Tuesday, February 24, 2015
Thursday, February 19, 2015
" 666 "
" 666 " ! இந்த எண் இந்துத்வா காரர்களுக்கு பிடிக்காததாகும் ! 1192ம் ஆண்டிலிருந்து `1858ம் ஆண்டுவரை சுமார் 666 வருடங்கள் டில்லியில் ஏதாவது ஒரு சுல்தான் ஆட்சி புரந்து வந்த காலம் அது !
இந்த காலத்தில் தான் சிவன் கோவிலை இடித்து "தாஜ்மகாலை " கட்டினார்கள் !
ராமர் பிறந்த இடத்தை கைப்பற்றி மசூதியைக் கட்டினார்கள் ! இவற்றை போன்று எண்ணற்ற அநியாயங்களுக்கு நியாயம் கிடைக்காதவரை அவர்களுக்கு நிம்மதி இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள் !
--------------------------------------------------------------------------------------------------------------------------
நான் ஆறாவது வகுப்பு படிக்கும் போது சரித்திரம்,பூகோளம் என்று இரண்டு வகுப்புகள் உண்டு ! பின்னர் தான் அதன சோசியல் ஸ்டடீஸ் என்று மாற்றினார்கள் ! மௌரிய சாம்ராஜ்யம்,குப்த சாம்ராஜ்யம், மொகலாய சாம்ராஜ்யம் என்று இந்திய வரை படம் பொட்டு காட்டுவார்கள் ! அசோகனின் காலத்தில் அது "மதுரை " வரை நீண்டிருந்தது என்று பச்சை நிறத்தில் அடைத்து காட்டி இருப்பர்கள் ! அசோகன் காலத்தில் புத்தமதம் தான் இந்தியாமுழுவதும் இருந்ததாம் ! இன்று இந்தியாவில் ஊறுகாயாக அந்தமதம் ஆகிவிட்டது ! அப்படி ஆக்கியவர்கள் யார் ?
--------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்க் கடவுள் முருகன் ! அவனுடைய "அறுபடை வீடுகளில் " ஒன்று திருப்பரம் குன்றம் ! அது ஒரு குடவரைக் கோவில் ! சமணர்களுடையது !கழுகுமலையில் வெட்டியான் கோவில் உள்ளது ! முழுமலையை அறுத்து கொவில்கட்டியுள்ளார்கள் !சமணர்கள் கட்டியது ! மதச்சண்டை காரணமாக பாதியில் நின்றுவிட்டது ! அதற்கு மேல் சிவன் கோவில் கட்டி வழிபாடு நடக்கிறது !
-------------------------------------------------------------------------------------------------------------------------
அணிசேரா நாடுகளின் மாநாடு "பாண்டுங் " நகரில் நடந்தது ! சீனப் பிரதமர் சூ-என்-லாய் முதன் முறையாக கலந்துகொள்கிறார் ! அவரை மற்ற நாட்டு தலைவர்களுக்கு அறிமுகப்படுத்த நேருவை அழைக்கிறார்கள் ! பின்னர் நேருவும் சூ அவர்களும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் ! " உங்கள் நாட்டில் நாகார்ஜுனபுரி என்ற ஊர் உள்ளது ! அதில் உள்ள மலையில் புத்தபிரானின் கோவில் உள்ளது அதனை நான் பார்க்க முடியுமா ? " என்று கேட்டுள்ளார் !
இந்தியா வந்த நேரு இது பற்றி விசாரிக்கையில் தொல்பொருள் இலாகா தேட ஆரம்பித்தது ! " நாககர்ஜுன புரி என்பது தான் நாகர்கோவில் என்றும் அந்த மாவட்டத்தின் நடுவில் இருக்கும் மலைபகுதியில் புத்தர் கோவில் இருப்பதையும் கண்டு பிடித்தார்கள் ! தற்போது அது அரசு பாதுகாப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது !
முருகன் என்றால் திருப்புகழ் தான் நினைவுத்தட்டும் ! திருப்புகழ் பாடிய "அருணகிரி நாதர் " ஒரிஜினல் சைவரா ?
சமயக் குறவர்களில் சமணராக இருந்து அடிபட்டு மிதிபட்டு சைவராக மாறியவர்கள் உண்டா ?
--------------------------------------------------------------------------------------------------------------------------
இதனை ஏன் குறிப்பிட்டேன் !
தெரியவில்லை !
அண்ணன் மோடி காலத்திலாவது மத மாச்சரியங்கள் இல்லாமல் வாழலாமே என்ற ஆதங்கம்தான் !!!
Wednesday, February 11, 2015
இது ஒரு பழைய இடுகை ! தற்போது மீள் பதிவிடுகிறேன் !
HOME
ABOUT
POSTS RSS
CONTACT
LOG IN
Wednesday, July 06, 2011
வர்ணாஸ்ரம அதர்மம் .
வர்ணாஸ்ரம அதர்மம் ......
நண்பர் ஒருவரின் இடுகையில் பின்னூட்டமிடும் பதிவர் வர்ணாஸ்ரம தர்மம் என்பதுதர்மமா? அதர்மமா? என்று கேட்டிருந்தார்.
வர்ணாஸ்ரம தர்மம் என்பதே misnomer என்பது என கருத்து. பிறப்பை அடிப்படையாகக் கொண்டு ஒரு மனிதன் கண்டுகொள்ளப்பட விதி இருக்குமனால் அந்த விதி அதர்மமானது.வெள்ளையர்கள் கருப்பின மக்களை கொடுமைப்படுத்தியது நியாயப்படுத்தப்பட்டது சரி என்றாகிவிடும்.இந்தியர்களை brown dog என்றது நியாயமாகி விடும்.காந்தி அடிகள் தென் ஆப்பிரிக்காவில் நடத்திய யுத்தம் தர்ம யுத்தமாக இருந்திருக்காது.
வர்ணாஸ்ரமத்தின் மிக அசிங்கமான அம்சம்" தீண்டாமை."அது இந்துமததிற்கு மட்டும்சொந்தமானதில்லை.யூதமதத்திலிலுமிருந்தது. யூதமதம் உச்சத்தில் இருந்த காலமிருந்தது. கிரேக்கர்கள்,மத்திய தரைக்கடல் பகுதியில் வாழும் மக்களை மனிதர்களாகவே கருதியதில்லை.அவர்களை சுமெரியர்கள் என்று அழைப்பார்கள். சுமெரியர்கள் தீண்டத்தகாதவர்கள். பொது இடங்களுக்கு அவர்கள் வரக்கூடாது. அவர்கள்கைபட்ட நீரைக்கூட அருந்தக் கூடாது.ஏன்? எசுபிரான் கூட இதனை அனுசரித்து வர வேண்டியதாயிற்று. "தீண்டாமையை" ஒழிக்க அவருக்கு உணர்த்தியது ஒரு சுமெரியப் பெண்.
.பலைவனத்தில் ஏசு சீடர்களொடு சென்றுகொண்டிருந்தார்.பிணியால் பாதிக்கப்பட்ட ஏழைஎளிய மக்களுக்கு மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்துவார். ஒருசமயம் அவர் சுமெரியர்களின் குடியிருப்பு வழியாகச்சென்று கொண்டிருந்தார். அந்தக்குடியிருப்பில் ஒருகுடிசையிலிருந்த சிறுமிக்கு உடல் நலமில்லை. அவளுடைய தாயார் தன் குழந்தையின் மேலுள்ள பாசத்தால் ஏசுவிடம் வந்தாள் அவளுக்குத்தெரியும் ." தான் தீண்டத்தகாதவள் தண்டிக்கப்படலாம்.தன்மகள் குணமடையவேண்டும் அதற்காக எந்ததண்டனையையும் தாங்க தயாரனாள்." ஏசு புரிந்து கொண்டார். சீடர்கள் பயந்தனர். மருந்து கோடுத்து அந்த சிறுமியை குணப்படுதினார். மனிதப்பிறவியில் தீண்டத்தகாதவர்கள் என்று எவருமில்லை"என்று அறிவித்தார். யூதர்களுக்கு ஏசுவின் மீதான கோபம் அதிகமாகியது.
தாழ்த்தப்பட்டவர்கள் கிறிஸ்தவ மதத்தை இந்தியாவில் நாடினர்கள் தென் மாவட்டங்களில் இன்றும் P.C,N.C, கொடுபோட்டு சர்ச்சுகளில் இட்ம் ஒதுக்குவது நின்றபாடில்லை .
தீண்டாமையை ஒழிப்பதற்காக தமிழகத்தில் ஒரு இயக்கம்நடந்து வருகிறது. தீண்டமைச்சுவர் உண்டாகி அதனை இடிக்க ஒரு போராட்டம். கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து போராடிய சட்டமன்ற உறுப்பினரை அடித்துஅடி வயிற்றில் மிதித்ததில் அவருடைய கர்பப்பை சிதைந்து ஆறுமாதம் மருத்துவ மனையில் இருந்த்தார்.
இன்றும் தீண்டாமை தொடர்கிறது. என் தந்தை காலத்திலும் இருந்தது.என் பாட்டனார் காலத்திலும் இருந்தது. பிரிடிஷ் ஆண்டபொதும் இருந்தது.நாயக்கர் காலத்தில்,சேர சோழபாண்டியர் காலத்தில், இருந்தது.அக்பர் காலத்தில், அசொகன் காலத்தில், புத்தன் காலத்தில்,அலக்சாண்டர் காலத்தில் இருந்தது. ஒவ்வொரு ஆட்சியிலும் மாறும் மாறும் என்று நமபி ஏமாந்தோமே!
அதனால் தான்பாரதி பாடினான். விடுதலை பற்றி பாடினான். விடுதலை யாருக்கு.? பிராமணணுக்கா? பிள்ளைக்கா ? முதலிக்கா ? இல்லை! இல்லை!
விடுதலை! விடுதலை! விடுதலை! என்றான். யருக்கு?
பறையருக்கும் விடுதலை என்றான் .
புலையருக்கும் விடுதலை என்றான்.
பறையரரோடு சேர்ந்து மறவருக்கும்விடுதலை என்றான்.
மறவர்கள் பறையரோடு சேர்ந்தால் தான் விடுதலை .
விடுதலைக்காக தவிக்கும் மக்களுக்கு என்ன சொல்லப்போகிறோம் !
Saturday, February 07, 2015
வெள்ளை துரையும்,
ஜி.வி. அய்யரும் ......!!!
1983 அல்லது 84 ஆக இருக்கலாம் ! கோவில்பட்டியில் த.மு.எ.ச சார்பில் திரைப்படம் பற்றி பேச அழைத்திருந்தார்கள் !
கூட்டத்தில் பெரியவர் கி.ரா அமர்ந்திருந்தார் ! கைகால் உதரலெடுத்து விட்டது !
கூட்டத்திற்கு தலைமை வகித்தது வெள்ளை துரை ! ஒடிசலான உருவம் ! மிகவும் சிறு வயது ! ஜி.வி.அய்யரின் "ஆதி சங்கரா " திரைப்பட ம் எடுக்கும் பொது அவருக்கு உதவியாளராக இருந்தவர் என்று கூறி னார்கள் !இவர்கள் முன்னால் நான் சினிமா பற்றி பேச வேண்டும் ! நினைப்பே பயமுறுத்தியது !
"ஆதி சங்கரா " சம்ஸ்கிருத மொழியில் எடுக்கப்பட்ட படம் ! பல விருதுகளை பெற்றபடம் ! இந்தியாவின் திரை உலக ஆளுமைகள் பலர் பங்கு பெற்ற படம் ! சர்வதாமன் பானர்ஜி சங்கராசாரியாக வாழ்ந்திருந்த படம் 1 மது அம்பட் காமிரா ! மது எப்பொதுமே படம் எடுக்க மாட்டார் ! ராஜா ரவிவர்மாவின் வண்ண ஓவியங்களைப் பார்த்திருபீர்கள் இல்லையா! அது போல ஒவ்வொரு "ப்ஃரெமையும் " வரைந்திருப்பார் !குறிப்பாக உஜ்ஜைனி. இமய மலைச்சாரல் ,சுடுகாட்டு காட்சிகள் இன்றும் மனதில் ஆடுகின்றான் !
இந்த படத்திற்கு இசை அமைத்தவர் dr . பாலமுரளி கிருஷ்ணா ! பின்னணி இசை b .v. கராந்த் ! கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி ! (நாடக பயிற்சி பள்ளியில் குறும் பயிற்சி பெற்றபோது என்னோடு பயிற்சிபெற்றவர் !) சமஸ்கிருதத்தில் வசனம் கோவிந்தாசார்யா ! இதன் சம்ஸ்கிருத வடிவத்தை மேற்பார்வை இட்டவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த t .m .p . மகாதேவன் !
மிகச்சிறந்த திரைக்கதை ,மிகச்சிறந்த படப்பிடிப்பு , என்று பல விருதுகளை பெற்ற படம் !
தேசீய திரைப்பட வளர்ச்சிக் கழக்த்தின் நிதி உதவியோடு படம் தயாரானது ! மிகக்குறைந்த வசதிகள் ! கடும் குளிரில் இமயமலைச் சாரலில் படப்பிடிப்பு ! காலில் "பூட்ஸ் " போடக்கூட வழியில்லாதநிலை !
வெள்ளைத்துரை இந்தபடப்பிடிப்பில் தான் ஜி.வி ஐயரோடு பணியாற்றியுள்ளார் !
அவரைப் பார்த்து பிரமிப்பும்,மரியாதை கலந்த பயமும் இருந்தது !
இரவு கூட்டம் முடிந்து கோவில்பட்டி பேரு ந்து நிலையத்தில் தமிழ்செல்வன் பஸ் ஏற்றி விடும்வர பயம் நீங்கவில்லை !
வெள்ளைத்துரை பத்திரிகை துறைக்கு சென்று விட்டாராம் !
திரைத்துறைக்கு நட்டம் தான் !!!
Thursday, February 05, 2015
தோழர் சீத்தாராமனும் ,
நானும்........!!!
1975 ம் ஆண்டு வாக்கில் தொழார் சீத்தாராமனை சந்தித்தேன் ! மேற்கு வங்கத்தில் வாழ்ந்து வரும் தமிழர்! மார்க்சீய சிந்தனையாளர் ! மே.வங்கத்தில் தணிக்கை அதிகாரியாக அவருடைய உறவினர் பணியாற்றிவந்தார் !
தீக்கதிர் அலுவலகத்தில் தங்கினார் !அவரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றேன் ! நாங்கள் கோவில் வாசலை அடையும் பொது காலை 7 மணி இருக்கும் ! "நடையானை " கொண்டு பொய் வைக்க சென்றேன் ! தோழர் அதுவரை கோவில்வாசலிலேயெ நின்றார் !
"வாருங்கள் " என்று கூறி கோவிலுக்குள் போக முயன்றேன் !
"இருங்கள் தோழர்" கோவில் வாசலில் நின்று கும்பிட்டு விட்டு போகிறவர்களை பார்த்துக்கொண்டு நின்றார் !
காய்கறி மார்க்கெட்டிலிருந்து கூடை நிறைய காய்கறியோடு ஒரு அம்மையார் கோவிலுக்கு நேர் நின்றார் ! "ஆத்தா! இன்னிக்கு படி அளந்துடு தாயே !" என்று வணங்கி விட்டு நடையான மாட்டிக் கொண்டு சென்றார் ! "நீ தான ஆத்தா ! வெயில கூடைய தூக்கிட்டு விக்க போற ! மினாட்சியா அலையப் பொறா !" என்று நக்கலா சொன்னேன் ! அந்த அம்மா திரும்பவில்ல ! 20-25 கிலோ காய்கறி கூடைகனம் ! " எம்பொழப்பு ! அப்படி ! நல்ல இரு " என்று சொல்லிக்கொண்டே சென்றார் !
தொழார் சித்தாராமன் கிளம்பினார் ! நாங்கள் கொடிமரம் பக்கமாக நடந்தோம் ! பலிபீடத்தின் அருகில் தரையில் விழுந்து நமஸ்கரிப்பார்கள்
வயதான அம்மையார் தன மகளொடு விழுந்து வணங்கினார் ! " மீனாட்சி! லோக மாதா ! தகப்ப இல்லா பொண்ணு அம்மா ! சாய தோள் இல்லை ! நீதான் ஒருவழி காட்டணும் ! " என்று இருகைகளையும் நீட்டி வேண்டிக் கொண்டார் !
அந்தப்பெண் கூனி குறுகி அருகில்நின்று கொண்டிருந்தார் ! இளப்பமாக பார்த்தேன் !
கோவிலுக்குள் சென்றோம் அப்போதெல்லாம் வரிசை,கிடையாது ! மள மள வென்று படியேறி உள்ளெ சென்றோம் ! சொக்கநாதர் கோவிலையும் பார்த்தோம் !
வயதான பெரியவர் அமர்ந்திருந்தார் ! அவர் அருகில் அவர் மனைவி கண்பார்வை அற்றவர் ! சீத்தராமன் அவர் அருகில் சென்றார் ! தன பையிலிருந்து நூறு ரூபாய் தாள எடுத்து அந்த பெரியவர் கையில்கொடுத்தார் ! பெரியவர் நிமிர்ந்து பார்த்தார் ! அவர் வாய் கோணியது ! வாங்கிக் கொண்டார் !
நாங்கள் அம்மன் கோவில் வழியாக திரும்பினோம் ! "கொஞ்சம் உக்கருவோமெ " என்றார் ! தூண் ஓரமாக உக்கார்ந்தோம் !
"நீங்கள் அந்த பெரியவருக்கு நுறு ரூ கொடுத்திருக்கக் கூடாது ! "
"ஏன்?"
"நாமே நம் சகமனிதர்களை பிச்சைக்காரர்களாக்குகிறோம் "
"நாம் கொடுக்கவில்ல என்றால் யார் கொடுப்பார்கள் ? "
"சொக்கநாதன் தயவில் தன நூறு ரூ கிடைத்ததாக நினைப்பார் !"
"நினைக்கட்டுமே "
"அது மூடத்தனம் இல்லையா ?"
"எது ?காய்கறி விற்கும் அம்மையாருக்கு பிழைக்க வழி செய்ய மாட்டோம் ! முதிர்கன்னியாய் வைத்துக்கொண்டு தன்னந்தனியாக வாழும் பெண்ணிருக்கு பாது காப்பு கொடுக்க மாட்டோம் ! கண் புறை நோயாளிக்கு மருத்துவம் கிடையாது ! ஏதுமற்ற நிலையில் அவர்கள் கோவிலை நாடினால் அது மூட நமபிக்கையா ? "
தோழர் சீத்தராமன் எனக்கு எதையோ புரிய வைக்க முயல்கிறார் !
"இந்த பாவப்பட்ட மக்கள் நம்பின்னால் நிற்க வேண்டியவர்கள் ! அவர்களை தேவை இல்லாமல் வெறுக்கிறோம் ! மற்றவர்களிடம் தள்ளி விடுகிறோம் !கோவிலுக்கு போவது மட்டும் ஆத்திகம் அல்ல ! போகாதவர்கள் எல்லாம் நாத்திகர்களல்ல ! கோடிக்கணக்கான மக்கள் இந்த நாட்டில் ஆத்திகர்கள் ! அவர்களை என்று நம்பக்கம் கொண்டுவரப்போகிறோம் !"
சீத்தாரமன் புறப்பட்டார் !
Tuesday, February 03, 2015
ஏல ! நீங்க இந்து வானது எப்பம்ல ?...!!!
இந்த கேள்விய கேட்டு அதுக்கு பதிலுமுண்டு ! தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ச . தமிழ்செல்வன் அவர்கள் சமீபத்தில் பெரம்பலூரில் பேசி இருக்கிறார்கள் ! முக நூல் ல பதிஞ்சு இருக்காங்க ! கேட்டு பாருங்க !
நீங்க இந்து வானது 1871 ம் ஆன்டு வே ! இத நீங்க மதிக்கிற காஞ்சி சங்கர மடத்து பெரியவர் - பெரியவர்னா -சுப்பிரமணியம் என்ற ஜெயேந்திரர் இல்ல சந்திர சேகர சரஸ்வதி என்ற மகா பெரியவர் சொல்லி இருக்கார் ! அவர் எழுதிய தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தை படிங்க தெரியும் !
ஆதில நாம் வைஷ்ணவன இருந்தோம் ! சைவனா இருந்தோம் ! சண்டை போட்டுகிட்டோம் ! சைவன் கூட வீர சைவன் சண்டைபோட்டன் ! வைஷ்ணவனல வடகலை தென்கலன்னு சன்டை போட்டோம் ! ஸ்மார்த்தன், தெலுங்கன் நு சன்டை போட்டம் ! பிள் ளை வாள் நும்.! முதலியார் நும் ! போடாத சண்டையா ?
வெள்ளைகாரன் வந்தான் ! நம்மள நிர்வாகம் பண்ண ஏற்பாடு செஞ்சான் ! எத்தன சாதிடா ? பிரமிச்சு போய்ட்டான் ! யாரு எந்த சாதின்னு கணக்கு எடுக்க பாத்தான் ! 1871ம் ஆண்டு தான் முதன் முதல்லமக்கள் தோகை கணக்கெடுப்பு நடந்தது ! என்ன செய்யறது நு யோசிச்சான் ! அம்புட்டு பேரையும்" இந்து" நு சேத்தான் !
யாருடா இந்து ?
எவன் கிறிஸ்துவன் இல்லையோ,எவன் முஸ்லீம இல்லயோ ,எவன் பார்சி இல்லையோ ,எவன் சீக்கியன் இல்லையோ ,எவன் சமணன் இல்லையோ ,அவன் பூரா "இந்து" நான் !
இது தான் நமது அரசியல் சட்டமும் கொடுக்கும் வரையறை !
1871க்கு முன்னால வைஷ்ணவன் இருந்தான் !சைவன் இருந்தான் ! ஸ்மார்த்தன் இருந்தான் ! வட கலை,தென்கலை இருந்தான் ! பிள்ளை மகன் இருந்தான் ! முதலியார் இருந்தான் !
1871க்கு பின்னால தான் வெள்ளைக்காரன் "இந்து" நு பேர் கொடுத்தான் !
இத நான் சொல்லலை பா !
காஞ்சி மகா பெரியவர் சொன்னது !!!
(தமிழ்செல்வன் பெரம்பலூர் பேச்சை தமிழ்நாடு முழுவதும் போட்டு கேக்கணும் ! காட்டுங்க தோழர்களெ !)
Monday, February 02, 2015
விமானப்படையில் கட்சிக்கிளையை
ஆரம்பித்தவர் அப்துல் வஹாப் ...!!!
கம்பம் நகரில் வசித்துவரும் முது பெரும் தோழர் அப்துல் வஹாப் அவர்களுக்கு இன்று 92 வயதாகிறது !
கம்பம் -தேனி வட்டாரத்தில் மிகவும் செல்வாக்கும் வசதியும் உள்ள குடுமப்த்தில் பிறந்தவர் அவர் ! இளம் வயதிலேயே கம்யுனிஸ்ட் கட்சியோடு தோடர்பு கொண்டவர் ! பின்னாளில் "தீக்கதிர் " பத்திரிகையில் பொதுமேலாளராக பணியாற்றினார் !
முதுமையின் காரணமாக அவர் ஒய்வு பெற விரும்பினார் ! ஏற்கனவே சோவியத் நாடு சென்ற பொது இதய நோய் பாதிப்பும் இருந்தது ! அவர் ஒய்வு பெரும் முன்பாக அவரிடம் ஒரு நேர்காணல வாங்கி அதனை வண்ணக்கதிரில் வெளியிட்டோ ம் !
அதனை பதிவிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது ! "நான் கம்யுனிஸ்ட் கட்சியில் சேர்ந்ததை என் குடும்பத்தினர் ஒப்பவில்லை ! என்னால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ! ஒருகட்டத்தில் நான் வீட்டை விட்டு வெளியேறினேன் ! நேராக பங்களூர் சென்றேன் ! அப்போது இரண்டாவது உலக யுத்தம் நடந்து கொண்டிருந்தது ! பிரிட்டிஷ் ராணுவத்தில் ஆளெடுத்துக் கொண்டிருந்தார்கள் ! அதில் சேர்ந்தேன் ! அங்கு என்னோடு ஒரு மலையாள நண்பரும் வந்து சேர்ந்தார் ! அங்கு புதிதாக சேர்ந்த வர்களிடம் பேசிப்பழகினோம் ! ( நினைவிலிருந்து எழுதுவதால் அவர் சொன்ன பெயர் தட்ட வில்லை ) மாதம் ஒரு தேர்வு நடத்துவார்கள் ! அதில் பாசாகிவிட்டால் பயிற்சிக்கு அனுப்பிவிடுவார்கள் ! அங்கிர்ந்தவர்களை ஒழுங்கு படுத்தி ஒரு கட்சிக்கிளையை உருவாக்க விரும்பினேன் ! ஆகவே ஒவ்வொரு மாதமும் தேர்வில் "பெயில்" ஆவதற்காகவே படிப்பேன் ! ஒருகட்டத்தில் நான் அங்கு இருக்கமுடியாத நிலை எற்பட்டது ! இதற்கிடையே என் குடுமபத்தினர் நான் விமானப்படையில் இருப்பதை அறிந்து தேடி வந்து வீட்டார்கள் ! விலகி நான் ஊர் வந்து சேர்ந்தேன் " என்றார் நாங்கள் "அத்தா " என்று அன்போடு அழைக்கும் அப்துல்வஹாப் அவர்கள்!
பின்னர் கட்சி கூறியபடி திருச்சியில் ரயில்வே தொழிற்சங்கத்தில் பணியாற்றினார் ! ரயிவே ஊழியர்கள் ஊர்வலத்தின் பொது போலீஸ் ஸ்டேஷன் மீது "குண்டு " வீசியதாக தேடப்பட்டார் ! "போலீஸ் கண்களில் படாமல் நண்பர் வீட்டு மொட்டை மாடியில் கடும் வெய்யிலில் படுத்தே இருக்க வேண்டியதாயிற்று ! மாடி கைப்பிடிச்சுவர் முன்று அடி உயரம் தான் இருக்கும் ! படுத்துக் கொண்டே சாப்பாடு என்று சகலகாரியங்களும் செய்ய வேண்டியதிருந்தது !" என்று பெட்டியில் குறிப்பிட்டார் !
"அத்தா" பெரியகுளம்நாடாளுமன்றதேர்தலில்ஒருமுறை போட்டியிட்டார்
பரபரப்போ , அவசரமோ காட்டாத அழுத்த்மான செயல்பாடு கொண்டவர் "அத்தா "! அவர் கோபப்பட்டு நான் பார்த்ததில்லை ! மென்மையான பேச்சு !
அவர் காலடியில் அமர்ந்து செய்லபட முடிந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம் !
"அத்தா" நீங்கள் நூறாண்டு வாழ வேண்டும் !!!!
முதுமையின் காரணம