Friday, September 28, 2012
Monday, September 24, 2012
அவர்களின் வருட சம்பளம்
114,00,00,000 ரூபாய்.........!!!
சன் குழுமத்தின் உரிமையாளர் கலாநிதி மாறன் அவர்களும் அவருடைய மனைவி திருமதி காவேரி மாறன் அவர்களும் ஆவர். இவர்களுக்கு ஆண்டு சம்பளமாக ஒவ்வொருவருக்கும்சுமார் 57கோடி ரூ வழங்கப்படுகிறது.அவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 114 கோடி ரூ யாகும்.
காங்கிரஸ் கட்சியின் எம்.பி யும் ஜிண்டால் குழுமத்தின் தலைவருமான நவீன் ஜிண்டாலுக்கு ஆண்டுக்கு சுமார் 74 கோடி ஆண்டு வருமானம் வருகிறது.
சன்குழுமம் தவிர ஸ்பைஸ் ஜெட் என்ற விமானக்கம்பெனியும் மாறனுக்கு சொந்தம். அந்தக் கம்பெனி தற்போது மதுரையிலிருந்து கொழும்புக்கு விமான போக்குவரத்தை ஆரம்பித்துள்ளது. இதற்காகமதுரை விமான நிலையம் விரிவாக்கப்பட்டு சர்வதேச விமான நிலையமாக்க மத்திய அமைச்சர் அழகிரி முழு முயற்சியுமேடுத்துக் கொண்டார்.
அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் சோமசுந்தரம் என்ற இளைஞன் அண்ணாமலை பல்கலைகழகத்தில் படித்து வந்தான்.மிகுந்த கஷ்டப்படும்
குடும்பம். கல்லூரியில் படிக்க வைக்கமுடியாத அளவுக்கு வறுமை. சோம சுந்தரத்தின் தாய்மாமன் தந்தை பெரியாருக்கு தெரிந்தவர். அந்த இளைஞனின் கல்விக்கான சிலவை தந்தை பெரியார் ஏற்றுக் கொன்டார் படிப்புமுடிந்தததும் தன் தாய்மாமனோடு சமுக சீர்திருத்த அஈசியல் வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார்.மாமனின் பத்திரிகையான முரசொலியில் பணியாற்றினார்.சோமசுந்தரம் முரசொலி மாறன் என்றானார்.
முரசொலி மாறனுக்கு இரண்டு மகன்கள் ஒருவர் கலாநிதி மாறன்.
மற்றொருவர் தயாநிதி மாறன்.இரண்டு மகன் களும் தொலைக்காட்சித்துரையிலும் பத்திரிகைத் துறையிலும் செயல் பட்டனர். தயாநிதி அரசியலில் நுழைந்து மத்திய அமைச்சரானார். கலாநிதி ஊடகத் துறையில் இன்று இந்தியாவின் முக்கியமான புள்ளியாக செயல் படுகிறார் .
அமெரிகஜனாதிபதி பில்கிளிண்டன் வந்திருந்த பொது கலாநிதியை சந்தித்து பேசினார்.
சென்ற ஆண்டு பாரக் ஒபாமா வந்திருந்த போதும் கலா
நிதியை சந்தித்தார்
மாறன் சகோதரர்களுக்கு சுமார் 15000 கோடிக்கு சொத்து இருப்பதாக நம்பப் படுகிறது.
Saturday, September 15, 2012
மே. வங்கத்தில் ரத்தத்தை விற்றோம்....!
அனல் மின் நிலையம்கட்டினோம்.......!!
1970ம ஆண்டுகளிலிருந்தே மின் பாற்றாக்குறை இருந்த மாநிலம் மே .வங்கம். 1978ல் இடது முன்னணி வந்ததும் பத்திரிகைகள் மின் வெட்டு பற்றியே எழுதின.. அதுவும் அவர்களுக்குப் பிடிக்காத ஜோதிபாசு அரசு என்றாகும் பொது பத்திரிக்கைகள் இரண்டுகைகளிலும் பேனாவை வைத்துக் கொண்டு எழுதின. இடது முன்னணி அரசு பக்ரேஷ்வரில் அனல் மின் நிலையம் கட்ட விரும்பியது. மத்திய அரசோ அணுமின் கட்டிக்கொள் என்று கூறியது. இடது முன்னணி அணு உலை என்ற பெயரே எங்கள் மாநிலத்திற்குள் உச்சரிக்கக் கூடாது என்றுமறுத்து விட்டது.
"
ஜோதி பாசுவின் பிடிவாதம்" மே .வங்க மக்கள்துன்பம் என்று எழுதின. அணு மின் திட்டங்களால் ஏற்படும் நன்மைகள் யாவை என்று கட்டுரைகள்\
எழுதின.இடது முன்னணி அசைந்து கொடுக்கவில்லை. தங்கள் மாநிலத்திலேயே ஏராளமாகக் கிடைக்கும் நிலக்கரியை பயன்படுத்திக் கொள்கிறோம் என்று மாநில அரசு சொன்னது.
ஒரு புதிய விதியப் போட்டார்கள். அசந்சாலில் இருந்து நிலக்கரி கொண்டுவர செலவாகாது.ஆனால் குஜராத்,மகாராஷ்டிரா மாநிலத்திற்கு கொண்டு போக போக்குவரத்து அதிகமாகும். உங்கள் ஊரில் தொழில் வளம்பெருகும்.நிலக்கரி இல்லாத மாநிலங்களில் முதலாளிகள் முதலீடு செய்யமாட்டார்கள்.இந்தியாவில் சமமான பிராந்திய வளர்ச்சி பாதிக்கப் படும். அதனால் frieght equaliser என்ற திட்டத்தை கொண்டுவருகிறோம் என்றது மத்திய அரசு .இதன்படி குஜராத்,மராட்டிய மாநிலங்களுக்கு ஆகும் போக்குவரத்து செலவின் ஒரு பகுதிய மீ.வங்கம் ஏற்க வேண்டும் .மின் உற்பத்தியின் முக்கியத்துவம் கருதி மாநிலஅரசு ஏற்றுக் கொண்டது. இறுதியாக திட்டத்திற்கான செலவு? இதோ, இதோ என்று 7அண்டுகளை மத்திய அரசு கடத்தியது. ஒருகட்டத்தில்மாநில அரசு தன சிலவிலேயே கட்ட முடிவு செய்தது.அப்போது தான் திட்டச்செலவிற்கு மக்களை அணுக முடிவு செய்தது.
மக்கள் ரத்த தானம் செய்வார்கள் அதன அரசு பெற்றுக் கொண்டு அந்தப் பணத்தில் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்தார்கள்.
உலகமே வியக்க மக்கள் ரத்தம் தந்தார்கள் ஒரு கட்டத்திலரத்ததை
சேகரித்து வைக்க இடமில்லாமல் திணற வேண்டியதாயிற்று..
90ம ஆண்டுகளிலிருந்து பக்ரேஷ்வரில் மின் உற்பத்தி நடக்கிறது.
இன்று மீ வங்கம் மின்சாரத்தில் முன்னணியில் இருக்கிறது.
அணு உலை கூடாது! கூடவே கூடாது !
இறக்குமதி செய்யப்பட அணுஉலைகள் கூடாது !
Saturday, September 08, 2012
தாழ்த்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு...........!
தாழ்த்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்வில் ஒதுக்கிடு செய்யவேண்டும் என்று உச்சநிதிமன்றம் உத்திரபிரதேச அரசின் உத்திரவை ரத்துசெய் துவிட்டதாக கூக்குரலிடுகிறார்கள் .தீர்ப்பை . வாசித்துப்பார்த்தால் உயர்நிதி மன்றம் சில தகவல்களை தரும்படி கேட்டுள்ளது தெரியவரூகிறது.அது சரியானமுறையில் கொடுக்கப்படாததால் தீர்ப்பு பாதகமாகவந்துள்ளது.
_______
அப்படி என்ன கேட்டுவிட்டார்கள்.
1.இந்த உத்திரவால் பயன்படுவோர் பின்தங்கியவர்களா?
2.பதவி உயர்வு பெற்றவர்களில் தாழ்த்தப்பட்டவர்கள் எவ்வளவு சதம்?
3இதனால்நிரவாகத்தின் செயல் திறன் பாதிக்கப் படுமா?
உத்திரப் பிரதேச அரசு என்ன சொல்கிறது என்பது இருக்கட்டும் . அரசியல் சட்டத்தின்படி தாழ்த்தப்பட்ட மக்கள் பின் தங்கியவர்கள் தான் என்று வரையருக்கப்பட்டிவிட்டது.எனவே அதனை மீண்டும் கேள்விக்கு உட்படுத்தவேண்டிய அவசியமில்லை. மத்திய அரசின் கிட்டத்தட்ட 67 செயலாளர்களில் ஒரவர் கூட தாழ்த்தப்பட்ட சமுகத்தை செர்ந்தவரில்லை .முன்றாவதாக திறமை பாதிக்கப் படுமா?
திறமை merrit பதிக்கப்படும் என்று மேல்சாதி கூ குரலின் வெளிப்பாடு இது. இதனை வெகு சாதுரியமாக பயன் படுத்தி ஒதுக்கிட்டுக்கு எதிராக பயன்
படுத்துகிறார்கள். பிரபாத் பட்நாயக் என்ற பொருளாதார நிபுணர் இது பற்றி குறிப்பிடும் பொது ரயிலில் பயனச்ச்சிட்டு பரிசோதிப்பதில் என்னடா திறமை பாக்கணும்? கிளார்க்கு, கலக்டர்,என்னடாவேனும்? ஒரு விஞஞானி
மெரிட்ட பாக்கணும் ! என்கிறார் . விளையாட்டு துறைல பாரு! அதுலயும் பல கிழிசல் இருக்கு. அசாருதின் மெரிட் தான! பாவம் ஜெயிலுக்குபோகல! தங்கப்பதக்கத்தை போதைமருந்துக்காகபரிக்கலையா! ஒரு கோடி கொடுத்தா கடைசி முணு ஓவர்ல மூனு no paal போட தயாரா இருக்கான்! அப்புறம் என்னடா merit !
அவரு பேரென்ன! உமாசங்கர்! மெரிட் தான்டா! அவரு இப்ப எங்க? ஆளை அமுக்கிபுட்டிங்களேடா! அப்புறம் என்ன மேரிட்டு? ம..று ?
------------------------------------------------------------------------------------------------------------
எனக்கு கோபம் பொத்துக்கிட்டு வருது. இந்தியா சுதந்திரமடந்து 65 வர்சம் ஆச்சு.முதல் இருபது வர்சம் காங்கிரஸ் செத்தபயலுக ஆண்டாங்க! சரி ! பாக்கி 45 வேசம் இந்த திராவிட குஞ்சுகள் தான ஆண்டாங்க! தமிழக அரசுல தாழ்த்தப்பட்டவனுக்கு பதவி உயர்வுல ஒதுக்கிட்டு இல்லையே! தாழ்த்தப்பட்டவன் என்சம்மந்தி னு சோல்லியே ஏச்சுப்புட்டானுவளே!
தோல் திருமா கேக்கலியே! கிருஷ்ணசாமி கேக்கலியே!வைகோ.சிமான் கேக்கலியே! அவர்கள் கேக்கமாட்டார்கள்!
தொழிலாளர்கள் கேட்கிறார்கள்!
தொழிற்சங்கங்கள் கேட்கின்றன!
இடது சாரி சங்கங்கல்கேட்கிறன!
அகில இந்திய இன்சுரன்ஸ் உழியர் சங்கம் கேட்டு போராடி அதனைப் பெற்றுத்தந்தது!!
Thursday, September 06, 2012
கல்லை எறிந்து ஈ ழம் வாங்க..........!
திருச்சி காட்டூரில் சென்று கொண்டிருந்த ஒரு பயணிகள் பஸ் மிது சிலர் கல்லேரிந்துள்ளனர். பஸ் இலங்கையிலிருந்து வந்த பயணிகளோடு விமானநிலயம்சென்று கொண்டிருந்தது . அவர்கள் வேளாங்கண்ணி மாதாகோவிலுக்கு தரிசனத்துக்காக வந்த இலங்கை வாழ தமிழர்கள். போலீசார் கொடுத்த தகவலின்படி கல்லேரிந்ததாக சில ம.தி.மு.க தொண்டர்களை பிடித்திருக்கிறார்கள்.
சென்னையில் சில பள்ளி மாணவர்களேடு கால்பந்தாட்டம் விளையாட வந்த இலங்கை மாணவர்களை உடனடியாக திருப்பி
அனுப்பும்படி மாநிலமுதல்வர் உத்திர விட அவர்கள் திரும்பிச்சென்றுள்ள னர்.
இந்தக் கால்பந்தாட்டப் போட்டி நேரு விளையாட்டரங்கத்தில் நடப்பதாக இருந்தது. அதற்கு அனுமதியளித்த அதிகாரியை தாற்காலிகப் பணி நிக்கம் செய்து அரசு உத்திரவிட்டுள்ளது. இலங்கையில் அல்லல் படும் தமிழ ர்களின் நலனுக்காக இது செய்யப்படுவதாக அப்பாவிகள் நம்பவைக்க படுகிறார்கள்.
சமிபத்தில் "ஜுவி " பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. கரூர் அருகே "மணல் கொள்ளையில்" இடுபட்ட சிலரை கைது செய்துள்ளனர். அவர்களில் சிலர் ம.தி.மு.க வினாராம்.இலங்கையில் ஒரு புதிய பல்கலைக் கழகம் வந்துள்ளது. தனியார் பலகலைகழகம். . தமிழகத்தின் பிரபலமான சாதி சங்கத்தின் தலைவர் ஆரம்பித்துள்ளார்.
இலங்கை தனியாகப் பிரிந்து தமிழர் நலன் காக்க போராட பல தலைவர்கள் தலைஎடுத்துள்ளனர். ஒருவர் அதற்காக ஆண்டுக்கு தினசரி நாட்காட்டி பத்துலட்சம் விற்பனை
செய்து வருகிறார். அந்த விற்பனைக்கு உத்திரவாதம் கொடுத்துவிட்டால் தனிநாடு கோரிக்கையை அவர் விட்டு விடுவாரா என்று இலங்கை அரசு
பரிசிலித்து வருவதாக செய்திகள் வருகின்றன.
ஒரு முறை மும்பையிலிருந்து வரும் பொது விமானத்தில் செப்பு ஆலை முதலாளியின் உதவியாளரும் பயணம் செய்தார்.செப்பு ஆலை கழிவு எப்படி
மாசு படுத்தும் என்று அவர் முலம் தெரிந்து கொண்டேன். தமிழ் நாட்டில் அதனை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள் பற்றி பேச்சு வந்தது. "என்ன செய்ய சார்? அம்புட்டு பேருக்கும் கொடுத்தாச்சு! புதிசு புதுசா கோரிக்கை வக்கிறாங்க! என்றார்.
"பலான பேரை சொல்லி அவருக்குமா? "என்றேன்."ஆமாம்" என்பதாகதலை அசைத்தார். "டெல்லில டுரிஸ்டு கம்பெனியே ஒடுதுசார் பினாமில ! விடுங்க வாய பிடுங்காதிங்க சார்.! என்று முடித்தார்.
இலங்கை தனியாக பிரிய ஆதரிக்கும் தலைவர் வீட்டு குழந்தை பள்ளிக்கே செல்லாமல் பத்தாப்பு பாசான கதை வேறு உள்ளது.
இலங்கையில் உள்ள தமிழன் அலறுகிறான். "எங்களை விட்டுடுங்கப்பா! நாங்க எங்க கதையை பாத்துக்கிடுதம் கான்! உங்க போசப்புக்கு எங்களை கொல்லாதிகடா ங்கான்! இவனுக கல்லெறிந்தே தனி நாடு வாங்கித் தந்தே தீருவேன் கான்."
மக்கா என்ன செய்யப் போறே!!! .
Saturday, September 01, 2012
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு------!
"கூட்டாகக் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட அந்தப் பெண்களின் மானத்தை மறைக்க எங்கள் துப்பட்டாவை வீசிஎறிந்தோம்! ஆண்கள் முகத்தைத்திருப்பிக் கொண்டு தங்கள் சட்டையை எறிந்தார்கள். சில சடலங்களின் நிவாணத்தை மறைக்க செய்தித்தாள்களால் முடினோம்" நரோடா-பாட்டிய கொடுரத்தை பார்த்த சாட்சி கூறினார். மொத்தம் 97 பேர்
அவர்கள் முஸ்லீம் என்பதற்காக கொல்லப்பட்டார்கள்.பெண்கள் சிறுவர்கள் வயது முதிர்ந்தோர் ஏன் பநிறேண்டு நாள் சிசு உட்பட கொன்று தீயில் விசி எறியப்பட்டனர். கொல்வதற்கு வாளும் எரிப்பதற்கு மண்ணெண்ணையும் கொடுத்து உதவியவள் தான் அந்தப் பாதகத்தி
'மாயா கொண்டானி " .
"நான் சம்பவ இடத்திலேயே இல்லை என்றாள் மாயா ! இந்தப் பொய்க்காக அவளை மந்திரி ஆக்கினான் நரேந்திர மோடி . ஆனால் மனசாட்சியுள்ள போலிஸ் அதிகாரி ராகுல் சர்மா கைபேசியில்
பேசியதை சேகரித்து
அதன் முலம் அவள் எவ்வாறு கலவரக்காரர்களுக்கு உதவினாள் என்ற சாட்சியத்தை நரேந்திர மோடியிடம் கொடுக் ...காமல் விசாரணை கமிஷனிடம் கொடுத்தார்!
அதற்குபபரிசாக ராகுல் சர்மா மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
மாயா கொண்டானி லால் கிஷன் அத்வானி யப்போலவே சுதந்திரத்திற்குப் பிறகு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலிருந்து இந்தியாவிற்கு வந்த குடும்பத்தைச்சேர்ந்தவர்.அதவானியின் சீடராக இருந்து அரசியலுக்கு
வகுப்புவாத அரசியலுக்கு
வந்தவர் .பரோடாவில் மருத்துவப்படிபை முடித்து பேறுகால மருத்துவராக பணியாற்றுகிறார். அவருக்கு மொத்தம் 28 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நிதிபதி திருமதி ஜோத்சனா யாங்க்னிக் திர்ப்புக்குரியுள்ளார்.
நரோடாவில்வசிக்கும் திலவாரா ஷேக் என்ற 74 வயது கிழ்வர் " "பத்து ஆண்டுகளாக நாங்கள் தவித்து வந்தோம்.எங்கள் நம்பிக்கயை
இழந்து விட்டோம்.
ஆனால் என் இந்தியாவில் அடியோடு எல்லாம் கேட்டுபோய்விடவில்லை என்பதை இந்த தீர்ப்பு கூறிவிட்டது" என்றார்.
இன்னும் நுறு நாளில் குஜராத்தில் மாநிலதேர்தல் வரவிருக்கிறது. ஊழலை எதிர்க்கும் பாபா ராமதேவ், பெடி அம்மையார் ,அரவிந்த் கேசரிவால் ஆகியோர் வாக்கு செகரிக்கவருவார்கள்!