Thursday, August 29, 2013

ஏன் அப்படி ......?


பகுஜன் சமாஜ் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்தவர் கன்ஷிராம் என்பவர் ! தலித்துகள்,பின் தங்கிய வகுப்பினர் ,முஸ்லீம்கள் என்று வெகுஜன மாக்கள் எல்லாரும் ஒன்று பட வேண்டும் என்று பாடுபட்டார் ! மத்திய அரசு ஊழியராக  இருந்த அவர் தன வேலையை விட்டு பகுஜன் கட்சியை உருவாக்கினார் ! அந்த  கட்சி மாயாவதி தலைமையில் உத்திரப் பிரதேசத்தில் ஆட்சி அமைத்தது !

1996ம் ஆண்டு கன்ஷிராம் டேல்லியில்  ஒரு நிருபரை  அடித்து விட்டார் ! மிகப்பேரிய பரபரப்புச் செய்தியாக அது பத்திரிகைகளில் வந்தது ! அவர் ஏன்  அடித்தார் என்பது பற்றி எந்த பத்திரிகையும் சொல்லவில்லை ! இது பற்றி யாரும்கவலைப்படவும் இல்லை ! அவர் அடிக்கலாமா ? அடித்தது தவறல்லவா! என்று பக்கம் பக்கமாக எழுதினார்கள் !

நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கை நிருபர் "கூனர் " என்பவர் மட்டும் இது பற்றி விசாரிக்க ஆரம்பித்தார் ! பத்திரிகையாளர்களிடையே கன்ஷிராம் சொல்வதை காது  கொடுத்து கேட்க எவரும் இல்லை ! தலித்துகள் எவருமே பத்திரிகையாளராக இல்லை ! 

தலித்துகளிடையே செல்வாக்கு மிக்க பத்ததிரிகையாளராக வரும் அளவுக்கு கல்வி யறிவு இல்லை என்பது தான் உண்மை என்று அவர் கண்டறிநதார் !
  
இது நடந்து பதினேழு வருடமாகிவிட்டது !

இன்று தலித்துகளுக்கு கல்வி அளிக்க பல தன்னார்வ நிறுவனங்கள் முன் வந்து கொண்டிருக்கின்றான !

குறிப்பாக அம்பேத்கர் கல்வி மையம் தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் தலைமையில் சக்கை போடு போடுகிறது !

இதற்கு உதவியாக தமிழகம் முழுவது எல்.ஐ. சி ஊழியர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் !

முன்னாள் எல்.ஐ.சி ஊழியன் என்ற முறையில் எனக்கும் பெருமைதான் !!!   

GLORY  to A .I .I .E .A  !!! 







Sunday, August 25, 2013

கலர்சட்டை நாத்திகம் ......!!!

(சிக்காகோவிலிருந்து நண்பர்அப்பாதுரை  எழுதும் "கலர்சட்டை நாத்திகம் " என்ற இடுகையிலிருந்து ) 

          நாத்திகம் பல வகைகளில் காணப்படுகிறது. 

'கடவுள் கிடையாது' என்போர் ஒரு வகை - atheism. 

'கடவுள் இருக்கலாம், அக்கறையில்லை' என்பார் ஒரு வகை - agnosticism. 

'இயற்கையே கடவுள், மற்றபடி உருவம் சக்தி எதுவும் கிடையாது' என்போர் இன்னொரு வகை - pantheism. இது இரண்டுங்கெட்டான் நாத்திகம். அல்லது இ.கெ ஆத்திகம். 

'கடவுள் இல்லை' என்ற பிரிவு மட்டுமே முறையான நாத்திகம். அசல் நாத்திகம். நாத்திகக் 'காவலர்கள்' இதை ஏற்க மாட்டார்கள் எனினும், மற்ற இரண்டையும் நாத்திகப் பிரிவுகள் எனலாம். நாத்திகம் ஒர் இலக்கு. அந்த இலக்குக்கானப் பாதைகள் பலவாக இருப்பதில் பாதகமில்லை என்று நினைக்கிறேன். 'இரண்டுங்கெட்டானை' நாத்திகத்தில் சேர்த்ததற்கான காரணங்களைப் பின்னர் பார்ப்போம். 

அசல் நாத்திகர் அழிவுப் பாதையில் செல்வதில்லை. சிந்தனைகள் ஆக்கச் சிந்தனைகளாகவும், அறிவார்ந்த வெளிப்பாடுகளாகவும் அமைகின்றன. 

அசல் நாத்திகத்தின் வேர், அறிவாகும். ஏதோ ஒரு அபார சக்தி அனைத்தையும் படைத்துக் காத்து அழிப்பதன் முரணை அறிந்துக் களையும் பக்குவம் கொண்டது அசல் நாத்திகம். இல்லாத ஏதோ ஒரு சக்தியின் மேலான நம்பிக்கையின் அடிப்படையில் மனித இனம் தனக்குள் உருவாக்கிக் கொள்ளும் கண்மூடித்தன சடங்கு வழிபாடு தொட்டப் பிரிவுகளையும் கொள்கைகளையும், அறிவார்ந்த நிலையில் எண்ணிக் களைந்து மனித நேயம் பெருக உழைப்பதே அசல் நாத்திகமாகும். 

அறிவிலி நாத்திகரையும் இங்கே அடையாளம் காண வேண்டும். நாத்திகம் என்ற பெயரில் கடவுள் அடையாளங்களை அழிப்பதும், கடவுளையும் கடவுளை நம்புவோரைத் தாக்குவதையும் செய்வோர் அறிவிலி நாத்திகர். அறிவிலி நாத்திகம் அசல் நாத்திகமே அல்ல. நாத்திகத்தில் கடவுள் எதிர்ப்பு கிடையாது. கடவுளே இல்லை எனும் பொழுது அசல் நாத்திகம் அதை எப்படி எதிர்க்கும்?

அறிவிலி நாத்திகம், ஆத்திகத்துக்கு ஒப்பானது எனலாம். அறிவிலி நாத்திகத்தின் வேர் ஆத்திகத்திலிருந்துப் பிரிந்ததாகும். ஆத்திகம் கடவுளை மனதில் நிறுத்தி வைத்திருக்கிறது. அறிவிலி நாத்திகமும் அதையே செய்கிறது - கடவுள் எதிர்ப்பையும் கடவுள் வெறுப்பையும் ஆத்திகர் எதிர்ப்பையும் மனதில் நிறுத்தி வைத்திருக்கிறது. ஆத்திகரை விட அறிவிலி நாத்திகரே கடவுளைப் பற்றி அதிகம் எண்ணுகிறார்கள் எனலாம். இதற்குப் புராணங்களில் பல உதாரணக் கதைகள் உள்ளன. கடவுள் வெறுப்பைத் தூண்டி அழித்து ஆதரவு தந்து ஏற்பதும் கடவுளே எனும் பாணியில் வரும் கதைகள். அறிவிலி நாத்திகர் இதை அறிய வேண்டும். அறிந்துத் திருந்த வேண்டும். ஆத்திகத்தின் வன்முறையும் பகையும் அறிவிலி நாத்திகத்தின் பண்புகள். ஆத்திகக் கண்ணாடியில் பார்த்தால் அறிவிலி நாத்திகம் தன்னைக் காணும். அறிவிலி நாத்திகக் கண்ணாடியில் பார்த்தால் ஆத்திகம் தன்னைக் காணும். ஆத்திகமும் அறிவிலி நாத்திகமும் அழிவுப் பாதையில் பயணம் செய்பவை.

ஆத்திகத்தில் ஆக்கச் சிந்தனைகள் குறைவு. அறிவார்ந்த வெளிப்பாடுகள் குறைவு. இதற்கான உதாரணங்களையும் ஆதாரங்களையும் பின்னர் பார்ப்போம். 

ஆத்திகத்திலும் பல வகை உண்டு. காணாததைக் கடவுளென்பது ஆத்திகம். எனினும், கண்டதையெல்லாம் கடவுள் எனும் ஆத்திகப் பிரிவும் உண்டு. புல்லும் கடவுள், புழுவும் கடவுள், கல்லும் கடவுள், கனியும் கடவுள், எங்கும் கடவுள் எதிலும் கடவுள் என்று முழங்கும் இந்தப் பிரிவு இரண்டுங்கெட்டானுக்கு பல தட்டுக்கள் கீழே எனலாம். 

ஆத்திகர்கள், அசல் நாத்திகரின் எதிரிகள் அல்ல. ஆத்திகர்கள் எப்படி எதிரிகளாக முடியும்? புறத்தே நாத்திகருக்கும் ஆத்திகருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. பார்ப்பதற்கும் பழகுவதற்கும் நாத்திகர்கள் போலவே ஆத்திகர்களும் காணப்படுகிறார்கள். இருவருக்கும் உள்ளது பகுத்தறியும் அறிவு தானே? ஆத்திகர் மட்டும் திடீரென்று இல்லாத ஒன்றன் பெயரைச் சொல்லி அறிவற்ற செயலோ அல்லது மனித நேயத்துக்குப் புறம்பாக ஏதேனும் செய்கிறார் என்றால்... அது அறியாமை. 'ஆ.. நெருப்புப் பக்கமே போகாதே' என்று அதட்டித் தன் குழந்தையைச் சிறு பொறியினின்றும் விலகச் சொல்லும் அதே வேளையில், 'தீபாராதனை நெருப்பை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்' என்று மணியடித்து முகத்தின் எதிரே நிறுத்தி வற்புறுத்தும் ஆத்திகரின் அறிவுப் பிறழ்சி மீது எரிச்சலோ கோபமோ படுவது முறையாகாது. ஆத்திகரின் அறியாமை களைய நாத்திகர்கள் உதவுவதே முறையாகும். 

மனிதம் இன்னும் பரிணாம வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த வளர்ச்சியின் பலனாகக் கடவுள் மதம் சடங்கு இனம் போன்ற மூட நம்பிக்கைகளும் பிரிவுகளும் ஒழிவது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்வதே அசல் நாத்திகமாகும். உணர்ந்து அதற்கேற்ற வழியினைத் தொடர்ந்து வகுப்பதே அசல் நாத்திகமாகும். அந்த வழியிலே பொறாமை கோபம் வெறி ஆத்திரம் வன்முறைகளைத் தவிர்த்து, குழம்பியிருக்கும் ஆத்திகரைப் பொறுமையாகக் கனிவுடன் தெளிவை நோக்கி நடத்திச் செல்வதே நாத்திகத்தின் கடமையாகும். நாத்திகத்தின் கடமையைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

1க்ரெகரி பார்ஷ் என்பாரின் அறிக்கை, ஸ்டேன்பர்டு பலகலைக்கழகம்

Friday, August 23, 2013

கலர் சட்டை நாத்திகம் ....!!!

(சிக்காகோவிலிருந்து நண்பர் அப்பாதுரை அவர்களின்"கலர்சட்டைநாத்திகம் "
இடுகையிலிருந்து )



          குருட்டு நம்பிக்கையிலிருந்து அறிவுப்புறம் வருவோம். மனித இயக்கத்துள் காணப்படும் ஒற்றுமைகளுக்கும் வேற்றுமைகளுக்கும் என்ன பொருள் என்று அறிவியல் நோக்கில் கேள்விகள் ஒருபுறமும், தத்துவ வேதாந்த நோக்கில் கேள்விகள் மறுபுறமும், கேட்கப்பட்டும் பதில்கள் தேடப்பட்டும் வருகின்றன. மனித வேதியலை மரபணுக்களின் அடிப்படையில் தனித்தனியாகப் பிரித்துத் தொகுத்து, ஏறக்குறைய இன்ன புறக்குணங்களுக்கு இன்ன மரபணுக்கள் சாத்தியமாகின்றன என்று வகுத்தும் விட்டார்கள். ஆராய்ச்சிகளில் வெகுதூரம் வந்திருக்கிறோம், பலவகை சாத்தியங்களும் சான்றுகளும் அலசப்படுகின்றன - இன்ன அகக் குணங்களுக்கு இன்ன அணுக்கள் காரணம் என்றுத் தொகுத்து முடிக்கும் காலம் தொலைவில் இல்லை. 

மனித இன மூதாதை தோன்றி இரண்டு கால்களால் நடக்கத் தொடங்கியது முதல் இன்று வரையிலான பரிணாம வளர்ச்சிக்கு நாற்பதிலிருந்து ஐம்பது லட்சம் வருடங்கள் போல் பிடித்திருக்கிறது. பூமி அதற்கு முன் பல கோடி ஆண்டுகளாக, ஏறத்தாழ நானூறு கோடி வருடங்கள், உருப்பெற்று வளரத் தொடங்கியிருக்கிறது. அதற்கு ஆயிரம் கோடி வருடங்கள் முன்பே அண்டம் வெடித்து பூமி உண்டாகத் தொடங்கியது. பூமி வெப்பம் அடங்கி வளரத்தொடங்கவே ஆயிரம் கோடி வருடங்கள் போல் பிடித்திருக்கிறது. அதற்குப் பின் முதல் மனித இனம் தோன்ற நானூற்று சொச்சக் கோடி வருடங்களாயின. தற்போதைய மனித இனத்தின் முன்னோடிகள் தோன்றி இரண்டு லட்சம் ஆண்டுகள் போல் ஆகிறது. அதிலும் மொழியறிவு தோன்றி ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஆகிறது. ஆக, மனித இனத்துக்கு முன்பாகக் கிருமிகள் முதல் மீன் செடி கொடி மிருகங்கள் என்று நிறைய வளர்ந்து அழிந்து வளர்ந்து அழிந்து ஒன்றல்ல, பல மாபெரும் பரிணாமங்கள் வளர்ந்து முடிந்திருக்கின்றன. இதற்கான ஆதாரங்களும் ஆய்வு அணுகு முறைகளும் விவரமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றை நம்பலாம். அல்லது விஷ்ணுவின் தொப்புள் கொடியில் சோம்பல் முறித்தபடி ஊழி நீர் வடியக் காத்திருந்து உலகையும் மனிதரையும் படைத்தார் பிரம்மன் என்பதை நம்பலாம்.

Tuesday, August 20, 2013

காந்தியைக் கொன்றவர்கள் தான் 

தபோல்கரையும் கொன்றுள்ளார்கள் .....!

முதலமைச்சர் குற்றச்சாட்டு !


டாகடர். நரேந்திர தபோலகர் செவ்வாய் கிழமை காலை நடை பயிற்சிக்கு போகும் பொது சுட்டுக் கொல்லப்பட்டார் !
புனே நகரத்தில் நடந்த இந்த சம்பவம்  மராட்டிய மாநிலத்தை பரபரப்பில் ஆழ்த்தி  உள்ளது !

மாநில முதலமைச்சர் பிருத்வி ராஜ் சவான் " காந்தியைக் கொன்றவர்கள் தான் தபோல்கரையும்கொன்றுள்ளார்கள் " என்றுகுறிப்பிட்டுள்ளார் !

மிராஜ் நகரத்தில் மருத்துவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற தபோல்கர்  மருத்துவ சேவையை விட்டு மக்களின் மூட  நம்பிக்கையை ஒழிக்க பணி செய்ய ஆரம்பித்தார்! 

அவருடைய அண்ணன் தேவதத்தா சொசலிஸ்கட்சியில் இருந்தார் ! 
தபோல்கர் மக்களிடையே செல்வாக்கு செலுத்திவரும் போலிச்சாமியார்கள், பூசாரிகள் ஆகியவர்களைஎதிர்த்து இயக்கங்களை நடத்திவந்தார் !

இதற்காக அகில பாரதிய மூட நம்பிக்கை ஒழிப்பு சங்கத்தில் சேர்ந்து பணியாற்றினார் ! இந்த அமைப்பின் தலைமை பா.ஜ.க விடம் இருந்தது ! திருடனிடமே சாவியைக் கொடுத்த  நிலைமையை உணர்ந்த தபோல்கர் மராட்டிய மூட நம்பிக்கை ஒழிப்பு இயக்கத்தை ஆரம்பித்தார் !

சர்வதேச பகுத்தறிவாளர் அமைப்புகளுடன் தொடர்பு கொண்டார் ! மூட  நம்பிக்கையினை ஒழிக்க சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை கொண்டுவரச் செய்தார் ! எல்லா கட்சிகளும் அதனை ஆதரித்தன ! பா.ஜ.க வும்,சிவசேனை மட்டும் அதனை கடுமையாக எதிர்த்தன !

வினாயக பூஜை செய்யும்பக்தர்களிடம் சிலையை ஆற்றிலோ குளத்திலோ போடாதீர்கள் என்று பிரச்சாரம் செய்தார் ! அதுவும் புனே நகரத்தில் கடுமையாக செய்தார் ! விநாயக சதுர்த்தி அடுத்தமாதம் வரவிருக்கும் நேரத்தில் பலநகரங்களில் இவருடைய குரல் பிரதி பலித்தது !

பொதுக் குளத்தில் தலித்துகள் தண்ணிர் எடுக்கக் கூடாது என்று மேல்சாதியினர் குரல் கொடுத்த மாநிலம் இது ! ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பொதுக்கிணறு தோண்டவேண்டுமென்று  இயக்கம் நடத்தினார் தபோல்கர் ! ஒரே கிணறு தான் என்றால் எல்லாப்பயல்களும் ஒரே இடத்தில தானே தண்ணீர் எடுக்க வேண்டும் ! 

தபோலகரின் இத்தகைய செயல்பாடுகள் இந்து வெறியர்களின் பகையை சம்பத்தித்திருக்கக் கூடும் என்று சமூக ஆர்வலர்களும் செயல்வீரர்களும் கருது கிறார்கள் !

செவ்வாய் கிழமை காலை நடை பயிற்சிக்கு சென்றவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுட்டு   கொன்றிருக்கிறார்கள் !

மதத்தின் பெயரால் ,மூட நம்பிக்கையை வளர்த்து மக்களைச்சுரண்டும் போக்கை எதிர்த்து இயக்கம் நடத்திய டாக்டர்.நரேந்திர தபொல்கர் 
என்ற உண்மையான பகுத்தறிவாளர் அதற்காக தன் உயிரையே கொடுத்திருக்கிறார் !

(லண்டன் பி.பி.சி தமிழோசை நிருபர்  தபோல்கர் பற்றி நேற்று மாலை கேட்ட பொதும்  இதனையே என் பேட்டியில் குறிப்பிட்டேன் ) 








Sunday, August 18, 2013

கலர்சட்டை நாத்திகம் .....!!!

(சிகாகோ நண்பர் அப்பாதுரை அவர்களின் "கலர்சட்டை" நாத்திகத்திளிருந்து)



          மனித ரத்தம் ஒரே நிறம் தான். ஆனால் அந்த ரத்தத்தினால் இயங்கும் உடலும் மனமும் வெவ்வேறாக இருக்கின்றன. 'படைக்கும் கடவுள்' பிரம்மனுக்குத் தெரியுமோ என்னவோ, நமக்கு நம்மைப் பற்றி நிறையத் தெரியத் தொடங்கியிருக்கிறது.

டிஎன்ஏ ஆய்வினால் இன்றைக்கு நம்மைப் பற்றி, நம் வரலாற்றைப் பற்றி, நம் இயக்கங்களின் மூலாதாரம் பற்றிப் புதிதாக அறிந்துகொண்டே இருக்கிறோம். 

வெள்ளைக்காரன் உடலில் இயங்கும் அதே கொலஸ்டிரால் மருந்து கறுப்பனின் உடலில் சிறப்பாக இயங்காது என்கிற அளவுக்கு இன்றைக்கு நமக்கு விவரங்கள் தெரிந்திருக்கின்றன.

தென்கிழக்காசியக் குடிமக்களுக்கும் பண்டை ஆப்பிரிக்கருக்கரும் இடையில் பொது மரபணுக்கள் இருப்பதாக அறிகிறோம். 

சீனர் மற்றும் இந்தியரின் செவிமெழுகை விட, ஆப்பிரிக்க ஐரோப்பியரின் செவிமெழுகு கடும்வாடை அடிப்பதாக அறிகிறோம். 

ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் 'B' இரத்தப்பிரிவினர் அதிகம், Rh- பிரிவினர் மிக மிகக் குறைவு என்றெல்லாம் அறிகிறோம்.

பெண்களை விட ஆண்களுக்கு அக்குளிலும் பால்குறிப் பகுதியிலும் அதிகமாக வியர்க்கும் என்றும், ஆசியரை விட ஆப்பிரிக்கருக்கு வியர்வை சுரப்பிகள் அளவில் பெரியன என்றும் அறிகிறோம். 

'slc245a5' எனும் அணுவின் மிகச்சிறிய மாற்றுருக்களே நம் தோலின் பல நிறங்களுக்குக் காரணமாகிறது1 என்று அறிகிறோம். 

ஆண்டவர் தன்னுடைய பிம்பத்தை எடுத்து அதிலிருந்து அனைவரையும் படைத்தார் என்கிறது பைபில். போகட்டும். இத்தனை மாறுபாடுகளும் ஒரே பிம்பத்தால் வருகிறது என்று நம்புவோர், அதற்கும் ஒரு காரணம் வைத்திருப்பார்கள்.

கோவில் மரத்தைச் சுற்றியும் மண்டபத்தைச் சுற்றியும் அதன் பலனாய்ப் பிள்ளைகள் பிறப்பார்கள் என்று ஒரு புறம் நம்பிக்கையாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கட்டும். 'படைக்கும் கடவுள்' பல பார்முலாக்கள் வைத்திருக்கக் கூடும். தோன்றும் விதத்தில் பார்முலாக்களைக் கலந்து கட்டியிருக்கலாம். நாமென்ன கண்டோம்? பிள்ளை வேண்டி மரம் சுற்றும் பக்தகோடிகள், அக்குளில் வியர்வை வராத நல்ல பார்முலாவாகப் பார்த்துக் கலக்கப் பரமனிடம் வேண்டிச் சுற்றட்டும். 'அம்மா கர்ப்பரட்சே.. வெங்கட்டாம்பேட்டை வேணுகோபால ஸ்வாமி... தூய மேரி.. ஒப்பற்ற ரட்சகி வேளாங்கண்ணித்தாயே.. புனித பாத்திமா.. பிஸ்மில்லாஹ் அர் ரஹ்மான் அர் ரஹிம்... எல்லாருமாகச் சேர்ந்து slc245a5 அணுவின் சரியான மாற்றத்தைக் கலந்து சிவப்பு நிற ஆண் குழந்தை ஒன்றை எங்களுக்கு அருளவும்' என்று வேண்டிக் கொள்ளட்டும். ஆண் குழந்தை என்றதன் காரணம், பெரும்பாலான ஆத்திகர்களுக்குப் பெண் குழந்தை பிடிப்பதில்லை - சிவப்பு நிறத்தொரு பெண்ணாக இருப்பினும். கடவுள் கலவையை ஆத்திகம் நாடுவது... அதுவும் சந்தேகமே. 

பிறமதக் கடவுளைப் பொருத்தமட்டில் எல்லா ஆத்திகர்களும் நாத்திகர்களே !!!















































காரணம், பிற மதக் கடவுள்களைப் பொறுத்தமட்டில் அனைத்து ஆத்திகரும் நாத்திகரே.

Friday, August 16, 2013

கலர் சட்டை நாத்திகம் .......!!!

(அப்பாதுரை அவர்களின் இடுகை-மீள்பதிவு ) 

          தமிழில் நாத்திகம் பற்றி எழுதப்பட்டிருந்தாலும், நான் தேடியவரை, செருப்படிச் சிந்தனைகளே அதிகம் தென்படுகின்றன. 

செருப்படிச் சிந்தனை? உங்களுக்குத் தெரிந்திருக்கும் எனினும், அடையாளம் காட்டுகிறேன். கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி, கடவுள் சிலையை உடை, பார்ப்பனப் பீடைகள் போன்ற இனவெறி மற்றும் கலவரம் தூண்டும் கருஞ்சட்டைச் சிந்தனைகள். இவற்றை கொள்கை அடிப்படையாக வைத்துக் கழகங்கள் ஆட்சியைப் பிடித்து ஐம்பது வருடங்கள் போலாகின்றன. ஐம்பதாண்டுகளில் புதிய கோவில்கள் ஆயிரக்கணக்கில் வந்திருக்கின்றன. புதிய கடவுள்களும் வந்திருக்கின்றன. கண்மூடித்தனம் கூடியிருக்கிறது. நாத்திகம் இக்கழகங்களின் வாக்கு வங்கிக்கான வழியானது தவிர வேறு பயனில்லை.

போகட்டும், இது அரசியல் பற்றியத் தளமல்ல. 

படிப்புக்கும் அறிவுக்கும் தொடர்பில்லை என்பதற்கானத் தலையாய உதாரணம் - கடவுள் நம்பிக்கை. 'கடவுள் எதிர்ப்பே பகுத்தறிவு' என்றப் பொய்யானப் பிரசாரத்தைத் தழுவியதால் பகுத்தறிவின் பயனே காணாமல் போய்விட்டது என்று நினைக்கிறேன். இதுவும் கருஞ்சட்டை வாதத்தின் பலன். ஒரு முற்போக்குப் பெரியவர் வகுத்தப் பெருஞ்சாத்தியப் பாதை, வெறுப்பிலும் பகையிலும் முட்டாள் நாத்திகத்திலும் முடக்கப்பட்டிருப்பது வருந்த வைக்கிறது. கருஞ்சட்டை வாதம் சிலரின் வயிற்றுப் பிழைப்பானதே தவிர வேறு பயனில்லை. 

போகட்டும், இது கருஞ்சட்டை பற்றியத் தளமுமல்ல. 

நான் அரசுப் பதவியை நாடவில்லை. நாத்திகம் எனக்கு வயிற்றுப் பிழைப்பல்ல. நான் ஒரு சாதாரணன். கலர் சட்டை அணிபவன். நூற்றுக்குச் சற்றே மேற்கிலான ஐக்யூ கொண்ட, சராசரிப் பகுதி நேரச் சிற்றறிவாளன். அறிவில் ஞானியல்ல, சோனி. எனினும் எத்தனையோ பேர் எழுதியதைப் படிக்கும் வாய்ப்பும், சில உண்மையான ஞானிகளுடன் பழகும் வாய்ப்பும் பெற்றவன். நினைவறிந்த நாள் முதல், சந்தேகங்கள் இருந்தாலும் என் மேல் திணிக்கப்பட்டச் சடங்கு தோய்ந்த நம்பிக்கைகளைக் கேள்வி கேளாமல் ஏற்று, பல நேரம் இணங்கியிருக்கிறேன். கடவுள் நம்பிக்கை ஒரு கேள்விக்குறியாக, தேவைக்கேற்ப வந்து போகும் வழக்கமாக இருந்தாலும், என் மனமறிந்து கடந்த பத்து ஆண்டுகள் போலவே நாத்திகம் பழகி வருகிறேன். கடவுள்/மத நம்பிக்கை, பல வகைச் சமூகக் கேடுகளின் வேர் என்று இப்பொழுதுத் தீர்மானமாக நம்புகிறேன். 

கடவுள் நம்பிக்கை, காலப்போக்கில் தானாகவே அழிந்துவிடும் என்றும் நம்புகிறேன். எனினும், அப்போக்கிற்கு என்னால் இயன்ற ஒரு சிறு அவசரத்தைப் புகுத்த விரும்புகிறேன். அறிவார்ந்தச் சிந்தனைகள் நாத்திகத்திலும் உண்டு என்பதை முன்னிறுத்த விரும்புகிறேன். அசல் நாத்திகத்தில் செருப்படி கிடையாது, பார்ப்பனர் என்றக் கூக்குரல் கிடையாது, க்ருஷ்ணன்-அல்லா-யேசு எல்லாரும் ஒருவரே என்ற வசதிக்கேற்ற உதவாக்கரை வாதங்கள் கிடையாது.. என்று அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். 'சிலையென்றால் சிலை, தெய்வம் என்றால் தெய்வம்' போன்ற சினிமாத்தனம் நாத்திகத்தில் கிடையாது என்று சொல்ல விரும்புகிறேன். 'இதுவும் கடவுள் அதுவும் கடவுள்' என்று இருப்பதையெல்லாம் கடவுள் எனும் குறிக்கோளற்ற ஆத்திகம் பற்றிச் சொல்ல விரும்புகிறேன். ஆத்திகம் பழகுவது சமூகத்துக்கு ஆபத்து என்று ஆதாரத்தோடுச் சொல்ல விரும்புகிறேன். நாத்திகம் பழகுவதால் நரகம் கிடைக்காது என்று நாலு பேருக்குச் சொல்ல விரும்புகிறேன். இது அதற்கானக் தளம். 

நான் நாத்திகன் என்பதில் எனக்கு ஒரு அச்சம் உருவாகியிருக்கிறது. நான் பழகும் சமூகத் தட்டுகளில் விவரிக்க முடியாத ஒரு ஒதுக்கலை என் பால் உணரத் தொடங்கியிருக்கிறேன். எனினும், விவரிக்க முடிகிற ஒரு விடுதலை உணர்வையும் அறிகிறேன். என் பிள்ளைகளிடமும் பிறரிடமும் இதுகாறும் சொல்லி வந்த பொய்களையும் கதைகளையும் சாக்குகளையும் இனிச் சொல்ல வேண்டியதில்லை என்ற விடுதலை. என்னையும் மனிதத்தையும் தவிர எதையுமே நம்பவேண்டியதில்லை என்ற விடுதலை. இல்லாத ஒன்றை நம்பிப் பாவ புண்ணியக் கணக்குகளையும், பிறவிக் கணக்குகளையும் கண்டு பயப்படும் பேதமை நீங்கிய விடுதலை. இது என் விடுதலைத் தேடல்களையும், விடுதலைப் போராட்டங்களையும் கொண்டாட்டங்களயும் பகிர்ந்து கொள்ள ஒரு தளம். 

நாத்திகம் பற்றி எழுதத் தொடங்கி, நிறுத்தி, மீண்டும் தொடங்கியிருக்கிறேன். நிறையச் சொல்ல விரும்புகிறேன். ஒரு புத்தகத்துக்கானக் குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறேன். எனினும், மறுதுவக்கம் என்ற என் முனைப்பிலே சோர்வின் படிமம் சேர்ந்திருப்பதையும் உணர முடிகிறது. சீரியச் சிந்தனையாளர் நண்பர் ரமணி தன் படைப்பு ஒன்றில் சொன்னது:

இரண்டு பத்திகள் எழுதியதுமே 'இது குறித்து ஆயிரம் பேர் எழுதிவிட்டார்கள்' என யதார்த்தம் லேசாய் முனங்க, 'இதை விட சிறப்பாக எனச்சொல்' என வெறுப்பேற்றுகிறது தர்க்கம்.

நாத்திகம் பற்றி நீண்டப் பதிவெழுத நினைக்கும் என் உணர்வுகளின் பிம்பம், ரமணியின் வரிகள். 'யதார்த்தமும் தர்க்கமும் படைப்புக் கர்ப்பிணியின் அரக்கத் தாதிகள்' எனும் ரமணியின் மற்றொருக் கருத்தைக் கடன் வாங்கி, என் நிலை காட்டும் கண்ணாடியாக உங்கள் முன்வைக்கிறேன்.

எனினும், 'விடப்போவதில்லை' என்றத் தீர்மானத்தின் விளைவு, இந்த முயற்சி. தனிச் சிந்தனைக்கானத் தனி வலைப்பூ. இதில் கதையுண்டு, கட்டுரையுண்டு, கவிதையுண்டு, மேற்கோளுண்டு, மொழி கடந்த சிந்தனைகளுண்டு - இவை அனைத்தையும் கட்டும் மெல்லிய கயிறு, நாத்திக இரும்பில் நெய்தது.

படிப்பவர் மனங்களில் ஆத்திகம் பற்றிய ஒரு மிகச் சிறியச் சந்தேக அலையைக் கிளப்பினாலும் அது எனக்கு மிகப்பெரிய வெற்றி. எனினும், என் எழுத்தின் நோக்கமல்ல. 'நாத்திகம் பற்றிய வெட்கம் தேவையில்லை', 'நாத்திகச் சிந்தனை இளவயதிலேயே வளர்க்கப் படவேண்டிய ஒன்று' என்ற அளவில் ஒரு தெளிவை உருவாக்குவதே என் எழுத்தின் நோக்கம். 

அரக்கத் தாதிகள் என்னை அண்டவிடுவதில்லை என்று இப்போதைக்குத் தீர்மானித்திருக்கிறேன் :) 

உடன் சிந்திக்க அழைக்கிறேன்.

Wednesday, August 14, 2013

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளித்தந்தையின் பாடுகள் ......!!!



ஆத்திகர்களால் எல்லாவற்றையும் கடவுளின் செயலாகச் சொல்லித் தங்கள் அறியாமையைச் சுலபமாக மறைத்துவிட முடிகிறது. தெருவில் தடுக்கி விழுந்தால் "இன்னைக்கு அப்படி விழணுமுன்னு எழுதியிருக்குது" என்றோ, "காலையில பிள்ளையாரைக் கும்பிட்டுப் போன்னு சொன்னப்ப கேக்காம ஓடினே இல்லே.. அதான் தடங்கல் வந்து தடுக்கி விட்டுருச்சு" என்றோ கூசாமல் வருந்தாமல் கண்ணையும் அறிவையும் கட்டி விட முடிகிறது. 

நாத்திகம் சார்ந்த வளர்ப்பு அப்படியல்ல. தொடர்ந்து வலியுறுத்த வேண்டியிருக்கிறது. இயற்கையின் விளைவுகளாகட்டும், மனிதர்களின் செயல்களாகட்டும்.. எல்லாவற்றுக்கும் ஒரு அறிவுசார்ந்த விளக்கம் சொல்லி பிள்ளைகளின் மனதைச் சீராக்க உதவி செய்ய வேண்டியிருக்கிறது.
"சூரியனை உண்டாக்கியது ஜீசஸ் தானே டேடி?" என்றான் மகன்.
"இல்லை" என்றேன்.
"அப்ப இந்துக் கடவுள் உருவாக்கிச்சா?"
"இல்லை"
"மொகாமெட்?"
"சூரியனை யாரும் உருவாக்கவில்லை"
"டேடி.. உனக்கு எதுவும் தெரியலை. ஸ்கூல்ல நீ 'F' தான் வாங்கியிருப்பே"
"சரி. சூரியனைப் பத்தி என்ன சொன்னாங்க டீச்சர்?"
"உலகத்துல எதுவும் நடக்கணும்னா சூரியனோட சக்தி வேணும்னு சொன்னாங்க"
"சூரியன்ல என்ன இருக்கு தெரியுமா?"
"முழுக்க முழுக்க நெருப்பு. சரியா?"
"ம்ம். சூரியன்ல இருப்பது முழுக்க முழுக்க gas"
விழுந்து விழுந்துச் சிரித்தான். "குசுவா?"
"அதுவும் வாயுதான். சூரியன்ல இருப்பது ஹைட்ரஜன்.."
"அப்படின்னா?"
"ஒரு gas. இப்போதைக்கு அது போதும். இங்கே வா".
கணினியில் ஒரு படத்தை வரையத் தொடங்கினேன். மகன் இன்னும் விசித்திரமான ஓசைகளுடன் சிரித்துக் கொண்டிருந்தான். மேசை விளக்கை ஒரு நிமிடத்துக்கு மேல் எரியவிட்டு அணைத்தேன். அவனை அழைத்து பல்பைச் சுட்டினேன்.
"இந்தா, இதைத் தொடு"
"என்னை என்னா லூசுனு நினைச்சியா? அது சுடும். நீயே தொடு"

ஜூரத்துக்கு உபயோகிக்கும் டெம்பரசர் பட்டி ஒன்றைப் பிரித்து பல்பில் ஒட்டினேன். விர்ரென்று நூற்றுப்பத்து பேரந்ஹைட்டைத் தொட்டுச் சுர்ரென்று இளகிச் செத்தது பட்டி. 
"இதோ பார், நூத்துப்பத்து டிகிரி. சூரியனைத் தொட்டா இது போல நூறு மடங்கு சுடும். சூரியன்ல இருக்குற gas எரியும் போது சக்தி கிடைக்குது, அதுவே ஒளியாவும் சூடாவும் பூமிக்கு வருது"
"அப்ப சூரியனை யாரும் உண்டாக்கினா அவங்க கையெல்லாம் சுட்டிருக்குமே?"
"ஒருவேளை ultra mega super cool gloves போட்டுக்கிட்டு உண்டாக்கினாங்களோ என்னவோ? இந்தப் படத்தைப் பாரு. அண்டத்துல புழுதியும் வாயுவும் வேகமா கலந்து சுத்துறப்போ அது நட்சத்திரமா மாறிடும். நட்சத்திரம் எரியத் தொடங்குறப்போ சக்தியை வெளிவிடும். பிலியன் வருஷக்கணக்கா எரியும். சூரியனும் இதுபோல உருவான ஒரு நட்சத்திரம். எத்தனையோ பிலியன் வருஷம் எரிஞ்சு எல்லா வாயுவும் அடங்கிடும். அப்போ இந்த சூரியன் நமக்கு ஒளி தராது"
"அப்ப உலகம் அழிஞ்சிடுமா? நாமெல்லாம் செத்துருவோமா?"
"கடலுக்கடியில ரொம்ப ஆழத்துல இருக்குற சில புழுக்களும் கிருமிகளும் தவிர மிச்ச எல்லாம் செத்துரும்"
"புழு பூச்சி உயிரோட இருக்குமா? அப்ப கடவுள் நம்மை சாகடிச்சுடுவாரா? this is not fair. grandma said god loves us" என்றான்.
"இந்தச் சூரியன் அழிய இன்னும் அஞ்சு பிலியன் வருசமாவது ஆகும். இதோ பார். நடுவுல இருக்கோம். இன்னும் இவ்வளவு தூரம் எரிஞ்சு வரணும். அதனால கவலைப்படாதே"
"அப்ப அந்த டயத்துல எல்லா மனுசங்களும் செத்துடுவாங்களா? பூமிக்கு என்னாகும்? this is not fair"
"யாருக்குத் தெரியும்? சூரியன் அழியுறதுக்கு முன்னால நாம பூமியைத் தூக்கிக்கிட்டு வேறே ஏதாவது சூரியனைத் தேடிப் போகலாம்"
"இப்படி அழிக்கணும்னா எதுக்காக கடவுள் இதை உண்டாக்கணும்? makes no sense"
அவன் இன்னும் 'not fair'ல் இருந்தான். எனினும், 'கடவுள் இதைப் படைத்தார்' என்பதில் அர்த்தம் இல்லை என்று எண்ணியது சற்று நிறைவாக இருந்தது. இது ஒரு நல்ல துவக்கம் என்று தோன்றியது.

    ளமையிலேயே கற்பிக்க வேண்டும். ஒரு புறம் 'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி' சொல்லிக் கொடுப்பது போல இன்னொரு புறம் தெரிந்த உண்மைகளையும் சொல்லித் தர வேண்டும். "பூமியைக் கடலுக்குள் கொண்டு ஒளிப்பதா?. கடலே பூமிக்குள் தானே இருக்கிறது? பிறகு பன்றி வேஷமிட்டு பூமியைக் கடலடியிலிருந்து மீட்பதா? ஒரு படகில் உலகின் அத்தனை ஜீவராசிகளின் பிரதிநிதிகளை அடைத்து வெள்ளம் வடியும் வரை பார்த்திருப்பதா? வெள்ளத்தில் எல்லாமே அழிந்தது என்றால் திடீரென்று ஒரு பறவை மட்டும் எப்படி உயிரோடு வெளியே திரிந்தது?" போன்ற கேள்விகளுக்கு உண்மையான பதிலைச் சொல்ல வேண்டும். வீட்டிலும் வெளியிலும் எண்ணச் சுதந்திரம் வேண்டும். 'வளர்ந்த பிறகு தானே புரிந்து கொள்ளட்டும், இப்போதைக்கு என் பாட்டன் அப்பன் சொன்னது போல் கும்பிட்டுக் கிடக்கட்டும்' என்ற மனப்பாங்கு மாற வேண்டும். 

நமது கல்வித்திட்டம் ஆத்திகக் கல்வித்திட்டம். நாத்திகத்துக்கு இடமில்லை. அதுவும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் சுத்தமாக ஆத்திகச் சுண்ணாம்பு பூசப்பட்டிருக்கிறது. 

கொஞ்சம் பின்னோக்கிப் போனோமானால் நாத்திகம் இயல்பாகவே கல்வியாக வழங்கப்பட்டிருப்பதை அறியலாம். நான்காம் நூற்றாண்டு வாக்கில் 'சார்வகம்' எனப்படும் கடவுள்/மதம் விலக்கியத் தத்துவக்கல்வி நம் நாட்டில் இருந்தது. மெள்ள அழிந்துவிட்டதாகத் தெரிகிறது. அதற்கும் வெகு காலம் முன்னால் கடவுள், மதம், மற்றும் மூட நம்பிக்கைகளின் எதிர்வாதமாக நிறையச் சொல்லப்பட்டிருக்கிறது. வேதங்களையும் புராணங்களையும் பராமரிக்கும் அளவுக்கு இவற்றைப் பராமரிக்கவில்லை. 

நேர்மையானக் கல்வியை வழங்க வேண்டியது பெற்றோர், ஆசிரியர் மற்றும் அரசாங்கத்தின் கடமை. ஒருதலைக் கல்வியில் முழுமையான அறிவோ பக்குவமோ வளராது என்பது நமக்கே புரியவில்லை. அரசாங்கத்துக்கு எங்கே புரியப்போகிறது? இளமையிலேயே படித்தால்.. பிடித்தால்.. இன்னும் நூறு வருடங்களுக்குள் கடவுள் மதம் போன்ற குருட்டு நம்பிக்கைகள் தானாகவே அடங்கி ஒழிய வாய்ப்பு உண்டு. 

இதற்காகத் தனியாக ஏதும் செய்யத் தேவையில்லை. கடவுள் இருப்புச் சிந்தனைகளுக்கு வழங்கப்படும் அதே சலுகைகள் கடவுள் மறுப்புச் சிந்தனைகளுக்கு வழங்கினால் போதும். இதில் நான்கு பாடங்கள் என்றால் அதில் நான்கு பாடங்கள். "தெய்வம் நமக்குத் துணை பாப்பா" என்று சொல்லிக் கொடுத்தால் "கடவுள் இல்லையடி பாப்பா" என்றும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இதில் குழப்பம் உண்டாகும் வாய்ப்பு உண்டு என்றாலும் கண்மூடித்தனம் உண்டாக வாய்ப்பில்லை. குழப்பத்தை விடக் கண்மூடித்தனம் கொடியது. பிள்ளைகள் சிந்திக்கக் கூடியவர்கள். நல்ல ஆசிரியர்களின் துணையுடன் தங்கள் குழப்பத்தைத் தீர்த்துக் கொள்வார்கள். அவர்களைக் கண்மூடித்தனக் கிணற்றுக்குள் தள்ளிவிடுவது நாம் செய்யும் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

காவடி எடு, தேங்காய் உடை, மலைக்குப் போ என்பவை சாதாரணச் செய்திகளாகப் பாமரர்களைச் சென்றடைவது போல், 'கண்மூடித்தனத்தை விடு' என்பதும் சாதாரணச் செய்தியாகப் பாமரர்களைத் தொடும் வழியைத் தேட வேண்டும். 'கடவுளைக் கும்பிடு', 'மதத்தை மதி' என்பவற்றின் எளிமை, 'கடவுளைக் கும்பிடாதே' என்பதில் இல்லை. இங்கே தான் நாத்திகம் தடுக்கி விழுந்ததாகத் தோன்றுகிறது. நாத்திகத்தின் செய்தி, 'கடவுளைக் கும்பிடாதே' என்பதல்ல. இது நாத்திகச் செய்தியாக இருக்கும் வரை, சிந்தனை சார்ந்த நாத்திகம் வளர்வது கடினம். அப்படியெனில், நாத்திகத்தின் செய்தி என்ன? கடவுள் கிடையாது என்பதே. கடவுள் இல்லாமல் உலகம் இயங்கி வருகிறது, தொடர்ந்து இயங்கும் என்பதே. கடவுள் மத நம்பிக்கைகள் மனிதம் முழுமையடைவதைத் தடுக்கும் இடர்கள் என்பதே.

( அப்பாதுரை அவர்களின் " கலர்சட்டை  நாத்திகம் " என்ற வலைப்பதிவிலிருந்து )





Monday, August 12, 2013

அரவிந்தன் நீலகண்டனும் ,

" நீயா -நானாவும் ".................!!!


ஞாயிறு அன்று "நீயா- நானா " நிகழ்ச்சி வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது ! 
இறை நம்பிக்கை யுள்ள மக்கள் பிரார்த்தனை செய்வதும் ,அதுபற்றி பார்வையாளர்களின் எதிர் வினையும் அலசப்பட்டது ! ஆண்கள்  ஒருபக்கமும்,பெண்கள் ஒருபக்கமுமாக அமர்ந்து பேசினார் ! விவாதத்தை சிரத்தையில்லாமல் தான் கவனித்து வந்தேன் !

கோபிநாத் மிகவும் நாசுக்காகவும் நயமாகவும் மனம் புண்பட்டு விடாமலும்கொண்டுபோனார் ! 39 வயதுப்பெண் ஒருவர் தனக்கு திருமணம் ஆகாத  நிலையில் இறைவனை வேண்டி பிரார்த்தித்ததை மனம் உருக சொன்னார் ! அவர் விரும்பியபடியே  கணவன் அமைந்ததையும், குழந்தை  வேண்டி பிரார்த்திப்பதையும் குறிப்பிட்டார் !

இறைவனிடம் உங்கள் பிரார்த்தநை நடந்தேறினால் அவருக்கு என்ன தருகிறேன் என்று நீங்கள் கூறுகிறீர்கள் என்று "கோபி " கேட்ட போது எனக்கு சுவாரஸ்யம் பிடித்துக்கொண் டது ! ஒரு அம் மையார் முடியை காணிக்கையாக்கி கொடுத்தாக குறிப்பிட்டார் !

"உங்கள் வேண்டுதல் நிறைவேறாவிட்டால் ?" என்று கோபி கேட்ட போது கோபபட்டு கோவிலுக்கு போகமாட்டேன் என்றார் ஒருவர் ! கர்த்தர் நமக்குக் கொடுத்தது அவ்வள்வுதான் என்றர் ஒரு அம்மையார் !

"உங்கள் வேண்டுகோள் நிறைவேறிய  பிறகு அதற்காக வருத்தப்பட்டது உண்டா ? "என்று கொபிகேட்டார் !

ஒரு இளம் பெண் மனம் உருக " நான் வருத்தப்பட்டிருக்கிறேன் ! என்னுடைய சித்தி என்மீது உயிரையே வைத்திருக்கிறார் ! அவருக்கு குழந்தை  பிறந்தால் அவருடைய பிரியம் குறையுமோ என்று எனக்கு பயமாய் இருந்தது! அதனால் அவருக்கு குழந்தை  பிறக்காமல் இருக்க பிரார்த்தித்தேன் ! அவருக்கு குழந்தை இல்லை ! இப்போது அதற்காக வருத்தப்படுகிறேன்! இதை நான் இப்போதுதான் முதன் முறையாக வெளியே   சொல்கிறேன் ! என்சித்திக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று மனமுருக பிரார்த்திக்கிறேன் !" என்றார் அழுதுகொண்டே !

சிறப்பு விருந்தினர்களாக "கவிக்கோ "அப்துல் ரஹுமான் கிட்டத்தட்ட ஒரு மவுல்வியின் தோற்றத்தில் வந்திருந்தார் !கிறிஸ்துவ பெரியவர் ஒருவரும் வந்திருந்தார் !

மூன்றாவதாக அரவிந்தன் நீலகண்டன் அமர்ந்திருந்தார் !

நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன் !

கவிக்கோவும் , கிறிஸ்துவப் பெரியவரும் வழமையாக பேசினார்கள் ! புதிய செய்தி  எதுவும் இல்லை !

"அரவிந்தன் ! தங்கள் பிரார்த்தனையின் மூலம் நடந்ததாகக் கருதுகிறார்களே ? இது பற்றி என்ன நினக்கிறீர்கள் ? " என்று கோபி கெட்டார் !

அரவிந்தன் " கேமிராவை தீர்க்கமாக பார்த்தார் ! அவர் முகத்தில் உறுதி தெரிந்தது ! "அறிவியல் ரீதியாக நடந்த பரி சோதனையில் அது உறுதியாக வில்லை " என்று கூறினார் !
"அல்Pஃஅ மைண்ட் " கோட்பாட்டை சொன்னார்!

( இந்த அண்டம் விரிந்து கொண்டே இருக்கிறது ! அதன் எல்லை விரிந்து கொண்டு இருக்கிறது  ! விநடிக்கு லட்சக்கணக்கான் மைல் வேகத்தில் விரிந்து கொண்டிருக்கிறது ! இந்தக்கணம் பார்த்த அகண்டம் அடுத்த கணத்தில் இல்லை !பெரிதாகியுள்ளது ! இதனை  கட்டுப்படுத்துவது யார் ? எந்த  விதிக்கு உட்படுகிறது ? அறிவியல் இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறது ! இந்தநிலையை ஆத்திகன் கடவுள் செயல் என்கிறான் ! அறிவியல் நான் இன்னும் ஆய்வு செய்ய வேண்டும் என்கிறது ! ஆத்திகமும்,நாத்திகமும் இந்தப்புள்ளியில் திகைத்து விக்கித்து நிற்கிறது ! இதைத்தான் "ஆல்பா மைண்ட் " என்கிறார்கள் என்றால் )

"அறிவியல் ஆய்வு சேய் து கொண்டே  இருக்கும்! விடை தெரியும் வரை !

அரவிந்தன் அவர்களே!
மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது !
என்னிடம் இல்லை  என்பதும்  புரிகிறது !!!











Thursday, August 08, 2013

கீரை விலையும்,

காதல் வலையும்...!!!

ஒரு கிலோ கீரை 40 ரூ . ! ஒரு கிலோ கொத்தவரங்காய்  60 ரூ ! சன்ன அரிசியை விடுங்க ! சுமாரான அரிசி 50 ரூ !

அரிசின்னதும்  ஞாபகம் வருது ! அரிசியை வச்சுதான் கருணா நிதி அமைச்சரானார் ! 

ரூபாய்க்கு 3 படி ! அதாவது 5கிலோவுக்கு மேல வரும் ! போடறதாக சொன்னாங்க !

போடலைனா முச்சந்தில வச்சு சவுக்கால அடின்னாங்க  ! காங்கிரஸ் தொத்து போச்சு ! கருணாநிதி அமைச்சரானார் !

ரண்டுவருஷம் ஆச்சு ! காங்கிரஸ் காரன் ஆரம்பிச்சான் ! முச்சந்தில சவுக்க கட்டி     தொங்கவிட்டான் ! "சவுக்கு ரெடி ! எங்கே மூணு படி ! "  நு போர்டு எழுதிபோட்டான் ! 

"நானா சொன்னேன் !" அண்ணா " தான சொன்னார் !" நு சொல்லி கருணா நிதி அண்ணாவை முச்சந்தில நிறுத்தல !

அண்ணா அதுக்கு முன்னாலேயே இறந்து விட்டார் !

77ல பெற்றோல் ஒரு லிட்டரு 90 காசு ! அப்புறம் 1ரூ 10 காசு ! சன்னம் சன்னமா ஏறிச்சு ! இப்போ !..... பயம்ம்மா இருக்கு !

மதுரை ஆரப்பளையத்திலேருந்து  மகாலுக்கு பஸ் சார்ஜ் 6 பைசா ! அத டி .வி.எஸ் காரன்  9 பசாவா ஆக்கினான் ! கம்யுனிஸ்டு கட்சி மறியல் செய்தது !

இப்படி தீயா விலைவாசி ஏறிப்போச்சே ! பேப்பரை பாத்தம்னா அதவிட முக்கியமான பிரச்சினை சேரன் மக தாமினி காதல் தூள்   பறக்குது  ! 

உலகத்தையே புரட்டி போட வந்த சமூக வலைத்தளத்தை பாத்தோம்னா 
காதல் திருமணம் ,கலப்புத்திருமணம்  நு வியாசம் எழுதிக்கிட்டுருக்காங்க!

மே .வங்க இயக்குனர் மிருணால் சென் ! புனே திரைப்பட கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசினார் ! " நாம் சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் இந்தியனிடம் உன் எதிரி யார்  கேட்டால் பிரிட்டிஷ் ஏகாதி பத்தியம் என்பான் ! இன்று கேட்டால் மேல் சாதி இந்து தலித் என்கிறான் ! பிற்பட்டவன் பிராமணன் என்கிறான் ! நம் எல்லோருக்கும் எதிரி இந்த ஆளும் வர்க்கம் !நம் எதிரியை அடியாளம் தெரியாமல் ஆக்க நம்மை திசை திருப்புகிறார்கள் " என்றார் ! 


என்ன செய்யப் போகிறோம்  !!
  
சர்வேசா ! கருகத் திருவுளமோ !!!







 




Monday, August 05, 2013

சாதியை  ஒழிக்க ...........!!!




இந்திய சமூக விஞ்ஞான கழகத்தின் சார்ப்பில் மதுரையில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது ! காதல் திருமணங்கள் மூலம் சாதியை ஒழிக்கமுடியும் என்ற பொதுவான கருத்து அங்கு நிலவியது என்று நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டேன் !  

சாதி பற்றியும், காதல் பற்றியும் நம் பொதுப் புத்தியில் உருவாகியுள்ள தவறான கருத்தின் அடிப்படையில் இந்த நிலை  உருவாகியுள்ளதோ என்று 
அஞசுகிறேன் !

இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப் பட்டபோது "தீண்டாமை கொடியது அதன ஒழிக்க வேண்டும் " என்று மிகச்சரியாக முடிவு எடுத்தனர் ! அதே சமயம் தீண்டாமையின் ஆணிவேறான  சாதீய கட்டமைப்பை ஒழிக்க வேண்டும்  என்று முடிவெடுக்க வில்லை என்பது ஏதோ எதேச்சையாக நடந்தது என்று கூற  முடியுமா ?

சனாதனவாதிகளொடு ஏற்பட்ட சமரச ஏற்பாடாக இருக்க வாய்ப்பில்லையா!?

அண்ணல் அம்பேத்கரால் உருவாகாப்பட்ட சட்டத்தில்சாதி ஒழிப்பு ஏன் சேர்க்கப்படவில்லை ? அப்போது அம்பேத்கரின் நிலை என்னவாக இருந்தது ? அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதக் குறிப்புகளின் இண்டு இடுக்குகளில் மறந்து கொண்ட வரலாறாக ஆகிவிட்டது ! 

அப்படியானால் அரசியல் சட்டத்தைஉருவாக்கியவர்கள் ஏன் இந்த "கண்ணாமூச்சி " ஆட்டம் ஆடினார்கள் !

அவர்களுக்கு "தீண்டாமையை "  ஒழிக்கவும் மனமில்லை ! "சாதியை ஒழிக்கவும் மனமில்லை" என்று என்று கூறலாமா? உண்மை இங்கேதான் மறைந்து உறங்கிக்கொண்டிருக்கிறது !

அந்த கேரளத்து "புத்தி ராட்சசன் " இ.எம்.எஸ்  "அலகும் பிடியும் மாற்றி அமைக்க வேண்டும் " என்று அரசியல் சட்டம் பற்றி  குறிப்பிட்டானே! 

எவ்வளவு சத்தியமான வாக்கு !!!

இரண்டாவதாக காதலையும் சாதியையும் போட்டுகுழப்பிக்கொள்கிறார்கள் ! காதல் திருமணங்கள் மூலம் சாதியை ஒழக்க முடியும் என்று மனதார நம்புகிறார்கள் ! 

சாதி நிலைத்து நிற்க "அகமணமுறை "தான் என்று நினைப்பவர்கள் இவர்கள் !

மகன் இந்துவாகவும் மகள் கிறிஸ்துவாகவும் திருமண  உறவுகளைக் கொண்ட குடும்பங்களை தென் தமிழகத்தில் காணலாம் !  நாடார் கிறிஸ்டியன்,பிள்ளை,தலித் கிறிஸ்டியன் என்று இன்றும் வாழ்கிறார்களே! ஏன் ?

அண்ணன் சீக்கியப்பெண்ணயும்,தங்கை இந்துவையும் காதலித்து அல்ல arranged marriage நடந்த பஞசாபில் சாதி அழியவில்லையே ! 

கியானி ஜெயில் சிங் குக்கு ஒரு தண்டனை ! அவர் தங்க ஆசாரியாம் ! 
உள்துறை அமைச்சராக இருந்த   பூட்ட சிங்குக்கு  அவர் தலித் என்பதால் வேறு  தண்டனை கொடுத்ததே அகாலி சிரோன்மணி குரு பீடம் ! 

அக்பர் இந்து பெண்ணைத்தான் மணந்தார்! அரண்மனைக்குள் கிருஷ்ணன் கோவில்கட்டி கிருஷ்ண ஜெயந்தி  கொண்டாடினார் ! "தீன் இலாகி " என்றர் ! அடித்துக் கொண்டு சாகிறார்களே ! ஏன் ?

இந்தியாவில் அறுபது கோடி ஆணு-பெண்ணும் முப்பது கோடி குடும்பமாக வாழ்கிறார்களே! இவர்களில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் ஒருலட்சம் இருப்பார்களா ? இரண்டு லட்சம்,பத்துலட்சம் ஒருகோடி ..... !  மற்றவர்கள் தாய் தந்தையரால் நிச்சயிக்கப்பட்ட  திருமணம் செய்தவர்கள் தானே!

மேலை நாட்டில் ஒரு இளைஞனோ யுவதியோ தன வாழ்க்கையினைத்
   தீர்மானிக்க உரிமை பெற்றவர்கள் ! இதனையும் காதலிக்கும்    உரிமையையும் போட்டு குழப்பிக் கொள்கிறோம் !

அங்கு காதலித்து திருமணம்செய்து கொண்டவர்களை விட தாய் -தந்தையர் 
மூலம் நடக்கும்திருமணம் அதிகம் ! இதில் ஆண் பெண் விருப்பம்மட்டுமே முக்கியமானது!
  
தயவு செய்து காதல் திருமணத்தை நான் எதிர்ப்பவன் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம் !

சமூகத்தின் சில அடி ப்படைகளை  மாற்றுவதற்கு காதலால் முடியும் என்பது பிரச்சினையை மலினப்படுத்துவதாகும் ! 

சாதி ஒழிப்பு என்பதை மிகவும் கடினமான, தீவிரமான , போராட்டங்கள் மூலம் நடத்த வேண்டும் ! அடிப்படையான சட்ட திருத்தங்கள் மூலம் செய்ய வேண்டும் ! 





  


 









Thursday, August 01, 2013

தோழர் கே ,முத்தையா 

சில நினைவுகள் .....!!!

(தோழர்  என்.ராமகிருஷ்ணன் எழுதிய பிரசுரத்திலிருந்து )\\\



........................   சில சமயம் தோழர் முத்தையாவுடன் அரசியல் பிரச்சினைகளில் கடும் விவாதம் நடக்கும் ! பின்னர் அவரவர் வேலையில் இறங்கி விடுவோம் ! மாலையில் சுட்டுவிரலை அசைத்து அவருடைய அறைக்கு கூப்பிடுவார் !அங்கெ இரண்டு கோப்பைகளில் சூடான தேநீர் வைத்திருப்பார்! "குடியுங்கள்"  என்று சிரித்துக்கொண்டே கூறுவார் ! அத்துடன் காலை விவாதம் மறக்கப்பட்டு விடும்   ! தோழர்களை  கடுமையான சொற்களால் மனம் நோக வைத்துவிடக்கூடாது என்பது அவருடைய  கொள்கை !

"தீக்கதிர்" ஏட்டில் திரைப்பட செய்திகள் ,விமரிசனங்கள்,கலைஞர்கள் , மற்றும்கலை சம்மந்தமான செய்திகள் இடம்பெற வேண்டுமென்று கருதிய தோழர் ஆர்.சியாமளமும்  நானும் சேர்ந்து அவர் இல்லாத நாளில் ஒருபக்கம் முழுவதும் இத்தகைய செய்திகளைப் போட்டு  அதற்கு " வண்ணப்பூக்கள் " என்று தலைப்பிட்டு விட்டோம்! தோழர் முத்தையா என்ன சொல்வாரோ என்ற கவலையும் எங்களுக்கு இருந்தது! 

அடுத்த நாள்காலை சென்னையிலிருந்து  திரும்பிய  அவர்  "தீக்கதிர்" பத்திரிகையைப் படித்தார்.! ஒன்றும் கூறவில்லை  ! பேனாவை எடுத்து "பூக்கள்" என்பதை அடித்து "கதிர்" என்று எழுதினார் ! அதிலிருந்து அந்தப்பகுதி  "வண்ணக்கதிர்"  என்று வந்து கொண்டிருக்கிறது ! ............


வர்