Friday, December 28, 2018
இந்த 

"சீவிலிகளை "

அடக்கி வையுங்கள் !!!திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்,மதுரை சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய வற்றில் சுவாமி உலா வருவதற்கு முன்பாக தே வாரம்பாடிய நால் வர்,நந்திகேசுவரர்,  முருகன்,விநாயகர் ஆகிய கடவுளர்களின் சப்பரம் முதலில் வரும். இதனை "சீவிலிகள்" என்று சொல்லுவார்கள் .  தி.மு.கவின் சீவிலிகள் மதி மாறன்,நாராயண் ராஜகோபால் என்று புறப்பட்டு விட்டனர்.

மக்களவையில் உறுப்பினர் இல்லாத திமுக வரும் தேர்தலில் ஜெயித்து மத்திய மாநில அரசுகளை ஆட்டிப்படைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களா. நோக்கம் நல்லது தான். கூட்டணியில் உள்ளவர்களை  இவர்கள் விமரிசிப்பது  கூட்டணியை வலுப்படுத்தாது .

2019லோ அல்லது 2021 லோ வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராகலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கும் ஸ்டாலி ன் இப்போதே திண்ணையில் துண்டு போடுகிறார்."ராகுல் அவர்களே வருக "என்பது அதன் வெளிப்பாடு .

நாராயண் ராஜகோபால் என்ற பன்மொழிவித்தகர் எழுதுவது போன்ற அபத்தங்களை  சகிக்க முடியவில்லை . நல்லகண்ணு அவர்கள் தேர்தலில் வெற்றிபெறவில்லை ஆகவே அவரை கொண்டாடக்கூடாது என்கிறது இந்த மூடம்  நல்ல காலம் ஸ்டாலின்  இந்த புத்திசாலியின் பேச் சை கேட்கவில்லை  கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்ததை பற்றி இந்த தத்துவ ஞானி விளக்கம் கொடுக்கிறார். "அடேய் ! உனக்கு National Democracy ,  Peoples Democracy என்ற வார்த்தையாவது தெரியுமா ? டீக்கடையில் பால் காயசிக்கொண்டிருக்கும் எங்கள் உறுப்பினர் கணேசனிடம் கேள். விளக்குவார் .சைக்கிளில் முட்டை விற்றுக்கொண்டிருக்கும் முத்தைய்யாவிடம்கேள் சொல்லித்தருவார் "

நாடாளுமனற  யுக்திகளை வடிவமைப்பது உன் கம்பெனி வாசப்படியில் அல்ல. காங்கிரஸ், இடதுசாரிகள், பா மாக, வி.சி.க, மதிமுக, தேமுதிக , என்று பல கடசிகள் இணைந்து முடிவு எடுக்க வேண்டிய ஒன்று .

இவர்கள் மொத்த வாக்கு என்பது 23% . இந்தவாக்கு இல்லாமல் திமுக வென்றுவிடும் என்று  நீ   நினைத்தால் - விடு- உங்கள் தலைவர் நினைக்கமாட்டார் . இன்னென்று தெரியுமா?

அதிமுக வின் மூன்று அணிகளும் சில விஷயத்தில் ஒத்த கருத்தில் இருக்கின்றனர் . பா.ஜ .க வோடு சேர்ந்தாலும் சேராவிட்டாலும் சட்டமனறத்தில் திமுக பெரும்பான்மை பெறக்கூடாது என்பதற்கான negative வாக்குமுறையை  சரியான தருணத்தில்    கையாள தயாராக இருக்கிறார்கள்.

தமிழக வாக்காளர்கள் மௌனமாக காரியம் சாதிப்பவர்கள் . அவர்களில்  திராவிடர்கள் ஆண்டது போதும் என்று  நினைப்பவர்கள் கணிசமாக உண்டு.

பா.ஜ .க வை மத்தியில் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள்  என்று  நினைக்க வேண்டாம்  எனபதை மட்டும் இப்போதைக்கு சொல்லி வைக்கிறேன் !!!


Monday, December 24, 2018


"முதலாளிகளிடமிருந்து ,முதலாளித்துவத்தை ,காப்பாற்றுவோம் "!!!நீராவி என்ஜின் கண்டுபிடிக்கப்பட்டபோது தொழிற்புரட்ச்சி ஏற்பட்டதாக கூறுவார்கள். அதன் அடி வயிற்றிலை பிறந்தது தான்  முதலாளித்துவம் .

மனிதகுலவரலாற்றில் இதற்கு முன் கண்டிராத வளர்ச்சியும் ,கண்டுபிடிப்புகளும்,சுபிட்சமும் கிடைத்ததும் இந்தகாலகட்டத்தில்தான். உணவு,இருப்பிடம், உடை ,மருத்துவம்,கல்வி என்று பரந்துபட்ட மக்கள் தொகுதிக்கு , கிடைத்ததும் இதே காலத்தில் தான்.

Adam  Smith போன்ற பெரியவர்கள் இந்த வாழ்க்கைமுறையை முதலாளித்துவ முறையை போற்றிப்புகழ்ந்ததும் இதனால தான். இந்தவாழ்க்கை முறையின் அடிவயிற்றில் பிறந்தது தான் ஏகாதிபத்தியம். முதலாளித்துவத்தின் உச்சகட்டம் தான் ஏகாதிபத்தியம் .

இதன் மற்றோரு பகுதி தான் காட்டு மிருகங்களைப்போன்ற அடாவடித்தனம் . ஒருபக்கம் செல்வ செழிப்பும் மற்றோருபக்கம் தாங்கமுடியாத வறுமையும் இணைந்தே  சகவாழ்வு வாழ வேண்டிய நிர்ப்பந்தம்.

இந்தமிருகத்தனத்தை கட்டுக்குள் கொன்டுவர உருவானது தான் நுறு ஆண்டுகளுக்கு முன் உருவான சோவியத் புரட்ச்சி. முதலாளித்துவம்  என்ற மிருகத்தை கம்பி போட்ட கூண்டுக்குள் அடைத்து வைத்தது தான் அந்த புரட்ச்சியின் அடிநாதம் .என்ன செய்ய ?

சோவியத் யூனியனின் வீழ்ச்சி  இந்த மிருகம் கூண்டை உடைத்துக்கொண்டு வெளியே வர உதவியது.தாராளமயம்,தனியார்மயம்,உலகமயம் என்று கோஷம் எழுப்பிக்கொண்டு "எத்தைத்தின்னால் பித்தம் தெளியும் " என்று கண்டதை தின்று இன்று அஜீரணக்கோளாறினால் "பங்குசந்தையில் " மரண ஓலமிட்டுக்கொண்டிருக்கிறது .

கரிசல் காட்டு புதரில்  சாராயம் காய்ச் சிக்கொண்டிருந்தவன் இன்றி ரியல் எஸ்டேட் முதலாளி.கிழக்கிந்திய கம்பெனிக்காக கஞ்சா விற்றவன் Multy National Corporate முதலாளி.

சிக்குபிடித்த முதலாளித்துவத்தின் மரணத்தை தவிர்க்க  அதன் விசுவாசிகள் முயற்சிக்கிறார்கள். டாகடர் ரகுராம் ராஜன் "Save Capitalism from  Capitalist "என்று அலறுகிறார் . உஜ் வல்  படேல் ராஜினாமா செய்கிறார் .

வடக்கு ஐரோப்பிய நாடுகள் மக்களுக்கு உணவு ,உடை ,இருப்பிடம் கல்வி மருத்துவம் ஆகியவற்றை இலவசமாக அளித்துவருகின்றன. கிட்டத்தட்ட 120 கோடி மக்கள் அதனை அனுபவித்து வருகிறார்கள் .   

மீதமுள்ள 600 கொடிமக்களின் பார்வை இவர்களைநோக்கி சென்று கொண்டு இருக்கிறது. 

ஒரு பெறும் போர் வரவிருக்கிறது .!

இந்தியாவில்  அதற்கான ஒத்திகை நாள் தான் 2019 மே மாதம் நடக்க விருக்கும் தேர்தல் . !!

   

Saturday, December 22, 2018

பா.ஜ.க ,

காங்கிரஸ் ,


தி.மு.க !!! 
"ராகுல் காந்தி அவர்களே வருக !நல்லாட் சி தருக " என்று தி மு.க தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.அதுமட்டுமல்லாது 2004ம் ஆண்டு அவருடைய தந்தையும் முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதி அவர்கள்    "இந்திராவின் மருமகள்  சோனியா காந்தி அவர்களே  வருக " என்று அழைத்ததையும் மறக்காமல் குறிப்பிட்டார்.  

தமிழக தொலைக்காட்ச்சிகள் இதையே பத்து நாட்களாக விவாதித்து கொண்டிருக்கிறார்கள். நல்ல காலம்! நடிகர்கள் குள்ளமணியும் ,தவக்களையும் இல்லை ! இருந்திரூந்தால்  அவர்களின் கருத்துக்களையும் நமக்கு தந்திருப்பார்கள்.

2004 மாண்டு சோனியா பிரதமர் ஆவர் என்று கணித்தவர்கள் அதிர்சசி அடைந்தனர். இந்தியாவின் பிரதமராக யார் ஆகி வேண்டும் என்பது பற்றி அமெரிக்க பங்கு சந்தையின் வெளியீடான Wall Street Journal தலையங்கம் எழுதியது.

அதில் அவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் நபர்களாக  மூன்று பெயரை குறிப்பிட்டிருந்தார்கள்..மன்மோகன் சிங் , மண்டேக் சிங்,  சிதம்பரம் என்று  குறிப்பிட்டிருந்தார்கள். சோனியா பிரதமர் பதவியை ஏற்கவில்லை> காங்கிரஸ்கட்ச்சியில் உறுப்பினராக இல்லாத மன்மோகன் சிங் அவர்களை பிரதமராக்கினார்.சிதம்பரம் நிதி அமை ச்சர். பொருளாதார துறை யின் முக்கிய புள்ளியாக  மாண்டேக் சிங்  .

2014 ம் ஆண்டு மோடியையோ பிரதராக்கியது யார் ?

சந்திரபாபு நாயுடு காரு நாந்தான் என்று கூறலாம் .! அவர் இல்லை என்பது ஊரறிந்த ரகசியம் .

கார்ப்பரேட் கம்பெனிகளின் தலைமை முடிவு செய்கிற விஷயமாகி விட்டது. மோடி அவர்களுக்கு பயன்படுவார் என்றால் அவர்தான் பிரதமர் .அவருக்கு அடுத்ததாக இந்திய அரசியலில் அவர்கள் கணக்கு போடுவது பழனியப்பன் சிதம்பரம்  அவர்களை! 

கடந்த நான்கு நாட்களாக  தமிழக வலைத்தளங்களில் பழனியப்பன் சிதம்பரத்தின் கதை என்று ஒளிபரப்பாவதை கவனிக்க வேண்டும். அதில் முக்கியமாக சிதம்பரம் இளம் வயதில் மார்க்சிய நூல்களை கற்றார் . என்று விளக்குகிறார்கள் .என் ராம், மைதிலி சிவராமன் ஆகியவர்களோடு இணைந்து செயல்பட்டார்.என்று அவர்கள் படத்தையும்போட்டு ஒளிபரப்புகிறார்கள். இந்த காடசியின் பின்னணியில் அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னம் பொரித்த கொடி  அசைந்தாடுகிறது. இவர்களோடு சிதம்பரம் நடத்திய  Radical Revciew பத்திரிகையும் காட்டப்படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக சிதம்பரம் அவர்கள் பிரதமர் வேட்பாளர் ப ற்றி கட் சி எந்தமுடிவும் எடுக்கவில்லை என்றுகூறியுள்ளார் .

இதனை  பா.ஜ  கட்ச்சியும் உணர்ந்தே இருக்கிறது . சிதம்பரம்,கார்த்திக் சிதம்பரம்,நளினி சிதம்பரம் என்று அவர் குடும்பத்தையே நீதிமன்ற் வாசலில் மத்திய அரசு நிற்கவைப்பதை பார்க்கும் பொது நிலைமை தெளிவாகிறது .

அதேசமயம் இந்திய அரசியல் வானில் வலதுசாரிகள் கை  ஓங்கி இருக்கிறது என்பதும் அவர்கள் தான் நிகழ்ச்ச்சி நிரலை நிர்ணயிக்கிறார்கள் எனதும் தெளிவாக புலப்படுகிறது.


Friday, December 21, 2018

சாமியே ...!

சரணம்.....!!
நாகபுரியிலிருந்து என் குடும்பத்தினர்கள் சபரிமலை புறப்பட எத்தனம் செய்தனர் .தகராறான இந்த நேரத்தில் போகவேண்டாம் என்று சொன்னலும்கேட்கும் ஜென்மங்கள் இல்லை. திட்டப்படி டிசம்பர் 14ம் தேதி பெங்களூர் விமானப்பயணம். அங்கிருந்து  கோட்டயம்.ரயில். 

என் மகன் கேரள முதலமைசார் அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிலைமை பற்றி விசாரித்தான். அதிகாரி விபரங்களை சொன்னார் . 

கோட்டயத்திலிருந்து வாகனம் மூலம் நிலைக்கல் வரை போகலாம் .அதன் பிறகு தனியார் வாகனத்திற்கு அனுமதி இல்லை. நிலாக்கல்லி ருந்து அரசு போக்குவரத்து மட்டுமே என்று அதிகாரி விளக்கினார்.

சுவாமி தரிசனம் முடிந்து பக்தர்கள் அங்கேயே தங்குவார்கள். காலை 4மணிக்கு நெய் அபிஷேகம் பார்த்து விட்டு கீழே இறங்குவது  வழக்கம். இந்தத்தடவை 144 தடை உத்திரவு போட்டு அங்கே யாரும் தங்கமுடியாது . என்று அரசு அறிவித்து விட்டது> ஆனால் இரவு 12மணிக்கு பஸ் ரெடியாக இருக்கும்மலை  ஏறும்போது நான்கு மணி சரியாக இருக்கும் .சொகுசு பஸ் ,மற்றும் ஏசி பஸ்வசதி யை அரசு செய்திருக்கிறது.

கூட்டம் கட்டுபாட்டிலிருக்கிறது . அரசு பெருந்தில்  அங்கங்கே  கடுமையான செக்கிங் ! இன்ஸ்பெக்டரும், கண்டக்டர்களும் கேட்கும் கேள்விகள் மூலமும், பார்வைகள் மூலமும் போலி "ஐயப்பாமாரை " கீழே இறக்கி அனுப்பி விடுகிறார்கள் .

என் குடும்பத்தினர் 18ம் தேதி நாகபுரி திரும்பினார்கள்  

எந்த ஆண்டும் இல்லாதவாரூ இந்த ஆண்டு மிகவும் சவுகரியமாக சென்றுவந்தோம். என்றான் என் மாப்பிளை. 

"எல்லாம் அய்யப்பன் பாத்துப்பான் ! சாமிசரணம் !! என்று முடித்தான்.

"இல்லைடா பயித்தரா ! பினராயி சரணம் " என்று நான் சொல்லிக்கொண்டேன்.


Wednesday, December 12, 2018

அக்பர்,தேஜ் பால் 

பத்திரிகை ஆசிரியர் சங்கத்திலிருந்து 

வெளியெற்றப்பட்டனர்!தன்னோடு பணியாற்றிய பெண்களீடம் தவறாக வாலாட்டிய குற்றசாட்டிற்காக பிரபல பத்திரிகை ஆசிரியர்களான  M.J..அக்பர் , மற்றும் தருண் தெஜ்பால் ஆகிய இருவரும் பத்திரிகை ஆசிரியர் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் . 


அக்பர் பா.ஜ.க அமைசரவையில் இருந்தார்.. அமைசர் பதவியை அவ்ர் ராஜினாமா செய்ய வெண்டியதாயிற்று. அதெபோல தெகல்கா என்ற பத்திரியையில் தெஜ்பால் ஆசீயராக இருந்தார. அவரும் ராஜீனாமா செய்தார்.


இவர்கள் மீது பல பெண்கள் பாலியல் ரீதியாக குற்றம் சாட்டியதால் இருவரும் ஆசிரியர் சங்கத்திலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.


அக்பர் 2013 ஆண்டு வாக்கில் தன்னொடு பெண் பத்திரிகையாரை  பாலியல் ரீதியாக சீண்டியதாக குற்றம் சாட்டப்பட்டார். அதே போல்  தேஜ்பால் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது .


சமீபத்தில்  "Me Too " என்ற இயக்கம்  பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் ஆண்கள் பற்றி ய "சங்கதிகளை "

அம்பலமாக்கி வருகிற.து. பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைர முத்து மிது குற்றம் சாட்டி இருந்தார்.

அதிலிருந்து அவ்ரை எந்த பொது நிகழ்சியிலும் அழைக்கப்படாமல் இருக்கிறார்.. இசை அமைப்பளர்களும் அவரை அழைக்க தயங்குவதாக சொல்லப்படுகிறது .  .


Tuesday, December 11, 2018

RBI கவர்னருக்கும் 

அரசுக்கும் என்ன 

கருத்து வேறு பாடு ?1984ம் ஆண்டு என்று நினைக்கிறென்.கென்னடி மறைந்த நேரம். என் மாமா பையன் அப்பொது டல்லாஸ் நகரத்தில் இருந்தான். Chester Bowles எழுதிய new dimention of peace என்ற புத்தகத்தை வாங்கி அனுப்பினன் .அதன் விலை 1 டாலர். அப்பொது டாலரின் இந்திய ரூ மதிப்பு 13 ரூ ஆகும். 

 அதுவே என்னிடம் டாலராக இருந்தால் இன்ரு அதன் மதிப்பு கிட்டத்தட்ட 80 ரூ ஆகும் .

நான் 80 ரூ க்கு சொந்தக்காரன் என்று சொல்லமுடியாது. டாலரின் மதிப்பு வீழ்ந்து ரூபாயின் மதிப்பு உயர்ந்தால் என் இருப்பு டால்ரின் மதிப்பும் குறைந்து விடும் .

கடன் உடன் வாங்கி இந்தியாவிடம் 75000 கொடி டாலர் இருப்பதாக் சொல்கிறார்கள். இதன் இன்றய மதிப்பு கிட்டத்தட்ட 30லட்சம் கொடி. 

ப.ஜ.க இது அதிகமான இருப்பு.இதிலிருந்து ஒரு பகுதியை அதனி,அம்பானி கடன்களுக்கு பதிலாக கஷ்டப்படும் வங்கிகளுக்கு கொடுக்கலாம் என்கிறது.

பொருளாதர நிபுண்ர்கள் இது தவறு. உன்மையான் மதிப்பு இதுவல்ல அதனல்கொடுக்கக்கூடாது என்று கூறுகிறாரகள். 

RBI யும் கூடாது என்கிறது.!

Saturday, December 08, 2018பிடிவாதக்கார இயக்குனர் 

லெனின் பாரதி ....!!!
அதிகாலை நேரம் .மழை கொட்டுகிறது. "ரங்கா ... ஏல ..ரங்கா ...எந்திரி " என்கிறார் அந்த அம்மையார் . ரங்கன் எழுந்து .மழை  நீரில் வாய் கொப்பளித்து " ஆத்தா ! நாளை பத்திரம் பதிவு.சாக்கு போக்கு சொ ல்லாத. காலைல வந்திடு . நல்ல சேலைய உடுத்திகிட்டு வா ! "என்கிறான்.

இருட்டில் உருவங்கள் புலப்பட வார்த்தைகள் காதில் விழுகின்றன. "மேற்கு தொடர்சசி மலை" படம் ஆரம்பமாகிறது. 35 நிமிடம் படம் ஒட்டிய பிறகு கங்காணி "நாளை பத்திரம்ப்பதிவா " என்று கேட்கிறார் .

வெளிர் நீல சட்டை, கருநீல கால்சாராயில் ரங்கன்  ஸ்டூலில் அமர்ந்திருக்க காற்றாலையின் ராட்சச சக்கரங்களின் பின்னணியில் ரங்கன் தூரத்து கழுகு பார்வையில் தெரிய " குறுக்கும் நெடுக்குமாக இருக்கும் நிலமற்றவர்களுக்கு காணிக்கை "என்று படம்முடிகிறது.

இந்த படத்தின் one line இது தான்.

ஏலத்தோட்டத்து சுமகாரர்களின் வாழ்க்கையை  பார்வையிடும் சாட்ச்சிகளாக்கி நம்மை ஒன்ற செய்கிறார் இயக்குனர் லெனின் பாரதி .

சுமைக்காரர்கள்  மலைமேல் ஏறுகிறார்கள். என்ன நுணுக்கமான ஒலி ப்பதிவு. அவர்களின் குரலோசை மூலம் அவர்களுக்கு இடையே உள்ள தூரத்தை பதிவு செய்கிறார்கள் . 

தேனீ சுந்தர் மற்றுமொரு பிடிவாதக்காரர். படம் முழுக்க ஒரு குளோசப்.அல்லது டைட்  இல்லை. அந்த வாழ்க்கையை வாழ அதனைப்பார்க்கும் சாட்ச்சிகளாக நாம் . மேற்குமலையின் முகடுகளில் நாம் ஏறி நிற்கிறோம்.அங்கு வீசும் காற்று ,குளிர், பட்சி களின் இரைசல் அத்தனையும் நமக்காக காத்திருக்கின்றன.  

இரண்டுமணி நேரம் ஓடும் படத்தின் இசைக்கோர்வை 20 நிமிடம் கூ ட இருக்காது. இபடத்தின் இசை கோர்வையை மட்டும் கேட்டுக்கொன்டே தூங்குங்கள். இளையராஜா எந்த உயரத்தில் இருக்கிறார் என்பதை உணருவீர்கள்/அற்புதம். 

இந்த படத்தை  விஜய் சேதுபதி என்ற முன்னணி நடிகர் தயாரித்துள்ளார்.அவரை நடிக்க வேண்டாம் என்று சொன்ன லெனின் பாரதி பிடிவாதத்தக்காரர்தான். ஆனால் அவரை வீட\ பிடிவாதக்காரர்  என்று தன்னை நிரூபித்து விட்டார் சேதுபதி.

இத்தகைய பிடிவாதக்காரர்கள் 

வாழ்க ! வளர்க !! 


Sunday, December 02, 2018


இருந்த போதும் அள்ளி கொடுக்கும் !

இறந்த போதும் அள்ளி கொடுக்கும் !!!
2004 ம் ஆண்டு  என் துணைவியார் பணி  ஒய்வு பெற்றார். முதுமைக்காலத்தில் யாருக்கும்  சிரமம் கொடுக்கக் கூடாது என்று நினைப்பார் அவர் .திடீரென்று இறந்தால் மகன் ,மக்கள் என்ன செய்வார்கள்  என்று நினைத்தார் .சனாதன குடும்பம் என்பதால் "சாங்கியங்கள் " எப்படியும் 50000 /- ஆகும். வருடாந்திர நினைவேந்தலுக்கு 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் ஆகலாம் . இவற்றிற்காக 85000ரூ க்கு ஒரு பாலிசி எடுத்து அதன் பயன் மகனுக்கு என்று சொன்னார்> அதே போல் மகளுக்காக 50000 /-  ரூபாய்க்கு ஒரு பாலிஸ் எடுத்தார் . 

நான் 1996ல் ஒய்வு பெர்றேன்.3 லட்சம் ரூபாயை  fd ஆக போட்டேன் .அது குஜராத்தில் செயல்படும் மருந்து காமப்பேணி. வட்டி  அதிகம் தந்தார்கள் . மூன்று ஆண்டு க்கு ஒருமுறை புதுப்பித்துக்கொள்ளலாம் .வட்டி ஒழுங்காக வந்தது .மூன்று ஆண்டுகள் கழித்து புதுப்பிக்க நேரம் வந்தது> அப்போது கம்பெனியிலிருந்து கடிதம் வந்தது .கம்பெனி சட்டப்படி கம்பெனி முதிர்வு பணத்தை  ஆண்டுக்கு 20 சதம் விதம் ஐந்து ஆண்டுகளில்கொடுக்கும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளதாக அறிவிப்பு வந்தது .வட்டியும் இல்லை என்று அறிவிப்பு வந்து விட்டது 

என் துணைவியார் எடுத்த பாலிசி ANNUITY ! மாதம் 600 /- ஒரு பாலிசியில்,மற்றோன்றில் மாந்தம் 413 /- ர்பாயும் வந்து கொண்டிருக்கிறது . அதாவது மாதம் 1013 x 12 x 14 விதம் இதுவரை சுமார் 170000 /- வந்து விட்டது. என் துணைவியார் இன்னும் பத்து ஆண்டுகள் இருக்கும் வாய்ப்பு உள்ளதாக நன் நினைக்கிறன்.

Ij anything untowerd  haappens my son and daughter will get benifit of 85000 /- and  50000//-


என் துணைவியார்  LIC ல் பாலிசி எடுத்துள்ளார்.

lic இருப்பு தொகை 30 லட்சம் கோடி என்கிறார்கள். இதனை அம்பானிக்கும்.,அதானிக்கும் கொடுக்க சதி நடப்பதாக சொல்கிறார்கள். lic பாலிசிதாரர்களிலிருந்து, chairman ,அதிகாரிகள்  ,ஊழியர்கள், வளர்சசி அதிகாரிகள், முகவர்கள் மற்றும் மக்கள் இணைந்து போராடி தடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.

இருந்தும் அள்ளி கொடுக்கும் ,இறந்தும் அள்ளி கொடுக்கும் lic ஐ காப்பாற்றுவோம்.!!!