Saturday, December 17, 2011

பேயை விரட்டப்போய் பிசாசைப் பிடித்தார்கள்......

பேயை விரட்டப் போய் பிசாசைப் பிடித்தார்கள்.....

அழகான அரண்மணையைக் கட்டவிரும்பினான் ஒருவன்.கட்டிமுடித்ததும் தான் தெரிந்தது அதில் அவனுக்கு முன்பாகவே ஒரு பேய் குடிவந்து விட்டது என்பது. பேயை விரட்ட பூசாரியைக் கூட்டி வந்தான்.அவனோ அரண்மணையின் ஒவ்வொரு செங்கலிலும் பிசாசை குடிவைத்துவிட்டான்

இந்தியா என்னும் அழகான அரண்மனையை கட்டினொம் அதில் அமர்ந்த பேய்களை ஒட்ட மன்மோகன்,சிதம்பரம்,மாண்டேக் சிங் என்று மூன்று பூசாரிகளைக்கொண்டுவந்தோம் .பேய்களுக்குப் பதிலாக ஊழல் பிசாசுகளை குடிவைத்துவிட்டார்கள். பேயும் பிசாசுகளும் இருக்கட்டும். இந்த பூசாரிகளிடமிருந்து நாட்டைக் காக்க வேண்டிய பெரும் பணி நம் முன்னே வந்துவிட்டது.

கெட்டு அழுகி பூஞ்சைகாளான் பிடிக்கும் தானியத்தை பட்டினியால் சாகும் மக்களுக்குக் கொடுக்கக் கூடாதா என்று நீதிமன்றம் கேட்டது. மக்கள் சோம்பேறிகளாகிவிடுவார்கள் அதனால் கொடுக்கமாட்டொம் என்றார்கள். சமீபத்தில் தணிக்கை மற்றும் கணக்கு பரிசீலன செய்யும் அதிகாரி சொல்லியிருக்கிறார்.ஆண்டுக்கு 1,90,000 கோடி வரி வசூலாகமல் இருக்கிறதாம். இதில் 160000 கோடி கண்டிப்பாக வசூலாகாது என்கிறார்.

இது பற்றி நடாளுமன்றத்தில் கேட்டால் தண்ணிப்பாம்பு மாதிரி நாக்கைத் துருத்திக்கொண்டு சிதம்பரம் நியாயப்படுத்துவார்.

கிட்டத்தட்ட 1,40,000 கொடி பாக்கிவத்திருப்பவர்கள் 12பேர். 120 கோடி மக்களில் 12பேர் வரி கொடுக்காமல் இவ்வளவு பணத்தை வைத்துள்ளார்கள். இவர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாட ஜேத்மலானிகள், பூஷன்கள்,சிதம்பரம்கள் உண்டு.

கள்ளப்பணத்தை எந்தஊரில் எந்த வங்கியில் போடவேண்டும் என்கிறீர்களோ அங்கு போட தயாராக ஏஜெண்டுகள் உள்ளனர்.அதில் முக்கியமானவன் ஹாசன் அலி கான். இவன் மட்டும் பாக்கி வைத்திருக்கும்வரி 50,345 கோடி. இவனுடைய கூட்டாளியின் மனைவி சந்திரிகா தபூரியா கணக்கில் வரி பாக்கி20,540 கோடி.நரசிம்ம ராவுக்கு சூட்கெசில் 1 கோடிகொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஹர்ஷத் மேத்தா வரி பாக்கி 15944 கோடி .

இவர்கள்,மற்றும் கள்ளப்பணக்காரர்களின் பெயரை சொல்லமாட்டேன்னு சாதிக்கிறாங்கள்.சொன்னா என்ன ஆயிறும். ரோட்ல இந்தப்பயிலுக சொகுசு கார்லபொகும்போது ரோட்டொரமா நின்ணு "ஒகோ இவந்தானா அவன் " ந்னு பெருமூச்சு விடுவோம். தூக்கி போட்டு மிதிக்கவா போறோம்.

7 comments:

புதுச்சேரி அன்பழகன் said...

மத்திய தணிக்கை அதிகாரி சுட்டிக்காட்டிய பிறகும் வரிவசூல் செய்யாமல் இருப்பது நாட்டுக்கு செய்யும்
துரோகமாகும்.உழைக்கும் மக்களிடமிருந்து மறைமுக வரியை ஒவ்வொருநாளும் பிடித்துக்கொள்ளும் போது ,அவர்களிடமிருந்து வரி வசூல் செய்யாமல் இருப்பது எப்படி சரியாகும் ? விலைவாசியை உயர்த்தி மக்களை கசக்கி பிழிய முடியும் போது இது எப்படி முடியாமல் போகிறது.

இராஜராஜேஸ்வரி said...

பேயை விரட்ட பூசாரியைக் கூட்டி வந்தான்.அவனோ அரண்மணையின் ஒவ்வொரு செங்கலிலும் பிசாசை குடிவைத்துவிட்டான்

கெட்டது இந்தியகுடி!

நட்புடன் ரமேஷ் said...

தண்ணிப்பாம்பு மாதிரி நாக்கைத் துருத்திக்கொண்டு சிதம்பரம் நியாயப்படுத்துவார்.... அற்புதமான உவமை காஸ்யபன்.
சுழன்று நிற்கும் நாடாளுமன்ற வளகத்தின் இன்னும் நிறைய நாகங்கள் அலைந்து திரிந்துக்கொண்டே இருக்கிறது.

veligalukkuappaal said...

இணையதளங்களில் இப்படியெல்லாம் காங்கிரசின் ஊழல் மெடல்களை பட்டியல் போட்டு வரும் 2014 பொதுத்தேர்தலில் சோனியாவின்,சிதம்பரத்தின்,கபிசிபலின், அலுவாலியாவின் காங்கிரசை துடைத்து விடுவார்கள் என்று எரிச்சல்படும் காங்கிரஸ் ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றை தணிக்கை செய்ய துடிக்கின்றது என்பதை எச்சரிக்கையோடு சந்திப்போம்

சிவகுமாரன் said...

ஆனாலும் எங்கள் எம்பியை இப்படி கேவலப்படுத்துவதை நன் வன்மையாய் கண்டிக்கிறேன் எங்க தொகுதியை வந்து பாருங்க ..... எவ்வளோஓஓஓ ....... செஞ்சிருக்காருன்னு .... .

அப்பாதுரை said...

அநியாயம். கடைசியில் சொல்லியிருக்கும் பெருமூச்சு - இது மட்டுமே நிரந்தரம்.

John Chelladurai said...

poosarikku veppilai adikka ungalai anuppaNum Ayya, nallaa adichchirukkeenga.