அவதார் கிஷன் ஹங்கல் - சாகும் வரை கம்யுனி ஸ்டாக இருந்தவர்......!
"நான் இறக்கும்வரை கம்யுநிஸ்டாக இருந்து சாவேன் " என்று கூறி ஞாயிறு அன்று (26-8-12) அன்று மரணமடந்தார் எ.கே ஹங்கல் என்ற அந்த அற்புதமான நடிகர் அதனால் தானோ என்னவோ எந்த பிரபலங்களும் அவருடைய இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.இவ்வளவுக்கும் 225 படங்களுக்கு மேல் நடித்தவர் அவர்.
பாகிஸ்தானின் தலைநகரான பெஷாவரை . சேர்ந்தவர் ஹங்கல் .சிறு வயதிலேயே பிரிட்டிஷாரை எதிர்த்து போராடியவர்.சிறை சென்றவர். பெஷாவரில் இருக்கமுடியாமல் கராச்சிக்கு வந்தார். அங்கும் போராட்டம் தான் அவர் வழ்க்கையாயிர்று.பிரிட்டிஷ் அரசு பிடித்து இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைத்தது. காஷ்மீரத்து பண்டிட் ஆனா அவர் பிழைப்பிற்கு தையல் தொழில்பார்த்தார்.பிரிவினைக்குப் பிறகு பால்ராஜ் சஹாநியோடு இந்தியா வந்தார்...
சக கலைஞர்களான சஹானி,கைபி ஆஜ்மி ஆகியோரோடு இந்திய மக்கள் நாடக அமைப்பில் செயல்பட்டார்.சுமார் 25 வருடம் நாடக நடிகராக வாழ்ந்தார். பின்னர்
தோழர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார் .
கம்யுனிஸ்ட் என்பதால் அவரை சிவசேனை கருவருக்க விரும்பியது பாகிஸ்தான் துதரகம் நடத்திய விருந்தில் கலந்து கொண்டார் என்பதற்காக அவரை எதிர்த்து கோஷம் போட்டது. ஹங்கல் கலங்கவில்லை. இந்தியாவுக்கு சுதந்திரம் கேட்டு பிரிட்டிஷாரை எதிர்த்து பெஷாவரிலும் கராச்சியிலும் போராடியவன் நான்.இந்த வகுப்பு வாதிகளையுமேதிர்த்து போராடுவேன் என்றார்..
ஒரேமகன். அவருடைய 20வயதில் பிறந்தவர். மனைவி இறந்துவிட்டார். மகனுக்கு குழந்தைகள் இல்லை.மகன் புகைப்படக் கலைஞன். நிரந்தர வருமானம் கிடையாது.முதுமை காரணமாக நடிப்பதை தவிர்த்தார்.
"கானுன் " என்ற திறப்படத்தில்திருடனாக வருவார் தவறாக கொலை குற்றம் சாட்டப்பட்டு நிற்பார். லேசாக இருமுவார். போலீசார் அவரை உடனே மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பார்கள்."மருத்துவம் பார்க்கத்தானே திருடவே வந்தேன்! பாவிகளே!". என்பார்.வறுமை அவரை கடுமையாக பாதித்தது.ஆனால் அதனைவேளியில் அவரும் அவர்மகனும் காட்டிக் கொள்ளவேயில்லை..
ஹங்கல் இறக்கும் பொது அவருக்கு வயது 98.