Wednesday, July 13, 2011

தென் இந்திய ரயில்வேயும் செட்டிநாட்டு முதலாளிகளும் ......

தென் இந்திய ரயிலும் செட்டிநாட்டு முதலாளிகளும்.......

இந்தியா சுதந்திர மடையும் முன்னால் தென் இந்திய ரயில்வே (S.I.R.),பெங்கால் நாக்பூர் ரயில்வே (B.N.R),மெட்றாஸ் ரயில்வே (M.S.M) என்று தனியார் வசம் இருந்தது.
சென்னை எக்மோரிலிருந்து ஒரு ரயில் புறப்படும்.அது விழுப்புரம்,மாயவரம், கும்பகோணம், காரைக்குடி,தனுஷ்கோடி செல்லும். அங்கு ரயில் கப்பலுக்குள் செல்லும். கப்பல் கொழும்பு செல்லும். கொழும்பில் ரயில் கப்பலிலிருந்து தரைக்குச்செல்லும். அங்கிருந்து காங்கெசன் துறை செல்லும்.சென்னை எக்மோரில் ஏறிய பயணி காங்கெசன் துறை வரை இறங்காமலேயே பயணிக்க முடியும். இந்த ரயிலுக்கு "போட் மெயில்"
என்று பெயர்.

இந்த ரயிலில் தான் செட்டிநாட்டு முதலாளிகள் சென்னையிலிருந்து காரைக்குடி வருவார்கள். கரைக்குடிக்கு முன்னாலெயே அவர்கள் கிராமம் வரும். ரயில் நிலையம் கிடையாது. நட்டநடுவில் ரயி ல் நிற்கும் . அவர்களுடைய கணக்குப்பிள்ளை, மற்றும் பணியாட்கள் நிற்பார்கள் .முதலாளி இருக்கும் பெட்டி அருகில் சென்று அவரிறங்குவதற்கு வசதியாக, படிகளை வைப்பார்கள். முதலாளி இறங்குவார். கணக்குப் பிள்ளை ஒடிப்போய் இஞ்சின் ஒட்டுபவரிடம் 20 ரூ கொடுப்பார். கரி போடுபவரிடம் 10ரூ கொடுப்பார். ரயில் புறப்படும்.

இன்று நிலமை மாறிவிட்டதுஎன்று எழுத ஆசைப்ப்பட்ட லும் முடியவில்லை.உத்திரப்பிரதெசம்,பிகார் மாநிலங்ளில் நிலமை வேறு.கிராமத்து மக்கள், நகரங்களுக்கு செல் வார்கள். வரும் பொது ரயிலில் ஏறுவார்கள்.அவர்கள்கிராமத்துக்கு அருகில்ரயில் வரும்போது சங்கிலியைப்பிடித்து நிறுத்துவார்கள்.இறங்கி வீட்டுக்குச்செல்வார்கள் அது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லும் ராஜதானி எக்ஸ்பிரசானாலும் கவலையில்லை.இதனால் சக்கிரமும் தண்டவாளமும் உரசிக்கோள்ளும். இரண்டுமே இது அடிக்கடி நடப்பதால் பலவீனமடைகிறது. ரயில் பெட்டிகள்தண்டவாளத்திலிருந்து விலக உயிச்சேதமுள்ள விபத்துகள் நடக்கின்றன .மமதாபனர்ஜிதான்நேற்றுவரை ரயில்வே அமைச்சர்.

தண்டவாளங்களின் கனத்துக்கு எற்றவாரு சரக்கு ரயில்களில் சரக்கு எற்றவேண்டும். ஆனால் முதலாளிமார்களுக்கு அவசரம் .கணக்கு வழக்கு இல்லாமல் சரக்கு எற்றப்படுகிறது. இதன் காரணமாக தண்டவாளங்கள் பலவீன மடைவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

தண்டவாளங்களி பூமியோடு பிணக்க ஸ்லீப்பர் கட்டைகள் இருக்கும் இப்போது மரத்திற்குப்பதிலாக கங்கிரீட் ஸ்லீப்பர்களைப் போடுகிறார்கள். நமது தலைப்பாகை கட்டிய பிரதமரின் திட்டப்படி இவை தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளன . கோடிக்கணக்கில் இதில் ஊழல் . தரக்குறைவான ஸ்லீப்பர்கள், பலவீனமான தண்டவாளங்கள் விபத்து நிகழத்தானே செய்யும்.

எல்லாவற்றுக்கும் மேலாக சிக்கன நடவடிக்கை என்று கூறி 3லட்சம் ஊழியர்கள் தேவை என்பதை மூடிமறைத்து புதிய நியமனங்களை செய்யமலிருக்கிறார்கள்.

திருணாமுல் காங்கிரசைச்சர்ந்தவர் திருவெதி. அவர்தான் ரயில்வே அமைசராக வெண்டும் என்று மமதா நிர்ப்பந்தப்படுத்தினார். விபத்து நடந்தபோது நிருபர்கள் திரிவேதியிடம் நீங்கள் விபத்து நடந்த இடத்திற்கு பொகவில்லையா என்று கேட்டார்கள். " நான் ஏன் பொக வேண்டும்.தற்போதுபிரதமர் தான் ரயிலுக்கு பொறுப்பு" என்றுகூறிவிட்டார்.

. அவர் கன்னத்தில் அறைந்து "விபத்து நடந்த இடத்துக்கு போடா " என்று சொல்ல ஆளில்லையே ! என்ன செய்ய?

9 comments:

செல்ல நாய்க்குட்டி மனசு said...

மனிதாபிமானம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு வருகிறது

அப்பாதுரை said...

பொறுப்பில்லாதவர்களுக்கு அறிவும் இல்லாமல் போனால் விபரீதம் தான்!

போட் மெயில் கேள்விப்பட்டிருக்கிறேன் - இதான் பின்னணியா? ரொம்ப நன்றி சார். போட் மெயிலில் இலங்கை போக முடிந்ததை நினைக்கும் பொழுது வியப்பாக இருக்கிறது!!! எங்கே தவறினார்கள் தமிழர்கள்?

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஊழல்...ஊழல்....ஊழல்....எங்க போனாலும் ஊழல்.

'பரிவை' சே.குமார் said...

போட் மெயில் கேள்விப்பட்டிருக்கிறேன் - இதான் பின்னணியா?

ADMIN said...

மனித உயிர்கள் மதிக்கப்படுவதில்லை..!

மனித நேயம் அறவே இல்லை..!

இங்கே அரசியல் அரக்கத்தனத்துடன் இருக்கிறது..!


அரசியல்வாதிகள் மனித்தன்மை இழந்து வெகு காலம் ஆகிவிட்டது என்றே தோன்றுகிறது..!

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
போட் மெயில் பற்றி தெரிந்து கொண்டேன்.
நன்றி ஐயா.

Unknown said...

ரயில்வே துறை பற்றிய பழைய செய்தி அறிவுக் கொள்முதல்! அத்துடன் தற்கால நிகழ்வை இணைக்கும் பார்வை சிறப்பு.

சிவகுமாரன் said...

அது சரி. எத்தனை பேரை கன்னத்தில் அறைவீர்கள்?

hariharan said...

இரயில் விபத்துகள் அதிகமாவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன, ஒன்று காலியான பணியிடங்கள் சுமார் 2 இலட்சம் நிரப்பப்படவில்லை, தண்டவாளங்கள் சரக்கு ரயில்களால் அதிகமாக தேய்மானம் அடைகிறது. அதற்கு முக்கிய காரணம் அள்வுக்கதிகமான சுமையையேற்றி கொள்ளை லாபம் பார்க்கிறார்கள்.
இரயில்களில் எலிகள் விளையாடுகின்றன, துப்பரவு செய்யப்படாமல் வருகின்றன. தனியார் மயமாக்கும் முயற்சிகள் நடந்துகொண்டேயிருக்கின்றன.