பள்ளி பாட புத்தகம் - குஜராத் மாடல் !!!
1.அக்டோபர் 30 ம் தேதி காந்தி இறந்தார் !
2. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் அமெரிக்காமீது அணுகுண்டை வீசியது !
3.தாதாபாய் நவ்ரோஜி,சுரேந்திரநாத் பானர்ஜி , கோபால கிருஷ்ண கோகலே ஆகியொர் "டெரரிஸ்ட்டு "கள் !
4.1947ம் ஆண்டு இந்தியாவை பிரித்து இந்துகுஷ் மலையடிவாரத்தில் இஸ்லாமாபாத் என்ற நாட்டை இஸ்லாமியர்களுக்காக உருவாக்கினார்கள் !
எட்டாம் வகுப்பு ஆங்கில வழி கல்விபயிலும்மாணவர்களுக்கான புத்தகத்தில் எழுதப்பாட்டுள்ள சில சாம்பிள்கள் ! social science english medium )
எல்லாம் அந்த குஜராத் மாநிலத்தில் தான் !
அந்த பள்ளிப்பாட புத்தக போர்டு தலைவரிடம் " ஏல ! அம்புட்டும்தப்பா இருக்குடா ! புத்தகத்தை வாபஸ் வாங்கிங்கல ! " நு சொன்னா '"இவ்வளவு நளைக்கிபொறவு அது எப்படி முடியும் ! தவறுகள சுட்டிக்காட்டி "இண்டர்னெட்ல போட்டுவிடுகிறோம் "நு சொல்லிவிட்டாரு ! அந்த கெட்டிக்காரன் பேரு நிதின் பெதானி !
இப்பமாவதுகுஜராத்தோட போச்சு அண்ணே !
சவத்துப்பய இந்திய பிரதமரானா நம்ம வூட்டு பிள்ளைகளும் இதத்தான படிக்கணும் !
நாகர்கோவில்ல நமோ பேரவை ஆரம்பிச்சுருக்கான்களாமே! அவங்க கிட்ட பிள்ளைகள டிவிஷன் படிக்க அனுப்பலாம் !
ஆனா பயமாயிருக்கு !!
நமோ டிக்கடைல டீ அடிக்க விட்டுருவாங்களோனு !!!