Monday, July 30, 2012

ji naakaraajan

ஜி.நாகராஜனின் குட்டிக் கதை;....... (நினைவிலிருந்து எழுதுகிறேன்)           அந்த ஊரின் மடத்தின் முன்னால் ஜனங்கள் கூடி இருக்கிறார்கள்.அவர்கள் முகம் சோகமாயிருக்கிறது . ஒருவருக்கொருவர் "குசு குசு" வென்று பேசிக் கொள்கிறார்கள்  "சுவாமிகள் சமாதியாகி விட்டார் ' என்று பெரியவர்கள் பேசிக்கொள்கின்றனர். மடத்தின் முன்னால் பந்தல் போடப்பட்டிருக்கிறது . எல்லாரும்உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறுவர்கள் எதுவும்புரியாமல் குறுக்கும் நெடுக்குமாக ஓடியாடிக் கொண்டிருக்கிறார்கள். சிறுவர்கள் ஒருவருக்கொருவர் "சுவாமிகள்சமாதியாகிவிட்டார் " என்று ரகசியக் குரலில் அவர்களும் பேசிக் கொள்கிறார்கள்சாமியாரை வெளியே கொண்டு வந்தார்கள். அதைப் பார்த்தசிறுவன் ஒருவன் "டேய்! சாமியார் செத்துப் போய்டார் டா! என்று கத் தினான் சின்னப் பயலுகள் "ஏய் ! சாமியார் செத்துப் போயிட்டார் டா !" என்று கூச்சலிட்டார்கள். பெரியவர்கள்அவர்களைவிரட்டி,விரட்டிஒட்டினர்                                (ஜி .நகராஜன் மறைந்விட்டார். மதுரைடவுன் ஹால் ரோடில்பிடிக்கு           அடங்காத  மீசையும் வெள்ளை ,வேட்டி,ஜிப்பாவில்கம்பிரமாக நட்ந்துசென்ற நாகராஜனோடு பேசிப் பழகி இருக்கிறேன்.அழுக்கு சட்டையும்,நாலுமுழ் வேட்டியுமாக உருக்குலைந்து எல்.ஐ.சி ஆபிஸ் கவுண்டரில் வந்து  கூட்டத்தின்  மத்தியில் வந்து " டேய் ! ஐஞ்சு ரூ கொடுடா! " என்றுகேட்டதையும் அனுபவித்திருக்கிறேன்! மறக்கமுடியாத ,மறக்கக் கூடாத .இலக்கியகர்த்தா ஜி.நாகராஜன்)

Thursday, July 26, 2012

"வால்  மார்ட்டும் அமெரிக்கரின் அனுபவமும் -!


                        அமேரிக்கா வாழ்  நண்பர்  ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். பல விஷயங்களைப் பற்றி பேசினோம். அவரிடம் கேட்டேன்." திருமதி ஹிலாரி கிளிண்டன் வால்மார்ட்டின் இயக்குனராகைருந்தாராமே?"

"ஆம்மாம்! அதனால் என்ன? இப்போது இல்லையே!"

"அடிக்கடி இந்தியா வருகிறார்!"

"வரட்டுமே "

"இங்க சில்லரை வர்த்தகத்தை கொண்டுவர முயற்சிக்கிறாரே!"

"அப்படியா?"

"அது சரி! உங்க ஊர்லவால்மார்ட் பத்தி என்ன  நினைக்காங்க?"

"வால்மார்ட் எல்லாமிப்ப ஒரு ஏழு எட்டு வரூசம் தான்!"

"எப்படி போகுது?

"நீங்க சொல்ற மாதிரிவிலை எல்லாம் ஒன்னும் விலையைஏத்தலை  "

"அப்புறம்?"'

"ஒருவிஷயம் உறுத்துது!"

"ஒரு இருபதுமுப்பதுமைல் சுத்துவட்டாரத்துல இருந்தகடை  எல்லாம் போயிட்டுது "

"அவங்களால எதித்து நிக்க முடியல " 

"சாமான்லாம் எப்படி?"

"எது வேணும்னாலும் கிடைக்குது"

 "சந்தோசம் தான"

"அப்படி ஒரேயடியா சொல்ல முடியாது"

ஏன்?"

"சரக்கு தரமில்லாம இருக்கு!விலையை எத்தாம தரத்தை குறைச்சுடுதான் !"

 "அடப்பாவிங்களா! அப்பா என்ன செய்யறிங்க?"

"என்ன செய்ய முடியும் ? வேற ஏது கடை?"

"நுகர்வோர் அமைப்பு எதுவும் இல்லையா?"

"திருமதி கிளிண்டன் உங்குருக்கு வந்து  போறாங்க !  எங்க ஊர்ல தான்  வசிக்கிறாங்க !"    

அமெரிக்க நண்பர் முகத்தில் கோபம் தெரிந்தது ! தொளைக்குலுக்கிக் கொண்டார்.!    கை  குலுக்கி விடை பெற்றார்! 















































"கிடைக்காத சாமான் இல்ல"

Monday, July 23, 2012

இந்தியாவின் வருமானமும்
இந்தியனின் வருமானமும்.............


                        நான் வேலைக்கு  செர்ந்தமாதம் நான் என் கிராமத்திற்கு போயிருந்தேன்! என்  நண்பன்  படிப்பு  அதிகமில்லாதவன்  .கிளை  தபால் அலுவலகத்தில், "பாக்கர்"  வேலைக்காக  முயன்று  கொண்டிருந்தான்  .பார்த்து பேசிக்கொண்டிருந்தேன்.எனக்கு வேலை கிடைத்தது பற்றி மகிழ்ச்சி  தெரிவித்தான்."எவ்ளவு டே சம்பளம்?"
                              "என்ன!130 ரூ கொடுப்பான்!" அவ்ளவு தான் கத்தி கேட்டவார்த்தைசொல்லி " ஏய் இந்தப் பயலுக்கு நுறு ருக்கு மேலசம்பளம் ! எம்மா! ஆத்தா! என்ற கூவி னா ன் ! 

                         பின்னர் சம்பளம் கூடும் பொது நண்பர்களிடம் in  hundres தான் சொல்ல ஆரம்பிப்பேன்  .நான்  ஒய்வு  பெரும்  பொது  ஆயிரத்தில்  சொல்ல   ஆரம்பித்தேன்!

                               இப்போது என் பேரன் பேத்திகள் I.T. கம்பெனிகளில் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் In Lacks  தான் சொல்லிக் கொள்கிறார்கள்!

    .                             இந்திய குடிமகன் ஒவ்வொரு மகனுக்கும் ஆண்டு வருமானம்  எவ்வளவு தெரியுமா? அரசு சென்ற ஆண்டு  கொடுத்த புள்ளிவிவரத்தின் படி  தனி நபர் ஆண்டு வருமானம் ஒவ்வொரு இந்தியனுக்கும்   54000 ரூபாயாகும் . அதாவது   இந்தியாவின் தேசிய வருமானம் அதிகரிக்க அதிகரிக்க  தனிநபர் வரூ  வருமானமும்  அதிகரிக்கிறது.அதாவது இந்த புள்ளி விவரப்படி பள்ளபட்டி குட்டி பஞ்சாயத்துல     வேலை பாக்கிற தொட்டி முனி  யான்டிக்கும் ஆண்டு வருமானம் 54000 ரூ . அவன் மனைவி,மகள்,மகன் எல்லாருமாஸ் சேர்ந்து ஆண்டுக்கு 2,00,000 கும்  மேல கிடக்கும்!   

                                 உண்மைல கிடைக்குதா? அப்பா முனியாண்டிக்கு கிடைக்க வேண்டியது எங்க போசு? எப்படிப் போச்சு?

                                 கொஞ்சம் யோசிச்சா புரியற மாதிரி இருக்கு! நான் ஆண்டுக்கு 1,08,000 வருமானம் வாங்கறேன்னா  நான் வேற ஒருத்தன் வேலையை பறிச்சுகிட்டு அவன் வருமானத்தை நான் வாங்கிக்கறேன் . என்சம்பளம்  கூடும்போது மற்றவன் கூலியை  என்னுடைய தாக்கிக் கொள்கிறேன்!  அதாவது அரசு சராசரி வருமானத்த சொல்கிறது.


                                   நாம இந்த கணக்குப்படி பாத்தா  மத்தவன் வயித்துல மண்ணள்ளி போட்டுட்டு தான் ப்ரிட்ஜ், ஸ்கூட்டார் எ.சி  எல்லம்வாங்கரமா? ஐம்பது அருபதுவர்ஷ்த்துக்குமுன்னால எமன் நகரத்துல பெட்ரோல் பம்புல காருக்கு பெட்ரோல் நிரப்பின அம்பானி
அப்படித்தானா?    பிகார் காடுகளல கஞ்சாவை பதப்படுத்தி சினா வுக்கு நுறு  ஆண்டுகளுக்குமுன்பு அனுப்பி பிழைத்த ஜெம்ஷ்ட்ஜிகளப்படித்தானா?,

           கணக்குல எங்கேயோ தப்ப இருக்கு!

                            நேர் செய்ய வேண்டும்!

Friday, July 20, 2012

 வர்த்தகத்தில் அந்நிய முதலீடு...........!!!

                           இந்திய  மக்களின் வறுமையைப போக்க அமெரிக்க  நிதி  முலதனத்திற்கு
 கவலை அதிகம். இந்திய தொழில்களை வளர்த்தால் பொருளாதார வளர்ச்சி
ஏற்படும் . அப்படி  வளர்த்தெடுக்க  நம்மிடம்  மூலதனமில்லை  .அதனை  அமெரிக்கமுதலாளிகள் தருகிறார்கள். நாம் என் அதனை  வேண்டாம் என்று
கூறவேண்டும்   என்று மன்மோகன் கேட்கிறார். சிதம்பரம் கேட்கிறார்  .மண்டேக் சிங் கேட்கிறார்.

பா.ஜ.க. இதனை ஏற்க மறுக்கிறது இது பற்றி நாடாளுமன்றத்தில்  பல முறை அவர்கள் அறிவித்துள்ளனர். அவர்களுடைய முன்னாள் நிதி
அமைச்சர் யஷ்வந்த்  சின்கா குறிப்பிட்டுள்ளார். ஆனால் முழுமையாக ப.ஜ.க சொல்வதை நம்ப முடியாது . பாஜக வும் சிவா சேனையும் மும்பையில் கூட்டட்சி நடத்திய பொது நடந்த கூத்து நமக்குத் தெரியும்."என்றான்" கம்பெனியை தூக்கி அரபிக்கடலில் எறிவேன் என்று சிவசேனைத்தலைவர் அறிவித்தார்.பா.ஜ.கவும் அறிவித்தது. வாஜ்பாய் அமேரிக்கா போயிருந்த பொது அமெரிக்க முதலாளிமார்கள் காட்ட வேண்டியதைக்  காட்டினார்கள். "நாங்கள் அகில   இந்தியக்கட்சி .சிவசே னைதான் எதிர்க்கிறது அவர்களைச்சரி
 செய்யுங்கள்"     என்றார் வாஜ்பாய்.

"என்றான்" கம்பெனியின் தலைவர் "ரெபக்கா "மும்பாய் வந்தார். "மாதுஸ்ரீ " என்ற பங்களாவிற்குப் போனார். அங்குதான் பால் தாக்கரே வசிக்கிறார். கதை முடிந்தது ." என்றான் "பிரச்சினையும் முடிந்தது.
 .
 இவர்களுக்கும் காங்கிரசுக்கும் அடிப்படையில் எந்த வேற்றுமை யும் கிடையாது இவர்களுக்கு உள்ள பங்கு கிடைக்கும்  வரைதான்  இவர்களின் எதிர்ப்பு  இருக்கும்.

இப்போது சில்லறை வர்த்தகம்  பற்றி விவாதிக்கிறார்கள். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முலதனம் வந்தால் விலைவாசி குறையுமாம். அமெரிக்காவில் அப்படிதான் நடந்ததாம்  .அங்கு  சில்லறை  வர்த்தகத்தில் மிகப் பெரிய கம்பெனியான "வால்மார்ட் "வைத்ததுதான் சட்டம். விவசாய விலை பொருட்களை  ஈன கிரயத்திற்கு வாங்கி அநியாய விலைக்கு விற்பார்கள்.இதற்காக பெரிய பெரிய மால்கள் உண்டு.
பொருட்களை வாங்கவரும் தாய்மார்களின் கைக்குழந்தையை  வாங்கி  பாலுட்டி சிராட்டி பாதுகாப்பக  வைப்பர்கள். எந்தப் பொருளையும் ஒரு கூரையின் கீழ் வாங்கமுடியும் என்பார்கள்.சிறு வியாபாரிகளைத் தெருவிலிருந்து துரத்தும்  வரை  விலை ஏற்ற மாட்டார்கள் அதன் பிறகு அவர்கள் அடிக்கும்
கொள்ளை கணக்கில் அடங்காது.


இப்போதேல்ல்லாம் ஹிலாரி கிளிண்டன் அடிக்கடி டெல்லிவருகிறார்.
ஆப்கான் வந்தாலும் டெல்லி வருவார். பாகிஸ்தான்,பங்களாதேசம், சினா,கொரியா வந்தாலும் டெல்லியிறங்கி   மன்மோகன் கையைக் குலுக்கி விட்டுத்தான் போவார் அவரிடம் சில்லறை வர்த்தகம் பற்றி விவாதித்து விட்டு போவார். மிஸ்டர் கிளிண்டன் ஜனாதிபதி ஆவதற்கு முன் அவர்மனைவி ஹிலாரிகிளிண்டன் "வால்மார்ட்" கம்பெனியில் இயக்குனராக இருந்தார். சில்லரைவர்த்தகத்தின் முடிசூடா மன்னனான வால்மார்ட் கொண்டு வரவே இவ்வளவும்


 .
வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன் இதன செய்யவேண்டும் அதன் முலம் பரக் ஒபாமாவின்வேற்றியை உறுதிப்படுத்தவேண்டும். பா.ஜ.க பச்சைக்கொடி காட்டிவிட்டது.
 
இடது சாரிகள் எதிர்ப்பார்கள் ! 
தி .மு.க,  அதிமுக. திரினாமுல் என்னசெய்யும்?
 

பொத்திக்கிட்டு கிடப்பாணுவ சார்வாள்  !!!








Tuesday, July 17, 2012

ஆஸ்காருக்குப் போன மச்சான்கள் .............!!!

                                 மத்திய அரசு 2011ம ஆண்டுக்கான திரைப்பட விருதுகளைஅறிவித்ததும் தமிழ்திரைப்படதுறை முதன்முறையாக பெருமகிழ்ச்சி அடைந்தது.நடிப்பிற்காக  நடிகர் தனுஷ்  விருது பெற்றார்.அது தவிர பல விருதுகளையும் தமிழ் படங்கள் பெற்றன  .சிறந்த  நடிகருக்கான விருது "ஆதாமிண்ட மகன் -அபு" என்ற படத்தில் நடித்த சலீம் குமாருக்கும் சேர்த்து அளிக்கப்பட்டது.

           


                  இஸ்லாமியர்களுக்கு ஐந்து கடமைகள் உண்டு அதில்   ஒன்று ஹஜ் யாத்திரை செல்வது .அபுவும் அவர் மனைவியும்   
   . ஹஜ் செல்ல விரும்புகிறார்கள்.வறுமையில் வாழும  அவர்கள் சிறுகச  சிறுக   சேர்த்துவைத்த பணத்தில் செல்ல முயல்கிறார்கள்.இதில் அபுவாக சலீம் குமாரும் அவர் மனைவியாக ஜரினாவகாபும்
 வாழ்ந்து இருக்கிறார்கள். 


                                இது தவிர ஆஸ்கார் பரிசுக்கு இந்தியாவின் சார்பில் படங்களை அனுப்ப தேர்வு செய்வார்கள்.அதற்காக தனியாக ஒரு குழு போடப்பட்டது.தமிழில் ஐந்து படங்கள் வந்தன. சென்ற ஆண்டு சிறந்தபடமாக அறிவிக்கப்பட்ட படம் "வாகை சூட வா" மிகச்சிறப்பான இந்தப்படத்தைதொலைக்காட்சியில் பார்த்தேன் அதுபற்றி ஒரு இடுகையும் எழுதியிருந்தேன்.பல நண்பர்கள் படத்தைப் பாராட்டி எழுதியிருந்தனர். கத்தாரிலிருந்து ஹரிஹரன் என்ற நண்பர் படத்தை சிலாகித்துவிட்டு "ஜத்மதொவின் புதிய ஆசிரியன்" என்ற குறுநாவலை படித்ததாகவும் கதை அதைச்சார்ந்து இருப்பதாகவும் எழுதியிருந்தார். தமிழ் திரைப்பட ரசிகர்கள் எந்த அளவுக்கு கூர்ந்து கவனிக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
                                  இந்தக் கொள்ளையில் ஆஸ்கார் விருதுக்காக தமிழ்படங்கள் கமிட்டியின் பரிசிலனைக்கு வந்தது .அவை "ஆடுகளம்:,தெய்வத்திருமகள்,முரண்,கோ ,இந்திரன் ஆகியவைகளாகும். இவற்றை பரிசிலித்த கமிட்டி  இவை அத்துணையுமே  ,வெளி நாட்டுப்படங்களின் நகல் என்று கூறி "கண்டித்து" திருப்பி அனுப்பப் பட்டுவிட்டன.

ஆஸ்கார் பரிசுக்குப் போன நம்மூர் மச்சான்கள் ..... பாவம் !!!

Friday, July 13, 2012

அறுபது லட்சம் தான் வெல்லமுடியும் ............!!

                   நடிகர் சூர்யா நடத்திவந்த தொடர் வெள்ளிக்கிழமை இரவோடு முடிவுற்றது. சிறப்புக்காட்சியாக அன்று இரவு பதினோரு மணிவரை நடத்தினார்கள் கடந்த ஐந்து மாத காலமாக இந்த நிகழ்ச்சி நடந்தது.இதில் பங்குபெற்று வென்ற 116 பேரை அழைத்திருந்தார்கள் .சிறப்பு அழைப்பாளராக சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவகுமார் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

                  இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும் கீழ் மத்தியதரத்தினரே ஆகும். குறிப்பாக இளம் பெண்கள் இந்தஒரு போட்டியை  சவாலாக எடுத்துக்கொண்டு தங்களின்  தங்கள் குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக கலந்து கொண்டனர்.தங்கள் கல்வி,தங்கள் தங்கை,தம்பிமார்களின்படிப்பு,தாயின் மருத்துவம்,தந்தைக்கு உதவியாக என்று ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு வந்திருந்தார்கள்.கேள்விகளுக்கு பதில் சொல்லி அது சரியாக இருக்க வேண்டுமே என்று அவர்கள் தவிக்கும் அந்தக்கணங்கள் தான இந்த நிகழ்ச்சியின்  U.S.P.(unique selling preposition).பார்வையாளர்களை ஈர்க்க இது மிக்கவும்பயன்பட்டது என்று  கூறலாம்.அந்தச்சின்னஞ்சிருபெண் கள்,தங்கள் கனவுகள்,ஆசைகள், நிராசையான பொது விம்மி,வெடித்தபோது அரங்கத்தை துயாரத்திலாழ்த்தியது  .  
    

                      மிக அதிகபட்சமாக வென்றது 25 லட்சம் தான் இரண்டுபேர் தான் வென்றார்கள். அதிகமாக 10,000 ரூ , அடுத்து 3,20,000ரூ என்றாகியது. எனது ஆடிட்டர் நண்பர் ஒருவர் கூறினார்.""ஒரு கோடி என்று அறிவிப்பதே தவறு.அரசாங்கம் சும்மா இருக்குமா! வருமானவரி உண்டே!என்றார்

 எவ்வளவு இருக்கும்?

முன்பு 30 சதமாக இருந்தது.!


இப்போது?

"40 சதம்!
ஒருகோடி விழுந்தால் 40லட்சம் வரி ,60லட்சம் கையில் !!".

Monday, July 09, 2012

சுப்பையா என்ற பெயர் எனக்கு பிடிக்கும்.............




                                           சுப்பையா என்ற பெயர் எனக்குப் பிடிக்கும்..தமிகத்தின் தென் மாவட்டங்களில் இந்தப் பெயர் அதிகம் உண்டு.. முருகனின் பெயர்களில் ஒன்று சுப்பிரமணியன். செல்லமாக சுப்பிரமணியனை சுப்பை யா   என்று அழைப்பார்கள்.."அப்பனைப் பாடும் வாயால் , ஆண்டி சுப்பனை பாடுவேனோ "  என்று சிவகவி படத்தில்  தியாகராஜா பாகவதர் பாடியது நினைவுக்கு வரலாம்..நெல்லை மாவட்டத்தில் தெருவுக்கு நான்கு சுப்பையா இருப்பார்கள்..

                                 எனக்கு இந்தப் பெயர் பிடித்ததற்கு தனி காரணங்கள் உண்டு..எனக்கு  முத்த சகோதரை "சுப்பையா " என்றுதான் அழைப்போம்..பாசத்தோடு அழைக்கும் பொது "ஸ்சுப்பையா" என்பேன் கோபம்வந்தால் "சப்பையா" என்பேன்..நாங்கள் பெரியவர்களாகி குடும்பஸ்தர்களான பின்  எங்களுக்குள் மனஸ்தாபம் வந்ததே இல்லை.எங்கள் தாயார் எங்களை வளர்த்த விதம் அப்படி!!
.அவர் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்துவிட்டார்.. சுப்பையா எனும் பொது என் நெஞ்சு நெகிழத்தான் செய்கிறது..


                                        எனக்கு இந்தப் பெயர் மிகவும் பிடித்ததற்குக் காரணம் உண்டு.."காடெல்லாம் விறகாகிப் போச்சே " என்ற அந்த எட்டைய புறத்தானை அவன் வீட்டில் தாய்,,தந்தை,,உற்றார் உறவினர்
நண்பர்கள் சுப்பையா என்று தான் அழைப்பார்களாம் "கப்பலோட்டிய தமிழன்" என்ற படத்தில் ஒரு காட்சிவரும் பாரதியின் படத்தின் முன் வ..உ..சி நிற்பார்..பாரதிமறைந்த செய்திகேட்டு "பாரதி  எப்பா!!சுப்பையா  "என்று
கதறும் காட்சி சித்தரிக்கப் பட்டிருக்கும்..அந்த மஹா கவிஞன் பெயரும்
சுப்பையா தான் என்பதால் பிடிக்கும்


                                              எல்லாவற்றிர்க்கும் மேல் ஒரு காரணம் உண்டு ..1946ம ஆண்டு இந்தியாசுதந்திரம் வாங்குவதற்கு ஓராண்டிற்கு
முன்பே தெலுங்கானா விவசாயிகள் ஆயுதம் தாங்கி  போராடி விடுதலை
பெற்றார்கள்..முன்று ஆண்டுகள் செங்கொடியின் கீழ் அவர்கள் 1949 வரைஆண்டார்கள்..பல தலைவர்கள் தலைமைவகித்து அவர்களை வழி
நடத்தினார்கள் அவர்களில் ஒருவர் சுந்தரய்யா ஆவார்.. பிரிட்டிஷ் இந்தியாவான மதராஸ்  மாகாணத்திலிருந்து துப்பாக்கி ,துப்பகிக் கான ரவை , தளவாடங்கள்,மற்றும் புரட்சிவிரர்களுக்கு உணவு என்று சகலத்தையும் வரவழைத்து
 கொடுக்கும் பொறுப்பு  சுந்தரய்யவிற்கு  இருந்ததது .தலை மறைவாக இருந்து கொண்டு அதனை செய்தார்.. அப்போது அவாது தலைமறைவு
வாழ்க்கையின் பொது அவரது பெயர் "சுப்பையா"தான் .

என் அண்ணன் பெயர் சுப்பையா .என் நெஞ்சு நெகிழ்கிறது..
என் மகாகவி பெயர் சுப்பையா..என்மனம் மகிழ்கிறது
எங்கள் சுந்தரய்யாவின் பெயர் சுப்பையா .என் மனம் பரவசமடைகிறது    ,



Friday, July 06, 2012

Vaaththiyaar raaman...

வாத்தியார் ராமன் என்ற ...... முப்பது நாற்பது வருடமாவது இருக்கும்.. மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் மாநாடு மதுரையில் ஏற்பாடாகியிருந்தது.. மதுரையில் பி..எம் குமார் செயலாளராக இருந்தார்..மாநாட்டில் இ..எம்..எஸ் பங்கு பெறுகிறார். பிரும்ம்மாண்டமான ஏற்பாடுகள்..அப்போது பிரபலமாக இருந்த ஸ்டேஜ் பிரண்ட்ஸ் குழுவின் "தண்ணீர்தண்ணீர் "நாடகம் நாடக ஆசிரியர்கோமல்சுவாமினாதன் எனக்கு ஆப்த நண்பர்.. நாடக இயக்குனர்.. திரைப்பட இயக்குனர்.. த..மு..எ..ச..வின் மாநிலக்குழு உறுப்பினர் நாடகக்க குழுவினரைவரவேற்று அவர்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்புஎனக்கு அவர்களைமதுரைரயில்நிலையத்திற்கு பின்புறமிருந்த நகராட்சி பயனியர்விடுதியில்;தங்கவைத்தோம்.. அருகில்"திருப்தி" விடுதியில் உணவுஏற்பாடு.. காலைசிற்றுண்டிமுடிந்ததும்அரங்கைப்பார்க்கவிரும்பினார்..குறைந்தது ஐயாயி ரம்பேராவதுவருவார்கள்.. மிகஉயரத்தில்அரங்கம்அமைக்கஏற்பாடாகியிருந்தது..தமுக்கம்மைதானத்தில்..லாரியில்வந்த லாரியில்வந்தநாடகசாமான்களைஎப்படிஎப்படிவைக்கவேண்டும்,, என்றுகோமல்சொல்லிக்கொண்டிருந்தார்..மணிஇரண்டுஆகப்போகிறது..சாப்பிடவேண்டும்..நேரமாகிறதுஎன்றுநான் கோமலைவிரட்டிக்கொண்டுஇருந்தேன்..செயலாளர்பி,,எம்..குமார்வந்தார்.. என்னத்தனியாக அழைத்தார்.."காஸ்யபன்! பெரியசிக்கல்வந்துவிட்டது""என்றர்.. :"என்னதோழர்"" என்றுகேட்டேன்.. " "ஒரதுயரச்செய்தி! வாத்தியார்ராமனுடையதாயார்இறந்துவிட்டார்.. என்னசெய்யலாம்.. இதனைஅவரிடம்சொல்லவேண்டுமேநிங்கதான்இதனைசமாளிக்கணும்" என்றார்..எனக்குகைகால் ஒடவில்லை.என்னசெய்ய?? யாரகலந்துஆலோசிக்க!! தென்மாவட்டங்களிலிருந்துஏராளமானதோழர்கள்வருவார்களே!!நடகத்தைரத்துசெய்யமுடியாதே!! மிகமுக்கியமான;பாத்திரமாச்சே!! மாற்று;ஏற்பாடுமுடியுமா!!யாரக்கலந்து.கொள்ள நேராகக்கோமலைஅடைந்தேன்.. சொன்னேன்".முடிவுஎடுக்கவேண்டியவர்ராமன்&அவரிடம்;விடுவோம்..என்றார்..கோமல்.. ராமன் வந்தார்.. அவரிடம் கூறினேன். ஒரு நிமிடம் யோசித்தார் கோமலைப் பார்த்தார்" கோமல் நாடகம் நடக்குது!.நான்தான் நடிக்கிறேன்! கலைதுறைக்குஜனங்கள்;தன்யாதாயி;தந்தை;எல்லாம்!! காஸ்யபன்! நேரா ரூ,,முக்கு போறோம்.. தாயில்லா! ஒருமுழுக்குப் போடவேண்டாமா!.வா ரும்"" என்றார்..குமாரும் நானும்விக்கித்துநின்றோம்..உடனடியாக காரில் அவரோடு சென்றேன் அறைக்கு சென்று குளித்தார்.. உடைமாற்றி விபூதி பூசிக்கொண்டார்" வயதானவர்..என்தம்பியிடம்;சொல்லியிருக்கிறேன்! அவன்காரியங்களைசெய்வான்..எனக்குகொடுப்பினை;இல்லை!" பேசவில்லை.குரல்தழுதழுத்தது! "பருப்புபாயசத்தோட;சாப்பிடனும்கிறதுசம்பிரதாயம்.. வாரும் அம்மாவுக்குஜிலேபி பிடிக்கும் சொல்லும்!!சாப்பாடோடசேத்தசொல்லும வாத்தியார் ராமன்நடிகர் மட்டுமல்ல .....