Tuesday, November 16, 2010

டாக்டர் பாபா சகேப் அம்பெத்கர் திரைப்படம்......

டாக்டர் பாபா சாகேப் அம்பெத்கர் திரைப்படம்....


டிசம்பர் மாதம் 3ம் தேதி அன்றுஅண்ணல் அம்பெத்கரின் வாழ்வினைச்சித்தரிக்கும் திரைப்படம் தமிழில் வெளியிடப்படுகிறது.இதில் அம்பேத்கராக நடித்த மம்முட்டிநடிப்புக்கான தேசீய விருதினைப் பெற்றார். நிதின் தேசாய் கலை இயக்குனர் விருதினைப்பெற்றார். இதனை இயக்கிய டாக்டர் ஜப்பார் படெல் சிறந்த இயக்குனருக்கான விருதினை ஏற்கனவே பெற்றவர்.

பூனே நகரத்தில் உள்ள குழந்தை மருத்துவத்தில் மிகச்சிறந்தவர்களில் ஒருவர் டாக்டர் படெல். அவருடைய இதய தாகம் நாடகங்கள்..Theatre Accademy என்ற அமைப்பை உருவாக்கினார். விஜய் தெ.ண்டுல்கரின் உலகப்புகழ் பெற்ற நாடகமான "காசிராம் கொத்வால்" நாடகத்தை இயக்கியவர் ஜப்பார் படேல்.

"தலித் இலக்கியம் மராட்டிய மாநிலத்தில் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது அது உயர்ந்த நிலைக்குச்சென்றது. பலமானதும் கூட.அதனால் புத்தியுள்ள மராட்டியனுக்கு அம்பெத்கர் யார் என்று தெரியும் யாரும் தலித் இலக்கியத்தை ஒதுக்கமுடியாது" என்கிறார் ஜப்பார் படெல்.

" அம்பேத்கர் பாத்திரத்திற்காக வெளிநாட்டில்கூட தேடினோம்.இறுதியில் இரண்டு பேரை முடிவு செய்தோம். அவர்களுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுக்க நினைத்தோம் ஆனால் எனக்கு மமுட்டி மீது ஒரு கண் இருந்தது.மூன்றாவது நபர் மூலம் தொ.டர்பு கொண்டபோது ஒரு புன்னகை தான் பதிலாக வந்தது.கம்ப்யூட்டர் மூலம் அவர் முகத்தில் சில மாற்றங்களை வரைந்து பார்த்தேன். அம்பேத்கருக்கு மிக நெருக்கமான உருவ ஒற்றுமை.கிடத்தது" என்று விளக்கினார்.

" நடிக்க ஏற்றுக்கொண்ட பிறகு அவரிடம் ஏற்பட்ட மாற்றம் அற்புதமான ஒன்று. அம்பேத்கர் மாதிரியே புன்னகை. அவரைமாதிரியே கோபம்.அவரை மாதிரியே அறிவார்ந்த பாவனையை கொண்டுவந்த அழகை படம் பார்த்துத்தான் அனுபவிக்கவேண்டும்.உள்ளார்ந்த ஈடுபாடுஇல்லையென்றால் இதனைச்சாதிக்கமுடியாது" என்று வர்ணித்தார்.

"நான் சொல்வதை மிகக் கூர்மையாகக் கவனிப்பார்.திரைக்கதையை மீண்டும் மீண்டும் படிப்பார்.அம்பேத்கர் என்ற மாமனிதரை உள்மனத்தில் அறிவின் உதவியோடு நிர்மாணித்துக் கொண்டார். படத்தில் அவருக்கு மிகப்பெரிய உரைகள் கிடையாது.மௌனத்தின் மூலமாகவே தன் நடிப்பை வெளிப்படுத்தினார்." என்கிறார் ஜப்பார் படேல்..

"காந்தியைப்பற்றி அதிகம் சொல்லவில்லை என்ற விமரிசனம் எழுந்ததே ?"என்று கேட்டபோது"நான் அம்பேத்கர் பற்றிதான் படம் எடுக்கிறென்.அதில் காந்திக்கு எவ்வளவு இடமுண்டு' என்றார்.

"அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்தார். அவர் படித்தகாலத்தில் அந்த வளாகத்திற்குள் கருப்பின மக்கள் நுழையக்கூடமுடியாது. பல்கலைகழகத்தின் எதிரில் தான் நிக்கிரோக்களின் செரி.அந்த்ப் பகுதியில் அவர் நடந்து சென்றிருப்பாரே! ஏதாவது நட்ந்திருக்குமே" இவை எல்லம் என்மனதிலோடியவைகள்.நாங்கள் அங்கே சென்றும் படம் பிடித்தோம்"

"காந்தி படத்திற்கு 18 கோடி கொடுத்தார்கள். இந்தப்படத்திற்கு மராட்டிய மாநிலம் ஒரு கோடி கொடுத்தது.மத்திய அரசு 5கோடி கொடுத்தது." என்று ஜப்பார் படெல் குறிப்பிட்டார்.

4 comments:

அப்பாதுரை said...

அம்பேத்கரைப் பற்றி அதிகம் படித்ததே இல்லை. பள்ளி நாட்களில் ஏதோ அங்கே இங்கே மேற்கோள் வருமே தவிர, காந்தி நேரு வாழ்க்கை வரலாற்றைப் படிக்கச் சொன்ன அளவுக்கு அம்பேத்கரின் வரலாறு புத்தகங்களில் இடம் பெற வில்லை. ஒரு வேளை நான் படித்த பள்ளியில் தான் அப்படியா?

சிவகுமாரன் said...

என் அனுபவமும் அப்படித்தான் அப்பாத்துரை. இன்னும் சொல்லப்போனால் அம்பேத்காரை திருமாவளவன், கிருஷ்ணசாமி ரேஞ்சுக்கு தான் வெகு காலம் வரை நினைத்திருந்தேன், வருடத்திற்கு ஒரு படம் பார்த்தாலே அதிகம் எனக்கு. பாரதியை 3 முறை பார்த்தேன்.அடுத்து அம்பெத்காருக்காக காத்திருக்கிறேன் இங்கு ரிலிஸ் செய்வார்களா, எனக்கு அவகாசம் கிடைத்து பார்க்கும் வரை ஓடுமா தெரியவில்லை.
நன்றி காஷ்யபன் அய்யா

அழகிய நாட்கள் said...

திரைத்துறையிலும் கூட சாதீயம் கோலோச்சுகிறது என்ற முடிவுக்கு வரமுடிகிறது. அரசுத்துறை அதிகாரிகள் என்றால் கேட்கவே வேண்டியதில்லை. 80 சதமானம்பேர் (நம்மவர்கள்) 20 சதமானம்பேரை(தலித்துகள்) எப்படி எதிர்கொள்ளுகிறார்கள் சமூக ரீதியாக என்பதில்தான் எதிர்கால சமூகம் தொங்கிக்கொண்டு இருக்கிறது

எஸ்.கே said...

அம்பேத்கார் பற்றி கொஞ்சமாகவே கேள்விப்பட்டுள்ளேன்! அவர் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்ததாக கேள்விப்பட்டுள்ளேன்!