Friday, June 28, 2019

முற்போக்கு என்றால் என்ன ?

முற்போக்காளர்கள் யார் ?
18ம் நுற்றாண்டின் இறுதியிலும் 19ம் நுற்றாண்டின்  ஆரம்பத்திலும் இங்கிலாந்து நாடு நிலப்பரப்புத்துவத்தின் உச்சத்தில் இருந்தது. அதன் அடிவயிற்றில் முதலாளித்துவம் கிளைபரப்பி மரமாக வளர்ந்து கொண்டிருந்ததை அது உணரவில்லை.

இந்த புதியபாதையை அறிவு ஜீவிகள் வரவேற்றனர் . அறிவியலும் தொழில்நுணுக்கமும் பரவலாக  வளர்ந்தது . அதன்  காரணமாக  பொருள் உற்பத்தி அபரிமிதமானது. நிலப்பிரபுத்துவம் இது தன்னால் ஆனது என்று மார்தட்டிக்கொண்டது. இந்த வளர்ச்சி (progress ) என்னுடையது என்று அதனை பயனை நிலப்பரப்புக்கள் எடுத்துக்கொண்டனர்.

இல்லை ! இதன் பயன் பண்ணை அடிமைகளுக்கும்,பாடுபடும் உழைப்பாளர்களுக்கும் பங்காக இருக்கபேன்டும் என்று ஒருபகுதி அறிவுஜீவிகள் (progressives )குரல் எழுப்பினர்.இந்த அறிவுஜீவிகள் பெரும்பாலும் கவிஞர்களாக,கலைஞர்களாக எழுத்தாளர்களாக இருந்தனர்.

பிரிட்டன் பாரம்பரிய மிக்க நாடு .அதன் மரபை மீறக்கூடாது .பழைய சமூக அமைப்பு தான் சிறந்ததுஎன்று பழமை வாதிகள் குரலெழுப்பினர்.    

முற்போக்கு (progress ) என்றும் முற்போக்காளர்கள் (progressives) என்றும் வகைப்படுத்தப்பட்டனர்.

 பழமைவாதிகள் பிற்போக்காளர்கள் என்று வகைப்படுத்தப்பட்டனர்.

இந்த மோதல்கள் 19ம் நூற்றாண்டின் இறுதியில் பெரும் மாற்றத்தை கண்டது . பிரஞ்சு புரட்சி  முற்போக்காளர்கள் சிந்த்னையை வளர்த்தெடுத்தது. மெலிதாக சோசலிசம் என்ற  தென்றல் அவர்கள் சிந்தனையில் புகுந்தது . சோவியத் புரட்ச்சி இதன் மேலும் வலு வாக்கியது.

1935ம் ஆண்டு இங்கிலாந்தில் முற்போக்கு எழுத்தாளர்கள்சங்கம் உருவாகியது அதனை அறிக்கையில் சோசலிசம் ஒரு குறிக்கோளாக பொறிக்கப்பட்டது.

இதற்கு சரியாக ஓராண்டு கழித்து 1936ம் ஆண்டு என்பரால் மாதம் பண்டித நேருவின் ஆசியோடு கம்யூனிஸ்ட்கட்ச்சியின் ஆதரவாளர்கள் இந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தை ஆரம்பித்தனர்.

அதன் முதல் தலைவராக உருது எழுத்தாளர் பிரேம் சந்த் தேர்ந்தெ டுக்கப்பட்டார் .

இந்த முயற்சிக்குமுன்கை எடுத்தவர்கள் உருது எழுத்தாளர்கள் என்பதும் அவர்களில் பொரும்பானமையினர் இஸ்லாமியர்கள் என்பதும் குறிப்பிட்ட வேண்டிய ஒன்றாகும்.


Thursday, June 27, 2019"கடவுள் மீதும் ,

காதல் மீதும்",

நம்பிக்கை 

இல்லாதவன்!!. கடவுள் மீதும் காதல்மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் உலகத்தில் அமர காதலர்கள் யார் என்று கேட்டால் "மார்க்ஸ்- ஜென்னி " என்று அடித்து சொல்லுவேன்.

கொஞ்சம் முரண் போல தோன்றலாம்.

அந்த நகரத்தின் மிகசிறந்த அழ்கிகளில் ஒருவர் ஜென்னி. வசதியான குடும்பத்து இளவரசி போன்ற வாழ்க்கை .

அவரோடு ஒப்பிட்டால் மார்க்ஸ் ஏழை தான் .முண்டுமுண்டாக கன்ன  கதுப்போடு அழகிலும் ஒப்பிட முடியாது. 

"ஜென்னி ! இந்த மார்க்ஸ்தான் உனக்கு கிடைத்தானா ? " என்று தோழிகள் கேட்டால் " அவன் என் கையைத்தொட்டால் என்  ஆத்மாவை தொடுவதாக நினைக்கிறேன். நான் அவனைத்தொட்டால் அவன் ஆத்மாவை மீட்டுவதாக நினைக்கிறான் ! இதைவிட என்ன வேண்டும் ? என்று ஜென்னி பதிலளிப்பரராம் .

"இவனை விட வசதியுள்ளவன் கிடைக்கவில்லையா?"என்றால் 

"முட்டாள்களே ! இன்னும் நூறாண்டுகளுக்கு இப்படி ஒரு  அறிஞன் பிறந்ததில்லை என போற்றப்படப்போகிறவனின் காதலியாக மனைவியாக நான் வரலாற்றில் பவனி வருவேன்." என்பாராம் .

ஜென்னி பல வருடங்கள் மார்க்ஸை விட வயதில்மூத்தவர் .அவரை கேலி செய்வாராம்..

"ஏ ! மார்க்ஸ் ! நீ  அம்மணமாக "மணி ஆட்டிக்கொண்டு "வீட்டிற்குள் ஓடும் டும்போதே உன்னை பார்த்திருக்கேனாக்கும் ".

மார்க்ஸ் இருகைகளால் முகத்தை மூடிக்கொண்டு வெட்கத்தில் தலை குனிவாராம்.

ஜென்னி மார்கசி நேசித்ததைப்  போல் பலமடங்கு மார்க்ஸும் நேசித்துள்ளார் . தன்  மார்க்ஸுக்காக அவர் வறுமையில் வாடியது  உலகம் அறிந்த ஒன்று. அறிவிற் சிறந்த மார்க்ஸ் சம்பாதிக்கத்தெரியாதவன். ஜென்னி பலநாள் பட்டினி இருந்திருக்கிறாள் .கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க சுரக்காமல் இருக்கும் அளவுக்கு பட்டினி இருந்திருக்கிறார் . 

இவர்களின் வறுமையை அறிந்த நண்பர் ஒருவர் கொஞ்ச்ம  கோது மையையும்,பணத்தையும் எடுத்துக்கொண்டு அவர்கள் விட்டு தேடி வந்துள்ளார். அங்கு அவர் கண்ட காட்ச்சி அவரை திடுக்கிட வைத்துள்ளது.

இருவரும் ஷேக்ஸ்பியரின் நாடகத்தை நடித்துக்கொண்டு இருக்கிறார்கள்

ரோமியோவாக மார்க்ஸும்,ஜூலியட்டாக ஜென்னியும்,வசனம் பேச  குழந்தை பசியோடு அவர்களை பார்த்து சிரித்துக் ஒண்டிருந்ததாம்.

எனக்கு கடவுள்நமபிக்கை இல்லை.காதலிலும் நமபிக்கை இல்லை தான்!

ஆனால் மார்க்ஸும் -ஜென்னியும் அமர காதலர்கள்  என்பதைநம்புகிறேன்!

Wednesday, June 19, 2019அரசியல் நிர்ணய சபையில் ,

அண்ணல் அம்பேத்கரின் ,

இறுதி எச்சரிக்கை .....!!!1950ம் ஆண்டு ஜனவருமாதம் 26ம் தேதி இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது.இதனை வடிவமைத்த அரசியல் நிர்ணய சபையின் இறுதி கூட்டம் 1949 நவம்பர் 25ம் தேதி நடந்தது . சட்டத்தின் வரைவினை முன் மொழிந்து அண்ணல் அம்பேத்கார் அவர்கள் இறுதி பேச்சு மி கவும் .முக்கியமானதாகும் அப்போது அவர் மூன்று எச்சரிக்கையை விடுத்தார். அதன் சாராமசத்தை தருவதுதான் இந்த இடுகையின் நோக்கம்:

எச்சரிக்கை 1

" நாடாளுமனற ஜனநாயகம் இந்தியர்களுக்கு புதுசு  அல்ல. புத்தர் மடத்தை நிர்வகிக்க சபைகளை உருவாக்கினார்> அந்த சபை உறுப்பினர்கள் தகுதி, செயல்முறை ,தேர்ந்தெடுக்கப்படும் முறை,நடத்தை விதிகளை ஆகியவற்றையும் உரூவாக்கினார். மடத்திற்கு வெளியே இருந்த சமூகத்திலிருந்து விதிகளைப்பார்த்து தான் உருவாக்கினார்.   "

"சுதந்திரம் நமக்கு இருந்தது.  எனக்கு பயமாக இருக்கிறது .1950 ஜனவரி 26ம் தேதி நாம் தனிநாடாக சுதந்திரமாக இருக்க போகிறோம். நாம் அதனை தக்க வைத்துக் கொள்வோமா ? "

" முகம்மது காசிம் சிந்த்  பகுதியை ஆக்கிரமித்தான் . அரசன் தாபர்  அவனை எதிர்த்து போரிட்டான். தாபரின் தளபதிகள் காசிமிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு காசிமை எதிரித்து போரிட மறுத்து விட்டார்கள்"

"பிரித்விராஜனை வெறுப்பவன் ஜெயசந்திரன். கோரி முகம்மதுவை அழைத்து வந்து தாக்க  சொன்னான். கோரி க்கு ஜெய்சந்திரனும் குஜராத்தின் சோலங்கி ராஜாவும்  உதவினார்கள் ." 

"சிவாஜி கடுமையாக்க போரிட்டார் . ஆனால் மராத்திய பிரபுக்களும், ராஜஸ்தானத்து அரசர்களும் முகம்மதியர்களோடு சேர்ந்து செயல்பட்டனர்."

"பிரிட்டிஷார் சீக்கிய அரசுகளை துவம்சம் செய்தனர் . சீக்கிய தளபதி   குலாப் சிங் வேடிக்கை பார்த்தான்"

"இந்தியாமுழுவதும் 1857ம் ஆண்டு பிரிட்டீஷாரை எதிர்த்து போரிட்டனர் . வடக்கே சீக்கியர்கள் அமைதிகாத்தனர்"

எச்சரிக்கை 2

'அமெரிக்காவில் திருச்சபைகளில் ஒரு திருத்தம் கொண்டுவந்தார்கள்.அதன்படி பிரார்த்தனை செய்யும் பொது "கர்த்தரே ! எங்கள் அமெரிக்க தேசத்தையும் பாதுகாத்து அருளும் " என்று சேர்த்துக் கொண்டார்களா.ஓராண்டு இது நடந்தது.'

'அமேரிக்கா குடியற்ற நாடு. அங்கு பிரிஞ்சு,ஜெர்மனி, ஸ்பெயின் ,இத்தாலி,  ஆகிய தேசத்தினரும் உண்டு அதனால் தேசம் என்பதை எதிர் த்தார்கள் .பின்னர் united states of America என்று மாற்றிக்கொண்டார்கள்'

'இந்திய பல மொழிகள்,பழ இனங்கள்.பல கலாசாரங்களை கொண்ட துஅமெரிக்காவில் இல்லாத சாதி கட்டமைப்பு உள்ள நாடு.'' 

எச்சரிக்கை 3

'ஜனநாயகத்தின் அடித்தளம், சுதந்திரம்,சமத்துவம்,சகோதரத்துவம். சுதந்திரமும் சகோதரத்துவமும் செழிக்க  சமத்துவம் வேண்டுமே ! பிறப்பிலேயே சமத்துவம் இல்லையே "

( அண்ணல் அம்பேதகரின் பேச்சின் மொழிபெயர்ப்பு அல்ல இது அதன் சாறு தான் இது.)

இந்திய நாடாளுமன்றம் கூடியது .ராட்சச பலத்தோடு கூடிய ஆளும் கடசியினர் போட்ட ஆட்டம் பார்த்தோம். 

அம்பேத்கரின் எச்சரிக்கை பலன் தருமா ? 


  


Tuesday, June 11, 2019


"செலுவி " திரைப்படமும் ,

கிரிஷ் கர்னாடின் ,

உன்னதமும் ...!!!

அந்த கிராமத்தில் வசிக்கும் சிறுமி தான் "செலுவி". செல்வி என்று தமிழில் அழைப்பதை  கன்னடத்தில் செலு வி என்கிறார்கள். மிகவும் வசதிக்குறை வான வாழ்க்கையில் சுளுவி அவள் சகோதரி,  தாயாரோடு வாழ்கிறாள். 

அவளுக்கு ஒரு மந்திரம் தெரியும் .அதன் மூலம்  ஒருமரமாக மாறி வண்ண வண்ண மான நறுமணம் வீசும் மலர்களை தருவாள். தன சகோதரியுடன் காட்டிற்கு சென்று அதனை செய்து காட்டுகிறாள் .சகோதரி இரண்டு வாளி யில்நிற்கொண்டுவந்து அதன் ஒன்றை செலுவி மீது தெளிக்கிறாள். மரமாக மாறிய செலுவி  பூக்களை சொரிகிறாள். சகோதரி தேவையான பூக்களை சேகரித்து விட்டு அடுத்தவாளியில் உள்ள நீரை மரத்தின் மீது தெளிக்கிறாள். செலுவி மனித உருவை அடைகிறாள் .பூக்களை சேகரிக்கும் பொது எந்த கிளையையோ இலையையோ பறி க்கக் கூடாது என்பது நிபந்தனை.

இந்த ரகசியத்தை அந்த ஊர் நாட்டாமையின் மகன் குமார் தெரிந்து கொள்கிறான் .செலுவியோடு பழகுகிறான்.செலுவியும் அவனை மணந்து கொள்கிறாள் .குமார் செலுவி மரமாவதை பார்க்க விரும்புகிறான் .எவ்வளவோ தடுத்தும் பிடிவாதமாக இருக்கிறான் ஒருநாள் செலுவி அவனை காட்டிற்குள் அழைத்து சென்று மரமாக மாறி பூக்களை சொரிகிறாள். பூக்கள் ஆற்றில் விழுந்து செல்கிறது .இதனைப்பார்த்த சிறுவர்கள் ஓடிவந்து பூக்களை பறிக்கிறார்கள்> பல இலைகளும் கிளைகளும் அவர்களால் சேதப்படுத்தப்படுகிறது .

செலுவி கைகால் அற்ற முண்டமாக அந்த மரத்தின் அடிமரமாக கிடக்கிறாள் .விறகு வெட்டி ஒருவன் அவளை முண்டமாக துக்கி அவள் வீட்டில்  போடுகிறான். வெட்டி எறியப்பட்ட இலைகளையும் கிளைகளையும் சேகரித்து ஓட்டினால் செலுவி மீண்டும் மனித உருவை முழுமையாக அடைவாள்.அவள் கண வன்  அவரை ஒரு கட்டை வண்டியில் ஏறி கிளைகளை தேடி  காட்டிற்குள் செல்கிறான்.

காட்டில் பல மரங்கள் வெட்டப்பட்டு மொட்டையாக இருக்கிறது.இதில் எது செலுவியின் கிளை என்று தெரியாமல் அவள் கணவன் திகைத்து நிற்கிறான்.படம் இங்கு முடிவடைகிறது.

சுமார் 45 நிமிடம் ஓடும் இந்தப்படத்தை பார்த்தவர்கள் தங்கள் உயிர் இருக்கும் வரை ஒரு புல்லைக்கூட கிள்ளி எரியமாட்டார்கள்.கிரீஷ் கர்னாட் இயக்கியுள்ளார்.செலுவியாக சோனாலி குல்கர்னி நடித்துள்ளார்.

தூர்தர்ஷன் தயாரித்த இந்த படத்திற்காக சிறந்த படம்,என்றும் சிறந்த இயக்கம் என்றும் விருதுகளை இந்திய அரசு அளித்தது . கர்நாடக மாநிலத்தின் நாடோடி கதையாகும் இது..

தார்வாரில் வசித்து வந்த க்ரிஷ் கணிதவியலில் பட்டம் கர்நாடகா பல்கலையில் பெற்றவர். உலகத்திலேயே மிகவும் உயர்ந்த scholarship  ஆன RHODES  scholarship பெற்று  ஆக்ஸ்பர்டு பல்கலை சென்றார் . அங்கு தத்துவம், அரசியல், சுற்றுப்புற சூழல் ஆகிய மூன்று உயர்ப்பட்டங்களை பெ.ற்றார்  

. இந்தியா திரும்பியவர் சென்னையில் ஆக்ஸ்பர்ட்டு பிரஸ் நிறுவனத்தில் ஆசிரியராக சேர்ந்தார்> சென்னையில் சரஸ்வதி கணபதி  என்ற  டாக்டரை காதலித்து மணந்தார்.

டாகடர் லோகியாவின் சோஷலிச கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்.இந்தியாவின் பணமுகத்தனமையைக்காப்பாற்ற நின்றவர் .பாசிச இந்துத்வாவை கடுமையாக எதிர்த்தவர் .

அவருக்கு நம் அஞ்சலிகள். !!!


Sunday, June 09, 2019

லெனின் பாரதிக்கு ,

ஏன்  இந்த ,

முரட்டுக் கோபம் ?

"விஞ்ஞன ரீதியில் செயல்படும் ஒரு இயக்கம் இப்படி வாக்களித்திருக்கக்கூடாது..பொருளாதார ரீதியில் பின் தங் கியவர்களுக்கு 10% இட் ஒதுக்கீடு மசோதாவினை ஆதரித்து வாக்களித்தது கண்டிக்கத்தக்கது" 

தன முரட்டு கோபத்தை லெனின் பாரதி அவர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார் .

சுப வீர பாண்டியன் ஒரு படி மேலே போய்விட்டார் . " மார்க்சிஸ்ட் கடசி நமது கூட்டணியில் இருக்கிறது.ஆனாலும் விமரிசனம் உள்ளது. தோழர் ரங்கராஜன் மாநிலங்கள் அவையில் பேசிவிட்டு 10 சாதமானம் இடஒதுக்கீடு மசோதாவுக்கு வாக்களித்த பொது கனிமொழி அவர்கள் கொதித்து எழுந்தார் .கோபப்பட்டார்> அந்த காட்ச்சியை என்னால் மறக்கவே முடியாது. பெரியாரின் பேத்தி என்பதை நிரூபித்து விட்டார் " என்றார் .

குடியரசு துணைத்தலைவர் அலுவலகத்தில் 49 அதிகாரிகள் உள்ளனர்> அதில் 39 பேர் "அவாள் ".10 பேர்தான் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்" என்றார் . பட்டியல் உண்மைதான்

"விசிக"கவின் இரவிக்குமார் உசச   நீதி மனற நீதிபதிகள்,  அரசு உயர் அதிகாரைக ப்பாட்டியலைத்தந்து அதில் யார் யார் என்ன சாதி என்பதை தெளிவாக்கினா  .

இது இன்று நேற்று எழுப்பப்படது  அல்ல. என்று வி.பி. சிங்க 27 சதம் ஒதுக்கீடு கொண்டு வந்தாரோ அன்றே  எழுந்த பிரசினை> காங்கிரஸ் பாஜக, கம்யூனிஸ்டுகள் இந்த நிலையை எடுத்தனர் .எத்தனை சாதமானம் என்பதில் வேறுபாடு இருந்ததுதான் உண்மை .

ஆனாலும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட்கள், திமுக  ஒன்றிணைந்து தான் தமிழத்தில் மகத்தான வெற்றியை பெற்றது என்பது ம் உண்மை.

மத்திய அரசு ஐ ஏ எஸ், ஐ பி எஸ் , என்று தேர்வு மூலம் அதிகாரிகளை தேர்ந்தெடுத்த்து பயிற்சி கொடுத்து கலெக்டர்களாக, போலீஸ் அதிகாரிகளாக நியமிக்கிறது. துடிப்பும்,நுண்ணறியவும் மிக்க ஏராளமான இளைஞ்ர்கள்  ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை கொடுத்து மக்கள்பால் நிற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மாநிலங்களில் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.

இது தவிர மிகவும் நேர்மையான , திறமை மிக்க முத்த அதிகாரிகளை மாநில அரசுகள் சிபாரிசின் பேரில் ஐ ஏ எஸ்,ஐ பி. எஸ் பட்டங்கள் கொடுத்து கலெக்டர்,டி  எஸ் பி என்று அமர்ந்து கிறார்கள்.

சமீபத்தில் ஒரு ஐ பி எஸ் அதிகாரி கூறினார் ." முக்கியமான அதிகாரமுள்ள பதவிகளில் மாநில அரசு conferd அரசு அலுவலர்களை போடு கிறார்கள் .எங்களை எந்த அதிகாரமும் இல்லாத பதவிகளில் ஓரம் சாரமுமாக அமர்ந்து கிறார்கல்  என்றார்.

சமீபத்தில தமிழக அரசு சுமார் 40 பேருக்கு காணபர் செய்து பதவி அளித்திருவதாக தெரிகிறது. 

இதில் விருமாண்டி,சம்மந்தம், ராமலிங்கம் உண்டு .ஒரு முனியாண்டியோ மாயாண்டியோ இல்லை . இந்த பட்டியலில் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் எத்தனைபேர் என்றார் பட்டியலை இரவிக்குமார் சொல்ல மாட்டார் .

ஒரு தலித் குடிமகன் தாசிலாதாராக நியமிக்கப்பட்டான் என்றால் அந்த தாஸிலில் தலித்துகளின் பாடு  குறையுமே. ஒரு டிஸ் பி தலித்தாக இருந்தால் அந்த சரகத்திலாவது தலித்துகள் கொஞ்ச்ம நிம்மதி அடைவார்கள் .ஒரு தலித் ரெவின்யூ இன்ஸ்பெக்டராக இருந்தால் அரசு இடிந்து வீழ்ந்து விடுமா?

இதற்கான ஒரே பதில்  மாநில அரசு ஊழியத்தில்  பதவி உயர்வுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பதாகும்.

மாநில அரசின் பதவி உயர்வில்  ஏன் இட ஒதுக்கீடு இல்லை? 


ஏன் இவர்கள் அதனை கேட்டு பெற மறுக்கிறார்கள்?


ரவிக்குமாரை நாடாளுமனறத்தில் தன கன்னி  பேச்சில் இதனை கேட்பாரா ? 


மாட்டார்!


அவர் வெற்றி பெற்ற சின்னம் அதை  அனுமதிக்குமா?

 

Thursday, June 06, 2019
ஒரு 

இதிகாசப் 

"பொய்" 
1996 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. வட மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கட்சி  போட்டி இடும் இட ங்களில் செய்தி சேகரிக்க விரும்பினேன் . கல்கத்தா சென்று  திரிபுரா,வாரணாசி, வார்தா, பீட் என்று திட்டமிட்டேன். உதவியாக மொழிபெயர்ப்பாளர் முத்து மினாடசி அவர்களையும் அழைத்துக்கொள்வது என்று முடிவு செய்தேன்.

கல்கத்தா சென்றதும் அலிமுதின் சாலையில் உள்ளமார்க்சிஸ்ட் கடசி அலுவலகம் சென்றோம். அப்போது அங்கு பீமன் பாசு இருந்தார்> அவரிடம் திரிபுரா செல்ல விமான பயண  ஏற்பாடுகள் செய்ய உதவுமாறு கேட்டுக்கொண்டேன். சிரித்து விட்டு "நீங்கள் திரிபுரா செல்ல வேண்டாம். இங்கேயே ஸத்காசியா செல்லுங்கள்" என்றார் . 

ஸத்காசியாவில் ஜோதிபாசு நிற்கிறார். இன்று மதியம் அவர் ஸத்காசியா செல்கிறார் .அவருடைய convoy  கூட  சென்று வர ஏற்பாடாகிற்று.

முதல்வர் காருக்கு அடுத்து மருத்துவ குழு அதற்கு அடுத்த ஜீப்பில் நானும் முத்து மீனாட்ச்சியும் .செல்லும் வழியெங்கும் மக்கள் கூட்டம். பாசு வை கை   ஆட்டி வரவேற்கும் மக்கள்> முத்து மீனாட்ச்சிக்கு பெருமை பிடிபடவில்லை. அந்த பயணத்தை வாழ்வில் மறக்க முடியாது .

நாங்கள் செல்லும் வழியில் தான் மமதாவின் தொகுதியும் இருந்தது. முதல்வர் சில இடங்களில் நிற்க வேண்டியதாயிற்று. நாங்கள் முந்தி விட்டோம். கல்கத்தாவின் புறநகர் பகுதி. அதுவும் மமதாவின் தொகுதி தான்.conoy வருவதற்காக காத்திருந்தோம். நானும் முத்து மீனாட்ச்சியும் ஜிப்பை விட்டு இறங்கி அங்கு நடந்து செல்பவர்களிடம் பேச முற்பட்டோம். தோழர் இவர்களுக்கு வங்கமொழிதான் தெரியும் என்றார்  கூட வந்த வர் .

நகரத்தை தாண்டி  10 மைல் கல்லில் இந்தி பயன்படவில்லை. 

"நீங்கள் நேரடியாக ஸத்காசியா சென்றுவிடுங்கள்" என்று செய்தி  வந்தது நாங்கள் புறப்பட்டொம்.கிட்டத்தட்ட 30 மெயில் தூரம் இருக்கலாம்> வழியில் டயர் மாற்ற நிற்கவேண்டியதாயிற்று..நாங்கள் இருவரும் இறங்கி காலாற  நடந்தோம்.

இருபுறமும் வயல் வேளிகள்.நடுவில் சாலை> சாலையின் இருபுறமும் நீரோடைகள் சலசல வென்று ஓடிக்கொண்டிருந்தன> ஓடைக்கரையில் வாழைமரங்கள். இவை அந்த வயல்காரர்கள் ராமரிப்பில் இருந்தன. வாழை இலை,வாழி பூ .பழம் எல்லாம் அவர்களுக்கு  சொந்தம் .அவற்றை பாதுகாப்பது அவர்கள் கடமை.

துரத்தில்  இருக்கும் விவசாயி ஒருவரை நெருங்கினேன்.நம்ம ஊரு கருப்பசாமி அல்லதுபலவேசம் போல் கருப்பாக வேட்டியை தார் பாசசி கட்டிக்கொண்டு தலையில் துண்டை தலைபாபகயாக்கி நின்றார். அவரிடம் பேச முற்பட்ட பொது அவருக்கு வங்க மொழி தவிர வேறு தெரியாது என்று அறிந்தோம்.  

ஸத்காசியால் கூட்டம். எங்களை மேடை அருகில் அமரசெயதனர்.. யாருக்கும் வங்க மொழி மட்டுமே தெரியும். முதல்வரும் வங்க மொழியில்தான் பேசுவார் என்கிறார்கள்> நடுங்கி விட்டேன்.

நல்லகாலம் ndtv நிருபர் திருமதி தீபா இருந்தார்> அவரிடம் மொழிபெயர்க்க உதவி கேட்டேன்..அவருடைய மகளை உதவ சொன்னார்.

பாசு அங்கமொழியில் பேச அந்த பெண் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க நான் குறிப்பெடுத்துக் கொன்டேன்.

இந்தி தெரிந்தால் வாட் இந்தியா முழுவதும் சமாளிக்கலாம் என்பது 


ஒரு இதிகாசப் பொய் 


என்பதையும் உணர்ந்தேன்.