Friday, July 23, 2010

theatre3

துர் சோபன  ந  கரே (நகரத்தின் கெட்ட கனவுகள்) இந்த நாடகத்தின் கதை,கட்டமைப்பு,காட்சிகளமைப்பு என்று எல்லாமே வித்தியாசமாக இருக்கும்.மேடையின் பின்பகுதியில் ஒரு சாலை இருக்கும்.நடுவில் போக்குவரத்தை நெறிப்படுத்தும் போலீஸ் நிழற்குடை இருக்கும்.அதன் கீழே ஒரு குப்பைத்தொட்டி இருக்கும்.டீகடைபோன்ற அமைப்பு இடதுஓர மத்தியில் இருக்கும்.மையமத்தியில் பெரும் முதலாளிகள் ஆலோசிக்கும் அறை இருக்கும்.மேடையின் இடதுபுறம் தொழிலாளர்கள் பேசும் கூடும் இடமாகும்
முதலாளிமார்கள் பேசிக்கொண்டிருப்பார்கள்."வரவர இந்த தொழிலாளர்கள் படுத்தும்பாடு தாங்கமுடியவில்லை.ஜோதிபசு வேறு ஆட்சிக்கு வரப்போராறாம்.என்னசெய்யலாம்" என்று அங்கலாய்ப்பார்கள்."இடைமட்ட தலைவர்கள் இரண்டுபேரை சாய்ததால் சரியாகிவிடும்.நான்பார்த்து கொள்கிறேன்" என்று கூறி ஒருதுரோகியை செட்டப்செய்வான் மற்றொருவன்.தொழிலாளர்கள் கூடும் இடத்தில் அந்த துரோகி நின்றுகொண்டு நோட்டம் போடுவான். தொழிலாளர்களின் இடைமட்டத்தலைவர்கள் டீகடையில் அமர்ந்து கொண்டு போரட்டம் நடத்துவது பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள்.முதலாளிகளின் கோழிக்கறிக்கும், குப்பிச்சாராயத் திற்கும் சோரம் போன துரோகி ஒரு தலைவனை வேட்டிச்சாய்த்துவிட்டு ஓடிவிடுவான்.இப்படி பல கொலைகள் நடக்கும். பத்திரிகைகள் அராஜகம்,வன்முறை,தொழிற்சங்கபோட்டி என்று வர்ணிக்கும்.அந்த துரோகியை முதலாளிமார்கள் பாராட்டுவார்கள். ஒரு நாள் ஒரு தலைவர் பெயரைஸ் சொல்லி கொல்லச்சொலவார்கள்.அவர் மிகவும் நல்லவர் என்பது அவனுக்குத்தெரியும்.தயங்குவான்.மறுதளிப்பான்."நீ பல கொலைகளை செய்தவன்.உன்னை போலீசில் பிடித்துக் கொடுப்போம்"என்று மிரட்டுவார்கள்.அவன் தப்பி ஓடுவான்.போலீஸ் துரத்தும்.நகரம் முழுவதும் ஓடுவான்.சாலையில் ஒடும்போது எதிரே போலீஸ் துப்பாக்கியோடு வரும் பின்னாலும் துப்பாக்கிபோலீஸ்.நிழற்குடையின் மீது ஏறி நின்று"நான் உண்மயைச் சொல்லிவிடுகிறேன்.என்றுயார் யாரை எந்த முதலாளி கொல்லச்சொன்னார் என்பதை கூறுவான். கல்கத்தா நகரத்தில் உண்மையிலேயே நடந்தநடத்திய பெயரளும் வரும்.இரண்டுபக்கமுமிருந்து சீறிப்பாயும் குண்டுகள் பட்டு செத்து குப்பைத்தொட்டியில் வீழ்வான்.
மறு நாள் பத்திரிககளில்"an extremist was killed in police encounter" என்ற செய்தி
பத்திரிகை வடிவில் அரங்கத்தில் பிரும்மாண்டமாக தோன்றும்.

2 comments:

hariharan said...

இந்தமாதிரியான வீதி நாடகங்கள் இன்றும் தேவை.

அரசை அம்பலப்படுத்த தெருமுனையில் கூட்டம் போட்டு பேசுவதைவிட தெருமுனை நாடகங்கள் மக்களை சீக்கிரம் தட்டியெழுப்பும்.

kashyapan said...

தோழர் ஹரி, பசிக்கும்போது அவசரத்திற்கு ஒரு வடை,காப்பி சப்பிட்டு பசியாறுவது வீதி நாடகம். சத்தான உணவு முன்மேடை நாடகம்.இது பற்றி வரும் இடுகைகளில் விவாதிப்போம்....காஸ்யபன்.