Tuesday, May 29, 2012

ரத்னவேல் அவர்களும் அவர்கள் வீட்டு சப்பாத்தியும்....... பதிவர் ரத்னவேல் நடராஜன் அவர்களை சந்திக்க விரும்பினேன்.ஏழை எளிய மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று மனதார விரும்புபவர்.முகம் தெரியாத ஏழைக்குழந்தைகளூக்கு எவருக்கும் தெரியாமல் கல்விக்காக உதவுபவர். இதில் மொழி,இனம், சாதி என்ற பாகுபாடு அறியாதவர்.இத்தகைய பெரியவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கும் முத்துமீனாட்சி அவர்களுக்கும் நாங்கள் தென் தமிழகம் சென்றிருந்தபொது கிடைத்தது. நான் என்மகள் குடும்பத்தொடு திருச்சியிலிருந்து தென்காசி செல்லும் வழியில் ஸ்ரீவில்லி புத்தூர் சென்றோம். ரத்னவேல் அவர்களின் துணைவியார் உமா காந்திமதி அவர்கள் என்னையும் முத்துமீனாட்சியையுமவர்கள் இல்லத்திற்கு அழைதுச்சென்றார்கள்மிகவும் சுறுசுறுப்பான அந்த அம்மையார் செல்லுந்தில்( moped). வந்து எங்களை காமராஜர் சிலை அருகில்சந்தித்தார். அவர்கள்வீடிருக்கும் தெருமுனையிலேயே ரத்தினவேல் முகமன் கூறி வரவேற்றார். அனுபவ அறிவு பட்டுத்தெறிக்கும் முகம்.எளிமையான வெள்ளைசட்டையும் வேட்டியும் அவருடைய கம்பிரமான தோற்றத்தை அதிகரித்தது. அம்மையாரோ அவருடைய நெருக்கமான உறவினர்கள் வந்திருப்பது போன்று சரளமாக பேசி மகிழ்ந்தார்கள்.ரத்னவேல் அவர்களின் பதிவுகளில் மிகவும்சிறப்பான அம்சம் அதில் வெளி வரும் புகைப்படங்கள். அதன எடுப்பது அம்மையார் என்பதால் மிகவும் ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தேன்.. "பிள்ளைகள பள்ளிகூடத்தில் விட வசதியாக இருக்குமென்று தான் வண்டியோட்டக் கற்றுக்கொண்டேன்" என்றார் உமா அம்மையார்.மூன்று மகன்கள் ஒருவர் அமெரிக்காவிலிருக்கிறார். மற்றொருவர் சென்னையில்.மூன்றாமவர் பங்களுருவில் .எல்லாருமே பொறியியல்பட்டதாரிகள்.. . ரத்னவேல் அவர்களின் சகோதரி பக்கத்து வீட்டில் வசிக்கிறார்.சகோதரியின் மகன் அறிவியல் மூன்றாம் ஆண்டு. அடுத்து பட்ட மேல் படிப்பு படிக்க விருப்பம் என்றார்.. சக மாணவர்களோடு சேர்ந்து பொது சேவையில் ஈடுபடுவதாகவும் கூறினார்.அப்படியானால் I.A.S எழுதலாம் என்றுஆலொசனை கூறினேன்.ரத்னவேல் அவர்கள்முகம்மலர அதனை ஆமோதித்தார்கள். காமராஜரின் இலவசகல்வித்திட்டத்தால் தான் நான் s.s.l.c வரை படிக்கமுடிந்தது என்றார்".துணைவியார் அருமையாக சமைப்பார்கள்" பெருமையோடு சொன்னார்கள். கடுமையான சர்க்கரைநோயாளியான எனக்கு "சப்பாத்தி".செய்து தருவதாக கூறினார்கள்.தமிழ்நாட்டில் சப்பாத்தி செய்தால் "மாட்டுத்தோலில் " செய்தமாதிரி இருக்கும்.அன்பொடு சொல்வதால் சரி என்று கூறினேன் பதினைந்து நிமிடத்தில்சூடாக உருளைக்கிழங்கு குருமாவோடு சப்பாத்தி வந்தது.நானும் முத்து மீனாட்சியும் சாப்பிட்டோம். நாங்கள் எங்கள் வாழ்நாளில் இவ்வளவு ருசியாக சப்பாத்தி சாப்பிட்டதில்லை. முத்து மீனாட்சி செய்முறையைத் தெரிந்துகொள்ள விரும்பினார்கள்.."நாங்கள் சப்பாத்தி மாவை தண்ணிர் விட்டுப் பிசைய மட்டோம்.ஒரு பாத்திரத்தில் பாலைவிட்டு அதில் தெவையான உப்பையும் போட்டு அதன் பிறகு மாவைப்போட்டு பிசைவோம்"என்றார். நாங்கள் விடைபெறும்நேரம்.புகைப்படம் எடுத்துக் கொண்டோம். வில்லிபுத்தூரின் புகழ் பெற்ற பால் கொவாவைக் கோடுத்தார். அரிசிஉணவுக் குறைத்து கோதுமைதான் நான் அதிகம் உண்பது. பாலில் பிசைந்த சப்பத்தி தான் மதியம்.தினம் ரத்னவேல் ஐயாவையும் உமா காந்திமதி அம்மையாரையும் நினத்துக் கொண்டே உண்கிறேன்.

Wednesday, May 23, 2012

ஒரு கலந்துரையாடல்........ மே மாதம் முதல்தேதி சென்னையில் தான் இருந்தேன். பேரணி எதிலும் பங்கேற்க முடியவில்லை. இரண்டாம் தேதி காலை தோழர் எஸ்.வி,வேணுகொபால் தொலைபெசி மூலம் பெசினார். "சரியாக மாலை 4மணிக்கு என்வீட்டிற்கு" டாடா சுமோ" வரும்.நானும் முத்து மீனாட்சியும் அதில் "அசொகா பில்லர்" வரவேண்டும்.அங்கு அவர் காத்திருப்பார்." என்று உத்திரவிட்டார். நானும் முத்து மீனாட்சியும் 4.10க்கு கிளம்பினோம்."அசொக் பில்லரி"ல் எஸ்.வி.வியும் அருமை நண்பரும் பதிவருமான சுந்தர் ஜி இருந்தார்கள்.கம்பீரமும்,கார்வையும் கொண்ட சுந்தர் ஜி குரலை கை பெசியில் கேட்டிருக்கீறேன். புது மாப்பிள்ளை போல மெருகு குலையாமல் நின்று. கொண்டிருந்தார்.அவர்கள் வண்டியில் ஏறி கொண்டனர். மூன்றாவதாக ஒருவரும் ஏறினார்.அவரை எஸ்.வி.வி அறிமுகம் செய்வித்தார்.டாக்டர் ராமானுஜம்.மனநல மருத்துவர். பதிவர். பெசும்போது அவரப்பற்றி அறிந்து கொண்டேன். நெல்லை மாவட்டம்.நாங்குனேரி பூர்வீகம். என்னுடைய ஆப்த நண்பரும்,என் நாடக ஆசிரியருமான பெராசிரியர் செ.ராமானுஜம் அவர்களுக்கு உறவினர்.சென்னை வக்கீல் காலம் சென்ற என்.டி வாணமாமலைக்கு உறவினர். "ஆராய்ச்சி"பத்திரிகையை நடத்திய வாணமாலைக்கு உறவினர்..ஆஹா! எப்பேற்பட்ட முற்போக்கான,அறிவார்ந்த குடும்பம். நங்கநல்லுரில் உள்ள பேராசிரியர் ராஜு அவர்கள் வீட்டிற்கு சென்றோம்.வழியில் தோழர் குமரகுருபரனையும் எற்றிக்கொண்டோம்.அங்கு மூத்த வங்கி அதிகாரி தெவநாதன்.கவிஞர் ந..வே.அருள்.மாணவர் சங்க முன்னாள் தலைவர் தோழர் செல்வா என்று ஒரு அருமையான "ஜமா" செர்ந்துவிட்டது. தெவநாதனுக்கு அருமையான குரல்.கர்நாடக சங்கீதம் பயின்றவர்.ஓவியர். கார்டூனிஸ்ட். "எங்கே செல்கின்றோம்" என்று அவர் எழுதிய பாடலை "ஹம்ச நாதம்" ராகத்தில் கீர்த்தனையாக பாடினார்.கலையிரவுகளை நடத்தும் நண்பர்கள் இந்தப் பாடலை கணக்கில் எடுத்துக் கோள்ளவேண்டும்.சரணத்தில் "மதம் மொழி இனம் மறப்போம்,இணைந்து வாழ்ந்து உயர்வடைவோம் "என்று அவர் முடித்தபோது மெய்சிலிர்த்து கைதட்டி மகிழ்ந்தோம்.. "சங்கராபரணம்" படத்திற்கூ நான் விமரிசனம் எழுதியிருந்தேன். அதன காலம் சென்ற தலைவர் ஏ.பாலசுப்பிரமணியம் குறிப்பிட்டார்.இரவில் பாரவண்டி ஓட்டுபவன் கூட "சங்கரா பரணமு" என்று பாடும் அள்வுக்கு அந்தப்படம் கர்நாடக இசையை,செவ்விசையை சாதாரணமக்களுக்கு அறிமுகப்படுத்தியபடம்.என்றுகூறி "மேளகர்த்தா ரகங்களில் 29வது மேளகர்த்தாரகம்'என்று விளக்கினார்.கர்நாடகசங்கீதம் பற்றியும்,செவ்விசை பற்றியும் விளக்கினார். உணர்சிப்பிழம்பாக இருந்த அவர் முகம்சிவந்துவிட்டது."சரி! போ! " வேலயப்பார் என்ரு அனுப்பினார். சிறிது நேரம் கழித்து வந்தார். "ஏம்பா! ரொம்ப கோபப்பட்டுட்டென்.இல்லையா! நம்ம பத்திரிகையில தப்பு வந்தா தங்கலைப்பா! sorry!" என்றார். பலாஆண்டுகளுக்குமுன்பு நடந்த இந்த நீகழ்ச்சியை நான் சொன்னேன்.நண்பர்கள் அந்தமாபெரும் தலவனின் நினைவில் நெகிழ்ந்தார்கள்.. . முத்து மீனட்சியின் முதல்கதை "அடி" மங்கையர் மலரில் வந்தது. அந்த கதை எழுதியதையும், அது பற்றிய அவர் அனுபவத்தயும் அவர் பகிர்ந்து கொண்டார்.இறுதியில் அவர் கொடுத்த "பன்ச்" கைதட்டி வரவேற்கப்பட்டது. கவிஞர் ந.வே.அருள் குற்றாலத்தில்நடந்த சிறுகதை பயிற்சி முகாம்பற்றி குறிப்பிட்டார். "காஸ்யபன் "மிகவும் கண்டிப்பான ஆசிரியர் என்றும் கூறினார் சுந்தர் ஜி அருமையான பாடல் ஒன்றை பாடினார்.. 70மாண்டுகளில்மாணவர் அமைப்பை பலப்படுத்த முயற்சிகள் நடந்தன. சுமார் 60 அல்லது 70 மாணவர்களை அழைத்திருந்தோம்.."ஏ'பாலசுப்பிரமணியம் அவர்களிடையே உரையாற்றினர்.துடிப்பான மானவர் ஒருவர் அடிக்கடி எழுந்து கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருந்தார். . முடிவில் ஏ.பி அவர்கள் "தோழா! நீஎங்கு படிக்கிறாய்? என்று கெட்டார். "மேலூர் அருகில் உள்ள விவசாயக்கல்லூரி!" "அங்கு பணியாற்றும் பெராசிரியை டாக்டர்..... அவர்களைத்தெரியுமா? வியப்போடு "தெரியும் "என்றான். " \ "அவருடைய கணவன் தான் நான் உன்னை. படு சுட்டியான பையன் என்றார்கள்.ஆனால் படிப்பிகவனம் செலுத் துவது கம்மி என்றார்கள்.மாணவத்தோழர்கள்!.நெஞ்சில் தத்துவம்மட்டும் இருந்தால்பொதாது.படிப்பில் முதலிடம்.விளையாட்டில் முதலிடம்.பெச்சுப்போட்டியில் முதலிடம் என்று நீங்ககள் நீற்கவேண்டும்.அப்போது தான் உங்களை மதிப்பார்கள்.அதன் மூலமுங்கள் இயக்கத்தை.தத்துவத்தை மதிக்க ஆரம்பிப்பார்கள்."என்றார்.அண்ணாமலை பல்கலைகழகத்தில் படிக்கும் போது சிறந்த படிப்பாளி மட்டுமலாமல், பல்கலைகழக ஹாக்கி அணியின் முக்கிய வீரர் ஏ.பி. காலம்சென்றேம்.ஆர்.வெங்கடராமன்ஈ கால்பந்தாட்ட வீரர். ஹாலந்தில் நடந்த போட்டியில் "பீலி"யினாட்டத்தப்பார்த்து மகிழ்ந்தவர். பீலியப்பற்றி மணிக்கணக்காக பேசுவார். இதனிக்குறிப்பிட்டபோது the irressistable venu குறுக்கிட்டார்..மானவர் தலைவர் செல்வாவை நோக்கி "செல்வா! இது பற்றி உங்கள் அனுபவத்த சொல்லுங்கள் "என்றார். தோழர் செல்வா பள்ளிப்பருவத்திலேயே போராட்டத்தில் குதித்தவர். அவர் இருந்த பகுதியில் தான் பெரியவர் சங்கரையா வசித்.திருக்கிறார்."தாத்தா,தாத்தா" என்ரு தான் கூப்பிடுவார்களாம். பி.எஸ்.ஸி பயாலஜி படித்தார்.பின் லயொலாவில் எம்.எஸ்.ஸி சேர்ந்தார்.இயக்கப்பணி ...படிப்பை தடுத்தது.பின்னர் பச்சையப்பாவில் சேர்ந்து எம்.ஏ.(வரலாறு) பட்டம் பெற்றார்.. நாங்கள் சந்திதது பெராசிரியர் ராஜு அவர்கள் வீட்டில் "புதிய ஆசிரியன்" .பத்திரிகையின் ஆசிரியராக இருக்கிறார். தென் மாவட்டங்களில் வீரம் செறிந்த போராட்டங்களை நடத்திய ஆசிரியர்களுக்கு தலமை தாங்கிய "மூட்டா" ராஜு தான் அவர்.. திருப்பத்தூர் கல்லுரி நிர்வாகம் சண்டித்தனம் செய்தது.ஆசிரியர்கள்போராடினார்கள் நிர்வாகம் மானவர்களின் படிப்பு பாழாகிவிடும் என்று பிரச்சாரம் செய்தது.கல்லுரி வளாகத்திற்கு வேளியே.பந்தல் போட்டு மானணவர்களுக்கு ஆசிரியர்கள்வகுப்புகளை நடத்தி நீர்வாகத்தை பணியவைத்தார்கள் இதனை விவரித்த போது மூட்டாராஜி அவர்களின் பரவசமான முகத்தைதரிசிக்கும் பாக்கியம் அன்று எனக்குக் கிடைத்தது. பாலமுரளி கிருஷ்ணா பாடிய "ஒருநாள் பொதுமா" என்ற பாடலின் "ஹம்மிங்" கை குமரகுருபரன் பாடிக்காட்டினார்.. ஒவ்வொருவரையும் தூண்டிவிட்டு பெசவைத்த எஸ்.வி.வி தான் இந்த சந்திப்பிற்கான மூலவர்.. .

Tuesday, May 08, 2012


Kashyapan Interview [part 2 of 2]

Kashyapan Interview [part 1 of 2]