Tuesday, July 17, 2012

ஆஸ்காருக்குப் போன மச்சான்கள் .............!!!

                                 மத்திய அரசு 2011ம ஆண்டுக்கான திரைப்பட விருதுகளைஅறிவித்ததும் தமிழ்திரைப்படதுறை முதன்முறையாக பெருமகிழ்ச்சி அடைந்தது.நடிப்பிற்காக  நடிகர் தனுஷ்  விருது பெற்றார்.அது தவிர பல விருதுகளையும் தமிழ் படங்கள் பெற்றன  .சிறந்த  நடிகருக்கான விருது "ஆதாமிண்ட மகன் -அபு" என்ற படத்தில் நடித்த சலீம் குமாருக்கும் சேர்த்து அளிக்கப்பட்டது.

           


                  இஸ்லாமியர்களுக்கு ஐந்து கடமைகள் உண்டு அதில்   ஒன்று ஹஜ் யாத்திரை செல்வது .அபுவும் அவர் மனைவியும்   
   . ஹஜ் செல்ல விரும்புகிறார்கள்.வறுமையில் வாழும  அவர்கள் சிறுகச  சிறுக   சேர்த்துவைத்த பணத்தில் செல்ல முயல்கிறார்கள்.இதில் அபுவாக சலீம் குமாரும் அவர் மனைவியாக ஜரினாவகாபும்
 வாழ்ந்து இருக்கிறார்கள். 


                                இது தவிர ஆஸ்கார் பரிசுக்கு இந்தியாவின் சார்பில் படங்களை அனுப்ப தேர்வு செய்வார்கள்.அதற்காக தனியாக ஒரு குழு போடப்பட்டது.தமிழில் ஐந்து படங்கள் வந்தன. சென்ற ஆண்டு சிறந்தபடமாக அறிவிக்கப்பட்ட படம் "வாகை சூட வா" மிகச்சிறப்பான இந்தப்படத்தைதொலைக்காட்சியில் பார்த்தேன் அதுபற்றி ஒரு இடுகையும் எழுதியிருந்தேன்.பல நண்பர்கள் படத்தைப் பாராட்டி எழுதியிருந்தனர். கத்தாரிலிருந்து ஹரிஹரன் என்ற நண்பர் படத்தை சிலாகித்துவிட்டு "ஜத்மதொவின் புதிய ஆசிரியன்" என்ற குறுநாவலை படித்ததாகவும் கதை அதைச்சார்ந்து இருப்பதாகவும் எழுதியிருந்தார். தமிழ் திரைப்பட ரசிகர்கள் எந்த அளவுக்கு கூர்ந்து கவனிக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
                                  இந்தக் கொள்ளையில் ஆஸ்கார் விருதுக்காக தமிழ்படங்கள் கமிட்டியின் பரிசிலனைக்கு வந்தது .அவை "ஆடுகளம்:,தெய்வத்திருமகள்,முரண்,கோ ,இந்திரன் ஆகியவைகளாகும். இவற்றை பரிசிலித்த கமிட்டி  இவை அத்துணையுமே  ,வெளி நாட்டுப்படங்களின் நகல் என்று கூறி "கண்டித்து" திருப்பி அனுப்பப் பட்டுவிட்டன.

ஆஸ்கார் பரிசுக்குப் போன நம்மூர் மச்சான்கள் ..... பாவம் !!!

3 comments:

ஸ்ரீராம். said...

வெளிநாட்டுப் படங்களின் நகல்களை ஆஸ்கார் பரிசீலனைக்கோ பரிசுக்கோ எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது அனுப்புபவர்களுக்குத் தெரியாதா? எப்படி அனுப்புகிறார்கள்?

kashyapan said...

ஸ்ரீ ராம் அவர்களே! தெரிந்தாலும் அனுப்புவார்கள்! ஆஸ்காருக்கு பரிசீலனை செய்யப்பட்ட படம் என்று விளம்பரம் செய்யலாமே! கதையை தமிழ்மயமாக்கி ஏதாவது செய்ய முடியுமா என்று பார்ப்பார்கள்!---காஸ்யபன்

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பதிவு சார் ... ஸ்ரீராம் அவர்களின் கேள்வியும், அதற்கு தங்களின் பதிலும் அருமை... எல்லாமே பணம் தான் சார் (படத்தை தேர்ந்தெடுப்பது)

பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

என் தளத்தில் : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”