Sunday, August 26, 2012

அவதார் கிஷன் ஹங்கல் - சாகும் வரை கம்யுனி ஸ்டாக  இருந்தவர்......!


"நான் இறக்கும்வரை கம்யுநிஸ்டாக இருந்து சாவேன் " என்று கூறி ஞாயிறு அன்று (26-8-12) அன்று   மரணமடந்தார் எ.கே ஹங்கல்  என்ற அந்த அற்புதமான நடிகர் அதனால் தானோ என்னவோ எந்த பிரபலங்களும் அவருடைய இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.இவ்வளவுக்கும் 225 படங்களுக்கு மேல் நடித்தவர் அவர்.


பாகிஸ்தானின்   தலைநகரான பெஷாவரை . சேர்ந்தவர் ஹங்கல் .சிறு வயதிலேயே பிரிட்டிஷாரை எதிர்த்து  போராடியவர்.சிறை சென்றவர். பெஷாவரில் இருக்கமுடியாமல் கராச்சிக்கு வந்தார். அங்கும் போராட்டம் தான் அவர் வழ்க்கையாயிர்று.பிரிட்டிஷ் அரசு பிடித்து இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைத்தது. காஷ்மீரத்து பண்டிட் ஆனா அவர் பிழைப்பிற்கு தையல் தொழில்பார்த்தார்.பிரிவினைக்குப் பிறகு பால்ராஜ் சஹாநியோடு இந்தியா வந்தார்...

சக கலைஞர்களான சஹானி,கைபி  ஆஜ்மி ஆகியோரோடு இந்திய மக்கள் நாடக அமைப்பில் செயல்பட்டார்.சுமார் 25 வருடம் நாடக நடிகராக வாழ்ந்தார். பின்னர்
 தோழர்களின்  வற்புறுத்தலுக்கு இணங்க   திரைப்படத்தில் நடிக்க  ஆரம்பித்தார் .

கம்யுனிஸ்ட் என்பதால் அவரை சிவசேனை கருவருக்க  விரும்பியது  பாகிஸ்தான் துதரகம்  நடத்திய விருந்தில் கலந்து கொண்டார் என்பதற்காக அவரை எதிர்த்து கோஷம் போட்டது. ஹங்கல்  கலங்கவில்லை. இந்தியாவுக்கு சுதந்திரம் கேட்டு பிரிட்டிஷாரை எதிர்த்து பெஷாவரிலும் கராச்சியிலும் போராடியவன் நான்.இந்த வகுப்பு வாதிகளையுமேதிர்த்து போராடுவேன் என்றார்..

ஒரேமகன். அவருடைய 20வயதில் பிறந்தவர். மனைவி இறந்துவிட்டார். மகனுக்கு குழந்தைகள் இல்லை.மகன் புகைப்படக் கலைஞன். நிரந்தர வருமானம் கிடையாது.முதுமை காரணமாக நடிப்பதை தவிர்த்தார்.

"கானுன் " என்ற திறப்படத்தில்திருடனாக வருவார் தவறாக கொலை குற்றம் சாட்டப்பட்டு நிற்பார். லேசாக இருமுவார். போலீசார் அவரை உடனே மருத்துவமனையில்  சேர்த்து சிகிச்சை அளிப்பார்கள்."மருத்துவம் பார்க்கத்தானே திருடவே வந்தேன்! பாவிகளே!".  என்பார்.வறுமை அவரை கடுமையாக பாதித்தது.ஆனால் அதனைவேளியில்   அவரும் அவர்மகனும் காட்டிக் கொள்ளவேயில்லை..

ஹங்கல் இறக்கும் பொது அவருக்கு வயது 98.

11 comments:

அப்பாதுரை said...

இவரைப் பற்றி இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்.

vimalanperali said...

நெகிழ்வான பதிவு.

kashyapan said...

அன்பர்களே! தவறு நடந்துவிட்டது! "கானூன்" படத்தில் ஹங்கல் அவர்கள் நடிக்கவில்லை! நானா பல்சிகர் என்பவர் தான் அந்த திருடன் வேடத்தில் நடித்தார்! I am afraid senility started setting in me.! Kindly bare with me!---காஸ்யபன்.

hariharan said...

நடிகராகவும் சமூக போராளியாகவும் திகழ்ந்திருக்கிறார்.

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

மோகன்ஜி said...

ஹங்கல் பற்றி இப்போதே அறிகிறேன்..

மேலும் விவரங்களுடன் ஏதும் புத்தகம் அவர் பற்றி உண்டா சார்?

kashyapan said...

வாருங்கள் மோகன் ஜி அவர்களே! இடதுசாரி இயக்கங்களோடு, இலக்கியங்களொடு, கலைஞர்களோடு கோண்டதொடர்பு ஹங்கல் பற்றி தெரிந்து கொள்ள வைத்தது. அவர் பற்றிய சொந்த விஷயங்கள்" நெட்" மூலம் தெரியவரும். அவருடைய இடதுசாரி பார்வை பற்றி "நெட்"ல் அதிகம் கிடைக்காது! அவருடைய முதல் படம் "தீஸ்ஸ்ரீ கஸம்" ! ராஜ்கபூரொடு நடித்தார். அவர் நடிப்பபின் முன் தான் தோற்று விடுவோமோ என்று கருதிய ராஜ் கபூர் அவர் நடித்த பகுதிகளை வெட்டி எரிந்துவிட கட்டாயப்படுத்த படத்திலிருந்து தூக்கிவிட்டனர்.இருந்தாலும் 227 படங்களில்னடித்தவர் ஹங்கல்.பால்ராஜ் சஹானி,கைபி ஆஜ்மி,ஹங்கல் ஆகியோர் legends! வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்.

ஸ்ரீராம். said...

ஷோலே படத்தில் "இந்த இடம் ஏன் இவ்வளவு அமைதியாயிருக்கிறது?" என்று அவர் கேட்கும் வசனம் மிகப் பிரபலமாம். படித்தேன். அவர் முகத்தைப் பத்திரிகைகளில் பார்த்ததும் அவர் நடித்திருந்த சில படங்களை நான் பார்த்திருக்கிறேன் என்று தெரிந்தது. அமிதாப் தன் முகப் பத்தகத்தில், அவர் மறைவுக்குப் பின் அவர் பற்றி பகிர்ந்துள்ளார்.

சிவகுமாரன் said...

என் சித்தப்பா சுந்தர பாரதி சில கம்யூனிஸ்ட் நடிகர்கள் பற்றி சொல்லி இருக்கிறார். இவரைப் பற்றியும் இருக்கலாம்.
இந்தப் பதிவின் தலைப்பு என் சித்தப்பாவை நினைபடுத்தியது .

ஓலை said...

எண்பதின் இறுதிகளில் வந்த ஜீவன் rekha என்ற டெலி சீரியலில் இவரும் தன்வி ஆஸ்மி யும் மிக அற்புதமாக நடித்திருப்பார்கள்.

இவரது முதுமையில் இவரது மகனும் முதுமை எய்தி (மகனுக்கு 75 வயது) இருவரும் துணையில்லாமல் கஷ்டப் பட்டது வருந்ததக்கது.

kashyapan said...

அருமை நண்பர் ஓலை அவர்களே! தன்வி ஆஜ்மி அவர்கள் சபனா ஆஜ்மியின் சகொதரர் பாபா ஆஜ்மியின் துனைவியார்!மரட்டிய நடிகை உஷா கிரனின் மகள்!. மிகச்சிறந்த முற்போக்கு குடும்பத்தைச் சேர்ந்தவர்.! எல்லாரும் இந்தியமக்கள் நாடக மன்றத்தொடு தொடர்பு கொண்டவர்கள்.1935 லிருந்து கலை இலக்கியத்துறையில் சக்கை போடு போட்டவர்கள் கம்யூனிஸ்டுகள்!---காஸ்யபன்