Thursday, September 06, 2012

கல்லை எறிந்து  ஈ ழம் வாங்க..........!


திருச்சி  காட்டூரில் சென்று கொண்டிருந்த ஒரு பயணிகள் பஸ் மிது சிலர்  கல்லேரிந்துள்ளனர். பஸ் இலங்கையிலிருந்து  வந்த  பயணிகளோடு  விமானநிலயம்சென்று கொண்டிருந்தது . அவர்கள் வேளாங்கண்ணி மாதாகோவிலுக்கு தரிசனத்துக்காக வந்த இலங்கை வாழ தமிழர்கள். போலீசார் கொடுத்த தகவலின்படி கல்லேரிந்ததாக சில ம.தி.மு.க தொண்டர்களை பிடித்திருக்கிறார்கள்.

சென்னையில் சில பள்ளி மாணவர்களேடு கால்பந்தாட்டம்  விளையாட வந்த இலங்கை மாணவர்களை உடனடியாக திருப்பி
அனுப்பும்படி மாநிலமுதல்வர் உத்திர விட அவர்கள் திரும்பிச்சென்றுள்ள னர்.  

இந்தக் கால்பந்தாட்டப் போட்டி நேரு விளையாட்டரங்கத்தில் நடப்பதாக இருந்தது. அதற்கு அனுமதியளித்த அதிகாரியை தாற்காலிகப் பணி நிக்கம் செய்து அரசு உத்திரவிட்டுள்ளது. இலங்கையில் அல்லல் படும் தமிழ ர்களின் நலனுக்காக இது செய்யப்படுவதாக அப்பாவிகள் நம்பவைக்க   படுகிறார்கள்.

சமிபத்தில்  "ஜுவி "  பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. கரூர் அருகே "மணல் கொள்ளையில்" இடுபட்ட சிலரை கைது செய்துள்ளனர். அவர்களில் சிலர்  ம.தி.மு.க வினாராம்.இலங்கையில் ஒரு புதிய பல்கலைக் கழகம் வந்துள்ளது. தனியார் பலகலைகழகம். . தமிழகத்தின்  பிரபலமான சாதி  சங்கத்தின் தலைவர் ஆரம்பித்துள்ளார்.

இலங்கை தனியாகப் பிரிந்து தமிழர் நலன் காக்க போராட  பல தலைவர்கள் தலைஎடுத்துள்ளனர். ஒருவர் அதற்காக ஆண்டுக்கு தினசரி நாட்காட்டி பத்துலட்சம் விற்பனை
செய்து வருகிறார். அந்த விற்பனைக்கு   உத்திரவாதம்  கொடுத்துவிட்டால்  தனிநாடு கோரிக்கையை அவர் விட்டு விடுவாரா என்று இலங்கை அரசு
 பரிசிலித்து வருவதாக  செய்திகள் வருகின்றன.

  ஒரு முறை மும்பையிலிருந்து வரும் பொது விமானத்தில்  செப்பு ஆலை  முதலாளியின் உதவியாளரும் பயணம் செய்தார்.செப்பு ஆலை கழிவு எப்படி
மாசு படுத்தும் என்று அவர் முலம் தெரிந்து கொண்டேன். தமிழ் நாட்டில் அதனை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள் பற்றி பேச்சு வந்தது. "என்ன செய்ய சார்? அம்புட்டு பேருக்கும் கொடுத்தாச்சு! புதிசு புதுசா கோரிக்கை வக்கிறாங்க! என்றார்.
"பலான பேரை சொல்லி அவருக்குமா? "என்றேன்."ஆமாம்" என்பதாகதலை அசைத்தார். "டெல்லில டுரிஸ்டு கம்பெனியே ஒடுதுசார் பினாமில ! விடுங்க வாய பிடுங்காதிங்க சார்.! என்று முடித்தார்.

இலங்கை தனியாக பிரிய ஆதரிக்கும் தலைவர் வீட்டு குழந்தை பள்ளிக்கே செல்லாமல் பத்தாப்பு பாசான கதை வேறு உள்ளது.

இலங்கையில் உள்ள தமிழன் அலறுகிறான். "எங்களை விட்டுடுங்கப்பா! நாங்க எங்க கதையை பாத்துக்கிடுதம் கான்! உங்க போசப்புக்கு எங்களை கொல்லாதிகடா ங்கான்! இவனுக கல்லெறிந்தே தனி நாடு வாங்கித் தந்தே தீருவேன் கான்."
மக்கா என்ன செய்யப் போறே!!! .    

8 comments:

hariharan said...

இந்த நாகரீகம்ற்ற செயலுக்கு கண்டனம் தெரிவிப்பது மிக அவசியம்.
தமிழனின் பெருமையை உலகறிய நாசம் செய்கிறார்கள், அப்பாவி மக்களை , மாணவ்ர்களை , இன்னும் நம்பிவந்த மக்களை தாக்குவது இழிவான செயல். தமிழகத்தில் அம்மணமாகிற போட்டி நடைபெறுகிறது, ஆடையை யார் அதிகமாக கழைகிறார்கள் என்பதில்!

இந்த களேபரங்கள் அங்குள்ள பாதிக்கப்பட்ட தமிழனுக்கு எந்த ந்ன்மையும் விளையாது, மாறாக பெரும்பான்மை அங்கே இன்வெறியை இன்னும் அதிகமாக தூண்டும்.

இவர்களையெல்லாம் கிணற்றுத் தவளைகள் தான் என்று சொல்வேன்.

Rathnavel Natarajan said...

வணக்கம் ஐயா.
நீண்ட நாட்களாகின்றன்.
தமிழ் ஈழத்தை வியாபாரமாக்கி விட்டார்கள். இங்கே இவர்கள் பேசப்பேச அங்கே அவர்களுக்கு அடி விழுகிறது. வேதனை தான்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி ஐயா.

kashyapan said...

நன்றி ஹரிஹரன்---காஸ்யபன்.

நன்றி !ரத்னவேல் ஐயா!---காஸ்யபன்

சிவகுமாரன் said...

அவர்களுக்கான தீர்வை அவர்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும். அதைப் பற்றிப் பேச இங்கே யாருக்கும் அருகதை இல்லை. அரசியல் பிழைக்க இவர்களுக்கு கிடைத்த ஆயுதம் அப்பாவித் தமிழர்கள்.

சிவகுமாரன் said...
This comment has been removed by the author.
கரந்தை ஜெயக்குமார் said...

கண்டணத்திற்குரிய செயல்

அப்பாதுரை said...

உள்ளொன்று புறமொன்று என்பது மாறாது. எல்லாமே அரசியல், எல்லாமே வியாபாரம்.

மக்கள் என்ன செய்யப் போகிறார்கள். இலவசமாக என்ன கிடைக்கிறது என்று பார்த்து ஓட்டுப் போட்டு ஒழிவார்கள்.

அப்பாதுரை said...

நன்றாகச் சொன்னீர்கள் சிவகுமாரன்.
தனியாகப் பிரிந்ததும் உடனே நமது தலைவர்கள் அங்கே கடை விரிப்பதை அவர்கள் அனுமதிக்காமல் அடித்து விரட்ட வேண்டும்.