Monday, October 30, 2017
Thursday, October 26, 2017
காஸ்யபனின் சிறுகதையும் ,
பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களும் ...!!!
சென்னை "கலைஞர் நியூஸ் " தொலைக்காட்ச்சியில் பணியாற்றும் உமா அவர்கள்பத்து நாட்களுக்குமுன்பு நாகபுரி வந்திருந்தார்கள். அண்ணல் அம்பெத்கார் தீட்சை பெற்ற இடத்தை பார்த்து அதுபற்றிய செய்திகளை சேகரிக்க வந்திடிருந்தார்கள். பது டில்லியில் இருக்கும் "வட க்கு வாசல் " பத்திரிக்கை ஆசிரியர் பென்னேஸ்வரன் நாகபுரியில்வசிக்கும் சத்தியமூர்த்தி (என் மகன்) பெயரை குறிப்பிட்டு உதவி ஏதாவது தேவைப்பட்டால் அணுகும்படி கூறி உள்ளார்.
உமா அவர்கள் கைபேசிமூலம் சத்யமூர்த்தியை நாகபுரி வந்ததும் தொடர்பு கொண்டார்.அருகில் இருந்த என்னிடமும் பேசினார் . அம்பேத்கார் பற்றி "பேராசிரியர் சுப.வீ "ஒரு நூல் எழுதவிருப்பதாகவும் அதற்கு தான் கூ ட இருந்து ஒத்துழைப்பதாகவும் கூறினார். ஒய்வு நேரம் இருந்தால் வீட்டிற்கு வரமுடியுமா என்று அழைத்தேன் .அவரும் அவருடைய நண்பர் தேவேந்திரன் அவர்களும் வந்தனர்.
மிகவும் உற்சாகமான உமா அவர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். பேராசிரியர் பற்றி மிகவும் பெருமையாக பேசினார் . "திராவிட இயக்கத்தின் அறிவார்ந்த மனிதர் . மிகசிறந்த படிப்பாளி. தேடல்மிகுந்த சிந்தனையாளர் .அவர் திறமைக்கும், நேர்மைக்கும் இன்னும் உயரத்திற்கு போக வேண்டியவர் , " என்று என் பங்குக்கு நான் கூறினேன்.
நான் எழுதிய சில நூல்களை உமா அவர்களிடம் கொடுத்தேன் . வெகுநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு புறப்பட்டார்.மறுநாள் மதியம் கைபேசி மூலம் தொடர்பு கொண்டார் . என் "கருகமணி " தொகுப்பை பிடித்ததாகவும் அதில் உள்ள "அவளும் அந்த அவளும் " கதையைப்பற்றி மிகவும் உயர்வாக புகழ்ந்து பேசினார் .இந்த புத்தகங்களை பேராசிரியர் "சுப.வீ " அவர்களிடம் கொடுக்க விருப்பதாகவும் குறிப்பிட்டார்.
சென்ற வாரம் யூ டியூபில் தமிழ் அலைவரிசைகளில் வரும் சர்ச்சை களை பார்த்துக்கொண்டிருந்தேன். "சுப.வீ " அவர்களின் நிகழ்ச்சி . கை பேசி அழைத்தது . நம்பமுடியவில்லை. "சுப.வீ " அவர்களே அழைத்தார்கள். "கருகமணி " தொகுப்பை படிதேன் . ஐந்து ஆறுகதைகளை படித்தேன். சிறப்பாக உள்ளது குறிப்பாக "அவளும் அந்த அவளும் " கதை மிகவும் நன்றாக வந்துள்ளது . "கலைஞர் டிவி யில் அதுபற்றி பேசலாம் என்றிருக்கிறேன். என்றார் .
அறிவார்ந்த அந்த மனிதரின் பாராட்டை விட அவரின் பெருந்தன்மை என்னை வியந்து போற்றவைத்தது..
இன்று காலை எனக்கு மின் செய்தி வந்தது .
"காலம் தாழ்ந்து விடை அனுப்புவதற்கு மன்னிக்கவும்.நவமபர் 3 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு,கலைஞர் தொலைக்காட்ச்சியில் உங்கள் சிறுகதை குறித்து பேசியுள்ளேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்தை கூறிட வேண்டுகிறேன் "
பேராசிரியர் சுப.வீ அனுப்பிய செய்தி அது .
தோழர்களுக்கும், பதிவர்களுக்கும் ஒரு வேண்டு கோள் ! நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்களேன் .
"ராஜாஜி- பெரியார் "
நட்பும் ,அதன் உன்னதமும் ...!!!
"பெரியாரை காங்கிரஸ் கட்சியில் சேர்த்து அவரை பொது வாழ்க்கைக்கு கொண்டுவந்தவர் ராஜாஜி " என்று பேராசிரியர் சுப.வீர பாண்டியன் ஒரு நிகழ்ச்சியில் குறிப்பீட்டார். முற்றிலும் உண்மை .
பெரியாரின் மனைவியார் நாகம்மை அவர்கள் இறந்துவிட்டார். பிறப்பும் இறப்பும் யதார்த்தமானது. என்ற பெரியார் அழக்கூட இல்லையாம். ராஜாஜி இறந்து கண்ணம்மா பேட்டை இடுகாட்டில் எரியூட்டப்படும் பொது விக்கி விக்கி அந்த தொண்ணுறுவயது தொண்டு கிழம் அழுத்தத்தைப்பார்த்து தலைவர்களே அதிர்ந்து போனார்களாம் .
பெரியார் நாத்திகர் ! ராஜாஜி நம்பிக்கை உள்ளவர் . ஆனால் "பத்தாம்பசலித்தனமான் " நம்பிக்கை கொண்டவர் இல்லை .1930 ஆண்டுகளிலேயே தன மகளுக்கு பிராமனர் அல்லாதவரோடு சாதி மறுப்பு திருமணம் செய்வித்தவர் .
அண்ணல் காந்தி அடிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் ராஜாஜி. அவருடைய அரசியல் ஆலோசகரும் கூட . வட்டமேஜை மாநாட்டிற்கு தன்னோடு லண்டன் வரவேண்டும் என்று அண்ணல் ராஜாஜியை வற்புறுத்தினார் ,ராஜாஜியோ மறுத்து விட்டார் . "பாப்பான் கடல் கடந்து செல்லமாட்டான் " என்று பலர் ஏகாதிடியம் பேசினர் . பின்னாளில் 1963 வாக்கில் உலக சாமான இயக்கத்தின் தலைவர் பேட்ரண்ட் ரசல் உடன் இணைந்து அமேரிக்கா சென்று ஜான் கென்னடியை சந்தித்து அணு சோதனைகளை தடுக்க உதவும்படி கேட்டுக்கொண்டார்.
"raajaaji is a bundle of contradiction and a mixer of confusion " என்பார்கள்..
1942ம் ஆண்டு காங்கிரஸ் கடசியிலிருந்து வெளியேறினார். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிடும் என்று தலைவர்களிடையே நம்பிக்கை துளிர் விட்டுக்கொண்டிருந்த நேரம். பாகிஸ்தான் பிரிவினை ஏற்றுக்கொண்டால் கிடைக்கும் .காங்கிரஸ் ஏற்கவில்லை. காங்கிரஸ் மாநாட்டில் பாகிஸ்தான் பிரிவினையை ஏற்றுக்கொண்டு , இந்திய சுதந்திரத்தை உடனடியாக பெறவேண்டு என்று ராஜாஜி தீர்மானம் கொண்டுவந்தார்தீர்மானம் தோற்றது .காங்கிரசை விட்டு வெளியேறினார் .
1945ம் ஆண்டு மீண்டு காங்கிரசில் சேர்ந்தார் . மவுண்ட் - பாட்டனுக்கு பிறகு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ஆனார்.
ராஜாஜியின் பிராமண அடிவருடிகள் அவர் ஒரு சாணக்கியர் என்று பெருமை பேசுவார்கள். பெரியாரின் நாத்திக கடசியின் பெருமையை உடைக்க அவருக்கு இரண்டாவது திருமண ஆசையை வளர்த்து சிதறடித்தவர் ராஜாஜிதான் என்று வக்கனை பேசுவார்கள்.
உண்மை இதற்கு நேர்ர்மாறானது . பெரியார்- மணியம்மை திருமணம் நடந்த பொது ராஜாஜி கவினர் ஜெனரலாக இருந்தார். கவர்னர் ஜெனரல் தனிநபர் விஷயங்களில் தலையிடக்கூடாது என்பது பிரிட்டிஷ் மரபு.
ஆப்த நண்பர் பெரியாரின் இரண்டாவது திருமணம் அவருடைய பெருமையையும், கடசியின் மதிப்பையும் குலைத்துவிடும் என்று ராஜாஜி கருதினார். நண்பரை காப்பாற்ற முடியாமல் " தடுக்கிறதே மரபு " என்று மாய்ந்தார் .மரபா ? நண்பனா? என்ற நிலையில் நன்பன் என்று முடிவெடுத்தார் . "இரண்டாம் திருமணம் வேண்டாம் " என்று குறிப்பிட்டு அதற்காரணங்களையும் சொல்லி ரகசியமாக கடிதம் எழுதினார்.
பெரியார் என்ன காரணத்தாலோ அதனை ஏற்கவில்லை . திருமணம் நடந்ததும், திராவிடர் கழகம் உடைந்தும் வரலாறாயிற்று.
தி ..க , திமுக வினரில் பலர் ராஜாஜியின் சதிதான் என்று மனதார நமபினார்கள். ராஜாஜியும் மவுனம் சாதித்தார்.
பெரியாரும் இதற்கு ராஜாஜி காரணமல்ல என்று தெரிந்துமவுனம் சாதித்தார் .
ஒரு இந்தியன் தன் ஆப்த நன்பன் பெருமைக்கு உரிய பதவியை அலங்கரித்தவன் "மரபை " மீறினான் என்ற அவப்பெயர் வரக்கூடாது என்பதற்காக பெரியார் ரகசியம் காத்தார்.
இந்த ஒப்பற்ற இரண்டு தலைவர்களிடையே மலர்ந்த நட்பு உன்னதமானதாகும் .
Sunday, October 22, 2017
இஸ்லாமியர்கள் உருவாக்கிய ,
பஜனை பாடல்கள் ...!!!
1952ம் ஆண்டு " பாய்ஜூ பாவ்ரா " என்ற இந்தி திரைப்படம் வந்தது . அஃபரின் தர்பாரில் தான் சென் கொலோசிக்கொண்டிருந்த காலம் அது. மிகசிறந்த பாடகர் ஒருவர் இறந்து விடுகிறார் தான்சேன் தான் தனக்கு போட்டியாக வருவார் என்று நினைத்து அவரை கொன்றுவிட்டதாக அவரிடைய பதின்ம வயது மகன் கருதுகிறான் .அக்பரின் தர்பாரிலேயே தான் சன் நை வென்று காட்ட சபதம் கொள்கிறான். வென்றும் காட்டுகிறான்.
அந்த இளைஞன் தான் பாய்ஜூ .அவனை கவுரி என்ற பெண் காதலிக்கிறாள்.
பரத் பூஷன் மீனா குமாரி நடித்த இந்த படம் மிகசிறப்பாக பேசப்பட்ட ஒன்றாகும்.
பாய்ஜூ பாடும் பாடல்கள் போன்று இன்றுவரை எவரும் எழுதவில்லை .எவரும் பாடவில்லை.எவரும் இசை அமைக்க வில்லை.
"கங்கா கி மௌஸிமே "என்ற அந்தப்பாடலை எத்தனை லட்சம் தடவை கேட்டாலும் திகைக்காது
அதே போன்று தான் "பகவான்-பகவான்- பகவான் -! துனியா கே ரகவாலே " என்ற பாடல். .
"ஹரிதர்ஷன் கோ " என்ற பஜனை பாடல் ஊனை உருக்கிவிடும்.
இந்த பாடல்களின் மகத்துவம் என்ன தெரியுமா ?
இதற்கான பாடலை எழுதியவர் ஷகீல் பாதயுனி !
இந்த பாடலை பாடியவர் முகம்மது ரஃபி !
இதற்கு இசை அமைத்தவர் நவுஷாத் !!!
மூவரும் பத்திரிகையாளர்களிடம் பின்னாளில் "ஆண்டவன் கருணையால் தான் எங்களால் இப்படி அமரத்துவம் வாய்ந்த பாடல்களை கொடுக்க முடிந்தது . " என்று கூறினார் .
திரைத்துறை ஆரம்பகாலத்திலிருந்தே இணக்கமாக செயல்பட்டுக்கு கொண்டுதான் இருக்கிறது .
"ஜோசப் விஜய்" என்று கிறுக்குத்தனமாக கூறியதால் ஒன்றும் ஆகிவிட போவதில்லை.!!!
Friday, October 20, 2017
மக்களவை தேர்தலும் ,
நாட்டு நடப்பும் ...!!!
மக்களவை தேர்தல் வர இரண்டு ஆண்டுகள் உள்ளன .ஆளும் பாஜக அதற்கான காய்களை இப்போழுதே நகர்த்த ஆரம்பித்து விட்டது . குஜராத் தேர்தல் அதன் அடிவயிற்றில் பயத்தை கிளப்பியுள்ளது.
வளர்சசி வளர்சசி என்று முழம் போடும் பிரதமர் அங்கு வளர்ச்சி பற்றி பேசவில்லைஇதுவரைஎந்தபிரதமரும்பேசாதஇனமோதல்களை தேர்ந்தெடுத்து பேசுகிறார் . "காங்கிரஸ் கடசி குஜராத்திகளுக்கு விரோதமானது.சர்தார் படேல், மொரார்ஜி தேசாய் ஆகிய குஜராத்திகளை அகிலஇந்தி அளவில் வரவிடாமல் தவிர்த்தவர்கள் நேருவும் இந்திராகாந்தியும்" என்று வக்கணை பேசுகிறார்.
குஜராத் மக்கள் குறிப்பாக ,படேல் வகுப்பினர், தலித்துகள், மற்றும் சிறு பான்மையினர் பா.ஜ .க வின் மோசடியான பேச்சினை நம்பத்தயாராகயில்லை . 20 ஆண்டு பா.ஜ.க ஆடசி யில் 2லட்சம் கோடி கடன் என்று ஆனது தவிர மக்கள்நல திட்டங்கள் எதுவும் வரவில்லை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர் .சமீபத்திய வரி ஏற்றம் , பணமதிப்பு , ஆகியவை சிறு குறு தொழில்களை பாதித்து சாதாரண மக்களை ஓட்டாண்டியாக்கி உள்ளது . இந்த சந்தர்ப்பத்தில் வளர்ச்சி பற்றி பேசுவது எடுக்காது என்பதை மோடி அவர்கள் உணர்ந்தே இருக்கிறார் . அதனால் தான் குஜராத்மாக்களின் இன உணர்வை தூண்டும் வகையில் பேச ஆரம்பித்துள்ளார்.
பொது வாக குஜராத் தேர்தல் முடிவுகள் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் முன்னோடி என்றே அரசியல் பார்வை யார்கள் கருதுகிறார்கள்.
வட கிழக்குமாநிலங்களில் கவர்னரின் உதவியோடு ஆட்சியை பிடித்த பா.ஜ.க காங்கிரஸ் எம் எல் ஏ க்களை விழு ங்கியது செரிமானம் ஆகாமல் வயிறு பொருமி தவித்துக்கொண்டு இருக்கிறது .
பஞ்சாப், கையை விட்டு போய்விட்டது . பசு வட்டம் என்ற பகுதியில் ராஜஸ்தான்.ம பி , உபி ன் நிலைமை எங்கு சாயும் என்று தெரியாமல் "வியாபம் " ஊழல் தலை விரித்து பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது.
அமித் பாய் ஷா பா.ஜ.கவின் தலைவராக்கினதை ஏற்க முடியாதவர்கள் "அமித் பாய் இந்து அல்ல " ."அவரை ஏன் தலைவராக்கினாய் " என்று முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர் .அவர்மகன் ஜெய் ஷாவின் ஊழலை வெளிக்கொண்டு வந்ததே இவர்கள் தான்.
இந்த லட்சணத்தில் மக்களவை தேர்தலுக்கு முன்பு ஏடாகூடமாக எதுவுமாகிவிடக்கூடாது என்பது மோடி-ஷா இருவரின் பொது கவலை .
அவர்கள் கடசிக்குள் எந்தவித சமரசத்திற்கு தயாராகி விட்டனர். மோடி ஷாவை கைகழுவ தயார் .ஆர்.எஸ்.எஸ் தலைமை ஜெய் பற்றி விசாரணை வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது இதன் எதிரொலி தான் .
இவ்வளவு சோதனைகள் இருந்தும் எதிர்க்கட்ச்சிகளால் மோடியையோ,பா.ஜ.க வையோ 2019 ஆண்டு மக்களவைதேர்தலில் சந்திக்க முடியுமா என்ற கேள்வி இருக்கிறது.
"முடியாது " என்றுதான் நடு நிலையாளர்கள் கருது கிறார்கள்.
எதிர்க்கட்ச்சிகளுக்கு அகில இந்திய அளவில் மோடிபோன்று அறிமுகமான தலைமை இல்லை ! அவர்களிடையே அப்படி ஒரு தலைமையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை . முலாயமும் அகிலேஷும், லல்லுவும், சரத்தும் , என்று ஒன்றாக சிந்திப்பது என்று ஒருசக்தியாக மாறுவது என்று திகைக்கிறார்கள்.
எதிர்க்கட்ச்சிகளின் பலவீனம் தான் மோடிக்கு உள்ள வாய்ப்பு !!!