Wednesday, August 10, 2011

அந்தச்சிறுவனுக்கு அகவை அறுபதாகிறது.....

அந்தச்சிறுவனுக்கு இப்பொது அகவை அறுபதாகிறது.......

சோமயாஜுலு - கல்பாக்கம் தம்பதியரின் மகன் தான் சீத்தாரமன் சின்னஞ்சிறுவன் .பூர்வீகம் காக்கிநாடா பக்கம். தற்போது ஹைதிராபத்தில்தங்கியிருக்கிறார்கள்.தந்தை மத்திய அரசில் இஞ்சினியராக இருக்கிறார்.அடிக்கடி மாற்றல்வரும்.

1969மாண்டு.சென்னாரெட்டி தலமையில் தனிதெலுங்கானா பொராட்டம் நடந்தது. பொக்குவரத்து முழுவதுமாய் நின்று கல்விநிலயங்கள் மூடிவிட்டன. சீதாராமனின் தந்தைக்கு மகனின் கல்வி பற்றி கவலை குடும்பத்தை டில்லிக்கு மாற்றிக்கொண்டர். அங்கு அப்பொதுதான் +2 ஆரம்பம். சீதாராமனை அங்கு சேர்த்தார்.தெச அளவில் நடக்கும் சி.பி.எஸ் சி தேர்வு.

பத்திரிக்கையில் தேர்வு முடிவு வந்தது.பள்ளி அளவில் அவன் பெயரைக் காணவில்லை. மாவட்ட அளவில், மாநில அளவிலும் இல்லை. தொலை பெசி ஒலித்தது.பத்திரிகை நிருபர் பெசினார்.சீத்தாராமன்first in the national merrit list ல் வந்திருப்பதாகவும் புகைப்படம் வேண்டுமென்றும் கூறினார் அந்தச்சிறுவன் யாருமல்ல -மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் மாநிலங்கள் அவை குழு தலைவருமான சீத்தாராம் யெச்சூரி அவர்கள் தான்.டெல்லியில் பி.ஏ ஹானர்ஸ் படித்தார். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். ஜவஹர்லால் பல்கலையில் பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். முனைவர் பட்டத்திற்காக பதிவு செய்து கொண்டார்.

ஜே.என்.யு .வில் மாணவர்களிடையே செயல் பட்டார்.74-78 ஆண்டுகளில் மூன்று முரை தொடர்ச்சியாக மானவர் தலைவராக இருந்தார். அவசரநிலை வந்தபோது தலை மறைவாக இருந்து மாணவர்களுக்கு தலமை தாங்கினார். போலீஸ் கைதுசெய்தது.படிப்பு தடை பட்டது. 75ம் ஆண்டு மார்க்ஸிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கட்சியின் மத்திய குழு,செயற்குழு, அரசியல் தலைமைக்குழு என்று உயர்ந்தார்.

மிகச்சிறந்த படிப்பாளி. பின் நவீனத்துவ வாதிகளோடு விவாதிப்பதில் அளவு கடந்த ஆர்வமுள்ளவர். த .மு .எ.ச வின் கோவை மாநாட்டில் அவர்பங்கேற்று பெசியதை இன்றும் இலக்கிய ரசிகர்கள் நினைவு கூறுகிறார்கள்.
அத்வானியின் தேரோட்டத்துக்கு முன் டில்லியில் இடது சாரி கலைஞர்களுக்கு ஒரு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. அப்பொது " சோ " வின் நாடகமான "சம்பவாமி யுகே யுகே" குறிப்பிட்டார்.கலை,இலக்கியத்துறையில் அவருடைய ஞானம் போற்றத்தக்கது .உலகம் முழுவதும் சுற்றியவர்.விடுதலை இயக்கங்களின் முக்கியதலைவர்களுடன் நெருக்கமானவர்.குறிப்பாக யாசர் அராபாத், நெல்சன் மண்டேலா, ஃபிடல் காஸ்ட்றோ ஆகியோரை பலமுறை சந்தித்து விவாதித்துள்ளார்.

சென்னையில் நடந்த த .மு.எ.ச மாநாட்டில்.பரிணாம வளர்ச்சியையும், பத்து அவதாரங்களையும் அவர் இணைத்துபெசியது இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

செப்டம்பர் 16,17,18,ம் தெதிகளில் விருதுநகர் மாநாட்டிற்கும் அவர் வரலாம் என்று தெரிகிறது.

first in natinal merit list ல் வந்த சிறுவன் சீதாராமன் ,சீஈதாராம் யெச்சூரியாகி 12-8-11 அன்று தன் அறுபதாவது வயதை அடைகிறார்.இந்தியப் பாட்டாளிகளும், அறிவுஜீவிகளும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை சொல்கிறார்கள்.அவர்களோடு நானும்நாமும் நீங்களும் எல்லோரும் சேர்ந்து கொள்வோம்.

Haappy Birth day Com. Yechuri !

13 comments:

செல்ல நாய்க்குட்டி மனசு said...

திரு சீத்தாராம் யேச்சூரியை வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் !!
the heading says he is still young and energetic

கதம்ப உணர்வுகள் said...

திரு சீத்தாராம் அவர்கள் பற்றிய நிறைய விஷயங்கள் பகிர்ந்திருக்கிறீர்கள் ஐயா...

என் அன்பு வாழ்த்துகளும் வணக்கங்களும் பகிர்ந்த உங்களுக்கு என் அன்பு நன்றிகள்....

vijayan said...

இன்னுமொரு நூற்றாண்டு இரும் என வாழ்த்துகிறேன்.

hariharan said...

ஆச்சரியமாக இருக்கிறது, தோழர்.யெச்சூரிக்கு அகவை அறுபது என்பது. எனக்கு இன்னும் அவர் ஏதோ மாணவர் தலைவர் மாதிரிதான் தெரிகிறார்.
எளிய மக்களின் வாழ்விற்காக தன்னுடைய நலனை பாராது உழைத்துவரும் மகத்தான தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

என் தரப்பிலும் வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

திரு சீத்தாராம் அவர்கள் பற்றிய நிறைய விஷயங்கள் பகிர்ந்திருக்கிறீர்கள் ஐயா...

என் அன்பு வாழ்த்துகளும் வணக்கங்களும்

அழகிய நாட்கள் said...

தோழர் காஸ்யபன்! 1999 த மு எ ச கோவை மாநாட்டில் நானும் கலந்துகொண்டேன். அவரது ஆழ்ந்த உரையைக் கேட்டேன். சென்னை மா நாட்டுக்கு நான் வரவில்லை. விருதுநகரில் அவர் செப் 17,18,19 ஆகிய நாட்களில் ஏதேனும் ஒரு நாள் நிச்சயம் அவரது உரை இருக்கிறது. நீங்களும் வாருங்கள் கேட்கலாம். இன்று புதிதாய்ப்பிறந்தோம் என்று செயல்படும் இடது சாரிகளுக்கு பிறந்த நாள் எல்லாம் அவசியமில்லை... என்றென்றும்
திலிப் நாராயணன்

S.Raman, Vellore said...

தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பல முறை அவரது தெளிவான உரையை கேட்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் வேலூர் வந்த போது அவர் அளித்த பத்திரிக்கை பேட்டியை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பும், சில மணிகள் இருந்ததும் சிறப்பான அனுபவம்

சிவகுமாரன் said...

வணங்குகிறேன்.

சிவகுமாரன் said...

செப்டெம்பர் 17 விருதுநகர் வர விழைகிறேன்.

John Chelladurai said...

One of the honest leaders in the sub-continent. We wish him a long energetic life to serve this nation starving for good leadership.

Ayya, as is your wont, you have adopted a wonderful journalistic approach in this write up too, that made it lucid to read. Thanks for blogging this

அம்பாளடியாள் said...

first in natinal merit list ல் வந்த சிறுவன் சீதாராமன் ,சீஈதாராம் யெச்சூரியாகி 12-8-11 அன்று தன் அறுபதாவது வயதை அடைகிறார்.இந்தியப் பாட்டாளிகளும், அறிவுஜீவிகளும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை சொல்கிறார்கள்.அவர்களோடு நானும்நாமும் நீங்களும் எல்லோரும் சேர்ந்து கொள்வோம்.
நான் இதுவரை அறியாத ஒருவரைப்பற்றி அறிதுகொன்டத்தில் ஆனந்தம் .அத்தோடு இந்தப் பெரியவரை வாழ்த்த
எனக்கு வயது போதாது .அதனால் வணங்குகின்றேன் .இவர் இன்னும் பல ஆண்டுகள் நீடுழி வாழவேண்டும்.இந்த
பகிர்வை பகிர்ந்துகொண்ட தங்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள் ஐயா ...

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......