Sunday, September 22, 2019





கோமல் சுவாமிநாதனும் ,

அருங்காட்ச்சி அரங்கமும்  .....!!!








அப்போது நான் மதுரையில் இருந்தேன் .கோமல் அவர்களிடமிதுனது தந்தி வரும். " நாளை பாண்டியனில் வருகை. மாலை நாலுமணிக்கு "சந்தானம் " வாருங்கள். ரங்கராஜா புரம் போகிறோம் "என்று இருக்கும்.

மறுநாள் மாலை ரங்கராஜா புறம் சென்று அங்கு ஆசிரியர் பணிசெய்யும் நீலமணி வாத்தியாரை பார்ப்போம். 

"மதுரை வீரன் அம்மானை " என்ற கிராமியப்பாடலை பதிவு செய்து வருவோம். இப்படி நிறைய அவர் சேர்த்து வைத்துள்ளார். "இவை அழிந்து விடக்கூடாது ஐயா !பாதுகாக்கப்படவேண்டும் என்பார்.இப்படி பல அனுபவங்கள் உண்டு.

இரண்டு பெரும் பலநாடக விழாக்களுக்கு செல்வோம். அவர் அருகில் அமர்ந்து கொண்டு நாடகம் ப்பார்ப்பதே ஒரு சுகம்.

மதுரை யில் ஒரு நாடக விழா ! அதில்  "பரிக்கிறமா " என்ற நாடகம்கோவாவில் இருந்து ஒரு குழு போட்டது. மலை யாள  நா டகமிருந்தது.

ஒரு விழாவில் "பனி வாள் " என்ற நாடகம் .டாக்டர் வேலு சரவணன் ஆரம்ப காலத்தில் போட்ட நாடகம். வித்தியாசமான அரங்க அமைப்பு .உடல் மொழி . வசன உச்சரிப்பு.  மற்றோரூ  நாடகம் - பாண்டிசெறி பேராசிரியர்......ஆறுமுகம் என்று நினைவு - ரயிலடியின் ஒரு பகுதி தான் அரங்கம்.இருப்புப்பாதை முன் மேடை வழியாக பார்வையாளர்கள் வரை வரும் .இரண்டு பேர் இருப்புப்பாதையில் பேசிக்கொண்டு வருவார்கள் வருவார்கள். ரயில்  வருவது ஒளியின் முலமும் ஒலியின் மூலமும் உணர்த்தப்படும். 

எனக்கு இது புது அனுபவம். "என்னய்யா இது? "என்று கேட்டேன்.

"பிறகு இரவு பேசிக்கொள்ளலாம் .இப்போது பாரும் " என்றார்.

மதுரைபலக்லைக்கழக பேராசிரியர் டாகடர் ராம மூர்த்தி பேசினார்.

இரவு நாங்கள் இருவரும் விவாதித்தோம்.  

"சாமா ! திருவனந்தபுரம் போயிருக்கேறா ?

"போயிருக்கேன் " 

'அங்க நகைக்கடைல தங்க நாகை  மட்டும் இருக்காது . தந்த சிலை களும் வச்சிருப்பாங்க "

"ஆமா ! அழகான யானை கூட்டம், மான்கள்  னு இருக்கும்"

"அதுமட்டுமில்ல வே ! ஊஞ்சலில் ஆடும் ராதையும் கிருஷ்ன்ணனும் ராதையும் இருக்கும்" ..ராதைக்கு 25 வயது .கிருஷ்ணருக்கு  15 வயது.காதலிச்  சாங்க .ராதை யின் சேலை காற்றில்பறக்க கண்ணன் மீது நளினமாக சாய்ந்திருப்பாள் .அவள் கழுத்தை வளைத்தது கண்ணன் வேணுகானம் இசைப்பான்.அவன்  உடல் 15 வயதை காட்டும் முகம் குழந்தை  முகமாக ருக்கும் ".

"பார்த்திருக்கிறேன்,மணிக்கணக்கில் சோறுதண்ணி இல்லாமல் பார்க்கலாம்"

"அது சரி ! அதுக்காக தினம் பூ செய்யும் விக்கிரகம் மாதிரி சந்தனம் குங்குமம் புஷ்பம் சாத்த முடியாது.. அந்த அற்புதமான கலைஞனை கவுரவிக்க  பாராட்ட அந்த பதுமையை அருங்காட்ச்சி அரங்கத்தில் தா வைக்க வேண்டும்."

"புரியுதா வே " 

"புரிஞ்சுட்டு"