நேரு - நாசர் - நுக்ருமா-----!!!
இந்தியா சுதந்திரம் பெற்றதும் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளில் தேச பக்திமிக்கதலைவர்கள் தங்கள் நாட்டின் விடுதலைக்காக போராடினார்கள். இந்தியா குறிப்பாக நேரு இந்தத்தலைவர்களோடு மிகவும் நெருக்கமான உறவும் தொடர்பும் கொண்டிருந்தார்.புதிதாக விடுதலை அடைந்த நாடுகளையும் இணைத்துக்கொண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுபட துடிக்கும் ஆப்பிரிக்க நாடுகளு க்கு ஆதரவளித்து வந்தார். இதில் அவரோடு கரம் கொத்து நின்றவர்கள் தான் எகிப்து நாட்டின்
நாசரும் ,கானா நாட்டின் நுக்ருமாவும். அன்று பத்திரிகைகளின் "three ns " என்று உலகம் பூராவும் பாராட்டப்பட்ட தலைவர்கள் இவர்கள்.
எகிப்து நாட்டின் ராணுவத்தில் கர்னலாக இருந்தவர் காமல் அப்துல் நாசர்.
எகிப்து நாட்டு அரசர்கள் ஆட்சியை மாற்றி ஒருஜனநாயக ஆட்சியைக் கொண்டுவர விரும்பிய ராணுவ அதிகாரிகளுக்கு தலைமை தங்கினார்.ரகசியமாக.விவசாய நாடான எகிப்தில் நிலச்சிர்த்திருத்ததை
கொண்டுவர விரும்பினார். பிரிட்டிஷ்கரர்கள்வசம்பணம் கொழி க்கும் சுயஸ் கால்வாய் இருந்தது.
விவசாயப் புரட்சியை நடத்த பாசன் வசதியை பெருக்க வேண்டிய திருந்தது அதனை மேம்படுத்த நைல் நதியின் குறுக்கே ஆணை கட்ட விரும்பினார் . எந்த மேற்கத்திய நாடும் உதவ மறுத்து விட்டன. அரசரும் இதனை விரும்பவில்லை. ஆகவே ஜெனரல் நகிப் தலைமையில் புரட்சியில் ஈடுபட்டு பருக் அரசரை நாடுகடத்தினார்.
. அப்படியும் அவரால் விவசாய சீர்திருத்தத்தை கொண்டு வர முடியவில்லை. ஜெனரல் நகிப் அதனை எதிர்த்தார்.நகிப்பை நிக்கி விட்டு அவரே பொறுப்பேற்றுக் கொண்டார். நைல் நதியின் குறுக்கே அஸ்வான் ஆணை கட்ட சுயஸ் கால்வாயை எடுத்துக் கொண்டார்.பிரான்சு,பிடிட்டிஷ் படைகள் எகிப்தை தாக்கின.அமெரிக்க தன னுடைய போர்க்கப்பலை அனுப்ப முடிவுசெய்தது.சோவியத் பிரதமர் கொசிஜின் எச்சரிக்கை செய்ததால் அமெரிக்க,படைகள் வரவில்லை எகிப்திய மக்களும் பிரிட்டிஷ்,பிரான்சு படைகளை துவம்சம்பண்ணி கால்வாயைகைப்பறினர் .
ஏகாதிபத்தியம் நாசரைக் கொல்ல ஆளனுப்பியது. அவர் அந்த முயற்சியில் தப்பிவிட்டார்... அப்போது அவர் "என் தேச மக்களே! நான் உயிவிட்டால் உங்களுக்காக உயிவிடுவேன்.நான் உயிவாழ்ந்தலும் உங்களுக்காக வாழ்வேன்.உங்களின் கௌரவம் எகிப்தின் கௌரவம் இரண்டையும் காக்க
என்னை அர்ப்பணிக்கிறேன்" என்றார்.
எகிப்தில் மன்னராட்சியை மிண்டும் கொண்டுவர முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.முஸ்லிம்சகொதரர்கள்,புரட்சிகர கவுன்சில் என்ற பல அமைப்புகள் முயற்சிக்கின்றன சென்ற ஆண்டு நடந்த "புரட்சியில் " முஸ்லிம் சகோதரர்கள் வந்துள்ளனர்
.அவர்களின் தலைவர் சட்டத்திருத்தம் கொண்டுவந்து விரட்டியடிக்கப்பட்ட பருக் மன்னருக்கு இருந்த அதிகாரங்களை திரும்பவம் பெற்று ஆட்சி நடத்துகிறார்.
சென்ற ஆண்டு நடந்த புரட்சி "பதிவுலகம்" நடத்தியது என்று பிரச்சாரம் நடந்ததது
பதிவுலக நண்பர்களே ! மன்னியுங்கள்.!
பதிவுலகம் எதிர்புரட்சியைத்தான் செய்யும்!
உண்மையான புரட்சியை செய்ய அனுமதிக்கப்படாது!
எச்சரிக்கை !!!