Saturday, April 24, 2010

Fire doesnot know....

நாகபுரியின் வடக்குபகு ப் பகுதியில் வனதேவி நகர் இருக்கிற்து.குடிசைப் பகுதியை த்தான் அப்படி அழைக்கிறார்கள்.சுமர் ஐம்பது அறுபது குடும்பங்க்கள் வசிக்கின்றன.இந்துக்கள்,முஸ்லீம்கள் சேர்ந்துவழ்கிறார்கள் தினம் தினம் சண்டைதான்.ரிஜ்வன் கான் வீட்டிற்கும்தெவ்சந்த்வீட்டிற்கும் தினம்சாக்கடை சண்டை.குடிசைக்குள் படுத்தால் கால் பக்கத்துகுடிசையில் இடிக்கும்.அதனால் நிலச்சண்டை..பரசுராம்சிங்காவிர்க்கும் அப்துல் பஷிருக்கும் . ஃபிளக்ஸ் பொர்டுதான் வீட்டுக்கூரை.கித்தான் மற்றும்சாக்குகள் தான் சுவர்கள்.இன்று கா லை பத்திரிகைகளில் வனதேவி நகர்தான தலைப்பு செய்தி. வியழக்கிழமை இரவு அங்கு தீ விபத்து நடந்துள்ளது.ரிஜ்வன் வீடு சம்பலாகிவிட்டது.அவனுக்கு இரண்டு கைகளிலும் தீ காயம்.பக்கத்துவீட்டுதெவ்சந்த் இரண்டு தகரஷீட்டுகளை வைத்திருந்தான்.ரிஜ்வன் தன் வீட்டு தீ பக்கத்து வீடான தெவ் வீட்டில் பரவாமல் தடுக்க அவன் வீட்டுச்சாமா.ன்களை அப்புறப்படுத்தியிருக்கிறான்.தகரமாதலால் சூடு அவன் கையை பதம் பார்த்து விட்டது. தெவ்சந்த் வீட்டில் ஒரு தகர பெட்டிஉள்ளது.அதனை வெளியே கொண்டுவரும்போது பெட்டியின் சூடுதாங் காமல் தெவின் மனைவிக்கு காயம். பெட்டிக்குள் சில பத்து ரூ நோட்டுக்கள் கருகிப்போயிருந்தன......பஷீர் ரிங் ரோடில் உள்ள கடையில் சமயல் செய்கிறான்.தன்னார்வத்தொண்டர்கள் சிலர் பணம் வசூலித்தார்கள்... ரிங் ரோடில் உள்ள ரமாகாந்த் பலசரக்குகடைக்கு ஒருவர் ஓடினார்.இரவு 12மணிக்கு அவர் கடையைத்திறந்து அரிசி.எண்ணை உப்பு ஆகியவற்றை கொண்டுவ்ந்தார்.பஷீர் தலைமையில் புலவு தாயரிக்கப்பட்டது.முதலில் குழந்தைகள்.பின்னர் பெண்கள் என்று பரசுரம் பந்தி வைத்தான். குழந்தைகள் தூங் கி விட்டன ர்.ஆண்களும் பெண்களுமாக பழய கதைகளை பேசிக்கொண்டிருந்தனர்.தெவ் ரிஜ்வனைப்பார்த்தான்.தோஸ்த்,கை. புண் ஆற பத்து நாள் ஆகுமே.என்னசெய்யப்போகிறாயேன்றுகேட்டான்.ரிஜ்வன் சுரத்தில்லாமல் இளித்தான். பரசுராம் அவன் கையை பற்றி கொண்டான்.பத்திரிகையில் இதனை படித்தநான்நெகிழ்ந்துவிட்டேன். எங்கள் வீட்டு வாசலில் மரநிழல் உண்டு.ரிக்ஷா காரர்கள் வருவார்கள்.அவர்களொடு பேசிக்கொண்டிருப்பெண்.ஓரு ரிக்ஷகரரிடம் பத்திரிகையில் படித்ததை சொன்னேன்.அதற்குள் அவருக்கு சவாரி வந்துவிட்டது.வண்டியை நக்ர்திக்கொண்டே"ஆக் ஜானே க்யா இந்து,முசல்மான்,தலித்."(நெருப்பிற்குத்தேரியுமா இந்து முஸ்லிம்.தலித்தென்று) என்றார்.

4 comments:

venu's pathivukal said...

அற்புதமய்யா.....அற்புதம்.

ஏழை மக்களின் தோழமை நேயம் பற்றி ஒரு நூறு உண்மை நிகழ்வுகளாவது வாசித்திருப்பேன். ஆனால் ஒவ்வொன்றும் அவ்வவற்றின் இட, கால, மரபு பின்புலத்திலிருந்து விதவிதமான பாடங்களைச் சொல்பவை. இன்றைய உங்கள் பதிவு இன்னொரு சிகரம். இழப்பதற்கு எதுவுமற்ற இந்தப் பாவி மக்களைத் தான் மதவாத வெறிக் கூட்டம் எத்துணை சக்திவாய்ந்த வெடிகுண்டுகளாக உருமாற்றுகிறது என்பதுதான் இன்றைய தேசத்தின் அதிர்ச்சிக் கதை.

உங்களது மாற்றுக் குரல் ஆறுதலாக ஒலிக்கிறது.

நீங்கள் ஏன் இதை உடனடியாக ஆதாரத்தோடு ஹிந்து நாளேட்டிற்குக் கடிதமாக ஆக்கி அனுப்பக் கூடாது. அல்லது ஞாயிற்றுக் கிழமை வெளியாகிற திறந்த ஏட்டிற்காக (Open Page) எளிய கட்டுரையாக அனுப்பக் கூடாது.....?

ஒரு சிறுகதையாக உணர்ச்சிகர ஒருமைப்பாட்டைப் பதிவு செய்துள்ளமைக்குப் பாராட்டு மழை பொழிகிறோம்.

எஸ் வி வேணுகோபாலன்

Raju said...

Dear kashyapan
Your blog has had a good start.The real story narrated was heartrending. Let it add to the multi-religious legacy and the greatness of our motherland.
K. Raju

மாதவராஜ் said...

நெகிழச் செய்த பதிவு. நேர்த்தியாகச் சொல்லி இருக்கிரீர்கள். தங்கள் எழுத்துக்கு வணக்கம்.

followers widgetஐ இணைக்கலாமே!

veligalukkuappaal said...

சாமானிய உழைக்கும் மக்களுக்கு சாமியும் சாதியும் ரெண்டாம் பட்சம்தான். அவர்கள் ஒண்ணுக்குள்ள ஒண்ணா எப்போதும் கூடித்தான் இருக்கிறார்கள். இப்படியான மனிதர்கள்தான் இந்தியாவின் ஆகப்பெரும்பான்மை என்பதால் (பெரும்பான்மை என்பதை இந்து சமய மக்கள் என வாசிக்க) சுயநல மதவெறி இந்துத்துவா சக்திகளுக்கு இந்த யதார்த்தம் கசக்கின்றது தோழரே! நான் எனது பிள்ளைப் பிராயத்தை மதுரையில் கழி(ளி)த்தவன். மத பேதமில்லா உழைக்கும் மக்களோடு ஒன்றிக் கிடந்து உழைத்தது எங்கள் குடும்பமும். பரசுராம் ரிஜ்வானின் கையைப் பற்றிக்கொண்டதுபோலத்தான் சமூகம் பிணைந்துபோய் கிடக்குது. தமது சுயநல அரசியலுக்கு இது தடையாய் இருக்கும்போது மதவாத கும்பல்கள் பிளவுவாதத்தை தந்திரமாக கையில் எடுக்கின்றன. சாமானிய உழைக்கும் மக்களின், நடுத்தட்டு மக்களின் எளிமையான சாமிகள், வழிபாட்டு முறைகள்... இவற்றுக்குள் உள்ளூர் மதவாத சக்திகள் புகுந்து தமது மேல்தட்டு சாமிகள், வழிபாட்டு முறைகளை மெல்லப் புகுத்த இப்போதெல்லாம் அங்கங்கே கல்யாண மண்டபங்களை பிடித்து விடுமுறை நாட்களில் பயிற்சி முகாம், யாகம் என்ற பெயர்களில் புதிய யுக்திகளை புகுத்தி பிராமணீய கலாச்சாரத்தை கொண்டுவருவதும் மெதுவாக சிறுபான்மை மக்களுக்கு எதிரான சிந்தனையை கட்டமைப்பதும் தீவிரமாகி வருகின்றது. செய்கிற கொழுக்கட்டையை அக்கம்பக்கத்தாரோடு பகிர்ந்து தின்று சந்தோசமாக முடிந்துபோகின்ற பிள்ளையார் சதுர்த்தி இப்போதெல்லாம் திருவல்லிக்கேணியிலும் ராயப்பேட்டையிலும் கலவரத்தை உண்டுபண்ணும் ஊர்வலமாக மாறிப்போனதும் அதில் கலந்து கொள்பவர்கள் இந்து மதத்திலேயே இருக்கின்ற சாமானிய பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள்தான் என்பதும் நம்பர் ஒன் உதாரணம். முற்போக்கு சக்திகளுக்கு நிறையவே வேலை உள்ளது... பிள்ளையார் ஊர்வலத்தில் போகிற உழைக்கும் மக்களும் தேவும் ரிஜ்வானும் பஷீரும் நம்மைச் சார்ந்தவர்கள், அவர்கள் நம்மிடம்தான் இருக்க வேண்டும்.
இக்பால்