Saturday, July 31, 2010

theatre....6

வீரம் செறிந்த தெலுங்கானா விவசாயிகள் நடத்திய ஆயுதம் தாங்கிய அந்தப் போராட்டத்திற்கு இணையாக எதுவும் கிடையாது.ஜமீன்களையும்,ஜாகீர்களையும் ஹைதிராபாத்திற்கு விரட்டிவிட்டு நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு பகிர்ந்து அளித்தார்கள்.வயல்வே ளிகளில் துப்பாக்கி ஏந்திய தோழர்கள்,பாதுகாப்பு அளிக்க விவசாயிகள் வி வசாய வேலைகளில் ஈடுபட்டார்கள்.ஜமீன்,ஜாகீர்களுக்கு.ஆதரவாக வந்த நிஜாமின் கூலிப்படைகளை [அரேபியாவிலிருந்து வந்த காஜிம் ரஜ்வியின் தலைமையில் வந்தவை] துவம்சம் செய்தார்கள். மூன்று ஆண்டுகள் என் தொழர்கள் ஆட்சி நடத்தினார்கள்.(தோழனே! இதனை எழுதும் போது என் இதயம் விம்முகிறது)


மத்தியில் நேருவின் ஆட்சி. உள்துறை அமைச்சராக ராஜாஜி. நிஜாம் அவர்கள் காலில் விழுந்து காப்பாற்ற கோரினான்.சர்வதேசதலையீட்டைத் தவிர்க்க "போலீஸ் நடவடிக்கை" என்று நேருவும்,ராஜாஜியும் பொய்சொல்லி, ராணுவ நவடிக்கையை எடுத்தனர்.ஒருபக்கம் இந்திய ராணுவம்.மறுபக்கம்.நிஜாமின் கூலிப்படை.நடுவில் தோழர்கள்.நேருவின் உத்திரவின் பேரில் நிலங்ள் விவ்சாயிகளிடமிருந்து பறிக்கப்பட்டு,மீண்டும் ஜமீன்கள்,ஜாகீர்கள் வசம் ஒப்படைகப் பட்டன. தோழர்கள் கொல்லப்பட்டனர்.நிஜாம் "ராஜ் பிரமுக்" ஆனார். தப்பியோடிய தோழர்கள் கல்கத்தாவிற்கும்,மெட்றாஸ் மாகாணத்திர்க்கும் புகலிடம் தேடி ஓடினர்.

ஹைதிராபாத்தில் உள்ள "சுந்தரய்யா விஞ்ஞான கேந்திராவில்" இந்த்ப்போரில் இன் னுயிர் ஈந்த தொழர்களின் புகைப்பங்கள் வைக்கப்பட்டுள்ளன தளபதியாகச் செயல்பட்ட சுந்தரய்யா பயன்படுத்திய சைக்கிள்,ரேடியோ,ஆடைகள் அங்கு காட்சிப்பொருளாக வைக்கப்ப்ட்டுள்ளன.

இந்த இதிகாசத்தை எழுத்தில்வடித்த கவிஞர்களும்,உண்டு.ஆதரித்த கலைஞர்களும் உண்டு..சரோஜினி தேவியின் சகோதரர் ஹிதேந்திர நாத் பந்தோபாத்யா ஆங்கிலத்தில் எழுதியபாடல் உலகப்பு கழ் பெற்றவை.கவிஞர் செங்கீரன் ( lic தொழர்E.பரமசிவம்) தமிழில் தொடர் காப்பியமாக இதனை மொழிபெயர்க்க 'செம்மலரில்" தொடராகவந்தது.

மத்திய அரசின் துரோகம் இதோடுமுடியவில்லை......

Friday, July 30, 2010

theatre....5

ஒரு சிறிய இடைவேளி.


வங்க மொழி நாடகங்களைப் பற்றி எழுதிக்கொண்டிருப் பதற்கு இடையி

ல் நேற்று(29-7-10) பாத்த நாடகம் பற்றி எழுதுகிறேன்."பெண் மனத்தின் பரவசம்" என்பது நாடகத்தின் பெயர்.

நீரஜா தன் தாயாருடன் வீட்டிற்குள் வருகிறாள்.அவளுக்கும் தாயாருக்கும் கடுமையான வாக்கு வாதம்.காலாகாலத்தில் திருமணம் செய்யவேண்டும் என்பது தயாரின் வாதம்.பார்த்த வரன் எதையும் அவள் ஏற்றுக்கொள்ளாமல் தட்டிக்கழிக்கிறாள்.தாயாரின் தோழி இருவரையும் சமாதானம் செய்கிறாள். நீரஜாவுக்கு ஆலொசனை கூறுகிறாள்.தாயாரும் தோழியும் வெளியேற ரயிலடியில் நீரஜா ரயிலுக்காகக்காத்திருக்கிறாள்.அவள் படித்தவள்.அற்புதமாகக் கவிதை எழுதுவாள்.தன் வருங்காலக் கணவன் பற்றி அவளுக்குள்ளே ஒரு படிமம் உள்ளது.அதனை நினைக்கிறாள்.

நடைமேடையில் ஒரு இளை ஞன்..இருவரும் பேசிக்கொள்கிறார்கள்.அவனுக்கும் கவிதை,இலக்கியம்,எல்லாம் பிடிக்கிறது.ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள்.திருமணம் முடிந்து.காதல்,கவிதை,இலக்கியம்.அன்பு,ஊடல் என்று வழ்க்கை மகிழ்ச்சியாக ஒடுகிறது."ரயில் வரப்போகுது,சீக்கிரம் வாங்க.என்று ஒரு பெண் குரல் கேட்கிறது.நீரஜா யார் என்று கேட்க, மனைவி என்கிறான் அவன். நினைவு வர கண்டது கனவு என்று உணர்கிறாள் நீரஜா.நினைவோடை யுக்த்தியில்(stream of conciousness) உருவான நாடகம் இது

"மலரும் மொட்டு" என்பது அடுத்த நாடகத்தின் பெயர்.கல்லூரியில் படிக்கும் பெண் அவள். அவளுடைய பாட்டியும் அவளும் ஒரே அறையில் தான் படிக்கவேண்டியதுள்ளது.இதேச்சையாக அவள் ஜன்னல் வழியே பார்க்கும் போது ஒரு பெண் கொலை செய்யப்படுவதைப் பர்க்கிறாள்.மயங்கி விழுகிறாள்.பேசும் சக்தியை இழக்கிறாள்.கொலையை போலீஸ் விசாரிக்கிறது.சாட்சி அந்தப்பெண் மட்டுமே.அவளுக்கு வைத்தியம் நடக்கிறது.பெண்ணின் தயாரும் பாட்டியும் அவள் சாட்சி  சொல்வதை விரும்பவில்லை.அவளுக்கு தூக்க நிலையை உருவாக்கி பேசவைக்க முயற்சி நடக்கிறது.அவள் குணமடைகிறாள்.கொலை செய்யப்பட்ட பெண் தன் தோழி என்றும்,கற்பழித்துக் கொலைசெய்யப்பட்டாள் என்றும் கூறு கிறாள்.இது போன்ற நிலை வராமல் தடுக்க, குற்றவாளி தண்டனை பெற நாம் சட்சி சொல்லத்தான் வேண்டும் என்றும் சொல்   கிறாள்

இந்த இரண்டு நாட்க்ங்களைப் பற்றியும் உங்கள் கருத்தை எழுதுங்கள்.இந்த இரண்டு நாடகங்களும் சமஸ்கிருதத்தில் எழுதி மேடையேற்றபட்ட வை என்பது கூடுதல் தகவலகும்.

Friday, July 23, 2010

theatre....4

மாரீச வத் (மாரீசனின் வதம்)


நாடகங்களை வகைப்படுத்தும்போது "அபத்தநாடகம்"(absurd drama) என்று வகைப் படுத்துவார்கள்.நாடகம் முழுவதும் "குண்டக்க,மண்டக்க"என்று இருக்கும்.ஒரு ஒழுங்கு இருக்காது. மிகவும் அபத்தமாக இருக்கும்.ஆனால் அதற்குள்ளாக ஊடும்,பாவுமாக ஒரு செய்தி ஓடிக்கொண்டிருக்கும்.மேலெழுந்தவாரியாக அபத்தமாகத் தெரிந்தாலும் சிறந்த கருத்து அதனுள் பொதிந்திருக்கும்.

முதல் காட்சியில் ராவணன் ,"உடனடியாக மான் வேடமிட்டு ராமனை ஏமாற்ற" மாரீசனுக்கு உத்திரவிடுவான்.மாரீசனோ தேவையில்லாமல் இப்ப செய்யவேண்டுமா? என்று மறு கேள்வி கேட்பான்.ராவணன் கோபப்படுவான்.

அடுத்தகாட்சியில் அமெரிக்க ஜனாதிபதி செனட்டர்களோடு ஆலோசனை நடத்திக் கொண்டிருப்பார்.வியட்நாமுக்கு மெலும் படைகளை அனுப்ப விரும்புவார். செனட்டர் எதிர்ப்பார்.

அடுத்த காட்சியில் மேற்கு வங்க கிராமத்து கூலி விவ்சாயி ஒருவனிடம் மிராசுதரர் பேசிக் கொண்டிருப்பார்.முஸ்லீம் ஒருவனின் வைக்கப்படப்பிர்க்கு தீ வைக்கச்சொல்லுவார்.அதன் மூலம் வகுப்புகலவரத்தை உருவாக்குவது அவருடைய திட்டம்.கூலி விவசாயி வெண்டாம் என்பான்.

மீண்டும் ராவணன் காட்சி.மாரீசன் வசனத்தைமறந்து" வியட்நாமுக்கு படைகளை மெலும் அனுப்பினால் படுநாசம் விளையும்.கட்டாய ராணுவசெவையை எதிர்த்து சட்டம் கொண்டு வருவேன்"என்று கூறுவான்.

வசனத்தை மறந்த செனட்டர் கூலி விவசாயி பேச வேண்டிய வசனத்தைப் பேசுவார். விவசாயி மாரீசன் வசனத்தை பேசுவான்.நாடக நடிகர்கள் மோதிக்கொள்வர்கள். இறுதியில் இயக்குனர்,நாடக ஆசிரியர் அகியோர் வந்து பஞ்சாயத்து நடக்கும். முடிவு எடுக்கமுடியாமல் வால்மீகி முனிவரையே வரவழைப்பார்கள்."இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதினேன்.எந்த மாற்றமும் இல்லாதபோது வசனத்தை மாரீசன் சொன்னாலென்ன? செனட்டர் சொன்னாலென்ன?கூலி விவசாயி சொன்னால் என்ன?எல்லாம் ஒன்றுதான்.நாடகத்தை தொடருங்கள்" என்று சொல்லி வால்மீகி நாடகத்தை முடிப்பார்.

theatre3

துர் சோபன  ந  கரே (நகரத்தின் கெட்ட கனவுகள்) இந்த நாடகத்தின் கதை,கட்டமைப்பு,காட்சிகளமைப்பு என்று எல்லாமே வித்தியாசமாக இருக்கும்.மேடையின் பின்பகுதியில் ஒரு சாலை இருக்கும்.நடுவில் போக்குவரத்தை நெறிப்படுத்தும் போலீஸ் நிழற்குடை இருக்கும்.அதன் கீழே ஒரு குப்பைத்தொட்டி இருக்கும்.டீகடைபோன்ற அமைப்பு இடதுஓர மத்தியில் இருக்கும்.மையமத்தியில் பெரும் முதலாளிகள் ஆலோசிக்கும் அறை இருக்கும்.மேடையின் இடதுபுறம் தொழிலாளர்கள் பேசும் கூடும் இடமாகும்
முதலாளிமார்கள் பேசிக்கொண்டிருப்பார்கள்."வரவர இந்த தொழிலாளர்கள் படுத்தும்பாடு தாங்கமுடியவில்லை.ஜோதிபசு வேறு ஆட்சிக்கு வரப்போராறாம்.என்னசெய்யலாம்" என்று அங்கலாய்ப்பார்கள்."இடைமட்ட தலைவர்கள் இரண்டுபேரை சாய்ததால் சரியாகிவிடும்.நான்பார்த்து கொள்கிறேன்" என்று கூறி ஒருதுரோகியை செட்டப்செய்வான் மற்றொருவன்.தொழிலாளர்கள் கூடும் இடத்தில் அந்த துரோகி நின்றுகொண்டு நோட்டம் போடுவான். தொழிலாளர்களின் இடைமட்டத்தலைவர்கள் டீகடையில் அமர்ந்து கொண்டு போரட்டம் நடத்துவது பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள்.முதலாளிகளின் கோழிக்கறிக்கும், குப்பிச்சாராயத் திற்கும் சோரம் போன துரோகி ஒரு தலைவனை வேட்டிச்சாய்த்துவிட்டு ஓடிவிடுவான்.இப்படி பல கொலைகள் நடக்கும். பத்திரிகைகள் அராஜகம்,வன்முறை,தொழிற்சங்கபோட்டி என்று வர்ணிக்கும்.அந்த துரோகியை முதலாளிமார்கள் பாராட்டுவார்கள். ஒரு நாள் ஒரு தலைவர் பெயரைஸ் சொல்லி கொல்லச்சொலவார்கள்.அவர் மிகவும் நல்லவர் என்பது அவனுக்குத்தெரியும்.தயங்குவான்.மறுதளிப்பான்."நீ பல கொலைகளை செய்தவன்.உன்னை போலீசில் பிடித்துக் கொடுப்போம்"என்று மிரட்டுவார்கள்.அவன் தப்பி ஓடுவான்.போலீஸ் துரத்தும்.நகரம் முழுவதும் ஓடுவான்.சாலையில் ஒடும்போது எதிரே போலீஸ் துப்பாக்கியோடு வரும் பின்னாலும் துப்பாக்கிபோலீஸ்.நிழற்குடையின் மீது ஏறி நின்று"நான் உண்மயைச் சொல்லிவிடுகிறேன்.என்றுயார் யாரை எந்த முதலாளி கொல்லச்சொன்னார் என்பதை கூறுவான். கல்கத்தா நகரத்தில் உண்மையிலேயே நடந்தநடத்திய பெயரளும் வரும்.இரண்டுபக்கமுமிருந்து சீறிப்பாயும் குண்டுகள் பட்டு செத்து குப்பைத்தொட்டியில் வீழ்வான்.
மறு நாள் பத்திரிககளில்"an extremist was killed in police encounter" என்ற செய்தி
பத்திரிகை வடிவில் அரங்கத்தில் பிரும்மாண்டமாக தோன்றும்.

Wednesday, July 21, 2010

Theatre.....2

கல்லோல்(துரோகம்)
மும்பையில் கடற்படை மாலுமிகளின் எழுச்சி என்பது இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகும்.இரண்டாம் உலகப்போரில் நொருங்கியிருந்த பிரிட்டிஷ் அரசு கடற்படையோடு,ராணுவ,விமானப்படைகளும் இணைந்தால் என்னவாகும் என்று கதிகலங்கிய நேரம் பிரிட்டிஷ் வர்த்தகனநலனைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கலானார்கள். மாலுமிகள் தங்கள் போரட்டத்தை விரிந்த அளவில் கொண்டு சென்றார்கள்.முக்கிய தேசீய கட்சிகளான கம்யூனிஸ்டு,கங்கிரஸ், முஸ்லீல் லீக் ஆதரவோடு போராடினார்கள்.

அகில இந்திய தொழிற்சங்க கங்கிரஸ் மாலுமிகளுக்கு ஆதரவாக ஹர்த்தாலுக்கு அறைகூவல் விட்டது.மும்பை நகரம் உறைந்தது.பிரிட்டிஷ் அரசு ராநு வத்தை அழைத்தது.ராணு .வம் துறைமுகத்திற்குள் நுழையாமல் மக்கள் உதவியோடு தொழிலாளர்கள் தடுத்தனர்.மும்பை மாலுமிகளுக்கு ஆதரவாக கல்கத்தா,சென்னை,தொழிலாளர்களும் மக்களும் வீறுகொண்டு எழுந்தனர்.அப்போது மெட்றாஸ் எப்படியிருந்தது என்பதை முதுபெரும் சுதந்திரபோராட்டவிரரும்"தீக்கதிர்" துணை அசிரியராகப்பணியாற்றியவருமான ஐ.மாயாண்டிபாரதி

(வயது 93)" மூன்று நாளாக பி அண்ட் சி மில் ஓடவில்லை.டிராம் ஓடவில்லை.மவுண்ட் ரொடில் மக்கள்வெள்ளம்.தடுக்கவந்த போலீசரை மக்களே விரட்டியடித்தனர்.ஏ.ஐ.டி.யு.சி தோழர்கள் தான் போக்குவரத்தை நெறிப்படுதினர்.அந்த மூன்றுநாட்களும் மதறாஸ பட்டினம் மக்கள்கையில் தொழிலாளர்கள் தலைமயில் செயல்பட்டது" என்று கூறுவார்.

பிரிட்டிஷரசு தன் வேலையை ஆரம்பித்தது.இந்தியமுதலாளிகளை அழைத்துப்பேசியது.

திருகாணி முறுக்கப்பட முஸ்லீம் லிக் தன் ஆதரவை வாபஸ் பெற்றது.வன்முறை,அஹிம்சை என்று காந்தி அறிக்கைவிட கங்கிரசும் ஆதரவை விலக்கிக்கொண்டது.கம்யூனிஸ்டுகள் மட்டுமே களத்தில் நின்றார்கள்.கட்சிக்குள் இருந்த வலதுசாரிகள் மாலுமிகள் சரணடைய ஆலொசனை கூறினார்கள். மறைந்த மோகன் குமாரமங்கலம் மும்பை சென்று ஏ.ஐ.டி.யு.சி தலவர்களோடு பேசினார்.நாடெங்கும் அடக்குமுறையை பிரிட்டிஷ் அரசு ஏவிவிட்டது."பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் சரணடைய மாட்டோம்.இந்தியமக்களுக்காக இந்தியமக்களிடம் சரணடைகிறொம் "என்று மாலுமிகள் அறிவித்தனர்.

கல்லொல்(துரோகம்)என்ற இந்தநாடகத்தை உத்பல் தத் மேடை ஏற்றினார்.இறுதிக்காட்சியில்' மேடையில் கொடிக்டகம்பம் இருக்கும்.நடுவில் பச்சை பிறைக்கொடி ஒரு பக்கமும்,மறுபக்கமம்கங்கிரஸின் ராட்டைகொடியும் ஒளிமங்கி இருட்டில் மறைய கம்பத்தின் உச்சியில் செங்கொடி பட்டொளி வீசிப்பறக்கும்.

இந்த நாடகம் பற்றி Peoples Democracy சரியான விமரிசனத்தை எழுதியது.New Age பத்திரிகை எதிர் விமரிசனத்தை எழுதியது.இந்த சர்ச்சை ஆறு மாதம் தொடர்ந்தது.

Theatre

இரண்டு மாதங்களாக தமிழகம், கர்நாடகம் என்று சுற்றினேன்.நண்பர்களையும், தோழர்களையும் பார்த்தும் பேசியும் மகிழ்ந்தேன். பலர் இடதுசாரி இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்ட கலைஞர்


கள் பற்றி எழுதுங்கள் என்று கேட்டார்கள்.மதுரையைவிட்டு நாகபுரியில் நிரந்தரமாக தங்க முடிவு செய்த போது என்னிடமிருந்த புத்தகங்கள் எல்லாவற்றையும் மதுரை பெத்தானியாபுரத்திலுள்ள

மார்க்ஸ் படிப்பகத்திற்க்குக் கொடுத்துவிட்டேன்.ஞாபகத்திலிருந்து எழுத்ம்போது தவறுகள் வரலாம்

என்ற எச்சரிக்கை உணர்வும் மனதில் ஊசலாடுகிறது.

இடதுசாரி கலைஞன் என்று என் மனதில் முதலில் வருபவர் உத்பல்  தத்  என்ற அந்த வங்க நாடக கலைஞன் தான்.little peoples theatre நாடககுழுவை நடத்திவந்தார்.மிகவும் புகழ்பெற்ற நாடகங்களான கல்லொல்(துரோகம்),துர்சொப்ன நகரே(கல்கத்தா), மாரீச வத்(மாரீசனின் சாவு) வங்க மக்களை புரட்டி எடுத்த நாடகங்களாகும்.இந்த நாடகங்களை வலதுசாரி அமைப்புகளோடு காங்கிரசும் சேர்ந்து கடுமையாக எதிர்த்தன.

அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக இருந்தவர்கள் அதுல்ய கோஷ்,பி.சி.சென், பின்னாளில் அரைப்பாசிஸ ஆட்சியை உருவாக்கிய சித்தார்த்த சங்கர் ரே ஆகியோராவர்.காங்க்கிரஸ் குண்டர்களும்,ரவுடிகளும் நாடகம் நடக்கும் இடத்திர்க்கு வந்து கலாட்டா செய்வார்கள்.நுழைவுச்சீட்டு வாங்கும் இடத்தில் நிற்பவர்களை கழிகளாலும்,கம்பாலும் தாக்குவார்கள். இந்தத்தாக்குதலில் முன்னால் நின்றவர்கள் சத்த்ர பரீஷத் குண்டர்கள். சத்திர ப்ரிஷத் என்றதும் என்னமோ ஏதோ என்று நினைத்துவிட வேண்டாம்.காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்புக்குப்பெயர்தான் சத்திர பரிஷத்.

இந்தரவுடி மாணவர் அமைப்பின் தலைவர்களாக அப்போது இருந்தவர்கள்ப்ரியரஞ்சன்  தாஸ்  முன்ஷி ,மம்தா  பானர்ஜி ,பிரமோத்  முகர்ஜி  ஆகியோர்.ஆனாலும் இத்தகைய தாக்குத்லையும் மீறி மக்கள் நாடகம் பார்க்க வந்தார்கள்.ஒரு கையால் தடியடியை தடுத்துக்கொண்டு மறுகையால் நுழைவுச்சீட்டை வாங்கிக்கொண்டு நாடகக் கொட்டகைக்குள் நுழைந்தார்களே ஏன்?