Sunday, October 30, 2011

அண்ணல் காந்தியடிகளும் இந்தக் கிறுக்கர்களும் ...

அண்ணல் காந்தி அடிகளும் இந்தக் கிறுக்கர்களும்...

வழுக்கைதலயும் பொக்கைவாயுமாக காந்தியின் பிம்பம் நம் மனதில் நிலைத்து நிற்கிறது.காந்தி தொப்பியை மாடிக்கொண்டு இருக்கும் அன்னா ஹஸாரே யின் உருவத்தோடு ஒப்பிட மனசு மறுக்கிறது.ஊழலை ஒழிக்க காந்தீயா வழியில் புறப்பட்டவர் அன்ன ஹசாரே.இப்பொது அவருக்கு உதவியாக இருக்க அமைக்கப்பட்ட குழிவினரின் தொந்திரவு தாங்கமுடியாமல் கமிட்டியை மாற்றலாமா என்று எண்ணுகிறாராம்.
கமிட்டியின் முக்கியமான உறுப்பினர் கிரன்பேடி.எங்கள் அலுவலகத்தில் இரண்டுஆண்டுக்குஒருமுறைசொந்தஊருக்குசென்றுவர பயணச்சிலவைகொடுப்பார்கள் என்நண்பரொருவர்புதுக்கோட்டையிலிருந்துடெல்லிசென்றுஅதற்கானபயணச்சிலவைபெற்றுக்கொண்டார். பின்னர்நடந்தவிசார்ணையில்அவர் சொன்ன தினத்தில் புதுக்கோடை ரயில் நிலயத்திலிருந்து முதல் வகுப்பில் .பயணிகள் யாரும் செல்லவில்லை என்று தெரியவந்தது.அவர் தண்டிக்கப்பட்டர். கிரண்பேடி விமானத்தில் மிக உயர்ந்த கட்டணத்தைத்தான் பயணப்படியாக பெற்றுக்கொள்வார். (அவர் நடந்து சென்றாலும் கூட )இது பற்றி பத்திரிகைகள் எழுதியபோது மிகுதியான் பயணப்படியை தான் வாங்குவது தான் நடத்தும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக கொடுக்கத்தான் என்று விளக்கமளித்தார். போபாலைச்சார்ந்த அமைப்பு நோட்டீசு அனுப்ப இன்று அதிகமாக அவர்களிடம் வாங்கிய பயணப்படியை திரும்ப கொடுக்க சம்மதிதுள்ளார் என்று செய்தி வந்துள்ளது.
இந்தக் கமிட்டியில் வக்கீல் ஒருவர் இருக்கிறார். வாயத்திறந்தாலே வம்புதான்.காஷ்மீரில் உள்ள இந்துக்களுக்கு தனி மாநிலம் அமைக்க அங்கு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.சர்சை தீயாக கொழுந்துவிட்டு எரிகிறது.
கேஜரிவால் என்பவர் வருவாய்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர்.வருமான வரித்துரயைசார்ந்த இவர் பதவி விலகி மக்கள் செவைக்கு வந்துவிட்டர். சுமார் 9 லட்சம் வர்மானவரிகட்டாமல் பத்து வருடமாய் ட்பாய்க்கிறார்.ஹசாரேமுதல் உணாவிரத்தின்பொது 800 லட்சம்
வசூலானது. சிலவு 30லட்சம் போக பாக்கி 50 லட்சம் ரூபாயை கேஜரிவால் தன் பெயரில் வங்கியில் பொட்டுக்கோண்டு விட்டார்.உள் குத்து நடந்து கோண்டிருக்கிறது.இது தவிர போர்டு அறக்கட்டளையிலிருந்து இவருக்கு கோடிக்கணக்கில் உதவியிருப்பதாக பேச்சு உண்டு.
மூலவர் அன்னா ஹசாரே. அஹிம்சாமூர்த்தி. அவருடைய கிராமத்தில் விவசாயிகளுக்கு பாசன் வசதி செய்து கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.அங்குள்ள மக்களிடையே நல்ல செல்வாக்கு.காந்தீய வாதியல்லவா .கிராமத்தில் யாரும் குடிகக்கூடாது. அஹிம்சாவாதியல்லவா! யாரும் மாமிசம் உண்ணக்கூடாது. மீரும் தலித்துகளை மரத்தில் கட்டிவத்து உதைக்கிறார்கள்.
அண்ணல் காந்தியடிகளின் வார்தா ஆஸ்ரமத்தில் புலால் உண்ணமுடியாது. எல்லைப்புரத்தில் உள்ள வனகுடி மக்கள் மிகவும் ஆக்ரோஷ மானவர்கள்..பிரிட்டிஷாரை எதிர்த்து போராடினார்கள் அவர்களுடைய தலைவர் தான் பாதுஷா கான். அஹிம்சாவாதி காந்தியின் பிரதமசீடர்.தன் மக்களை அஹிம்சை வழியில் பொராடவைத்தவர்.காந்தியப் பார்க்க தன் குடும்பத்தோடு வார்தாவுக்கு வந்திருந்தார். அவருடைய பேரக்குழந்தைகளும் வந்திருந்தனர். ஆஸ்ரமத்தில் புலால் உண்ண முடியாது.குழந்தை பட்டினி.இதனை காணச்சகிக்காத அண்ணல் காந்தி ஆடு மாமிசம்வாங்கிசமைக்கச்சொல்லிகுழந்தைகளை உண்ணச்செய்தார் என்பது வரலாறூ.
காந்தி பெயரைச்சொல்லி கும்மியடிக்கும் இவர்களை கிறுக்கர்கள் என்று சொன்னால் கோபப்படாதீர்க்ள்.

5 comments:

suvanappiriyan said...

சிந்திக்க வைக்கும் பதிவு. அன்னா ஹசாரேவை காந்தியோடு ஒப்பிடுவதை எந்த விதத்திலும் ஒத்துக் கொள்ள முடியாது.

hariharan said...

கிறுக்கர்களுக்கு பின்னால் தான் உலகம் செல்கிறது, மக்களை கிறுக்கர்கள் என்று நினைக்கிறார்கள். முதல் கிறுக்கர்கள். ஆத்துல சும்மா இறங்கல... ஆதாயம் இல்லாம்யா? சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

சிவகுமாரன் said...

கிறுக்கர்கள் அவர்கள் அல்ல அய்யா. அவர்களை நம்புபவர்கள் தான் .

அப்பாதுரை said...

கடைசியில் இவ்வளவு தான். சரியாகச் சொன்னீர்கள்.
காந்தியின் குணச்சித்திரம் அவரது எளிமை என்று நினைப்பவர்கள் காந்தியைப் பற்றி எதுவும் அறியாதவர்கள் என்பது என் கருத்து. அதனால் தான் குல்லா போட்டவனையெல்லாம் காந்தி என்கிறோம். உண்ணாவிரதம் இருப்பவனையெல்லாம் தியாகி என்கிறோம்.

raattai said...

ஆஸ்ரமத்தில் புலால் உண்ண முடியாது.குழந்தை பட்டினி.இதனை காணச்சகிக்காத அண்ணல் காந்தி ஆடு மாமிசம் வாங்கி சமைக்கச்சொல்லி குழந்தைகளை உண்ணச்செய்தார் ///


இதற்கு ஆதாரம் இருக்கிறதா ? ஏதேனும் புத்தகத்தில் வருகிறதா ? தெரிந்து கொள்ள ஆவல்

நன்றி
இராட்டை