Tuesday, July 30, 2013

டாக்டர் .முத்து லட் சுமி ரெட்டியும் ,

  ஜெமினி கணேசன் அவர்களும் ......!!!


  இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்   புதுக்கோட்டை  சமஸ்தானமாக இருந்தது !   மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக அங்கு ஒரு கல்லூரியை மன்னர் நிறுவினார் ! அந்த மகாராஜா கல்லூரியில் முதல்வராக இருந்தவர்   நாராயண சுவாமி அய்யர் என்பவர் ! இவர் மனைவி இளம் வயதிலேயே இறந்து விட்டார் !

நாராயண சுவாமி அய்யர் , மறுமணம் செய்து கொள்ளும் போது அன்றய நிலையையில் புதுமையாக செய்தார் ! இசை வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்த சந்திரம்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் !     

இந்த தமபதியருக்கு முத்துலட்சுமி என்ற மகளும், ராமசாமி என்ற மகனும் பிறந்தனர் !  அய்யர் தன     மகளை படிக்க வைத்தார் ! சென்னைக்கு அனுப்பி மருத்துவ படப்பில் சேர்த்தார் ! இந்தியாவிலேயே  மருத்துவம் படித்த முதல்  பெண்  என்று பெயர் பெற்றார் முத்து லட்சுமி !

டாக்டர் முத்துலட்சுமியின் சகோதரர் ராமசாமி கங்கம்மா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார் ! ராமசாமி அய்யர் -கங்கம்மா தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்தான் ! மகனுக்கு கண்பதி சர்மா என்று நாமகரணம் செய்வித்து வளர்த்து வந்தார் ! குடும்பத்தில் குழந்தையை எல்லோரும் கணேசா என்று கூப்பிடுவார்கள் ! முத்துலட்சுமிக்கும் மருமகன் கணேசன் மீது கொள்ளைப் பிரியம் !" கணேசா கணேசா "என்று   கொஞசுவார்!  

சிறிது நாளில்   தாத்தா நாராயண சுவாமி இறந்தார் ! சிலமாதத்திலேயெ  ராமசுவாமி அய்யரும் இறந்தார் ! கணேசன் அத்தை முத்துலட்சுமி வீட்டில் சென்னை சென்று தங்கி படித்தான் ! ராமகிருஷ்ணா மடம் நடத்தம் பள்ளியில் அத்தை அவனச் சேர்த்தார் 1 யோகா,சமஸ்கிருதம்,கீதை என்று  படிப்பதை பார்த்து அத்தை முத்து லெட்சுமி !மகிழ்ச்சியடைந்தார்  ! கணேசனுக்கு    
தாயாரை பிரிந்து இருப்பது சங்கடமாக இருந்தது ! புதுக்கோட்டையில் படிக்க ஆரம்பித்தான் !

பின்னர் மீண்டு அத்தையின் யோசனையின் பேரில் சென்னை கிருஸ்துவக் கல்லூரியில்  படித்து பட்டம் பெற்றான்!  பின்னர் அங்கேயே ஆசிரியராக பணியாற்றினான் !

வேலை பிடிக்காமல் ஜெமினி ஸ்டுடியோவில் நடிகர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் சேர்ந்தான் ! நடிக்க ஆரம்பித்தான் !  ஜெமினி கணேசன் ஆனான் ! 

ஜெமினி இறந்த முதலாம் ஆண்டு மலர் வெளியிடப்பட்டது ! அதன வெளியிடும் நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் கலந்து கொண்டார் ! ' டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி அவர்கள் எனக்கும் உறவினர் ! ஜெமினி அவர்களுக்கும்  அத்தை ! அதன்படி ஜெமினி எனக்கும் உறவுதான் " என்றார் ! 

      
சாம்பல் தாடியும்,

கருப்புத்தாடியும் .....!!!


அந்த ஊர் அரசன் அழகான பறவை ஒன்றை பிடித்து வாருங்கள் என்று அமைச்சருக்கு உத்திர விட்டான் ! ஆந்தை இதைக்கேட்டு ஒடி ஒளிந்து கொண்டதாம் ! பாவம் நரேந்திர மோடி !

மும்பை கல்லூரி மாணவி இர்ஷாத் ஜகன் ! பத்தொன்பது  வயது !குருநானக் கல்லூரியில் படித்து கொண்டிருந்தார்! இர்ஷாத்,பிரானேஷ் பிள்ளை,அம்சத் அலி,ஜிஷன் ஜோகர் ஆகியனால்வரும்  2004ம் ஆண்டு ஜூன் மாதம்
பதினந்தாம்  த்தி சுட்டுக்கொலாப்பட்டுள்ளனர் ! 

இதனை "என்கவுண்டர்" சாவு என்று குஜராத் போலீஸ் மூடிமறைத்தது ! ஐந்து ஆண்டு விசாரணைக்குப் பின்,இது என்கவுண்டர் அல்ல ! என்று அகமதாபாத் மேட்ரோ பாலிடன் மஜிஸ்டிரேட்  தீர்ப்பளித்துள்ளார்!

மோடியின் அரசு உயர் நீதிமன்றத்திற்கு அப்பீல் செய்தது ! உயர் நீதி மன்றம் சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்தது ! இது என்கவுண்டரே அல்ல ! என்கவுண்டர் நடந்ததாகச் சொல்லப்படும் தேதிக்குமுன்பாகவே  இஷ்ராத் உட்பட நால்வரும் சுட்டுக்கொல்லப்பட்டனர் ! என்றுகூறிய குஜராத்
நீதிமன்றம்  சி,பி.ஐ விசாரனக்கூத்திரவிட்டது ! விசாரணையை நீதிமனறம் நேரடியாக கண்காணித்தது ! இந்த என்கவுண்டரை நடத்திய டி ஐ.ஜி   வன்சாரா எற்கனவே  ஷெராபுதீன் என்கவுண்டர் வழக்கில் சிறையிலிருக்கிறார் ! ஷெரபுத்தீன் மாணவி கவுசர் பீவி வன்சார வசிக்கும்கிராமத்தின் அருகே கழுத்து நெரிக்கப்பட்டு பிணமாக காண்டெடுக்கப்பட்டுள்ளார் ! இதனால் தான் வன்சாரா சிறையில் இருக்கிறார் !

சாம்பல் தாடியும்,கருப்புத்தாடியும் ஒப்புதல்கொடுத்த பின்னர் தான் எங்கள் பிடியில் இருந்த இஷ்ராத் உட்பட  நால்வரையும் என்கவுண்டர் என்று   கூறி சுட்டுக் கொன்றோம் என்று வன்சாரா சி.பி.ஐ இடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார் !

சாம்பல் தாடி,கருப்புத்க்தாடி என்பது முதல்வர்  மோடியையும்  ,உள்துறை அமைசர் அமீத்ஷவையும்குறிப்பிடுவதாக உலகம் பூராவும்   தெரிந்த ஒன்று !

மேலும் சிறப்பு ப்லானாய்வுக் குழுவிடம் குஜராதிஅட்வகேட் ஜெனரல் திரிபாதி  " சிறப்பு புலனாய்வுக்குழு  இஷ்ராத் கொல்லப்பட்டது என்கவுன்டரில்  அல்ல என்று கூறி னால்நாம் அதனை கடுமையாக எதிர்க்கவேண்டும் என்றுகூறியுள்ள டேப்பும் உள்ளது ! இந்த டேப்பை பதிவு செய்தவர் , கல்வி,மாநில உள்துறை அமைச்சர், முதல்வர் மொடியின்  செயலாளர் ஆகியோர்   கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கு கொண்ட போலீஸ் அதிகாரிதான் !

மோடியின் பிரதமர் கனவு இதனால் பாதிக்கப்படும் என்பது பெரிய  
தலைவலியாக மாறிவிட்டது !!!


Thursday, July 25, 2013

அமெரிக்காவில் வாழும் ஒரு 

இந்திய வம்சாவளி தந்தையின் பாடு ......!!!

(அப்பாதுரை அவர்கள்மன்னிக்கவும்)
.

 

    ஏறத்தாழ மூவாயிரம் வருடக் கலாசார வளர்ச்சிக்குப் பின்னும், அன்றைக்குப் போல் உலக மக்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். அடிப்படை வேற்றுமை. அதற்குப் பிறகு மதம், இனம், குலம், பணம், படிப்பு என்று அடையாள அடிப்படையில் பல பிரிவினைகள். வேர் என்னவோ கடவுள் நம்பிக்கைதான் என்று தோன்றுகிறது. 

    என் பிள்ளைகள் கடவுள் பற்றிக் கேட்ட போது எனக்கு உண்மையென்று பட்டதைச் சொல்லிவிட்டேன். என் பிள்ளைகள் துருவித் துருவிக் கேட்பவர்கள். பிஞ்சுமனப் பிள்ளைகளுக்கான குணச்சித்திரம். அவர்களின் ஐந்து-ஏழு வயதுக் காலத்தில் வீட்டில் நடைபெற்ற வழக்கமான உரையாடல்:
"கடவுள் உண்டா அப்பா?"
"எனக்குத் தெரியாது"
"கடவுள் உண்டு என்று நம்புகிறாயா டேடி?"
"இல்லை, நான் நம்பவில்லை"
"அம்மா நம்புகிறாரா?"
"அம்மாவைக் கேட்க வேண்டும்"
"கடவுள் இல்லை என்கிறார் அம்மா. இருந்தால் மனிதர்கள் பிராணிகளிடம் அன்போடு இருப்பார்கள் என்கிறார்"
"சரி"
"நான் கடவுள் இருப்பதாக நம்ப வேண்டுமா?"
"உன் விருப்பம்"
"நம்புவதற்கு ஏதேனும் காரணம் உண்டா அப்பா?"
"காரணம் எதுவும் கிடையாது"
"பிறகு நான் ஏன் நம்ப வேண்டும்?"
"அவசியமேயில்லை"
"நம்பவில்லையென்றால் கடவுள் தண்டிப்பாரா?"
"தண்டிக்க மாட்டார்"
"கடவுள் பெண்ணா டேடி?"
"தெரியாது"
"ஜீசஸ் தான் கடவுள் என்கிறார் பாட்டி. ஜீசஸ் ஒரு ஆண் தானே?"
"ஆமாம்"
"அது சரியில்லை டேடி. ஐ மீன்.. கடவுள் ஏன் ஆணாக இருக்க வேண்டும்?"
"தெரியாது. ஆனால் உன் கேள்வி புத்திசாலித்தனமானது"
"கடவுள் ஒரு மிருகமோ?"
"தெரியாது"
"இந்தியா பாட்டி உனக்குக் கொடுத்த படங்களில் இருப்பது போல.. ஒரு வேளை இந்தியக் கடவுள்கள் மட்டும் மிருகங்களோ?"
"தெரியாது"
"உனக்கு ஒன்றுமே தெரியவில்லை டேடி"
"ஹிஹி"
"சிரிக்காதே.. அப்ப கடவுள் என்னைத் தண்டிக்கமாட்டார் என்பது மட்டும் எப்படித் தெரியும்?"

    கடவுள் தண்டிக்கிறாரோ இல்லையோ, கண்மூடி மனிதர்கள் தண்டிப்பார்கள் என்ற கவலை எனக்கு உண்டு. இத்தனை வளர்ச்சிக்குப் பின்பும் கடவுள்-மத நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. அமெரிக்கச் சமூகம் என்றில்லை, உலகச் சமூகமெங்கும் இதே கதை. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை விசித்திரமாகப் பார்க்கும் பார்வை. எண்ணம். செயல். 

உரையாடல்கள் நிற்கவில்லை. சில வருடங்கள் பொறுத்து:
"அப்பா.. கடவுள் நம்பிக்கையில்லைனு என் டீச்சர் கிட்டே சொன்னேன்.. ரொம்பக் கோபமாயிட்டாங்க.. நீ நாளைக்கு ஸ்கூலுக்கு வந்து டீச்சரையும் ப்ரின்ஸ்பலையும் பார்த்துப் பேசணும்"
பள்ளிக்குச் சென்று, பிள்ளைகளின் ஆசிரியருடன் பேச்சு வார்த்தை. போராட்டம்.
"உங்கள் பிள்ளை நம் நாட்டின் அடிப்படை நம்பிக்கைகளை ஏற்க மறுக்கிறார்" 
"அடிப்படை நம்பிக்கைகள்... என்றால்?" 
"ஹ்ம்ம்.. உங்களுக்குத் தெரிந்திருக்குமே.. கடவுளை நம்புகிறோம் என்பதே..you know.. in god we trust"
"நான் அறிந்தவரை அமெரிக்காவின் அடிப்படை நம்பிக்கை அதுவல்ல. அமெரிக்கா தோன்றிய தினத்திலிருந்து அதன் அடிப்படை நம்பிக்கைகள் வாழ்வு, சுதந்திரம், மகிழ்ச்சிக்கானத் தேடல் இவ்வளவே.. life, liberty and pursuit of happiness.. and our allegiance.. liberty and justice.. you should check it out"
"இருக்கலாம்.. எனினும் நாம் அனைவரும் கடவுளின் கண்காணிப்பில் ஓர் நாட்டு மக்கள்.. we are one nation under god.. அதை மறக்கக் கூடாது"
"சரி"
"நீங்கள் இந்தியக் கடவுள்களை நம்புகிறீர்களோ ஒருவேளை?"
"கடவுள்கள் நாட்டு எல்லைகளுக்குட்பட்டவர்கள் என்பது தெரியாது. i didn't know gods had nationalities or operated within borders.. but, no, we don't believe in any god"
"தேவையில்லாத கிண்டல். but seriously, there is no pursuit of happiness without god.. கடவுள் இல்லாமல் மகிழ்ச்சியே கிடையாது.."
இவருடன் பேசி என்ன பயன் என்று தோன்றியது. ஏதோ சமாதானம் சொல்லி வெளியே வந்தேன். மாலை வீடு வந்ததும் பிள்ளைகளிடம் இனிமேல் இது போல் பள்ளியில் பிரச்சினை கிளப்ப வேண்டாம் என்றேன்.
"ஏன்?"
"டீச்சர்களுக்கு உன் நிலை பிடிக்கவில்லை" 
"அப்படின்னா.. இப்ப கடவுளை நம்புறதா சொல்லணுமா?" 
"தேவையில்லை.. கடவுளை நம்பவில்லைனு சொல்லாமல் இரு போதும்" 
"ரெண்டும் ஒண்ணு தானே?" 
"இத பாரு. கடவுள் நம்பிக்கையில்லைனு சொல்லாதேனு சொல்றேன்.. ரெண்டும் ஒண்ணு தான்.. ஆனா வேறே" 
"whatever.."
"இத பாரு.. இதைப் பெரிசு படுத்தாதே.. உன்னோட கடமை வேலை எல்லாம் படிப்புல கவனம் செலுத்தி நல்ல மாணவரா இருக்க வேண்டியது தான்.. புரியுதா?" 
"அப்போ.. டீச்சர் கேட்டா.. என்னைப் பொய் சொல்லச் சொல்லுறே" 
"இல்லை.. உண்மையைச் சொல்ல வேண்டாம்னு சொல்றேன்.."
"whatever.."
அத்துடன் அன்றைய மாலையின் நிம்மதி தொலைந்தது.

    ஆத்திகச் சமூகத்தில் ஆத்திகப் பிள்ளை வளர்ப்பே எளிதல்ல. எனில், நாத்திகப் பிள்ளை வளர்ப்பு !!

Tuesday, July 23, 2013

எங்கள்  ஆழகேசன் சார் .....!!! 


1942ம் ஆண்டு நான் முதல் வகுப்பில் சேர்ந்தேன்! அது நகராட்சி பள்ளி! அப்பொது பிரிட்டிஷ் ஆட்சி ! 
காலை எட்டரை மணிக்கு பள்ளி சென்று விடுவோம்! இறை வணக்கம் உண்டு! "ஆண்டவரே   ! ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் அரசரை காப்பாற்றும் ! (god save our king ) என்று பாடிவிட்டுத்தான் "பொன்னார் மேனியனே " என்று படுவோம்!
பெரியகிளாசு அண்ணன் மார்கள் "அறம்  செய விரும்பு " என்று ஆரம்பிக்க நாங்கள் திரும்பிச் சொல்லுவோம்! கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,குழிப்பெருக்கம்,என்று வாய்ப்பாட்டு சொல்லுவோம்! அதன் பின் தான் வகுப்புக்குள் செல்லுவோம்!

அப்போதெல்லாம் ஆரம்பப்பள்ளி ,நடுநிலைப்பள்ளி ,உயர்நிலை பள்ளி என்றுதான் உண்டு !

நான் தி.லி டவுணில் உள்ள மந்திர மூர்த்தி உயர்நிலைப்பள்ளியில் ஆறாப்புசெர்ந்தேன்! 

வாரத்திற்கு மூன்று நாள்,ஓவியம்,கைவினை,நல்லொழுக்கம் என்று வகுப்புகளுண்டு ! மூன்று வகுப்புகளையும் அழகேசன் சார் தான் எடுப்பார்! 
கோடு வரைய ,வட்டம் போட , அழுத்தமான கோடு, மெலிதான கோடு, கோட்டின் நிழல் என்று சொல்லிக் கொடுப்பார்!

கைவினை வகுப்பில்,உளி,சுத்தியல்,,இழைப்புளி,திருப்புளி ,திருகாணி ஆகியவற்றைக் கொண்டுவந்து அதன எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக் கொடுப்பார்!

நல்லோழுக்கக்கிளாசில் நல்ல நல்லகதைகளை சொல்லுவார்! ஏழாம் வகுப்பில் எங்களுக்கு "ஏழை  படும்பாடு " என்றகதையச் சொல்லுவார்! சோல்லும் போது அவர் குரல் பிசிறடிக்கும்! "uncle toms cabin " கதையச் சொல்லும் பொது எங்களுக்கும்   அழுகைவரும் !

எட்டாப்பு படிக்கும் போது சிறு புத்தகங்களை படிக்கச் சொல்லுவார்! 20-30 பக்கமுள்ள நீல அட்டைபோட்ட புத்தகங்கள்! அவை ஐரோப்பிய நாட்டு தலவர்கள் வாழ்க்கை வரலாறாக இருக்கும்! ரூசோ ,சமுதாய ஒப்பந்தம்,வால்டயர்,மாஜினி, கரிபால்டி ,ஆலிவர் கிராம்வல்,என்று இருக்கும்! 

"ஒரு முறை என்னிடம் வீட்டிற்கு கோண்டு போகாதே ! இங்கேயே படி" என்று ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்! நீல அட்டையில் தாடி வைத்த ஒருபடம் போட்டிருந்தது! "கார்ல் மார்க்ஸ் " என்று எழுதியிருந்தது! அவர் ஜெர்மன் நாட்டில் இருந்தார் ! கணிதத்தில் கெட்டிக்காரர் ! ஒரு பணக்காரப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்! அவரை அரசுக்கு  பிடிக்கவில்லை என்பதால் நாட்டைவிட்டு லண்டனுக்குசென்றார் ! அங்கு வறுமையில் கஷ்டப்பட்டார்! தன கஷ்டத்தை விட உலகமக்களின் கஷ்டத்தை போக்க பாடுபட்டார் " என்று அந்த புத்தகம் சொல்லியது!

நான் வளர்ந்து பெரியவனாகியதும் மார்க்ஸ் பற்றியும் மார்க்சீயம் பற்றியும் புரிந்து கொண்டேன்!

ஒல்லியான கருத்தகுட்டையான  உருவம் கொண்டவர் அழகேசன் சார்! தங்க நிற ப்ரேமும் ,வெள்ளை காதர் ஜிப்பாவும் வெள்ளை வேட்டியும் கொண்ட அவரை -நான் இனி பார்க்கமுடியாது! எண்பதை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்!

ஆனாலும்  என்னால்   அழகேசன் சாரையும்   மறக்கமுடியாது !

மார்க்சையும் மறக்க முடியாது !!

 
 

Saturday, July 20, 2013


they were...2
அவர் என்னுடைய நெருங்கிய நண்பர்.பனிரெண்டாம் வகுப்பில் அவருடையமகள் 1100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளார். நண்பருடைய தந்தை தமிழகத்தில் மரியாதைக்குரிய பெரியவர்.என் நண்பரின் மகளுக்கு அறிவியல் பட்டப்படிப்பில் கணக்கினை சிறப்புப்பாடமாக எடுத்துக்கொள்ள விருப்பம்.இரண்டு கல்லூரிகளிலிருந்து இடம்கொடுத்தார்கள். நண்பருக்கு மகளை நாங்களிருந்த குடியிருப்புக்கு அருகில் உள்ள பிரபலமான கல்லூரியில் சேர்க்க விருப்பம்.நான் இருக்கும் சாந்தி நகரில் அந்தகல்லூரி பேராசிரியை ஒருவர் குடியிருந்தார்.என் மனைவிக்கு அவரை பழக்கம் உண்டு.நண்பர் என்னிடம் அந்தகுறிப்பிட்ட பேரசிரியை மூலம் இடம் கிடைக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்."ஐயா உங்கள் தந்தை பெயரைச்சொன்னாலே கிடைக்குமே" என்றேன்.அவர் அதனை விரும்பவில்லை. என் மனைவி மூலம்பேரசிரியரை அணுகினேன். "என்னங்க! அந்தப் பெண்ணின் தாத்தா எம்.பி யாமே..அவர் கூட சொல்லவெண்டாம். அந்தப் பெண்ணின் தாத்தா எம்.பி என்றுநீங்கள் யாரா வது நிர்வாகத்திடம் சொன்னாலே போதும்,இடம் கிடத்துவிடும்"என்று பேரசிரியர்சொன்னதாக.கூறினார்.நிர்வாக்த்திற்கு போன் செய்யலாமா என்று யோசித்தேன் .ஏம்.பி ஏன்ன சொல்வாரோ என்ற பயமும் இருந்தது. நான் பணியாற்றும் தீக்கதிர் பத்திரிக்கையின் பொதுமேலாளராக் இருந்தவர் தோழர் அப்துல் வஹாப்.நாங்கள் "அத்தா" என்று அன்போடு கூப்பிடும் அவர் சுத்ந்திரபோராட்டவீரர்.பிரிட்டிஷ் விமானப்ப்டையில் சேர்ந்து கட்சிக்கிளையை உருவாக்கினவர்.அவர் மூலம் எம்.பியை அணுகிடலாமென்று நிணைத்து அவரை அணுகினேன்."பார்க்கலாம்.நீ ஏதாவது உறூதி கொடுத்திருக்கிறாயா? " என்று என்னை கேட்டார்நான் இல்லை என்று தலையாட்டினேன்.இரண்டு நாள் கழித்து அவரிடம் போய் கேட்டேன்."நல்லகாலம் தோழர் எம்.பி என்ன.சொன்னார் தெரியுமா?ஏன் அத்தா! என் பேத்திக்கு காலேஜில சீட்டு வாங்கத்தான் கட்சி என்னை எம்.பி ஆக்கியிருக்குன்னு நினைக்கேளா? என் று கேட்டதக சொன்னார்.அந்த எம்'பி, தமிழர்களுக்கு தமிழில் தந்தியடிக்கும் உரிமையைப்பெற்றுத்தந்த ஏ. நல்லசிவன் அவர்கள்தான்.(ஒரு மீள் பதிவு )
Posted by kashyapan at 12:12 AM 9 comments
Saturday, April 24, 2010

Friday, July 19, 2013

அந்த நூற்றாண்டு நாயகன் ....!!!


சப்தர் ஹஷ்மி  படுகொலை செய்யப்பட ஆண்டு அவருடைய பிறந்த நாளையொட்டி டெல்லியில்விழா எடுத்தார்கள்! அதில் பங்கு கோள்ளச் சென்றிருந்தேன்!

எனது பால்ய கால நண்பர் மத்திய அரசு தலமைச் செயலகத்தில் பணியாற்று கிறார் ! அவ்ரப்பார்க்க செயலகத்திற்கு நடந்து சென்றேன்! 

உத்திரப் பிரதேசத்தில் இருந்து ஒரு வயதானவர் தள்ளாடிதள்ளாடி வந்து கொண்டிருந்தார்! அவருடைய மகள் 30 வயது ! கடுமையான நோயில் படுத்து இருக்கிறாள் அவளுக்கு  அரசு உதவி கேட்டு வந்திருக்கிறார்! திக்கு தெரியாமல் அலைந்து கொண்டிருந்தார்!பாவமாக இருந்தது! அவரை என்  நண்பரிடம் அழித்துச் சென்று விவரம் கேட்டு அனுப்ப முடிவு செய்தேன்!

நண்பர் under secretory ! முதியவரிடம் விசாரித்தார் ! "ஐயா! குறந்தது மூன்ரு நான்கு மாதம் ஆகும்! விசாரிப்பார்கள் ! நீங்கள் சொல்வது உண்மையா என்று பார்ப்பார்கள்! யாரவது எம்.பி யை தெரிந்தால் அவருடைய சிபாரிசு இருந்தால் விரவு படுத்தலாம்! "       என்றார் !

"கமிஷன் கேட்கிறார்கள்  " முதியவர் !

  நண்பர் என்னைப் பார்த்தார்!
பிரதமரின் அலுவலகத்தோடு தொடர்பு கொண்டார் !

பின்னர் என்னிடம் " இதனை முடிவு செய்பவர்கள் பிதமர் அலுவலகத்தினர் தான்! போலியான கோரிக்கை களை  நிராகரிக்க விசாரணை நடத்துகிறார்கள்!"

"வேறு  வழியே இல்லையா!"

நண்பர் யோசித்தார்!

பெரியவரே ! ஒருகாரியம் செய்யுங்கள்! அசோகா ரோடு 14 ம் எண்ணில் ஒரு அலுவலகம் இருக்கிறது! அங்கு ஒரு எம்.பி இருப்பார் ! அவரிடம் உங்கள் கோரிக்கையை சொல்லுங்கள்! அவர் சிபாரிசு  செய்தால் உடனே கொடுப்பார்கள்! "என்று முதியவரை அனுப்பினார்! 

அது மார்க்சிஸ்டு கட்சியின் பாராளுமன்ற அலுவலகம்! 

அவர் சிபாரிசு செய்தால்  விசாரணை  இல்லாமல் உடனடியாக கொடுக்க பிரதமர் உத்திரவிட்டிருந்தார் !  

அப்போது பிரதமடாயிருன்தவர் V.P.Singh

அந்த எம்பியின் பெயர் சமர் முகர்ஜி!

வீர  வணக்கம்  தோழா!Monday, July 15, 2013

ஹிட்லருக்கு நாய்க்குட்டியைப் 

பிடிக்கும் ..........!!!


ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லருக்கு அவர் வளர்க்கும் நாய்க்குட்டியின் மீது கொள்ளைப் பிரியம் !

1933ம் ஆண்டு ஜெர்மன் அரசு ஒரு சட்டத்தை இயற்றியது! 
அந்த நாட்டில் கடல் நண்டுகளைப்  பிடித்து  சமைத்து  பிரபுக்களுக்கு பரிமாறுவார்கள் !  அது உயர்ந்த வகை உணவாகக் கருதப்படும்!

நல்ல பக்குவத்தில் நண்டு வேக வேண்டும்!  உயிரோடு நண்டுகளைப்  பிடித்து 
மிதமான சூட்டில் மெல்ல மெல்ல வேகவைக்க வேண்டும் ! நண்டு மெல்ல மெல்ல சாகும்! ருசியும் கூடுதலாகும்!

இந்த மிருக வதையை தடுக்கத்தான் சட்டம் வந்தது ! இதன்படி  நண்டுகளைக் கொன்று விட்டு சமைக்க உத்திரவிடப்பட்டது! 
அதேபோல் கடல்மீனை உயிரோடு பிடித்து துண்டு போடும்போது அதற்கு வலிக்குமே! அதனால் அதற்கு மயக்க மருந்து கொடுத்து விட்டு துண்டு போடவேண்டும் என்று உத்திரவு  வந்தது!

ஆனால் நாஜிகளின் தலைவன் ஹிட்லருக்கு யூதர்களை வதைப்பது பற்றி கவலையில்லாமல்போயீற்று !

நாய்க்குட்டி ஒன்று சக்கரத்தில் சிக்கி விட்டால் மிகவும் வருத்தப்படுவர இந்தியாவிலேயே நரேந்திர மோடி ஒருவர் தான்.!

முஸ்லிம்கள் நரவேட்டையாடப்பட்ட போது அவர் முதலமைச்சர்! பிரதமர் வாஜ்பாய் மத்தியில் தி மு.க ஆதரவோடு ஆட்சியிலிருந்தார்!

கோத்ராவில் ரயில் விபத்தில் இறந்தவர்கள் சடலத்தை பிளாட்பாரத்தில் போட்டு பிரேத பரிசொதனை   நடத்தினார்கள் !மக்கள்முன்னிலையில் ! இது சரியாக நடக்கிறதா என்று மேற்ப்பார்வை இட்டவர் மோடி!

துண்டு துண்டாக்கப்பட்ட சடலங்களை விஸ்வ இந்து பரிஷத்திடம் கொடுத்தார்! அவர்கள் அகமதாபாத் நகரில் ஊர்வலமாக எடுத்துச்சென்று மக்களின் உணர்வைத் தூண்டிவிட்டனர்! இதனை எதிர்த்த உள்துறை அமைச்சர் ஹரன் பாண்டே அரசு தலைமையகத்தில் காரிலிருந்து இறங்கும் பொது சுட்டுக் கொல்லப்பட்டார்!

நரேந்திர மோடியை பிரதமராக்க ஆர். எஸ் .எஸ். இயக்கம் துடிக்கிறது! 
பா.ஜ. க மண்டையை ஆட்டுகிறது !. 

நாம் என்ன செய்யமுடியும் !!! ???

(ஆதாரம் : 16-5-13 டைம்ஸ் ஆப் இந்தியா - நாக்பூர் பதிப்பு!)Friday, July 12, 2013

ஐ .மாயாண்டி பாரதியும் ,

பவநகர் மகாராஜாவும் ........!!!

தீக்கதிர் பத்திரிகையின் 50ம் ஆண்டு நிறைவு விழா மதுரையில்நடந்தது!இந்திய சுதந்திர வேள்வியில் தங்கள் நரம்பையும் சதையையும் ஆகுதியாக சிந்தியவர்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது! 

சுதந்திர இந்தியாவின் மதறாஸ் மானிலமுதல் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடந்தது ! கம்யூனிஸ்டுகள் ஆகப் பெரிய கட்சியாக வந்தனர்1 மற்ற கட்சிகளின் துணையோடு ஆட்சி அமைக்க வியூகம் அமைக்கப்பட்டது!

ஆளும் வர்க்கம் விடுமா! அரசியல் சூட்சியோடு ராஜாஜி பின்வாசல் வழியாக முதலமைச்சரானார்! மாநிலம் முழுவதும் கம்யூனிஸ்டுகள் நரவேட்டை யாடப்பட்டனர்! 

காமராஜ் வந்தார் ! நரவேட்டை நிற்கவில்லை!  சேலம் சிறையில் துப்பாக்கி சூடு நடந்தது ! நிராயுதபாணியான கம்யுனிஸ்டுகள் கொல்லப்பட்டனர்! கட்சி அணிகளுக்கு தாங்கமுடியாத சோகம்! ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அணிகளுக்கிடையே உலவியது!

அப்போது மாநில கவர்னராக இருந்தவர் பவநகர் மகாராஜா! கவர்னர் சுற்றுப்பயணமாக தூத்துக்குடி வருவதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன! சென்னையிலிருந்து ரயில்  மார்க்கமாக வருவதாக ஏற்பாடு !

இரவில் பயணம் ! மணியாச்சி தாண்டி மீளவிட்டான் வரும் போது 
ரயில் தடம் புரண்டு கவிழ்ந்தது !

மறுநாள் காலை பத்திரிகையில் செய்தி வெளியாயிற்று ! மீலவிட்டன் அருகே சரக்கு ரயிலொன்று தடம் புரண்டு கவிழ்ந்ததாக !

அரசு கம்யூனிஸ்டுகளைக் கைது செய்தது ! அப்படி கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தான் ஐ. மாயாண்டி பாரதி ! 
வழக்குநடந்து விடுதலாயாகி வந்தார்!

தீக்கதிர் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்!

அவர்காலடியில் அமர்ந்து மார்க்சீயம் கற்கும்பாக்கியம் பெற்றவர்களில் அடியேனும் ஒருவன்!

97 வயதான அந்த பாரத புத்திரரை மேடையில் ஏற்றி பிரகாஷ் காரத் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார் !
 
கண்கள் கசிய "ஐ .மா.பா, ஐ. மா .பா" மனம் கூவ அந்தக்காட்சியை  தரிசித்தேன்!

ஐ.மா.பா  உங்கள் நூறாம் ஆண்டுவிழாவிற்கும் நான் வருவேன் !!

ஆசீர்வதியும் !!!