Saturday, November 12, 2011

ஸ்டார் சிஸ்டம் எப்படி உருவானது?.....

ஸ்டார் சிஸ்டம் எப்படி வந்தது?........

இரண்டாம் உலக யுத்தத்திற்கான தூவானம் 35களிலேயே விழ ஆரம்பித்தாலும் இடியும் மின்னலுமாக அது வந்தது 39ம் ஆண்டுகளில் தான்.ஐரோப்பாகண்டத்தையே ஆட்டிப்படைத்த அது முதலில் கடுமையாக பிரான்ஸ் நாட்டை பாதித்தது.

திரைப்படம் வர்த்தக ரீதியக உருவாகி உலகம் முழுவதும் பரவியது பிரான்சிலிருந்து தான் புரஜக்டரும் ,காமிராவும், மற்றுமுள்ள கருவிகளும் உருவானதுமங்குதான்.எல்லாவற்றுக்கும் மேலாக காமிராவுக்குத்தேவையான கச்சாபிலிமும் அங்குதான் தயரிக்கப்பட்டு வந்தது.

யுத்தத்தின் காரணமாக அவை வருவதில் சிரமம் எற்பட்டது .சிலவும் அதிகமாகியது.விலைகூடுதலாகியது. தயாரிப்பாளர்கள் யுத்த காலத்தில் மூலதனமில்லாமல் துவண்டனர். .

அத்தியாவசியப்பொருட்கள் கிடைக்கவில்லை.படை வீரர்களுக்கு அத்தியாவசியம் என்பதால் உள் நாட்டில் பண்டங்கள் வருவது குறைந்து விட்டது. அரசு ரேஷன் முறை கொண்டுவர வேண்டியதாயிற்று.வியாபரிகள் பதுக்க ஆரம்பித்தனர். கள்ள மார்கட் உருவாகியது.கள்ளப்பணம் கொள்ளையாக சேர்ந்தது. கள்ளப்பணக்காரர்கள் இந்தப்பணத்தை என்ன செய்வது,எப்படி முதலீடு செய்வது என்று திக்கு தெரியாமல் அலைந்தனர்

கலை இலக்கியத்தில் ஈடுபாடும்,சமூக அக்கரையும் கொண்ட தயாரிபாளர்கள் மூலதனமில்லாமல் கையை பிசந்து கொண்டிருக்க கள்ளப்பணம் "வரட்டுமா? வரட்டுமா?" என்று ஆசைகாட்ட அப்பொது ஒரு "பொருந்தாதிருமணம்" நடந்தது.அதன் பயனைத்தான் இன்றும் அனுபவிக்கிறோம். .

பணமுள்ளவன் ஸ்டூடியோவை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். காசைவீசினால் எழுத,நடிக்க,இயக்க ஆள்பிடிக்கலாம். பணத்தில் அக்கரையிருந்தால் படமெடுக்கலாம் என்று நிலமை மாறியது. சமூக அக்கரை, கலை,பின்னுக்குத்தள்ளப்பட்டு நான் போட்ட பணத்திற்கு லாபம் கொள்ளை லாபம் வேண்டும் என்பவர்கள் நுழைய ஏதுவாயிற்று.

படத்தில் நடிப்பவனை " ஆஹா ஒஹோ "என்று விளம்பரப்படுத்தி அந்த நடிகன் மீது மூலதனத்தைப் போட்டு லாபம் பார்க்கும் முறை உருவாகியது.அப்படி உருவகியவர்கள் தான் எம்.கே.டி ,பி.யு .சின்னப்பா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர்.

நூற்றுக்கும் மேலான படங்களில் நடித்தவர் எம்.ஜி.ஆர். இருநூறுக்கும் மேலானபடங்களில் நடித்தவர் சிவாஜி. ஜெமினியும் அப்படியே. ஆனால் தமிழ் திரையுலகின் மூடிசாடா மன்னனாகத் துலங்குபவர் ஏம்.கே.தியகராஜ பாகவதர்..1934ம் ஆண்டிலிரு ந்து 1955ம் ஆண்டுவரை அவர் திரைஉலகில் வளையவந்தார். அவர் நடித்த மொத்தபடங்களின் எண்ணிக்கை பதினான்கு தான். அவர்நடித்த பத்தாவது படம் "ஹரிதாஸ்". படம் ரிலீசானதும் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைதானார். அந்தப்படம் மூன்று ஆண்டுகள் ஒடியது.அதன்பிறகு அவர் பட்ம் (நான்கு ) புஸ்வணமாகியது.

விளம்பரத்தின் மூலம் பணம் போட்டு பணம் எடுக்கலாம் என்ற வித்தை முன்னுக்கு வந்தது. ஸ்டார் சிஸ்டம் உருவான கதை இது தான்.

6 comments:

அப்பாதுரை said...

எம்ஜிஆரை விட எம்கேடி பிரபலமா?
ஸ்டார் சிஸ்டத்தின் ஒரு பலன்: படங்கள் வெற்றியடைய வேண்டும் என்று எல்லா அம்சங்களிலும் தலையிட்டார்கள்.. (ம்ம்ம்.. இது நல்ல பலனா தெரியவில்லையே :)

அப்பாதுரை said...

மூன்று ஆண்டுகள் ஓடிய படமா? அதற்காகவே தனி recognition தரவேண்டும் தான்

kashyapan said...

அப்பதுரை அவர்களே!" சதி லீலாவதி" என்ற படம் 39-40ல் வந்தது.எம்.ஜி.ஆர் நடித்த முதல் படம்.எம்.கே.டி நடித்த " அம்பிகாபதி"யில் எம்.ஜி.ஆர். ,ஒரு குட்டி நடிகராக எம்.ஜி.ராம்சந்தர் என்ற பெயரில் வருவார்.47ல் தி.மு.க வின் தொற்றத்திற்குப் பிறகு தான் எம்.ஜி.ஆரின் பவிஷு எல்லாம்.34ல் "பவளக்கொடி" யில் ஆரம்பித்து "ஹரிதாஸ்" 44 வரை பத்து படங்களில் நடித்தார் எம்கே டி. "ஹரிதாஸ்" மூன்று தீபாவளி கொண்டாடியது..எம்.கே டி அருகில் எவரும் வர முடியாது.---காஸ்யபன்

அப்பாதுரை said...

wow! MKT ஒரு படம் கூடப் பார்த்ததில்லை. யூட்யூபில் தேடிப் பார்க்கிறேன்.

சிவகுமாரன் said...

என் அப்பாவிடம் ஹரிதாஸ் வீடியோ கேசட் இருந்தது . நான் பார்த்திருக்கிறேன்.
எத்தனை பாடல்கள் என்று கணக்கிட முயன்று தோற்றுப் போயிருக்கிறேன்.

இராஜராஜேஸ்வரி said...

ஆஹா ஒஹோ "என்று விளம்பரப்படுத்தி அந்த நடிகன் மீது மூலதனத்தைப் போட்டு லாபம் பார்க்கும் முறை உருவாகியது.அப்படி உருவகியவர்கள் தான் எம்.கே.டி ,பி.யு .சின்னப்பா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர்.


அவர்கள் திறமையை வளர்த்துக்கொண்டார்கள்..

ஸ்டார் சிஸ்டம் எப்படி உருவானது?....."
அரிய அலசல் பகிர்வுக்கு நன்றி.