Monday, January 30, 2017


"சர்ப்பக் குறியீடு "

(கன்னியப்பன் நெல்லை அவர்களின் இடுகையை முன் வைத்து )பெரியவர் நெல்லை கன்னியப்பன் அவர்கள் ஒரு நிலைத்தகவல் விட்டிருந்தார்கள். சர்ப்பங்கள் இரண்டு ஒரு கோலில் பின்னிப்பிணைந்து இருப்பதாய் மருத்துவர்கள் தங்கள்  இலசினையாக வைத்துக் கொள்வது பற்றியதாகும் அது .

பொதுவாக உயிரினங்கள் வம்சவிருத்தியில் ஈடுபடும் பொது முகத்திற்கு முகம் பார்ப்பதில்லை. அவற்றின் உடல்வாகு ஆகியவற்றை இயற்கையும் அப்படியே படைத்திருக்கிறது.

உயிரினத்தில் மனிதன் மட்டுமே முகம் பார்த்து தாம்பத்திய உறவில் ஈடுபடுகிறான் . இதே போல் ஈடுபடும் மற்றோரு உயிரினம் பாம்புகள்..ஐப்பசி,கார்த்திகை மாதங்களில் , பூந்த்தூத்தல் போட லேசாக வெயிலும் அடிக்கும் . இது பாம்புகளுக்கு மிகவும் கொண்டாடட்டமான நேரமாகும் .அவை  இனவிருத்தியில்  ஈடுபடும் காலமும்   இதுதான். 

இந்த நேரத்தில் கிட்டத்தட்ட அவை நிற்கும் நிலையில் முகத்திற்கு முகம் பார்த்தவாறு செயல்படுகின்றன .   பல் சந்தர்ப்பங்களில் நான் பார்த்திருக்கிறேன். புகைப்படங்களும் உள்ளன.

திருமணமாகி குழந்தை  பேறு இல்லாதவர்கள் இதற்கான மருத்துவ சோதனையில் இறங்கிய பொது தங்களை போன்றே உறவில் ஈடுபடும்  பாம்பினை வணங்கினால் வம்ச விருத்தி ஏற்படும் என்று நம்பினார்கள்.

ஆறு,குளம் ,வாய்க்கால் போன்ற நீர் நிலைகளின் கரைகளில் அரச மரத்தை நட்டு அதன் கீழே பாம்பு சேர்ந்திருக்கும் சிலைகளை வணங்கினார்கள்.

இந்த சிலைகள் பின்னிப்பிணைந்து நின்று கொண்டிருக்கும் நிலையில் முகத்திற்கு முகம் பார்த்திருக்கும். சிலர் "நாகர் " சிலைகளை செய்து நேர்த்திக்கடன் செய்வதும் உண்டு .

இன்று "டெஸ்ட் டுயுப் " வந்த பிறகும் அதனை தொடர்வது சரியா ?  என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது.
Wednesday, January 25, 2017
"தோழரும்"

" வால்மீகியும்."
நான் தமிழ் வழி கல்வியில்  படித்தேன். எனக்கு அர்த்தம் தெரியும். நான் அப்படி எழு தவில்லை " என்று சைலேந்திர பாபு டிவிட்டரில்குறிப்பிட்டுள்ளார் என்று ஒரு செய்தி பரவி உள்ளது.

பெரியார் வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடித்து  வந்ததும்  இனி கழக  உறுப்பினர்கள் தோழர் என்றே அழைத்துக் கொள்ளவேண்டும் என்று அறிவித்தார்.

நுறு ஆண்டுகளுக்கு முன்பே தோழர் என்ற வார்த்தையை பாரதி பயனப்டுத்தினான் .

ஆயிரம் ஆண்டுங்களுக்கு முன் "ராமன் குகனை தோழன் என்று அழைத்ததாக "காவியத்தில் எழுதினான்.

வால்மீகி கெட்டிக்காரன். அவன் அப்படி எழுதவில்லை 

ஏன் என்று காரணத்தை தேடினேன்.

காஸ்யபன் எழுதிய     "ஐவரானோம் " என்ற சிறுகதையில் விடை கிடைத்தது .

"ராமர் குகனை  அழைக்கலாம். குகன் ராமரை தோழர் என்று அழைக்கலாமா?  . "

"அழைத்தால் அன்றே அயோத்தியில் சாதிக்கலவரம் தோன்றியிருக்கும் "

கெட்டிக்கார வால்மீகி அதனால் தான் அப்படி எழுதவில்லை.

என்கிறார் சிறுகதை ஆசிரியர் காஸ்யபன்.


Tuesday, January 24, 2017"தோழர் சைலேந்திர பாபு ! "

"தோழர்கள் மீது மரியாதை உள்ளவர் " 


தோழர் சைலேந்திர பாபு அவர்களை முக நூலில் பலஅன்பர்கள் கோபத்தோடு பார்க்கிறார்கள். தவறு.அவர் நல்லவர் தோழ ர்கள் மீது மரியாதையும் ,அன்பும் கொண்டவர் அதற்கு அவர்தம்பி  தோழர் ராஜன் பாபுவே  சாட்ச்சி .

தோழர்  ராஜன் பாபு  திண்டுக்கல் எல்.ஐ. சி  அலுவலகத்தில் தாற்காலிக மாக பணியாற்றி வந்தார் . ஒரு கட்டத்தில் தற்காலிக ஊழியர்களை  நிர்வாகம் வேலையிலிருந்து நீக்கி விட்டது , 

தோழர் சைலேந்திர பாபு பெரிய போலீஸ் அதிகாரியாக இருந்தாலும்  எல்.ஐ.சி சங்க தோழர்களைத்தான் சந்தித்தார்.முத்த தோழர்களையும், தலைமை  தோழர்களையும் வந்து பார்த்தார்.

சங்கம் வழக்காடியது .  வழக்கு  என்றாலே காலதாமதமாகும் தானே. பாவம் சைலேந்திர பாபுவும் அடிக்கடி வந்து தோழர்களை வந்து பார்த்து  தம்பி வேலை விஷயமாக விசாரித்து செல்வார் .

வழக்கு  வெற்றிகரமாக முடிந்தது.  தோழர் ராஜன் பாபுவும் பணியில் சேர்ந்தார்.

தோழர் சைலேந்திர பாபுவும் தோழ தோழர்கள் ர்கள் மீது மரியாதையும்  நட்பும் கொண்டவராகவே இருந்தார்.


பாவம் !  என்ன நிர்ப்பந்தமோ !!!Friday, January 13, 2017Irony    

and 

History 
அண்ணா அவர்கள் மறைந்ததும் கருணாநிதி முதல்வரானார்.  இந்திராகாந்தி அம்மையாரோடு கூட்டணி வைத்துக் கொண்டு 1971ம் ஆண்டு தேர்தலை சந்தித்தார்.

முதன் முதலாக தஞ்சை மாவட்டத்தில் "டிராக்டர் " புழங்க  ஆரம்பித்தன.நிதி அமைசர் நெடுஞ் செழியனுக்கு டாகடர் பட்டம் தஞ்சையில்  கொடுக்கப்பட்டது

லட்சக்கணக்கான விவசாய கூலிகளின் வாழ்க்கை பாதிக்கப்படும். மற்றும் விவசாயிகளின் உயிர்த்துணையான உழவு தொழில்பாதிக்கப்படும் என்று அதனை எதிர்த்தோம்.

மதுரை மாசி விதிகளில் ஊர்வலம் போனோம். 

டாக்டர் வந்தார் ! டாகடர் வந்தார் !
           அண்ணாமலைக்கு -அங்க 
படிச்ச  பயலை காணவில்லை 
          அடுத்த நாளைக்கு !

டாக்டர் வந்தார் ! டாகடர் வந்தார் !
          தஞ்சாவூருக்கு !
டிராக்டர்  வந்தது டிராக்டர் வந்தது 
         அடுத்த நாளைக்கு !

என்று   தணிகை யின் கவிதை வரிகளை கோஷமாக போட்டுக்கொண்டு  போனோம் .

"டிராக்டர்  " தீனி கேட்காது.உழவுக்கு அதிக நேரமாகாது. கூடுதல் நிலத்தில்  சாகுபடி செய்யலாம்  என்று காங்கிரசும் திமுகவும் பிரச்சாரம் செய்தனர் . பெரும்  நிலச்சுவான்தாரரான மூப்பனார் "ஒத்து " ஊதினார்.  

இன்று வாசனும் ,ஸ்டாலினும்  பாரம்பரியமான ஜல்லிக்கட்டை ஆதரித்து போராடுகிறார்கள்.

Irony thy name is History

 

Wednesday, January 11, 2017தோழர் சின்னையா காசி அவர்களின் 

கேள்வியை முன்வைத்து ......!!!


மூத்த தோழர் சின்னையா காசி அவர்கள் "உயி ர் என்பது என்ன ? "என்ற கேள்வியை தன முகநூலில் எழுப்பி உள்ளார்.  


இந்த கேள்விக்கு அறிவியல் ,மற்றும் ஆன்மிகவாதிகள் பதில்கள் உண்டு.

இந்த நிலைத்தகவலை நீங்கள் உங்கள் வீட்டில் நாற்காலியில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கலாம். உங்கள் நாற்காலியின் கைகள் மேல் உங்கள் கைகளைவைத்துக்கொண்டு படிக்கலாம் .நாற்காலிக்கு "கை " உண்டு. உங்களுக்கும் "கை "உண்டு .இந்த இரண்டு கைகளுக்கும் வித்தியாசம் உண்டா ?உண்டு . 

நாற்காலியின் "கை " மரம் என்ற meterial  ஆல்  ஆனது . உங்கள் "கை"யும் சில பொருட்களால் ஆனது . வேற்றுமை என்ன வென்றால் உங்கள் "கை"   க்கு உயிர்  உண்டு .நாற்காலியின் கைக்கு உயிர் இல்லை . 


உங்கள் கைக்கு விசேஷமாக  இருக்கிறதோ அதுகான் உயிர். அப்படியானால் உயிர் எங்கே எப்படி எதில் இருக்கிறது.?   அணுக்களால் ஆனதே. செல்களால் ஆனதே. பொருள்களால் ஆனதே. எல்லாம்.

எந்த ஒரு பொருள் தனக்கு வேண்டியதை தனக்கு வெளியிலிருந்து    பெற்றுக்கொள்கிறதோ ,எந்த ஒரு பொருள் தனக்கு வேண்டாததை தன்னிடமிருந்து வெளியேற்றுகிறதோ அது  உயிருள்ளதாகும் .

இதனை katabolism ,metabolism என்று அறிவியல் அழைக்கிறது. இன்றைய நிலையில் இது பிரம்மாண்டமாக வளர்ந்து, ஒரு பரிசோதனை குழாயில் சில ப்ரோட்டின்கள் மாற்று முள்ளவைகளின் சேர்க்கை மூலம் உயிருள்ள தை உருவாக்கும்நிலைக்கு அறிவியல் வளர்ந்துள்ளது. 

நமக்கு வேண்டிய பிராணவாயுவை வெளியிலிருந்து எடுத்துக் கொள்கிறோம் . நமக்கு வேண்டாத கரியமிலவாயுவை வெளியேற்றுகிறோம். நீரைகுடிக்கிறோம்.சிறுநீரைவெளியேற்றகிறோம்.உண்கிறோம் .கழிவை வெளியேற்றுகிறோம் 

இதில் எது தடைபட்டாலும் உயிரிழக்கிறோம். உயிரியல் துறை இன்று மிகப்பெரும் வளர்சசியை அடைந்துள்ளது.

இந்திய தத்துவ ஞானத்தில்  கடவுளை ஏற்றுக்கொண்டவர்கள் உண்டு. கடவுளை ஏற்றுக்கொள்ளாதவர்களும் உண்டு . கபிலர் போன்றவர்கள் கடவுளை ஏற்காமல் வேதத்தை ஏற்றுக்கொண்டவர்கள். வேதம் என்றால் அவர்களை    பொறுத்தவரை முன்னோர்கள் சொன்ன அறிவு பூர்வமான கருத்துக்கள்.

உயிர் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்கள். 


பிராணோவா அன்னம் ! 


உணவு தான் உயிர்.

தத் விரதம் !


உலகத்தில் எதைக்கொடுத்தாலும் இன்னும் வேண்டும் என்பது மனித இயல்பு. பொன்,பொருள் ,பெண் , நிலம் என்று எதுவானாலும் இன்னுமின்னுமென்பது இயல்பு.உணவை மட்டும்தான் மனிதன் போதும்போதும் என்பான் . ஏனென்றால் மிகுதி அவனையே தின்றுவிடும் . உணவு ஒரு அளவுக்கு உட்பட்டது

அன்னம் ந நிந்தையேத்.!


அளவுக்கு உட்பட்டது என்பதால்
  அதனை   வேறுக்காதே . உணவு இல்லை என்றால் நீ இல்லை .

அன்னமேவ பிராணன் !


உணவுதான் உயிர் !


பண்டைய நாத்திகம் அறிவியலை தன போக்கில் கொண்டுதான் இருந்திருக்கிறது 


 

Wednesday, January 04, 2017

" தீக்கதிர் " பத்திரிகையும் ,


விளம்பரங்களும் ...!!


இரண்டு நாட்களுக்கு முன்னர் தீக்கதிர் பத்திரிக்கையில்  ஒரு விளம்பரம் வந்தது .ஒரு கோவில் கும்ப அபிஷேகம் பற்றிய விளம்பரம் அது.


இப்படிப்பட்ட விளம்பரம்  நம் பத்திரிக்கையில் வரலாமா ? என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள் .

பலர் எத்தனாமதேதி, எந்த பதிப்பு என்று கேள்விகளைஆர்வத்தோடு எழுப்பி  உள்ளனர் .இவர்கள்  பத்திரிக்கை யை தினமும் வாங்குபவர்களா என்பதை   எழுப்பிய  கேள்விகளிலிருந்தே   எண்ணி விடலாம்.


1969 ஆண்டிலிருந்து தீக்கதிரும்,செம்மலரும் மதுரையிலிருந்து வர ஆரம்பித்தன .  அன்றிலிருந்து   எனக்கு அதனோடு தொடர்பு ஆரம்பித்தது. தீக்கதிர்   பத்திரிகையின்  கார்டூனிஸ்ட், பிழை திருத்துபவர், செம்மலர் துணை ஆசிரியராக பணியாற்றிய தோ ழர்   வரதராஜன்  30 ரூ   அலவன்ஸ் கொடுப்பார்கள்..தீக்கதிர் துணை   ஆசிரியராக ஆ.சண்முக சுந்தரம் BA ;BL இருந்தார். வ .உ.சி.யின்  பேரர் . Bdo வேலையை  விட்டு  வந்தவர்மாதம் 60 ரூ . திண்டிவனத்தில்  வஸ்தியான குடும்பத்து பையன் ஞானபாரதி .துணை ஆசிரியர் 30 ரூ. மதுரையில் இதனை வைத்துக்கொண்டு குடுமபத்தோடு வாழ  முடியாது தோழர்கள் சென்னையிலும், அல்லிநகரத்திலும் குடும்பம் இருக்க மதுரையில் பணிபுரிந்தார்கள். மெஷின் மென் பாலன் வீட்டில் மதீய  சோறு. புளிக்குழம்பு வரும். விசேஷ நாட்களில் மோர் கிடைக்கும்.


மாலை 3மணிக்கு படிக்காசு அல்லது டீ காசு நாலணா கொடுப்பார்கள். இரவு சித்திரை வீதியில்  கை ஏந்தி பவனில் நான்கு இட்டலி சாப்பிடுவார்கள்.


(சமீபத்தில் ஞான பாரதி யோடு தொடர்பு .இன்று அவர் முத்த புகழ் பெற்ற வக்கீல் . "காஸ்யபன் ! அன்று பட்டினி வாழ்க்கை தான். ஆனால் அதுதான் என் பொற்காலம் "என்கிறார் இன்று லட்சத்தில் புரளும் அவர்)

இன்றும் தீக்கதிர் வளாகத்தில் பணி  புரிபவர்கள் living wage ஐ எட்டவில்லை .

பத்திரிக்கை நிர்வாகத்தின் சிலவு .என்பது மிகவும்வி.த்தியாசமானது .டைம்ஸ் ஆப்  இந்தியா ,    இந்து ,இந்தியன் எஸ்பிரஸ் ஆகியவை முக்கியமான பத்திரிகைகள். அவற்றின் ஆசிரியர் ஒருவரோடு அறிமுகம் கிடைத்தது . "எங்க  வருமானம் வித்தியாசமானது. வருமானம் என்பது சந்தாவை பொறுத்து இல்லை.தினம் காலையில் பத்திரிகையை ஆளுக்கு கொடுத்து விட்டு கும்பகோணம் டிகிரி காப்பியையும் கொடுக்கமுடியும் இலவசமாக . வருமானம் அவ்வளவு " என்றார்

விளம்பரத்தின் மூலம் கோடிக்கணக்கில் வருகிறது. சாதாரணமாக 18 பக்கத்திலிரு0 ந்து 24 பக்கம் தருகின்றன ஆங்கில ஏடுகள் .  ஒரு பக்கத்திற்கு எட்டு பத்தி. மொத்தம் 144 லிருந்து 192 பத்தி வருகிறது .இதில் எத்தனை பத்தி செய்தி இருக்கும்.நீங்களே எண்ணி பார்க்கலாம். கிட்டத்தட்ட 64 அல்லது 80 பத்தி செய்தி இருக்கலாம். மீதம் உள்ள இடங்கள் விளம்பரங்களை கொடுக்க மட்டுமே . நம் கண்ணை மறை க்கும் அளவுக்கு அதனை ஆர்டிஸ்டுகள் அற்புதமாக disply பண்ணி விடுவார்கள்.

மேலை நாடுகள் அமேரிக்கா போன்ற நாடுகளில் பத்திரிகைகள் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. இதில் ஆச்ரியப்பட ஒன்றுமில்லை. சென்னையில் "மாம் பலம் டைம்ஸ்,"மைலாப்பூர் டைம்ஸ் " பத்திரிகைகள் நமக்கு அனுபவம் தான்.

கம்பெனிகளின் விளம்பரத்துக்காக பேப்பர்,மை ,கலர் பணத்தையும் நம்மிடமிருந்து வசூலித்து விடுகிறார்கள்.இதனைதடுக்க 70 ம்   ஆண்டுகளில் காலம் சென்ற மோகன் குமாரமங்கலம்   முயன்றார். page -price policy என்று கொண்டுவந்தார்.பத்திரிகையின் விலை செய்திகளின் பக்க அளவை ஒட்டி இருக்க வேண்டும் என்றார்.முதலாளிகள் இதனை ஏற்க வில்லை.


தீக்கதிர்  மிகுந்த முயற்சிக்கு பிறகு  அரசு விளம்பரங்களை பெற்றது. மத்திய அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தின் பொது வேலை நிறுத்தத்திற்கு எதிரான விளம்பரங்களை போட  மறுத்ததால் அரசு விளம்பரம் கொடுப்பதை நிறுத்தி கொண்டது. மாநில அரசம் இதே  போன்று செயல்பட்டது.

ஒரு பத்திரிகையின் இதயமும் நுரையீரலும் அதன் விளம்பரமும், வாசகனும் தான்.

மதுரை தேனீ சாலையிலிருந்து திரும்பி BYEPASS சாலைக்கு திண்டுக்கல் செல்லும்  வழிக்கு திரும்பினால் அரசடியிலிருந்து பார்க்கும் போதே வைகையின் மறுகரையில் தீக்கதிர் கட்டிடத்தின்  மேல் செங்கோடி கம்பீர  மாக பறப்பதை காணலாம்.

அந்த கொடியின் நிழிலில் இருக்கும் ஒவ்வொரு செங்கல்லும் அதனுள்ளே பணிபுரியும் தியாக சிலர்களின் மேன்மையை சொல்லிக் கொண்டே இருக்கிறது தோழர்களே !!!


Monday, January 02, 2017

"துரோணரின்

மரணம் .....!!! "

மத்திய இந்தியாவின் மிகசிறந்த ஓவியர் ,சிற்பிகள்ஆகியவர்களில் ஒருவர் அவர்.எனக்கு பரிசையா மாணவரும் கூட .அவர் தன்னுடைய படைப்புகளை கண்காட்ச்சியாகவைத்தார்.

"குண்டலினி "என்ற தலைப்பில் சில ஓவியங்களை வைத்திருந்தார். மகாபாரதத்தில் படைக்கப்பட்டுள்ள மாவீரர்கள் பற்றிய ஓவியங்கள்.

அவர்களுடைய வீர தீரத்தை பற்றி சொல்லாமல் அ வர்களின் மரணத்தைப்பற்றிய புதிய புரிதல் சொல்லும் ஓவியங்கள்.

குருக்ஷேத்திர போரில் துரோணர் இறந்ததாக நாம் நினைக்கிறோம்.

ஏகைலைவனின் கட்டை விரலை காணிக்கையாக என்று கேட்டாரோ அன்றே துரோணர் இறந்துவிட்டார் என்பதை அவருடைய ஓவியம் சித்தரிக்கிறது .

மாவீரன் பீமன்.அவன் மனைவி திரௌபதி. அவள் ஓராடை தன்னில் இருக்கிறாள்.அவளை சபைக்கு இழுத்து வந்து பீஷ்மரும், துரோணரும் , ஏன் இந்த உலகமே பார்க்க அவள் ஆடையை களைகிறான் துசசாதனன் .நெட்டை மரமாய் நின்று புலம்பும் அந்தக்கணத்திலேயே பீமன் இறந்துவிட்டான் என்று ஒரு ஓவியம் சித்தரிக்கிறது. 

அவர் குழைந்தை களுக்கான ஓவியரும் கூடதான் .

ஒரு சிறுவனை அழைத்து உன் தாயாரின் படத்தை வரை என்கிறார் .பையன் . ஒரு பெண்ணின் படத்தை வரைந்து முகத்தில் இரண்டு காது கள், தலையில் இர ண்டு காதுகள் , காலில் காதுகள் ,முழங்கைகளில் இரண்டு காதுகள் வரைந்து இருந்தான்.ஏன் என்று கேட்டதற்கு "என் அம்மா ! நான் பள்ளியில் பேசுவதையும் கேட்கிறாள் .விளையாடும்போது பேசுவதையும் கேட்கிறாள். வீட்டில் பேசுவதையும் கேட்கிறாள் .எத்தனை காது என் அம்மாவுக்கு ? "என்று வாதிடுகிறான் .

மற்றோரு பையன் ராவணனின் படத்தை வரைந்தான். படுக்கை வசத்தில் தலைகளை வரையாமல் ஒரு தலயின் மேல் ஒன்றாக பத்து தலையை வரைந்தான் . "தாத்தா ! ராவணன் திரும்பி பாக்க இது சவுகரியமா இருக்கும் . படுக்கை வசத்துல இருந்தா திரும்ப முடியாதுல்ல ?"அவனுடைய logic அவனுக்கு ."

வெறும் கோடுகளும் வண்ணங்களும் மட்டுமல்ல ஓவியம் என்பது புரிந்தது !!!The final act and journey of com. Safdar

The Final Act and journey of

Com Safdar...!!!