதார்த்தமாக இருக்கணும் நு விரும்பறேன் !"

"சரி ! தோழர் ! "

"அது என்ன ! ஒரே நாடகத்துல மாணவர் போராட்டம், பெண் விடுதலை தொழிற்சங்க பிரச்சின ! பார்வையாளன் மென்டலா சோர்ந்து போயிடுவான் இல்லையா !"
"--------------"

"மற்ற மொழி நாடகங்கள்  - ம் ."நான் கம்யுனிஸ்ட் ஆனேன் " மலயாள நாடகம் ! கெள்வி பட்டிருக்கேளா " 

"ஆமா தோழர் "

"நிறைய படியுங்க ! நிறைய கற்றுக்கொள்ளுங்க !"

"நான் தஞ்சாவூர் போகணும் ! வரட்டுமா "

"ம் ..ஒரு விஷயம்... அந்த சந்திரய்யா - சங்கரய்யா விஷயம் வேண்டாமெ எடுத்திடுங்க "

"என்.எஸ் ! என் எஸ் !" என்று உள் மனம் கூவ கைகூப்பி னேன் !!!


Monday, July 14, 2014

புராணங்களையே  வரலாறாக மாற்ற 

பா.ஜ.க  திட்டம் .....!!!


" வெற்றி -வெற்றி ! ஆரம்பமாகிவிட்டதடி ! அரூபத்தின் அற்புத வேலைகள் " என்று" மனோகரா " திரைப்படத்தில்  வசனம் வரும் !

அரூபமாக அல்ல ! நேரடியாகவே ஆர்.எஸ்.எஸ்  தன் வேலையை ஆரம்பித்து விட்டது !

ஒய். சுதர்சன் ராவ் என்பவர் திருவாய் மலர்ந்திருக்கிறார் !

"பண்டைக்காலத்தில்  இந்தியாவின் வளர்ச்சிக்கு சாதீய முறைமைகள் அதிகமாக உதவியிருக்கின்றன!  குறிப்பாக "வர்ணாசிரம தர்மம் " இந்திய சமூகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்றிருக்கிறது " என்று கூறியிருக்கிறார் ! 

இவரைத்தான் பிரதமர் நரேந்திர மோடி இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவராக நியமித்திருக்கிறார் !

இவர் யார் ?

தேடிப்பார்த்தேன் !

வாரங்கல்  நகரில் உள்ள காகடீய பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்தவர் ! முழ நீளத்திற்கு பட்டங்களை வாங்கியிருக்கிறார் ! 

இவருடைய ஆராய்ச்சியின்படி " சாதி சமூகத்தை படினிலைப்படுத்துகிறது ! வர்ணாசிரம தர்மம் தனி மனிதனின் செயலைக் குறிக்கிறது !" என்கிறார் !
( மனுஷன் குழப்பறான் ! ஒரு மண்ணும்புரியல )

இந்த அற்புதமான கண்டுபிடிப்புக்காக   பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிரதமர்  மோடி  இந்த "எல்லபிரகத  சுதர்சன ராவ்" என்ற அய்யரை நியமித்திருக்கிறார் ! 

இந்த அறிவாளி "சாதி பற்றி நாம் கொண்டிருக்கும் கருத்துக்கள் தவறானவை ! 700 ஆண்டுகள்  நடந்த முஸ்லீம்களின் ஆட்சியின் காரணமாக  இது 
 நடந்துள்ளது  ! ஆதிகாலத்தில் சாதிகளால் நன்மைகள்தான் சமூகத்திற்கு நடந்துள்ளன!"என்கிறார் !

ராமர்,கிருஷ்ணர் எல்லாம் வரலாற்று ரீதியாக வாழ்ந்தவர்கள் ! இவை பற்றி ஆராய்ந்து உண்மைகளை  மக்களுக்கு சொல்லப் போகிறேன் என்றும் அறிவித்துள்ளார் !

சகல ஆராய்ச்சி மையங்களையும் ஆர்.எஸ்.எஸ் காவிமயமாக்கப் போகிறது !

விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக "குருநாத ஜோசியரை" நியமிப்பார்கள் !

கேக்க முடியாது !

ஏன் ? 

அள்ளி போட்டோம்ல வாக்குகளை !!!

  


Monday, July 07, 2014

நினைந்து 

        நினைந்து 

              நெஞ்சம் ......!!!


1975ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி தமிழ்நாடு  முற்போக்கு       எழுத்தாளர் சங்கம் துவங்கியது ! வரும் 12ம் தேதி 39 ஆண்டுகள்   கழிந்து    40 ம்  ஆண்டுக்குள் புகுந்து கொள்ள விருக்கிறது !

மதுரையில் எழுத்தாளர் சங்க முதல் மாநாட்டை நடத்த சில எழுத்தாளர்கள் !  -அப்போது  அவசர நிலை அறிவிக்கப்படவில்லை  -  தமுக்கம் கலை அரங்கில் நடத்த முடிவாகியது ! ஆனால் ஜூன் மாதம் 25 ம் தேதி அவசர நில  பிரகடணம் வந்தது !

இந்தியா முழுவதும்   முடங்கியது !  எழுத்தாளர்  சங்கமோ கருத்தரங்கம் ,  சொற்பொழிவு ,கவியரங்கம் ,நாடகம் என்று சமூக பிரச்சினைகளை தோட்டு தன நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு இருந்தது !

நினைக்க நினைக்க நெஞ்சம் விம்மத்தான்  செய்கிறது !

முதல் மாநாட்டில் எப்பேற்பட்ட ஆளுமைகள்  பங்கெடுத்தார்கள் !

அந்த மாபெரும் தீரர் சங்கரய்யா முழுமையாக இருந்து நடத்திக் கொடுத்தார் !

இந்த எழுத்தாளர் படைக்கு தளபதியாக இருந்து தோழர் கே முத்தையா அவர்கள் வழிநடத்தினார் !

 பூனே நகரத்தில் பிறந்து புகழ்பெற்ற ப்ஃர்கூசன் கல்லூரியில் பயின்று தன வாழ்நாள் முழுவதையும் "ஒர்லி " மலைவாழ் மக்களுக்காக அர்ப்பணித்த கோதாவரீ அம்மையார்  துவக்கிவைத்தார்  !

மராட்டிய ம்மொழியின் மிகச்சிறந்த  எழுத்தாளரான அவர் " மனிதன் விழிதெழுந்தபோது " என்ற நூலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர் !

கேரளத்தின் இலக்கிய விமரிசகர்  கோவிந்த பிள்ளை சிறப்புரை !

" பிரசண்ட விகடன்" ஆசிரியர் நாரண துரைகண்ணன்     , ' கண்ணன் " பத்திரிக்கை ஆசிரியர் ஆர்.வி ஆகியோர் வந்திருந்து வாழ்த்திப் பேசினர் ! 

வடக்கே சென்னையிலிருந்து ஜானகி   காந்தன்,தெற்கே நெல்லையிலிருந்து புலவர் கந்த சாமி ,மேற்கே போடியிலிர்ந்து  புத்தூரான் ,  கிழக்கே பரமக்குடியிலிருந்து கந்தர்வன் , ஜான்சன் என்ன்று தமிழகத்தின் நான்கு   திசைகளிலிமிருந்து  110   பேர் வந்திருந்தனர்  !

 மாநாடு     முடிவில் நாடகம் ! கே முத்தையா அவர்கள் எழுதிய "புதிய தலைமுறை " நாடகம்- மதுரை பீப்பிள்ச் தியேட்டர் குழுவினர் நடத்தினர் !

சாஸ்திரிகள் ஒருவர் புரோகிதராக வாழ்கிறார் ! அவர் மகன் பரந்தாமன் என்பவனுக்கு மந்திரங்ககளை கற்றுக் கொடுத்து அவனையும் புறோகிதனாக்குகிறார் !   பக்கத்து வீட்டில் வசிக்கும் வக்கீலின் விதவை  மகளொடு பரிச்சியம் ஏற்படுகிறது பரந்தாமனுக்கு   ! இருவரும் நகரம்  சென்று புதிய வாழ்வைத்தேடுகிறார்கள் !

கே.எம் ,அவர்கள் இந்த நாடகத்தில \காஞசி   மகான்    பெரியவர  போன்று சாஸ்திரிகளைச் சித்தரித்திருப்பார் ! மதுரை மில தொழிலாளி துறை ராஜ் நடித்தார் ! பர்ந்தாமனாக காஸ்யபன்  நடித்தார் ! அவரே நாடகத்தை இயக்கினார் !

நாடகத்திற்கு டிக்கட்டு ரூ 1 ,2 ,3, 5 என்று இருந்தது ! மிகவும் அதிகம் என்று பேச்சும் வந்தது ! நாடகம் மூலம் 2800 ரூ மிச்சம் ! அதனை தமுஎச பண்டில் கொடுத்துவிட்டார்கள் !

மாநாட்டிற்கு வரும் சார்பாளர்கள் ,பார்வையாளர்கள் கட்டணம் 5/- ரூ ! மாநாட்டில் பலர் பேசும்    பொது   அதிகம் என்று பேசினர் !            

முதல் மாநாட்டிற்கான  சிலவு 30,000 /-ரூ !

மாநாட்டிற்காக   பி,எம். குமார்,வீரபத்திரன்,கார்மேகம், பூச்சி  போன்ற மூத்த  தோழர்களீன் பணி  மறக்க முடியாதது !