Tuesday, May 24, 2016

வெற்றியின் ரகசியம் .....  1


"எட்டி ரேசன் வாங்கிட்டியாடி ? "

"முந்தாநாளே வாங்கிட்டேனே அக்கா ?" "

"அடி பாதகத்தீ !  ஏ முட்டி சொல்லலை ?" வாரேன் ! அந்த ரேசன் முத்தையாவை பிடிக்கிறேன் ?"

--------------------------------------------------------------------------------------------------------------------------

"எக்கா ! இந்தாறு இங்கன வந்து சலம்பாத "

"அதேப்பிடில எல்லாருக்கும் தானே ரேசனு" :

"இந்தாபாரு எங்கிட்ட 2000 கார்டு இருக்கு அவன் 1000 கார்டுக்குகூட சப்ளைஇல்லைங்காண் "     "

"நான் கவுன்சிலர கூட்டிட்டு வாரேஂல ?"

"எக்கா உனக்கு ரேசன் வேணூம்கியா ?வேண்டாம்கியா ?"

"வேணும் "  

"நீ எந்த வார்டு "

"பதிமூணூ "

  "அப்பம் அந்த வட்டம் இருக்கன்ல ! "

"ஆமாம் "

" அவ தம்பி ய பாரு "

-------------------------------------------------------------------------------------------------------------------------

"எ ! ராசா! அரிசி போட்டா மண்ணெண்னை இல்லங்காண் ,மண்ணெண்ணெய் பொட்டா பாமாயி இல்லைன்கான் " 

"சரி பண்ணிருவம் அக்கா "

"நல்லா ருப்பே டே " 

" கொஞ்சம் செலவாகும் " 

"அட நாசமத்து போறவனே "  

"நாங்களும் பொழைக்கணும்ல " 

"எம்புட்டுல கேக்க " 

"ஐம்பது "

------------------------------------------------------------------------------------------------------------------------

-"புள்ளைய பள்ளி கூடத்துல செக்கணூஂல ?"

 "ஆமாட்டி ! அதுக்கு தான் சாதி சான்றிதழ் வேணும்காண் ? "

 "வாங்கிட்டு வாங்க "

" ஆமாம் உங்க மாமனா ஒக்காந்துகிட்டு கொடுக்கான்"

"அந்த கவுன்சிலர பாருங்க " 

" அவன் கால் தரல படறதில்ல "
" அவன் மச்சினன தான் செல்வாக்காம் "

--------------------------------------------------------------------------------------------------------------------------

" அண்ணே  வாங்கண்ணே "
 "தம்பி புள்ளைய பள்ளி கூடத்துல சேக்கணும் " 

"   சேத்துடுவம் " "

"சாதி சான்றிதழ் "  

"வாங்கிபுடுவம் ! கொஞ்சம் செலவாகும்ணே !"

"எம்புட்டு ?" 

"ஐனூறூ "

"தாங்காதுண்ணெ " 

"  புள்ளை   குட்டி எங்களுக்கும் இருக்குண்ணே "

"நாளைக்கு உங்க வீட்டுக்கு வந்து கொடுத்துடறேன் அண்ணே "

--------------------------------------------------------------------------------------------------------------------------

நீங்க போராடுவிங்க ! அவன் செஞ்சு கொடுக்கான் !Saturday, May 21, 2016"capitalism should be protected from capitalist "முதலாளித்துவம் ,


முதலாளிகளிடமிருந்து ,


காப்பாற்றப்பட வேண்டும் .....!!!


இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராமன் G ராஜன் இருக்கிறார். தமிழ்    நாட்டை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர் மத்திய பிரதேசத்தில் அதிகாரியாக இருந்தார்பின்னர் மத்திய அரசு செயலகத்தி டெல்லியில் பணியாற்றினார். அவருடைய மகன் தான்ரகுராமன் .

ரகுராமன் போபாலில் I . I .t யில் படித்து பட்டம்பெற்றார்.பின்னர் இந்தியாவின் புகழ்பெற்ற அகமதாபாத் I I M  ல் நிர்வாக இயலில் பட்டம் பெற்றார். உலகபுகழ் பெற்ற கல்வி  நிறுவனமான  அமெரிக்க M I t இல படித்தார்.ஹார்வர்டு பல்கலையில் முனைவர் பட்டம் .சிக்காகோவில் பெரிய பதவியில்  உ த்யோகம் .  


இதெல்லாம் பெரிசல்ல . ஏழு எட்டு வருடத்திற்கு முன் அமெரிக்க பொருளாதாரம் கவிழ்ந்து விடும் என்பதை நான்கு வருடங்களுக்கு முன்பேயே கணீத்துச் சொன்னார்."சென்னை சிறுவனின் உளறல் " என்று அமெரிக்க நிபுணர்கள் ஏகடியம் பேசினார்கள்.  அமெரிக்க வங்கிகளும், வங்கி முதலாளிகளும்,அதிகாரிகளும் புரிந்த லீலைகளீல் அமெரிக்க பொருளாதாரம் குப்புற விழுந்தது.இன்னும் எழுந்திருக்க வில்லை .

ரகுராமன் முதலாளித்துவம் நாட்டிற்கு நல்லது. சமூகத்திற்கு நல்லதே செய்யும் . தனிமனித மேமபாட்டுக்கு நிச்சயம் உதவும் என்று தத்துவ ரீதியாக மனதார நம்புபவர். பின ஏன் முதளீத்துவத்தைஏற்றுக்கொண்ட நாடுகள் திணறுகின்றன ? ஆராய ஆரம்பித்தார்....


...................................................................................................................................................................

நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குமுன் தமிழ் நாட்டில் நடநதது..செட்டியார் குழுமம் உரத்தொழிற்சால அமைக்க விரும்பினார்.இரண்டு லட்சம் பொட்டூகம்பெனி ஆரம்பித்தார்.அவர் மைத்துனர், உற வினர்கள் வேண்டியவர்களென்று ஆளுக்கு கொஞ்சம் லட்சங்களை போட்டு அதில் சேர்ந்தனர்செட்டியார் கம்பெனி சேர்மன்,மற்றவர்களுக்கும் பதவி  மத்திய அரசு 70 கொடி ரூபாயில் உரத்தோழிர்சாலைக்கு அனுமதி அளித்தது.

எல்.ஐ.சி 5 கோடி ரூபாய்க்கு முதலீடுசெய்ய ஒப்புக்கொண்டது.நியூ இந்தியா ,ஸ்டேட்வங்கி என்று பொதுத்துறை நிறுவனங்கள் 19 கொடி கொடுத்தன .உற்பத்தி ஆரம்பமாகியது .


உரத்தை வினியோகம் செய்யும் உரிமை செட்டியாருக்கும் அவருடைய ஆட்களுக்கும் .இன்று ஆயிரக்கணக்கான அந்த கம்பெனி சொத்துக்கள் செட்டியார் வசம்  .

...................................................................................................................................................................

அதானி ஆஸ்திரேலியாவில் சுரங்கம் தோண்ட போனார் கையில்"கால் காசு" கொண்டு போகவில்லை .மோடி தயவில் ஸ்டேட் வங்கி 6000 கோடி கொடுத்துள்ளது. இந்தியாவில் எந்த முதலாளியும் தன கைகாசை போட்டு கம்பெனி ஆரம்பிப்பது இல்லை. முழுக்கமுழுக்க அரசு பணம்- மக்கள் பணம் . இதனைத்தான் crony capitalism என்கிறார்கள்.

இதனைப்புரிந்து கொண்ட ரகு  ராமன் ஒரு புத்தகம் எழுதியுள்ளார் '

அந்த புத்தகத்தின்பெயர் தான் "save capitalism from capitalist ".


"முதாளித்துவத்தை முதலாளிகளிடமிருந்து காப்பாற்றுவோம் "  


"கார்பெரேட்  அடி நக்கிகள்" மோடி,சு.சாமி ஆகியொர் ரகுராமன் அவர்களுக்கு எதிராக போர் தோடுத்துள்ளது


அற்ப  விஷயமல்ல .  


Thursday, May 19, 2016

(திரைப்பட விமரிசனமல்ல )

"என்று தணியும் " என்ற 

திரைப்படத்தை முன்வைத்து .....!!!"பார் "

"கடந்துசெல் "


80 ஆண்டுகளில்  "பார் " (கடந்து செல் ) என்று ஒரு திரைப்படம் வந்தது. பீஹார் மாநிலத்தின் உள்ளார்ந்த ஒரு குக்கிராமம் . சாதி திமிர் பிடித்த பண்ணைகளிடம்  சிக்கிய தலித்துகளை க்கொண்ட குடி இருப்புகள் . பண்ணையாரின்  அட்டூழியத்தை தட்டிக் கேட்கும்  பள்ளி ஆசிரியரை மிராசுதார் கொன்று விடுகிறான்.

 இதைக்கண்டு பொறுக்காமல் நாகியா என்ற தலித் மிரசுதார்ரரின் தம்பியை கொன்றுவிடுகிறான்.தப்பிக்க ஊரை  விட்டு தன மனைவி "ரமா" வோடு வேளியேறுகுறான்.அன்ற்றடம் வாழ்க்கையை நடத்த முடியாமல் திணரூகிறான் . கூலி  வேலைசெய்ய ஊர்  ஊராக சுற்று கிறான். 

சிலகாலம் கழித்து அவனுக்கும் அவன் மனைவிக்கும் மீண்டு தங்கள் கிராமம் செல்ல விரும்புகிறார்கள். ஆனால் எப்படி போவது.அன்றாடம் சாப்பாடுக்கே வழி இல்லாத நிலையில் கிராமம்  செல்ல செலவுக்கு பணம் வேண்டுமே.  

அவர்களுக்கு உதவ ஒருவியாபாரி ஒப்புக்கொள்கிறான்.அவன் "பன்றி " களை  விற்கும் வியாபாரி.அவன் கிராமம் கங்கை நதிக்கரையில் இருக்கிறது. ஆற்றைக் "கடந்து " அக்கறைய கொண்டு செல்ல வேண்டும். அங்கு நதியை கடக்க தோனியை பயன்படுத்துவார்கள்.

தோணியில் பன்றியை  ஏற்றமாட்டார்கள். "பன்றி "கள்  குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டு இருப்பவை தோணியை கவிழ்த்துவிடும் .அதனால் அவற்றை ஆற்றில் நீந்தவிட்டு மேய்த்துக் கொண்டு போகவேண்டும் . இது ,ஆபத்தனா பணி . இதில் தலித்துக்கள் தான்ஈடுபடுவார்கள்.நாகியாவும்,ராமாவும் கிடைக்கும் கூடுதல் கூலிக்காக அதனை ஏற்றுக்கொள்கிறார்கள்.

 ரமா கர்பமாக இருக்கிறாள். பிரும்மாண்டமான அகன்ற கங்கை நதியில் பன்றிகளை இறக்கி மேய்த்துக்கொண்டு செல்கிறார்கள். ஒடி ஆடி நீந்தும் பன்றிகள ஓட்டிச்செல்வது கஷ்டமாக உள்ளது. அதுவும் நதிபிரவாகத்தில் நீந்திக்கொண்டு செல்ல வேண்டும். ரமா தன கர்ப்பம் கலந்து விட்டதோ என்று நினைக்கிறாள். ஒருவழியாக அவ்ர்கள் கரையை அடைகிறார்கள். அது கரை  அல்ல. அது நடு நதியில் உள்ள மணல் திட்டு.அவர்கள் பாதி  நதி யைத்தான் கடந்திருக்கிரார்கள். சோர்வாக இருக்கும் ரமாவை  அணைத்துக்கொண்டு நாகிய  பன்றிகளை மேய்த்துக்கொண்டு செல்கிறான் . கரை அடைந்ததும் இருவரும் மணலில் விழுந்து மயங்கி விடுகிறார்கள். .விழித்தெழுந்த நாகியா மாணவி உயிரோடு இருக்கிறாளா என்ரூ அவ்ள் நெஞ்சில் காதுவைத்து பார்க்கிறான் . அவ்ள் வயிற்று  பகுதியிலிருந்து . சிசுவின் இதயம் துடிக்கும்சத்தம் நகியாவிற்கு கேட்கிறது. ராமாவிற்கும், நகியாவிற்கும் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்பதோடு படம் முடிகிறது.

நகியாவாக நசுருதீன்ஷா, ரமாவாக ஷபனா அஸ்மி இருவரும் சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதை பெற்றனர்.இயக்குனர் கெளதம்கோஷ், சிறந்த படம் என்று விருதுகளை அள்ளிக் குவித்தது. கேன்ஸ் திரப்பட விழாவில் ஷாவுக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது.அன்னியச் செலாவணியாக ஒர்லட்சம் டாலர் சம்பாதித்து கொடுத்தது.

ப்ஃன்றி (பன்றி )


ஜப்யா  பள்ளி மாணவன் . தலித் குடுமபத்தை சேரந்தவன் . மேல்சாதிக்காரர்கள் அவன நடத்தும் விதம்  அவனுக்கு பிடிக்கவில்ல .அவன வகுப்பில் படிக்கும் சாலி என்ற மேல்சாதி பெண்ண ஒருதலப்பட்சமாகவிரும்புகிறான் அவள் கவனத்தை கவர முயற்சிக்கிறான். சகமாணவர்கள் அவன கேலிசெய்கிறார்கள். 

ஊரில் விழா வருகிறது .விழாவின் போது பன்றிகள் தொல்லை  தரக்கூடாது என்பதால் பன்றிகளை விரட்டும்பணி ஜப்யா வின் வயதான தாய்,தந்தையின் பொறுப்பகிறது.  அவர்களுக்கு உதவியாக ஜப்யா பன்றிகளை விரட்டுகிறான். ஜப்யாவின் மேல்சாதி நண்பர்கள் அவனை கேலி  செய்கிறார்கள்.

 அவனை "பன்றி" என்று கூவி அழைக்கிறார்கள். கோபத்தில் ஜப்யா மேல்சாதி இளைஞன் மீது கல்லை எறிகிறான் . 

அந்த கல் காமிராவை நோக்கி வந்து  சாதீய கொடுமைகளை இன்றும் சகித்துக் கொண்டிருக்கும்  பார்வையாளர்கள் மிது விழுவதாக படம் முடிகிறது.

சிறந்த நட்சத்திரம்,சிறந்த இயக்குனர் , சிறந்தபடம் என்று சர்வதேச அளவில் 16 விருதுகளை இந்தபடம் பெற்றுள்ளது. இயக்குனர் நாராயண் மஞசுளெ தன்  அடுத்தபடமாக "சைரஹத் " என்ற படத்தை வெளியிட்டுள்ளார்.

"சைரஹத் "

(காட்டு மிராண்டிகள் )


பிட்டர் என்ற கிராமத்தை சேர்ந்தவன் பர்ஷியா .தலித் குடும்பத்தை சேந்தவன் பணக்கார மேல் சாதி ஆர்ச்சி யை காதலிக்கிறான். 

சாதி ஆண \வக்காரர்களீடம் இருந்து தப்பித்து வேற்றூர் சென்று விடுகிறார்கள். பதின்ம வயது காதலர்களுக்கு என்னவெலாம் சங்கடங்கள் உண்டோ அதை எல்லாம் சந்திக்கிறார்கள்.

ஆர்ச்சி கர்ப்பமாகிறாள் .அழகான குழந்த பிறக்கிறது. குழந்த பிறந்ததால் தன தாய் தந்தை  தன்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று ஆர்ச்சி நினைக்கிறாள். தன பெற்றொருக்கு தோலை பேசி முலம் தொடர்பு கொள்கிறாள். இதுவரை அவர்கள் என்கு இருக்கிறார்கள் என்று தேடியலைந்த சாதி ஆண \வக்கொளைகாரக்களுக்கு அவ்ள் இருப்பிடம் தெரிந்து விடுகிறது.இளவரசன்,கோகுல்ராஜ்,சங்கருக்கு நடந்தது பர்ஷியாவுக்கும்னடக்கிறது.சாதி ஆண்வக்ககொலை எந்த அளவுக்கு மிருகத்தனமானது அது எப்படி எல்லாம் காத்திருந்து கொல்லு மென்பதை இவ்வளவு வலிமையாக யாரும் பதிவு சொன்னதில்லை  என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மகாராஷ்ட்ராவில் சக்கை போடு இந்தபடம் மூலம் மகாரஷ்டிரர்களை அவ்மானப்படுத்த்யதாக இயக்குனர் நாராயண் மஞ்சளே  மீது வழக்கு போட்டிருக்கிறார்கள்.

"என்று தணியும் " 

ஆணவக் கொலையை மையப்படுத்தி தமிழில் "என்று தணியும்"  என்று ஒரு படம் தமிழில் வந்துள்ளதாக கெள்வி பட்டேன்.வரும் ஜூலை மாதம் முதல் வாரம்  சென்னை வருகிறேன். பதிவுலக நண்பர்கள் அந்த படத்தை பார்க்க உதவ  வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் .


Wednesday, May 18, 2016

. (P சுந்தரய்யா அவர்களின் நினைவாக )(இது ஒரு மீள்பதிவு )
2012
சுப்பையா என்ற பெயர் எனக்கு பிடிக்கும்.............


                                           சுப்பையா என்ற பெயர் எனக்குப் பிடிக்கும்..தமிகத்தின் தென் மாவட்டங்களில் இந்தப் பெயர் அதிகம் உண்டு.. முருகனின் பெயர்களில் ஒன்று சுப்பிரமணியன். செல்லமாக சுப்பிரமணியனை சுப்பை யா   என்று அழைப்பார்கள்.."அப்பனைப் பாடும் வாயால் , ஆண்டி சுப்பனை பாடுவேனோ "  என்று சிவகவி படத்தில்  தியாகராஜா பாகவதர் பாடியது நினைவுக்கு வரலாம்..நெல்லை மாவட்டத்தில் தெருவுக்கு நான்கு சுப்பையா இருப்பார்கள்..
                                 எனக்கு இந்தப் பெயர் பிடித்ததற்கு தனி காரணங்கள் உண்டு..எனக்கு  முத்த சகோதரை "சுப்பையா " என்றுதான் அழைப்போம்..பாசத்தோடு அழைக்கும் பொது "ஸ்சுப்பையா" என்பேன் கோபம்வந்தால் "சப்பையா" என்பேன்..நாங்கள் பெரியவர்களாகி குடும்பஸ்தர்களான பின்  எங்களுக்குள் மனஸ்தாபம் வந்ததே இல்லை.எங்கள் தாயார் எங்களை வளர்த்த விதம் அப்படி!!


.அவர் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்துவிட்டார்.. சுப்பையா எனும் பொது என் நெஞ்சு நெகிழத்தான் செய்கிறது..


                                        எனக்கு இந்தப் பெயர் மிகவும் பிடித்ததற்குக் காரணம் உண்டு.."காடெல்லாம் விறகாகிப் போச்சே " என்ற அந்த எட்டைய புறத்தானை அவன் வீட்டில் தாய்,,தந்தை,,உற்றார் உறவினர் 


நண்பர்கள் சுப்பையா என்று தான் அழைப்பார்களாம் "கப்பலோட்டிய தமிழன்" என்ற படத்தில் ஒரு காட்சிவரும் பாரதியின் படத்தின் முன் வ..உ..சி நிற்பார்..பாரதிமறைந்த செய்திகேட்டு "பாரதி  எப்பா!!சுப்பையா  "என்று 


கதறும் காட்சி சித்தரிக்கப் பட்டிருக்கும்..அந்த மஹா கவிஞன் பெயரும் 


சுப்பையா தான் என்பதால் பிடிக்கும் 


                                              எல்லாவற்றிர்க்கும் மேல் ஒரு காரணம் உண்டு ..1946ம ஆண்டு இந்தியாசுதந்திரம் வாங்குவதற்கு ஓராண்டிற்கு 


முன்பே தெலுங்கானா விவசாயிகள் ஆயுதம் தாங்கி  போராடி விடுதலை 


பெற்றார்கள்..முன்று ஆண்டுகள் செங்கொடியின் கீழ் அவர்கள் 1949 வரைஆண்டார்கள்..பல தலைவர்கள் தலைமைவகித்து அவர்களை வழி


நடத்தினார்கள் அவர்களில் ஒருவர் சுந்தரய்யா ஆவார்.. பிரிட்டிஷ் இந்தியாவான மதராஸ்  மாகாணத்திலிருந்து துப்பாக்கி ,துப்பகிக் கான ரவை , தளவாடங்கள்,மற்றும் புரட்சிவிரர்களுக்கு உணவு என்று சகலத்தையும் வரவழைத்து


 கொடுக்கும் பொறுப்பு  சுந்தரய்யவிற்கு  இருந்ததது .தலை மறைவாக இருந்து கொண்டு அதனை செய்தார்.. அப்போது அவாது தலைமறைவு 


வாழ்க்கையின் பொது அவரது பெயர் "சுப்பையா"தான் .
என் அண்ணன் பெயர் சுப்பையா .என் நெஞ்சு நெகிழ்கிறது..


என் மகாகவி பெயர் சுப்பையா..என்மனம் மகிழ்கிறது


எங்கள் சுந்தரய்யாவின் பெயர் சுப்பையா .என் மனம் பரவசமடைகிறது    ,


Tuesday, May 17, 2016

"​​​​​​​ அஞ்சலி "சாதியையும் மறுத்தவர் ,

சாமியையும் மறுத்தவர் ,

அருள் தாஸ் .......!!!


   முப்பது ஆண்டுகளிருக்கும் .இரவு பத்துமணி . பெரியகுளம் கிளை தோழரும் நானும் மதுரை   பாத்திமாகல்லூரிக்கு பின்னால் இருக்கும் ரயிலே கேட் அருகே   சாலையில் பதுங்கி காத்திருந்தோம் . டாக்சி ஒன்று வரவேண்டும். அதில் மணப்பெண் ரயில்  ஊழியர் தியாகராஜன் விட்டில் இறங்க  மணமகன் எங்கள் பொறுப்பில் சாந்திநகர் எல் ஐ சி   காலனியில் தங்க விருக்கிறார். மறுநாள் காலை 10மணிக்கு அரசமரம் சந்திலுள்ள ஜெனரல் ஒர்கேர்ஸ் ஊழியர் சங்கத்தில் அவர்கள் இருவருக்கும் திருமணம்.அந்த மாபெரும்மக்கள் தலைவர் எ.பாலசுப்பிரமணியம் தலைமையில்.  எ.பி  அவர்களை அழைத்து வரும்  பொருப்பு எனக்கு.

காலை பத்து மணிக்கு அந்த சின்னஞ்சிறு கட்டிடத்திற்குள்   நுழைந்தேன்.

நாரயணசிங்,தண்டபாணி ,கிருஷ்ணன் , பாஸ்கரன் என்று ஒரு பத்து பேர் இருந்தனர். மணப்பெண் நாகலட்சுமி அவர்களும், அருள்தாஸ் அவர்களும் இரு  நாற்காலிகளில்  மணக்கோலத்தில் அமர்ந்திருந்தனர்.

எ.பி அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

இன்று முன்று மகன்கள் .மருமகள்கள். பேரன்,பெயர்த்தி என்று குடும்பஸ்தனாகிவிட்டார். 2014ம் ஆண்டு நாகபுரிக்கு  தமபதிகளாக வந்திருந்தனர்.

அருள் தாஸ் சிறுவயதில் டயோசிசனோடு தொடர்பு கொண்டவர். 

"கிருஸ்தவ சர்ச் ஆகமங்கள் முழுமையாக   அவருக்கு தெரியும் " என்றார் நாகலட்சுமி அம்மையார்.

"அதனால் தான் எசு  நாதரிடமிருந்து  வருத்தமில்லாமல் பிரியமுடிநதது"  என்று  அருள்   broad smile  லோடு சொன்னார்.

நாகலட்சுமி அம்மையார் சனாதன பிராமண குடும்பத்தில்பிறநதவர். அம்மையார் சாதியை மட்டுமல்லமல் சாமியையும் மறுத்து வந்தவர். 

அம்மையாரின்தாயாரை (மாமியாரை) அவரின் இறுதிக்காலம் வரை காப்பாற்றியவர் அருள்தாஸ். நானும் முத்து மீனாட்சியும் வந்தால் அருள் வீட்டில் தான தங்குவோம் .

"நான் பெக்காத பிள்ளை  உங்கள் நண்பர் ! எனக்கு நு தனியா  ரூம் ! நான் பிராமணத்தி இல்லையா !! எனக்கு நு சமையல் செய்ய பாத்திரம் பண்டங்கள் ! யார் செய்வா இந்த காலத்தில் " அந்த வயது முதிர்ந்த வரின் குரல் உடைந்தது.           

அந்த அம்மையார் இறந்தபோது , அவருடைய மகனை வரவழைத்து ஐயர் மந்திரம் சொல்ல இறுதி காரியங்களை அந்த  வீட்டில் நடத்தினார்.

16ம் தேதி இரவு மரணச் செய்தி கிடைத்தது.

என் மகனிடம் சொன்னேன் . அதிர்ந்து விட்டான்.

"கிரிகெட் விளையாட எங்களை எல்லாம் ஊக்குவிப்பார்  அப்பா! கைகாசு செலவழித்து விளையாட செய்வார் " என்று சொன்னவன் மெலே பேசமுடியாமல் நிறுத்திக் கொண்டான்.

அவருடைய பேச்சு கொஞ்சம் rough and tough  ஆக தோன்றும் . நெருங்கிபழ்கியவர்களுக்குதான் அதன் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் மனித  நேயமும் அன்பும் புலப்படும் .

மார்க்சீய ஞானத்தை ஏற்றுக்கொண்ட தோழர் இறுதிவரை கட்சிப்பணி ஆற்றிவந்தார். 

தோழா !  உனக்கு எங்கள் அஞ்சலி !!!        

  

Sunday, May 15, 2016

570கோடி -கண்டெய்னர் நு 

புலம்பாதீங்க சாமிகளா ?


1971ம் ஆண்டு . டெல்லி விமான நிலையத்துல சஞ்சய் காந்தி கிட்ட 60லட்சம் ரூயை கொடுக்க வந்த நகர்வாலா ங்கிரவன   போலீஸ் பிடிச்சுது.

அப்பம் அது ஸ்டேட் பாங்கு பணம் னுதான் சொன்னாங்க . 

நகர்வாலா ஸ்டேட் வங்கி அதிகாரி மல்கோத்ராகிட்ட மோசடியா 60லட்சம் ரூ வாங்கிபுட்டா று நு கேசு. 

ஸ்டேட் வங்கி    அதிகாரி மல்கோத்ரா "ஆமாம் ஆமாம் " நு மண்டய ஆட்டினாறு . 

கைது செய்ப்பட்ட நகர்வாலா மர்மமான முறைல செத்தாரு.

 அத விசாரிக்க வந்த டி ஸ் பி  காஸ்யப ஆக்ரா ரோட்ல லாரி மோதி செத்தாரு. 

அதகேக்கவந்த ராமநாதன் ங்கிற போலிஸ் அதிகாரி விபத்துல இறந்தாரு. 

ஸ்டேட்பாங்கு அதிகாரி மல்கோத்ரா வேலையே விட்டு புட்டு மாருதி கம்பெனில பெரிய அதிகாரியா போயிட்டாரு .

டில்லி பட்டண  பாங்கியிலே 
கொள்ளை போன 60லட்சம் 
கள்ளப்பணமா ? வெள்ளைபணமா?
காங்கிரஸ்காரன் கொள்ளைப்பணமா ?
டில்லி ராணியே இந்திராவே 
அல்லி  ராணியே என்ன பதில் ? 

என்று தணீகைசெல்வன் எழுதிய கவிதையை  கோஷமாக போட்டுக்கொண்டு நாங்கள் மதுரை நான்கு மாசிவீதியிலும் ஊர்வலமாக போனதுதான் மிச்சம்  சாமிகளா !!!Friday, May 13, 2016

நெஞ்சை நிமிர்த்து !

நாம் வெல்வோம் ...!!!


தாடிக்கார ராஜ நாயகம், நக்கீரன்,என்.டி.டிவி . நு சகட்டு மேனிக்கு கருத்து கணிப்புகள் சன் டிவி ல வந்துகிட்டிருக்கு.நாளைக்கு இன்னும் அதிகமா வரும்.

நிலைமை அப்படி இல்லை என்பது  தெளிவு . மதுரைல "அண்ணன்" கூட்டம் போட்டிருக்காரு . உங்க தோதுக்கு வாக்கு போடுங்கப்பா நு சொல்லிபுட்டாரு .

யதார்த்தமான நிலைமை நல்லாவே இருக்கு .இந்த வருடம் 18 வயதானவங்க 20 லட்சம் பேரு வாக்காளர்களாக பதிஞசிருக்காங்க.

கடந்த ஏழு எட்டு வருடமா 18 வய்துலேருந்து 24 வயது வரை பதிஞ்சவங்க மட்டும் மொத்த வாக்காளர்களல 23%  நு கணக்கிடறாங்க.

இவங்களுக்கு திராவிட இயக்கம் நா "தி.மு.க "    "அ . தி.மு.க" தான் தெரியும். சென்ற ஜனவரி மாதம் நான் சென்னை வந்திருந்தேன் .

20 வயது பையன் - நண்பர் மகன் - "சார் ! பெரியார் பூமி ! பெரியார் பெரியார் நு எதுக்கெடுத்தாலும் சொல்றானகளெ ! அவரு என்ன தான் சார் செய்தாறு"   நு கேட்டான் .

சமூக நீதிக்காக அவர் செய்ததை சொன்னேன்"இன்னிக்கி தலித் மக்கள் கொஞ்சமாவது நல்லா இருக்காங்க நா அதுக்கு அவரும் காரணம்" நு சொன்னேன்     

With a derisive smile "ஆணவக்கொலைகளையும்    சேத்துக்கவா ? சார் "

"நீ சொல்றது நியாயம் தான் தம்பி. மற்ற மாநிலங்களல உள்ள நிலைமைக்கு தமிழ்நாடு பரவா இல்ல . அங்க  தலித்துகள் மனிதர்களாகவே மதிக்கப்படுவதுவதில்ல  மத்தியபிரதேசம்   ராஜஸ்தான் அரியானா நினச்சுப்பாக்கமுடியாது தம்பி. தலித் பெண்கள் பெண்டாள ப்படுவார்கள்.அண்ணன், அப்பன் என்று எவனும்கேக்கமுடியாது. நடகரதுல ஒரு சதம் தான் பத்திரிகைகளல வரும்."

"நம்ப முடியல சார் "

"நான் சுத்தி இருக்கேன் . பாத்திருக்கேன்,. செருப்பு தேச்சுக்கிட்டு இருகரவன காலால எத்தி உதைப்பான் பாத்திருக்கயா ? சரியா தைக்கலயாம்அத பாக்கும்போது தமிழ்நாடு பாதுகாப்புதான்.அதுக்குகாரணம் இடது சாரிகளின் செங்கொடி இயக்கமும் பெரியாரும் தான்  அவ்ங்களொட சமூக நீதி யும் தான்."

இந்த  திராவிட   இயக்கம்   பற்றிய இவர்கள் புரிதல் இன்றைய தி.மு.க.;    அதிமுக வோடு சரி.

தி.மு.கவின் ஊழல் , அதிமுக வின் அராஜகம் இரண்டும் இவங்களை அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது இதற்கு மாற்று வேண்டும் என்று அந்த இளம் மனங்கள் துடிக்கின்றன .

இந்த இரண்டு நாள் - நாம் அதற்காக செலவிட வேண்டும். துடிப்பு மிக்க அவர்களோடு நாம் பேசவேண்டும். 

"Discuss , deliberate , and make them decide to vote for us " 

 "தோழர்களே ! நெஞ்சை நிமிர்த்துங்கள் !

 நிமிர்ந்து நில்லுங்கள் !!

நாம் வெல்வோம் !!! 


கணக்கு +

கருத்து    =

கணிப்பு   ...!!!


"மேலேயும் பா.ஜ.க !கிழேயும் பா .ஜ.கா " என்று மகிழ்ச்சியோடு சொன்னார் ஓருவர் பா.ஜ க விளம்பரத்தில் . அவர் ஒரு "டீ  " கடைக்காரர். டீ  கடை பெஞ்சில் பா.ஜ.க அனுதாபிகள் அமர்ந்து பேசிக் கொண்டு  இருப்பதாக  காட்சிப்படுத்தி இருந்தார்கள்."சன் டிவி" யில் தான் 

பா.ஜ.க வின் தேர்தல் சின்னம் "தாமரை"யை மாற்றிவிட்டு விரைவில் "டீ " கோப்பையை சின்னமாக்கி விடும் யோசனை  இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள். 

பாபு ராவ் எனது நண்பர். அடுத்த குடியிருப்பு. தீவிர மான ஆர். எஸ்.எஸ் காரர். காலை ஆறு மணிக்கு எழுந்து பக்கத்து பார்க்கில் ஆர் எஸ் எஸ் கொடியை நட்டு "நமஸ்தே சதா வத்சலே " பாடுபவர்கள்  கோஷ்டி அவருக்கு வயது 83 . அவருடைய வயது இளைஞர்களோடு தினம் "சிக்ஷா" நடத்துவார்.

"ஏன் யா ? பாபு ராவ் ! தொகுதிக்கு 10 வாக்கு இருந்தா அதிகம் ! இந்தகொள்ளைல இப்படி விளம்பரம் வேணுமா ? " என்றுகேட்டேன் 

மத்தியில "தோ தவா " பிரதமரா இருந்திருக்கோம். இப்ப தன்னந்தனியா வந்திருக்கோம்.எங்க "மோடி" சர்வதேச தலைவர். எங்களுக்குன்னு ஒரு "ஷான் " இருக்கு "என்றார்.

"ஒரு சீட்டு கூட ஜெயிகாதே ஐயா ?"

"நோ !நோ ! K K dist ஜெயிப்போம் "

"எப்பிடி ஐயா ?"

"அது அம்மா பாத்துக்கும் "

"மோடி,ஷா  நு அம்புட்டு பெரும் அம்மாவை திட்டி நோருக்குறீங்க "

"எங்க" மோகன் சாப் "திட்டினாரா ?"

"கேரளாவுல இடது சாரிகள் வந்துருவாங்க தான?"

"வரவிட மாட்டோம்ல "

"எப்பிடி ? "

"எங்க ஓட்ட  உம்மன் சாண்டி க்கு போட்ருவோம்ல "

" ராஜகோபாலும் ,s n d p யும் சண்டைக்கு வருவாங்களே "

"அதெல்லாம் மோகன் பாத்துக்கிடுவாரூ "

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கால்நடை மருத்துவம்படித்தவர்.
Wednesday, May 11, 2016

அ .தி.மு.க ; தி.மு.க ;

அதர்ம யுத்தம் ஆரம்பம் ....!!!ஐந்து நாள் இருக்கிறது .ஆறாவது நாள் வாக்கு பதிவு  ஆளும் கட்சியும்   ஆண்ட கட்சியும் ஒன்றை ஓன்றுசங்கை   நெரித்துக்கொண்டு   நிற்கிறது.

தனக்கு வாக்கு விழவேண்டும் . அதை விட தன எதிரிக்கு வாக்கு விழாமல் செய்ய வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டதாக பேசப்படுகிறது.

நாகபுரி மாநகராட்ச்சியில்  தேர்தல்நடந்தது. நகரங்களில் தலித் மக்கள் வாழும் சேரிப்பகுதி  இருப்பது உண்டு .

தலித் மக்கள் பொதுவாக பா.ஜ.கட்சிக்கு வாக்கு போட மாட்டார்கள். அவர்கள்  காலம் காலமாக  காங்கிரசுக்கு தான் போடுவார்கள்.ஒரு பகுதியினர் குடியரசு கட்சினருக்கு போட ஆரம்பித்துள்ளனர் .

இந்த முறை பாஜக "எப்படியாவது " வெற்றி பெற துடித்தது. 

மூத்த பா.ஜ.கவினர்  தலைமையில் திட்டம் தீட்டப்பட்டது.

நாகபுரியிலிருந்து 200 கி.மீ தூரத்தில் ஒரு வழிபாட்டு கோவில் உள்ளது. அது சிறு தெய்வ வழி பாட்டு கோவில்.   குறிப்பாக தலித்மக்கள்  வழிபடும் கோவில்.பாழடைந்த அந்த கோவிலை சீரமைத்து விழா நடத்தினார்கள்.அந்த விழாவிற்கு நாகபுரி நகர தலித் மக்கள் சென்று தங்கி வர எற்பாடு செய்தார்கள். விழா தேர்தலுக்கு முந்தின தினமாக ஏற்பாடு செய்தார்கள்.           தங்களுக்கு வராது  என்று நிச்சயமாக தெரிந்த வாக்குகள், எதிர்கட்சியான காங்கிரசுக்கு வராமல் இதன் முலம் பார்த்துக் கொண்டார்கள். பா ஜ.க  வெற்றி பெற்றது.

தமிழகத்தில் " திருமங்கலம்  பார்முலா " போல்"சிங்கப்பூர் பார்முலா " உருவகி  இருப்பதாக வதந்திகள் உலா வருகின்றன. தி.மு.க இடைமட்ட தலைவர்கள் இந்த வார கடைசியில் தூர கிழக்கு நாடுகளுக்கு  சுற்றுலா   செல்ல ஆளும்கட்சி ஏற்பாடு செய்து வருவதாக சொல்லப்படுகிறது  . இதற்கு மாற்றாக திமு.க புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

முடி உள்ள சீமாட்டிகள் வலக்கொண்டையும் போடலாம் இடக் கொண்டையும்  போடலாம். 

 பணபலம் இருப்பதால் அவர்கள் எந்த அளவுக்கும் போவார்கள். மக்கள்  கூட்டணி -தே .மு.தி .க , த.மா.கா கவனமாக இருக்க வேண்டிய நேரம்             நம் நண்பர்களும் ஆதரவாளர்களும் காரியத்தில்   இறங்க வேண்டும். ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் 20 வாக்காளர்களை சாவடிக்கு கொண்டுவர உறுதி கொள்ள வேண்டும்.   வாக்காளர்களை நமது வாக்குகளாக மாற்ற வேண்டியது என் பொறுப்பு என்று ஏற்கவேண்டும்.

கண் துஞ்சாது மெய்வருத்தம் பாராது இந்த ஐந்து நாட்களும் நாம் செய்யும் பணிதான் முதன்மையானது.

நமது எதிரிகள் பலமான வர்கள். 

நம் நேர்மையும் உறுதியும் தான் நம் பலம் .

இந்த அதர்ம யுத்தத்தில்  வெற்றி காண்போம் . 

தோழர்களே இப்போது இல்லை  என்றால் பின் எப்போது ???     .     

  

 
 

Monday, May 09, 2016"ஆசாரப் பாப்பான் 

காசிக்கு போன "கதை ......!!!

"நீயா? நானா? "  கோபிநாத் கொஞ்சம் குசும்பு காரரோ  நு சந்தேகம் உண்டு .விவாதம் பாதி  நடந்துகிட்டு இருக்கும் போது சிறப்பு விருந்தினர்னு சொல்லி சிலரை உக்காத்து வாறு. சிலசமயம் பா.ஜ.க நு   சொல்லி  சில பேரை விடுவாரு.

ராமசுப்பிரமணியம் ஒத்தரு -அவரு ஆடிட்டரா ,வாக்கீலா தெரியாது அவர கூப்பிடுவாரூ. இவங்க கிட்ட உள்ள கஷ்டம் என்னன்னா தெரியாத்தத கூட தெரிஞசமாதிரி புளுகுவாங்க .

2014 ல மோடி திருச்சி வந்தாரு. பேசட்டும். நமக்கென்ன ! உப்புசத்தியாகிரகத்துல வா.உ.சி கலந்து கிட்டதா விரிவா சொன்னாரு.ஐந்தாம் கிளசு பையன் கூட அவுத்துபோட்டு சிரிச்சான். நமக்கு அது குட பெரிசா தெரியல.இந்த பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் அண்ணே ! ஒரு பய அத கண்டுக்கல பாத்தியளா ? அது தான் சங்கடமா போச்சு.

"நேத்து நீயா? நானா ? " (8-5-16)     பாத்தேன் .  நல்லா  இருந்தது . கட்சிகள்.மக்கள்எதிர்பார்ப்பு ,தேர்தல் அறிக்கைகள்  நு விவாதம் நடந்தது> பத்திரகையாளர்கள் , கட்சிகாரர்கள் ,கட்சியின் செய்தி தொடர்பாளர்கள்  நு  விவாதம். நல்லாவே இருந்திச்சு.

அ ..தி.மு.க சார்புல ஆவடி குமார் பேசினாரு. தமிழகம் எப்படி "மின்மிகை"மாநிலமா  ஆச்சு நு  "விரிவா" சொன்னாரு .ஆச்சரியத்தோட எல்லரும்கெட்டாங்க.கோபிநாத் நம்ம பா.ஜ.க ராமசுப்பிர மனியத்தையும் கூப்பிட்டிருந்தாறு. 

மோடி,அமித்ஷா , ஜாவேத்கர் ஆகியோர் அ .தி.மு.க வை ஏசினதை தொலைகாட்சில பாத்திருப்பரு போல. 

" தமிழகம் "மிகைமின்" மாநிலமாக மாற நாங்க ( மத்திய பாஜக)  70சதம்கொடுத்ததாலதான்  நு" ஒரு போடு போட்டாரு. 

இரண்டு பக்கமும் மத்தவங்க பேசினாங்க . 

ராமசுப்பிரமணியத்துக்கு அடுத்த இருக்கைல கனகராஜ் ஒக்காந்து இருந்தாரு .கனகராஜ் யாரு நு கேக்கேளா ?  அவரு மார்க்சிஸ்ட் கட்சியோட மாநில செயற்குழு உறுப்பினர் .தொலைக்கட்சி விவாதத்துல பங்கேற்பவர்.

பா.ஜ.க;,ஆர்.எஸ்.எஸ்  ; நா "கொத்துகரியாக்கி கைமா போட்டு " ஒவ்வொரு துண்டா திம்பாரூ. அவருடைய முறை வந்தது. பேசினாரு.

"ஐயா ! ராமசுப்பிர மணியம் தமிழகத்துக்கு அவங்க 70 சதம் கொடுத்தாக சொன்னாரு. நீக்க யாராவது அது பற்றிகுரிபிடுவீங்க நு எதிர்பார்த்தேன். அப்படியேபோச்சுன்னா நிகழ்ச்சிய பார்க்கவங்க அது உண்மைனு நினச்சுருவாங்க .நெய்வேலில மற்ற மாநிலங்களுக்கு கொடுத்து போக மிச்சமிருக்கிற மின் உற்பத்திய எங்களுக்கு தாங்கன்னு தமிழகம் கேட்டது மாட்டேன்னு சொல்லிட்டாங்க>கூடங்குளத்தில இருந்து கொடுங்க நுகேட்டங்க . முடியாது நு சொல்லிட்டாங்க. அவங்க எந்த உற்பத்தி நிலயத்திலைருந்து எந்த தொகுப்பு மூலமா ஒரு யூநிட் மின்சாரம் கொடுத்தாங்க நு சொல்லட்டும். சொல்லமுடியாது . ஏன்னா ? அது உண்மையல்ல !அவ்வளவும் உண்மைக்கு புறம்பானவை " என்று குறிப்பிட்டார். 

பார்வையாளர்கள் கைதட்டினார்கள்.

ராமசுப்பிர மணியம் தலை குனிந்தது .

நிகழ்ச்சி முடியும்வரை அவரால் நிமிர முடியவில்லை.

பாவம் !

காசிக்கு போனாலும் இவங்க பாவம் தீராது !!!.  

  


Saturday, May 07, 2016

இன்று "Mothers day "
மைதிலி சிவராமன் 

கல்பனாவின் தாய் மட்டுமல்ல ....!!!
"சிதறிய காலம் "

"Fragments of past "மைதிலி சிவராமன் அவர்கள் அமெரிக்காவில்பணியாற்றி ய காலம் அது. ஐக்கிய நாடுகள்சபையின் காலனி ஆதிக்க எதிர்ப்பு கமிட்டியின் அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்தார் .


விடுதலைக்காக போராடியமக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு. - அவருடைய வாழ்வைப் புரட்டிப் பொட்டது.அவர் நெஞசைக் கவர்ந்த தலைவர்களில் முக்கியம்மானவர்கள் மூவர் .

ஒருவர் மார்ட்டின் லூதர் கிங் .

இரண்டாமவர் சே குவேரா

மூன்றாமவர் பிஃடல் காஸ்ட்ரோ. 


காலனி ஆதிக்க எதிர்ப்பு ஊர்வலங்கள் , ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றில் கலந்து கொள்வார். இவற்றை படங்களாக ஆவணங்களாக படமாக்கி அவருக்கு அவருடைய அருமை மகள் கல்பனா காட்டிக் கொண்டிருக்கிறார்.


ஒரு சின்னக்குழந்தை வாய்பிளக்க பார்ப்பதுபோல் மைதிலி அவர்கள் அதனைப் பார்த்து கைதட்டி மகிழ்கிறார்.

"இது  எல்லாம்  நான்தானா? அவர் எழுதிய கட்டுரைகளைப்பர்த்து இதை நான் தான் எழுதினேனா ? " அவர் சின்னக்குழந்தையாய் கேட்கும்போது நம் நெஞ்சம் விம்முகிறது.


"அம்மா உனக்கு ஓண்ணும் இல்லை அம்மா.உன்னுடையஞாபக சக்திகுறைந்து வருகிறது. அது   உன்குற்றம் அல்ல "

மகள் தாயை தேற்றுகிறாள்.  

"தோழர் ! தோழர் !" என்று என் இதயம்கதறுகிறது.


"எப்பேர்பட்ட ஆளுமை தாயே !!"


அமெரிக்க ஏகாதிபத்தியம் குயூபா வை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயலாற்றிய காலம். "k" 

எழுத்தை உச்சரித்தாலே சுட்டு வீழ்த்த சி.ஐ எ  தயாராக இருந்தது..


அந்த தீரமிக்க பெண் அமெரிக்க அரசின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு சின்னஞ்சிறு விமானம் மூலம் ஒரு சிறு travel bag ஐ மட்டும் எடுத்துக்கொண்டு குயூபா  சென்றுவந்தார்.  


மதுரையில் மாதர் சங்க அமைப்புக் கூட்டத்திற்காக வந்திருந்தார் .மாவட்ட கட்சி அவரை தங்க வைக்க வேண்டிய பணியை என்னிடம் அளித்தது. என்விட்டில் இரண்டு நாள் தங்க  ஏற்பாடு.  மண்டையன் ஆசாரி சந்திலிருந்து செல்ல வேண்டும்.ஆட்டோ பார்த்தேன்.


"தோழர் எதற்கு ஆட்டோ?." ஸ்கூட்டரின் பின்னாலமர்ந்து ஒரு சின்ன travel bag ஓடு  வந்தார்.


"தோழர் ! நீங்க க்யூபா போயிருக்கெளாமே ?"


"அது ஒரு wonderfull experience. வண்டிய பாத்து ஓட்டுங்க ! அப்புறம் பேசலாம் !" என்றார்.

  

மறுநாள் காலை குளித்து உடைமாற்றிக்கொண்டிருந்தார்   "தோழர்! தோழர் ! என்று இறைந்து  கூப்பிட்டர்.

 "Com . the is the same bag I took to Cuba " I never miss it "  என்று கை கொட்டி சிரித்தார்.


அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் பௌனார் ஆசிரமத்தில் விநோபவை சந்தித்திருக்கிறார்.


கீழ் வெண்மணி பற்றி அவர் எழுதிய காட்டுரை மிகவும் பிரபலமானது. "46 பேரை தீயிட்டு பொசுக்கிய கிராதகர்களை நீதி மன்றம் விடுதலை செய்தது. 

 "these gentlemen will  never kill " என்பது தீர்ப்பு .


"The gentlemen killers of kizhavenmani " என்று தலைப்பிட்டு கட்டுரை எழுதினார் மைதிலி அவர்கள்.


ஆவணப்படத்தில் இந்த காட்சி காண்பிக்கப்படுகிறது."நானா ! நானா ! எழுதினேன் " என்று அவர் கேட்கும் பொது " தாயே ! தாயே " என்று நெஞ்சம் அலறுகிறது.


மைதிலிஅவர்களின் மகள் கல்பனா " விடுதலை போரினில் வீழ்ந்த மலரே "  என்று பாட முடியாமல் துக்கம் அவர் தொண்டையை அடைக்கிறது.. சமாளித்துக்கொண்டு பாடுகிறார்.அவர் கண்கள்.குளமாக நாமும் கண்  கலங்குகிறோம்  .


கலை இலக்கிய அன்பர்கள், ஊழியர்கள் அத்துணை பெரும் போற்றீ  பாதுகாக்க வேண்டிய ஆவணப்படம் . 
( இது ஒரு மீள்  பதிவு )


மாணிக் சர்க்கார் என்ற 

அந்த   மாணவர் ......!!!

பிமன் பாசு , சியாமள்  சக்ரவர்த்தி, நிருபம் சென் , சுபாஷ் சக்ரவர்த்தி என்று இன்றைய மேற்கு வங்க அரசியல் நட்சத்திரங்கள் கல்லூரி, பள்ளீ மாணவர்களாக இருந்த காலம் அது . 

பஞ்சாப், டெல்லி,திரிபுரா ,கேரளம் ,தமிழ்நாடு என்று மாணவர் அமைப்புகள் இருந்தன.அவற்றை ஒருங்கிணைத்து இந்திய மாணவர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கும் யோசனை வந்தது.  

பல்வேறு மாநிலத்தில் உள்ள மாணவர்களின் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசிக்க கலகத்தாவில் 1970ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு கூட்டம் நடந்தது .கேரளத்திலிருந்து பாஸ்கரன்,திரிபுராவிலிருந்து மாணிக் சர்க்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது தமிழ்நாட்டில் தமிழக மாணவர் சங்கம் என்று ஒரு அமைப்பு இருந்தது. அதன் மாநில தலைவராக பழநியை சேர்ந்த  ராமசாமி என்ற மாணவன் இருந்தார் .மாநில செயலாளராக தியாகராஜர் கல்லூரியில் B .sc  மாணவரான நாராயணன் (தீக்கதிர் நாராயணன் ) இருந்தார்.மாணவரமைப்பை  செயற்குழு உறுப்பினர் K .முத்தையா அவர்கள் கவனித்துக் கொண்டார்கள்.

கல்கத்தா கூட்டத்திற்கு  K.M  தலைமையில் இந்த இருவரும் சென்றார்கள். இது பற்றி தோழர் நாராயணன் சொல்கிறார்.

"விடலை கல்லூரி மாணவனாக நான் அங்கு சென்றேன். பிமன் பாசுவும் ,மற்றவர்களும் அகில  இந்திய தலைவர்களோடு சரிசமமாக விவாதிப்பதையும் ,பேசுவதையும் கண்டு நான் பிரமித்து விட்டேன். ஒரு வகையில் தாழ்வு மனப்பன்மை வந்து விட்டதோ என்று அஞ்சினேன்."என்கிறார்.

"அகில இந்திய அமைப்பினை  உருவாக்குவது என்ற முடிவோடு நாங்கள் திரும்பினோம். இந்திய மாணவர் சங்கம் என்ற அமைப்பை  உருவாக்கவும் அதன் முதல் மாநாட்டை திருவனந்தபுரத்தில் நடத்தவும் பல்வேறு மட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதி முடிவு எடுக்க மாணவர்கள் அக்டோபர் மாதம் மீண்டும் கல்கத்தா அழைக்கப்பட்டர்கள். "

இதற்கிடையே தமிழக் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்த ராமசாமி நக்சலைட் சார்பு கொண்டவராக மாறியதால்    அவர் விடுவிக்கப்பட்டார். மீண்டும் K . M அவர்களும் நாராயணனும் கழகத்தா சென்றார்கள்.

"நாங்கள் கல்கத்தாவில் கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் தங்க  வேண்டியதாயிற்று. மாநாட்டு,நிகழ்ச்சிநிரல், அறிக்கை என்று விவாதித்தோம். மாலை நான்குமணிக்கு மேல் எங்களை விட்டு விடுவார்கள். நான் தாழ்வு மனப்பான்மையில் இருப்பதை மாணிக்சர்க்கார் என்ற திரிபுரா மாணவர் கவனித்திருக்கிறார்.தினம் என்னோடு ஒரூ மணி நேரமாவது பேசுவார்.மாலை நேரத்தில்  இருவரும் கைலியை  கட்டிக்கொண்டு கல்கத்தா   நகரத்து விதிகளில் நடப்போம் . வரலாறு, தத்துவம், கட்சி திட்டம், சுதந்திர போராட்டம் என்று எனக்கு கற்றுத்தருவார் " என்கிறார் நாராயணன். 

திருவனந்தபுரம் மாநாட்டிற்கு செல்லும் நேரம் வந்தது.அப்போது தீக்கதிர் அலுவலகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தேன் . ஒருநாள் K .M  அவர்களும் ,A .பாலசுப்பிரமணியம் அவர்களும் என்னை அழைத்தார்கள்."மாணவர் அமைப்பின் முழுநேர ஊழியராக நீ டெல்லி செல்ல வேண்டும். அல்லது மதுரை தீக்கதிரில் முழுநேர ஊழியராக செயல்படலாம். மாணவர் இயக்கத்திற்கு ஆள் கிடப்பது எளிது. பயிற்சி பெற்ற உன் போன்றவர்கள் தீக்கதிருக்கு கிடப்பது எளிதல்ல. நாங்கள்  உன்னை வற்புறுத்தவில்லைஉனக்கு எது சரி  என்று படுகிறதோ அதை முடிவு செய்து கொள் என்றார்கள்.. திருவனந்தபுரம் மாநாட்டிற்கு செல்லவும்  அனுமதித்தாரகள்."

மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பாக தோழர் N .ராம் அகில   இந்திய துணைதலைவராக தேர்ந்தடுக்கப்பட்டார். 

இறிதி நாளில் மாணிக் சர்க்கார் கைகளைக்குலுக்கி விடை பெறும் பொது என் கண் கலங்கியதைப்பர்த்து 

"We  will meet again " என்றார்.

முதலமைச்சராக சில ஆண்டுகளுக்கு முன்னால் வந்த பொது என் மகள்களையும் அழைத்துச் என்று பார்த்தேன்.

இயக்கத்தில்    அவர்களும் செயல்படுவது கேட்டு 

வாழ்த்தினார் .!!!   

Thursday, May 05, 2016

"இது ஒரு மீள் பதிவு "வடக்கே  புத்தன் சிந்தன்


V P C.....!!!


அப்பபோது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் மதுரையில் செயல் பட்டு வந்தது !அங்கு சென்று சிறு சிறு பணிகளை ச் செய்வது உண்டு !


மாநில அளவில் நடை பெறும் நிகழ்ச்சி ஒன்றிற்கான எற்பாடுகளைச் செய்ய தலைவர்கள் வந்திருந்தார்கள் !தீர்மானங்கள் ,அறிக்கைகள் ஆகியவற்றை அவர்கள் சொல்லச்சொல்ல எழுதி கொடுக்க வேண்டும் .
சென்னையிலிருந்து வந்த அவர் சொல்லிக்கொண்டு வந்தார்! நான் எழுதி கொடுத்துக் கொண்டிருந்தேன் ! கிட்டத்தட்ட மதியம் 11 மணிக்கு பசித்ததால் உணவருந்த விரும்பினேன் ! "சரி ! எங்க போய் சாப்பிடப் போற ?" என்று கேட்டார் !


என் பையில் நான் கொண்டுவந்த தை சொன்னேன்! "நானும் சாப்பிடலாமா ?" 


நடுத்தர குடும்பம் ! நான் என்ன பஞ்ச பரமான்னமா கொண்டு வந்திருப்பேன் ! வெட்கமாக இருந்தது ! அவர் எவ்வளவு பெரியதலைவர்! 


பிரித்தேன் ! நான்கு கோதுமை பரோட்டா ! வெஞசனமாக தேங்காய் கலந்த கீரைக் கடைசல் !


 அவருக்கு இரண்டு,எனக்கு இரண்டு என்று பகிர்ந்தோம் ! 


"உன்மனைவி என்ன மலையாளப் பக்கமா?"என்று கேட்டார் !


"இல்லை தோழர் ! நான் நெல்லை மாவட்டம் ! ஆழ்வார்குறிச்சி ! திருவனந்தபுரத்து தொடர்பு உண்டு "என்றேன்!


"எங்கள் ஊர் காரர்கள் செய்வது மாதிரியே கீரை இருந்தது அதனால் தான் கேட்டேன்!"என்றார் !


நான் காப்பி குடிக்க சென்றேன்! அவர் காப்பி குடிக்க மாட்டார்! என்னுடன் காலாற நடக்கலாமென்று வந்தார்! மதுரை 1 ம் நம்பர் சந்திலிருந்து திரும்பி சித்திரை வீதியில் நடந்தோம்! அதன் முக்கில் தான் நகர் காங்கிரஸ் அலுவலகம் இருந்தது ! பலர் அவருக்கு வணக்கம் சொன்னார்கள் ! எனக்கு பெருமை தாங்கவில்லை ! முக்கில் உள்ள கோபி ஐயங்கார் கடைஅருகில்  காபி அருந்தினேன்  ! அவர் எதுவும் சாப்பிட மறுத்து விட்டார்! 


"ஆமா ! நீ என்ன பண்ற ?"


சொன்னேன் !


"கட்சில மேம்பராயிட்டயா?"


"இல்ல "  


"ஏன் ?"


என் வாய்க் கொழுப்பு ! 


"I  don't have any objection " என்றேன்!


கனமான கண்ணாடிக்குள் இருந்து  with a sharp look and broad smile 


"நீ பாதி உறுப்பினராகத்தான்முடியும் " என்றார்!


"ஏன் ?" 


"மறு பாதி கட்சிக்கு உன்னை உறுப்பினராக்க objection இருக்கக் கூடாதல்லவா!"  


எழுந்து செல்லமாக என்தலையில் குட்டி" வா! போகலாம் " என்றார்!


அவர் குட்ட வில்லை !


என்னை ஆசீர்வதித்தார் !என் கொழுப்பு கரைய !!


 இந்த ஆண்டும் என் உறுப்பினர் பதிவினை புதுப்பித்து விட்டேன் தோழா!


என்னை ஆசீர்வதியும்!!!


Wednesday, May 04, 2016
"கச்சத் தீவும் "

கருணாநிதியும் .....!!!

1974ம் ஆண்டு இந்தியா போக்ரானில் அணுகுண்டு வெடித்து சோதனை வெற்றிகரமாக நடத்தியபோது உலகம் வியந்தது. அமெரிக்காவும் பிரி ட்டனும் மட்டும் ஆத்திரத்தில் கொந்தளித்தது. தங்களைமீறிய இந்தியாவை தண்டிக்க விரும்பியது.

ஐ.நா வின் பாதுகப்பு    சபையை கூட்டி பொருளதார தடை விதிக்க ஏற்பாடு செய்தது. பாதுகாப்பு சபையில் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் உண்டு ,தவிர பதினைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உண்டு.ஐநா பாதுகாப்பு சபைகூடங்களுக்கு மாதம் ஒருவராக முறைவைத்து தலைமை தாங்குவார்கள். இந்த குறிப்பிட்ட மாதம் இலங்கையின் முறை.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் அப்போது அவ்வளவு சீரிய உறவு இல்லை . 71ம்   ஆண்டு நடந்த வங்கதேச விடுதலைபோரில் கராச்சியிலிருந்து அரபிக்கடல்,இந்துமாகடல் ,வங்காளவிரிகுடா தண்டி டாக்க செல்லும் அளவுக்கு பாகிஸ்தானிடம் விமானம் இல்லை .அதனால் கொழும்பில் இறங்கி எரிபொருள் நிரப்பிக்கொண்டு செல்ல இலங்கை அனுமத்திதது . இது இந்தியாவின் கோபத்திற்கு காரணம்

இலங்கையில் சிறிமாவோ பண்டார நாயகா பிரதமராக   இருந்தார் அரசியல் ரீதியாக அவருடைய செல்வாக்கு மங்கி  இருந்த நேரம். செல்வாக்கை உயர்த்த அவருக்கு தேவை இருந்தது.

இந்திரா அம்மையாருக்கு இலங்கையின் ஆதரவு வேண்டி இருந்தது ! இருவரும் கலந்து பேசினர்.

கச்சத்தீவு இலங்கைக்கு என்று பேரம் முடிந்தது.

இந்திய எல்லைக்கு உட்பட்ட நிலத்தை அரசியல் தலைவர்கள் இப்படி பேரம் பேசுவார்கள் என்று அறிந்த அண்ணல் அம்பேத்கர் அதனைத்தடுக்கும் விதமாக அரசியல் சட்டத்தில்சிலதடைகளை வ்வைத்திருந்தார்.

ராமநாதபுரம் சமஸ்தானம் இந்தியாவோடு இணைந்தபோது அதன் பாத்தியதைக்கு உட்பட்ட கச்சத்தீவி போன்ற  சிறு  நிலப்பகுதிகள் இந்தியாவோடு சேர்ந்தது.அந்த ஆவணங்கள் எல்லாம் டெல்லி வசம் சென்றது.   சட்ட பூர்வமாக கச்சத்தீவை விட்டுக் கொடுக்க முடியாது.

சட்ட "வல்லூறுகள்" மண்டையை குழப்பிக் கொண்டன. கச்ச்த்தீவு இந்தயாவுக்கா  இலங்கைக்கா என்று சர்ச்சை உள்ளது அதனால் அது ஒரு "disputed tritory " அதனால் அதனை அரசியல்சட்டம்தடுக்கமுடியாது என்று சாதித்தனர்.

நாடளுமன்றத்தில் விவாதம் வந்தது. திமு.க உறுப்பினர் நாஞசில்   மனோகரன்  இதனை கடுமையாக எதிர்த்தார். தமிழகத்திலும் எதிர்ப்பு கிளம்பியது.

அப்போது தான் எம்.ஜி.ஆர் அவ்ர்கள் கருணாநிதி மிது ஊழல் குற்றச் சாட்டுகளை  வீசி இருந்தார்.

இந்திரா அம்மையார் சர்தார் சவரன் சிங்கை தமிழகம் அனுப்பி கருணாநிதியிடம் பேசவைத்தார்.

ஸ்வரண் சிங் மிகச்சிறந்த negotiater . 

எம்ஜி ஆர் கொடுத்த புகாரில் மிகவும்  முக்கியமானது வீராணம் குழாய் பதிப்பு திட்டம் . பலகோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு அதுமட்டுமல்லாமல் காண்ட்ராக்ட் எடுத்த சத்யநாராயணா மர்மமான முறையில் இறந்துவிட்டார். 

சவரன் சிங் கச்சத்தீவி பற்றி கருணாநிதியோடு ஒரு வார்த்தை பேசவில்லை . மாறாக எம்.ஜி.ஆர் புகார் , வீ ராணம்  திட்டம் ஆகியவை பற்றி  பேசினார்.

கருணா நிதி ராஜ தந்திரி ! 

 புரிந்து கொண்டார் . 

விராணம் ஊழலா ? கச்சத்   தீவா ? என்ற கேள்விக்கு விடை காண  வேண்டிய தருணம் வந்துவிட்டதை  உணர்நதவர் 

 கச்சத் தீவை கைகழுவி விட்டார்.

   

Tuesday, May 03, 2016

காவிரி ஒப்பந்தமும் ,

கருணா  நிதியும் .....!!!1892ம் ஆண்டு பிரிடிஷார் காவிரி நதி நீரை  பங்கீடு   செய்வது பற்றி ஒரு ஒப்பந்தம் போட்டார்கள். 

அதன் பிறகு  மைசூர் உடையார்கள் ஆட்சி பொறுப்பில்  வந்தது. சமஸ்தான அதிகாரிகளும்,பொறியாளர்களும் விவசாயத்தை மேம்படுத்த காவிரி நீர பயன்படுத்த விரும்பினார்கள் . காவிரியின் குறுக்கே அணைகட்ட திட்டமிட்டார்கள். இது பற்றி  பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு பேசினார்கள். அப்போது பிரிட்டிஷாருக்க      சாதகமான ஒரு ஒப்பந்தம் தயாரானது .மைசூர் அதிகாரிகளும் பொறியாளர்களும் அதனை எதிர்த்தனர். பிரிட்டிஷ் சக்கரவர்த்திக்கு முன்னால் உடையார் என்ன செய்ய முடியும் .

1924 ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது .

படு பாதகமான ஒப்பந்தமானாலும்  அதிகாரிகள் அதன் ஒரு  ஷரத்தை வெகுவாக விரும்பினார்கள். ஒப்பந்தம் 50 ஆண்டுகள் இருக்கும். அதன் பிறகு இருதரப்பும் விரும்பினால் நீட்டித்துக் கொள்ளலாம் . நீட்டிக்க வில்லை என்றால் புதிதாக பங்கிட்டு பற்றி பேச்சுவார்த்தை   நடத்தி புதிய ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம் . 

1969ம் ஆண்டு எதிர்கட்சிகள் தமிழக சட்டமன்றத்தில் எழுப்பின.  உடனடியாக பேசி ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரின.

முதலமைச்சர் நாற்காலியில் முதன் முதலாக அமர்ந்த கருணாநிதி இதனை கண்டுகொள்ளவில்லை . 

இந்திரா அம்மையாரின் அரசியல் நெருக்கடியை தனக்கு சாதகமாக பயன்படுத்த விரும்பினார். 1971ம் ஆண்டு        சட்ட மன்றத்தை  கலைத்து தேர்தலுக்கு சென்றார். இந்திரா அம்மையாரோடு . உடன்பாடு செய்து கொண்டார் . 173   இடங்களை பிடித்து ஆட்சி அமைத்தார்.

 கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ்காரர்கள் ஒப்பந்தம் நீட்டிக்கப்படாமல் இருப்பதையே  விரும்பினர். காய்களை நகர்த்தினர். 

கருணாநிதி காவிரி   பற்றி பேசும் போதெல்லாம் காங்கிரஸ் தலைமை போக்கு காட்டிக்கொண்டே இருந்தது.

1974 ம் ஆண்டு ஒப்பந்தம் காலாவதியானது.

   . காவிரி நதி நீர்  பற்றி எந்த ஒப்பந்தமும் இல்லாத நிலையில் புதிய ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தை நடக்க கர்நாடகா தன்னுடைய பங்கை வற்புறுத்த ஆரம்பித்தது  .

1969-70 ஆண்டுகளில் எதிர்கட்சிகள் சொன்னபடி ஒப்பந்தம்பற்றி விவாதிக்காமல் காங்கிரசும் ,கருணாநிதியும் காலம்தாழ்த்தியதால் ஏற்பட்ட வினை இன்று தமிழகத்தை வாட்டுகிறது.