Friday, April 15, 2011

ஊழல் ஒழிப்பும் அன்னா ஹஸாரேயும்.....

ஊழல் ஒழிப்பும் அன்ன ஹஸாரேயும்....
அலைக் கற்றை ஊழலூடைய பிரும்மாண்டம் உலகம் பூராவிலும் கொந்தளிப்பை எற்படுத்தியுள்ளது உண்மைதாண். குறிப்பாக இந்தியாவில் கடுமையான எதிப்பு உருவானது. இந்த மக்கலள் எதிர்ப்பு ஒருமுகப்படுத்தபட்டு அது சர்யான திசைவழியில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று விரும்பாத இந்தியன் எவரும் இருக்க முடியாது.
இதில் முன் கையெடுத்து செயல் பட்ட அன்ன ஹஸாரே அவர்களின் துணிச்சலை பாராட்டாதவர்கள் இல்லை. 73 வயதான் அவர் லேக் பால் மசொதாவுக்காக சாகும்வர உண்ணாவிரதம் இருந்தது மின்சாரம் பாய்ச்சியது போல் மக்கள் மனதைக் கவ்வியது.பத்திரிகைகள் பாராட்டின. வெகுஜன்ங்கள் இந்தியா ப்ராவிலும் அவருக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள்நடத்தின.அவருடைய கோரிக்கை என்ன?
ஊழல் புரிந்தவர்கள் அத்துணைபெரையும் பிடித்து தூக்கில் போடச் சொல்லவில்லை கைது செய்யச் சொல்லவில்லை. ஊழலை ஒழிக்க ஒரு அதிகாரமையத்தை எற்படுத்த வெண்டும் என்றார். அதற்கான மாசொதா 1969ம் ஆண்டு மக்களவையில் நிறைவேற்றப் பட்டது. ஆனால் நடைமுறைக்கு வராமல் அது சாகடிக்கப்பட்டது. புதிய மசொதா கொண்டுவர அந்தமசொதாவை வடிவமைக்க ஒரு குழு போட அந்தக்குழிவில் சரிபாதி சாதாரணமக்களும் இருக்கவேண்டும் என்றார். அதற்குத்தான் இந்த இழுபறி.
இந்த ஊழல் ஒழிப்பு மையம் உச்சனீதிமன்ற்ம், உயர்நீதிமன்ற நீதிபதிகளை விசாரிக்காது என்று அன்ன ஹஸாரே அவர்களே மன்னாப்பு கொடுத்துவிட்டார்.ஒருதாய் பத்.ததுமாதம் சுமந்து பெறவர்கள் தான் நீதிபதிகளும். நீதி தேவதையால் பெற்றேடுக்கப்பபட்டவர்களல்ல.பின் ஏன் மன்னாப்பு!
"அன்னா" அவர்களின் போராட்டத்தின் பொது அதற்க ன எற்பாடுகள் செய்யப்பட்டது.உண்ணாவிரதப்பந்தல் கூடாரம் அகியவற்றுக்காக 10லடசம் செலவு தொலைபெசிக்கட்டனம் 9லட்சம். பயனச்செலவு 4.5 லட்சம்.அச்சுக்கூலி8லட்சம்.ஊண்வு வகையில் ஒருலட்சம். இதற்காக ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.கிட்டத்தட்ட 85லட்சம் இதுவரை வசூலாகியுள்ளது.
உலக பணக்காரர்களில் ஒருவரான அலுமினியக் கம்பேனி முதலாளி ஜிண்டால் 25லட்சம் கொடுத்துள்ளார்மற்றும் ஈச்சர் கம்பெனி, சுரெந்திரபால், அருன் துக்கல்,,ஏஸ்.டி.எஃப்.சி என்று நங்கோடை வந்தவண்ணமிருக்கிறது. அறக்கட்டளை முறையான ரசீதுகளை நங்கொடையளர்களுக்கு அளித்துள்ளதாக நிர்வாகம் கூறியுள்ளது. .சர்யன கணக்கு உள்ளது என்றும் செலவு போக சுமார் 50 லட்சம் இருப்பதாகவும் அறிவித்துள்ளது
எனக்கு நினைவு வருகிறது. தேர்தல் சமயத்தில் கம்பெனிகள் கட்சிகளுக்கு நங்கோடை அளிக்கும். ஒருமுறை 25 லட்சம் ரூயை ஒரு கட்சிக்கு கம்பெனி ஒன்று நங்கொடையாக அனுப்பியிருந்தது. அந்தக்கட்சி அதனை திருப்பி. அனுப்பி விட்டது.அனுப்பியது டாடா கம்பெனி. அனுப்பியவர் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியகல் தலமைக்குழு உறுப்பினர் தொழர் சீத்தாராம் எச்சூரி.

17 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

பொன் மாலை பொழுது said...

இப்போது இங்கு உள்ள அமைப்பின் படி இந்த சீரழிவுகளுக்கு வேறு என்னதான் செயலாம் மக்கள்? யாராவது ஒருவர் அவர்களுக்கு வேண்டியுள்ளது ஒருங்கிணைத்து செல்வதற்கு. வேண்டாம்,அன்னா வின் திட்டத்தை விடுங்கள். நேரடியாக மக்களே தெருவில் இறங்கி போராடலாம். இந்தியா போன்ற பன்முகம் கொண்ட அமைப்பில் இது வெற்றியைதருமா? வெகு விரைவில் இதனை சிதைத்து சின்னாபின்னமாகி விட்டுத்தான் நம் ஆட்கள் /தலைவர்கள் மறு வேலை பார்ப்பார்கள். நேரடி அனுபவமும் நிறைந்த நீங்கள் ஏன் சொல்லகூடாது இந்தியர்கள் என்ன செய்ய வேண்டுமென்று?

ப.கந்தசாமி said...

ஆகக்கூடி இந்தப் பணக்காரர்களின் கைக்கூலி இந்தியாவில் லஞ்சத்தை ஒழிக்கப்போகிறார் !

இந்த உண்ணாவிரதத்தில் சாப்பாட்டுச் செலவு எப்படி வந்தது?

saarvaakan said...

நல்ல பதிவு

hariharan said...

ஊழல் என்பது என்ன?
அரசாங்கத்தில் ஒரு அமைச்சர் அல்லது அதிகாரி மக்களுக்காக ஒரு திட்டத்தை நடைமுறைப் படுத்தும்போது ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவு செய்யாமல் தன்னுடைய பாக்கெட்டில் போடுவது தான் ஊழல் என்று கருதினேன். ஆனால் ஊழலுக்கான நிறைய வழிகளை இந்த உலகமயமாக்கல் திறந்து விட்டிருக்கிறது. உதாரணமாக ‘ஸ்பெக்டரம்’ என்பது அரசாங்கத்தின் இயற்கைவளம், இதை முழுவதும் அரசாங்கமே பயன்படுத்தமுடியாது. இந்த இயற்கைவளத்தை ‘சந்தை மதிப்பை’ விட குறைவாக விற்றதால் அரசுக்கு பல இலட்சம் கோடி இழப்பு. 1.76 இலட்சம் கோடி அரசிற்கு இழப்பு ஏற்படுகிறதென்றால் அதை ஏலத்தில் எடுத்த நிறுவனக்களுக்கு இந்த தொகை லாபமாக கிடைக்கிறது எனறு பொருள். அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்திவிட்டு அதன் மூலம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், அதிகாரிகள் தனியார் நிறுவனக்களிடமிருந்து கையூட்டாக பெறுவதும் ஊழல் தான்.

சமூகத்தில் சிறிய எண்ணிக்கையிலுள்ள பெருமுதலாளிகள் மேன்மேலும் வருவாய் ஈட்டுவதற்கு பாராளுமன்றத்தில் பட்ஜெட் போடப்படுகிறது,3,74,000 கோடி கார்ப்பரேட் வரிகள் தள்ளுபடி செய்யப்படுகிறது. இது ஊழ்லை சட்டப்படி இல்லாமல் செய்வது. இனிமெல் ரூ 50, 100 லஞ்சம் வாங்குகிறவனை ஜெயில்ல் போட்டிருவிடுவாரர்கள்.லட்சணக்கணக்கில் செய்பவர்கள் சட்டப்படி தப்பிவிடுவார்கள்.

ஹசாரேவிற்கு இவ்வளவுதூரம் இந்த மீடியாக்கள் விளம்பரம் செய்யும்போது ஐயம் எழுகிறது.

Jobless Jack said...

In the Indian Opinion, dated December 17, 1910, under the heading Tata and Satyagrahis, Gandhi wrote: "By donating another sum of Rs 25,000 for the Satyagraha Campaign, Mr Ratan Tata has demonstrated that he has utmost sympathy for us and that he fully appreciates its value. Including his earlier donations, a total of Rs 125,000 has been offered in India."

ttpian said...

அடலேறே அரியானா புறப்படு!
அடாது மழை பெய்திடினும்,விடாது வெயில் அடித்திடினும், .நீ, எனக்கு முன்பே
கழகம் வாழ்க ! கலக்சன் கிங்கு வாழ்க! என்று விண்ணதிர முழங்கி வஊறு கொண்டு வா!
நான் கால் வலியை கருதாமல் ,ஏதாவது ஒரு மனைவியை அழைத்துகொண்டு ,இடர்பாடுகளை கருதாமல்,விமானத்தில் வந்து சேர்வேன்!

ரிஷி said...

பதிவில் சொல்லப்பட்ட விஷயங்களுக்கான ஆதாரம்??

kashyapan said...

ரிஷி அவர்களே! India Against Coruption (IAC) அறக்கட்டளை கொடுத்த செய்தி நூறாண்டு பழமையுள்ள "ஹிதவாதா" என்ற ஆங்கில பத்திரிகயில்வந்துள்ளது, அதில் குறிப்பிடப்பட்டுள்ள செலவினை 9,47,344 என்பதை தோராயமாக 10 லட்சம் என்று வசதிக்காக குறிப்பிட்டுள்ளேன்.மத்திய இந்தியாவில் நாகபுரி,ஜபல்பூர்,ரெய்பூர்,போபால் அகிய இடங்களிலிருந்துவெளியாகும் இந்த்ப்பத்திரிகை கோபால கிருஷ்ண கோகிலேயால் ஆரம்பிக்கப்பட்டது 15-4-11 இதழில் 5ம் பக்கம்,4ம்பத்தியில் "Anna Hazare and associates spent 30lakhs on camlaign" என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது---காஸ்யபன்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அன்னா ஹஸாரே ஒரே நாளில் பிரபலமானவரில்லை காஸ்யபன் சார்.

நீங்கள் அறியாததல்ல.

மஹாராஷ்டிராவில் அவருடைய ரெலெகான் கிராமத்தின் வளர்ச்சியும் அதற்கு அவர் பட்ட முயற்சிகளையும் நாடறியும்.

மஹாராஷ்டிரா அரசுக்கு நிர்பந்தம் கொடுத்து மக்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவர வழிசெய்தார்.அதே வடிவில்தான் தேசிய மக்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நாடு முழுவதும் அறிமுகப் படுத்தப்பட்டது.


1991ல் தனக்களிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை மஹாராஷ்டிர அரசின் ஊழல்வழக்கு ஒன்றிற்கெதிராக சாட்சியங்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததற்காக அரசிடமே திரும்பக் கொடுத்தார்.

பின்னாளில் அவரின் சமூக சேவைகளுக்காக பத்மபூஷண் விருதால் கௌரவிக்கப் பட்டார்.

பலாப்பழமென்றால் ஈக்கள் மொய்ப்பது பலாவின் குறையல்லவே காஸ்யபன் சார்.

எல்லோரையும் நம்பமுடியாவிட்டாலும் எல்லோரையும் சந்தேகிக்கத் துவங்குவது பெருத்த ஆபத்தல்லவா?

hariharan said...

சுந்தர்ஜி அவர்களே,

அன்னா ஹசாரே நெர்மையானவராக இருப்பதில் சந்தேகமில்லை, அவருடன் இப்போதுள்ள பிரசாந்த் பூசன், சாந்திபூசன் ஆகியோரும் நேர்மையானவர்கள் என்பது நாடறியும். ஆனால் ஊழலின் ஊற்றே இந்த நன்கொடைதான் என அவர் அறியாதது தான் ஆச்சரியமாக இருக்கிறது. நாம் அராசியல்வாதிகளை ஊழல்வாதிகள் என்றுஇகழ்கிறோம், ஆனால் அவர்கள் கட்சி எப்படி நடத்துகிறார்கள் என்று நாம் ஒருநாளும் பார்க்கவில்லை. இங்கு தான் மற்ற கட்சிகளுக்கும் இடதுசாரி கட்சிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. பெரு முதலாளிகளின் நன்கொடைகளை வாங்கியதால் திருப்பிச் செலுத்த வேண்டிய நன்றிகள் தான் ஊழலின் வேர்.

hariharan said...

Hazare and his associates brought the government to its knees on the Lokpal Bill issue through a campaign on which a little over Rs 30 lakh was spent in the past one year.

According to details provided by 'India Against Corruption' (IAC), which spearheaded the campaign, it received a total donation of Rs 82,87,668 while it spent Rs 32,69,900 for the campaign.

"We have issued receipts to all the donors and have maintained a record of their details. We issued receipts on account of Public Cause Research Foundation which is acting as the secretariat for the campaign," an IAC spokesperson said.

According to IAC, they spent Rs 9,47,344 for tent, bed, sound system and hall booking for the Jantar Mantar protest and other programmes.

An amount of Rs 8,93,938 was spent on telephone calls while another Rs 4,61,382 was spent on travelling.

Rs 2,405 was spent on postage while the amount for other expenses were: Printing (Rs 7,32,624), food (Rs 81,751), medical expenses for those on fast (Rs 44,908), video- recording (Rs 11,755) and stationary (Rs 6,940).

Jindal Aluminium made the highest donation of Rs 25 lakh followed by an individual Surender Pal Singh (Rs ten lakh), Ramky (Rs five lakh) and Eicher Good Earth Trust and an individual, Arun Duggal, Rs three lakh each.

HDFC Bank gave Rs 50,000 to the movement while Carmel Convent School in Delhi donated Rs 20,000 for the IAC. The Jammu and Kashmir Bank Ltd shelled out Rs 10,000.

"We received a donation less than Rs 5,000 from 2,871 people which amounted to Rs 7,34,498," the spokesperson said.
http://www.deccanchronicle.com

சிவகுமாரன் said...

அன்னாவை சுற்றி இருப்பவர்கள் ஆபத்தானவர்கள் தான். ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள். எனக்கென்னவோ சிலர் அவர் படத்தைப் போட்டு ஒட்டு கேட்பார்கள் போல் தெரிகிறது .

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

தோழர் ஹரிஹரனுக்கு இது.

எனக்கும் சுற்றியிருப்பவர்களைப் பற்றிய அந்த பயம் இருக்கிறது.ஆனாலும் பொது வாழ்வில் வெகு சீக்கிரமே தன்னைச் சரிசெய்து கொள்லாவிட்டால் அதற்குக் கொடுக்கவேண்டிய விலை என்னவாக இருக்கும் என்பதை அன்னா ஹஸாரே அற்ந்திருப்பார் என்றும் தோன்றுகிறது.

நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

RVS said...

பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை.. ;-))

சிவகுமாரன் said...

என் வலைப்பக்கம் அய்யா வருவதில்லையே ஏன்?

Subu said...

அன்னா ஹசாரே வாழ்க.. அவர் முயற்சி வெல்க.. ஜெய் ஹிந்.....

....ஆனால்..... ....ஆனால்.....

அன்னா ஹசாரே RTI சட்டம் கொண்டு வந்தார் ... அந்த RTIவந்த பின்னால் நம்ம ஆ.ராஜாவும் ஆகா மந்திரியும் அவரோட புள்ளிங்களும் 167000 கோடி பண்ணல்லியா என்னா ?

அதே போலத்தான் சார்.....

கநாடகாவில லோக் பால் சட்டம் எத்தினியோ நாளா கீது ... அங்கே ரெட்டி சகோ. கொடி கட்டி பரக்கல்லியா என்னா ?? கர்நாடகாவில இல்லாத ஊழலா ?

வலைப்பதிவுக்கு வாழ்த்துக்கள்

அன்புடன்