Tuesday, October 05, 2010

வட்டிக்காரன் வலை (சௌகார்--கி--பாஷ்)

சுமார் முப்பது வருடங்களாவது ஆகியிருக்கும். அப்போது CINE INDIA என்றொரு பத்திரிகை வந்து கோண்டிருந்தது. திரைப் படம் பற்றி அறிவார்ந்த கட்டுரைகளைத்தாங்கி ஆங்கிலத்தில் வெளிவந்து கொண்டிருந்தது. சித்தார்த்த கார்க் என்பவர் அதனுடைய ஆசிரியராகப் பணியாற்றினார்.பூனே திரைப்படக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்.அந்தப்பத்திரிகையின் தீவிரமான வாசகன் என்ற முறையில் அவர்களோடு தொடர்பு உண்டு


"வர்த்தக ரீதியாகவே படைப்பு.கள் வந்து கொண்டிருக்கின்றனவே,ஆரம்பத்திலிருந்தே இந்தத்துறை இப்படித்தானா?" என்றொரு சந்தேகம் எனக்கு இருந்தது.அந்தப்பத்திரிகையின் மூலம் சர்வதேசரீதியாகவே திரைப்படத்துறை மிகவும் ஆரோக்கியமான ஆரம்பத்தையே கொண்டிருந்தது என்பதைத் தெரிந்துகொண்டேன்.ஒரு திரப் படத்தீன் கதையை எழுதி விளக்கியிருந்தார்கள்

"வட்டிகாரன் வலை"( சௌகார்-கி-பாஷ்)

மும்பைனகரத்து பஞ்சாலையின் வாயில்.தொழிலாளர்கள் உள்ளே சென்று கொண்டிருக்கிறார்கள்.காவாலாளி ஓருவர் ஒவ்வொருவராக பரிசொதித்து அனுப்பிக் கொண்டிருக்கிறார். வயதான தொழிலாளி ஒருவரைத்தடுத்துநிறுத்துகிறார்.." நிர்வாகம் உங்களுக்கு வயதாகிவிட்டதால் உங்களுக்கு ஓய்வு அறிவித்துவிட்டது" என்று தடுக்கிறார்".நான் வேலை செய்யும் இயந்திரத்திற்கு ஓய்வு இல்லை. எனக்குமட்டும் ஓய்வா" என்று சண்டை வருகிறதுகாவலாளி தள்ளிவிட தொழிலாளி படிகல்லில் மொதி கீழே விழுகிறார். சாகும் தருவாயில் அவருடைய மகன் அவர் தலையை மடியில் கிடத்திக் கொள்கிறான்.

காட்சி மாறுகிறது.பூனே நகரத்தின் அருகிலுள்ள வயல்வெளி. அந்தத் தொழிலாலி  வயக்காட்டில் கிணற்றிலிருந்து நீர் இரைத்துக்கொண்டிருக்கிறான்.அவன் மனைவி இடுப்பில் குழந்தையோடு கஞ்சி கொண்டுவருகிறாள்.வயலின்பசுமை அவர்களை மகிழ்விக்கிறது. சில மாதங்கள் கழித்து அறுவடை நடந்து கொண்டிருக்கிறது. அப்போது வட்டிக்காரன் வந்து மகசூலை மட்டுமிலாமல் நிலத்தையும் பிடுங்கிக் கொள்கிறான்.விவசாயி மனைவியொடும் குழந்தையோடும் மும்பையை நோக்கி நடக்கிறான்.

காட்சி மாறுகிறது.கிழவனாகிவிட்ட ,விவசாயி, கூலித்தொழிலாளியாகி மண்டையில் அடிபட்டு மகனின் மடியில் கிடக்கிறான். வாலிபனான மகனிடம்" என்ன ஆனாலும் வட்டிக்காரனிடம் மட்டும் கடன் வாங்காதே" என்று சத்தியம் வாங்கிக்கொண்டு உயிரை விடுகிறான்..

இந்தப்படம் ஊமைப்பட காலத்தில்(MOVIE) வந்தது தொழிலாளியாக பாபு ராவ் பேயிண்டர் என்பவர் நடித்தார்.மகனாக இளம் சாந்தாராம் நடித்தார்

இந்த .படத்தை உடனேயே பார்க்க வேண்டும் என்று நீங்க்கள் துடிக்கலாம்.பூனேயில் இருக்கும் திரைப்பட காப்பகதில் ஐம்பதுஅடி, நூறு அடி என்று அறுந்த நிலையில் சில துண்டுகள் மட்டுமே உள்ளன என்று தெரிந்து கொண்டேன்

3 comments:

மோகன்ஜி said...

நலமா? பதிவை ரசித்தேன்.. பல பொக்கிஷங்களை நெறியான பாதுகாத்தலின்றி தொளித்துக் கொண்டேயிருக்கிறோம்

பாரதசாரி said...

இப்போது உள்ளது போல் தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் மிக இயல்பான சமூக சூழலை வெளிபடுத்தும் விதமாக இருக்கு. கண்ட குப்பைகளை ரீமேக் செய்யும் சினிமா வியாபாரிகள் இதைப் போன்ற நல்ல படங்களை மறப்பது கொடுமை.

kashyapan said...

நண்பா!"பூப்லி"(நேரடி ஒலிபரப்பு)என்று இந்திப்படம் ஒன்று வந்துள்ளது. தமிழில்" காலம் மாறிபோச்சு" என்று வந்துள்ளது.தெலுங்கில் "மாபூமி" ,வஙக இயக்குனரின் "தோ-பிகா -ஜமீன்" நிறைய உள்ளது.ஆனாலும் முதல் முதலாக வந்த படம் பாதுகாக்கப்படவில்லை என்பதுதான் ஆதங்கம்---காஸ்யபன்.